உண்மையை எடுத்துரைக்கப் பிறந்த இயேசு

பேராசிரியர் அ. குழந்தை ராஜ் - காரைக்குடி

இயேசு பிறந்த போது பல நிகழ்வுகள் நடந்தன

50 ஆண்டுகள் வரை வாழும் மனிதன் ஒருவன் ஏறத்தாழ 2000 திருப்பலி, 20 000 ஜெபமாலை, பல மறை உரை, சிறு வயதில் மறைக்கல்வி, பள்ளிகளில் நாடகம், ஆடல் பாடல் 35 ஆண்டுகளாக திரு யாத்திரை, பலமுறை வேளாங்கண்ணி பயணம், கோவில்களில் நேர்த்திக்கடன் ,சில சமயங்கலில் முரிங்கூர் போட்டா தியானம், ஆன்மிக நண்பர்கள் ஆலோசனை, மூப்பர்களின் வழி காட்டுதல், இப்படி பல அனுபவங்கள், நிகழ்வுகளில் பங்கேற்றும், எந்த விதமான மாற்றமும் இல்லாமல் வாழும் கிறிஸ்த்தவர்கள் ஏராளம்! நம்மவர்கள் மீண்டும் ஆவிக்குரிய இயல்பில் பிறக்கவேண்டும். இது கடினமல்ல, மிக எளிது. பணம், பட்டம், பதவி, அதிகாரம், போலி கௌரவம் போன்ற பல ஊனியல்புக் கயிற்றால் கட்டப்பட்டு அடிமையாக நிற்கிறான்

ஊனுடலில் பிறந்த ஒருவன் ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ வேண்டும் .மனிதனின் கூறுகளான உடல் ஆன்மா மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கை என்பது BODY MIND SOUL AND SPIRIT என்ற மூன்று பகுதிகளாக உள்ளது .. இதில் அறிவு இரண்டுக்கும் இடையில் சிக்கி தவிக்கிறது உடல் பக்கம் செல்வோமா அல்லது ஆவியின் பக்கம் செல்வோமா என்று தவிக்கிறது. ஏழு வயது சிறுமி ஒருத்தி திருக்குறளையும் மனப்பாடமாக சொல்கிறாள் ஐந்து மாதமாக இருந்தபோதே அந்த தாய் திருக்குறள், தேவாரம், திருவாசகம் கற்றுக் கொடுதிருக்கிறார். மேடைகளில் ஏறி தன் வியத்தகு சாதனையை செய்து காட்டுகிறார் .இப்படிப்பட்ட இளம் பிள்ளைகளை PRODIGY என்பார்கள். இது போல நம் அன்னை மரியாவும் பாலன் இயேசுவுக்கு பழைய ஏற்பாட்டு நூல்களை கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதனால் தான் கோவிலில் மறை நூல் அறிஞர் பரிசேயர் சதுசேயர்களின் மத்தியில் இயேசு தர்க்கம் புரிந்து வெற்றி பெற்றிருக்கின்றார்

”ஒருவன் மீண்டும் பிறவாவிடில் அவனுக்கு விண்ணரசில் நுழைய வாய்ப்பில்லை” என்று இயேசு கூறியதை புகழ் பெற்ற யூத ராபி நிக்கோதேமு “அது எப்படி ஒரு மனிதன் தாயின் வயிற்றுக்குள் புகுந்து மீண்டும் பிறக்க முடியும்” என்று தனது அறியாமையை நம் சார்பாக அன்றே கேட்டிருக்கிறார் . வரலாற்றில் நுழைந்த இறைவன் மனு உருக்கொண்டு மண்ணக மக்களை விண்ணகம் சேர்க்க திருவுளம் கொண்டார் . விண்ணகம் என்பது நம் இறப்புக்குப்பின் உள்ள நிலை அல்ல. நாம் வாழும் காலத்திலேயே விண்ணக சுவையை உணரவேண்டும் அதன் தொடர்ச்சிதான் விண்ணகம்.

இறைவனின் இல்லத்தை கள்வர் குகையாக மாற்றிவிட்டார்களே என்ற ஆதங்கப்பட்டு சாட்டை ஒன்றை பின்னி, பின்னி எடுத்து விட்டார். ஓட ஓட விரட்டி அடித்தார். தொழு நோயாளி சிமியோன் இல்லத்தில் உணவு அருந்துகிறார், ஆடு மாடு பலிகளை தவிர்த்தார். விதவைகளுக்கு மறு வாழ்வு கொடுத்தார். பாவிகளை மன்னித்தார். சமூக ஊனங்களை தனி மனிதனாக நின்று எதிர்த்தார். நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுவதைப்போல “என் அறிவுக்கு எட்டியபடி நான் யாரையாவது என் குருவாக ஏற்றுக்கொள்வேன் என்றால் இயேசுவை தவிர நான் யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்” எனக் கூறுகிறார் பழைய மிஷனரிகள் பாதிரியார்கள் இயேசுவின் மறு ஆட்களாக பணி ஆற்றிவந்திருக்கின்றனர். ஜாதி, மத, மொழி, சம்பிரதாயங்களை, உடைத்தெறிந்தார்கள் .தற்போது கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவைகளை தவிடு பொடியாக்கி நாமும் இயேசுவாக மீண்டும் ஆவியானவரில் பிறப்போம்