காலம் உலகின் ஆன்மா

தியானாம்மா-திருச்சி

“காலம்‌ நிறைவேறியபோது திருச்சட்டத்‌திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத்‌ தம்‌ பிள்ளைகள்‌ ஆக்குமாறு கடவுள்‌ தம்‌ மகனைப்‌ பெண்ணிடம்‌ பிறந்தவராகவும்‌ திருச்‌சட்டத்திற்கு உட்பட்டவராகவும்‌ அனுப்பினார்‌” கலாத்தியர் 4:4,5

இறைவனின்‌ அன்னை :

மேற்கண்ட வசனத்தில்‌ பவுல்‌ அடியார்‌ கூறியது போல, இந்த உலக மக்கள்‌ மீட்பைப்‌ பெறுவதற்கு, ஒரு பெண்ணின்‌ வழியாக இறைமகன்‌ பிறக்க வேண்டியிருந்தது. அதன்படி இறைமகனைப்‌ பெற்றெடுக்க கன்னி மரியாள்‌ தேர்ந்தெடுக்கப்‌பட்டார்‌. ஆம்‌, கன்னி மரியாள்‌ அவர்கள்‌ தான்‌ வாழ்ந்த காலத்தில்‌ இறைவனுக்கு முதலிடம்‌ கொடுத்து, அருள்‌ நிறைந்தவராக வாழ்ந்து இறைவனின்‌ இதயத்தைத்‌ தொட்டார்‌.

மேலும்‌ தமது கற்பால்‌, தமது ஏழ்மையால்‌, தமது கீழ்ப்படிதலால்‌ அவர்‌ எல்லோரது உள்ளத்தையும்‌ தொட்டார்‌. அதற்கு கடவுள்‌ அவருக்கு அளித்த பரிசு 'இறைத்தாய்மை'. இறைவனது குமாரனைப்‌ பெற்றெடுத்தார். கன்னி மரியாள் அன்னை மரியாள் ஆனார்.

எட்டாம் நாள் அத்திருமகள் பெற்றெடுத்த திருமகனுக்கு இயேசு' என்று பெயரிடப்பட்டது. இந்த பெயர் சூட்டு விழா அன்னை மரியாளுக்கு'... அவரது இறைத்‌ தாய்மைக்கு ஒரு முத்திரையாக அமைந்தது. 'இயேசு' என்றால்‌ “கடவுளின்‌ மீட்பு” என்று பொருள்படும்‌. கடவுளின்‌ மீட்பு கன்னி மரியாளிடமிருந்து பிறந்தது. ஆம்‌. அவ்விழா கன்னி மரியாள்‌ கடவுளின்‌ தாய்‌. இறைவனின்‌ அன்னை என்பதை உலகறியச்‌ செய்தது.

“தரணிக்குத்‌ தாயானாய்‌ - திருத்‌
தாய்மையைப்‌ பாடுகிறோம்‌ .... என்றும்‌
திருவாய்‌ இயேசுவின்‌ அன்பர்கள்‌ ஆகிட
தாயே! உன்‌ அருள்‌ தாராய்‌!!'” - திருவழிபாட்டுப்‌ பாடல்‌

இந்த மாதம்‌ 25ம்‌ நாள்‌ நாம்‌ நமது ஆண்டவர்‌ இயேசுவின்‌ பிறந்த நாளைக்‌ கொண்டாடவிருக்கிறோம்‌. இவ்வுலகிற்குப்‌ பாவத்திலிருந்து விடுதலை தேவைப்பட்டது. அதனாலேயே அவர்‌ மீட்பராய்ப்‌ றந்தார்‌. இயேசு பிறப்பின்‌ நற்செய்தி இன்று நமக்குக்‌ கூறுவது என்னவென்றால்‌ ஏழை - பணக்காரன்‌, ஆண்டான்‌ - அழமை, ஆண்‌ - பெண்‌, கருப்பு - வெள்ளை, இனம்‌, மொழி என்ற வேறுபாடுகளைக்‌ களைந்து, அனைத்து மக்களும்‌ ஒற்றுமையுடன்‌ வாழவும்‌, ஒன்றாக நீறைவாக அனைத்தையும்‌ பகிர்ந்து வாழவும்‌ வேண்டும்‌ என்பதுதான்‌.

மேலும்‌ இன்று நிலவிவரும்‌ வன்முறைக்‌ கலாச்சாரச்‌ சூழலில்‌ அனைத்து மக்களும்‌ சமூக, அரசியல்‌, பொருளாதார, சமயத்தால்‌ நிலவும்‌ வன்முறைகள்‌, ஏற்றத்‌ தாழ்வுகள்‌ இவற்றைக்‌ களைந்தெறிந்து அனைவரும்‌ உண்மையான மகிழ்ச்சியோடு சமாதானத்தோடு வாழ தாழ்மையின்‌ கோலத்தில்‌ பிறந்த இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில்‌ ஏற்று வாழும்போது நிறைவான முழுமையான வாழ்வு அனைவருக்கும்‌ நிலவும்‌ என்பதில்‌ எந்தவித ஐயமும்‌ இல்லை.

கிறிஸ்துமஸ்‌ பண்டிகை கற்றுக்‌ கொடுக்கும்‌ எளிமை, தாழ்மை, தியாகம்‌, துன்பத்தைச்‌ சகிக்கும்‌ தன்மை ஆகிய பண்புகளை ஏற்றுக்‌ கொண்டு அதன்படி வாழ முற்படுவோம்‌. மேலும்‌ இயேசு தன்னுடைய பிறப்பினால்‌ எல்லோருக்கும்‌ மகிழ்ச்சியைக்‌ கொண்டு வந்திருக்கிறார்‌. நாமும்‌ நம்முடைய சொற்களால்‌, வாழ்வால்‌ எல்லோருக்கும்‌ மகிழ்ச்சியைக்‌ கொடுப்போம்‌. அதன்‌ வழியாக குழந்தை இயேசுவின்‌ அருளை நிறைவாகப்‌ பெறுவோம்‌.

அனைத்தும்‌ தோன்றக்‌ காரணம்‌ இறைவாக்கு

இந்த உலகத்தில்‌ அனைத்தும்‌ தோன்றக்‌ காரணமாயிருந்தது இறைவாக்கு. இறைவாக்கு, உலகத்‌ திற்கு ஒளியாயிருந்து அனைத்து மனிதர்களையும்‌ ஒளிர்விக்கும்‌ உண்மையான ஒளியாக விளங்கி மனிதனாகி, நம்மோடு குடிகொண்டு நம்மை நம்‌ வாழ்வை நிறைவாக்குகிறார்‌. இந்த இனிய கிறிஸ்துமஸ்‌ தினம்‌ நாமும்‌ இறைமயமாகும்‌ நாள்‌ என்று கொண்டாடி மகிழ்வோம்‌.

“தொடக்கத்தில்‌ வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும்‌ இருந்தது” - யோவான்1:1

இன்றும்‌ இறைவன்‌, அவர்‌ வாக்கு உருவிலே, இறைவார்த்தை வடிவிலே நம்‌ நடுவே வாழ்ந்து வருகிறார்‌. இன்று நாமும்‌ இறைவார்த்தையை, விவிலியத்தைப்‌ படித்து, படித்ததை இதயத்தில்‌ நிறுத்தி, தியானித்து, பின்‌ நற்செயல்‌ புரிவோமானால்‌ நாமும்‌ ஒரு வகையில்‌ 'கடவுளின்‌ நற்செய்திகளை இந்த உலகிற்கு அறிவிப்பவர்கள்‌' என்ற நிலையை அடைந்தவர்களாவோம்‌.

நன்றி-ஜெகன் மாதா மலர்
 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
 அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas

தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்-அன்பின்மடல்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.

https://anbinmadal.org | 2002-2025 | Email ID: anbinmadal at gmail.com