ஒரு மரத்தின் கதை

செலின்ராஜ் சென்னை

ஒரு பெரிய மரம் இருந்தது அது இலைகளோடு இனிமையானகனிகளோடும் அழகானபூக்களோடு பூத்து குலுங்கியது. அநேக பறவைகள் அதில் இன்பமாய் தங்கின; இன்னிமையான கனிகளைசுவைத்தன; இன்னிசை எழுப்பி மரத்தை மகிழ்வித்தன. “நன்றி;நன்றி” என்றன. பறந்தன; மரத்தை மறந்தன.

பருவகாலத்தில் கனிகள் நிறைந்த மரம், காலங்களும் பருவங்களும் மாற மாற, கனிகள் குறைய ஆரம்பித்தது. கனி குறைய குறைய பறவைகள் வருவதும் குறைந்தது; தேய்ந்து, மறைந்து போனது.

”கனி இல்லேன்னா என்ன ? என் கிளையில் அமரந்து என்னோடு பேசக் கூடாதா?” என்று மரம் ஏங்கியது; தவித்தது.

அங்கும் இங்குமாகப் பறக்கும் தன்னுடைய மரத்து பறவைகள் வேறு மரம் நாடியது ஏனோ? கனில்லா என் நிலைமையால் தானோ? கண்ணீர் விட்டா கவலை போகுமா? கடவுளிடம் வைத்த விண்ணப்பம் வீணாகிவிடுமோ?

மரத்தின் கண்ணீரை அருகில் இருந்த கிறிஸ்மஸ் மரம் பார்த்தது. ஆறுதல் கூறியது. ஆனால் அதன் அருகில் பறவைகள் வரவில்லை. கொஞ்ச காலம் சென்றன. கிறிஸ்மஸ் விழாக்காலம் வந்தது. அநேக மக்கள் கிறிஸ்மரம் அருகில் வந்தனர்; பார்த்தனர்; அதை மகிழ்சியோடு அலங்கரித்தனர்; பரிசுகளைத் தொங்கவிட்டனர்.

கிறிஸ்மஸ் வந்தது!!

கிறிஸ்மஸ் கீதம் பாடியபடி மக்கள் சந்தோசத்தோடு வந்து கிறிஸ்மஸ் பரிசுகளை எடுத்துச் சென்றனர். கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒரே சந்தோஷம். கிறிஸ்மஸ் சீசன் முடிந்தது ; அதன் பின் அதன் பின் தோட்டக்காரர் வந்து காய்ந்து போன பேப்பர்களை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்ற மரம் இனிமையாய் தலையைஅசைத்தது. நன்றி சொன்னது.

அருகில் இருந்த பெரிய மரத்தைப் பார்த்தது; இனிமையாக அதனுடன் பேசியது; “நண்பா! இதுதான் உலகம்; இதுதான் யாதார்த்தம். அவர்கள் தேவைகள் முடிந்ததும் போய்விடுவார்கள். மற்றவர்களுக்குச் சந்தோஷம் கொடுப்பது, ஒன்றே நம்மில் ஆண்டவர் எதிர்பாரப்பது. சுயநலமற்ற அன்பே நிரந்தரம். அதுவே நம் மனதின் சுதந்திரம்.” அதுதான் உண்மையான கிறிஸ்மஸ்!!

“ஆனால் பெரிய மரம் ஆண்டவர் என்னை ஏன் பாரக்கலை? என் நினைவுகளை மறக்க முடியல? அவர் ஏன் என் குரலைக் கேட்கல?” என் கண்ணீரை அவர் பார்க்கலையா? என்றது சோகமாக...

அப்போது மெல்லிய தென்றல் காற்றில் ஆண்டவர் பேசினார்.
“மரமே !மரமே! நான் படைத்த மரமே! நான் என்றும் உன்னை மறந்ததும் இல்லை; என் அன்பும் ஒருநாளும் மாறிபோனதும் இல்லை; எல்லாம் தெரிந்த நீ உன் நிலை மறந்தும் ஏனோ? கனிகள் அனைத்தும் என்னிலிருந்தே உன்னில் வந்தன; பிறருக்கு உதவின; ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும். ஒசேயா 14:8,9

உலகம் நம்மில் இருப்பதை பறிக்கபார்க்கும்; “அன்பு, அன்பு” என்று ஏய்க்கப் பார்க்கும்; சுயநலமும் அன்பும் ஒன்றாகிட முடியுமோ? அன்பை எதிர்பார்த்து அன்பு செய்யாதே விட்டுக் கொடுத்தவன் கட்டி ஆள்வான்; மரமே, உன் அன்பையும் பாசத்தையும் நான் அறிவேன் அல்லவா? என்மேல் நீ வைத்த அன்பு எனக்குத் தெரியாதா? என்னில் நீ திடம்கொள்; நோயா? வலியா? சோர்வா? கவலைபடாதே; எல்லாம் ஒழிந்துபோகும் என் வார்த்தையின் வலிமையினால்; என் வார்த்தையை உன் வாயில் வைப்பேன்; உன் உள்ளத்தில் எழுதுவேன்; உன்னை நான் மீண்டும் நீர் அருகே நடுவேன்; உன்னில் நான் இருப்பேன்; நீயோ மிகுந்த கனி தருவாய்; அனேக பறவைகள் வரும், உன்னிடத்தில், ஆம்! உன்னிடத்தில் தான்; அன்பும் ஆறுதலும் பிறருக்காகவே தந்திட்ட மரமே உன்னைப் போல் யாருண்டு? உறவுகள் வருவார்கள் திரும்பவும் உன்னிடத்தில்” என்றார் ஆண்டவர்.

“உன் பிள்ளைகள் விரைந்து வருவர்; உன் கண்களை நீ உயர்த்தி சுற்றிலும் பார். அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்; என் உயிர்மேல் ஆணை!(ஏசா:49:17,18) ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ அழுகையை நிறுத்து; கண்ணீர் வடிக்காதே ஏனெனில் உனது உழைப்புக்கு பயன் கிடைக்கும் என்கிறார் ஆண்டவர்.(எரே31:16) மரம் விசுவாசத்தோடு தலை அசைத்தது. ஆண்டவரே அந்த மரத்தின் நம்பிக்கையாயிற்று. அதன்வேர்கள் தண்ணீருக்குள் வெப்பமிகு நேரத்தில், இனி அதற்கு அச்சமில்லை. அதன் இலை பசுமையாய் இருக்கும் வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது. அது எப்போதும் கனி கொடுக்கும்(எரே17:7,8) என்றது போலத் தன்கனிகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்தது.

(இந்த உவமையின் விளக்கம்
மரம் என்பது நாம் நம்வாழ்க்கை. அதில் வரும் பறவைகள் எது என்றால் நம் பிள்ளைகள், உறவுகள். நீர்= பரிசுத்த ஆவி, வெப்ப மிகு நேரம் = சோதனைகள் பிரச்சனைகள், உறவுகள் நம்மை மறக்கும் நேரம். கனி= நல்ல செயல்கள், பண உதவி, ஆறுதல் வார்த்தைகள், செபத்தினால் தாங்குவது. மனிதர்கள் மறக்கலாம். ஆனால் ஆண்டவர் நாம் செய்ததை மறக்கவே மாட்டார்; ஆண்டவரின் வார்த்தைகள் நமக்குத் தருவது பசுமை= செழிப்பு, நோயற்ற வாழ்வு உறவுகளினால் பிரச்சனை ஏற்பட்டால் மனம் உடைந்து போகாமல் எப்படி ஆண்டவரில் நிலைத்து நிற்பது என்பதற்காக எழுதப்பட்டது!)

 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
 அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas