கற்போம்! பகிர்வோம்!!

மேரி கிறிஸ்டோபர் சென்னை

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே! நாம் கிறிஸ்துபிறப்பு விழாவைக் கொண்டாட ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறாம். வீட்டை நாம் பலவகையான அலங்காரப் பொருட்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம். புத்தாடைகள் வாங்குகிறோம். பலகாரங்களும் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.இவையெல்லாம் கிறிஸ்துபிறப்பு விழாவினை கொண்டாட நாம் செய்யும் வெளிப்படையான அடையாளங்கள். இவைகளை மட்டும் செய்தால் இயேசு நாம் உள்ளத்தில் பிறப்பாரா? என்றால் உண்மையாகவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

பிரியமானவர்களே! லூக்கா 3:8யில் “மனம் மாறியவர்கள் என்பதை அதற்கு ஏற்றச் செயல்களால் காட்டுங்கள்” என்று விவிலியவார்த்தைக் கூறுகிறது. நம்முடைய செயல்கள் எப்படி இருக்கின்றன? முதலில் பரிசுத்த வாழ்க்கை வாழ்கின்றோமா? நாம் நிறைய நேரங்களில் சுயநலமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நமக்கன்று சுயமாக வாழும் நாம் பிறருடைய காரியங்களில் அக்கறை காட்ட மறந்துவிடுகின்றோம். வறுமையில் வாடுபவர்களுக்கு, நம்முடைய மகிழ்ச்சியை அவர்களோடு பங்கிட்டு வாழவே ஆண்டவர் நம்மையெல்லாம் அழைக்கின்றார்.

எபிரேயர் 13:16யில் “நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை” என்ற வார்த்தைக்கேற்ப பிறருக்கு நம்மால் முடிந்த நன்மைகளைச் நாம் செய்ய வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் முடிந்தவரை அனைவருக்கு நன்மை செய்யவும், பகிர்ந்து வாழவும் பயிற்றுவிக்க வேண்டும். திருதூதர்பணி 10:38யில் இயேசு கிறிஸ்துவும் செல்லும் இடங்களில் எல்லாம் நன்கைள் செய்பவராக இருந்தார். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவர் வாழ்ந்தவறே வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் திருப்பலியில் கலந்து கொள்கிறோம். பல செபங்களைச் சொல்லுகிறோம். ஆனால் நாம் அன்பு செயல்கள், நன்மைகள் செய்யவில்லையெனில் நம் உள்ளத்தில் இயேசுகிறிஸ்து பிறக்கமாட்டார். இது உறுதி.

கொலோசையர் 3:13 “ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு முறையீடு இருந்தால் மன்னியுங்கள்” என்ற வார்த்தையின்படி நாம் நம்மோடு கூட வாழ்பவரை, நமக்கு ஏதிராகத் தீங்கு இழைப்பவரை மன்னிக்க வேண்டும். நாம் நம்மோடு இருப்பவர்களை மன்னிக்காமல் நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் வீண். நாம் பிறரை மனதார மன்னிக்கும்பொழுது இயேசு பாலன் நிச்சயமாகவே நம் உள்ளத்தில் பிறந்திடுவார்.

கடைசியாக நாம் ஆண்டவரோடு இணைந்து வாழ்கிறோமா? நாம் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் என்னும் பெருமையாகச் சொல்கின்றோம். ஆனால் ஆண்டவரோடு நெருக்கமாக இருக்க முயற்சிக்க வேண்டும். தினமும் சிறிது நேரமாவது தனியாகச் செபிக்க வேண்டும். ஆண்டவர் பாதத்தில் அமர நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பிரியமானவர்களே, மேற்கூறிய எல்லா காரியங்களையும் நாம் மறைவாகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நாம் மறைவாக இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறந்து நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்

 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas