அன்றாட வாழ்வில் புனித இஞ்ஞாசியரின் ஆன்மீகம்

(அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதிய "பத்து வாரங்களில் பரமனோடு பரவசம்" என்ற நூலின் பயிற்சிமுறைகள்)

தியான மறையுரை
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

எட்டாம் வாரம்

பம்பரம் போல் பரபரப்பாக சுழுலும் வாழ்வில் ஒரமாய் ஒதுங்கி உன்னதர் இயேசுவோடு உரையாடி ஒளிதேடி இறைவாக்கை விளக்காக வாழ்வாக வரவேற்று வளம் பெறுக!

50ம் நாள் வேந்தனின் அழைப்பு


அருள்வாக்கு. தொடக்க நூல் 12:1-8 1

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2. உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார். 4. ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்ற பொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து . 5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர். 6 ஆபிராம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். 7. ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி "உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்" என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார். 8. ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.

அருள் வேண்டல்

ஆண்டவரே! உம் அழைப்பை ஏற்று, உன்னைப் பின்தொடர் அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

 1. உன் நாட்டினின்றும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு செல்.
 2. உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்.
 3. அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! நீர் எனக்கு ஆசி வழங்கி எனது எதிர்காலம் வெற்றியாய் அமையும் என்று கூறினதற்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் செய்த உடன்படிக்கையில் நான் விசுவாசத்துடன் நிலைத்திருக்க அருள்தாரும்!

50th Day – Call of the Lord


Word of God: Genesis 12:1 - 8

1 Now the Lord said to Abram, “Go from your country and your kindred and your father’s house to the land that I will show you. 2 I will make of you a great nation, and I will bless you, and make your name great, so that you will be a blessing. 3 I will bless those who bless you, and the one who curses you I will curse; and in you all the families of the earth shall be blessed.” 4 So Abram went, as the Lord had told him; and Lot went with him. Abram was seventy-five years old when he departed from Haran. 5 Abram took his wife Sarai and his brother’s son Lot, and all the possessions that they had gathered, and the persons whom they had acquired in Haran; and they set forth to go to the land of Canaan. When they had come to the land of Canaan, 6 Abram passed through the land to the place at Shechem, to the oak of Moreh. At that time the Canaanites were in the land. 7 Then the Lord appeared to Abram, and said, “To your offspring I will give this land.” So he built there an altar to the Lord, who had appeared to him. 8 From there he moved on to the hill country on the east of Bethel, and pitched his tent, with Bethel on the west and Ai on the east; and there he built an altar to the Lord and invoked the name of the Lord.

Prayer:

Lord! Grant me the grace to accept your call and to follow you.

Reflective Meditation:

 1. “Go from your country and your kindred and your father’s house to the land that I will show you.
 2. “To your offspring I will give this land”.
 3. There he built an altar to the Lord and invoked the name of the Lord.

Supplication:

Lord! I thank you for blessing me and declaring that my future will be successful. Grant me your grace to continue to live with faith in your covenant forever.

51ம் நாள் திக்குவாயன்


அருள்வாக்கு : விடுதலைப் பயணம் 4 : 10-17

10 மோசே ஆண்டவரிடம் : "ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ , பேசிய பின்போ , நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்" என்றார். 11 ஆண்டவர் அவரிடம், "மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார் ? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! 12 ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்கு கற்பிப்பேன்" என்றார். 13 அதற்கு அவர், "வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!" என்றுரைத்தார். 14 இதைக் கேட்டு ஆண்டவர்மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: "லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான். 15 நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன். 16 உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய். 17 இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!"

அருள் வேண்டல்:

ஆண்டவரே! எனது பலவீனத்தை நீர் அறிவீர். என் வாயின் வழியாக உமது வாழ்வுதரும் வார்த்தையைப் பிறரோடு பேச எனக்கு அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல் :

 1. ஐயோ! ஆண்டவரே! நாவன்மை அற்றவன் நான். ஏனெனில், எனக்கு வாய் திக்கும், நாவும் குழறும்.
 2. நான் உன் நாவில் இருப்பேன். நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்.
 3. நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! நீர் பேசும் அடியேன் கேட்கின்றேன். நான் கேட்ட வார்த்தைகளைத் தியானித்துத் தைரியத்தோடு பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அருளைத்தாரும்.

51st Day – The stammered


Word of God: Exodus 4:10 - 17

1 But Moses said to the Lord, “O my Lord, I have never been eloquent, neither in the past nor even now that you have spoken to your servant; but I am slow of speech and slow of tongue.” 11 Then the Lord said to him, “Who gives speech to mortals? Who makes them mute or deaf, seeing or blind? Is it not I, the Lord? 12 Now go, and I will be with your mouth and teach you what you are to speak.” 13 But he said, “O my Lord, please send someone else.” 14 Then the anger of the Lord was kindled against Moses and he said, “What of your brother Aaron the Levite? I know that he can speak fluently; even now he is coming out to meet you, and when he sees you his heart will be glad. 15 You shall speak to him and put the words in his mouth; and I will be with your mouth and with his mouth, and will teach you what you shall do. 16 He indeed shall speak for you to the people; he shall serve as a mouth for you, and you shall serve as God for him. 17 Take in your hand this staff, with which you shall perform the signs.”

Prayer:

Lord! You know my weakness. Grant me the grace to share your life-giving words with others through my mouth.

Reflective Meditation:

 1. “O my Lord, I have never been eloquent, I am slow of speech and slow of tongue”.
 2. “I will be with your mouth and teach you what you are to speak”.
 3. “I will be with your mouth and with his mouth, and will teach you what you shall do”.

Supplication:

Speak, Lord! Your servant is listening. Give me the grace to meditate on your words and share the same with others courageously.

52ம் நாள் அசுத்த நாவுடையவன்


அருள்வாக்கு: எசாயா 6: 1-8

1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமான தோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. 2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக் கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். ஆழ்ந்து தியானித்தல் : 1. தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான், படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே! இதோ, இந்நெருப்புப் பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது. உன்பாவம் மன்னிக்கப்பட்டது. 3. இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும். 3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து : 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். 4 கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித் தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. 5 அப்பொழுது நான் : "ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்றேன். 6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். 7 அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப் பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது," என்றார். 8 மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு , " இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! என் குற்றப்பழியை நீக்கி உமது வாழ்வு தரும் வார்த்தைகளை அறிக்கையிட அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல் :

 1. தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான், படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!
 2. இதோ, இந்நெருப்புப் பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது. உன்பாவம் மன்னிக்கப்பட்டது.
 3. இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! உமது வார்த்தையால் என்னைத் தூய்மையாக்கினீர். உமது பணிக்காக என்னையே நான் அர்ப்பணிக்க எனக்குத் தாராள மனதைத்தாரும்.

52nd Day – Man of unclean lips


Word of God: Isaiah 6: 1 - 8

6 In the year that King Uzziah died, I saw the Lord sitting on a throne, high and lofty; and the hem of his robe filled the temple. 2 Seraphs were in attendance above him; each had six wings: with two they covered their faces, and with two they covered their feet, and with two they flew. 3 And one called to another and said: “Holy, holy, holy is the Lord of hosts; the whole earth is full of his glory.” 4 The pivots on the thresholds shook at the voices of those who called, and the house filled with smoke. 5 And I said: “Woe is me! I am lost, for I am a man of unclean lips, and I live among a people of unclean lips; yet my eyes have seen the King, the Lord of hosts!” 6 Then one of the seraphs flew to me, holding a live coal that had been taken from the altar with a pair of tongs. 7 The seraph touched my mouth with it and said: “Now that this has touched your lips, your guilt has departed and your sin is blotted out.” 8 Then I heard the voice of the Lord saying, “Whom shall I send, and who will go for us?” And I said, “Here am I; send me!”

Prayer:

Lord! Remove my guilt and give me your grace to proclaim your life-giving words.

Reflective Meditation:

 1. I am a man of unclean lips, and I live among a people of unclean lips; yet my eyes have seen the King, the Lord of hosts!.
 2. Now that this has touched your lips, your guilt has departed and your sin is blotted out.
 3. “Here am I; send me!”

Supplication:

Lord! You made me clean by your words. Give me a generous heart to dedicate myself to your service.

53ம் நாள் நான் சிறுபிள்ளையாயிற்றே!


அருள்வாக்கு: எரேமியா 1:5-10

5 'தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.' நான், என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளை தானே' என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது : "சிறுபிள்ளை நான் என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல் 8 அவர்கள் முன் அஞ்சாதே . ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர்." ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: "இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். 10 பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்".

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது வாக்கைக் கேட்டு அதன்படி நடந்து பிறரையும் உம் வழியில் நடத்திட அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. நீ பிறக்கு முன்பே உன்னைத் திருநிலைப் படுத்தினேன்.
 2. அஞ்சாதே.... உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்.
 3. இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசர்கள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! உம் வாக்கைப் பயன்படுத்தி பிறரது வாழ்க்கையைக் கட்டியெழுப்பி உம்மிடம் அவர்களைக் கொண்டு வரும் கருவியாக என்னைப் பயன்படுத்தும்.

53rd Day – “I am only a boy”


Word of God: Jeremiah 1:5 - 10

5 “Before I formed you in the womb I knew you, and before you were born I consecrated you; I appointed you a prophet to the nations.” 6 Then I said, “Ah, Lord God! Truly I do not know how to speak, for I am only a boy.” 7 But the Lord said to me, “Do not say, ‘I am only a boy’; for you shall go to all to whom I send you, and you shall speak whatever I command you. 8 Do not be afraid of them, for I am with you to deliver you, says the Lord.” 9 Then the Lord put out his hand and touched my mouth; and the Lord said to me, “Now I have put my words in your mouth. 10 See, today I appoint you over nations and over kingdoms, to pluck up and to pull down, to destroy and to overthrow, to build and to plant.”

Prayer:

Lord! Give me your grace to listen and pursue your words and to lead others in your path.

Reflective Meditation:

 1. Before you were born I consecrated you.
 2. Do not be afraid; for I am with you to deliver you.
 3. Today I appoint you over nations and over kingdoms.

Supplication:

Lord! Use me as an instrument to build the life of others with your words and to bring them to your fold.

54ம் நாள் வந்து பாருங்கள்


அருள்வாக்கு: யோவான் 1:35-51

35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். 36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி என்றார். 37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். 38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். 39 அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். 40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். 41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். 'மெசியா என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். 42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி கேபா' எனப் படுவாய் என்றார். கேபா' என்றால் பாறை' என்பது பொருள். 43 மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார். 44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள் . 45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். 46 அதற்கு நத்தனியேல் , "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். 47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார். 48 நத்தனியேல் , "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு . "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். 49 நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 50 அதற்கு இயேசு , "உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார். 51 மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது குரலுக்குச் செவி மடுத்து உம்மைப் பின் தொடர எனக்கு அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? வந்து பாருங்கள் !
 2. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
 3. வானம் திறந்திருப்பதையும் கடவுளின் வானதூதர்கள் மானிட மகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! என் சொற்களாலும் என் வாழ்க்கையாலும் பிறரை உம்மிடம் கொண்டு வரக்கூடிய கருவியாக என்னைப் பயன்படுத்தும்.

54th Day – “Come and see”


Word of God: John 1:35 - 51

35 The next day John again was standing with two of his disciples, 36 and as he watched Jesus walk by, he exclaimed, “Look, here is the Lamb of God!” 37 The two disciples heard him say this, and they followed Jesus. 38 When Jesus turned and saw them following, he said to them, “What are you looking for?” They said to him, “Rabbi” (which translated means Teacher), “where are you staying?” 39 He said to them, “Come and see.” They came and saw where he was staying, and they remained with him that day. It was about four o’clock in the afternoon. 40 One of the two who heard John speak and followed him was Andrew, Simon Peter’s brother. 41 He first found his brother Simon and said to him, “We have found the Messiah” (which is translated Anointed). 42 He brought Simon to Jesus, who looked at him and said, “You are Simon son of John. You are to be called Cephas” (which is translated Peter). 43 The next day Jesus decided to go to Galilee. He found Philip and said to him, “Follow me.” 44 Now Philip was from Bethsaida, the city of Andrew and Peter. 45 Philip found Nathanael and said to him, “We have found him about whom Moses in the law and also the prophets wrote, Jesus son of Joseph from Nazareth.” 46 Nathanael said to him, “Can anything good come out of Nazareth?” Philip said to him, “Come and see.” 47 When Jesus saw Nathanael coming toward him, he said of him, “Here is truly an Israelite in whom there is no deceit!” 48 Nathanael asked him, “Where did you get to know me?” Jesus answered, “I saw you under the fig tree before Philip called you.” 49 Nathanael replied, “Rabbi, you are the Son of God! You are the King of Israel!” 50 Jesus answered, “Do you believe because I told you that I saw you under the fig tree? You will see greater things than these.” 51 And he said to him, “Very truly, I tell you, you will see heaven opened and the angels of God ascending and descending upon the Son of Man.”

Prayer:

Lord! Grant me the grace to listen to your voice and to follow you.

Reflective Meditation:

 1. “Where are you staying?” - “Come and see”.
 2. They remained with him that day.
 3. You will see heaven opened and the angels of God ascending and descending upon the Son of Man.

Supplication:

Lord! Use me as an instrument to bring others to you through my words and my life.

55ம் நாள் ஒன்று குறைபடுகிறது


அருள்வாக்கு : லூக்கா 18 : 18-30

18 அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். 19 அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே! 20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?" விபசாரம் செய்யாதே. கொலை செய்யாதே. களவு செய்யாதே. பொய்ச் சான்று சொல்லாதே. உன் தாய் தந்தையை மதித்து நட்” என்றார். 21 அவர், "இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்றார். 22 இதைக் கேட்ட இயேசு அவரிடம், "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் " என்றார். 23 இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில் அவர் மிகுந்த செல்வம் உடையவராய் இருந்தார். 24 அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு , " செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது எவ்வளவு கடினம் ! 25 செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார். 26 இதைக் கேட்டவர்கள், "பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?" என்று கேட்டார்கள். 27 இயேசு, " மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார். 28 பேதுரு அவரிடம், "பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றினோமே" என்றார். 29 அதற்கு அவர் அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் : இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும் 30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்" என்றார்.

அருள் வேண்டல் :

ஆண்டவரே! தவறானவற்றை அகற்றி உம்மையே பற்றிக்கொள்ள அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும் ?
 2. உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.
 3. இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில் அவர் மிகுந்த செல்வம் உடையவராய் இருந்தார்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! நீரே எனது செல்வம். நீர் ஒருவர்தான் எனக்கு நிலைவாழ்வு, மனநிறைவு அளிக்க முடியும். உம்மைப் பின்பற்ற எனக்குத் தைரியத்தைத்தாரும்.

55th Day – One thing lacking


Word of God: Luke 18:18 - 30

18 A certain ruler asked him, “Good Teacher, what must I do to inherit eternal life?” 19 Jesus said to him, “Why do you call me good? No one is good but God alone. 20 You know the commandments: ‘You shall not commit adultery; You shall not murder; You shall not steal; You shall not bear false witness; Honor your father and mother.’” 21 He replied, “I have kept all these since my youth.” 22 When Jesus heard this, he said to him, “There is still one thing lacking. Sell all that you own and distribute the money to the poor, and you will have treasure in heaven; then come, follow me.” 23 But when he heard this, he became sad; for he was very rich. 24 Jesus looked at him and said, “How hard it is for those who have wealth to enter the kingdom of God! 25 Indeed, it is easier for a camel to go through the eye of a needle than for someone who is rich to enter the kingdom of God.” 26 Those who heard it said, “Then who can be saved?” 27 He replied, “What is impossible for mortals is possible for God.” 28 Then Peter said, “Look, we have left our homes and followed you.” 29 And he said to them, “Truly I tell you, there is no one who has left house or wife or brothers or parents or children, for the sake of the kingdom of God, 30 who will not get back very much more in this age, and in the age to come eternal life.”

Prayer:

Lord! Give me the grace to put away everything wrong and hold on to you alone. .

Reflective Meditation:

 1. What must I do to inherit eternal life?
 2. There is still one thing lacking. Sell all that you own and distribute the money to the poor, and you will have treasure in heaven; then come, follow me.
 3. When he heard this, he became sad; for he was very rich.

Supplication:

Lord! You are my wealth. You alone can provide me with eternal life and contentment. Grant me the courage to follow you.

56ம் நாள் தமஸ்குவில் திசை மாற்றம்


அருள்வாக்கு: திருத்தாதர் பணிகள் 9:1-19

இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக் கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். 3 இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கிய போது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. 4 அவர் தரையில் விழ , "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். 5 அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார் ?" எனக் கேட்டார். ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார். 7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். 8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை . எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை . 10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "அன்னியா" என அழைக்க, அவர், "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார். 11 அப்போது ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். 12 அன்னியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார். 13 அதற்கு அன்னியா மறுமொழியாக, "ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறை மக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன் 14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்." என்றார். 15 அதற்கு ஆண்டவர் அவரிடம், "நீ செல் அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார். 16 என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புற வேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்" என்றார். 17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, "சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்.'' என்றார். 18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். 19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது குரலுக்கு நான் செவிமடுத்து எனது வாழ்க்கையை மாற்றி அமைக்க அருள் தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. சவுலே, சவுலே, ஏன் என்னத் துன்புறுத்துகிறாய்?
 2. அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.
 3. பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! நற்செய்திப் பணியாளனாக என்னை நீர் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறுகின்றேன். அமைதியின் கருவியாக நான் நடமாட என்னை ஆற்றுப் படுத்தும்.

56th Day – Turn of direction at Damascus


Word of God: Acts of Apostles 9:1 - 19

1 Meanwhile Saul, still breathing threats and murder against the disciples of the Lord, went to the high priest 2 and asked him for letters to the synagogues at Damascus, so that if he found any who belonged to the Way, men or women, he might bring them bound to Jerusalem. 3 Now as he was going along and approaching Damascus, suddenly a light from heaven flashed around him. 4 He fell to the ground and heard a voice saying to him, “Saul, Saul, why do you persecute me?” 5 He asked, “Who are you, Lord?” The reply came, “I am Jesus, whom you are persecuting. 6 But get up and enter the city, and you will be told what you are to do.” 7 The men who were traveling with him stood speechless because they heard the voice but saw no one. 8 Saul got up from the ground, and though his eyes were open, he could see nothing; so they led him by the hand and brought him into Damascus. 9 For three days he was without sight, and neither ate nor drank. 10 Now there was a disciple in Damascus named Ananias. The Lord said to him in a vision, “Ananias.” He answered, “Here I am, Lord.” 11 The Lord said to him, “Get up and go to the street called Straight, and at the house of Judas look for a man of Tarsus named Saul. At this moment he is praying, 12 and he has seen in a vision a man named Ananias come in and lay his hands on him so that he might regain his sight.” 13 But Ananias answered, “Lord, I have heard from many about this man, how much evil he has done to your saints in Jerusalem; 14 and here he has authority from the chief priests to bind all who invoke your name.” 15 But the Lord said to him, “Go, for he is an instrument whom I have chosen to bring my name before Gentiles and kings and before the people of Israel; 16 I myself will show him how much he must suffer for the sake of my name.” 17 So Ananias went and entered the house. He laid his hands on Saul and said, “Brother Saul, the Lord Jesus, who appeared to you on your way here, has sent me so that you may regain your sight and be filled with the Holy Spirit.” 18 And immediately something like scales fell from his eyes, and his sight was restored. Then he got up and was baptized, 19 and after taking some food, he regained his strength.

Prayer:

Lord! Give me the grace to listen to your voice and change my life.

Reflective Meditation:

 1. “Saul, Saul, why do you persecute me?”
 2. He is an instrument whom I have chosen to bring my name before Gentiles and kings and before the people of Israel.
 3. His sight was restored; then he got up and was baptized.

Supplication:

Lord! I thank you for having chosen me as a minister of evangelisation. Guide me to be an instrument of peace.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு பரமனோடு பரவசம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com