வாழ்க்கை ஒரு தேடல்.

அருட்சகோதரிகள் மார்த்தா, மரியா, புனித அன்னாள் மடம், சென்னை24

வாழ்க்கை ஒரு தேடல். அதில் வெற்றி காண்பவர்கள் கடவுளின் துணை அவர்களுக்கு உண்டு. வார்த்தையான இறைவன் மனிதனாகப் பிறந்தார். மனு உருவான இறைவனை தேடினோர் கண்டடைந்தனர்.

நீங்கள் தேடுங்கள் அப்போது நீங்களும் கண்டடைவீர்கள். ஓடித் தேடி பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு இருக்கின்ற நாம் பெருவிழாவின் மையமான இயேசுவிற்கு பாலகனை நாடி தேட மறுத்தும், மறந்தும் போயிருக்கிறோம். எனவே நம் வாழ்வின் தேடல்? எது யார்? என்பதை சிந்திக்கலாம்.

விண்ணில் தோன்றிய விந்தை மிக விண்மீன் ஒன்று ஏதோ ஒரு செய்தியைத் தனக்குள் மறைத்துக் கொண்டிருக்க சிலர், இந்த மீனைக் கண்டு மகிழ்ந்தனர். வெகுசிலர் அந்தச் செய்தியைத் தேட துணிந்தனர். குழந்தை இயேசு பாலகனைக் காண வேண்டும் என்ற தேடல் பல மைல்கல் கடந்து இடையறாது பயணம் செய்த ஞானிகள், பல இன்னல்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஞானிகளின் வழிகாட்டியான விண்மீன் மறைந்து விட்டது. ஞானிகள் எங்கே அந்த விண்மீன்? என்று தேடினார்கள். ஆனால் கண்ணில் பட்டதோ ஏரோதின் அரண்மனை. ஒருவேளை குழந்தை இயேசு பிறந்து இருப்பாரோ என்று எண்ணி, உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்து ஏரோது நயவஞ்சகமாகப் பேசி அனைத்தையும் தெரிந்து கொண்டு, தனக்குப் போட்டியாக ஒர் அரசன் வருவது சரியல்ல என்று எண்ணி நடுங்கினாரன். பின் அவர்களை வழி அனுப்பினான். ஞானிகள் விண்மீனைக் கண்டு மகிழ்ந்தனர். அவர்கள் வீட்டை அடைந்து, நெடுசாண்கிடையாக விழுந்து வணங்கினர். அறிவியலிலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கிய கிழ்த்திசை ஞானிகளான கஸ்பர் சாம்பிராணிக் காணிக்கையாகவும், பல்தசார் வெள்ளைப்போளத்தையும், மெல்கியோர் பொன்னையும் காணிக்கையாகக் கொடுத்தனர்.

தேடலில் வெற்றி பெற்றவர்கள் பலர். இடையர்கள், ஞானிகள், சிமியோன், அன்னா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தேடலில் தோல்வியடைந்தோர் ஏராளம் ஏரோது, யூத மக்கள், வாழ்வில் தேடல் இல்லாதவர்கள்.

நம் வாழ்வின் தேடலில் இந்தக் குழுவில் உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள, ஞானிகள் இடையர்கள் மற்றும் பலர் முன்மாதிரியாக உள்ளனர். இவர்கள் அனைவரும் வாழ்வில் சத்தம் இல்லாமல் வெற்றி பெற்றவர்கள்.

அன்று அவர்களுக்குக் கிடைத்த நற்செய்தியை கண்டும், கேட்டும் தேடலில் ஈடுபட்டனர். வாழ்வில் எந்தத் தேடலும் இன்றி வாழும் பெரியவர் முதல் சிறியவர் வரை இறைப்பற்று இல்லாமல், “நான்” என்ற ஆணவப் போக்கில் வாழும் அனைவரின் இல்லம் தேடி, இறையாட்சிப் பணி புரிந்திடவும், வாழ்வின் புதிய விடியல் நோக்கிப் பயணிக்க அன்பு, அமைதி, மகிழ்ச்சி என்னும் பரிசினை வழங்கிய இயேசு பாலகனை தேடிச் சென்று புது வாழ்வு பெற்றிடவும் அனைவரும் வாரீர் நம் உள்ளம் என்னும் குடிலை திறந்துவைப்போம். இறையாசீர் பெறுவோம்.

 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas