அன்னைமரி ஒர் அட்சயப் பாத்திரம்

அ.அல்போன்ஸ்
மரியாள் விடியலின் பொழுது
சத்தியத்தின் சாகாவரம் பெற்றவள் ! 
அன்னையே நீ  இங்கே வந்தபொழுது தான் 
பூமி தன்னை புதுப்பித்துக் கொண்டது. 

நீ எங்கள் பாவ இருட்டின் வெளிச்ச நிலா 
ஆண்டவரின் தூதில் ஆனந்தம் உனக்குள்ளே 
ஆண்டவனும் உனக்குள்ளே 

ஆகட்டும் என்றாய் யுக உறக்கத்தை கலைக்க 
சுடச்சுட வந்த சூரிய விளக்கு
சுதன் உன்னில் சூல் கொண்டார்! 

ஏழை தச்சனிடம் ஏழ்மையில் தோழமை கண்டாய் 
மாட்டு தொழுவத்தில் மழலை பிறந்தது !
அதன் மொட்டு வாயிலிருந்து மோகனச் சிரிப்பு 
பரவசத்தோடு அணைத்துக் கொள்ளும் பாச வெதுவெதுப்பு  ! 

ஞானியர் ஆராதித்ததும் இடையர் ஆனந்தித்ததும் 
ஏரோது கொல்லதுடித்ததும் மௌனமாய் அழுகிறாய் ! 
மழலையே இது உறக்கத்திற்கான தாலாட்டு அல்ல 
விழிப்பதற்கான பூபாளம் !

ஏரோது சினத்தில் தலைவன் குணத்தில் குரூரன்
மனத்தில் அசுரன் 
ஞானியர் திரும்பி வராததில் ஏரிமலையாய் வெடித்தான் !
மரணவேடன் ஒரு விபரீதம் கை விரித்து தலை விரித்தது !

குழந்தை இயேசுவுக்கு குறிவைத்து விட்டான் 
மழலைகளைக் கொல்ல வெறி கொண்டு அறிவித்தான் 

யூத வல்லூறுகளின் அட்டுழியம் இரவை கிடுகிடுக்க வைத்தது 
நள்ளிரவில் சூரியனைத் தேடினார்கள் கல் நெஞ்ச வேடர்கள் 
துள்ளி எழுந்த பகை துரத்திவந்தது 
ஆகாயத்தை அழிப்பதற்கு தூசிகளின் துரத்தல்  
The_Flight_to_Egypt











அன்னைமரி ஒர் அட்சயப் பாத்திரம் 
அவள் கைகளில் அமுதமேந்திய கலசம் !

பெத்லேகம் கடப்பதென்றால் காற்றின் கால்கள் 
கூட சுளுக்கிக்கொள்ளும் 
கையில் ஒளியைஏந்தி இருட்டைத் துரத்தினாள் 
பாதுகை இல்லாத பாதங்களோடு நடந்தாள் !

வழியோர மரங்களே இலை போர்த்துங்கள் 
சன்னம் சன்னமாய் கூவும் தென்னங் குயில்களே 
உங்கள் பாட்டை நிறுத்துங்கள் குழந்தை கொஞ்சம் தூங்கட்டும் !
ராட்சச ராத்திரியில் விண்மீண்களே தீபம் ஏற்றுங்கள் 

அன்றே தொடங்கியது மீட்பின் புனிதப் பயணம் 
வெளிச்சத்தின் விலாசம் எகிப்து வந்து நின்றது. 
ஆன்மாவில் பூச்சொரிய உயிர்க்கமுதம் ஊட்ட 
உள்ளன்பு கொண்டாட உயிரிலே இனிக்கும் !

தாயை வணங்குவோம்