ஹோட்டல்‌ “நய்யாரும்‌”, டீக்கடை நாயரும்‌...

நாஞ்சில் தம்பி சென்னை

ஹோட்டல்‌ “நய்யாரும்‌”, டீக்கடை நாயரும்‌...

திருசெல்வம்‌ தன்‌ குடும்பத்தினருடன்‌ சுற்றுலா செல்லத் திட்டமிட்டார். முதல்‌ குழந்தை 4வயது அமுதன், இரண்டாவது மழலை 4 மாத நிவேதிதா மற்றும் அன்பு மனைவியுடன்‌ பயணித்துத் தேக்கடி சென்றார்‌. முன்‌பதிவு செய்து 3 ஸ்டார்‌ ஹோட்டல்‌ நய்யாரில்‌, குளிர்‌ வசதி செய்யப்பட்ட அறையில்‌ தங்கினார்கள்‌.

மறுநாள்‌, தேக்கடி சுற்றுலா தலத்தில்‌, வண்ண மிகு இயற்கை காட்சிகளிலும்‌, நீர்நிலைகளிலும்‌ என்று பொழுது இன்பமாகக் கழிந்தது. ஹோட்டல்‌ “நய்யார்‌” திரும்பி இரவு ஒய்வு எடுத்தனர்‌. மறுநாள்‌ காலைத் தேக்கடி வனப்பகுதி சென்று, படகு சவாரிசெய்து, யானைக்‌ கூட்டத்தை, அவற்றின்‌ இயற்கை சூழலில்‌ கண்டு களிக்க திட்டம்‌.

காலை உணவுக்குப் பின், மதிய உணவைக்‌ கட்டி எடுத்துக்கொண்டு வரவேற்பறையில் தான் மழலை நிவேதிதாவின்‌ அழுகை திருசெல்வம் தம்பதியரை அச்சுறுத்தியது. பிள்ளையின் அழுகையை புரிந்து கொண்ட தாய், குழந்தை உணவுப் பையை எடுத்துத் தேடியதில், குழந்தை உணவுப்பொடி இருப்பதையும்‌, பால்‌ இல்லை என்பதையும்‌ உணர்ந்து, பதை பதைத்தாள்‌. விடுதியில்‌ கேட்டபோது “பால்‌ இல்லை” என்ற அதிர்ச்சியான பதிலே கீட்டியது. குழந்தையின்‌ அழுகுரல்‌ ஒங்கி ஒலித்தது. தவித்தனர்‌, குழந்தையும்‌ குடும்பத்தினரும்‌ “பால்‌ விற்பனைக்கு இல்லை, அதிகப்பணம்‌ கொடுத்தால்‌ வெளியிருந்து பெற்றுத்தர முடியும்‌” என்ற பதிலால்‌ சிறிது ஆறுதல் அடைந்தனர்‌. கூடுதல் தொகையைச்‌ செலுத்துவதைத்தவிர வேறு வழி இல்லை என்றுணர்ந்து பணம்‌ செலுத்தி காத்திருந்தனர்‌. நிவேதிதாவின்‌ அழுகுரல்‌ மேலும்‌ மேலும்‌ உயர்ந்துகொண்டே சென்றது. பசியால்‌ துடித்‌தது. பணம் உண்டு கையில்‌, பாலில்லை ஹோட்டலில். கையலாகாத நிலை. தாமதமாகப் பால் தரப்பட்டது. நிவேதித்தாவின் அழுகையும் பசியும் தீர்ந்தது. மகிழ்வுடன் தேக்கடி வனப்பகுதிக்கு பயணம் தொடர்ந்தது.

படகு சவாரியில்‌ குடும்பமே மகிழ்ச்சியில் திழைத்தது. புத்துணர்வுடன்‌, உற்சாகமாக யானைக்‌கூட்டத்தைக்‌ காண ஏரியின்‌ மறுபக்கம்‌ படகில்‌ பயணித்தனர்‌.

பொழுது சாய்ந்தபின்‌ தரையிறங்கி, சிற்றுண்டி விடுதியில்‌ பசியாரிய பின்‌ “ஹோட்டல்‌ நய்யார்‌" திரும்ப முயற்சித்தனர்‌. மீண்டும்‌ நிவேதிதானின்‌ அழுகுரல்‌ தாக்கியது. பசி, "ஹோட்டல்‌ நய்யார்‌" செல்லும்‌ வரை குழந்தை பசி தாங்காமல்‌ துடித்துவிடும்‌ என்றுணர்ந்த தம்பதியினர்‌. அருகில் உள்ள விடுதிகளில்‌ பால்‌ பெற முயற்சித்தனர். இரவு நெருங்கக்‌ கொண்டிருந்தது. திருசெல்வம்‌ இங்குமங்கும்‌ ஒடித் தேடியும் பால்‌ கிடைக்கவில்லை. நிவேதிதாவின்‌ அழுகை பலரை ஈத்தாலும்‌, இருள்‌ சூழ்ந்த நிலையில்‌ பெருவாரியான சுற்றுலா பயணிகள்‌ அங்கிருந்த அநேக உணவகங்களில்‌ சென்றுக் கொண்டிருந்தனர்‌.

தவித்த திருசெல்வத்திற்கு கண் எதிரில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. ஆம்‌, சாலையின்‌ ஒரத்திலிருந்த 'நாயர்‌ டீ ஸ்டால்‌” தான்‌ அது. இங்குப் பால் இருந்தது. புதையலைக்‌ கண்டவர்போல் மகிழ்ந்தார். அழுதுக் கொண்டிருந்த நிவேதிதாவோடு நாயர் டீக்கடைகயில் தஞ்சமடைந்தார். “நாயர்‌ டீ ஸ்டாலில்” கிடைத்த பாலை அருந்திப் பசியாறிய நிவேதிதாவின்‌ அமைதி அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. பிளாஸ்க்கிலும் சிறிது பால் வாங்கிக் கொண்டு டீக்கடை கவுண்டரில்‌ பணம்‌ செலுத்த வந்த திருசெல்வத்திற்கு மீண்டும் ஓர் இன்பாதிர்ச்சி காத்திருந்தது. ஆம்‌ “கொச்சு பிள்ளாரிண்ட பாலுக்கு விலை இல்லா, அது பிரீயாண" என்றவர் எவ்வளவும் வற்புறுத்தியும் சிற்றுண்டிக்கான பணத்தை மட்டுமே கடைக்காரர் பெற்றுக்கொண்டார்‌. மழலையின்‌ பாலுக்கு நாயர் பணம்‌ ஏற்கவில்லை... சிறுவன்‌ அமுதனுக்கும்‌ ஒரு 5 ஸ்டார்‌ சாக்லேட்‌' இலவசமாகக் கிடைத்தது. நன்றிப்‌ பெருக்குடன்‌ திரும்பிய குடும்பத்தினரை “3 ஸ்டார்‌ ஹோட்டல்‌ நய்யார்‌" இரவில்‌ விழுங்கியது...

திருசெல்வம்‌ நடந்தவைகைள அலைபோட்டார்‌. அன்றைய நிகழ்வுகளைத் திறனாய்வு செய்தார்‌. அன்பு நெறி தவழ்ந்தது எங்கே? மனிதம்‌ வென்றது. நெடிதுயர்ந்த ஹோட்டல்‌ நய்யாரிலா? அல்லது கூரைவாய்ந்த “நாயர்‌ டீ ஸ்டாலிலா? நெடிதுயர்ந்த “நய்யர்ஹோட்டலும்‌"' தாழ்ந்த கூரை வேய்ந்த டீ ஸ்டாலும்‌ எவ்வளவு மாறுபட்டவை? உயர்ந்த கட்டடங்களுக்குள்‌ தாழ்ந்த மனிதம்‌, தாழ்ந்த கூரைக்குள்‌ வானுயர்ந்த மனிதம்‌!

திருசெல்வம்‌ பெருமூச்செறிந்தார்‌. நிவேதிதாவை உச்சிமுகர்ந்து அணைத்துக்கொண்டார். இன்னும் மனிதம் மடியவில்லை. வாழ்கிறது.

 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
 அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas