நம் வாழ்க்கை நாயகன் இயேசு

அருட்தந்தை அறந்தை ஆண்டோ - சென்னை
இறைவனாம் இயேசு குழந்தை வடிவில்
நம்மிடையே இன்று பிறந்தாரே..
நிறைவான வாழ்வை மாந்தர் நம்மோடு
பகிர அவர் வந்தாரே...
தேடுவோம் வரலாற்று இயேசுவை அல்ல ....
வாழ்க்கை இயேசுவை.....

இவ்வுலக வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்கின்றபோது, மனித வாழ்விலே பிறப்பு என்பது ஒரு தனிப் பெறும் மகத்தான இடத்தை பிடித்திருக்கின்றது. குடும்பத்திலே குழந்தை பிறந்தவுடனே தாய் பெரும் மகிழ்வோடு அரவணைத்து முத்தமிடுகிறாள். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள், அன்பர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் இனிப்பு பெற்று வாழ்த்திச் செல்கின்றனர்.
பிறப்புக் குடும்பத்திற்கு புதிய கொடை பெறுவதை உணர்கின்றனர். குடும்பத்திற்கு உறவினர்களுக்கு புதுப்பொழிவுட்டப்படுகிறது.

இது போன்று அன்று...

அன்று இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றோம்? வரலாற்று இயேசுவை கண்டு கொள்கின்ற நாம் வாழ்க்கை இயேசுவை எப்போது காணப் போகின்றோம்?

Joseph holding Infant Jesusவரலாற்று இயேசுவின் பிறப்பு மனிதருக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்தது.... இயேசுவின் பிறப்பு இருளை அகற்றி ஒளியைக் கொண்டு வந்தது...இறந்துபோன இறை மனித உறவை உயிர்ப்பிக்கச் செய்தது. மானிட விடியலுக்கு வழி கோலியது. இதன் வரலாற்றுப் பின்னனியில் பார்க்கின்றபோது கடவுள் தம் மக்களைப் பாவம் என்னும் இருளில் இருந்தும், அடிமை வாழ்விலிருந்தும் விடுவிக்ககத் தொடக்கக்காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியான முயற்சித்ததார். ஆனால் நாம் வாழ்கின்ற இந்த காலக் கட்டத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு என்னும் பேரொளியை அளிக்கின்றார். ஆனால் நாமோ அவரது அன்பை உதறி தள்ளிவிட்டு இன்னும் உறங்கி கொண்டிருக்கின்றோம் என்று சொல்வதில் தவறில்லை.

இறைவனால் தேர்ந்துக் கொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்கள் பாவத்தில் வீழ்ந்ததால் விடுதலைக்காய் எதிர்நோக்கினார்கள். அதே வாழ்வில் நிலைத்திருக்கும் நாம் வரலாற்று இயேசுவை தேடாமல் வாழ்க்கை இயேசுவை நம் உறவுகளில் தேடுவோம்.

கடவுள் செய்த மாபெறும் புரட்சி அவர் மனிதனாது (யோவான் 1:14) வாக்கு மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார். கடவுள் மனுவுருவானர் என்ற மாபெரும் உண்மையை திருத்தூதர் பவுல் வெளிப்படுத்துகிறார்.(தீத் 3:4) நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனிதநேயமும் வெளிப்பட்டது.

கடவுள் மனிதராய் பிறந்து மனித நேயத்தை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் கைகளால் பார்வை பெற்றனர். மூடவர்கள் நடந்தனர். தொழுநோயாளர்கள் நலமடைந்தனர். காதுகேளாதோர் கேட்கவும், இறந்தோர் உயிருடன் எழுப்பப்பட்டனர். சுருக்கமாக கிறிஸ்து சென்ற இடமெல்லாம் நன்மை செய்ததைப் பார்க்கின்றோம்.

வரலாற்று இயேசு நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி மனிதனானார். இதன் வெளிப்பாட்டை யோவான் 3:16ல் பார்க்கின்றோம். கடவுள் இவ்வுலகை அன்பு செய்ததால் தன் மகனை இவ்வுலகு மகத்துவம் பெற அனுப்பினார் என்பதை நாம் அறிவோம். எனவே வரலாற்று இயேசுவை வாழ்க்கையில் தேட - உறவுகளைப் புதிப்பித்து கொள்வோம்.

வாழ்க்கை இயேசு நம்மில் பிறக்க வேண்டும் என்றால்
எந்த சுயநலமில்லாத அன்பு செய்வோம்.
கைம்மாறு கருதாத உழைப்பு..
எதிர்பார்ப்பு இல்லாத தியாகம்...
இவைகள் நம் வாழ்வில் பிறந்து விட்டால்
வாழ்க்கை இயேசு நம்மில் வலம் வருவார்.
வரலாற்று இறைவன் வாழ்க்கை இறைவனாய் பிறக்க விரும்புவது.
வஞ்சகம் இல்லாத இடத்தில்
பிளவு இல்லாத இடத்தில்
சுயநலம் இல்லாத இடத்தில்
சுரண்டல் இல்லாத இடத்தில்
சூனியம் இல்லாத இடத்தில்