மனிதன் மாண்புடன் படைக்கப்பட்டவன். இயற்கையிலேயே மதிப்புடன் படைக்கப்பட்டாலும் பணம், பதவி, பட்டம் போன்ற அணிகலன்கள் இருந்தால் மட்டுமே தான் மதிப்புடன் வாழ்வதாக ஒரு மாய எண்ணம் அவனுக்குள் விதைக்கப்பட்டு, அது வளர்ந்து, விழுது விட்டு பரந்து கிடக்கிறது. இந்த மதிப்புடன் வாழ்தல் என்பதில் துன்பங்களோ , துயரங்களோ, கஷ்டங்களோ இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். ஏன் இயற்கையான சாவு கூட அவனுக்கு அருகில் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற விதத்தில் போராடுகிறான். இங்ஙனம், மலர்ப் பாதை மட்டுமே வாழ்க்கைப் பாதையாக இருக்க வேண்டும் என்பது மனிதரின் சிந்தனையாகவும், அதுவே மனிதருக்கு ஏற்றவையாகவும் இருக்கிறது.
ஒரு சொல்லால் எல்லாவற்றையும் படைத்தவர், ஒரே மகனை மீட்பிற்காய் தந்தவர், நாம் ஒன்றுபட்டு வாழ்வதில் பெருமகிழ்ச்சியும் கொள்கிற கடவுள், எல்லாவற்றையும் கடந்த அவர் துன்பத்தைத் தன் அக வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார். தன் ஒரே மகனை பாடுகள் பட அனுமதித்தார். சிலை செதுக்கப்படும்போது உளிக்கு வலிக்கும் என்று செதுக்குபவன் நினைப்பானா? பாறைக்குச் சேதம் ஏற்படுகின்றது என செதுக்காமல் இருப்பானா? கை வலிக்கிறது என எடுத்த வேலையை நிறுத்துவானா? சிற்பியின் கை வலி, உளியின் வெப்பம், பாறையின் சிதைவு இவை அனைத்தின் காரணமாக உருவாகும் அற்புதமே பார்ப்போர் வியக்கும் அற்புதச் சிலைகள். சிரமங்களும், துன்பங்களும், தடைகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் இன்றியமையாத காரணிகள். இதை உணருகிற மனிதன் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறான்.
படைக்கப்பட்டவை அதன் மாண்பிலிருந்து விலகியதை மீட்பதற்காகவே வந்த இறைமகன் சுமைகளைத் தன் மேல் ஏற்றுக் கொள்ளத் தயாரானார். நான் கிளர்ந்தெழவில்லை : விலகிச் செல்லவுமில்லை. அடிப்போக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற எசாயாவின் வார்த்தை இதை வெளிப்படுத்துகின்றன. மானிட மகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் மெய்யாகிறது (மத் 16:21).
இயேசுவில் நம்பிக்கையும், அவர்தம் பாடுகள் வழியாக நம்மை மீட்கிறார் என்பதில் விசுவாசமும் கொண்டுள்ள இறைமக்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நம்முடைய நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். குறிப்பாக சமூகத்தின் விளிம்பிலும், ஒடுக்கப்பட்ட நிலையிலும் இருந்துகொண்டு துன்பமே வாழ்வின் பாதை, துயரமே அனுதின அனுபவம் என்று வாழ்கின்ற மக்களிடத்தில் வார்த்தையை மட்டுமல்ல, நம் தலைவராம், மீட்பராம் இயேசுவைப்போல நம் செயல்பாடுகளின் வழியாக அவர்களின் வாழ்வில் மாறுதலைக் கொணர முற்படுவோம். தான் என்று வாழ்கிறவர் மண்ணோடு மண்ணாகிப் போவர். அதே நேரத்தில் பிறர் நலச் சிந்தனையோடு வாழ்பவர், பிறரின் துன்பத்தில் பங்கேற்பவர், என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார் (மத் 10 : 39) என்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குவர். வாழ்வோம், வாழ்விப்போம். கிறிஸ்துவே மெசியா என அறிக்கையிடுவோம்.
தன்னலம் துறப்போம்
இன்றைய நற்செய்தியிலே நாம் தன்னலத்தைத் துறந்தவர்களாக வாழ வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுரை பகர்கின்றார்.
தன்னலத்தைத் துறத்தல் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உவமை.
ஓர் ஊரிலே பரம ஏழை ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். திடீரென பெரும் மழை பெய்தது. அப்போது அந்த ஏழையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தார் அந்த ஏழை! வெளியே ஓர் உப்பு வியாபாரி! அந்த வியாபாரி அந்த வீட்டுக்காரரைப் பார்த்து, ஐயா, நான் ஓர் ஏழை உப்பு வியாபாரி! மழை பெய்கின்றது. இரவு மட்டும் நானும், என் கழுதையும் தங்க சற்று இடம் தாருங்கள் என்றார். அந்த ஏழைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! தன் மனைவியைப் பார்த்தார். தன் மனைவியைப் பார்த்து, நான் உன்னை ஒன்று கேட்கலாமா? என்றார். அன்பும், அறனும் படைத்த பண்பு மிக்க அந்தப் பெண்ணோ , எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். இப்பொழுது இரவு மணி 12. பொழுது விடிய இன்னும் 5 மணி நேரம் இருக்கின்றது. நீயும், நானும், நமது குழந்தைகளும், தரையில் படுக்காமல், நின்றுகொண்டிருந்தால், இந்த வியாபாரிக்கும், கழுதைக்கும் நம் வீட்டில் இடமிருக்கும் என்றார்.
மனைவி, சரி என்றார். பெற்றோரைப் போல பிள்ளைகள் ! பொழுது விடியும்வரை அந்த வீட்டாரும், உப்பு வியாபாரியும், கழுதையும் அந்த வீட்டுக்குள்ளே நின்றுகொண்டிருந்தனர். எங்கே மனமுண்டோ அங்கே இடமுண்டு!
இந்த உவமையிலுள்ள குடும்பத்தார் அனைவரும் தன்னலத்தைத் துறந்தவர்கள்!
இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம் (இரண்டாம் வாசகம்).
தன்னலம் துறத்தலைப் பொறுத்தவரையில், நம்மிடம் உள்ள பொருள்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வது ஓரளவு எளிது. ஆனால் நமது உடலையும், உயிரையும் துறப்பது மிகவும் கடினம்!
நம்மையே நாம் மறந்து, நமது விருப்பு, வெறுப்புகளை நாம் கடந்து, குற்றமற்ற நம்மை குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடுகின்றவர்களை மன்னித்து அவர்களுக்காகச் செபிப்பது மிகவும் கடினம்.
எதற்குமே கிளர்ந்தெழாத (முதல் வாசகம்) நிலையை அடைவது அவ்வளவு எளிது அல்ல! ஆனால் முற்றும் துறந்த வாழ்வை இயேசு வாழ்ந்து காட்டியிருப்பது உண்மைதானே!... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
மேலும் அறிவோம் :
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (குறள் : 987).
பொருள் : தமக்குத் துன்பம் தரும் கொடிய செயல் புரிந்தவர்க்கும் இன்பம் தரும் நல்லவற்றையே செய்யவில்லை என்றால் நிறை பண்பாகிய சால்புடைமையால் எந்தப் பயனும் விளையாது!
முற்றும் துறந்த துறவியாகிய பட்டினத்தார் வயலில் ஒரு வரப்பின்மேல் தலையை வைத்துப் படுத்திருந்தார். அவ்வழியே விமலா, கமலா என்ற இரு பெண்கள் சென்றனர். விமலா கமலாவிடம், "பஞ்சு மெத்தைமேல் படுக்க வேண்டிய இவர் வரப்பின்மேல் படுத்திருக்கிறார்" என்றார். கமலா விமலாவிடம், "பஞ்சு மெத்தையைத் துறந்தாரே தவிர, தலைக்கு உயரமான இடம் வேண்டும் என்ற எண்ணத்தைத் துறக்கவில்லையே" என்றார். அவர் கூறியதைக் கேட்ட பட்டினத்தார் எழுந்து வயலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொண்டார், மீண்டும் விமலா கமலா விடம், "பாரு, அவருடைய துறவு இப்பொழுது பூரணமாகிவிட்டது” என்றார். கமலா சும்மா விடவில்லை . அவர் கூறினார்: “ஊரார் பேசுவதையெல்லாம் கேட்டு நடக்கும் இவர் ஒரு துறவியா?" அப்பொழுதுதான் பட்டினத்தார் பின்வருமாறு பாடினார்; “வித்தாரமும் கடமும் வேண்டாம், மட நெஞ்சே! செத்தாரைப் போலத் திரி.” அதாவது, மூட நெஞ்சே, பிறருடைய புகழுரையும் பாராட்டும் உனக்குத் தேவையில்லை. செத்தவனைப்போல் இரு, செத்தவன் யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்பதில்லை.
துறவியின் மனநிலை இப்படியிருக்கும்போது, கிறிஸ்து இன்றைய நற்செய்தியில், “மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" என்று கேட்கின்றாரா? இது அவருக்குத் தேவையா? “எனக்கு மக்கள் தரும் மகிமை தேவையில்லை " என்று கூறிய அவர் (யோவா 5:34) மக்களின் கருத்துக் கணிப்பைக் கேட்கவேண்டியதன் காரணம் என்ன? ஏனெனில் மக்கள் தம்மைப்பற்றித் தவறான எண்ணம் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை. உண்மையில் மக்களும் சீடர்களும் அவரைப்பற்றித் தவறான கண்ணோட்டம் கொண்டிருந்தனர்.
மாலைக் கல்லூரியில் படித்த இளம் பெண் இரவில் மிகவும் தாமதமாக வீடு திரும்பினார், அவருடைய அம்மா, “ஏண்டி லேட்டாய் வந்தே?" என்று கேட்டார். இதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும், அண்ணன் மலையாளத்திலும், தம்பி தெலுங்கிலும் கேட்டனர். ஏனென்றால் வயசுப் பெண்ணு லேட்டாய் வந்தா, நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களாம்! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் மக்கள் நாலு விதமாகப் பேசினார்கள், அவரைத் திருமுழுக்கு யோவான் என்றும், எலியா என்றும், இறைவாக்கினருள் ஒருவர் என்றும், மெசியா என்றும் நான்கு விதமாக விமர்சித்தனர்.
பேதுரு இயேசுவை 'மெசியா' என்றார். ஆனால் மெசியா சிலுவையில் அறையப்பட வேண்டியவர் என்பதை அவர் ஏற்க மறுத்து, கிறிஸ்துவைக் கடிந்து கொண்டார். கிறிஸ்து அவரைச் சாத்தான் என்று குறிப்பிட்டு, அவருடைய எண்னாம் மனித எண்ணமேயன்றி, கடவுளுடைய எண்ணம் இல்லை என்றார். அப்படியானால், கடவுளுடைய எண்ணம் என்ன? அதைப் பற்றி இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. மெசியா துன்புறும் இறை ஊழியனாக இருப்பார், அவர் பாடுகள் பல படவேண்டியிருக்கும். திந்தனைகளை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் அவர் முகத்தைக் காட்டுவார் (எசா 50:5-9). கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னும் சீடர்கள் சிலுவையில் அறையுண்ட மெசியாவைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை . எனவேதான், நம்பிக்கை இழந்து, வாடிய முகத்துடன் எம்மாவும் சென்ற இரு சீடர்களிடம் கிறிஸ்து : "அறிவிலிகளே! மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்ற கூறி கடிந்து கொண்டார் (லூக் 24:25-26)
சிலுவைச் சாவை எற்று, தம்மையே வெறுமையாக்கிய கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நம்மையே மறுத்து. நமது சிலுவையைச் சுமக்க வேண்டுமென்கிறார் கிறிஸ்து. கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை விருப்பப்பாடமல்ல! கட்டாயப்பாடம், நமது தனிவாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் நம்மை அழுத்துகின்ற பாரமான சிலுவை ஆணவம் என்ற அரக்கன். கிறிஸ்துவைப்போல நாமும் தம்மைத் தாழ்த்தி, மற்றவர்களை நம்மைவிட உயர்வாகக் கருத வேண்டும்.
ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்ற மக்கள் வாய்விட்டு சிரித்தனர். ஏன்? மணமகன் உயரமானவர்; மணமகள் குட்டையானவர், அவர்கள் மாலை மாற்றிக் கொண்டபோது, மணமகள் தனக்கு மாலையிட வசதியாக மணமகன் மிகவும் குணிந்தார். திருமண நாள் அன்றே, மணமகள் மணமகனைத் தலைகுனிய செய்துவிட்டார். அதைப் பார்த்த நான், "குலியத் தெரிந்த மணமக்களுக்குப் பணியத் தெரியவில்லையே!" என்றேன்.
பிறரை மட்டம் தட்டுவதில் நாம் ஆனந்தம் அடைகிறோம். ஒருவர் தன் நாயுடன் வீதியில் சென்றார். அவருக்கு எதிரில் வந்தவர் அவரிடம், "கழுதையுடன் செல்லுகிறீர்களா? என்று கேட்க அவர், "இல்லை , தாயுடன் செல்கிறேன்" என்றார். அதற்கு மற்றவர், "நான் உங்களைக் கேட்கவில்லை. உங்கள் தாயிடம் கேட்கிறேன்" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தார்,
சிலுவை என்பது தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவதாகும். நாம் நமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும். பிறரை வாழவைக்க நாம் தியாகம் செய்ய வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: "நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றது." நமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பது நமது அன்புச் செயல்கள்,"மனிதனாக பிறந்ததற்கு நாலுபேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று ஒருவரிடம் கூறியதற்கு அவர் கூறியது: “தான் நான்கு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள்: என் மனைவி மற்றும் எனது மூன்று பிள்ளைகள். நமது அன்பு குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், மற்றவர்களையும் அரவணைக்கும் அன்பாக விரிய வேண்டும்.
சிலுவையில் அறையுண்ட மெசியாவை ஏற்று. நமது அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்போம். ஆணவத்தை அழித்து மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக மதிப்போம். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணுவோம். அன்பில் உயிர் நிலைத்துள்ளது. அன்பிலார் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் 80)
2>சாவுக்கு சாட்சிகள் நாம்
அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தது அந்தக் கப்பல். அதன் மேல்தளத்தில் இருவர் உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கத்தோலிக்கக் குருவானவர். மற்றவர் அமெரிக்க வணிகர். “மறை பரப்புப் பணிக்கெனச் சீனாவுக்கா போகிறீர்கள்?” என்ற வணிகர் அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்தார்: ““போதிக்கச் செல்லும் குருக்களை அந்த நாட்டில் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் ஒருமுறை மர்ஃபி என்ற குருவானவரை கலகக்காரர்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் பெரும் தொகையைப் பணயமாகக் கேட்டார்கள். பணம் வந்து சேரத் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விரலாக அவருடைய வலக்கையின் மூன்று விரல்களைத் துண்டித்து விட்டார்கள். இப்போது அந்தக் குரு அமெரிக்காவில்தான் இருக்கிறாராம். இனியும் நற்செய்திப் பணிக்கெனச் சீனா போக மனம் வருமா?” புன்முறுவலோடு ஏதோ சொல்லக் குரு முனைந்தார். அதற்குள் உணவருந்த அழைப்பு மணி ஒலித்ததால் இருவரும் கை குலுக்கி விடைபெற்றனர். கைகுலுக்கியபோது வணிகருக்கு ஒரே வியப்பு! காரணம், அந்தக் குருவானவரின் வலக்கையில் மூன்று விரல்கள் இல்லை.
ஓர் இறைவாக்கினருக்குரிய இறை வார்த்தைப் பணியில் இழிவுக்கும் எதிர்ப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளானாலும் வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. இறை வார்த்தையின் பொருட்டு வேதனைக்குள்ளாவதில் ஒரு தனி மகிழ்ச்சி உண்டு. அதுதான் துயரத்தின் மகிழ்ச்சி. ( The joy of sorrow) அதனைத் திருத்தூதர் பவுல் வெளிப்படுத்துவார்: “நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை... வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கு சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்” (2 கொரி. 4:8-10).
“இயேசுவுக்குச் சிலுவைச்சாவா; அது எப்படி?” என்ற பேதுருவின் எண்ண ஒட்டத்துக்குக் காரணம் - துன்பத்தைக் கண்டு பின்வாங்கும் மனித இயல்பு மட்டுமல்ல. அவர் சார்ந்த யூதர்களின் மன நிலையும் கூட. மெசியா என்ற மீட்பரை அவர்கள் எதிர்பார்த்தார்கள் - உண்மை! ஆனால் துன்புறும் மெசியா அல்ல. வல்லமையுடன் “தன் பகைவரைத் தனக்குக் கால் மணையாக்கும்”” மெசியா (தி.பா. 110:1). “முடிவே இராத ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் கொடுக்கப்பட்ட” மெசியா (தானி 7:14).
இயேசு என்ற இந்த மெசியாவின் துன்பம் பற்றி எண்ணிய பேதுரு, அதே மெசியாவின் துன்பம் பற்றி எசாயா போன்ற இறைவாக்கினர்கள் முன்னுரைத்ததை மறந்து போனார். “அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை”: (எசா. 50:6) என்ற துன்புறும் ஊழியனின் மனநிலை பேதுருவின் உள்ளத்தில் பதியவில்லை.
யூதர்களையோ, பேதுருவையோ சொல்லிப் பயனில்லை மனித மனமே அப்படித்தான். அதனால் “நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று இயேசு கடிந்து காண்டார் (மார்க் 8:33).
நினைவொப்பம் (autograph) வாங்குவதற்கு சாந்தி நிகேதனுக்கு வந்தான் ஒருவன். தாகூரின் செயலர் மாலீக் எழுதினார்: “உன்னை நீ அறிவாய்”. ஏட்டின் மறுபக்கம் புரட்டி தாகூர் எழுதினார்: “உன்னை நீ மறப்பாய்'. உன்னை அறிவது என்ற சாக்ரட்டீசின் தத்துவம் சிறந்தது. ஆனால் உன்னை மறப்பது என்ற தாகூரின் தத்துவம் தான், தனது என்ற குறுகிய வட்டத்தைத் தகர்த்து நிற்பதால் தலைசிறந்தது.
கரைய விரும்பாத உப்பினால் உணவுக்குச் சுவை கொடுக்க இயலாது. “தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வர்”: (மார்க். 8:35).
இறைமகன் இயேசு .நம்மைப் பார்த்துச் சொல்கிறார்: “நான் யார் என்பதைப் புரிந்து கொண்டால், நீங்கள் யார் உங்களுடைய அழைப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். என்னைப் போல் கடவுளின் உண்மை ஊழியனாய் இருக்க விரும்பினால் நீங்களும் துன்புறும் இறை ஊழியர்களாக வேண்டும்... எனவே தியாக வாழ்வுக்கு, பலிவாழ்வுக்கு, துன்பச் : சிலுவை வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கிறார்.
இன்றைய வழிபாட்டில் இயேசுவைச் சந்திப்பது என்பது ஒர் அழைப்பாகும். ஏன், ஓர் அறை கூவலாகும்.
மெசியா மாட்சியுள்ளவராய், ஆட்சி புரிபவராய், அடக்கி ஆள்பவராய் விளங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இத்தகைய சரியான புரிதல் இல்லாத நிலையில், இயே௬வை ஸசியா என்று மேதுரு அறிக்கை எசய்தது அவரது நம்பிக்கை வளர்ச்சியாகும். ஆனால் ஹசீயாத் தன்மை புறக்கணிப்ப்னும் நத்தம் சிந்துவதீனும் அடங்கி ஒருக்கிறது என்பதைப் புரிந்து காள்ளாமல் ருந்தது பேதுருவின் நம்ப்க்கை ஆஹம்ன்மையாகும்.
துன்புறாமல் சுகத்தை அனுபவிக்க விரும்புபவன் சாத்தானுக்கு ஒத்தவன். பாலைவனச் சோதனை நினைவுக்கு வரட்டும் (மத். 4:10). துன்பங்களை ஏற்க மறுப்பதும் சாத்தானிடம் சரணடைவதும் ஒன்றே!
இயேசுவுக்குச் சிலுவை (துன்பம்) என்பது மீட்பின் கருவி. அவரது மீட்புப் பணியில் பங்கேற்கும் எவரும் சிலுவையை எப்படி ஒதுக்க முடியும், ஓரங்கட்ட முடியும்?
தொடக்க காலத் திருஅவையில் சிலுவை பற்றிய சிந்தனை அழுத்தமானது. “நாங்கள் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம்'” (1 கொரி. 1:23). “இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா?”” (கலாத் 3:1). சிலுவை மீட்பின் கருவி மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் நமக்கு ஆறுதலின் ஊற்று. முதல் உலகப் பெரும் போரில் ஓர் ஊரே தகர்க்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கு அவ்வூர்க்கோயிலே மருத்துவமனையானது காலில் குண்டடிப்பட்டு ரத்தக் கசிவுக்கும் எலும்பு முறிவுக்கும் ஆளான ஒரு மனிதனைத் தூக்கி வந்து பீடத்தின் மேல் கிடத்தினர். ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை. மயக்க மருந்து எதுவுமில்லை. பீடத்தின் மேல் இருந்த பெரிய பாடுபட்ட சிலுவையை உற்று நோக்கினான் அவன். “சிலுவையில் தொங்கும் இயேசுவின் முகத்தை மட்டும் மறைக்காமல் அறுவைச் சிகிச்சையைத் தொடங்குங்கள். எனக்காகத் துன்புற்ற அவரைப் பார்த்துக் கொண்டே என் வலியைப் பொறுத்துக் கொள்வேன் ” என்றார்.
அன்னை மரியா மனித இனத்துக்கு இயேசு தந்த மகத்தான கொடை. அந்தக் கொடையைச் சிலுவையடியில் வியாகுல அன்னையாகவன்றோ தந்தார்! மீட்பரின் தாய் மரியாவுக்கு பிறவிப்பாவத்திலிருந்து விலக்களித்தார். ஆனால் அந்தப் பாவத்தின் விளைவான துன்பத்திலிருந்து அவருக்கு விலக்களிக்கவில்லையே! பாவமே கல்லாத ஒரு தாயை ஆந்த உலகத்துக்குத் தந்த கடவுள் துன்பமே ஒல்லாத ஒரு தாயை ஏன் தரன்ல்லை?
சீடர்களில் எல்லாம் தலையாய சீடர் அல்லவா மரியா! சிலுவைத் துன்பத்திலிருந்து இயேசு தம் சீடரைப் பிரிப்பதில்லை. பங்கேற்க அழைத்தவரன்றோ அவர்! (மார்க். 8:34). எனவே தாயும் சேயும் கல்வாரிப்பலியில் ஒன்றிணைகிறார்கள். ஏன், நாமும் “இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவரின் சாவை அறிவிக்கிறோம்” (1 கொரி. 11:26). திருத்தூதர் பவுலின் பார்வையில் இரத்தம்சிந்தாமல் மன்னிப்பு இல்லை. சிலுவையே மீட்பின் வழி. சிலுவையில் பங்கு கொண்டால்தான் நாமும் மீட்படைவோம். நம் மீட்புக்குத் தடையாக இருப்பதைத் தகர்த்தெறிய நாம் தயாரா?
துன்யங்களின் நடுவலும் வாழ்க்கையின் அருத்தத்தை, கறைவனின் வீருப்பத்தைத் தேடுபவன் மனிதன். அதனைக் கண்டுபிடிப்பவன், கடைப்பிடிப்பவன் புனிதன்.
கிராமத்திலிருந்து நகரம் வந்துசேரும் ஓர் அப்பாவியின் அனுபவம், நமது சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்பதைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.
இரவில் படுத்துறங்க இடம் தேடுகிறார். ஒரு மண்டபம் கண்ணில் படுகிறது. அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் படுத்திருக்கின்றனர். கூட்டமாய் படுத்திருந்த அம்மனிதர்களைப் பார்க்கையில், ஏதோ வரிசையாக மூட்டைகள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல் ஓர் உணர்வு நம் நாயகனுக்கு. இந்த மூட்டைகளில் ஒரு மூட்டையாக தான் இரவில் காணாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்.
காலையில் எழுந்ததும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக, தன் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தார். இந்த அப்பாவி கிராமத்து மனிதர் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார், நகரத்து மனிதர் ஒருவர். அவர் கொஞ்சம் குறும்புக்காரர். எனவே, அந்த கிராமத்து மனிதர் நன்கு உறங்கிய பின், அவர் காலில் கட்டியிருந்த அந்த வெள்ளைத் துணையை கழற்றி, தன் காலில் கட்டிக்கொண்டு படுத்து விட்டார். விடிந்தது. கிராமத்து மனிதர் எழுந்தார். அவர் காலில் கட்டியிருந்த வெள்ளைத் துணியைக் காணாமல் திகைத்தார். கொஞ்ச தூரம் தள்ளி, மற்றோருவர் காலில் அது கட்டியிருப்பதைக் கண்டார். அவரது திகைப்பு, குழப்பம், பயம் எல்லாம் அதிகமானது. நகரத்திற்கு வந்து ஒரு நாளிலேயே, ஓர் இரவிலேயே தான் காணாமற் போய்விட்டோமே என்று அவர் மிகவும் வருந்தினார். இயேசு சபையைச் சேர்ந்த Carlos Vallés என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது.
இந்தக் கதை, நம் வாழ்வுக்கு ஓர் உவமையாகப் பயன்படுகிறது. 'நான்' என்பதை நமக்குக் காட்ட, நமது குலம், படிப்பு, பதவி, சம்பளம் என்ற வெளிப்புற அடையாளங்களை அதிகம் நம்புகிறோமா? அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா? எளிதில் காணாமற்போகக் கூடிய இந்த அடையாளங்களே 'நான் யார்' என்பதைத் தீர்மானிக்க விட்டுவிட்டால், நாம் உண்மையிலேயே யார் என்பதை அறியாமல், தொலைந்துபோக நேரிடும். வெளி அடையாளங்களைக் கட்டி வேதனைப்பட்டு, அவை தொலைந்துபோனால், நாமும் தொலைந்துபோனதைப் போல் உணர்வது, தவறு என்பதையும், இந்த அடையாளங்கள் ஏதுமில்லாமல், அடிப்படையில், உண்மையில் ‘நான் யார்’ என்பதை அறிந்துகொள்வதே, அனைத்து அறிவிலும் சிறந்தது என்பதையும், சாக்ரடீஸ் உட்பட, பல மேதைகள் சொல்லிச் சென்றுள்ளனர். 'நான் யார்' என்ற இந்தக் கேள்வி இயேசுவுக்கும் எழுந்தது. இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும். "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"
"நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"
நான் ஆசிரியர் பணி புரிந்தபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள், இப்போது என் மனதில் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, நாட்டின் பிரதமர் அல்லது மாநிலத்தின் முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இத்தகவல்களைத் திரட்டுவதன் வழியாக, நாட்டு நடப்புபற்றி தெரிந்துகொள்வது என்பது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"
இவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், இத்தலைவர்கள், உள்ளொன்றும், வெளியோன்றும் என இரட்டை வேடமிட்டு வாழ்வதால், எது தங்கள் உண்மை நிலை என்பதே மாறி, மக்கள் முன் தங்கள் வேடம் எவ்வளவு தூரம் நிலைத்துள்ளது என்ற சந்தேகமும், பயமும் இவர்களை ஆட்டிப் படைக்கிறது. மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வியே எழாது. அப்படியே எழுந்தாலும், அது பயத்தை உண்டாக்காது.
இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு ஒரு முக்கிய காரணம்?... தன்னை இன்னும் சரிவர புரிந்து கொள்ளாத சீடர்களுக்கு அவர் ஒரு வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க விழைந்தார் என்பதே. மக்கள் தன்னைப்பற்றி சொல்வதைக் கேட்டாகிலும், சீடர்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக, தன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுவுக்கு இருந்திருக்கலாம். அல்லது, இந்தக் கேள்வி பதில் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, தன் பாடுகளைப்பற்றி சொல்லப்போவதை சீடர்கள் புரிந்துகொள்ள, மக்களிடமிருந்து அவர்கள் கேட்ட ஒரு சில விசுவாச அறிக்கைகள், அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.
மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
இருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம், அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தனை ஆழமானப் பாதிப்புக்களை உருவாக்கியவர்கள் ஒரு சிலரே. இவர்களில் ஒருவர் இயேசு என்பது, மறுக்கமுடியாத உண்மை.
இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்கும் இரண்டாவது கேள்வி: "நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"
ஹலோ, உங்களைத்தான்... என்னையும்தான்... இந்தக் கேள்வி நமக்குத்தான்... நாம் சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், அருள்பணியாளர்கள், சகோதரிகள், ஆசிரியர்களிடம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற அந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.
நான் கேட்டவையும், படித்தவையும் இந்தக் கேள்விக்கு பதிலாக முடியாது. நான் பட்டுணர்ந்தவை, மனதார நம்புகிறவை... இவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.
இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்வி பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்:
யாக்கோபு 2 14-17
என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப்போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்ற முதல் கேள்விக்கு நாம் அளிக்கும் விடைகள், நம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். பல நூறு பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக மாறும். மனித வரலாற்றில், இயேசு யார் என்பதை விளக்க எழுந்த காரசாரமான விவாதங்கள், பலரது வாழ்வைப் பறித்ததே தவிர, அவர்கள் வாழ்வை மாற்றியதா என்பது கேள்விக்குறிதான்.
கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளை, கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.
குடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவரை, பங்குத் தந்தை சந்திக்கிறார். அவரது மனமாற்றத்திற்கு, பங்குத் தந்தை காரணம் கேட்கும்போது, தான் இயேசுவைச் சந்தித்தாக சொல்கிறார், மனமாற்றம் பெற்றவர்.
அவர் உண்மையிலேயே இயேசுவைத்தான் சந்தித்தாரா என்று அறிய விழைந்த பங்குத் தந்தை, அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இயேசு எங்கே பிறந்தார்? எத்தனை வருடம் வாழ்ந்தார்? எத்தனை புதுமைகள் செய்தார்? எங்கே இறந்தார்? என்று பங்குத் தந்தை அடுக்கிக்கொண்டே சென்ற கேள்விகள் எதற்கும், மனம் மாறியவரால் பதில் சொல்ல முடியவில்லை. பங்குத் தந்தைக்கு ஒரே கோபம்... இந்தச் சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர், எப்படி இயேசுவைச் சந்தித்திருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார். அதற்கு, மனம் மாறிய அவர் சொல்லுவார்: "சாமி, நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என் வாழ்வு நரகமாக இருந்தது. நான் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தினேன். மாலையில் நான் வீடு திரும்பும் நேரத்தில் என் கண்களில் படக்கூடாது என்று, என் குழந்தைகள் தெரு முனையில் சென்று ஒளிந்து கொள்வார்கள். ஆறு மாதங்களுக்கு முன், நான் பங்கேற்ற ஒரு செப வழிபாட்டின்போது, இயேசுவைச் சந்தித்தேன். அன்றிலிருந்து என் வாழ்வு மாறியது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நான் மாலையில் வீடு திரும்பும்போது, என் குழந்தைகள், தெரு முனையில் எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைத் தந்தது, இயேசு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்னதும், பங்குத் தந்தை மௌனமானார்.
இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. அவரை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு. இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கை தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.
மறையுரை
நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கியிருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). ஆம். கடவுள் இவ்வுலகைப் படைத்தார். அதுவும் வார்த்தையினால் உருவாக்கினார் என்கிறது தொடக்க நூல். அசைக்க முடியாத பாரவோனின் அடக்குமுறையிலிருந்து இஸ்ரயேல் மக்களை
விடுவித்துச் செங்கடலை இரண்டாகப் பிளந்து, இஸ்ரயேல் மக்களைக் கடக்கச் செய்தது இறைவன் செயலில் வல்லவர் என்பதைத் தெளிவாக்குகிறது.
கடவுள் வார்த்தை வடிவில் செயல்பட்டு, அவ்வார்த்தையே கடவுளாயும் இருந்து, மனிதராகப் பிறந்தார். இறைமகனாகிய இயேசுவே மெசியா என நாம் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே நற்செய்தி நூல்கள் நமக்கு உதவுகின்றன (யோவா 1). இதை உறுதிப்படுத்துவதற்காக இன்றைய வாசகம் நமக்கு வலுச்சேர்க்கிறது. இத்தகைய சூழலில், கிறிஸ்துவை நம்புகிறோம். ஆனால் கிறிஸ்துவுக்காக நாம் வாழ்வதில்லை. இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடு கிறோம். ஆனால் செயல் வடிவம் கொடுக்கிறோமா
என்பதுதான் இன்றைய கேள்வி
.
நீர் மெசியா!
இன்றைய நற்செய்தி வாசகத்தில், திருத்தூதர்கள் சார்பாக நம்பிக்கை அறிக்கை செய்கிற பேதுரு இயேசுவிடம், ‘நீரே மெசியா!’ என்று மொழிகிறார். இயேசு யார் என அறிக்கையுடவும், அவரைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வழியில் அவரைப் பின்பற்றவும் அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
(அ) கிறிஸ்துவை அறிக்கையிடுதல்: நம்பிக்கைப் பயணம்
நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று தம் திருத்தூதர்களைக் கேட்கிறார் இயேசு. இந்தக் கேள்வியும் பேதுருவின் விடையும் மாற்கு நற்செய்தியைத் திறக்கிற சாவிகளாக இருக்கின்றன. இதற்கு முந்தைய பகுதியில், ‘இயேசு யார்? அவர் எப்படிப்பட்டவர்?’ என்ற கேள்வி வாசகர்கள் உள்ளத்தில் எழுந்தது. இக்கேள்விகளுக்கான விடையே பேதுருவின் அறிக்கை: ‘இயேசு மெசியா.’
‘மெசியா’ (‘அருள்பொழிவு பெற்றவர்’) என்னும் சொல், ‘மஸியாக்’ என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து வருகிறது. அருள்பணியாளர்கள் (விப 30:30), அரசர்கள் (1 சாமு 16:13), இறைவாக்கினர்கள் (1 அர 19:16) எண்ணெய் கொண்டு அருள்பொழிவு செய்யப்பட்டார்கள். எசாயா, எரேமியா, தானியேல் இறைவாக்கினர்கள், தாவீதின் வழி வரக்கூடிய மெசியாவை முன்னுரைக்கிறார்கள் (காண். எசா 11:1-5). அவரே இஸ்ரயேல் மக்களுக்கு நீதியும் அமைதியும் மறுவாழ்வும் கொண்டுவருவார். இவர் துன்புறும் ஊழியன் என உருவகப்படுத்துகிறார் எசாயா (காண். எசா 53). நிலையான ஆட்சியை ஏற்படுத்துவார் என மொழிகிறார் தானியேல் (காண். 7:13-14). இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது.
பேதுருவின் அறிக்கை அனைவருக்கும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. இந்த இடத்தில்தான் இயேசு தம்மை யார் என மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து, தம் மெசியா நிலை என்பது துன்பத்தின் வழியாக வரக்கூடியது என உரைக்கிறார் இயேசு. இன்றைய முதல் வாசகத்தில், நாம் காண்கிற துன்புறும் ஊழியன் கடவுளுக்காகத் துன்பம் ஏற்பதுடன், கடவுளின் உடனிருப்பையும் உணர்ந்துகொள்கிறார்.
இன்று நாம் இயேசு யார் என அறிக்கையிடுகிறோம்? அவரைப் பற்றிய புரிதலே நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய புரிதல்களை வரையறுக்கிறது. அவரைப் பற்றிய அறிதலே அர்ப்பணத்தோடு அவரைப் பின்பற்றுவதற்குத் தொடக்கமாக இருக்கிறது.
(ஆ) மெசியா பற்றிய புரிதல்: சிலுவையைப் புரிந்துகொள்தல்
நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில், தம் பணியின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துகிறார் இயேசு. மெசியா புறக்கணிக்கப்பட்டு, துன்பம் ஏற்பார், கொல்லப்படுவார். உயிர்த்தெழுவார். இயேசுவின் இந்த விளக்கம் பேதுருவுக்கு ஏற்புடையதாக இல்லை. அவருடைய எதிர்பார்ப்புகள் வேறு மாதிரியாக இருந்தன. மெசியாவும் துன்புறும் ஊழியனும் ஒன்றே என்பதை பேதுருவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பேதுருவைக் கடிந்துகொள்கிறார் இயேசு. துன்பத்தையும் சிலுவையையும் ஏற்கிறவராக இருக்கிறார் மெசியா. சீடத்துவத்தின் விலை இதுதான் என்பதை நாம் உணர்தல் வேண்டு;ம். இயேசுவைப் பற்றிய புரிதல் நமக்கு எப்படி வருகிறது?
(இ) மெசியாவைப் பின்பற்றுதல்: செயலாற்றுகிற நம்பிக்கை
நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியில், சீடத்துவத்துக்கான நிபந்தனைகளை முன்மொழிகிறார் இயேசு: தன் மறுப்பு, சிலுவை ஏற்றல், பின்பற்றுதல். நம்பிக்கை என்பது செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம்.
இயேசுவைப் பற்றிய அறிக்கை வாயால் அறிக்கையிடும் நம் நம்பிக்கை அறிக்கையைத் தாண்டிச் செல்கிறது. நம்பிக்கையும் செயல்களும் இணைந்தே செல்ல வேண்டும்.
இன்றைய வாசகங்கள் விடுக்கும் சவால்கள் எவை?
(அ) தனிப்பட்ட அறிக்கை: நம் ஆன்மாவின் இதயத்தில் நாம் ஒவ்வொருவரும் இயேசு யார் என அறிக்கையிட வேண்டும். ‘நீரே மெசியா’ என்று அவரைப் பற்றிய அறிக்கை செய்தவுடன் நம் வாழ்வு மாற்றம் பெறுகிறது. நம் இதயத்தின் அமைதியில் அவர் தம்மையே நம்ககு வெளிப்படுத்துகிறார்.
(ஆ) சிலுவையைத் தழுவிக்கொள்தல்: நாம் அனுபவிக்கிற துன்பங்கள் அனைத்துமே நாம் தழுவிக்கொள்கிற சிலுவைகள். பற்றுறுதி, சரணாகதி ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.
(இ) செயல்படுகிற நம்பிக்கை: அன்பிலும் பணியிலும் கனிகிற நம்பிக்கை நம் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும்.
செப்டம்பர் 15-ஆம் நாளில் அன்னை கன்னி மரியாவை, ‘வியாகுல அன்னை‘ அல்லது ‘துன்பங்களின் அன்னை’ எனக் கொண்டாடுகிறோம். நம் துன்பங்களில் அவர் நமக்குப் பரிந்துபேசுவாராக! துன்பங்களில் அவர் கொண்டிருந்த அமைதியும் சரணாகதியும் நம்மைத் தூண்டி எழுப்புவனவாக!
நாம் கடவுளுக்கு ஏற்புடையவற்றை எண்ணுகிறோமா?
பொன்விழா கொண்டாடும் தம்பதியினரிடம் "உங்களுடைய திருமணவாழ்வு இவ்வளவு மகிழ்வானதாக, வெற்றியானதாக அமையக் காரணம் என்ன? " என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து சிரித்தவாறே பின்வரும் பதிலைக் கூறினர். "எங்கள் இருவருக்குமிடையில் பல முரண்பாடுகள் இருந்தன. சின்னச் சின்ன சண்டைகளும், புரிதலற்ற தன்மையும் இருந்தது உண்மைதான். ஆனால் இவை அனைத்தையும் சரிசெய்ய நாங்கள் கையாண்ட ஒரு உத்தி ஒருவர் மற்றவருடைய தேவை என்ன, விருப்பம் என்ன என அறிந்து அதற்கேற்றபடி நடந்து கொண்டதுதான். இச்சூழ்நிலையில் என் கணவர் என்ன செய்திருப்பார்? அல்லது இப்பிரச்சினைக்கு என் மனைவி என்ன முடிவு எடுத்திருப்பார்? என நாங்கள் எண்ணி அதற்கேற்றவாறு செயல்பட்டோம். அதனாலேயே எங்கள் மணவாழ்வு வெற்றியானது. ஆனால் அவ்வாறு வாழ்வது பலவேளைகளில் எளிதானதாக இல்லை. இருப்பினும் நாங்கள் வாழ்ந்து காட்டிவிட்டோம் " என்றவாறு அவர்களுடைய பதில் அமைந்தது. இதைக்கேட்ட அனைவரும் அத்தம்பதியரை வியந்து பாராட்டினர்.!
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இவ்வாழ்க்கையில் நாம் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு வாழ முயற்சிக்கிறோம். ஆனால் எப்போதும் எல்லாராலும் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாழவோ அல்லது சிந்திக்கவோ முடிவதில்லை. ஏனெனில் நாம் நமக்கு எது நன்மைதரும், நமக்கு எது மகிழ்வைத்தரும் என்பவற்றையே எண்ணி செயல்படுகிறோம்.
அதே சமயத்தில் நமது ஆன்மீகக் காரியங்களில் கடவுளுக்கு ஏற்றவாறு வாழத் தவறுகிறோம். கடவுளை மகிழ்விக்கும் வகையில் அவருக்கு ஏற்புடையவற்றை நம் சிந்தையில் நிறுத்தி வாழ்ந்தால் நாம் நிச்சயம் மகிழ்வடைவோம், மகிமையடைவோம் என்ற கருத்தை ஆழமாக எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி.
"நான் யாரென்று நீங்கள் கூறுகின்றீர்கள்" என இயேசு கேட்டபோது "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன் " என்று கூறி இயேசுவிடம் பாராட்டைப் பேதுரு, இயேசு தன் சாவைப்பற்றி முன்னறிவித்த போது தன் வருத்தத்தைத் தெரிவித்ததால் இயேசுவால் கடிந்து கொள்ளப்பட்டார் . அவ்வாறு கடிந்து கொள்ளும் போது " நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்ற வார்த்தைகளைக் கூறுகிறார்.இவ்வார்த்தைகளை ஆழ்ந்து தியானிக்கும் போது மனித எண்ணங்களுக்கும் கடவுள் எண்ணங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிய இயலும்.
யூதர்களைப் பொறுத்த வரை மெசியா என்பவர் அரசருக்கு ஒப்பாவார். அவர் தங்களுக்கு விடுதலை அளித்து தங்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்துவார் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. இவ்வுலக மன்னரைப் போல மெசியாவும் சுகபோக வாழ்க்கை வாழ்வார் எனவும் அவருடைய அரசின் கீழ் உள்ள மக்களையும் அவ்வாறு இன்பமாக வாழவைப்பார் என்பதும் அவர்களுடைய எண்ணம்.இதே மனநிலையில் தான் பேதுருவும் இருந்தார். இயேசுவின் வல்ல செயல்களையெல்லாம் நேரில் கண்டதால் ,அற்புதங்களை நிகழ்த்தி தமக்கு இன்பம் தருவார் என பேதுரு எண்ணியிருக்கலாம். ஆம். அவர் மனிதருக்கு ஏற்புடையவற்றை எண்ணியிருக்கிறார்.
ஆனால் கடவுளின் விருப்பமோ மெசியா துன்பங்களை ஏற்க வேண்டும் என்பதாகும். தன்னையே இழந்து தம் மக்களை மீட்பதே மெசியாவின் வருகையின் நோக்கம். இயேசு கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருந்தார். இவ்வுறுதி மனிதருக்கே உரிய எண்ணங்களைக் கொண்ட பேதுருவுக்கு முரணாக இருந்ததால் இயேசுவால் கடிந்து கொள்ளப்படுகிறார்.
நாம் துன்பப்பட வேண்டும் என்பது கடவுளின் விருப்பமல்ல. நாம் நிறைவான மகிழ்வான வாழ்வு வாழ வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். ஆனால் அவ்வாழ்வை அடைய சில நேரங்களில் நாம் துன்பத்தின் வழியில் செல்ல வேண்டியிருக்கிறது. அத்தகைய தருணங்களை நாம் இறைத் திருஉளமாக ஏற்றுக்கொள்ளும் போது நாமும் கடவுளுக்கு ஏற்புடையவற்றை சிந்தித்து வாழும் மாந்தர்களாகிறோம். எப்போதும் இன்பத்தையும், மகிழ்வையும், வெற்றியையும் தேடி வாழ்ந்தோமெனில் நம் வாழ்வு நிறைவெய்தாது. எனவே எத்தகைய சூழலிலும் கடவுளுக்கு ஏற்புடையவற்றை எண்ணி வாழும் மனநிலையைப் பெற இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உமது எண்ணங்களைப்போல எமது எண்ணங்களை மாற்றும். உமக்கேற்ற எண்ணங்களால் எமை நிரப்பும். ஆமென்.
முதல் வாசகப் பின்னணி (எசா. 50:59)
எசாயா இரண்டாம் புத்தகம் கிறிஸ்துவின் பண்புகளை கிறிஸ்துவின் எதிர்கால நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கிறிஸ்து கடவுளின் உண்மையான ஊழியன் என்றும், கிறிஸ்துவிடம் கடவுளின் ஆவி உள்ளது என்றும், மக்களை ஆண்டவரின் நீதியின் ஒளியாக இருந்து ஆண்டவரின் மீட்பு பாதையை உலகின் கடை எல்லை வரை கொண்டு செல்லும் ஆண்டவரின் உண்மையான கீழ்ப்படிதலுள்ள ஊழியன் 'மெசியா” என்றும் கூறுகின்றார். ஆண்டவரின் பணியை செய்வதற்காக, மெசியா துன்பங்களையும் அவலமானச் சிலுவை சாவையும் ஏற்க போகிறார் என்று இறைவாக்கினர் முன்னறிவிக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (யாக். 2:8-14)
இறைவார்த்தைகளைக் கேட்கிறவர்களாய் மட்டும் இருந்து- விடாமல் அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். விசுவாசமும் செயல்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உயிர் இல்லாத உடல் போல் செயல்களில்லாத நம்பிக்கையும் “செத்ததே" என்கிறார் யாக்கோபு. சகோதர சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களையும் விசுவாசத்துடன் கூடிய செயல்பாட்டில் வழி நடத்த வேண்டும். தீர்ப்பு நாளின் போது நம் நற்செயல்களைப் பார்த்துதான் இறைவன் நமக்கு தீர்ப்பு அளிப்பார். விசுவாசமும் நற்செயல்களும் இணைந்திருந்தால் கிறிஸ்தவ வாழ்க்கை வளம் பெறும். விசுவாசமே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே வீசுவாசமாகவும் மாறு வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் விசுவாசத்தை செயல்படுத்த வேண்டும். என யாக்கோப்பு அழைப்பு விடுக்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி மாற்கு 8:27.35)
இன்றைய நற்செய்தி வாசகத்திலே மாற்கு இயேசுவின் இரண்டு பணிவாழ்க்கைகளை குறிப்பிடுகின்றார். இரண்டு கருத்துக்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாய் இருக்கின்றன. முதலாவதாக இயேசு தன்னுடைய சீடர்களிடம் “மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்' என்று கேட்கிறார். 2-ஆவதாக சீடர்களை பார்த்து “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்' என்று கேட்கிறார். சீடர்களின் குரலொலியாக பேதுரு இயேசுவிடம் “நீர் மெசியா” என்று அறிக்கையிடுகின்றார். இயேசு அதை ஏற்றுக் கொண்டு, தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று சீடர்களிடம் அறிவறுத்துகிறார். மானிடமகன் துன்பப்பட்டு மூப்பர்களாலும், தலைமைக்குருக்களாலும் சாவுக்குள்ளாக்கப்பட வேண்டும் என்கிறார்.
மறையுரை
“தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. “பசித்தவனுக்கு சோறு தரமுடியாத சமயம் இறந்தவனுக்கு மோட்சம் தராது” என்றார் விவேகானந்தர். இதே “கருத்தை தான் யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் குறிப்பிடுகிறார். நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் என்கிறார். மனிதனுக்கு பணிவிடை செய்வதை கடவுளுக்கு செய்வதாக உணர வேண்டும். நல்லவர்கள் வாழ்க்கையை பீறருக்காக அர்ப்பணிக்கிறார்கள். ஞானம் உள்ளவர்கள் தங்களை பிறருக்காக தியாகம் செய்கிறார்கள். பிறருக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது தங்கள் வாழ்வை உயிரேட்டமானதாக மாற்றிக் கொள்கிறார்கள். மனுக்குலம் முழுமைக்கும் நல்லதை செய்யவே படைக்கப்பட்டிருக்கிறோம். “பிறர் விண்ணகப்பேரின்பம் அடைய நரகத்திற்கு செல்லவும் - அஞ்சமாட்டேன்” என்றார் விவேகானந்தர். நான் மீட்படைய அனைத்தையும் உதறிவிடுவேன் என்பது நல்ல செயல். உலகம் முழுவதும் மீட்படைய தன்னுடைய மீட்பின் விலையாக தருவது கடவுளின் செயல். கடவுளின் செயலில் பங்கு கொள்ள யாக்கோபு நம்மை அழைக்கிறார். ஆயுதம் ஏந்தி அநீதியை எதிர்ப்பவன் தீவிரவாதத்தின் மேல் தூன் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகின்றான். வன்முறை தவிர்த்து உரிமைக்காகப் போரடுபவன் அகிம்சையின் மீது தான் கொண்ட நம்பிக்கையை காட்டுகின்றான். வழிபாடுகளை சாடி பகுத்தறி- விற்காய் பாடூபடூபவன் நாத்திகத்தின் மீது தான் கொண்ட நம்பிக்- கையைக் காட்டுகின்றான். இறைபுகழ்பாடி இறைபணி செய்பவன் கடவுள் மீது, தான் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகின்றான். மனிதன் எத்தகைய நம்பிக்கை கொண்டவன் கொள்கை பிடிப்பு உடையவன் என்பதை வாய்மொழி கூறாமலேயே செயல்மொழிக் காட்டி கொடுத்துவிடும். ஒருவன் நான் நல்லவன் தீயவன் என்று தன் நாவால் கூறவேண்டியதில்லை. அவனுடைய செயல்பாடுகளே உரக்க கூறிவிடும் ஒவ்வொரு மனிதனும் தான் கொண்ட நம்பிக்கையை கொள்கை பிடிப்பை தனது செயல்களின் வாயிலாக எடுத்துக் கூறுகின்றான்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கிறிஸ்து சீடர்களைப் பார்த்து மக்கள் “என்னை யாரென்று சொல்கிறார்கள்” என்று கேட்கிறார். இறைவாக்கினருள் ஒருவர் என்று கூறுகிறார்கள் எண்றனர். நவீனகால வார்த்தைகளில் கிறிஸ்துவை வர்ணிக்கும்போது சூப்பர் ஸ்டார் என்றும், சமூகநலவாதி என்றும், புரட்சியாளர் என்றும், நல்ல மனம் படைத்தவர் என்றும் கூறலாம். சீடர்களை நோக்கி நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள் என்று வினா தொடுக்கிறார். நிசப்தமான அமைதி உண்டாக்குகின்றது. சீடர்கள் பதிலளிக்கும் திறமையற்றவர்களாய் இருந்தனர். ஒவ்வொரு சீடரும் பலவாறாக. சிந்தித்துக் கொண்டிருக்கும்போது பேதுரு தெளிவான, ஆழமான, அர்த்தமான, நிறைவான பதிலை கிறிஸ்துவுக்கு அளிக்கிறார். “நீரே மெசியா. உயிருள்ள இறைவனின் மகன்” என்கிறார். ஏதோ கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றோ அல்லது பேதுரு தன்னுடைய அறிவின் திறமையாலோ, கல்வி ஞானத்தினாலோ சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் பேதுரு எளிமையான மீன்பிடித்தல் தொழில் செய்தவர். எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார் (மத்தேயு 16-16-17) என்கிறார் ஆண்டவர் கிறிஸ்து,
கடவுளின் திருமகனாகிய கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றி எசாயா இறைவாக்கினர் முன்னறிவிக்கின்றூர், “மானிடமகன் பலணறு 'துன்பப்படவும், மூப்பர்கள், தலைமை குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும், மூன்று நாள்களுக்குப் பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு சீடர்களுக்கு கற்பிக்க தொடங்கினார். மாற்கு 8:31- இல் அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியை பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஓப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்னும் உயிருள்ள வார்த்தைகள் ஆண்டவரின் துன்புறும் ஊழியனாகிய எனக்கு உரு கொடுக்க போகிறது என்கிறார் இயேசு. இறைவனின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் வாழ வேண்டியவர்களாகப் பிறந்தோம். இறைமகன் கிறிஸ்து சிலுவை சாவை மையமாக கொண்டு தந்தையின் திட்டத்திற்கு கீழ்படிந்து பிறந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்டுக் கொள்ள மனிதப் பிறப்பு எடுத்தார். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரோடு ஒன்றினைய சிலுவையை மணிமகுடமாக ஏற்றுக் கொண்டார். தன் மீது கொண்ட நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க அழைக்கின்ற இயேசு என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சீலுவலையைத் தாக்கி கொண்டு என்னைப் பின்பற்றட்டும் மாற்கு 8:34) என்று அழைப்பு விடுக்கின்றார். இயேசு மேடைப் பேச்சுக்களோடும் காரசாரமான அறிக்கைகளோடும், பிரம்மாண்டமான வாக்குறுதிகளோடும், வெற்றுப் பேச்சோடும் நின்று விடுகின்ற தலை- வரல்ல. மாறாக தம் சீடருக்கு விடுக்கின்ற அழைப்பிற்கு தானே முன்று தராணமாகக் கல்வாரி பயணத்தில் தம் சிலுவையைச் சுமந்து பிறர் பாவங்களுக்காகப் பாடுப்பட்டு, தன் இன்னுயிர் கொடுத்து நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து உயிருட்டும் உன்னத தலைவர்.
வாழ்க்கை என்பது ரோஜாப் பூக்களின் இதழ்களால் மட்டும் அலங்கரிக்கப்பட்ட மென்மையான பாதையல்ல மாறாக அந்த ரோஜா இதழ்களின் இடையே ௯ர்மையாக மறைந்திருக்கின்ற முட்களும் கொண்டது, என்பதை “என் சீடனாக இருப்பதற்கு. தம் 'சிலுவையைத் தாக்கி கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்பதன் ' மூலம் இயேசு நமக்கு அழைப்பு விடூக்கின்றார் (மத்தேயு 16:24).
இயேசு தன்னுடைய சிலுவை மரணத்தின் மூலம் மக்களை அளவில்லா விதமாக அன்பு செய்கிறார். அவலச்சிலுவை கடவுளின் அன்பை அவனி முழுவதும் வெளிப்படுத்தும் பெருமையான சின்னமாயிற்று. ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்காக தியாகங்கள் செய்து தன் அன்பர்களுக்காக பாடுபட்டு உழைத்து, வீட்டிலும், பணியிடத்திலும் நேர்மையோடும், தூய்மையோடும் பணியாற்றி இறைவார்த்தையைக் கேட்டு தியானித்து வாழ்வது தான் தம் அன்றாட சிலுவையைச் சுமப்பதாகும். அதுப்போல பிள்ளை- களும், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து ஞானத்திலும் கல்வியிலும், இறைநம்பிக்கையிலும் வளர்வதே தம் சிலுவை- யைத் தூக்கிக் கொண்டு இறைவனை பின் செல்வதாகும். வாழ்க்கைசுமக்க வேண்டும் இவ்வாறு சுமப்பதன் மூலம் கிறிஸ்துவின் சிலுவைப்பலுவை குறைப்போம் சுகமானதாக்குவோம் “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார் நான் அவமானம் அடையேன்”" (எசா. 5:7) என்று வீற நடைபோட்டு அன்றாட சிலுவைகளை சுமந்து சுகம் காண்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
+ இயேசு கிறிஸ்துவைப் போல் துன்பங்களையும் சிலுவைகளையும் கடவுளின் விருப்பம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
+ துன்பங்கள் ஆண்டவரால் அனுப்பப்படும் கொடை. விசுவாசத்தில் சிறந்தவர்களை மேலும் உறுதிப்படுத்த ஆண்டவர் நடத்தும் பரிசோதனை தான் துன்பங்கள்.
+ நம்முடைய செயலில் விசுவாசத்தை வெளிக்காட்டுவதன் மூலம் பிறமதத்தினரையும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்ள செய்தல்.
பொதுக்காலம் - இருபத்து நான்காம் ஞாயிறு
முதல் வாசகம் : எசாயா 50: 5-9
எசாயா இறைவாக்கினர் ஆண்டவரின் ஊழியனைப் பற்றி எழுதிய மூன்றாம் கவிதையே இன்றைய வாசகம். இறைவார்த்தையை எடுத்துரைக்கும் பணியை ஏற்றுக்கொண்ட இவ்வூழியன், இப்பணியில் வரும் எத்தகைய இன்னல்களையும் தாங்க உறுதிபூண்டுள்ளதையும், இறைவனில் அவரது முழு நம்பிக்கையையும் சித்திரிக்கிறது இக்கவிதை. நமதாண்டவரின் பாடுகளின் எதிரொலியை இங்குக் கேட்கலாம்.
ஊழியனின் அழைப்பு
இறைவார்த்தை ஊழியனுக்கு அளிக்கப்படுகிறது. “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்” (எரே. 1 : 9) தான் கற்றதை எடுத்துரைக்க அவரது நாவானது கட்டவிழ்க்கப்படுகிறது. இறை வார்த்தையைக் கூர்ந்து கேட்க ஊழியனின் செவிப்புலனைத் தூண்டுகிறார் இறைவன். இறைவனுக்கும் ஊழியனுக்கும் இடையே உள்ள உறவு ஆசிரியர் மாணவர்க்கு இடையே உள்ள உறவை ஒத்தது. இஸ்ரயேல் இனம் இன்னல்களுக்கிடையே களைத்துச் சோர்வடைந்து நலிந்து காணப்பட்டது. இவர்களுக்கு நம்பிக்கையூட்டவே இறைவாக்கு வழங்கப்பட்டது (40 : 29 - 31). இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதை அறிவிக்கும் பணிக்கு ஒவ்வொரு கிறிஸ்தவனையும் ஆண்டவர் அழைத்துள்ளார் என்பதை உணர்கின்றேனா?
ஊழியனின் துன்பங்கள்
இறைவனின் வார்த்தைகள் இடித்துத் தகர்த்து, அழித்து ஒழித்து, கவிழ்த்து வீழ்த்தி, கட்டி உயர்த்தி, நட்டு வைக்கும் ஆற்றல் கொண்டவை (எரே. 1: 10). இருபக்கமும் கூரான வாளைப்போல் மூளை மூட்டெல்லாம் சென்று அனைத்தையும் சரி செய்யக்கூடியவை. எனவே கசப்பான உண்மைகளை ஊழியன் கூறியபோது, அவரை எதிர்த்தவர் பலர்; இன்னல் புரிந்தவர் பலர். ஊழியனோ பொறுமையின் சிகரம்:
“அடிப்போர்க்கு என் முதுகையும்
தாடியைப் பிடுங்குவோருக்கு என்
தாடையையும் ஒப்புவித்தேன்;
நிந்தனை செய்வோர்க்கும்
காறி உமிழ்வோர்க்கும்
என் முகத்தை மறைக்கவில்லை” (6).
இந்த அவமானச் செயல்கள் அனைத்தையும் ஊழியன் ஏற்றுக் கொள்ளுகிறான். எசாயா வருணிக்கும் ஊழியன் நமதாண்டவரின் முன் அடையாளம். துன்பமின்றி மீட்பில்லை என்ற புதிய பாடம் பழைய ஏற்பாட்டிலும் இடம் பெறுவதைக் காண்கிறோம். மகிமையின் மெசியாவை எதிர்நோக்கியிருந்த இஸ்ரயேல் இனம், துன்புறும் மெசியாவை எதிர்பார்க்க வேண்டுமென்று முன்னறிவிக்கப்படுகிறது.
ஊழியனின் உறுதி
இஸ்ரயேலரின் உடன்படிக்கைக் கடவுள், பிரமாணிக்கம் தவறாதவர்; தன் வாக்கை மீறாதவர். தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியவர் தன்னைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் இவ்வூழியன் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுகிறான். “கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார்; ஆகையால் நான் கலக்கம் கொள்ளேன் ” (7). எனவே எதிர்ப்புகளுக்கிடையிலும் இறைப் பிரசன்னத்தை உணர்ந்தான் ஊழியன். இறைவன் துணை நிற்பதால் தன்னில் குற்றம் காணக் கூடியவர் யார் என்று சவால்விடுகிறான் (7 - 8).
இறைவார்த்தையை எடுத்துரைக்கும் அனைவரின் அனுபவத்தையும் இக்கவிதையில் காணலாம். ஒப்பற்ற இறைவாக்கினர் இயேசுவின் பாடுகளின் எதிரொலி இக்கவிதை. கிறிஸ்தவனின் கடமை இறை வார்த்தைக்குச் சான்று கூறி, அதை அறிக்கையிடுவதாகும். இப்பணியில் இறைவன் எமக்குத் துணை நிற்கிறார்; எனவே அஞ்சாது துன்பத்தின் நடுவிலும் நாம் இறைவனது குரலாக விளங்க வேண்டும்.
என் சார்பில் தீர்ப்பு வழுங்குயவர் அருகில் நிற்கிறார்: எனக்கு எதிராய் வழக்குத் தொடுப்பவன் எவன்?
இரண்டாம் வாசகம்: யாக். 2:14-18
விசுவாசம், செயல்கள் ஆகிய இரண்டில் எது முக்கியம்? பவுலின் மடல்களை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், விசுவாசமே முக்கியம் என்பது போல் தோன்றும்; ஆனால் யாக்கோபோ நற்செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தோன் றுகிறது. ஆழ்ந்து நோக்கும்பொழுது விசுவாசத்தின் வெளிப்பாடு நற்செயல்களாக மலர வேண்டும் என்ற உண்மையை உணர முடியும்.
உயிருள்ள விசுவாசம்
இறைவனது வெளிப்பாட்டையும், அவரது மீட்புச் செயலையும் இறைவன் அறிவித்ததால் முழுமையாய் ஏற்றுக்கொள்ளுவதே விசுவாசம். உள் இயல்புகளின் வெளிப்பாடே செயல்களாகும். எமது விசுவாசமாகிய உள்ளார்ந்த ஆன்மீக அர்ப்பணம் செயல்களில் வெளிப்பட்டாக வேண்டும். விசுவாசமும் நற்செயல்களும் தொடர்புடையவை. “அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்” (1 யோ. 2: 4). கிறிஸ்தவர்கள் ஆண்டவரின் அன்புக் கட்டளையை அனுசரிக்கக் கடமைப்பட்டுள்ளனர். பிறருக்கு இரக்கம் காட்டுவது, இல்லா தவருடன் தம் பொருள்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவை அன்பின் வெளிப்பாடாகும். “போதிய உணவோ, அன்றாட உடையோ இல்லாத சகோதர சகோதரி யாரேனும் இருந்தால், தேவையானது ஒன்றையும் கொடாமல் ஒருவன் அவர்களைப் பார்த்துச் “சுகமாய் போய் வாருங்கள்; குளிர் காய்ந்துகொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்” (16) என்பானாகில், அவனிடம் உண்மையான அன்பில்லை..' ஆண்டவரின் அன்புக் கட்டளையை அவன் கடைப்பிடிப்பதில்லை. அவரது கட்டளையைக் கடைப்பிடிக்காது, அவரை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அவர் கூறிய அனைத்யைம் விசுவசிக்கிறேன் என்று கூறுவது வெளி வேடமாகும். “நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் '' (1 யோ. 3 : 18).
நற்செயல்களால் தான் நமது கிறிஸ்தவ வாழ்வு ஒளிர வேண்டுமென்பது நமதாண்டவரின் போதனை. “மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக.” தீர்வு நாளில் “விசுவாசப் பிரமாணம் தெரியுமா? அனைத்தையும் விசுவசித்தாயா?'” என்பது அன்று கேள்வி. கம் ஆண்டவனின் பிள்ளை என்ற விசுவாச மறையுண்மையின் அடிப்படையில் பசியாயிருந்தவனுக்கு உணவளித்தாயா ? ஆடையற்றிருந்த வனுக்கு ஆடையளித்தாயா? என்பதே கேள்வியாகும். இப்பதிலின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்படும். “அவர் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு தருவார்." கோயிலுக்குச் செல்வது, குடும்ப செபம் சொல்லுவது, திருவருட் சாதனங்களைப் பெறுவது ஆகிய அனைத்தும் நம் விசுவாசத்தை அறிக்கையிடும் பக்தி முயற்சிகள்தாம். ஆனால் இது நற்செயல்களுக்கு இட்டுச் செல்லாவிடின், அது வேரற்ற விசுவாசம். நமது செயலைத் தொடாத, நம் வாழ்வை மாற்றாத விசுவாசம், செத்த விசுவாசம்; தேவையற்ற விசுவாசம். என் விசுவாசம் எனது நற்செயல்களில் வெளிப்படுகிறதா?
இரண்டும் தேவை
இரண்டில் ஒன்றிருந்தால்போதும் என்று கூறுவது இதயத்தையும் இரத்தத்தையும் கூறுபோடுவதற்குச் சமம். எனவே '“ஒருவனிடம் விசுவாசம் உள்ளது; மற்றவனிடம் நற்செயல்கள் உள்ளன. இரண்டும் திருச்சபையில் இடம் பெற்றுவிட்டன. இது போதும் ' என்ற கூற்று பொருந்தாது. செயல்கள் அற்ற விசுவாசம் செத்த விசுவாசம்; அப்படியே விசுவாசத்தில் வேரூன்றாத செயல்கள் நற்செயல்கள் ஆகா. சுய விளம்பரத்திற்காக, பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்கள், விசுவாசத்தில் வேரூன்றாத செயல்கள். இவற்றிற்குப் பலன் கையிலே கிடைத்துவிட்டது. நித்திய வாழ்வுக்கு இவற்றால் பயன் எதுவும் இல்லை. எனவே விசுவாசமும் நற்செயல்களும் இரு வழிகள்; ஒரு நாயணத்தின் இரு பக்கங்கள்.
விசுவாசம் செயலோடு கூடியதாயில்லாவிட்டால் இது தன்னிலே உயிரற்றதாகும்.
நற்செய்தி: மாற்கு 8:27-35
ஆண்டவரின் புதுமைகளைக் கண்டும், போதனையைக் கேட்டும் பலரும் வியப்படைந்தாலும், மெசியாவுக்குரிய ஆடம்பரமும், அந்நிய ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஆர்வமும் இவரிடம் இல்லாததால், இவரை ஒரு சாதாரண இறைவாக்கினராகவே மக்கள் எடைபோட்டனர். இந்நிலையில் தான் தன் நற்செய்தியின் மையப் பகுதியில் இயேசுவை மெசியாவாக- பாடுகள் பல பட்டுத் துன்புறும் மெசியாவாக அறிமுகப்படுத்துகிறார் மாற்கு.
கேள்வியும் பதிலும்
“என்னை மக்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?" இது இயேசுவின் கேள்வி. “சிலர் திருமுழுக்கு யோவான் என்றும், சிலர் எலியா என்றும், சிலர் இறைவாக்கினர்களில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் '' -இது மக்களின் மதிப்பீடு, பேதுருவோ, இயேசுவை மெசியா என்று அழைக்கிறார் (28 - 29). இயேசு இதை ஆமோதிக்கிறார். இன்று இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிராதவர்கள் இல்லை எனலாம். எனினும் அவர்கள், அவரை மற்ற சமயத் தலைவர்கள், புரட்சிப் போதகர்கள், புதுமைப் புனிதர்கள் ஆகியோரின் வரிசையில் வைத்துத்தான் காண்கிறார்களே தவிர, அவரை திருப்பொழிவு செய்யப்பட்டவராய், உலக மீட்பராய், தெய்வத் திருமகனாய் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இந்நிலையில்தான் இயேசு இன்று நம்மைப் பார்த்து, “மற்றவர்களின் மதிப்பீடு இருக்கட்டும், நீங்கள் என்னை என்னவென்று சொல்லு கிறீர்கள்?" என்று கேட்கிறார். பேதுருவைப் போல நாமும் விசுவாசக் கண்கொண்டு “நீர் மெசியா; தெய்வத் திருமகன் என்று கூறுவோமா?
“சோதியே! நந்தாச் சுகவடிவே! தூ வெளியே!
ஆதியே நின்னை அறிய வைத்தால் ஆகாதோ ' (தாயு)
பாடுகள் பற்றிய அறிவிப்பு
மெசியா என்று இயேசுவை ஏற்றுக்கொண்டது பாராட்டுதற்குரியதுதான். எனினும் பேதுருவும் ஏனையோரைப் போலவே, இம்மெசியா அந்நியரை அடக்கி, இஸ்ரயேலின் அரசை நிறுவுவார் என்றே எதிர்பார்த்தார். ஆனால் பாடுகள் பல பட்டு, யூதத் தலைவர்களாலும் மறைநூல் வல்லுநராலும் நிராகரிக்கப்பட்டு, தான் மரிக்கப் போவதாக இயேசு கூறியதை பேதுருவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே பேதுரு ஆண்டவரைத் தனியே அழைத்துச் சென்று கடிந்துகொண்டார். உலக அரசில் ஆசை காட்டி, கன் குறிக்கோளுக்குத் தடையாயிருந்த அலகையை அதட்டி “அகன்று போ, சாத்தானே என்றது போல (மத். 4 : 10), தன் பாடுகளைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறிய பேதுருவையும் சாத்தானே என்று சாடுகிறார். பாடுகளின் வழியாகவே மீட்பு என்பதை வலியுறுத்துகிறார். மனிதனது கருத்துக்கள், கடவுளுடைய கருத்துக்கள் அல்ல என்பதைத் தெளிவு படுத்துகிறார்.
குருவின் வழியே சீடர்களும்
தன்னைப் போல் சீடர்களும் விளங்கவேண்டும் என்பதையே, “என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்தொடாட்டும் என்கிறார். “தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான்; என்பொருட்டு தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான் என்றார் (34 : 35). எனவே இயேசுவின் சீடனாய் இருக்க மூன்று நிபந்தனைகள்: தான், தன்னலம் என்பதை மறத்து, நாம் யாருடைய சீடராயிருக்க விரும்புகி றோமோ அவரையே மனதில் கொள்ளவேண்டும்; சோதனைகளாகிய சிலுவையைச் சுமக்க வேண்டும். தனக்காகத் தன் உயிரைக் காப்பதைவிட இயேசுவுக்காக அதை இழக்கவும் தயாராயிருக்க வேண்டும். இவை கடுமையான நிபந்தனைகள் தாம். ஆனால் உண்மைச் சீடனாக வாழ விரும்புபவன் இந்நிபந்தனைகளை ஏற்றுத்தான் ஆகவேண்டும். சீடனுக்குரிய அம்சங்கள் என் வாழ்வில் இடம் பெற்றுள்ளனவா?
என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.