அன்றாட வாழ்வில் புனித இஞ்ஞாசியரின் ஆன்மீகம்

(அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதிய "பத்து வாரங்களில் பரமனோடு பரவசம்" என்ற நூலின் பயிற்சிமுறைகள்)

தியான மறையுரை
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

நான்காம் வாரம்

பம்பரம் போல் பரபரப்பாக சுழுலும் வாழ்வில் ஒரமாய் ஒதுங்கி உன்னதர் இயேசுவோடு உரையாடி ஒளிதேடி இறைவாக்கை விளக்காக வாழ்வாக வரவேற்று வளம் பெறுக!

22ஆம் நாள் முன்குறித்துவைத்த மேலான அன்பு


அருள் வாக்கு: எபேசியர் 1:3-13

3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம் மீது பொழிந்துள்ளார். 4 நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். 5-6 அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன் குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். 7 கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். 8 அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். 9 அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். 10 கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். 11 கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். 12 இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார். 13 நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப் பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது மாட்சியின் புகழ் விளங்க என்னை உமது அன்பினால் முன் குறித்து வைத்தீர் என்ற அருளை உணர்ந்து ஆர்ப்பரித்துப்பாட எனக்கு அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. கடவுள் தம் அன்பார்ந்த மகன் வழியாக நம் மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியுள்ளார்.
 2. கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்.
 3. வாக்களிக்கப்பட்டத் தூய ஆவியால் அவருக்குள் நாம் முத்திரையிடப் பட்டிருக்கிறோம்.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! நாங்கள் தூயோராகவும், மாசற்றோராகவும் விளங்க எங்களை ஆதிகாலம் தொட்டுத் தேர்ந்தெடுத்து, அருள் வளம் ஈந்து, மீட்பளித்து, ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளதற்காக நான் உமத்கு நன்றி கூறுகிறேன்.

22nd Day – The Fore-ordained great love


Word of God: Ephasians 1: 3-13

3 Blessed be the God and Father of our Lord Jesus Christ, who has blessed us in Christ with every spiritual blessing in the heavenly places, 4 just as he chose us in Christ before the foundation of the world to be holy and blameless before him in love. 5 He destined us for adoption as his children through Jesus Christ, according to the good pleasure of his will, 6 to the praise of his glorious grace that he freely bestowed on us in the Beloved. 7 In him we have redemption through his blood, the forgiveness of our trespasses, according to the riches of his grace 8 that he lavished on us. With all wisdom and insight 9 he has made known to us the mystery of his will, according to his good pleasure that he set forth in Christ, 10 as a plan for the fullness of time, to gather up all things in him, things in heaven and things on earth. 11 In Christ we have also obtained an inheritance, having been destined according to the purpose of him who accomplishes all things according to his counsel and will, 12 so that we, who were the first to set our hope on Christ, might live for the praise of his glory. 13 In him you also, when you had heard the word of truth, the gospel of your salvation, and had believed in him, were marked with the seal of the promised Holy Spirit.

Prayer:

Lord! Grant me the grace to realise and praise you that, in your love, you have foreordained me to proclaim your glory.

Reflective Meditation:

 1. God bestowed on us his glorious grace in the Beloved.
 2. In him we have redemption through his blood, according to the riches of his grace.
 3. In him you were marked with the seal of the promised Holy Spirit.

Supplication:

Lord! I thank you for choosing me before the foundation of the world to be holy and blameless and for redeeming and blessing me with wisdom and insight.

23ஆம் நாள் விடுதலை அளிக்கும் அன்பு


அருள் வாக்கு : எசாயா 43:1-7

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன். 2 நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும் போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. 3 ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே ; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன். 4 என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன். 5 அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்; கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்; மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன். 6 வடபுறம் நோக்கி, "அவர்களை விட்டுவிடு" என்பேன். தென்புறத்திடம் "தடுத்து நிறுத்தாதே" என்று சொல்வேன். "தொலைநாட்டிலிருந்து என் புதல்வரையும் உலகின் எல்லையிலிருந்து என் புதல்வியரையும் அழைத்து வா. 7 என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய, உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக் கொண்டுவா!".

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது விடுதலை அளிக்கும் அன்பை உணர்ந்து உம்மீது என் நம்பிக்கையை வைக்க அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. ஆஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்.
 2. நீ எனக்கு உரியவன்.
 3. என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! என்னைப் படைத்து, உருவாக்கி, உருமாற்றிப் பராமரித்து வருவதற்காக நன்றி. நான் உமக்கே சொந்தம். வேறெதையும் சார்ந்து வாழாமல் உம்மையே என் வாழ்வின் மையமாக வைத்து வாழ்வேன் என்று உறுதிமொழி கூறுகின்றேன்.

23rd Day – The love that liberates


Word of God: Isaiah 43: 1 -7

1 But now thus says the Lord, he who created you, O Jacob, he who formed you, O Israel: Do not fear, for I have redeemed you; I have called you by name, you are mine. 2 When you pass through the waters, I will be with you; and through the rivers, they shall not overwhelm you; when you walk through fire you shall not be burned, and the flame shall not consume you. 3 For I am the Lord your God, the Holy One of Israel, your Saviour. I give Egypt as your ransom, Ethiopia and Seba in exchange for you. 4 Because you are precious in my sight, and honoured, and I love you, I give people in return for you, nations in exchange for your life. 5 Do not fear, for I am with you; I will bring your offspring from the east, and from the west I will gather you; 6 I will say to the north, “Give them up,” and to the south, “Do not withhold; bring my sons from far away and my daughters from the end of the earth 7 everyone who is called by my name, whom I created for my glory, whom I formed and made.”

Prayer:

Lord! Grant me the grace to realise and your love that redeems and to have faith in you.

Reflective Meditation:

 1. Do not fear, for I have redeemed you.
 2. You are mine.
 3. You are precious in my sight, and honoured.

Supplication:

Lord! I thank you for creating, shaping, transforming and preserving me. I belong to you. I commit to live keeping you as the centre of my life and not to depend on anything else.

24ஆம் நாள் நிலை வாழ்வு அளிக்கும் அன்பு


அருள் வாக்கு : யோவான் 3:16

16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

அருள் வேண்டல்:

ஆண்டவரே! உமது மகன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து அவரளிக்கும் நிலைவாழ்வைச் சுவைக்க எனக்கு அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. தனது ஒரே மகன் மீது விசுவாசம் கொள்ளுதல்.
 2. எவரும் அழியாமல் நிலை வாழ்வு - நிறைவாழ்வு பெறுதல்
 3. அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.

அன்புடன் உரையாடல்:

அப்பா, தந்தையே! எங்கள் மீது வைத்த அன்பினால், உமது மகனை சிலுவைச் சாவிற்குக் கையளித்தீரே. சிலுவையில் தொங்கியது எங்கள் மீட்பு என்பதை உணர்ந்து நாங்கள் இந்த நிலை வாழ்வை நன்றியுடன் பெற்றுக் கொள்கிறோம். அப்பா, நன்றி! இயேசுவே நன்றி!

24th Day – The love that gives eternal life


Word of God: John 3:16

16 For God so loved the world that he gave his only Son, so that everyone who believes in him may not perish but may have eternal life.

Prayer:

Lord! Grant me the grace to have profound belief in your son and to taste the eternal life that he provides..

Reflective Meditation:

 1. Believing His only son.
 2. To have eternal life and not to perish..
 3. God so loved the world that he gave his only Son.

Supplication:

Abba, Father, because of your love on us, you gave your only son to the death on the cross. Realising that it was our redemption that hung on the cross, we receive this eternal life with gratitude. Thank you, Father! Thank you, Jesus!

25ஆம் நாள் தாயின் அன்பு


அருள் வாக்கு எசாயா 49:15-16, ஓசேயா 11:1-4:

எசாயா 49: 15 பால்குடிக்கும் தன் மகவைத்தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். 16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.

ஓசேயா 11: 1 இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்பு கூர்ந்தேன்: எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். 2 எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள், பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள். 3 ஆனால் எப்ராயி முக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். 4 பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து . அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின் மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.

அருள் வேண்டல் :

ஆண்டவரே! உமது தாயுள்ளத்தை நான் நன்குணர்ந்து ஆறுதல் பெற அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
 2. அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்.
 3. அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! என்னைப் பராமரித்து உணவூட்டிக் காத்ததற்காக நன்றி கூறுகிறேன். நான் உம்மை மறவாமல் என்றும் அன்பு செய்ய வரம் தாரும்.

25th Day – The motherly love


Word of God: Isaiah 49: 15 – 16; Hosea 11: 1 – 4

15 Can a woman forget her nursing child, or show no compassion for the child of her womb? Even these may forget, yet I will not forget you. 16 See, I have inscribed you on the palms of my hands; your walls are continually before me.
1 When Israel was a child, I loved him, and out of Egypt I called my son. 2 The more I called them, the more they went from me; they kept sacrificing to the Baals, and offering incense to idols. 3 Yet it was I who taught Ephraim to walk, I took them up in my arms; but they did not know that I healed them. 4 I led them with cords of human kindness, with bands of love. I was to them like those who lift infants to their cheeks. I bent down to them and fed them.

Prayer:

Lord! Grant me the grace to comprehend you motherly love and get comforted.

Reflective Meditation:

 1. I will not forget you.
 2. I led them with cords of human kindness, with bands of love.
 3. I bent down to them and fed them.

Supplication:

Lord! I thank you for feeding me and preserving me. May I not forget you; but love you always.

26ஆம் நாள் காணாமற்போன காசு


அருள்வாக்கு : லூக்கா 15:8-10

8 "பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போயிவிட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டைவீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார். 10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்."

அருள் வேண்டல் :

ஆண்டவரே! இருளில் மூழ்கிய நிலையில் இல்லாமல் உமது ஒளியின் பிரசன்னத்திற்கு என்னைக் கொண்டுச் செல்லும் அருளைத் தருவீராக!

ஆழ்ந்து தியானித்தல்:

 1. கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடுவதில்லையா?
 2. கண்டுபிடித்துவிட்டேன் - என்னோடு மகிழங்கள் !
 3. ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! நான் பலமுறை உம்மை விட்டகன்று ஓடி ஒளிந்தும், என்னைத் தேடி வந்து, என்னை அரவணைத்து, மீண்டும் எனக்கு மகிழ்ச்சி தந்து வருவதற்காக நன்றி கூறிகிறேன்.

Week – 26th Day – The lost penny


Word of God: Luke 15: 8 – 10

8 “Or what woman having ten silver coins, if she loses one of them, does not light a lamp, sweep the house, and search carefully until she finds it? 9 When she has found it, she calls together her friends and neighbours, saying, ‘Rejoice with me, for I have found the coin that I had lost.’ 10 Just so, I tell you, there is joy in the presence of the angels of God over one sinner who repents.”

Prayer:

Lord! With your grace, lead me from the grip of darkness to the presence of your light..

Reflective Meditation:

 1. Does not one search carefully until finding it?.
 2. Rejoice with me, for I have found.
 3. There is joy in the presence of the angels of God over one sinner who repents.

Supplication:

Lord! I went away many a time leaving you; however, you came in search of me, embraced me and gave me joy once again. I thank you.

27ஆம் நாள் தேடி வந்த தெய்வம்


அருள்வாக்கு : லூக்கா 15:1-7

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். 2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், " இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். 3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 4 "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச் செல்ல மாட்டாரா? 5 கண்டு பிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள் மேல் போட்டுக் கொள்வார்; 6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். 7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அருள் வேண்டல் :

ஆண்டவரே! எத்தனையோ முறை நான் பாதை தவறிச் சென்றுள்ளேன். இதுதான் வழியென்று காட்டி என்னைத் தூக்கி அணைத்தருளும்.

ஆழ்ந்து தியானித்தல்:

 1. இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவு அருந்துகிறாரே என்று முணுமுணுத்தனர்.
 2. கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள் மேல் போட்டுக் கொள்வார்.
 3. மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! நான் உம்மை விட்டுப் பிரிந்து போன நேரமெல்லாம், தேடிவந்து என்னைத் தூக்கி அணைத்திரே! உமக்கு நன்றி. உம்மை விட்டு என்றுமே பிரியாத வரத்தை நான் கேட்கின்றேன். வாரும் ஆண்டவரே! என்னைத் தூக்கிக் காத்தருளும் ஆண்டவரே!

27th Day – God who came searching the sinner


Word of God: Luke 15: 1 – 7

1 Now all the tax collectors and sinners were coming near to listen to him. 2 And the Pharisees and the scribes were grumbling and saying, “This fellow welcomes sinners and eats with them.” 3 So he told them this parable: 4 “Which one of you, having a hundred sheep and losing one of them, does not leave the ninety-nine in the wilderness and go after the one that is lost until he finds it? 5 When he has found it, he lays it on his shoulders and rejoices. 6 And when he comes home, he calls together his friends and neighbors, saying to them, ‘Rejoice with me, for I have found my sheep that was lost.’ 7 Just so, I tell you, there will be more joy in heaven over one sinner who repents than over ninety-nine righteous persons who need no repentance.

Prayer:

Lord! I have drifted away from the path umpteen times. Show me the right track and embrace me.

Reflective Meditation:

 1. They grumbled saying, “This fellow welcomes sinners and eats with them.”
 2. When he has found it, he lays it on his shoulders and rejoices.
 3. There will be more joy in heaven over one sinner who repents

Supplication:

Lord! Whenever I went away leaving you, you came searching for me, lifted me and embraced me. I thank you. I ask for the gift not to go away abandoning you. Come, Lord! Hold me and lift me up.

28ம் நாள் அப்பாவின் முத்தம்


அருள்வாக்கு லூக்கா 15:11-24

11 மேலும் இயேசு கூறியது: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக் கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை . 17 அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். 20 உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்து கொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21 மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். 22 தந்தை தம் பணியாளரை நோக்கி, முதல்தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள் ; 23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24 ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அருள் வேண்டல் :

ஆண்டவரே! நான் உம்மை விட்டுத் தொலைதூரத்திற்குப் போன அவல நிலையை நினைத்து மீண்டும் உம்மை நோக்கி ஓடி வர எனக்கு அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல் :

 1. எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டான்.
 2. அறிவு தெளிந்தவராய் - என் தந்தையிடம் போய் உமக்கு எதிராய் பாவம் செய்தேன்.....
 3. தந்தை அவனைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

அன்புடன் உரையாடல்:

ஆண்டவரே! நான் வழிதவறிச் சென்று விட்டேன். என்னை மீண்டும். உம் மகனாக மகளாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இனிநான் உம்மையே சார்ந்து வாழ்வேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்.

28th Day – The Father’s kiss


Word of God: Luke 15: 11 – 24

11 Then Jesus said, “There was a man who had two sons. 12 The younger of them said to his father, ‘Father, give me the share of the property that will belong to me.’ So he divided his property between them. 13 A few days later the younger son gathered all he had and travelled to a distant country, and there he squandered his property in dissolute living. 14 When he had spent everything, a severe famine took place throughout that country, and he began to be in need. 15 So he went and hired himself out to one of the citizens of that country, who sent him to his fields to feed the pigs. 16 He would gladly have filled himself with the pods that the pigs were eating; and no one gave him anything. 17 But when he came to himself he said, ‘How many of my father’s hired hands have bread enough and to spare, but here I am dying of hunger! 18 I will get up and go to my father, and I will say to him, “Father, I have sinned against heaven and before you; 19 I am no longer worthy to be called your son; treat me like one of your hired hands.”’ 20 So he set off and went to his father. But while he was still far off, his father saw him and was filled with compassion; he ran and put his arms around him and kissed him. 21 Then the son said to him, ‘Father, I have sinned against heaven and before you; I am no longer worthy to be called your son.’ 22 But the father said to his slaves, ‘Quickly, bring out a robe—the best one—and put it on him; put a ring on his finger and sandals on his feet. 23 And get the fatted calf and kill it, and let us eat and celebrate; 24 for this son of mine was dead and is alive again; he was lost and is found!’ And they began to celebrate.

Prayer:

Lord! Grant me the grace to think of the awful times when I went afar leaving you and come back to you.

Reflective Meditation:

 1. He gathered all he had and travelled to a distant country
 2. He came to himself… go to my father, and I will say to him, “Father, I have sinned against heaven and before you.
 3. His father saw him and was filled with compassion; he ran and put his arms around him and kissed him

Supplication:

Lord! I have drifted away from my way. Thank you for accepting me as your son/daughter. I commit that hereafter my life will depend on you.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு பரமனோடு பரவசம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com