மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசேக்கியேல் 18: 25-28 | பிலிப்பியர் 2 :1-11 | மத்தேயு 21: 28-32

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



அயர்லாந்து தேசத்திலே மத்தேயு தால்பட் என்ற மனிதர் 1856-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு குடிகாரர். 12 வயது நடக்கும்போது தனக்கு வேலை கிடைக்காததால் ஒரு பிராந்தி கடையிலே சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். செய்யும் வேலைக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிராந்தி விஸ்கி என்று மாறி மாறிக் குடிப்பார். காசு இன்றி போதையில் வீடு வருவார். தாயோ அவனுக்காகக் காத்திருப்பாள். ஒரு வார்த்தைக்கூட புண்படப் பேசியதில்லை. பலவிதமான தொல்லைகளைத்தான் அன்னைக்கும், சமுதாயத்திற்கும் கொடுத்தார். குற்றவாளியாகி கூண்டில் நிறுத்தப்பட்டு, நீதிபதி தண்டனைத் தீர்ப்பிடப் போகின்ற சமயத்தில் அவரது தாய், நீதிபதி அவர்களே! என் மகனுக்கு விடுதலை கொடுங்கள். அவன் திருந்துவார் என்றாள். நீதிபதியோ, "அம்மா! உன் மகன் உன்னைத்தான் வெறுக்கிறானே! பின் எதற்காக அவனுக்குப் பரிந்து பேசுகின்றாய் ?" எனக் கேட்டபோது, "நீதிபதி அவர்களே என் மகன் என்னை வெறுத்தாலும் நான் அவனை அன்பு செய்கிறேன்" என்றாள் அந்தத் தாய்.

16 ஆண்டுகள் குடித்துக் குடியைக் கெடுத்த மத்தேயு தால்பட் தன் 28 வயதில் மனம் மாறினார். 1925-ஆம் ஆண்டில் ஜூன் 7-ஆம் தேதி இறந்தார். ஆனால் இன்று அவர் புனித மத்தேயு தால்பட். தான் மனம் மாறியதற்காகத் தன் வாழ்க்கைப் புத்தகத்திலே இவ்வாறு எழுதுகிறார்.

நான் மனம் மாற ஆசைப்பட்டேன் (தீர்க்கமான முடிவு எடுத்தேன்). காரணம் என் தாயின் அன்பும் கடவுளும் என்னை மன்னிப்பார் என்ற நம்பிக்கையும்.

இறைவனின் இரக்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் எந்தப் பாவியையும் இறைவன் புறக்கணிப்பதில்லை. இறைவன் ஒருபோதும் பாவி சாக வேண்டும் என்று விரும்புவதில்லை.

இன்றைய நற்செய்தியிலே மனம் மாற விரும்பாத தலைமைக் குருக்களையும், மூப்பர்களையும் பார்த்து ஆயக்காரரும், விலைமாதரும் உங்களுக்கு முன்பாக இறையாட்சியில் பங்கெடுப்பார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார் இயேசு (மத். 21:31). இதைத்தான் எசேக்கியேல் இறைவாக்கினர், பொல்லாதார் தம் பொல்லாப்பினின்று விலகி, நீதி நேர்மையைக் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் வாழ்வில் சாகமாட்டார்கள் (எசே. 18:27-28) என்கிறார்.

அன்று உலகத் தொடக்கத்திலே கடவுளால் படைக்கப்பட்ட தூதர்களிலே ஒருசிலர் லூசிப் பேயுடன் சேர்ந்து கடவுளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டார்கள். அதனால் அவர்களே வாழ்வை இழந்தார்கள். எரிநரகத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் தாழ்ச்சியோடு இறைவனின் கட்டளைக்குப் பணிந்து வாழ்ந்தவர்கள் மிக்கேல் அதிதூதர் , அவரோடு இணைந்த மற்ற தூதர்கள். அவர்கள் மகிமையோடு வாழ்கிறார்கள். - புதிய ஏற்பாட்டிலும் சரி, பழைய ஏற்பாட்டிலும் சரி, கடவுள் இரக்கத்தின் கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார். இந்த உண்மை நாம் மனம் திரும்பத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.

இன்று நமக்குள் பாவம் செய்யாதவர்கள் யார்? என்னிடம் பாவம் உண்டு என்று உங்களில் யாராவது குற்றம் சுமத்த முடியுமா? (யோவா. 8:46) என்று இயேசு கேட்பது போல நாம் கேட்க முடியுமா? நம்மிடம் பாவம் இல்லை என்போமானால் நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் (1 யோவா. 1:8). உண்மை நம்மிடம் இல்லை. இன்று வீட்டிலும், நாட்டிலும் ஆட்டிப்படைத்து விழுங்க நினைப்பதோ போட்டி மனப்பான்மையும், வீண் பெருமையும்தான்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடக்கப்போவது நல்லதாகத் திகழட்டும். கடந்த காலத்தை ஒரு தூசியாகக் கருதி மறந்து, எதிர்காலத்தை கண்முன் வைத்து இந்த நிகழ்காலத்தில் மனம் மாற முன் வருவோம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டதுபோல, இரு மகன்களும் உணர்ச்சிவசப்பட்டு, முதல் மகன் போகமாட்டேன் என்றான். இரண்டாவது மகன் போவேன் என்றான். ஆனால் போகமாட்டேன் என்று சொன்ன மூத்த மகன்

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நில்லாது சிந்தனைக்கும் இடம் கொடுத்தான். அதனால் பணத்திற்கும் ஆன்மாவுக்கும் கடந்து சென்று மனம்மாறி வேலைக்குச் சென்றான். ஆனால் இரண்டாவது மகன் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே நின்றுவிட்டான். ஆகவே அன்பார்ந்தவர்களே! நமது உணர்ச்சி நிலையில் மட்டுமல்ல, சிந்தனையையும் ஆன்மாவையும் எட்ட வேண்டும். உதட்டளவில் உதிர்த்து விடும் வார்த்தை மட்டுமல்ல. மாறாக நம் வாழ்வோடு செயல்களோடு இணைந்த நிலையில் தான் நாம் வாழ்வு பெறுவோம். அப்போதுதான் மனமாற்றம் நிறை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீங்கள் வாழ்வது உறுதி

ஒரு பெண் பூனை ஒன்றை வளர்த்தாள். அது ஓர் அதிசயப் பூனை. அவள் உணவருந்தும் போது அவள் பக்கத்தில் அந்தப் பூனை தனது கால்களால் ஒரு எரியும் மெழுகுதிரியைப் பிடித்துக் கொண்டு நிற்கும். அப்படிப் பிடித்துக்கொண்டிருக்க அந்தப் பூனைக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் அந்தப் பூனைக்கு சொந்தக்காரியாக விளங்கிய பெண்ணின் மூன்று தோழிகள் அந்தப் பூனையைச் சோதிக்க அவள் வீட்டிற்குச் சென்றார்கள்.

முதல் பெண் உணவு அருந்திகொண்டிருந்தபோது சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை கீழே போட்டு உடைத்தாள். பூனை அசையவில்லை! இரண்டாவது பெண் ஒரு துண்டுக்கறியை பூனையின் மூக்கு அருகே கொண்டு சென்றாள். அதற்கும் பூனை அசையவில்லை ! மூன்றாவது பெண் சுண்டெலி ஒன்றை அட்டைப் பெட்டியிலிருந்து திறந்துவிட்டாள். பூனை மெழுகுதிரியைத் தூக்கி எறிந்துவிட்டு, எலியைத் துரத்திப்பிடித்துக் கொன்று தின்றது.

நம்மில் பலரை மனக்கண்களுக்குத் தெரியாத பலவீனங்கள் ஆட்டிப் படைக்கின்றன ; அந்தப் பலவீனங்கள் பாறைபோன்ற நம்மை ஓரிரு வினாடிகளில் அசைத்து பாவத்தில் விழவைத்துவிடுகின்றன! நாம் புனிதர்களாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் அன்றாடச் சூழ்நிலையில் மனிதர்களாகக் கூட வாழமுடியாமல் தவிக்கின்றோம்.

தாவீதும், சாலமோனும், சாம்ஸனும் விழுந்த கதைகளை நாமறிவோம்! எல்லாரும் உம்மைவிட்டு ஓடிப்போய் விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போகமாட்டேன் (மத் 26:33) என்ற திருத்தூதர் பேதுரு என்ன செய்தார் என்பதை ஊரறியும், உலகறியும்.

இன்றைய வாசகங்கள் பலவீனர்களாகிய நமக்கு ஆறுதல் தரும் நற்செய்தியைத் தருகின்றன. அவை நம்மைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் சரி, நீங்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், நீங்கள் வாழ்வது உறுதி (எசே 18:28); இறைவனின் இரக்கப் பெருக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, மனம் மாறும் வரிதண்டுவோர்க்கும், விலைமகளிருக்கும் கூட இறையாசி, இறையாட்சி கிடைக்கும் (மத் 21:31-32) என்று கூறுகின்றன.

எது பாவம்? எது புண்ணியம்? என்பதைப் புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.
கட்சி மனப்பான்மை - இது பாவம் வீண் பெருமை - இது பாவம் மனத் தாழ்மை - இது புண்ணியம்
மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவர்களாகக் கருதுவது - இது புண்ணியம்!
பிறரைச் சார்ந்தவற்றிலே அக்கறை கொள்வது - இது புண்ணியம்!
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பது - இது புண்ணியம்!
இயேசுவைப் போல வாழ முயற்சி செய்வோம். தவறிப் பாவத்தில் விழுந்து விட்டால் யூதாசைப் போல அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல், பேதுருவைப் போல மனம் மாறி வாழ முன்வருவோம்.

மேலும் அறிவோம் :

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்(து) ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற (குறள் : 300)

பொருள்: நாம் உண்மையாக ஆராய்ந்து கண்ட அறநூல்கள் அனைத்திலும் வாய்மையினைப் போன்ற சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை !

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, என்று வாழும் இரு மகன்களைப் பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நம்முன் வைக்கிறார். மத்தேயு நற்செய்தியில் இந்த உவமைக்கு 'இரு புதல்வர்கள் உவமை' என்று பெயரிடப்பட்டுள்ளது. விவிலியப் பேராசிரியரான William Barclay என்ற மேதை, இந்த உவமைக்கு வித்தியாசமான ஒரு தலைப்பைத் தந்துள்ளார்... “The Better of Two Bad Sons”, அதாவது, "இரு மோசமான மகன்களில் சிறந்தவர்" என்பது, அவர் தந்த தலைப்பு. இயேசு கூறும் இந்த உவமையில், நாம் சந்திக்கும் இருவருமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர் உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இந்த இருவரில், நமது கவனத்தை அதிகம் கவர்வது, இரண்டாம் மகன்தான். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலைக் கயிறாகத் திரிப்பதாகவும் உறுதிகள் அளிக்கும் பலரை, இந்த இரண்டாவது மகன், நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றார்.

சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். நாள் முழுவதும் பேசும் பலர், செயல்கள் என்றதும் காணாமல் போகும் வித்தையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. ஊரே வறுமைப்பட்டிருந்ததால், பங்குக் கோவிலும் பராமரிப்பின்றி கிடந்தது. கோவிலைச் சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது. சில வேளைகளில், அந்தப் புதர்களிலிருந்து, பாம்புகளும் கோவிலுக்குள் வருவதுண்டு. அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப் பங்குத்தந்தை வந்து சேர்ந்தார். இளையவர் என்பதால், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான நிலையில் இருந்தது, அவர் மனதை உறுத்தியது.

ஒரு ஞாயிறுத் திருப்பலியில், மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து வேலைசெய்தால், நமது கோவிலையும், சுற்றுப்பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கைதட்டினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப் பற்றி, பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும் சொன்ன ஆலோசனைகளை, உதவிப் பங்குத்தந்தை, தவறாமல் குறித்துக்கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.

உதவிப் பங்குத்தந்தை, மகிழ்ச்சியோடு, பங்குத்தந்தையிடம், கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை, அந்தப் பங்கில், பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர் இலேசான புன்னகையோடு, "Father, நீங்கள் சொன்ன இந்த யோசனையைக் கொஞ்சம் practicalஆக, கொஞ்சம் அழுத்தமாக, அடுத்த வாரம் சொல்லுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்று ஆலோசனை தந்தார்.

உதவிப் பங்குத்தந்தை அடுத்த ஞாயிறுத் திருப்பலியில், "நண்பர்களே, நான் போன வாரம் சொன்னது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம் நமது வேலையை ஆரம்பிப்போம். ஒரு சில மண்வெட்டிகள், கடப்பாரைகள் எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வேலை செய்ய, எத்தனை பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம் கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். சென்ற வாரம் எண்ணமாக, பேச்சாக இருந்தது, இப்போது ஒரு செயலாக மாறும் வேளையில், ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி, ஒடுங்கிப் போனது.

சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். இந்த உவமைக்குப் பின், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தோரின் சிந்தனைகளுக்கு, ஒரு கேள்வியையும், அவர்கள் உள்ளத்தைத் தட்டியெழுப்பும் வகையில் ஒரு கூற்றையும் வெளியிட்டார்.

மத்தேயு நற்செய்தி 21: 31-32
“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும், விலைமகளிரும், உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான், நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரி தண்டுவோரும், விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.

இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இந்த வார்த்தைகளை ஓர் உருவகமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அது இப்படி ஒலிக்கும்: “குப்பைகள் கோவிலில் வைக்கப்படும், கோவிலுக்கென குறிக்கப்பட்ட காணிக்கைகள் குப்பையில் எறியப்படும்.” அத்தனை கடுமையாக இயேசுவின் கூற்று அமைந்துள்ளது.

யூதர்களைப் பொருத்தவரை, அதிலும் சிறப்பாக, யூத மதக் குருக்களைப் பொருத்தவரை தாங்கள் கோவிலில் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய காணிக்கைப் பொருட்கள் என்றும், வரி தண்டுவோரும், விலைமகளிரும் கோவில் என்ன, சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி எறியப்படவேண்டிய குப்பைகள் என்றும் எண்ணிவந்தனர். அத்தகையோர், தங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என்று, இயேசு ஆணித்தரமாகச் சொன்ன வரிகள், மதத்தலைவர்களின் காதுகளில், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.

இந்த வரிகளை இயேசு சொன்ன சந்தர்ப்பத்தையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி, பிரிவு 21ல், இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முன், அவர் எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்தார். அவர் எந்த அதிகாரத்தில், தைரியத்தில் அதைச் செய்தார் என்று, யூதகுருக்கள் கேள்விகள் கேட்டு, அவரை மிரட்டியபோது, இயேசு இந்த இரு மகன்கள் உவமையையும், அதற்குப் பின்வரும் காரசாரமான வரிகளையும் சொல்கிறார். கோவிலை அவர் சுத்தம் செய்தபோதே, அவர்கள் மனம் கோபத்தில் வெந்துபோயிருக்கும். வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை, இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார்.

“கடவுள் உங்களுக்குத் தந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவவிட்டீர்கள், அல்லது, வேண்டுமென்றே, அந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டீர்கள்” என்று இயேசு அந்த மக்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தினார். யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். அது மட்டுமல்ல, “யோவான் கொண்டு வந்த நல்வழியை அவர்கள் பின்பற்றியதைப் பார்த்தும் நீங்கள் மாறவில்லையே” என்று வேதனையோடு இயேசு இடித்துச் சொன்னார். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவர்கள் மீது இந்த வார்த்தைகள் சாட்டையடிகளாய் விழுந்திருக்க வேண்டும். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த மகனை நினைத்துப் பார்க்கும்போது, "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்' பலரை நினைக்கத் தூண்டுகிறது. இவ்விதம், தேனொழுகப் பேசிய ஒருசிலரை நம்பி நாம் சென்றபோது, தேள்போலக் கொட்டி, நமது வேதனையைக் கூட்டிய அவர்களை, இப்போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த வலி ஆழமானது. இந்த வலி ஆறாமல், நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருந்தால், நம்மை இறைவன் குணமாக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.

வாய் வார்த்தைகளால் உறுதி தந்துவிட்டு, பின்னர் ஒன்றும் செய்யாமல், நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இன்று பொருத்தமாக இருக்கும். "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு நாமும் நம் இறைவனை வேண்டுவோம்:

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்….
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வெளிவேடம்‌ களைவோம்‌

ஓவியன்‌ ஒருவன்‌ தான்‌ தீட்டிய அருமையான ஓவியம்‌ ஒன்றை மக்கள்‌ கூடும்‌ ஒரு பொது இடத்திலே வைத்து அதன்‌ கீழே “இதில்‌ குறை காண்பவர்கள்‌ இந்தப்‌ படத்தின்‌ மேலே தங்கள்‌ கையெழுத்திட்டுச்‌ செல்லவும்‌” என்ற குறிப்பை எழுதிவிட்டுச்‌ சென்றான்‌. மறுநாள்‌ அதைப்பார்த்த அவனுக்குத்‌ தூக்கிவாரிப்போட்டது. ஓவியம்‌ முழுவதும்‌ இடைவெளியின்றி ஒரே கையொப்ப மயம்‌. அவன்‌ மீண்டும்‌ மற்றொரு ஓவியத்தை வரைந்து முன்பு போல்‌ அதே இடத்தில்‌ வைத்து அதன்‌ கீழே, “இந்த ஒவியத்தில்‌ குறை காண்பவர்கள்‌ திருத்தம்‌ செய்துவிட்டுப்‌ : போகவும்‌” என்ற குறிப்பை விட்டுச்‌ சென்றான்‌. என்ன வியப்பு! மறுநாள்‌ அந்த ஒவியம்‌ எவருடைய கையும்‌ படாமல்‌ அப்படியே இருந்தது. அதன்‌ பொருள்‌ என்ன? சொல்வது எளிது செயல்படுவது கடினம்‌. “சொல்லுதல்‌ யார்க்கும்‌ எளிய, அரியவாம்‌ சொல்லிய வண்ணம்‌ செயல்‌” என்பது குறள்‌.

“தப்புத்தாளங்கள்‌” என்று ஒரு தமிழ்த்திரைப்படம்‌. அதில்‌ ஒரு காட்சி. மேடையில்‌ ஒருவன்‌ முழங்குகிறான்‌, விபச்சாரத்தை ஒழிப்பேன்‌. சாதிப்‌ பாகுபாட்டை வேரறுப்பேன்‌, வறுமையை விரட்டியடிப்பேன்‌... என்ற போக்கில்‌. அந்தத்‌ தெருவின்‌ முனையில்‌ அமர்ந்திருக்கும்‌ ஒரு விலைமகள்‌ தனக்குள்ளே முணங்குகிறாள்‌: “மேடையில்‌ தேன்‌ சொட்டப்‌ பேசும்‌ இந்த அரசியல்வாதி பேசிவிட்டுக்‌ கூட்டம்‌ கலைந்ததும்‌ நேரே இங்கே ... என்னிடம்தான்‌ வருவான்‌” அன்பையும்‌ பண்பையும்‌, பண்பாட்டையும்‌ பற்றி மேடை தோறும்‌ வாய்கிழிய முழங்கிவிட்டு, கீழே இறங்கியதும்‌ அவற்றின்‌ விலையென்ன என்று கேட்கும்‌ வாய்ச்சொல்‌: வீரர்களுக்குக்‌ குறைவில்லை.

இதுபோன்ற போக்கும்‌ தன்மையும்‌ கொண்ட பரிசேயர்களுக்கும்‌ பூதத்‌ தலைவர்களுக்கும்‌ நல்லதொரு பாடம்‌ கற்பிக்க விரும்புகிறார்‌ கிறிஸ்து. அவர்களின்‌ மனநிலையை எடுத்துரைக்கின்ற - இடித்துரைக்கின்ற இயேசுவின்‌ உவமைகள்‌ மூன்று: 1. புதல்வர்கள்‌ இருவர்‌, 2. கொடிய குத்தகைக்காரர்‌, 3. திருமண விருந்து.

முதன்மையாக வரும்‌ உவமையில்‌ மக்கள்‌ இருவரைக்‌ குறிப்பிட்டு, “இவ்விருவருள்‌ எவர்‌ தந்தையின்‌ விருப்பப்படி செயல்பட்டவர்‌?” என்று இயேசு கேட்க, மூத்தவரே என்று விடையளித்தனர்‌ (மத்‌. 21:31). பாவிகளும்‌ அநீதி செய்தவர்களும்‌ மனம்‌ மாறி இறைவனை ஏற்றுக்‌ கொண்டதால்‌, விண்ணரசில்‌ இடம்பெற, பரிசேயர்களோ இறைவனின்‌ விருப்பத்தை நிறைவேற்றுவதாக எண்ணி இறுமாந்து செயலில்‌ முரண்பட நடந்ததால்‌ விண்ணரசை இழக்கின்றனர்‌.

ஆக, உவமை கற்றுத்‌ தரும்‌ பாடம்‌ என்ன?
1. அன்பு சொல்லில்‌ அன்று, மாறாகச்‌ செயலில்‌ எண்பிக்கப்பட வேண்டும்‌.

2. இருவரில்‌ எவன்‌ சிறந்தவன்‌ என்பதன்று. மாறாக இருவரில்‌ யார்‌ செயலில்‌ இறைவிருப்பத்தை நிறைவேற்றுவது என்பதே கேள்வி.

3. இரண்டு பேருமே தந்தைக்கு முழுமையான மகிழ்ச்சியை அளித்தவர்கள்‌ அல்ல. ஏதோ ஒரு கட்டத்தில்‌ இருவருமே தந்தையைப்‌ புண்படுத்தியவர்களே. பரவாயில்லை என்னும்‌ அளவுக்கு ஒருவன்‌ செயலால்‌ உயர்ந்து நிற்கிறான்‌. சிறந்த மகன்‌ (14௦81 801) யார்‌? தந்தையின்‌ விருப்பத்துக்குச்‌ சரி: என்று சொல்லி செயலில்‌ இறங்குபவனே!

அந்த மூன்றாவது மகன்‌ - சிறந்த மகன்‌ இயேசுவே! “நாங்கள்‌ அறிவித்த இறைமகன்‌ இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில்‌ 'ஆம்‌' என உண்மையையே பேசுபவர்‌” (2. கொரி. 1:19). திருத்தூதர்‌ பவுல்‌ குறிப்பிடும்‌ அந்த இயேசுவே என்ன சொன்னார்‌? “நீங்கள்‌ பேசும்போது ஆம்‌ என்றால்‌ ஆம்‌ எனவும்‌ இல்லை என்றால்‌ இல்லை எனவும்‌ சொல்லுங்கள்‌. இதைவிட மிகுதியாகச்‌ சொல்வது எதுவும்‌ தீயோனிடமிருந்தே வருகிறது” (மத்‌. 5:37).

“என்னை நோக்கி “ஆண்டவரே ஆண்டவரே” எனச்‌. சொல்பவரெல்லாம்‌ விண்ணரசுக்குள்‌ செல்வதில்லை. மாறாக விண்ணுலகில்‌ உள்ள என்‌ தந்தையின்‌ திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்‌” (மத்‌. 7:21) தலைமைக்‌ குருக்களும்‌ மறைநூல்‌ அறிஞர்களும்‌ எப்பொழுதும்‌ கடவுள்‌ பெயரைச்‌ சொல்லியே பிழைப்பு நடத்தினார்கள்‌. ஆனால்‌ கடவுளின்‌ விருப்பத்தைத்‌ தங்கள்‌ வாழ்வில்‌ அவர்கள்‌ செயல்படுத்தினார்களா என்றால்‌ இல்லை. அவர்களின்‌ வெளி வேடத்தைத்‌ தான்‌ இந்த இரு புதல்வர்கள்‌ உவமையில்‌ இயேசு தோலுூரித்துக்‌ காட்டுகிறார்‌.

அதனால்தான்‌ “அவர்கள்‌ என்னென்ன செய்யும்படி கூறுகிறார்களோ அவற்றையெல்லாம்‌ கடைப்பிடித்து நடந்து வாருங்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ செய்வது போல நீங்கள்‌ செய்யாதீர்கள்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ சொல்வார்கள்‌. செயலில்‌ காட்டமாட்டார்கள்‌” (மத்‌. 23:3) என்று மக்களை எச்சரிக்கிறார்‌. (மேலும்‌ காண்க. யாக்‌. 1:22-25).

மூன்றாம்‌ வகுப்புப்‌ படிக்கும்‌ இராமன்‌ கடைக்குப்‌ போய்‌ நாய்க்குட்டி ஒன்று வாங்கி வந்தான்‌. வருகிற வழியில்‌ நண்பர்கள்‌ விளையாடிக்கொண்டிருந்ததைப்‌ பார்த்துவிட்டு இராமனுக்கும்‌ விளையாட ஆசை. மைதானத்தின்‌ ஓரத்தில்‌ பையை வைத்துவிட்டு விளையாடச்‌ சென்றான்‌. அப்போது முரளி என்ற மற்றொரு மாணவன்‌ பையைத்‌ திறந்து பார்த்தான்‌. வெள்ளைவெளேர்‌ என்று அழகான நாய்க்குட்டி. அதை நைசாக எடுத்து மறைத்துவிட்டு அருகே மேய்ந்து கொண்டிருந்த சிறு பன்றிக்குட்டி ஒன்றைப்‌ பையில்‌ வைத்து விட்டான்‌. இராமன்‌ வீட்டுக்குப்‌ போனதும்‌ பையைத்‌ திறந்து பார்த்தான்‌. உள்ளே பன்றிக்‌ குட்டி. அப்பா 'காச்மூச்‌'சென்று கத்தினார்‌. இராமன்‌ பையைத்‌ தூக்கிக்‌ கொண்டு கடைக்கு ஓடினான்‌. போகிற வழியில்‌ நண்பர்கள்‌ விளையாடிக்‌ கொண்டிருந்ததைப்‌ பார்த்துவிட்டு இவனும்‌ விளையாடினான்‌. முரளி நாய்க்குட்டியைத்‌ திரும்பவும்‌ பையில்‌ வைத்து விட்டுப்‌ பன்றிக்குட்டியை எடுத்துவிட்டுவிட்டான்‌.

இராமன்‌ கடைக்குப்‌ போய்க்‌ கடைக்காரனைத்‌ திட்டிவிட்டு பையைத்‌ திறந்து காட்டியிருக்கிறான்‌. உள்ளே நாய்க்குட்டி. இராமன்‌ கடுப்பானான்‌. அதன்‌ காதைப்‌ பிடித்துத்‌ தூக்கி “ஏய்‌ ஒண்ணு நாய்க்குட்டியாய்‌ இரு, இல்லாட்டி பன்றிக்குட்டியாய்‌ இரு: வீட்ல பன்றிக்‌ குட்டியாகவும்‌, கடையிலே நாய்க்குட்டியாகவும்‌ வேடம்‌ போடாதே. அது தப்பு. போய்த்‌ தொலை” என்று சொல்லி நாய்க்குட்டியைத்‌ தூக்கிப்‌ போட்டுவிட்டு வந்துவிட்டான்‌.

ஜான்‌ பவுல்‌ என்ற அறிஞர்‌ சொல்வது போல்‌ நாம்‌ ஒவ்வொருவரும்‌ ஒரு முகமூடி அணிந்து அதற்குள்‌ ஒளிந்து கொள்கிறோம்‌. நமது சுயத்தைப்‌ பார்க்கிற திறன்‌ நமக்கில்லை. நமது உண்மை நிலையை அறியும்‌ துணிவு இல்லை. அதற்கான ஆர்வம்‌ இல்லை. அதனால்‌ முயற்சியும்‌ எடுப்பதில்லை.

நமது வாழ்க்கையிலும்‌ நாம்‌ நல்லவர்களாகத்‌ தோன்ற வேண்டும்‌ என்பதில்தான்‌ கவனம்‌ எசலுத்துகீறோமே தவிற, நல்லவர்களாக ஒருப்பதில்‌ அல்ல. பொய்முகங்கள்‌ எவ்வளவு நாட்களுக்கு: நிலைக்கும்‌? இதில்‌ அதிசயம்‌ என்னவென்றால்‌, கடவுளையும்‌ தோற்றத்தால்‌ ஏமாற்றி விடலாம்‌ என்று நாம்‌ நம்புவதுதான்‌.
பாவிகளாக இருக்கலாம்‌. நாம்‌ போலிகளாக இருக்கலாமா?

நம்மில்‌ பெரும்பாலானவர்கள்‌ நற்செய்தியில்‌ வரும்‌ இருவித மக்களாக இருக்கிறோம்‌. ஒரு சிறிய ஊர்‌. அங்கே ஒர்‌ ஏரி. நிறைய மீன்கள்‌. நீர்‌ வற்றியதும்‌ ஊரார்‌ மின்‌ பிடித்துக்‌ கொள்ள நாட்டாண்மை பணிக்கிறார்‌. அந்த நாள்‌ ஞாயிறு. ஞாயிறு திருப்பலிக்குச்‌ செல்ல வேண்டுமே என்ற எண்ணம்‌ சிலருக்கு. மீன்‌ பிடிக்க வேண்டும்‌ என்ற விருப்பம்‌ வேறு சிலருக்கு. திருப்பலிக்குச்‌ சென்றவர்கள்‌ “*இந்நேரம்‌ எவ்வளவோ மின்‌ பிடித்திருக்கலாமே”” என்று * அவர்கள்‌ எண்ணமெல்லாம்‌ எரியில்‌ இருந்தது. மீன்‌ பிடித்துக்‌ கொண்டிருந்தவர்கள்‌ “இந்நேரம்‌ திருப்பலி தொடங்கியிருக்கும்‌, மறையுரை நடக்கும்‌” என்று அவர்கள்‌ எண்ணமெல்லாம்‌ கோவிலைச்‌ சுற்றிச்‌ சுழன்றது. இவர்களில்‌ யார்‌ கடன்பூசையை நிறைவேற்றினார்‌?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நல்லெண்ணங்கள் மட்டும் போதாது

சில ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படத்தில், நாயகன் இருவேடங்களில் நடித்தார். அவர்களில் மூத்தவர் பார்க்க, பழக மிகவும் கடினமாக இருப்பார். சரியான படிப்பு இல்லாததால், சரியான வேலையும் இல்லை. அவரது இரட்டைப் பிறவியான இளையவர், படித்தவர், நல்ல வேலையில் இருந்தார், பக்திமான். அப்பாவுக்கு மிகவும் பிடித்தவர். வீட்டுக்குள் மட்டுமே இவர் பக்திப்பழம். வெளி உலகில் சரியான வில்லன். தந்தை சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைபோல நடித்துவரும் இவர், இறுதியில் தந்தையின் கழுத்தைப் பிடித்து நெறிக்கும் அளவிற்கு தன் சுய உருவை வெளிப்படுத்துகிறார். அதுவரை தந்தையிடம் சரியான பெயர் எதுவும் வாங்காத மூத்தவர், தந்தையைக் காப்பாற்றுகிறார். இதுபோன்ற பல திரைப்படங்களை நீங்களும், நானும், பார்த்திருக்கிறோம். இத்திரைப்படங்களில் வருபவர்களைப் போல, உள்ளொன்றும், வெளியொன்றும் என இரட்டை வேடமிடும் பலரை நாம் அவ்வப்போது சந்தித்திருக்கிறோம்... இல்லையா? நாமும் இதைப்போல சில வேளைகளில் செயல்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே? முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப் பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, என்று வாழும் இரு மகன்களைப் பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நம்முன் வைக்கிறார். மத்தேயு நற்செய்தியில் இந்த உவமைக்கு 'இரு புதல்வர்கள் உவமை' என்று பெயரிடப்பட்டுள்ளது. விவிலியப் பேராசிரியரான William Barclay என்ற மேதை, இந்த உவமைக்கு வித்தியாசமான ஒரு தலைப்பைத் தந்துள்ளார்... “The Better of Two Bad Sons”, அதாவது, "இரு மோசமான மகன்களில் சிறந்தவர்" என்பது, அவர் தந்த தலைப்பு. இயேசு கூறும் இந்த உவமையில், நாம் சந்திக்கும் இருவருமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர் உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இந்த இருவரில், நமது கவனத்தை அதிகம் கவர்வது, இரண்டாம் மகன்தான். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலைக் கயிறாகத் திரிப்பதாகவும் உறுதிகள் அளிக்கும் பலரை, இந்த இரண்டாவது மகன், நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றார்.

சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். நாள் முழுவதும் பேசும் பலர், செயல்கள் என்றதும் காணாமல் போகும் வித்தையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. ஊரே வறுமைப்பட்டிருந்ததால், பங்குக் கோவிலும் பராமரிப்பின்றி கிடந்தது. கோவிலைச் சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது. சில வேளைகளில், அந்தப் புதர்களிலிருந்து, பாம்புகளும் கோவிலுக்குள் வருவதுண்டு. அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப் பங்குத்தந்தை வந்து சேர்ந்தார். இளையவர் என்பதால், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான நிலையில் இருந்தது, அவர் மனதை உறுத்தியது.

ஒரு ஞாயிறுத் திருப்பலியில், மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து வேலைசெய்தால், நமது கோவிலையும், சுற்றுப்பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கைதட்டினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப் பற்றி, பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும் சொன்ன ஆலோசனைகளை, உதவிப் பங்குத்தந்தை, தவறாமல் குறித்துக்கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.

உதவிப் பங்குத்தந்தை, மகிழ்ச்சியோடு, பங்குத்தந்தையிடம், கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை, அந்தப் பங்கில், பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர் இலேசான புன்னகையோடு, "Father, நீங்கள் சொன்ன இந்த யோசனையைக் கொஞ்சம் practicalஆக, கொஞ்சம் அழுத்தமாக, அடுத்த வாரம் சொல்லுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்று ஆலோசனை தந்தார்.

உதவிப் பங்குத்தந்தை அடுத்த ஞாயிறுத் திருப்பலியில், "நண்பர்களே, நான் போன வாரம் சொன்னது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம் நமது வேலையை ஆரம்பிப்போம். ஒரு சில மண்வெட்டிகள், கடப்பாரைகள் எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வேலை செய்ய, எத்தனை பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம் கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். சென்ற வாரம் எண்ணமாக, பேச்சாக இருந்தது, இப்போது ஒரு செயலாக மாறும் வேளையில், ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி, ஒடுங்கிப் போனது.

சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். இந்த உவமைக்குப் பின், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தோரின் சிந்தனைகளுக்கு, ஒரு கேள்வியையும், அவர்கள் உள்ளத்தைத் தட்டியெழுப்பும் வகையில் ஒரு கூற்றையும் வெளியிட்டார்.

மத்தேயு நற்செய்தி 21: 31-32

“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும், விலைமகளிரும், உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான், நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரி தண்டுவோரும், விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.

இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இந்த வார்த்தைகளை ஓர் உருவகமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அது இப்படி ஒலிக்கும்: “குப்பைகள் கோவிலில் வைக்கப்படும், கோவிலுக்கென குறிக்கப்பட்ட காணிக்கைகள் குப்பையில் எறியப்படும்.” அத்தனை கடுமையாக இயேசுவின் கூற்று அமைந்துள்ளது. யூதர்களைப் பொருத்தவரை, அதிலும் சிறப்பாக, யூத மதக் குருக்களைப் பொருத்தவரை தாங்கள் கோவிலில் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய காணிக்கைப் பொருட்கள் என்றும், வரி தண்டுவோரும், விலைமகளிரும் கோவில் என்ன, சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி எறியப்படவேண்டிய குப்பைகள் என்றும் எண்ணிவந்தனர். அத்தகையோர், தங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என்று, இயேசு ஆணித்தரமாகச் சொன்ன வரிகள், மதத்தலைவர்களின் காதுகளில், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.

இந்த வரிகளை இயேசு சொன்ன சந்தர்ப்பத்தையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி, பிரிவு 21ல், இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முன், அவர் எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்தார். அவர் எந்த அதிகாரத்தில், தைரியத்தில் அதைச் செய்தார் என்று, யூதகுருக்கள் கேள்விகள் கேட்டு, அவரை மிரட்டியபோது, இயேசு இந்த இரு மகன்கள் உவமையையும், அதற்குப் பின்வரும் காரசாரமான வரிகளையும் சொல்கிறார். கோவிலை அவர் சுத்தம் செய்தபோதே, அவர்கள் மனம் கோபத்தில் வெந்துபோயிருக்கும். வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை, இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார்.

“கடவுள் உங்களுக்குத் தந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவவிட்டீர்கள், அல்லது, வேண்டுமென்றே, அந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டீர்கள்” என்று இயேசு அந்த மக்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தினார். யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். அது மட்டுமல்ல, “யோவான் கொண்டு வந்த நல்வழியை அவர்கள் பின்பற்றியதைப் பார்த்தும் நீங்கள் மாறவில்லையே” என்று வேதனையோடு இயேசு இடித்துச் சொன்னார். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவர்கள் மீது இந்த வார்த்தைகள் சாட்டையடிகளாய் விழுந்திருக்க வேண்டும். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த மகனை நினைத்துப் பார்க்கும்போது, "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்' பலரை நினைக்கத் தூண்டுகிறது. இவ்விதம், தேனொழுகப் பேசிய ஒருசிலரை நம்பி நாம் சென்றபோது, தேள்போலக் கொட்டி, நமது வேதனையைக் கூட்டிய அவர்களை, இப்போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த வலி ஆழமானது. இந்த வலி ஆறாமல், நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருந்தால், நம்மை இறைவன் குணமாக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.

வாய் வார்த்தைகளால் உறுதி தந்துவிட்டு, பின்னர் ஒன்றும் செய்யாமல், நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இன்று பொருத்தமாக இருக்கும். "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு நாமும் நம் இறைவனை வேண்டுவோம்:

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்….
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"சொல்லல்ல செயல்: கீழ்ப்படிதலின் உண்மையான முகம்"

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 21:28-32) இயேசு இரண்டு மகன்களின் உவமையைக் கூறுகிறார். இது நம்முடைய ஆன்மீக வாழ்வின் உண்மை நிலையை நமக்குத் தோல் உரித்துக் காட்டுகிறது.

1. முதல் மகன் Vs இரண்டாம் மகன் (Words vs Action)

தந்தை வேலைக்குச் சொல்லும்போது, முதல் மகன் "மாட்டேன்" என்றான், ஆனால் பிறகு மனம் மாறி வேலைக்குச் சென்றான். இரண்டாம் மகன் "போகிறேன்" என்றான், ஆனால் போகவில்லை.
• விளக்கம்: இரண்டாம் மகன் "பரிசேயர்களைப்" போன்றவன் - சட்டங்களை அறிவார்கள், வாயால் இறைவனைப் புகழ்வார்கள், ஆனால் செயலில் அன்போ கீழ்ப்படிதலோ இருக்காது. முதல் மகன் "பாவிகளைப்" போன்றவன் - தவறு செய்தாலும், இறைவார்த்தையைக் கேட்டதும் மனம் மாறிச் செயல்படுபவன்.
• சிந்தனை: நாம் திருப்பலியில் "ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்கிறோம் (இரண்டாம் மகன் போல). ஆனால் கோவிலை விட்டு வெளியே வந்ததும் நம் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

2. மனமாற்றத்தின் சக்தி (The Power of Repentance)

முதல் வாசகத்தில் (எசேக்கியேல் 18:25-28) ஆண்டவர் கூறுகிறார்: "நெறியற்றவர் தான் செய்த தீவினையினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், அவர் தம் உயிரைக் காத்துக் கொள்வார்."
• பாடம்: கடவுள் நம் கடந்த காலத்தைப் பார்ப்பதில்லை; நம் நிகழ்கால மனமாற்றத்தையே பார்க்கிறார். "மாட்டேன்" என்று சொன்னாலும், மீண்டும் திரும்பி வரும் மகனைத் தந்தை அரவணைக்கிறார்.

3. கிறிஸ்துவின் மனநிலை (The Mind of Christ)

இரண்டாம் வாசகத்தில் (பிலிப்பியர் 2:1-11) புனித பவுல் சீடத்துவத்தின் உச்சகட்ட இரகசியத்தைச் சொல்கிறார்: "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனநிலையை நீங்களும் கொண்டிருங்கள்."
• விளக்கம்: அவர் கடவுளாக இருந்தாலும், தம்மையே தாழ்த்தி, அடிமையின் உருவேற்று, சிலுவைச் சாவினை ஏற்கும் அளவுக்குக் "கீழ்ப்படிந்தார்". இந்தத் தாழ்ச்சியும் கீழ்ப்படிதலுமே ஒரு கிறிஸ்தவனின் அடையாளம்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்த வாரம் நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள சில குறிப்புகள்:
• வாக்களிப்பதில் கவனம்: இறைவனுக்கோ அல்லது பிறருக்கோ ஒரு வாக்குறுதி அளித்தால் (எ.கா: ஒரு உதவி செய்கிறேன் எனச் சொல்லுதல்), அதை மறக்காமல் நிறைவேற்றுங்கள். வெற்றுப் பேச்சுகளைத் தவிர்ப்போம்.
• தாழ்ச்சியைப் பயிலுதல்: பிலிப்பியர் 2-ஆம் அதிகாரத்தை இந்த வாரம் வாசியுங்கள். "மற்றவர்களை உங்களை விட மேலானவர்களாகக் கருதுங்கள்" என்ற பவுல் அடியாரின் வார்த்தையின்படி, ஒருவருக்காவது விட்டுக்கொடுத்து வாழுங்கள்.
• பரிசோதனை: "மாட்டேன்" என்று சொல்லி இறைவனைத் துக்கப்படுத்திய இடங்கள் எவை? (எ.கா: ஞாயிறு திருப்பலியைத் தவிர்த்தல், ஒருவரை மன்னிக்க மறுத்தல்). இன்று மனம் மாறி அந்த வேலையைச் செய்யத் தொடங்குங்கள்.
• செயலில் அன்பு: உங்கள் அன்பியத்தில் அல்லது பங்கில் வாயால் அன்பு செலுத்துவதை விட, ஒரு சிறிய உதவியின் மூலம் உங்கள் அன்பைச் செயலில் காட்டுங்கள்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது அழகான சொற்பொழிவுகளை அல்ல, அர்ப்பணிப்புள்ள செயல்பாடுகளையே. நாம் எப்போது 'ஆம்' என்று சொல்லிவிட்டுச் செய்யாமல் இருக்கிறோமோ, அப்போது நாம் விசுவாசத்தைத் துறக்கிறோம். தாழ்மையோடு செயல்படுவதே உயர்வு தரும்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எசே. 18:25-28)

இஸ்ராயேல் மக்கள் யாவே கடவுளுக்கு உண்மையாக இல்லாததால் அடிமை தனத்திற்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் அந்த அடிமைதன நிலையில் கூட கடவுள் அவர்களை கைவிட வில்லை. தம் தூதுவர்களாக பல இறைவாக்கினர்களை அவர்களிடம் அனுப்பினார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எசேக்கியேல், தானியேல் ஆவர். யாவேயின் கட்டளைப்படி எசேக்கியேல் இறைவாக்கினர் இஸ்ராயேல் மக்களிடம் சென்று, அவர்கள் அவர்களுடைய பாவ வாழ்வை விட்டுவிட்டு இறைவனிடம் மனம் மாறி வர அறிவுறுத்துகிறார். மனம்மாறி யாவேவிடம் திரும்ப வேண்டிய மக்கள், யாவே கடவுள் தங்கள் முன்னோர் செய்த எல்லாத் தவற்றிற்கும் தங்களை இப்போது தண்டிக்கிறார் என்று கூறி கடவுளிடமிருந்து தங்களை விலக்கிக்கொண்டார்கள். கடவுளுக்கு கீழ்படிந்து இருப்பதால்தான் எங்களுக்கு துன்பம் அதிகம் என்று கூறி, இத்தகைய கடவுள் நீதி உள்ளவரா? நியாயமானவரா? என்று பல கேள்விகளையும் கேட்கிறார்கள். ஒவ்வொருவரின் நிலைக்கும் அவருடைய தனிப்பட்ட பாவங்களே காரணம் என்பதை எசேக்கியேல் வழியாக அவர்களுக்கு எடுத்து கூறுகிறார். மேலும் கடவுளின் நோக்கம் தண்டிப்பதல்ல, மாறாக காப்பாற்றுவது என்பதையும் உணர்த்துகிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (பிலி 2:1-11)

விவிலியத்திலேயே ஒரு மிக சிறந்த பகுதியாக இப்பகுதிக் கருதப்படுகிறது. ஏனெனில் பவுல் பிலிப்பு நகர மக்களை அளவுக்கு அதிகமாக அன்பு செய்தார். ஆனால் அங்கு நிலவிய சூழ்நிலையோ வேறு. ஏனெனில் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுக்ள நிலவி வந்தன. அவை அனைத்தையும் அடியோடு அகற்ற வேண்டும் என்பதே பவுலின் நோக்கம். இதற்காக அவர் இரு வழிகளை தருகிறார்.
1. யாரும் தான் தான் உயர்ந்தவன் என்று நினைக்க கூடாது.
2. ஒவ்வொருவரும் தன்னுடைய சுயநலத்தை விட்டுவிட்டு, பொது நலத்துடன் வாழ வேண்டும்.

பவுல் இதற்கு இயேசுவின் வாழ்வை மிக சிறந்த எடுத்துக்காட்டாக கூறி விளக்குகிறார். இயேசு எவ்வாறு தன் தந்தையின் விருப்பத்திற்கு தன்னை முழுமையாக கையளித்தார் என்பதையும், இறைதிட்டத்தின் படி மரியாவின் வயிற்றில் உருவாகி, உலகில் பிறந்தார். அவர் ஒரு சாதாரண ஊழியனாக வரவில்லை, மாறாக ஒரு அடிமைபோல வந்தார். தனது முழுமையான அர்ப்பண வாழ்வின் காரணமாக தந்தையாகிய கடவுள் அவரை மகிமைபடுத்தினார். வானதூதர்கள், புனிதர்கள் வானத்தில் அவரை புகழ்கிறார்கள். மக்கள் அனைவரும் கடவுளின் அன்பில் தங்களை அர்பணிக்கிறர்கள். பேய்கள் கூட இவர் கடவுளின் மகன் என்று ஏற்றுக்கொள்கின்றன. இவரை நாம் பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 21:28-32)

இந்த நற்செய்தி பகுதியானது யூதசமுதாயத்தின் மனநிலையை தெள்ளதெளிவாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக யூதர்களின் பரிசேயத்தனத்தையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெளிக்காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று. யூதர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், நற்செய்தியின்படி வாழ கூடிய வாய்ப்பை எளிதாகப் பெற்றவர்கள். ஆனால் தங்களின் நிலை மறந்து, வாழவும் மறந்தவர்கள். ஆனால் விலைமாந்தர்கள், ஆயக்காரர்கள், பாவிகள், இறைவார்த்தையை கேட்டு தன் நிலை உணர்ந்து தங்களின் வாழ்வை மாற்றி தாழ்ச்சியோடு முழு மனமாற்றம் பெற்று விண்ணரசை சொந்தமாக்கி கொண்டனர்.

மறையுரை

ஒரு மனிதனின் மாண்பை விளக்குவது, அவன் கொண்டிருக்கும் பதவி அல்ல, அவன் கொண்டிருக்கும் பணம் அல்ல, அவன் கொண்டிருக்கும் செல்வம் அல்ல, மாறாக அவனுடைய சொல்லும், செயலும் ஒரே விதத்தில் அமுைதல் வேண்டும். தன் சொல்லிலும், தன் செயலிலும் ஒருவன் நேர்மையைக் கடைபிடித்தால், அவனே ஒரு முழு மனிதன் எனலாம். 'நேர்மையான மனிதன் கடவுளின் ஒரு உன்னதமான படைப்பு' என்கிறார் அலெக்சாண்டர். சொல்வதைச் செய், செய்வதை சொல், இதுதான் இன்றைய நற்செய்தியின் மையக்கருத்து. நாம் சொல்வதை நம் செயலில் காட்ட வேண்டும், நாம் செய்வதை நம் சொல்லில் சொல்ல வேண்டும்.

இவ்வுலகில் இரண்டு விதமான மனிதர்கள் உள்ளனர். ஒன்று சொல்லில் மட்டும் வீரர்களாக, இரண்டாவது செயலில் மட்டும் வீரர்களாக. சொல் வீரர்கள், தங்களையே உயர்வாகக் கருதி சமூகத்தில் உயர்ந்த நிலையில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள துடிப்பவர்கள். தங்களின் சுய நலனை கட்டிக் காத்து கொள்ளும் பொருட்டு இனிமையாக பேசுவார்கள்.

தங்களது வார்த்தைகளால் தாங்கள் நேர்மையானவர்கள், இரக்கம் உள்ளவர்கள், உண்மை உள்ளவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் வாழ்வில் அதற்கு நேர் மாறாக வாழ்வார்கள். இவர்களை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நம்ப முடியாது. நேரத்திற்கு ஏற்றாற்போல, சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தங்களையே மாற்றிக் கொள்ளும் மன நிலைக்கு உட்பட்டவர்கள். இவர்களை தான் இயேசு வெளிவேடக்காரர் என்றும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்றும் கூறுகிறார்.

இரண்டாவதாக இருப்பவர்கள் செயல் வீரர்கள். இவர்களுக்கு பேச தெரியாது. உள்ளத்தில் குழந்தை குணம் கொண்டவர்கள். ஆனால் செயலில் இவர்கள் வல்லவர்கள். இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பார்கள், ஆனால் தூய உள்ளத்தினர், சூதுவாது அறியாதவர்கள். எதிலும் எதார்த்தமானவர்கள். இவர்-களை தான் யேசு பேறுபெற்றவர்கள் என்று மலை பொழிவில் வாழ்த்துகிறார். இவர்கள் அன்றைய யூத சமுதாயத்தில் ஒதுக்கப்-பட்டு, ஓரங்கட்டப்பட்ட ஏழைகள், பாவிகள், ஆயக்காரர்கள், புறவி-னத்தார். இவர்கள் இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டாவது மகனுக்கு ஒப்பாவார்கள். தந்தை வேலைக்கு செல்லும் படி கூறும் போது போக மாட்டேன் என்று கூறியவன், பிறகு மனம் மாறி போகிறான். தந்தை சொல்வதை கேட்டு உணர்விலிருந்து சிந்த-னைக்கு கடந்து மனம் மாறி இதய பூர்வமாக செயல்பட்டான். பிந்தியவன் உடனே போகிறேன் என்றான் ஆனால் அவர் உணர்வு நிலையிலேயே நின்று விட்டான். நாம் ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறைக் கொண்டு, நீதியையும், நேர்மையையும் கடைபிடித்து, உண்மையை கண்டுணர்ந்து தவறுகளை விலக்கி, நீதி நெறிகளைச் சுட்டிக்காட்டும் இறைவாக்கினர்களை நம்பி, செயலாக்கம் பெற அழைக்கப் படுகிறோம். திருமுழுக்கு, திருமணம், குருத்துவம், துறவறம் இவை-களின் வழியாக நாம் கொடுக்கும் வார்த்தைபாடுகள் எந்த அளவுக்கு நம் வாழ்வில் செயலாக்கம் பெறுகிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்க நாட்டின் தலைநகரில் ஒரு தெருவில் மக்கள் நெரிசலில் பட்டப்பகல் பனிரெண்டு மணியளவில் ஒரு வயோதிகர் தனது கையில் தீ பந்தம் ஒன்றை ஏந்திக் கொண்டு எதையோ தேடி கொண்டிருந்தார். அங்கிருந்த மக்கள் அவரது செயலைக் கண்டு கிண்டல் செய்தார்கள். இந்தக் கிழவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கிழவர் எதையும் பொருட்படுத்தாது, தொடர்ந்து மும்முறமாகத் தேடினார். பொறுமையிழந்த ஒருவர் அந்த கிழவரை நிறுத்தி, "ஐயா எதை தொலைத்தீர்கள், இப்படி பட்டப்பகலிலே, அதுவும் தீ பந்தம் வேற தேவையா", என்று வினவ, அந்த முதியவர், "மனிதனைத் தேடுகிறேன்" என்றார். மனிதனை தேடியதால் அவர் டயோஜினிஸ் என்னும் தத்துவ ஞானியாக திகழ்கின்றார். ஏன் மனிதனை தேடினார், மனிதாபிமானம் உள்ள மனிதனை தேடினார். தன் சொல்லிலும் செயலிலும் உண்மை உள்ள மனிதனைத் தேடினார்.

சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம். சொல்லும் செயலும் இணைந்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும், வார்த்தையும் வாழ்வும் இணைந்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நற்செய்தியில் வரும் இளைய மகன் யூதர்களுக்கு அடையாளமாக இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் யூதர்கள், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம், அவரது குரலுக்கு கீழ்படிவோம் (யோசு 24:24) என்று வாக்கு கொடுத்தனர். ஆனால் அதன்படி வாழ வில்லை. மூத்தமகன் - கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாவிட்டாலும், அவருக்கு எந்த வாக்குறுதியையும் தரா விட்டாலும், தங்களுடைய வாழ்வில் அக்கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் நல்ல மனிதர்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். செய்வதை சொன்னவர், சொன்னதை செய்தவர், வாக்கும் வாழ்வும் சொல்லும் செயலும் முழுமையாக இணைந்தது இயேசுவில்தான். அவர் அடிசுவடுகளை பின்பற்றும் நாம் ஒவ்வொருவரும் நம் வார்த்தையிலும், நம் செயலிலும் ஒரே மாதிரியாகவும், உண்மையாகவும் விளங்குவோம். அப்போது நாம் அவரின் உண்மையான சீடர்களாக வாழ்வோம்.

பிற மறையுரை கருத்துக்கள்

"போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்" - பழக்கப்பட்ட வாசகம். இதே எச்சரிக்கையை இயேசு நமக்கு அளிக்கின்றார். வெளி வேடமனிதர்கள் போலிகளே!
மனம்மாறி இறை திருவுளத்திற்கு பணியும் போது இறைவனுக்கு நாம் உகந்தவராகிறோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் இருபத்தாறாம் ஞாயிறு

1. நற்செய்திப் பகுதி

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் அதிகாரத்தை கேள்வி கேட்ட தலைமைக் குருக்களுக்கும், மக்களின் மூப்பர் களுக்கும் இயேசு கொடுத்த பதில் மொழியின் தொடர்ச்சியாகும். இந்தப் பதில் இரு பகுதியாக அமைந்துள்ளது. முதலாவதாக, தலைவர்களின் கேள்விக்குப் பதிலாக இயேசுவும் இன்னொரு கேள்வியை கேட்டு அவர்களை மடக்குகின்றார். "யோவானுக்குத் திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத் திலிருந்தா? மனிதரிடமிருந்தா?" (வச 25) எனும் கேள்விக்கு அவர் களால் பதில் அளிக்க முடியவில்லை. எந்த பதில் தந்தாலும் அவர்கள்மீது குற்றம் விழும் என்பதால் அவர்கள் 'எங்களுக்குத் தெரியாது' என்று கூறி தப்பிக்கப் பார்க்கின்றனர். இந்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக அந்தத் தலைவர்கள் எந்த அளவுக்கு தவறில் இருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு சுட்டிக் காட்டவே இந்த உவமையை இயேசு சொன்னார். இதில் இத்தலைவர்கள் 'வேலைக்குப் போகிறேன்' என்றுகூறிபோகாமல் இருந்த இரண்டாம் மகனை ஒத்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

இயேசுவின் பார்வையில் இத்தலைவர்கள் இரு வழியில் தவறிழைத்தனர். முதலாவது, யோவான் நீதி நெறியைக் காட்ட அவர்களிடம் வந்தபோது அவர்கள் அவரை நம்பவில்லை. வரிதண்டுபவரும், விலைமகளிரும் அவரை நம்புவதைக் கண்ட பின்பும் அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவு மில்லை, நம்பவுமில்லை. அவர்களைவிட கீழானவர்கள் என எண்ணப்பட்ட பாவிகளைக் கண்டும் அவர்கள் மனம் மாறாததால் அவர்கள் இருவிதத்தில் குற்றவாளிகளாகின்றனர்.

இந்த விதத்தில் இயேசு வரிதண்டுபவர்களையும், விலை மாதரையும் அக்கால சமயத் தலைவர்களையும்விட உயர்ந்தவர் களாக காட்டுகின்றார். மனமாற்றத்திற்கு அடையாளமாக, உதாரணமாக அவர்களை இயேசு நிறுத்துகின்றார். பாவிகள் என்று எண்ணப்பட்ட அவர்களிடம் புண்ணியவான்கள் என்று எண்ணப்பட்டவர்களை மனமாற்றத்திற்கான பாடம் கற்றுக் கொள்ளச் சொல்கிறார். பலநேரங்களில் பாவிகள் என்றுஎண்ணப்படுகின்றஅல்லது சொல்லப்படுகின்றவர்களின் மனமாற்றம் எளிதாக இருக்கின்றது. ஏனெனில் அவர்களின் பாவம் அவர்களுக்கும், பிறருக்கும் தெரிகிறதால்மனம்மாறுவது அவர்களுக்குஎளிதாக இருக்கின்றது. ஆனால் தாங்கள் புண்ணியவான்கள் என்று எண்ணுபவர் கள், கூறுபவர்களின் பாவம் அவர்களுக்குத் தெரிவதில்லை, மற்றவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு மனமாற்றம் தேவையில்லை என்று எண்ணிக்கொள்கின்றார்கள். இறுதிவரை மனம் மாறாமலேயே போய்விடுகின்றனர். காணாமல் போன மகன் உவமையில் மூத்த மகனின் குற்றமும் இதுதான். எனவே, இன்றைய நற்செய்தியில் தாங்கள் நல்லவர்கள், சரி யானவர்கள் என்று எண்ணியிருந்தவர்களின் மனமாற்றத்தை, நம்பிக்கையை (வச. 32) எதிர்பார்க்கின்றார் இயேசு.

2. முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகமும் நற்செய்திப் பகுதியைப் போலவே இறைவனைக் குறைகூறும் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக இறைவன் தம் வழிகள் நேர்மையானவை என்றும், மக்களின் வழிகள்தான் நேர்மையற்றவை என்றும் தன்னிலை விளக்கமாகத் தனது விவாதத்தை எடுத்துரைக்கின்றதாக அமை கின்றது. இங்கு நேரியவர் தன் நேரிய நெறியிலேயேத் தொடர்ந்து நடக்கவேண்டும். அவர் அதிலிருந்து பிறழ்ந்தால் அவர் நேரியவரா யிருந்தாலும் அவர் சாவார் அல்லது தண்டிக்கப்படுவார். இதுதான் இறைவனின் நிலைப்பாடு. மறுபுறம் "பொல்லார் தங்கள் வழியை மாற்றிக்கொண்டால் அவர்கள் வாழ்வது உறுதி. அவர்கள் சாக மாட்டார்” (வச. 28). எனவே, நேரியவர்கள் தொடர்ந்து நேரிய வழியைக் கடைப்பிடிப்பதும், பொல்லார் தீய வழியை விலக்கி நல்வாழ்வு வாழ்வதும் என எல்லாரையும் நல்லவர்களாக மாற்றும் இறைவனின் முயற்சி எவ்வளவு செம்மையானது.

3. இரண்டாம் வாசகம்

பிலிப்பி திருஅவை, பவுலடியாருக்கு மிகவும் பிடித்த திருஅவை, அவர்கள் அவரது இதயத்தில் இடம் பிடித்தவர்கள் (பிலி 1:7), பவுலின் நற்செய்திப் பணிக்கு உதவி செய்தவர்கள் (பிலி 4:16). ஆனால், அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் இருந்தன. அங்கே கூட மாற்றப்பட வேண்டியவை இருந்தன. ஒருவேளை எயோதியா, சிந்திக்கா எனும் இரு பெண்கள் பவுலுடைய பணியில் பெரிதும் உடன் உழைத்து உதவி செய்தவர்களாயிருக்க வேண்டும் (பிலி 4:3). ஆனால் இம்மடல் எழுதப்பட்டபோது அவர்களுக்குள் மனத்தாங்கல் இருந்திருக்க வேண்டும். எனவே, 'அவர்கள் இணைந்து ஒருமனப்பட்டிருக்க வேண்டும்' என்று பவுலடியார் அவர்களைக் கேட்டுக்கொள்கிறார் (பிலி 4:2). இத்தகைய பின்னணியில்தான் பவுலடியார் "பிலிப்பியர்கள் ஒரே எண்ண மும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டு ஒரு மனத்தவராய் வாழ வேண்டும்" (வச. 2) என்றும், “கட்சிமனப்பான்மைக்கும், வீண்பெருமைக்கும் இடம்தராமல் வாழவேண்டும் எனவும், மனத் தாழ்மை கொண்டு மற்றவர்களை உயர்வாகக் கருதவேண்டும்" (வச.3) என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

இவற்றிற்கெல்லாம் மாதிரியாக இயேசுவின் மனநிலையை யும் (வச. 5), வெறுமையாக்கலையும் (வச. 6-7), கீழ்ப்படிதலையும், தாழ்ச்சியையும் (வச. 8-9) காட்டுகின்றார். இவற்றிற்கு ஈடாக “கடவுள் இயேசுவை உயர்த்தியதுபோல் உங்களையும் உயர்த்து வார்” எனக் கூறுகின்றார்.

எனவே, இன்றைய மூன்று வாசகங்களிடையே இழை யோரும் ஒரு செய்தி தங்களை நல்லவர்கள், புண்ணியவான்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கும், மாற்றம்,மனமாற்றம் தேவை. அவர்கள் பாவிகள் எனப்பட்டோரின் நல்மாதிரியை மனமாற்றத்தைக் கண்டாகிலும் மனம் மாற வேண்டும் (நற் செய்தி வாசகம்); நேரிய வழியிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (முதல் வாசகம்); இயேசுவின் மனநிலையில் ஒருமனப்பட்டிருக்க வேண்டும் (இரண்டாம் வாசகம்) என்பதாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - இருபத்து ஆறாம் ஞாயிறு முதல் ஆண்டு

முதல் வாசகம்: எசே. 18: 25 - 28

நாம் ஆறறிவு படைத்தவர்கள். நாம் செய்யும் காரியங்களை அறிந்தே செய்கிறோம். எனவே நம் செயல்களுக்கு நாமே பொறுப்பாளிகள் என்பார் எசேக்கியேல். தனி மனிதனின் பொறுப்புப்பற்றி இன்றைய வாசகம் எடுத்துரைக்கிறது.

நீதிமான் தன் நீதியினாலே வாழ்வான்

நீதியென்பது ஒரு மனிதன் கடவுள்பால், பிறர்பால், தன்பால் கொள்ள வேண்டிய சரியான (நேர்மையான) உறவைச் சுட்டுகிறது. யோசேப்பு நீதிமானாயிருந்தார் என்று மத்தேயு கூறுவதன் மூலம் (மத்.1:19) அவருடைய உயர்ந்த நிலையைக் காட்டுகிறார். அவரைப்பற்றிக் கூறவேண்டியதெல்லாம் "நீதிமான்" என்ற ஒரே சொல்லிலே சொல்லி விட்டார் எனலாம். இத்தகைய "நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்” (மத். 5:6) என்பார் இயேசு. இத்தகைய நீதிமான் "தன்னையே காத்துக் கொள்வான், அவன் உயிர் வாழ்வான், சாகான்" என்பார் எசேக்கியேல் (18:27-28).

இந்நீதி வாழ்வை நாம் வாழ்ந்தோமாயின் அதுவே நமக்கு நிறைவு அளிக்கும், வாழ்வு அளிக்கும். நாம் மட்டும் இம்மூன்று உறவுகளிலும் நேர்மையாக நடப்பதோடு நில்லாது, பிறரும் நீதியுடன் வாழ நாம் முயற்சிகள் செய்ய வேண்டும். இம்மூவுறவுகளில் ஒன்று குறைவுபடினும் அங்கே நீதிவாழ்வு இல்லை. சிறப்பாக, பிறருக்கு நீதி காட்டுவதில் கவனமாயிருப்போம். பிறர் அநீதியால் அடிபட்டு நசுங்குண்டு அல்லலுறும்போது, அருகிலிருந்து ஆவன செய்வோம். நீதியின் இறைவன் நம்மை உண்மை நீதிமான்களாக்க வேண்டிடுவோம். உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் எழுப்புவோம்.

அநீதி புரிபவன் தன் அநீதியாலே அழிவான்

அநீதி புரிந்து அநீதனாக வாழ்பவனுக்கு இறைவன் தண்டனை தேவையில்லை. தான் செய்த அநீதியாலே அவன் மடிவான். அநீதியே அவனுக்குக் குழி வெட்டும் (18: 28). பிறருக்கு வெட்டிய குழியில் தானே விழுந்தழிவான். பிறருக்கு உரிய ஊதியம், கூலி வழங்காதவன், பிறரை அடிமைகளாக நடத்தியவன், பிறருக்கு உரிய உரிமைகளை வழங்காதவன், பிறருக்கெதிராகப் பொய்வழக்குத் தொடுத்தவன், பிறரிடமிருந்து அநியாய வட்டி பெறுபவன்-இது போன்ற எவனும் என்றும் நிலைத்து வாழ்ந்ததாக நாம் கேட்டதில்லை. அவ்வாறு இவ்வுலகில் இன்னோர் இன்பமாக, சுகமாக வாழ்ந்தாலும் மறுவுலகில், இவர்கள் செய்த தீமைகள் இவர்களைத் தொடர்ந்து சென்று இவர்களுக்குத் தண்டனை வழங்கும் என்பது திண்ணம். "தன்வினை தன்னைச் சுடும்" என்பது நியதியன்றோ? “அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்" (திபா. 94: 23).

எனவே, அநீதியான நினைவு, சொல், செயல்களை நம்மிடமிருந்து அகற்றுவோம். அநீதி செய்து வாழ்பவர்களை நல்வழிக்குத் திருத்த முயல்வோம். அநீதிக்கு எதிராக, அநீதம் புரிவோருக்கு எதிராகக் குரல் கொடுப்போம். "அக்கிரமி சாக வேண்டும் என்பது நமது விருப்பமோ? அவன் மனம் திரும்பி உயிர் வாழவேண்டுமென்பதல்லவா நமது விருப்பம்!” (78:23) என்ற ஆண்டவரின் சொற்களைப் பின்பற்றி, அக்கிரமம் செய்வோர், அநீதி புரிவோர் தம் குற்றங்களை உணர்ந்து மனம் திரும்ப வேண்டுமென்று வேண்டிக்கொள்வோம். “ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்" (திபா. 93:12).

தான் செய்த அநீதியாலேயே சாவான்.

இரண்டாம் வாசகம் : பிலிப். 2:1-11(1-5)

“கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக” (2:5) என்று பவுல் இன்றைய வாசகத்திலே வேண்டுகிறார். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை அணிந்துகொண்டவர்கள். அவர்கள் கிறிஸ்தவாக வாழவேண்டும். கிறிஸ்து அன்பும் தாழ்ச்சியும் உடையவராக வாழ்ந்தார். கிறிஸ்தவர்களும் கிறிஸ்து போன்றே வாழ்வது கடன். இதுவே வாசகச் சுருக்கம். இதுவே கிறிஸ்தவ மறையின் சுருக்கம்.

கிறிஸ்தவ வாழ்வு அன்பு வாழ்வு

இயேசுவினுடைய ஒரே கட்டளை அன்புக் கட்டளை. அது புதிய கட்டளை. “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை” (யோ. 15:12). அவர் காட்டிய அன்பு அவர் தம் உயிரைக் கொடுத்ததே (15:13). எனவேதான் "என் அன்பில் நிலைத்திருங்கள்” (15:10) என்பார். இந்த அன்பே நம்மை ஆட்கொள்ளவேண்டும் எனப் பவுல் விரும்புகிறார். "நீங்கள் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவு பெறச் செய்யுங்கள். ஒரே அன்பும், ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்" (2:2-3). பிலிப்பியத் திருச்சபையிலே ஒற்றுமையின்மை தலைகாட்டியதாலே அடிக்கடி ஒற்றுமை பற்றிக் கூறுகிறார் (1:27:2:14;4: 2). இது இன்றும் நமக்கும், நமது பங்குகளுக்கும், ஏன், நமது குருத்துவ, துறவற நிலைகளுக்கும் மிகமிகப் பொருந்தும். சாதிவெறி, பணவெறி, பதவிவெறி நம்மிடையே தலைவிரித்தாடுவதைக் கண்டு நாம் வெட்கமுற வேண்டாமா? இவையெல்லாம் கிறிஸ்துவுக்கு எதிர் சாட்சியம் அன்றோ? இவையெல்லாம் கிறிஸ்தவத்தையே, கிறிஸ்துவையே கேலிக்கூத்தாக்கும் கொடிய பாவங்கள் இல்லையா? "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே, கிறிஸ்துவுக்கும் தாழ்வே" என்று கூறுவதில் தவறில்லையே? ஆதித் திருச்சபை மக்கள் “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்" (திப 2 : 42; 4:32). இவர்கள்போல் வாழ முயற்சி எடுப்போமா? (காண்: 1கொரி. 1:10-11)

கிறிஸ்தவ வாழ்வு தாழ்ச்சி வாழ்வு

போட்டி மனப்பான்மையும் வீண்பெருமையுமே தாழ்ச்சிக்கு எதிரானவை என்பதை உணர்ந்த பவுல், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் (23). ஒருவன்தன் நலத்தையே நாடுதல், தன்னையே உயர்ந்தவனாகக் கருதுதல் முதலியனவும் தாழ்ச்சிக்கு மாறுபட்டன என்பதனாலே, பிறர்நலத்தை நாடவேண்டும், பிறரை உயர்ந்தவராகக் கருதவேண்டும் என்பதும் பவுல் படிப்பினை (2:3-4). இத்தகைய தாழ்ச்சிக்கு மேலான எடுத்துக்காட்டு கிறிஸ்துவே, "கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே” (2:5). இதை “கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வு" (2:1) என்பார் பவுல். தாம் முதலும் முடிவுமான, அனைத்தையும் படைத்த கடவுள் ஆயினும், இக்கடவுட்தன்மையை உதறித் தள்ளிவிட்டு, தம்மையே ஒன்றுமில்லாமையாக்குகிறார். அடிமையின் உருவெடுத்து, அடிமை என வாழ்ந்து, அடிமைச் சாவையே ஏற்கிறார். “எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டியதாயிற்று" (எபி. 2:17). "சாவின் மேல் ஆட்சி கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்” (எபி. 2:14). இதனாலேயே கடவுட்தந்தை இவரை “மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" (பிலி. 2:9). அவர் எவ்வளவுக்குத் தம்மைத் தாழ்த்தினாரோ அவ்வளவுக்குத் தந்தை அவரை உயர்த்தினார். இதுவே கிறிஸ்து கற்றுத் தந்த பாடம். "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோ. 12 :24). நம் ஒவ்வொருவரிலும் "நான்" அழிந்தால்தான் "நாம்" வளர முடியும். "யானே பொய், என் நெஞ்சம் பொய், என் அன்பும் பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே" (திருவா).

கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

நற்செய்தி: மத். 21:28 - 32

இயேசுவின் அழைப்பு நமக்கு என்றும் இருக்கிறது. அவர் அழைப்புக்குச் செவிமடுத்தல் நமது கடன் என்பதை இன்றைய வாசகம் எடுத்துக் கூறுகிறது.

"இல்லை -ஆம்"

அன்பு செய்ய, நீதியை நிலைநாட்ட, பணி புரிய ஆண்டவர் நம் பெயர் சொல்லி நம்மை அழைக்கிறார் (காண் 1 சாமு. 3:10). இறைவாக்கினர் போன்று நாம் தயங்கினோம். "நான் இல்லை, என்னால் முடியாது" என்று பதிலிறுத்தோம் (காண்: எரே. 1:7; எசா. 6:5). எனினும் இறைவன் நம்மைத் தடுத்தாட்கொண்ட நிலையிலே, அழைப்பை ஏற்கிறோம். ''நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக். 1:38) என்கிறோம். இதுவே இன்றைய உவமையின் முதல் பகுதி. "மாட்டேன்” என்று துவக்கி, “நான் போகிறேன் ஐயா!” (மத்.21:29-30) என்று பதிலிறுத்துள்ளோம். நம் அழைப்புக்கு நன்றி கூறுவோம். நமது “ஆம்” என்றும் நிலைத்திருக்கச் செயல்பட வேண்டுவோம். "சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரிதே சொல்லிய வண்ணம் செயல்” (குறள் 664).

"ஆம் - இல்லை"

ஒரு தனி உந்துதலிலே, வேகத்தில் “ஆம்” என்று சொன்னோர் உண்டு. எனினும் அந்த “ஆம்” தொடர்ந்த “இல்லை”யாக மாறுகிறது. யூதாஸ் நிலைமை இதுவன்றோ? திருமுழுக்கில் திருவருட்சாதனங்களில் "ஆம், ஆம்" என்று கூறிய நாம், அழைப்பு வாழ்வுக்கேற்ப வாழாத நிலையிலே “இல்லை, இல்லை”யென்றுதானே கூறுகிறோம். நமக்கும் யூதாசுக்கும் வேறுபாடு என்ன? நம் சொல்லைச் செயல்படுத்துகின்றோமா? "விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத். 12: 49-50) என்பது நமக்குப் பொருந்துமா? “வார்த்தையைக் கேட்டு, செம்மனத்தில் பதித்து நிலையாயிருந்து பலன் அளிப்பதன்றோ” (லூக். 8 : 15) அழைப்பிற்கேற்ற வாழ்வு. நமது முதல் “ஆம்” என்றும் நிலைத்த “ஆம்” ஆக இருந்து வாழ முயல்வோம். "தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்” (குறள் 202). எனவே தீமையானவற்றை, அன்புக்கு எதிரானவற்றைத் தவிர்த்து வாழ்வோம்."என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை" (குறள் 652) 'இடுக்கண்படினும் இளிவந்த செய்யாத வாழ்வு' நமதாகட்டும்.

''ஆம்-ஆம்''

சொல் தூய்மையும் செயல் தூய்மையும் உடையோர் பெரியர். சொல் வாக்குத் தவறாதவர் இன்னோர், “ஆம்" என்றால் “ஆம்”, “இல்லை” யென்றால் “இல்லை” என்ற முறையிலே வாழ்வோர் இவர்கள். இன்னோருக்குத் தலைவராகவும் வழித்துணையாகவும் இருப்பவர் இயேசுவே. ஏனெனில் “இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் 'ஆம்' என உண்மையையே பேசுபவர்" (2 கொரி. 1: 19 -20). "ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்” (மத். 5 : 37) என்று கூறியுள்ளதையும் காண்க. சொல்வோம், சொன்னதைச் செய்வோம் என்ற முறையிலே, நம் திருமுழுக்கு, தேவ அழைப்பிலே கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப வாழ்வோம். “இடுக்கண்படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சியவர்” (குறள் 654). "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம், மற்றைய எல்லாம் பிற” (குறள் 661). எனவே இன்னல்கள் எதிர்த்து வந்த நிலையிலும் தொடர்ந்து நல்லன செய்வோம்; நாம் கொடுத்த நல்ல வாக்குறுதிப்படி வாழ்வோம்; இயேசுவின் மதிப்பீடுகள் நம்மை என்றும் வழி நடத்திட வேண்டுவோம். "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை” (குறள் 669).

ஆயக்காரரும் விலை மாதரும் அவரை நம்பினர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"இதயத்திலும் இல்லத்திலும் இறைவார்த்தை "

நமக்கு வாழ்வு தரும் இறைவார்த்தை, நம் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலையும் தருகின்றது. அன்றாடம் நாம் வாசிக்கும் இறைவார்த்தை, நம் சிந்தனைகளைச் சீர்ப்படுத்தி, நம் விருப்பத்தைத் தூய்மையாக்கி, இறைத்தந்தையின் விருப்பத்தை நம் வாழ்வில் செயல்படுத்தத் தூண்டுகிறது.

கடவுள், தாம் தேர்ந்துகொண்ட மக்கள், தன்மீது அன்பு கொண்டு பற்றுதியுடன் வாழவும், உடன் வாழும் மக்களுக்குத் தீமை செய்யாமல் நன்மை செய்யவும், சிலைகளை வழிபடுவதைத் தவிர்த்து உயிருள்ள இறைவனை உண்மையில் வழிபடவும், தங்கள் தீய நடத்தைகளிலிருந்து மனம்மாறிடவும் இறைவாக்கினர்கள் வழியாக அழைப்புவிடுத்தார்.

இன்றைய முதல் வாசகத்தில், மனமாற்றம் என்பது நேர்மையாளர் தன் நேரிய வழியிலிருந்து விலகி வாழ்வதன்று, மாறாக, தீயவர் தான் இதுவரை செய்துவந்த தீமையைத் தவிர்த்துவிட்டு நன்மை செய்வது. நேர்மையாளர் தன் நேரிய வழியிலிருந்து விலகித் தவறான வாழ்வில் முன்னேறிச் சென்றால் கடவுள் அவரைத் தண்டிப்பார். ஆனால் தீயவரோ மனம்மாறி நேர்மையாக வாழ்ந்தால் கடவுள் அவருக்குக் கைம்மாறு அருளுவார். இதை உணராத இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வழி செம்மை யானதாக இல்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். தன்னைத் தானே நேர்மையளராகக் கருதுபவர், தான் செய்த மிகப்பெரும் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை நியாயப் படுத்துகிறார். அதேநேரத்தில் பிறர் செய்யும் சிறு தவறுகளையும் பெரியதாக்கி அவர்கள்மீது குற்றம் சுமத்துகிறார். மனம் திருந்தி தன்னிடம் வருகின்றவர்ளைக் கடவுள் மன்னிப்பதைக் கூட இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இத்தகைய மனநிலையை கடவுள் வெறுக்கின்றார். உண்மையான மன மாற்றத்தைத் தவிர, ஒருவருடைய பதவியோ, செல்வாக்கோ, மக்கள் அவருக்குத் தரும் அங்கீகாரமோ அவருக்கு இறைவனின் அருளையும், இரக்கத்தையும், நிலைவாழ்வையும் தருவதில்லை. நம் வாழ்வின் தொடக்கம் மோசமாக இருந்தாலும், மனமாற்றம் அடைந்த நம் வாழ்வின் முடிவு செம்மையாக இருக்க வேண்டும்.

இரண்டாம் வாசகத்தில், நாம் வாழும் குடும்பத்திலும், சமூகத்திலும், திருஅவையிலும் பிளவுகள், பிரிவினைகள், ஏற்றத் தாழ்வுகள், நீங்கி ஒற்றுமையும் சமத்துவமும் வளர வேண்டுமென்றால் தாழ்ச்சியுடன் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு வாழ்வது அவசியம் என்பதை ஆண்டவர் இயேசு தமது முன்மாதிரியான வாழ்வு மூலம் எடுத்துக்காட்டுகிறார். மனித குலத்தை மீட்க விரும்பும் தந்தைக் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றக் கிறிஸ்து இயேசு கடவுன் தன்மையைத் துறந்து, மனிதராகப் பிறந்து, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு தாழ்சியினால் தந்தைக்குக் கீழ்ப்படிந்தார். எனவே கடவுள் அவரை அனைத்துக்கும் மேலாக உயர்த்தினார். இத்தகைய கிறிஸ்து இயேசுவின் மனநிலையில் நாம் வளர்ந்தால்தான் நலமன சமுதாயத்தை நம்மால் உருவாக்க இயலும். இறைவார்த்தை வாசிப்பு நம்மில் இயேசுவின் மனநிலையை உருவாக்கும்..

யூதச் சமூதாயத்தில் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் தங்களைத் தாங்களே நேர்மையாளராக் கருதி மக்கள் முன்னிலையில் மட்டுமல்ல கடவுள் முன்னிலையிலும் தங்களையே உயர்த்திக் கொண்டனர். தாங்கள் யூதர்களின் சமய, சமூக, பண்பாட்டுத் தலைவர்கள் என்ற நிலையில் தாங்கள் நேர்மையாளர் என்றும் ஆகவே தாங்கள் மனம்மாறத் தேவையில்லை எனவும் நினைத்தனர். தாங்கள் யூத மதச்சட்டதைக் கற்றுத்தேர்ந்தவர்கள், அதைக் கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள் என்று நினைத்து மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கினர்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு ஆண்டவர் கூறிய உவமையில் தந்தை தன் மூத்த மகனிடம் திராட்சைத் தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யச் சொன்னபோது முதலில் போக விரும்பாதவர் பிறகு மனம் மாறி தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தோட்டத்திற்குச் சென்று வேலைசெய்தார். இளைய மகனிடம் சென்று தந்தை தோட்டதில் வேலை செய்ய கேட்டபோது, உடனே செல்கிறேன், தந்தையின் விருப்பத்தை நிறைவேறுகிறேன் என்று சொன்னார், ஆனால் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யவில்லை. ஆலயப்பணி செய்கிறேன், சமூகப்பணி செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றாதவர்கள் இம்மூப்பர்கள், தலைமைக் குருக்கள் போன்றோராவர். பாவிகள், வரிதண்டுபவர்கள், விலைமாதர்கள் மனம்மாறி, பாவ வாழ்வை விட்டுவிட்டு இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றியதால் இறையாட்சியில் இடம்பெறுவார்கள். ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவர் எல்லாம் விண்ணரசில் நுழைவதில்லை, மாறாக தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களே இறையாட்சியில் இடம் பெறுவர்.

விவிலியத்தை அறியாதவர் இயேசுவை அறியாதவர். இறை வார்த்தையை வாசிக்காதவர், இறைவனின் விருப்பத்தை அறியாதவர். எனவே இறை விருப்பத்தை அறியவும், இயேசுவின் மனநிலையில் வளரவும், மனம்மாறி இறைவன் தரும் நிலைவாழ்வை உரிமையாக்கவும் விவிலியம் வாசிப்போம்.

“அழைப்பும் அதன் மதிப்பும்”

‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்;ஆனால், போகவில்லை.(மத் 21:30.)

இந்த மனப்போக்கு இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பிள்ளைகள் நடுவிலும் சமூகத்திலும் எதார்த்தம் ஆகிவிட்டது. அதேபோல் சாதாரணம் ஆகிவிட்ட தேர்தல் நடைமுறைகளில் நிற்கும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளும் அதன் தன்மைகளும் எல்லை கடந்து விட்டன. தேர்தலுக்கு முன் செய்கிறேன்- செய்துமுடிப்பேன், என்ற வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின் நினைவில் கூட நிற்பதில்லை. இது இன்றைய மனித சமூகத்தின் நடைமுறை. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது அதே வேட்பாளர் அதே இடங்களில் மீண்டும் நின்று மீண்டும் வெற்றி பெறுகிறார். ஏமாற்றப்பட்ட அதே மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தருகின்றனர். அதேபோல் நமது தனிப்பட்ட குடும்பங்களிலும் முடியாது என்று முரண்டு பிடிக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களால் வாய்ப்புகள் மீண்டும் தரப்படுகின்றன. மேலும் இந்தப் பெற்றோர்களும் - பொதுமக்களும் கொண்ட ஒரே நம்பிக்கை… எப்படியாவது, என்றாவது - அவர்கள் செய்து முடிக்கமாட்டார்களா…என்பதே. அப்படியே அவர்கள் செய்யாவிட்டாலும்; இவர்கள் எனது மக்கள் என் இனத்தவர் என வேட்பாளரைப் பற்றியும் இதோ இவன் என் மகன் என் மகள் என்ற உறவின் அடிப்படையிலும் அவர்களை மீண்டும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்குக் குடும்பங்களில் பெற்றோராக நிற்பவரும் தேர்தல்களில் வாக்காளர்களாகச் செயல்படுபவர்களும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த நம்பிக்கை - அந்த வாய்ப்பை அழைப்பை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

இன்றைய வாசகங்கள் மூன்றுவகை மனிதர்களை
1) அழைப்பை முன் வைக்கும் இறைவன்- தந்தை
2) தனது பார்வையில் முடியாது என்றவர் பின் - அழைப்பின் நன்மை தனத்தை புரிந்தவராக முடியும் என செயல்படுபவர்.
3) தன் எண்ணங்களில் உறுதி கொண்டவர்- முடியும் ஆனால் முடியாது என நிலைத்து நிற்பவர்- தனக்கு கிடைக்க வேண்டிய பயனை இழந்தவர் - என அறிமுகப்படுத்துகின்றது.
முதல் வாசகத்தில் இறைவன் தன் வாதத்தை நெறிப்படுத்தி மக்கள் முன் வைப்பது போல் தோன்றினாலும்(எசேக 18:25)
தொடர்ந்து அவர் தனது நேர்மையான நன்மைதனத்தாலும் எளியோருக்கும் பாவிகளுக்கும் வாழ்வு பெற நல்வழியை கற்பிக்கின்றார்.(எசே 18:28),(திரு பா 25:8).

நற்செய்தியில் தந்தை

தன் இரு மக்கன்களிடமும் அவர்களுடைய தோட்டத்தில் அவர்களுடைய நற்பயன்களுக்காக வேலை செய்ய அழைப்புவிடுகின்றார். இதில் மூத்தவர் அழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பின் அதனை நிறைவேற்றிடச் செல்கின்றார். பின்னவரோ போகிறேன் என்று போகாமல் தந்தையை ஏமாற்றியதாக எண்ணி, தான் பெறவேண்டிய பயனை இழந்து நிற்கின்றார்.
முதல் வாசகத்தில் இஸ்ரவேலர் திருந்தியே ஆக வேண்டும் என்று கண்டிப்புடனும் முனைப்புடனும் முன் வந்த இறைவன் நற்செய்தியில் வரும் உவமையில் அந்த அழைப்பை மகன்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகின்றார்.

இந்த அழைப்பு எத்தகையது என்று கவனிப்போம்.

தோட்டத்திற்கு சென்று வேலை செய்யுங்கள் என்பது பிள்ளைகளுக்குச் சாதாரண அற்பமான அழைப்பாக இருந்திருக்கலாம். இன்றும் நமது வீடுகளில் பெற்றோர்கள் பெரியவர்கள் தரும் அழைப்பினை அநேக பிள்ளைகள் அற்பமாக நினைப்பதைக் காண்கின்றோம். விவலியத்தில் மூன்று வித அழைப்புகள் மிகவும் யோசிக்க வைப்பவை ஆனால் அதிசயங்களை நிறைவேற்றிய அவைகளை கவனிப்போம்.

1) இளம் பருவ வயதில் கடவுள் பக்தியும், அழகும், கீழ்ப்படிதலும் கொண்ட - ஒரு பெண்ணிற்கு இறைத்தூதர், கணவனை அறியாமலேயே அவரைக் குழந்தையைப் பெற்றெடுக்க பணிக்கின்றார்… (லூக் 1:34-35) மற்றும் (மத் 1: 18) அன்றைய காலகட்டத்தில் இப்படியொரு நிகழ்வு யாருக்கேனும் ஏற்பட்டால் அவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த அந்தப் பெண் “இதோ அடிமை” என முழுமையாக ஏற்றுக் கொண்டார். காரணம் அவர் இறைவனை மட்டும் நம்பினார். முடிவு உலகம் மீட்பை கண்டது.

2) கெத்தமனேயில் … இறை சித்த அழைப்பின் முன் “ ஒரு குரல் - என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்”
(மத் 26:42) என்று எத்திக்கும் ஒலிக்கின்றது …. தொடர்ந்து கல்வாரியை அடைகின்றது. முடிவாக, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலுடன்
(மத் 27:46) கல்வாரியை கடந்து சென்றது…. பயன் - இன்று - உலகின் ஒளியாக உயிராக வாழ்வாக வழியாக நம்மோடு தங்கி மகிழ்கின்றது. நம்மை மகிழ்விக்கின்றது.

இந்நிகழ்வைத்தான் பவுல் அடிகளார் இன்று… தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
(பிலி 2:7-8). என்று ஆணித்தரமாக உறுதி செய்கின்றார்.

3) கூடியிருந்தோர் அனைவரும் நம்பிக்கை இல்லாமல் கவனித்த ஒரு அற்பமான ஆனால் அற்புதமான அழைப்பு இலாசரே, வெளியே வா’ என்ற அழைப்பு. (யோ11:43)
இறந்து நான்கு நாள் ஆன; நாற்றம் அடிக்கும்! ' (யோ 11:39) உடலை - லாசரை - வெளியே வா என்று அழைத்தால் கூடி இருந்தவர் அப்படித்தானே நினைக்க முடியும். ஆனால், அப்படி நினைக்காதவர் இருவர் ஒருவர் அழைத்த இயேசு மற்றொருவன் அழுகிய நிலையில் கட்டுண்டு நாற்றமெடுத்து கிடந்திருந்தும் அழைப்பைக் கேட்ட லாசர். ஒருவேளை லாசரும் அப்படி நினைத்திருந்தால் அவன் வெளியே வரவோ உயிர் பெறவோ அல்லது விவலியத்தில் இடம்பெறவோ வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். லாசர் கேட்கச்செவி உள்ளவனாக அழைத்த குரலைக் கேட்டான் - எழுந்து வந்தான். அழைத்தவரின் கட்டளைப்படி, உலகம் அவனது கட்டுகளை அவிழ்த்து; அவன் வாழ வழி வகுத்தது.

முன்னவர் இருவரும் உடலுள்ள ரீதியாக முழு தகுதி உடையவர்களாக இறைவனோடு இறைவனுக்கு கீழ்ப்படிந்தவர்களாக இருந்ததால் இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள் என நாம் நினைப்போம் ஆனால், இந்த லாசர் உயிரையும் உடலையும் இழந்திருந்த நிலையிலும், கேட்கச் செவி உள்ளவனாக இருந்ததால் வாழ்வு பெற்றான்.

உலகத் தேவைகளின் அழைப்புகளும் ஆன்மீக தேவைகளின் அழைப்புகளும் இப்போதும் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கேட்கச் செவி உள்ளவர்களாக முதலில் அதைத் தெளிவாகக் கேட்போம். ‘போக விருப்பமில்லை’ என்றாலும்.பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலைசெய்த(மத்21:29) உவமையில் வரும் முதல் மகன்போல், நமது எதிர்நோக்கை சென்றடைய எது எப்போது எதற்காக நமக்குத் தேவைப்படுகிறது என்பதை முழுமையாக உணர்ந்து ஏற்றுக் கொள்பவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம். உவமையில் வரும் முதல் மகனுக்கு எண்ணத்தை மாற்றிக் கொள்ள நேரம் கிடைத்தது போல், நமக்கும் நம்முள் மூச்சு இருக்கும் வரை நேரம் இருக்கின்றது..

எந்த விலையுமின்றி இலவசமாக நம் மீது திணிக்கப்படும் கல்வாரியின் மீட்பு
அற்பமாகத் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கும்போது - அது அர்த்தம் உள்ளது.அனுபவிக்க, அனுபவிக்க; அது அற்புதமானது - என்பதை நாம் நிச்சயம் புரிந்து கொள்வோம்.

உலகின்எஜமானராகிய இறைவனும், தேர்தலின் எஜமான்களாகிய மக்களும்; மீண்டும் மீண்டும் வாய்ப்பைத் தருவது அவர்களுடைய இரக்கத்தையும் நம் மீது கொண்டுள்ள பேரன்பையும் நம்பிக்கையும் உறுதி செய்கின்றது. உவமையில் தந்தை மீண்டும் வந்து கண்காணிக்கவில்லை. இன்று யாரும் கவனிக்காத நிலையில் - நமது வாழ்வு இறந்த லாசரின் நிலையைப் போல் இருந்தாலும் நம்மைச் சுற்றி ஒலிக்கும் அழைப்புகளின் ஓசையைக் கேட்கச் செவி உள்ளவர்களாகக் கேட்கும்போது நாமும் அந்த வல்லவரின் ஒளியாக வழியாக வாழ்வாக வாழும் வாய்ப்பைப் பெறுகிறோம் - பெற்றிருக்கின்றோம் என்பதை நினைவு கொள்வோம் அழைப்பு அற்பமாக இருக்கலாம் ஆனால் அதை உள்வாங்கும்போது அதன் மதிப்பு அற்புதமாக இருப்பதை அனுபவிக்கலாம்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு