“இதுவே உங்களுக்கு அடையாளம்‌”

கிருபாவளன் - சென்னை

நிகழ்ந்தது

அந்த வெள்ளைக்காரச்‌ சாமியாரைச்‌ சுற்றி எப்போதும்‌ ஒரு சிறுவர்‌ கூட்டம்‌ இருந்து கொண்ட இருக்கும்‌. தனது அங்கியின்‌ பாக்கெட்டில்‌ கையைவிட்டு அவர்‌ அள்ளித்தரும்‌ சாக்கலேட்டுகள்‌ தான்‌ அதற்குக்‌ காரணம்‌. கால்சட்டையோடு கவலை மறந்து ஒடித்திரிந்த அந்தப் பாலப் பருவத்தில்‌ நானும்‌ அவரைச்‌ சுற்றி சுற்றி வருவது வழக்கம்‌. அன்றைக்கு எப்படியோ அவரும்‌ நானும்‌ அந்த மதிய வேளையில்‌ தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வழக்கம்போல அங்கியின்‌ பாக்கெட்டில்‌ கையைவிட்ட அவர்‌ சாக்கலேட்டை கொடுக்காமல்‌ “வா, ஒரு சந்திப்பு செய்து வரலாம்‌” எனக்‌ கோவிலுக்குள்‌ அழைத்துச்‌ சென்றார்‌. உள்ளே நுழைந்த. நான்‌ எல்லாச்‌ சுரூபங்களையும்‌ முத்தி செய்துவிட்டு அவருக்காக காத்திருந்தேன்‌. என்னைப்‌ பார்த்த அவர்‌ “இன்னும்‌ இயேசுவுக்கு வணக்கம்‌ செலுத்தவில்லையே! ” என்றார்‌. “இல்ல ஃபாதர்‌, மொதல்ல இயேசுவைத்தான்‌ கும்பிட்டேன்‌” எனச்‌ சிலுவையை காண்பித்தேன்‌.

அவர்‌ கோவிலின்‌ நடுவில்‌ திரையிடப்பட்ட நற்கருணைப்‌ பேழையைக்காட்டி “அங்கே நிஜமாக இயேசு இருக்கிறார்‌, அவரை வணங்கு” எனக்‌ கூறி எனக்கு முன்‌ முழந்தாள்படியிட்டு வணங்கக்‌ கற்றுக்‌ கொடுத்தார்‌. வணங்கிவிட்டு வெளியே வந்த எனக்கு ஒன்றல்ல, கைநிறையவே சாக்கலேட்டுகள்‌! கிடைத்தன. சாக்கலேட்டு, கிடைத்த தைரியத்தில்‌ “இயேசுவை ஏன்‌ இப்படி மறைத்து வைத்துள்ளீர்கள்‌? நல்ல வெளிச்சத்தில்‌ வெளியே தெரியும்படி வைக்க வேண்டியது தானே?” என நான்‌ அவரிடம்‌ கேட்டேன்‌. என்னை உற்றுப்‌ பார்த்த அவர்‌ “உன்‌ உடம்பின்‌ முக்கியமான அங்கங்களான இதயமும்‌, மூளையும்‌ ஏன்‌ மறைவாக உள்ளன?” என்று கேட்டார்‌. பின்னர்‌ பதிலும்‌ தந்தார்‌. “முக்கியமானதும்‌ பிரதானமானதுமான எல்லாமே மறைத்துத்தான்‌ வைக்கப்படும்‌” என்றார்‌. எனக்குப் பாதி புரிந்தது, மீதி புரியவில்லை.

புரிந்தது

ஆண்டுகள்‌ உருண்டோடி நான்‌ சிந்திக்கவும்‌ படிக்கவும்‌ தியானிக்கவும்‌ பழகியிருந்தேன்‌. அது ஒரு கிறிஸ்து பிறப்புக்‌ காலம்‌. குடிலுக்கு முன்‌ வீற்றிருந்த எனக்கு விவிலிய வசனம்‌ ஒன்று மீண்டும்‌ மீண்டும்‌ நினைவுக்கு வந்து பல வினாக்களை எழுப்பியது. இதுவே தங்கள்‌ கிடையைக்‌ காவல்‌ காத்துக்‌ கொண்டிருந்த இடையர்களுக்கு ஆண்டவருடைய தூதர்‌ சொன்ன வார்த்தைகள்‌, “இன்று ஆண்டவருடைய மெசியா என்னும்‌ மீட்பர்‌ உங்களுக்காக பிறந்திருக்கிறார்‌. குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத்‌ தொட்டியில்‌ கிடத்தியிருப்பத்தைக்‌ காண்பீர்கள்‌. உங்களுக்கு அடையாளம்‌.” (லூக்‌ 2:11,12) மெசியா என்னும்‌ மீட்பருக்கு எது அடையாளம்‌? மகுடமும்‌, அறியணையும்‌, செங்கோலும்‌ அடையாளம்‌ என்றால்‌ அது பொருந்தும்‌. கந்தைத்துணிகளும்‌, தீவனத்‌ தொட்டியும்‌ எப்படி அடையாளம்‌ ஆகும்‌? அடையாளங்களாய்‌ இவை அறிஞர்களுக்கு அருளப்பட்டிருந்தால்‌ அவர்கள்‌ அதை அசட்டை செய்திருப்பார்கள்‌. ஆனால்‌ எளிய மனம்‌ படைத்த அந்த இடையர்கள்‌ சென்றார்கள்‌, கண்டார்கள்‌, வணங்கினார்கள்‌, பின்‌ பறைசாற்றினார்கள்‌. (லூக்‌ 2:15-18) விண்மீனைக்‌ கண்டு அது குநித்துக்காட்டிய அரசனைக்‌ காண வந்த ஞானிகள்‌ குடிலை அடைந்ததும்‌ “இது அவராய்‌ இருக்க முடியாது” எனத்‌ திரும்பவில்லை, பணிந்து வணங்கினர்‌. துணிகளில்‌ பொதியப்பட்டு முன்னிட்டியில்‌ கிடத்தப்பட்ட குழந்தையிலும்‌ அரசனைக்‌ காண அவர்களுக்கு ஞானம்‌ துணை நின்றது.

ஆண்டாண்டு காலமாய்‌ யாருக்காகக் காத்திருந்தனரோ, அந்த மெசியா அவர்கள்‌ நடுவே வலம்‌ வந்தபோது யூதர்கள்‌ உதறித்‌ தள்ளினர்‌. “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும்‌ வர இயலுமோ?” (யோவா1.46) என்ற முன்முடிவு அவர்கள்‌ கண்களுக்குத் திரை போட்டது. நம்பி வந்த சிலருக்கும்‌ “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும்‌ உணவு நானே” (யோவா 6:51) என்ற போதனை தடை போட்டது. “இதை ஏற்றுக்‌ கொள்வது மிகக்‌ கடினம்‌” (யோவா 6:60) என முணுமுணுத்த சீடர்களிடம்‌ இயேசு கேட்ட கேள்வி இன்றும்‌ தொடர்கிறது, “நீங்கள்‌ நம்புவதற்கு இது தடையாக உள்ளதா?” (யோவா 6:61) எது தடையாக இருக்கிறது? அழியும்‌ அப்பத்தில்‌ அழியாத இறைவன்‌ எப்படி உறைய முடியும்‌ என்பதா? - அது இறைவனின்‌ வல்லமை. இறைவனை எப்படி மனிதன்‌ உண்பது என்பதா? - அது இறைவனின்‌ வள்ளன்மை. நற்கருணை இயேசுவைக்‌ குறிக்கும்‌ ஒன்றாய்‌ இருக்கும்‌, இயேசுவாக எப்படி இருக்க முடியும்‌ என்பதா? - அது இறைவனின்‌ சொல்லுண்மை. தடையாக எது இருப்பினும்‌ இயேசுவின்‌ பதில்‌ ஒன்றுதான்‌ “என்‌ தந்‌தை அருள்கூர்ந்தால்‌ அன்றி யாரும்‌ என்னிடம்‌ வர இயலாது.” (யோவா 6:65)

இயேசுவின்‌ கூற்று பேதுருவுக்கு மட்டும்‌ புரிந்ததா என்ன? நிச்சயம்‌ இல்லை. ஆனால்‌ “சொன்னவர்‌ இயேசு, அவர்‌ சொன்னால்‌ அது உண்மை” என நம்பிய பேதுருவின்‌ எளிய மனம்‌ ஒரு அறிக்கை செய்கிறது, “நிலை வாழ்வு தரும்‌ வார்த்தைகள்‌ உம்மிடம்‌ தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர்‌ என்பதை நாங்கள்‌ அறிந்து கொண்டோம்‌, அதை நம்புகிறோம்‌.” (யோவான்‌ 6:68,69) இந்த நம்பிக்கை தான்‌ “நீங்கள்‌ யாரெனச் சொல்கிறீர்கள்?” என இயேசு கேட்டபோது “நீர்‌ மெசியா! வாழும்‌ கடவுளின்‌ மகன்‌” (மத்‌ 16:17) என பறைசாற்ற வைத்தது. அதற்குப்‌ பரிசாக “நீ பேறு பெற்றவன்‌... விண்ணகத்தில் உள்ள என்‌ தந்தையே இதை உனக்கு வெளிபடுத்தியுள்ளார்‌.” (மத்‌ 16:17) என்ற இயேசுவின்‌ பாராட்டையும்‌, அதைத்‌ தொடர்ந்து பொறுப்பையும்‌ பேதுருவுக்கு பெற்றுத்‌ தந்தன.

பிறப்பின்‌ போதும்‌ வாழ்வின்‌ போதும்‌ இயேசுவைக்‌ கண்டு கொள்ள முடியாதவர்கள்‌ அவரது இறப்பு உயிர்ப்பில்‌ எப்படிக்‌ காண்பார்கள்‌? அனைத்துச்‌ சீடர்களும்‌ அஞ்சி அறையில்‌ ஒடுங்கிக்‌ கொண்டிருந்தபோது, ஒரு பெண்‌ ஓங்கி ஒலிக்கிறாள்‌ “நான்‌ ஆண்டவரைக்‌ கண்டேன்‌” (யோவான்‌ 20:18) என்று. உயிர்த்த ஆண்டவரை மகதலா மரியா கண்டு கொண்டது தோட்டக்காரர்‌ தோற்றத்தில்‌,

மனித அறிவு தோற்றத்தை, வெறும்‌ வெளித்தோற்றமாக, மேலோட்டமாகப் பார்த்துப் புறம் தள்ளுகிறது. எளிய மனங்களில்‌ குடிகொள்ளும்‌ இறை ஞானமோ தோற்றத்தை ஊடுருவி மறையுண்மைகளை புரிந்து கொள்கிறது. எனவேதான்‌ இயேசு கூறுவார்‌ “அறிஞர்களுக்கும்‌ விவேகிகளுக்கும்‌ இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்‌. ஆம்‌ தந்தையே, இதுவே உம்‌ திருவுளம்‌.” (மத்‌ 11:25) இறைவனின்‌ திருவுளம்‌ தம்மை வெளிப்படுத்துவது தான்‌. ஆனால்‌ மனிதன்‌ விரும்பும்‌ விதத்தில்‌ அல்ல, அவர்‌ விருப்பப்படியே. அவர்‌ வெளிப்படுத்துகிற விதத்தில்‌ அவரைக்‌ கண்டுகொள்பவர்கள்‌, கண்ணுக்குப் புலப்படுவதை மட்டுமல்ல, புலப்படாதவற்றையும்‌ கூட விசுவசிப்பர்‌.

“காணாமலே நம்புவோர்‌ பேறுபெற்றோர்‌.” (யோவான்‌ 20:29) அந்தப்‌ பேற்றினை பெற்ற முதல்‌ பாக்கியசாலிகள்‌ இடையர்கள்‌. அவர்களுக்குத் துணை நின்றது மனித ஞானம்‌ அல்ல, இறைவெளிப்பாட்டின்‌ மீது கொண்ட நம்பிக்கை. துணிகளில்‌ பொதியப்பட்ட மீட்பரை இடையர்களும்‌, மனித உருவில்‌ உலா வந்த மெசியாவை பேதுருவும்‌, தோட்டக்காரர்‌ தோற்றத்தில்‌ தன்‌ போதகராம்‌ உயிர்த்த இயேசுவை மகதலா மரியாவும்‌ கண்டுகொள்ள எந்த நம்பிக்கை உதவியதுவோ, அந்த நம்பிக்கைதான்‌ திரையிடப்பட்ட நற்கருணைப்‌ பேழையில்‌, அப்பரச உருவில்‌ மறைந்திருக்கும்‌ இயேசுவைக்‌ காணவும்‌ துணைகோலும்‌. இன்றைக்குப்‌ புரிகிறது அந்த வெள்ளைக்காரச்‌ சாமியார்‌ சொன்னது, “முக்கியமானதும்‌ பிரதானமானதுமான எல்லாமே மறைத்தே வைக்கப்படும்‌.”

பதிந்தது

விசுவாசத்தின்‌ மறைபொருள்‌ என நாம்‌ அறிக்கை செய்யும்‌ கிறிஸ்துவின்‌ மரணம்‌ உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளை உள்ளடக்கிய ஒரு திருவருட்சாதனம்‌ நற்கருணை. திருச்சங்க வார்த்தைகளில்‌ “கிறிஸ்தவ வாழ்வின்‌ ஊற்றும்‌ உச்ச நிலையும்‌ நற்கருணையே.” முக்கியமானதும்‌ பிரதானமானதும்‌ ஆகிய இவ்வருட்சாதன பேருண்மை ஒரு ஆராய்ச்சிப்‌ பொருள்‌ அல்ல. “புலன்களாலே மனிதன்‌ இதனை அறிய இயலாக்‌ குறையை நீக்க விசுவாசத்தின்‌ உதவி பெறுக” எனப்புனித அக்வின்‌ தோமாவுடன்‌ சேர்ந்து அந்த மாண்புயர்‌ கீதத்தைப் பாடுவதும், விசுவாசத்தின்‌ உதவியைப் பெறுவதுமே, இப்பேருண்மையை உய்த்துணர வழி செய்யும்‌, ஏனெனில்‌ நற்கருணை ஒரு மறை பொருள்‌.

“அப்பத்திலும்‌ இரசத்திலும்‌ இயற்கைப்‌ உறுதியாகவும்‌ வெளிப்‌படையாகவும்‌ அவற்றைத்‌ தமது உடல்‌, தமது இரத்தம்‌ எனக்‌ கூறியுள்ளார்‌. நமது புலன்கள்‌ நமக்கு வேறொன்றை புகட்டினாலும்‌, நமது நம்பிக்கை நமக்கு உறுதி தருகிறது.” - எருசலேம்‌ புனித சிரில்‌.
 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas