angles sings

ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பாக கொண்டாடுகின்றோம். இந்த நாள் கூறும் செய்திகள் தான் என்ன?

madonnaகிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி முன் அறிவிக்கும் எசாயா இறைவாக்கினர் கூறும் போது " ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார். " கிறிஸ்து பிறப்பு என்பது இறைவன் மனிதனைத் தேடி இம்மண்ணுலகத்திற்கு இறங்கி வந்த மாபெரும் மகிழ்ச்சியூட்டும் பெருவிழா. "வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்." என்ற யோவானின் வார்த்தைகளும், "விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது." என்ற லூக்காவின் வார்த்தைகளும் இதனை உறுதிச் செய்கிறது. இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.

child Jesus playing'ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள்ள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது: தாவீதின் அரியணையில் அமர்ந்துத் தாவீதின் அரசை நிலைநாட்டுவார்: இன்று முதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைப் பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும். ' என்கிறார் எசாயா இறைவாக்கினர். ஆக கிறிஸ்துவின் பிறப்பு அமைதியை நிலவும், அவரது அரசை இம்மண்ணுலகில் நிலைநாட்டுவதும், அவ்வரசில் நம்மை எல்லாம் பங்குப் பெறச் செய்யும் ஓர் அழைப்பின் விழா.

happy christmas

கிறிஸ்துவின் பிறப்பு முதலில் இடையர்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள் கண்டக் காட்சிகள் நமக்குக் கூறும் செய்திகள் தான் என்ன? மாட்டுத்தொழுவத்தின் தீவனத்தொட்டியில் கந்தல்துணியில் பொதிந்துக் கிடக்கும் எழ்மை நிலையே ஏற்றுக்கொள்ளுகிறார். இந்த உலகை ஓரேவார்த்தையில் உண்டாக்கியத் தேவன், தன் ஒரேபேறான மகனை மாட்டுத்தொழுவத்தில் பிறக்கச் செய்து தான் ஏழைகளுக்கு வாழ்வளிக்க வந்த இறைவன் என்பதை நிருபிக்கிறார்.

இப்படியாக ஒரு மாபெரும் விழாவை கொண்டாடுகிற அனைவரையும் கிறிஸ்துவின் சாட்சியாக, அன்பைப் பகிர்ந்தவர்களாக வாழ, கிறிஸ்து பிறப்பு விழா கூறும் செய்திகளாகிய எளிமை, தாழ்ச்சி, அமைதி ஆகியவற்றை நம் வாழ்வில் ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கிறது.


xmas line

சிந்தனைக்கு
bulletகிறிஸ்து பிறப்பு விழா எனக்குக் கூறும் செய்தி என்ன?
bulletகிறிஸ்து பிறப்பு விழா எனக்குள் என்ன மாற்றங்களை, தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?
bulletகிறிஸ்து பிறப்பு விழாவின் சம்பிரதாயங்களை, சடங்குகளை கடந்து மனிதநேயத்தை வளர்க்க முயலுகிறேனா?
bulletகிறிஸ்து பிறப்பு விழா மனிதமாண்பை, சகோதரத்துவத்தை, அன்பை, தாழ்ச்சியை, ஏழ்மையை ஏற்றுக் கொள்ள எந்த வகையில் எனக்கு உதவுகிறது?