மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 23ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



உள்ளம் திறக்கப்படட்டும்

உயிர் இல்லா உடல் பிணம், உயிர் இருந்தும் ஐம்புலன்கள் செயல்படாவிட்டால் அவர்கள் ஜடம், ஐம்புலன்களை அதன் நோக்கில் விடுபவர் மிருகம், ஐம்புலன்களைக் கட்டி, நேர்படுத்தி, செவ்வனே பயன்படுத்துபவர் மனிதர். கண்ணிருந்தும் பார்க்க இயலவில்லையே, காதிருந்தும் கேட்க இயலவில்லையே என ஏங்கும் மனிதர்கள் ஏராளம். கண்ணிருந்தும் பார்க்காமல், காதிருந்தும் கேட்காமல் இருப்போர் எண்ணிக்கை அதைவிட அதிகம். ஐம்புலன்களைக் கொடையாகத் தந்து அதன் வழியாக இறைத் தன்மையை அடைய அழைப்பு விடுப்பது இன்றைய வாசகங்கள்.

பார்வையற்ற தன்மையையும், கேட்க இயலாத நிலையையும், பேச முடியாத தன்மையையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பிறப்பினாலோ, விபத்தினாலே இக்குறைபாடு ஏற்படுதல், மற்றொன்று பேச , பார்க்க, கேட்க முடிந்தும் தனக்குத் தேவையானதையும், பிடித்ததையும் மட்டும் பேசுதலும், பார்த்தாலும், கேட்டலும் ஆகும்.

முதல் வகைக் குறைபாடு உடையோர் அதிலிருந்து விடுபட அதிக ஆர்வமுடையவர்களாயும், அதற்காக இறைவனிடம் மன்றாடுபவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் இறைவனின் வல்லமை எளிதில் செயல்படும். இரண்டாம் வகையானவரோ அதிலிருந்து எந்த வகையிலாவது மாறி விடுவோமோ என்று அஞ்சி தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பர். இவர்கள்தான் உள்ளத்தில் உறுதியற்றவர்கள்.

உள்ளத்தில் உறுதியற்ற இவர்கள் திருத்தூதர் கூறுவதுபோல இனம், மொழி, வசதி, அறிவு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரித்துப் பார்ப்பர். இத்தகைய தரம் பிரிப்பது என்பது அச்சத்தால், தன்னம்பிக்கை இன்மையால், தன்னிலை அறியாததால் நிகழ்வதாகும். இவ்வகையான உள்ளத்தினரை நோக்கி ஆண்டவர் தரும் கட்டளை 'திறக்கப்படு' என்பதாகும். அதாவது உள்ளம் திறக்கப்படட்டும் என்று கட்டளையிடுகிறார்.

ஆண்டவர் இயேசு இனம், மொழி, வசதி, அறிவு, பால் என்று எந்தவித வேறுபாடுகளும் பார்க்காமல் அனைவரையும் சமமாகப் பார்த்து, குணமளித்து, வாழ்வித்து, வழிகாட்டித் தன் இறைத்தன்மையை உலகறியக் காட்டுகிறார்.

வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும், மனித மனப் பிளவுகளும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. இயற்கையால் நாம் அனைவரும் மனித நேயத்தோடு படைக்கப்பட்டவர்கள். அந்நிலையை நாம் மீண்டும் அடைய இயற்கையான, செயற்கையான குறைபாடுகள் நீங்க நமக்குத் தேவையான அடிப்படை குணம் அன்பு ஆகும். அன்பு என்கின்ற உயரிய பண்பில் நாம் வளரும்போது பாலை நிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும், வறண்ட பாலை நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும், கனல் கக்கும் மணற்பரப்பு நீர் தடாகம் ஆகும், தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும். ஐம்புலன்களை ஒருங்கிணைப்போம். கொடையாகப் பெறப்பட்ட சக்திகளை இறை மகிமைக்காகப் பயன்படுத்துவோம். பாரினில் நாம் அனைவரும் இறைச்சாயல்கள் என்பதில் உறுதி பெற்று இறைவனின் பிள்ளைகளாகப் பாகுபாடும், குறைகளுமற்ற வாழ்வு வாழ்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஊனம் மறையட்டும்

இன்றைய நற்செய்தியிலே காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணமாக்கும் இயேசுவை நாம் சந்திக்கின்றோம். புதுமை நடந்ததும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கின்றாரே! என்று பேசிக்கொண்டனர் (மாற் 7:37).

அன்று புதுமைகள் செய்த இயேசு, இன்றும் நம் நடுவே வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்; புதுமைகள் செய்து கொண்டுதானிருக்கின்றார்.

இதற்கு ஓர் உதாரணம். தஞ்சை மறைமாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமம். அக்கிராமத்திலே தாயொருத்திக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது! ஆண்டுகள் பத்து உருண்டோடியும் சிறுவன் பேசவில்லை! எத்தனையோ மருத்துவ முறைகள்; பேச்சுப் பயிற்சிகள் எத்தனையோ! தஞ்சை, சென்னை போன்ற இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகள்! எத்தனையோ கோயில்கள்! பாவம் அந்தச் சிறுவன் ! ஓரிரு வார்த்தைகள் கூட அவனால் பேச முடியவில்லை !

கடைசியாக அந்தச் சிறுவனின் பெற்றோருடைய கண்கள் வேளாங்கண்ணியை நோக்கித் திரும்பின. வேளாங்கண்ணிக்குச் சென்றனர். அவர்கள், மாதாவே ! மாதர்குல மாணிக்கமே ! எங்கள் குழந்தை பேச வேண்டும். உலகின் ஒளியைக் கையிலேந்தி பாருக்கெல்லாம் அருள்புரியும் அன்பு அன்னையே, அருள்புரியும் தாயே! என மெழுகென உருகி மன்றாடினர். அன்று இரவு அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நேரம்! சிறுவன் திடீரென எழுந்து, அம்மா! அம்மா! என்று அலறிக்கொண்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு அன்னையின் பேராலயத்தை நோக்கி ஓடினான். பெற்றோர் வேளாங்கண்ணியில் ஒரு வாரம் தங்கி ஏழைகளுக்கு உணவளித்துச் சென்றனர்.

நம் ஆண்டவராம் இயேசு இன்றும் புதுமைகள் செய்துகொண்டிருக்கின்றார் என்ற உண்மை நம்மை திடப்படுத்தவேண்டும் (முதல் வாசகம்). உங்களில் ஊனம் மறைய வேண்டுமா? பாலை நிலம் சோலை நிலமாக வேண்டுமா ? மனிதம் புனிதமாக வேண்டுமா? நீங்கள் நம்பிக்கையில் செல்வராகுங்கள் (இரண்டாம் வாசகம்); அப்போது நீங்கள் தேடுவது உங்கள் வீடு தேடிவரும் என்கின்றார் இயேசு.

மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

”திறக்கப்படு”

ஒரு சிறுவன், "எனது தாத்தாவுக்கு நான்கு கைகளும் மூன்று காதுகளும் உள்ளன என்றான். அவன் குறிப்பிட்ட நான்கு கைகள்: வலக்கை, இடக்கை, வழுக்கை, பொக்கை. அவன் குறிப்பிட்ட மூன்று காதுகள் : வலக்காது, இடக்காது. கேட்காது.

வயதானவர்களுக்குத் தலை வழுக்கையாகவும் வாய் பொக்கையாகவும் காது மந்தமாகவும் மாறுவது இயல்பு. ஆனால் ஒரு சிலருக்குக் காது இருந்தும் அவர்கள் கேளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. கல்வி கேள்வியால், ஆன்றோர்களுடைய அருள்வாக்கால் துளைக்கப்படாத செவிகள் செவிட்டுத் தன்மையுடையன.

'கேட்பினும் கேளாத் தகையவே
கேள்வியால் தோக்கப்படாதசெவி" (குறள் 418)

கிறிஸ்து இம்மையில் வாழ்ந்தபோது விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் போதித்தார். ஆனால் அவருடைய போதனையை மக்கள் உணரவில்லை; உணர்ந்து மனம் மாறவில்லை. அவருடைய போதனை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. எனவேதான் அவர் இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி அம்மக்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்: “இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டனர்." (மத் 13:15)

பாவங்களிலெல்லாம் கொடிய பாவம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டாலும் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வதாகும், எனவேதான், நீங்கள் இன்று கடவுளுடைய குரலைக் கேட்டால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறது. திருப்பாடல் 95:8.

கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவும் அவருடைய புகழை நாவால் அறிக்கையிடவும் இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் மெசியாவின் காலத்தில் பார்வையற்றோர் பார்ப்பர்; காது கேளாதவர் கேட்பர் என அறிவிக்கின்றது (எசா 35:4-7). இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி, தாமே வரவிருக்கும் மெசியா என்பதற்குச் சான்று அளித்தார் கிறிஸ்து; அதாவது, பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர் (லூக் 7:22).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணப்படுத்துகிறார், அவருக்குக் குணமளிக்கும் முன், அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைக்கிறார்; தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்; பெருமூச்சுவிடுகிறார். அதன் பிறகு, "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு' என்று கூறி அவரைக் கேட்கும்படியும் பேசும்படியும் செய்கிறார்,

கிறிஸ்துவின் இப்பல்வேறு செயல்கள் அருளடையாளத் தன்மை கொண்டவை, அருள் அடையாளங்கள் நம்பிக்கையின் அருள் அடையாளங்கள், அருள் அடையாளங்கள் பயனளிக்க வேண்டுமென்றால் அதற்கு நம்பிக்கை முன்னதாகவே தேவைப் படுகிறது. எனவேதான் இயேசு கிறிஸ்து பல்வேறு செயல்களின் மூலம் படிப்படியாக அம்மனிதரிடத்தில் நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அவரைக் குணப்படுத்துகிறார்,

கிறிஸ்துவின் அதே வழிமுறையைத்தான் திருச்சபையும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு அருளடையாளத்திலும் முதலில் அருள்வாக்கு மூலமாக நமது நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அருளடையாளச் சடங்குகளை நிறைவேற்றுகிறது. திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முடிந்தபின்னே நற்கருணை வழிபாடு தொடங்குகிறது.

திருமுழுக்குப் பெறுவோரின் காதையும் வாயையும் குரு தொட்டுப் பின்வருமாறு கூறுகிறார் ! *செவிடர் கேட்கவும் ஊமையர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீர் விரைவில் அவரது வார்த்தையைக் காதால் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் செய்தருள்வாராக."

நாம் கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவேண்டும், ஏனெனில் கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகும், "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ, 10:17), கேள்வியால் நாம் பெற்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். "நாங்கள் கடதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" (திப 4:20) என்று துணிவுடன் கூறிய பேதுருவின் ஆர்வம் நம்மை ஆட்கொள்ள வேண்டும்.

கடவுளின் குரலைக் கேட்பவர்கள் மற்றவர்களின், குறிப்பாக, நலிவடைந்தவர்களின் குரலைக் கேட்பார்கள், மலையில் ஒருவர் பிறந்தநாள் 'கேக்' வெட்டுகிறார். அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரிடம் என்ன திரைப்படப்பாடல் பாடுவார்கள் ? "மலையோரம் வீசும் காற்று, மனசோட பாடும்பாட்டு கேக்குதா, கேக்குதா!" 'கேக்குதா' என்ற சொல் காதால் 'கேக்கு தா' என்ற பொருளையும் நீங்கள் வெட்டுகிற கேக்கைத் தாருங்கள் 'கேக்குத் தா' என்ற பொருளையும் கொண்டுள்ளது ஏழைகளின் அபயக்குரல் நமக்குக் கேட்குதா?


"மாண்டவர்களுக்காக அழாதே
கூனிக் குறுகி ஏழ்மையில் இருக்கிறானே
அந்த மனிதனுக்காக இரங்கு
வாய்பேச இயலாத அந்தக் கொத்தடிமைகள்
உலகின் வேதனையைக் காண்கிறார்கள்;
தவறுகள் அவர்கள் கண்ணுக்குப் படுகிறது
ஆனால் அவர்கள் வாய் திறக்க முடியவில்லை
அந்தத் துணிச்சலும் அவர்களுக்கில்லை"
(திருமதி இந்திராகாந்தியைக் கவர்ந்த கவிதை)

துன்புறுவோரின் அபயக்குரலைக் கேட்டு ஆவன செய்யவில்லை என்றால், நாம் காது இருந்தும் கேளாத செவிடர்கள்!

நமது காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறே தமது பார்வையும் நேரிய பார்வையாக இருக்க வேண்டும். பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழைகளை வேறொருவிதமாகவும் பார்த்து. ஒருதலைச் சார்பாக நாம் நடக்காமல் இருக்கும்படி இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மை எச்சரிக்கிறார் புனித யாக்கோபு.

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் புதுமையைக் கண்ட மக்கள் "இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்து வருகிறார்" (மாற் 7:37) என்று வியப்படைந்தனர். கடவுள் உலகத்தைப் படைத்தபோது தாம் படைத்ததை உற்று நோக்கினார், அவர் படைத்தவை மிகவும் நன்றாக இருந்தன (தொநூ 1:31). இந்த முதல் படைப்பு பாவத்தால் சீரழிந்த நிலையில் கடவுள் தம் மகன் கிறிஸ்து வழியாக மீண்டும் உலகைப் படைக்கிறார். இப்புதுப்படைப்பு முதல் படைப்பை விடச் சிறந்ததாக உள்ளது என்ற ஆழமான இறையியல் உண்மையையும் இப்புதுமை உணர்த்துகிறது.

திருமுழுக்கினால் புதுப்படைப்பாக மாறியுள்ள நாம். கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்போம். அதன் எதிரொலியாக ஏழைகளின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் கேட்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

செவிடாய், ஊமையாய்...

நாற்பது ஆண்டு மண வாழ்வு கண்ட அந்தக்‌ கணவன்‌ மனைவியிடையே ஒரு நாள்‌ கூட சண்டையில்லை. சச்சரவு இல்லை, ஒருவர்‌ ஒருவரோடு ஒர்‌ உரசல்‌ இல்லை, உறவு முறிவு இல்லை. உரக்கக்‌ கத்திய நினைவு இல்லை. இப்படியும்‌ மணவாழ்க்கை சாத்தியமா? என்று உங்கள்‌ புருவத்தை உயர்த்துகிறீர்களா? அப்படி அவர்கள்‌ வாழ்ந்தது உண்மைதான்‌. அதற்குக்‌ காரணம்‌ அவர்களில்‌ ஒருவர்‌ ஊமை. இன்னொருவர்‌ செவிடு. இது கதை என்ற அளவில்‌ வியக்க வைக்கும்‌!

“உன்னைத்‌ தாழ்த்திப்‌ பேசும்போது ஊமையாயிரு. உயர்த்திப்பேசும்போது செவிடனாய்‌ இரு. வாழ்வில்‌ எளிதில்‌ வெற்றி பெறுவாய்‌”. பொன்மொழி மெய்சிலிர்க்கச்‌ செய்யும்‌.

அதற்காக உடலளவில்‌ இந்த ஊனங்களை விரும்பி ஏற்றுக்‌ கொள்ள முடியுமா? கொஞ்சம்‌ கற்பனை செய்து பாருங்கள்‌. என்‌ மறையுரையைக்‌ கேட்கும்‌ உங்களில்‌ ஒருவர்‌ கேள்விப்‌ புலனற்று இருக்கிறார்‌. என்‌ உதடுகளின்‌ அசைவுகளை மட்டுமே பார்க்க முடிகிறது. உரைக்கின்ற ஒரு சொல்‌ கூட அவருக்கு காதில்‌ நுழையவில்லை. சுற்றிலும்‌ இருப்பவர்கள்‌ என்‌ மறையுரையைக்‌ கேட்டு ரசிப்பதை, வியப்பதை, சில சமயங்களில்‌ சிரிப்பதை, மகிழ்வதைப்‌ பார்க்கிறார்‌. இந்த உணர்வுகளில்‌ எதையும்‌ அவரால் வெளிப்படுத்த இயலவில்லை. தன்‌ மீதே ஒரு வித வெறுப்பு, எரிச்சல்‌, தனிமைப்‌ படுத்தப்படும்‌ விரக்தி...

ஒரு வகையில்‌ சொல்லப்போனால்‌ செவிடாக இருப்பது குருடாக இருப்பதைவிடக்‌ கொடுமையானது. கண்‌ பார்வை இழந்தவர்‌ மீது பிறருக்கு இரக்கம்‌ வரும்‌ அனுதாபம்‌ வரும்‌. காதுகேளாதவர்களோ பிறரின்‌ ஏளனத்துக்கும்‌ எரிச்சலுக்கும்‌ ஏன்‌ நகைப்புக்குமே உரியவர்களாய்‌ இருப்பார்கள்‌.

ஹெலன்‌ கெல்லர்‌ காது கேளாதவர்‌. அதே நேரத்தில்‌ பார்வை இழந்தவர்‌. “குருடாக இருப்பது செவிடாக இருப்பதை விட மோசமானது -.. எனப்‌ பலர்‌ கருதுகின்றனர்‌. என்னிடம்‌ இரண்டு ஊனங்களும்‌ இருக்கின்றன. ஆனால்‌ காது கேளாமல்‌ இருக்கின்றவருக்குத்தான்‌ அன்றாட வாழ்வில்‌ :பல கதவுகள்‌ அடைக்கப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, உரையாடல்‌ அனைத்தும்‌ எட்டாத கனியாகி விடுகின்றன. இறுதியில்‌ கிட்டுவது புறக்கணிப்பும்‌ தனிமையுமாகும்‌”” என்று அவர்‌ கூறுகிறார்‌.

காது கேளாதவராக இருப்பது மிக மோசமானது. அதோடு. சேர்ந்து வாய்‌ பேச இயலாதவராக -திக்கிப்‌ பேசுபவராக இருந்தாலோ வாழ்வே நரகமாகிவிடும்‌. அதனால்தான்‌ வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு அத்தகையவரை நோக்கி “எப்பத்தா” அதாவது திறக்கப்படு' (மார்க்‌. 7:34) என்றாரா இயேசு?

இயேசுவின்‌ குணப்படுத்தும்‌ இந்த ஊழியம்‌ இறைவாக்கினர்‌ எசாயா 35:4-7, 29:18, 61:1-3 போன்ற பழைய ஏற்பாட்டு பகுதிகளில்‌ முன்னுரைத்த மெசியாவின்‌ பொற்கால நிறைவாகும்‌. “உள்ளத்தில்‌ உறுதியற்றவர்களே, அநீதிக்குப்‌ பழிவாங்கும்‌ கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்‌. அப்போது பார்வையற்றோரின்‌ கண்கள்‌ பார்க்கும்‌. காது கேளாதோரின்‌ செவிகள்‌ கேட்கும்‌ அப்பொழுது கால்‌ ஊனமுற்றோர்‌ மான்‌ போல்‌ துள்ளிக்குதிப்பர்‌'.

அடக்குமுறையும்‌ ஒடுக்குதலும்‌ மேலோங்கி நிற்கும்‌ எங்கும்‌ மக்கள்‌ ஊமையாக்கப்படுகிறார்கள்‌. செவிடாக்கப்படுகிறார்கள்‌. குருடாக்கப்படுகிறார்கள்‌. முடமாக்கப்படுகிறார்கள்‌. உடலளவில்‌. ஊமையாகவும்‌, செவிடாகவும்‌ குருடாகவும்‌ முடமாகவும்‌ இருப்பதைவிட இது கடினமானது. மனிதனை மனிதனாக நடத்தாத அவலநிலை! இந்தப்‌ பின்னணியில்தான்‌ மெசியா காலத்தில்‌ வரப்போகும்‌ மீட்புப்‌ பற்றி எடுத்துரைக்கிறார்‌. எசாயா. அந்த அறிவிப்பில்‌ மகிழ்ச்சியும்‌ உற்சாகம்‌ கலந்த நம்பிக்கையும்‌ தொனிக்கிறது. ஏசாயா 35:5, மார்க்‌ 7:37 இவற்றில்‌ உள்ள ஒப்புமை இதை விளக்கும்‌. எனவே எசாயா முன்னுரைத்த மெசியாவின்‌ காலம்‌ இயேசுவின்‌ காலமே என்பது மார்க்‌ உணர்த்த விரும்பும்‌ உண்மை.

காதும்‌ நாவும்‌ ஊனத்துக்கு ஆளாகிய நிலையில்‌ அவர்கள்‌ நமது பரிதாபத்துக்கோ அனுதாபத்துக்கோ உரியவர்கள்‌ அல்ல. நமது நேசக்கரங்களின்‌ அரவணைப்புக்குரியவர்கள்‌. மறைந்த மாமேதை திருத்தந்தை 2ம்‌ அருள்‌ சின்னப்பர்‌ குறிப்பிடுவது போல “அன்பு எனும்‌ மொழியை ஊமையர்களாலும்‌ பேச முடியும்‌. செவிடர்களாலும்‌ கேட்க முடியும்‌. அதனால்‌ அன்பு மட்டுமல்ல, மனித வலுவின்மையில்‌ தன்‌ வல்லமை (2 கொரி. 12:9) விளங்கச்‌ செய்கிறார்‌.

செவிடனும்‌ திக்குவாயனுமாகிய அந்த மனிதன்‌, செவியிருந்தும்‌ கேளாத, வாயிருந்தும்‌ பேசாத இன்றையக்‌ கிறிஸ்தவனின்‌ அடையாளம்‌.

“.. திருவருட்சாதனங்களின்‌ மூலமாக இயேசு இடையறாது தொட்டுக்‌ குணப்படுத்திக்‌ கொண்டு வருகிறார்‌.” (கத்தோலிக்கத்‌ திருச்சபையின்‌ மறைக்கல்வி எண்‌ 1504). அதனால்தான்‌ திருமுழுக்கின்‌ போது குருவானவர்‌ நம்‌ காதுகளைத்‌ தொட்டு அவற்றை இறைவார்த்தையைக்‌ கேட்கத்‌ திறந்துவிடும்படியாகவும்‌, நம்‌ வாயைத்‌ தொட்டு இறைவார்த்தையால்‌ பெற்ற நம்பிக்கையை அறிக்கையிடத்‌ திறந்துவிடும்படியாகவும்‌ இறைவனை நோக்கி மன்றாடுகிறார்‌.

இறையாட்சியின்‌ பொற்காலம்‌ மலர வேண்டுமா? நமது போலி நிலைப்பாடுகள்‌ ஒழிய வேண்டும்‌ என்ற திருத்தூதர்‌ யாக்கோபின்‌ குரலுக்கு செவி திறப்போம்‌. ஊனமுற்றோர்‌, வறியவர்‌, அடிப்படைத்‌ தேவைகள்‌ நிறைவு காணாமல்‌ அல்லல்‌ படுவோர்‌ மனித மாண்பு மறுக்கப்படுவோர்‌ ஆகியோர்‌ மேம்பாடுகாண இயேசுவின்‌ சாட்சிகளாய்‌ வாய்‌ திறப்போம்‌ (யாக்‌. 2:5).

சமூக வாழ்வில்‌ மட்டுமல்ல, இறை உறவில்‌ - இறை உறவின்‌ வெளிப்பாடான செப வாழ்வில்‌ ஈடுபாடு இழந்தவர்கள்‌ எல்லாரும்‌ ஆன்மீக அளவில்‌ ஊனமுற்றவர்களே! கடவுளிடம்‌ பேசும்‌ திறனற்றவர்கள்‌, கடவுள்‌ பேசுவதைக்‌ கேட்கும்‌ திறனற்றவர்கள்‌. வாழ்க்கையின்‌ எத்தனை தளங்களில்‌ நாம்‌ திறக்கப்பட வேண்டியவர்கள்‌!

செல்வத்துள்‌ செல்வம்‌ செவிச்செல்வம்‌. இது வள்ளுவர்‌ வாக்கு. வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிட்டு இயேசு எஃபத்தா (திறக்கப்படு) என்றார்‌ (மார்க்‌ 7:34). செவித்திறன்‌ இல்லாத மனிதனின்‌ நிலை இயேசுவைப்‌ பெருமூச்சுவிட வைக்கிறது.

“கேட்கச்‌ செவியுள்ளோர்‌ கேட்கட்டும்‌'' - இயேசு தன்‌ போதனைகளை முடிக்கிறபோதெல்லாம்‌ சொல்லி வைத்த வார்த்தைகள்‌. செவி எல்லாருக்கும்‌ உண்டு. செவித்திறனும்‌ உண்டு. ஆனால்‌ நல்லவற்றைக்‌ கேட்பதற்கு நம்‌ செவிகள்‌ தயாரா என்பதுதான்‌ இயேசுவின்‌ கேள்வி.

பொய்யும்‌ புரளியும்‌ பழிச்‌ சொற்களும்‌ வன்முறை வார்த்தைகளும்‌ இச்சமூகத்தை அலைக்கழிப்பதைக்‌ காணும்பொழுது எதற்கு இந்த நாவு? எதற்கு இந்தக்‌ காது? என்று கேட்கத்‌ தோன்றுகிறது. ஆயினும்‌ கடவுள்‌ கொடுத்த இம்மாபெரும்‌ கொடைகள்‌ இல்லையென்றால்‌ உண்மையையும்‌ நன்மையையும்‌ எடுத்துரைப்பதும்‌ கேட்பதும்‌ இயலாமல்‌ போய்விடாதா? “திறக்கப்படு ” என்று சொல்லி அடைபட்டுக்‌ கிடந்த காதுகளையும்‌ கட்டப்பட்டிருந்த நாவையும்‌ திறந்து வைத்த இறைமகனின்‌ ஆற்றலைப்‌ போற்றுவோம்‌.

திறக்கப்பட வேண்டியவைகள்‌ நிறைய உள்ளன. இன்று சமூகக்‌ கொடுமைகளால்‌ பேசும்‌ திறனையும்‌ கேட்கும்‌ திறனையும்‌ இழந்து நிற்கும்‌ மக்கள்‌ ஏராளம்‌. இவர்கள்‌ விடுதலை பெறும்‌ வரை சமூக விடுதலை சாத்தியமல்ல. நற்செய்தியில்‌ வரும்‌ இயேசுவின்‌ அற்புதச்‌ செயல்பாடு ஒரு சமுதாயத்தின்‌ காதும்‌ நாவும்‌ திறக்கப்பட வேண்டி வெளிப்பட்டதாகும்‌.

அதே நேரத்தில்‌ அழிவைத்‌ தரும்‌ வார்த்தைகளை விதைக்கும்‌ நாவும்‌, பயனற்ற சொற்களைக்‌ கேட்க முனையும்‌ காதுகளும்‌ “மூடப்படுக'' என்று சொல்ல வேண்டியது அவசியம்‌. இல்லையென்றால்‌ இறைவன்‌ கொடுத்த இந்த அரிய கொடைகளின்‌ நோக்கம்‌ நிறைவேறாது. இவை தீமையின்‌ கருவிகளாக மாறிவிடக்கூடும்‌.

இறைவன்‌ நம்மைப்‌ பார்த்து இன்று சொல்லும்‌ வார்த்தை : 'திறக்கப்படு'. செவிகள்‌ மட்டுமல்ல, இதயங்களும்‌ கூடத்தான்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

செப்டம்பர் 8, சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் பிறந்தநாள், ஆரோக்கிய அன்னையின் விழாவாக, வேளை நகரிலும், அந்த அன்னையின் பெயரால் உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ள பல திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்னும் பல பங்குத்தளங்களில், இஞ்ஞாயிறன்று, ஆரோக்கிய அன்னையின் விழா கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கிய அன்னையின் விழாவைத் தொடர்ந்துவரும் இஞ்ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கின்றன. தவிர்க்கமுடியாத உண்மைகளாக இவ்வுலகில் நிலவும், நோய், வறுமை, துன்பம் ஆகியவற்றைக் குறித்து நம் கண்ணோட்டம் என்ன? நோயுற்றோரையும், வறியோரையும் குறித்து நம் எண்ணங்கள் என்ன? அவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்? என்ற ஓர் ஆன்மீக ஆய்வை மேற்கொள்வது, பயனுள்ள ஒரு முயற்சி.

நோய், வறுமை இவற்றைப்பற்றி இஸ்ரயேல் மதத்தலைவர்கள், தவறான எண்ணங்கள் கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்தவரை, நோயும் வறுமையும், பாவத்தின் தண்டனைகள். நோயுற்றோரும், வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதே இறைவனின் விருப்பம் என்ற தவறான எண்ணங்களை, மதத்தலைவர்கள், மக்கள் மீது திணித்துவந்தனர்.

நாம் வாழும் இன்றைய சமுதாயத்திலும், சாதி, அல்லது, இன அடிப்படையில் தவறான, முற்சார்பு எண்ணங்கள், புரையோடிப் போயிருப்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்த சமுதாய நோயை நம்மிடமிருந்து இறைவன் அகற்றவேண்டும் என்று மனமுருகி மன்றாடுவோம்.

துன்பம், நோய், வறுமை ஆகியவற்றைக் குறித்த கேள்விகள், மனித சமுதாயத்தை எப்போதும் தாக்கிவந்துள்ளன. இக்கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன. முதல் வாசகத்தில் ஒலிக்கும் இறைவாக்கினர் எசயாவின் வார்த்தைகளில், வெறும் வேதனை மட்டும் வெளிப்படவில்லை; மாறாக, அந்த ஆழமான வேதனையிலும், இறைவனிடம் கொண்ட விசுவாசம், அவருடைய வார்த்தைகளில் வெளிச்சமாகிறது.

புல்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கவிதை, அழிவின் நடுவிலும் ஆழ்ந்த நம்பிக்கையோடு வாழமுடியும் என்பதை வலியுறுத்துகிறது. இக்கவிதையின் உரைநடை சுருக்கம் இதோ...
அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "தைரியம்னா என்னாண்ணே?" என்று தம்பி அண்ணனிடம் கேட்டான். அண்ணன், தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி, தைரியத்தை விளக்கப்பார்த்தான் அண்ணன். தம்பிக்கு விளங்கவில்லை.

அவர்கள் நடந்து சென்ற வீதியின் ஓரத்தில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலை நிமிர்ந்து, நின்று கொண்டிருந்தது. அண்ணன், தம்பியிடம், அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான். கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்தக் காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்துபோன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல், நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில், கலந்து, மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் தைரியம். அதையே, நாம், நம்பிக்கையின் அடையாளமாகவும் எண்ணிப்பார்க்கலாம். இத்தகைய நம்பிக்கையை, நாம் இறைவாக்கினர் எசயாவின் சொற்களில் உணர்கிறோம்.
எசாயா 35: 4-7
உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார்.” அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

எசாயாவின் சொற்களைக் கேட்கும்போது, இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழுகிறது. அதுவும், இன்றையச் சூழலில், மனிதகுலம் இயற்கையை அழித்துவரும் வேகத்தைக் காணும்போது, கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் என்று சொல்வதற்குப் பதில், நீர்த் தடாகம், கனல் கக்கும் மணல்பரப்பு ஆகும் என்று மாற்றிச்சொல்லத் தோன்றுகிறது. இறைவாக்கினர் எசாயா கண்ட அந்த விசுவாசக் கனவு நமதாக வேண்டுமென, இறைவனை இறைஞ்சுவோம்

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம், வறியோரை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? என்ற கேள்விகளுக்கு மிகவும் தெளிவான பாடங்களைச் சொல்லித் தருகின்றது.
பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இரக்க குணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான்; மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு, உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர், ஏழைகளை மரியாதையுடன் நடத்துகிறோம்? இதுதான், திருத்தூதர் யாக்கோபு, நம்மிடம் எழுப்பும் சங்கடமான கேள்வி.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர், கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பிவந்த யூதர்கள் மத்தியில், இயேசு, "வறியோர் பேறு பெற்றோர்" என்று தன் மலைப்பொழிவில் சொன்னார். இயேசு இவ்வாறு சொன்னது, யூத மதத் தலைவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்; தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில், நம்பிக்கை பிறந்திருக்கும்.
புரட்சிகரமாகப் பேசி, மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று இயேசு முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவற்றை மக்களுக்குச் சொன்னார். அதையே வாழ்ந்தும் காட்டினார். இன்றைய நற்செய்தியில், மீண்டும் ஒருமுறை, இயேசு தன் சொல்லாலும்,செயலாலும் பல பாடங்களைப் புகட்ட வருகிறார்.

மாற்கு நற்செய்தி 7: 32

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. குறையுள்ள அந்த மனிதரை, இயேசுவிடம், மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதர் தானாகவே இயேசுவைத் தேடிவரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, தன்னை ஒரு பாவி என்றும், கடவுளின் தண்டனையை அனுபவிப்பவர் என்றும், முத்திரை குத்திய யூத மதத் தலைவர்கள் மேல், அவர் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். இயேசுவையும், அத்தலைவர்களில் ஒருவராக நினைத்து, அவரை அணுக, அவர் தயங்கியிருக்க வேண்டும்.

தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளை எழுப்பி, அவற்றில், தன்னையே பூட்டிக்கொண்டவர், இந்த நோயாளி. அவருடைய ஒரு சில நண்பர்கள், அவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இயேசுவிடம் அவரைக் கொண்டுவந்தனர். முடக்குவாதத்தால் கட்டிலிலேயே முடங்கிப்போன ஒருவரை, அவரது நண்பர்கள் இயேசுவிடம் கொணர்ந்த நிகழ்வை (லூக்கா 5: 18-25) இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து, அவருடைய நண்பர்கள், அவரை, இயேசுவுக்கு முன் கிடத்தினர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார் என்று நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். (லூக்கா 5: 20)

நோயுற்றோரை குணமாக்குவது ஓர் அற்புதம் என்றால், அவர்களை, மனிதர்களாக மதித்து நடத்துவது, வேறொருவகையில் ஓர் அற்புதம்தான். தாங்களும் மதிப்பிற்குரிய மனிதர்கள் என்ற ஓர் உணர்வை நோயாளிகள் பெறுவதே, ஓர் அற்புதம்தான். தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில் நிகழ்ந்த ஓர் அற்புதம் இது. போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஓர் இளைஞனை, அவரது நண்பர், தினமும், சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வருவார். அவர்களுக்கு வகுப்புகள் நடந்த கட்டடத்தில் ‘லிப்ட்’ வசதி இல்லாததால், கால் ஊனமுற்றவறை ஒரு குழந்தையைப்போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு, அவரது நண்பன், இரண்டு மாடிகள் ஏறுவார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

காது கேளாத மனிதரை, இயேசுவிடம், அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. இயேசு விரும்பியிருந்தால், ஒரு சொல் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு அவரது காதுகளில் விரல்களை வைத்தது, உமிழ்நீரால் அவரது நாவைத் தொட்டது, 'திறக்கப்படு' என்ற கட்டளையிட்டது... என்ற அனைத்து செயல்களும், நோயுற்ற அந்த மனிதரை முழுமையாகக் குணமாக்கின. ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய அற்புதங்களை நாம் அறிவோம்.

2 மாதக் குழந்தையொன்று, தன் தாயின் குரலை முதல் முறையாகக் கேட்கும்போது, அக்குழந்தையின் முகத்தில் தோன்றும் புன்னகையும், அழுகையும் அழகான ஒரு 'வீடியோ' பதிவாக, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த ஒரு நிமிட 'வீடியோ'வை, 1 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். கிறிஸ்டி (Christie Keane) என்ற இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை சார்லட் (Charlotte), பிறவியிலேயே கேட்கும் திறனின்றி பிறந்தாள். இரண்டு மாதங்கள் சென்று கேட்கும் கருவியொன்று, குழந்தையின் காதில் பொருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தை சார்லட், தன் தாயின் குரலை முதல் முறை கேட்டு, கண்களில் கண்ணீரோடு சிரிக்கும் அந்த வீடியோ, காண்போரின் உள்ளத்தைத் தொடுகிறது. குழந்தையின் இதயத்தில் அன்பு அதிர்வுகளை உருவாக்க, தாயின் குரல் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதை, இந்த வீடியோ, மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது.

கேட்கும் திறனின்றி பிறந்த குழந்தை சார்லட், முதல் இரு மாதங்கள், பசி வந்த வேளையில் அழுதாள்; மற்ற நேரங்களில், வேறு எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தாள் என்று, இளம்தாய் கிறிஸ்டி கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப்பின், கேட்கும் கருவி பொருத்தப்பட்டு, தாயின் குரலைக் கேட்ட அன்றுதான், தன் குழந்தையின் முகத்தில் புன்சிரிப்பையும், இன்னும் சில உணர்வுகளையும் காணமுடிந்தது என்று, கிறிஸ்டி அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தவண்ணம் கூறினார்.

.

தாய் சேய் உறவைச் சித்திரிக்கும் இந்த உணர்வுப்பூர்வமான வீடியோவைக் காணும்போது, ஆதரவின்றி விடப்படும், ஆயிரமாயிரம் குழந்தைகள், நினைவுக்கு வருகின்றனர். கேட்கும், பார்க்கும், பேசும் திறன்கள் இல்லாமல் பிறக்கும் பல்லாயிரம் குழந்தைகள், யாருமற்ற அனாதைகளாக விடப்படும் கொடுமை, இன்றும் நம்மிடையே காணப்படுகிறது. இவர்களை, இறைவனின் சந்நிதியில் இன்று சிறப்பாக நினைவில் கொள்வோம்.

தாய்க்குரிய பரிவோடு, இயேசு, காதுகேளாதவரைக் குணமாக்கும் நிகழ்வு, நமக்கு சில பாடங்களைச் சொல்லித்தருகிறது. இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், கண்களையும் தொட்டு, 'திறக்கப்படு' என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசுவின் 'திறக்கப்படு' என்ற கட்டளை, நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்கிறது.

வறுமை, நோய் ஆகிய சிறைகளில் நாம் சிக்கியிருக்கும்போதும், இச்சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், இறைவாக்கினர் எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நிஜமாக்குவோம். முடியாது என்ற அவநம்பிக்கை, நம்மைச் சிறைப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.... காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இத்தகைய நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள, இறைமகனும், ஆரோக்கிய அன்னையும் நமக்குத் துணை புரிவார்களாக.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

கடவுள்‌ விரும்பும்‌ சமத்துவ சமூகம்‌ சார்ந்த வெளிப்பாட்டினை அறிந்துகொள்ள நாம்‌ அழைக்கப்படுகிறோம்‌.

கடவுள்‌ மக்களைச்‌ சந்திக்க வருகையில்‌ அநீதியை அழிப்பார்‌; நேர்மையாளர்களை விடுவிப்பார்‌. உடல்‌ சார்ந்த குறைகளைப்‌ போக்குவார்‌. இயற்கைக்கும்‌ ஆசி வழங்குவார்‌. இறை மக்களுக்கான “தூய வழி” எனும்‌ நேர்வழியை உருவாக்குவார்‌.

சமத்துவ வாழ்வுக்கான முன்னெடுப்புகளைச்‌ செயலாக்கம்‌ செய்திடும்‌ ஆண்டவரை போற்றுகின்ற திருப்பாடல்‌ ஆசிரியர்‌ வழியில்‌ நாமும்‌ செயல்படுவோம்‌.

ஆண்டவரின்‌ செயல்பாடுகளில்‌ காணப்படும்‌ பரிவு, இரக்கம்‌, பேரன்பு போன்றமவ அனைவருக்கும்‌ சமமானவை.

இயேசுவின்‌ சமத்துவச்‌ செயல்பாடுகள்‌:

குறைபாடுள்ளவருக்கு உரிய கவனம்‌ செலுத்துதல்‌.

அவரோடு தனியாக நேரத்தை செலவிடுதல்‌. குறைபாடுள்ளவரைத்‌ தொடுதல்‌.

குறைகளைப்‌ போக்கிட, குணப்படுத்துதல்‌.

தொடக்கக்‌ கால கிறிஸ்தவர்கள்‌, கிறிஸ்துவின்‌ சமத்துவ சிந்தனையை சவாலோடு செயல்படுத்த முயன்றிருக்கிறார்கள்‌ என்பதே இந்நாளின்‌ நேர்மறையானச்‌ செய்தியாகும்‌.

ஏழை - செல்வர்‌ எவ்வாறு சமூக - சமய - ஆன்மீகப்‌ பார்வையில்‌ பார்க்கப்படுகின்றனர்‌ என்பதை திருத்தூதர்‌ யாக்கோபு சுட்டிக்காட்டுகிறார்‌ (இரண்டாம்‌ வாசகம்‌).

இன்றைய ஏழைகள்‌ - நாளைய செல்வந்தர்கள்‌; இன்றைய செல்வந்தர்‌ - நாளைய ஏழைகள்‌. செல்வத்தால்‌ ஒருவர்‌ மதிப்புப்‌ பெறுவதில்லை. மாறாக கிறிஸ்துவின்‌ மாட்சியால்‌ மதிப்புப்‌ பெற வேண்டும்‌ என்பதே இன்றைய அழைப்பு.

செல்வம்‌ கடவுளுடைய இடத்தைப்‌ பெறக்‌ கூடாது. ஏழைகள்‌ கடவுளுக்குரிய இடத்தைத்‌ தர வேண்டும்‌. செல்வந்தர்‌ கடவுளுக்குரிய இடத்தில்‌ தங்களைக்‌ கருதுவதை எதிர்க்கிறது சமத்துவச்‌ சிந்தனை. கடவுள்‌ ஆள்‌ பார்த்துச்‌ செயல்படுவதில்லை. அவருடைய மக்களாகிய நாமும்‌, எல்லாரும்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்ற சமத்துவப்‌ பார்வையில்‌ நிலைத்திருக்க வேண்டும்‌.

உலகப்‌ பார்வையில்‌ தரம்‌ குறைந்த காணப்படுவோரையும்‌ அவர்களது அன்பை முன்னிட்டு கடவுள்‌ உரிமைப்‌ பேற்றுக்கு உயர்த்துகிறார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

யாவற்றையும் நன்றாக!

‘என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு!
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுகின்றார் …
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார் …
என் நெஞ்சே ஆண்டவரைப் போற்றிடு!’ (திபா 146)

ஆண்டவர் யாவற்றையும் நன்றாகச் செய்கிறார். அவர் நமக்கு யாவற்றையும் நன்றாகச் செய்வதால், நாமும் யாவற்றையும் நன்றாகச் செய்ய அழைப்பு பெறுகின்றோம்.

முதல் வாசகம் (எசா 35:4-7), முதல் எசாயா (அதி 1-39) எனப்படும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசா அதி. 35-இல் நாம் ஆண்டவரின் நீதியையும் இரக்கத்தையும் ஒருசேரக் காண்கின்றோம். மூன்றாம் திக்லெத்-பிலேசர் என்னும் அசீரிய அரசர் இஸ்ரயேல் மக்களை அடிமைகளாகச் சிறைப்பிடிக்கின்றார். அசீரியாவின் படையெடுப்பிற்கான ஆண்டவரின் பதிலிறுப்பாக அமைகிறது எசாயா 35. இந்த அதிகாரத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) ஆண்டவரின் வெளிப்பாடு அல்லது ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துதல் (35:1-6). (ஆ) மக்கள் மீண்டும் திரும்பி வருதல் (35:7-10). நிலம் மீண்டும் வளமை பெறுகின்றது. தண்ணீர் வளமையின் அடையாளமாக இருக்கிறது.

நம் வாசகப் பகுதி இரு பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) ‘அஞ்சாதிருங்கள்’ (35:4), (ஆ) நிலம் பெறுகின்ற மாற்றம் (35:5-7). ‘உள்ளத்தில் உறுதியற்றவர்கள்’ என்னும் பதம் எபிரேயத்தில், ‘பந்தயக் குதிரைகள் போல ஓடும் இதயங்களைக் கொண்டவர்களே’ என்று உள்ளது. பந்தயக் குதிரை மிக வேகமாக ஓடக் கூடியது. அந்த அளவுக்கு நம் இதயம் துடித்தால் அல்லது உள்ளம் ஓடினால் எப்படி இருக்கும்? கலக்கம், முடிவெடுக்க இயலாத நிலை, பயம் ஆகியவற்றை இது குறிக்கிறது. அசீரியப் படையெடுப்பு இத்தகைய தாக்கத்தை இஸ்ரயேல் மக்கள்மேல் ஏற்படுத்தியிருந்தது. ‘இதோ உங்கள் கடவுள்’ என்னும் சொல்லாடல், எசா 7:14-இல் ஆண்டவராகிய கடவுள் ஆகாசு அரசனுக்கு வழங்கிய, ‘இம்மானுவேல் – கடவுள் நம்மோடு’ என்னும் அடையாளத்தின் வெளிப்பாடாக அமைகின்றது. கடவுள் ‘பழிதீர்க்க வருகின்றார்.’ பழிதீர்த்தல் என்பது கடவுள் நிலைநாட்டும் நீதி அல்லது, கடவுள் அநீதியைக் கண்டுக்கும் முயற்சி என்று பொருள்கொள்ளப்படலாம்.

தொடர்ந்து ஆறு வார்த்தைப் படங்களை எசாயா பயன்படுத்துகின்றார்: ‘பார்வையற்றோர்,’ ‘காது கேளாதோர்,’ ‘காலூனமுற்றோர்,’ ‘வாய் பேசாதோர்,’ ‘நீரூற்றுகள்,’ மற்றும் ‘கனல் கக்கும் மணல் பரப்பு.’ மேற்காணும் இந்த ஆறு வார்த்தைப் படங்களும் இஸ்ரயேல் மக்களை உருவகமாகக் குறிக்கின்றன: ‘ஆண்டவரின் உடனிருப்பைப் பார்க்க இயலாதவர்களாக அவர்கள் இருந்தனர்,’ ‘அவரின் வல்ல செயல்கள் பற்றி அவர்கள் கேட்கவில்லை, ‘அடிமைத்தனத்தால் முடமாகிக் கிடந்தனர்,’ ‘உள்ளக் கசப்பால் வாய்பேசாமல் இருந்தனர்,’ ‘ஆண்டவர் இல்லாததால் நீரூற்றுகள் வற்றிப் போயின,’ ‘உயிர் இல்லாததால் மணல் பரப்பு கனல் கக்கியது.’ ஆண்டவராகிய கடவுள் இப்போது இறங்கி வருகின்றார். அவரின் வருகை இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்து, பழைய நிலைக்கு அவர்களைத் திருப்புகிறது: ‘பார்வையற்றவர்கள் பார்க்கின்றனர்,’ ‘காதுகேளாதோர் கேட்கின்றனர்,’ ‘காலூனமுற்றோர் நடக்கின்றனர்,’ ‘வாய் பேசாதோர் பாடுகின்றனர்,’ ‘நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன,’ ‘கனல் கக்கும் மணல் பரப்பு நீர்த்தடாகமாகிறது.’

கடவுளின் முன்னெடுப்பும் நன்மைத்தனமும் இரக்கமும் முந்தைய நன்னிலைக்கு அவர்களைக் கொணர்கிறது. கடவுள் அனைத்தையும் நல்லதெனச் செய்கிறார். ஏனெனில், அவரே படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் (காண். தொநூ 1:31).

இரண்டாம் வாசகம் (யாக் 2:1-5) யாக்கோபின் குழுமத்தில் நிலவிய பாரபட்சம் அல்லது வேற்றுமை பாராட்டுதல் பற்றிச் சொல்கின்றது. இத்திருமுகத்தின் ஆசிரியர் திருத்தூதரும், இயேசுவின் சகோதரரும், எருசலேம் திருஅவையின் தலைவருமான யாக்கோபு என்று குறிப்பிடப்பட்டாலும், யாக்கோபின் பெயரில் பிந்தைய காலத்தில் ஒரு யூதக் கிறிஸ்தவர் இதை எழுதியிருக்க வேண்டும் என்பதே பரவலான கருத்து. கடந்த வார வாசகத்தில், ‘மேலான சமய வாழ்வு’ பற்றிப் பேசிய ஆசிரியர், இந்த வாரம், ‘குழும வாழ்வில் உள்ள பாகுபாடு பாராட்டுதல்’ பற்றிப் பேசுகின்றார்.

யாக்கோபின் குழுமத்தில் செல்வந்தர்கள் மதிக்கப்பட்டனர், ஏழைகள் உதாசீனப்படுத்தப்பட்டனர். இதுதான் சூழல். எபிரேயத்தில் ‘ஆசீர்’ என்றால் ‘செல்வம்’ என்று பொருள். தமிழில், ‘ஆசீர்’ என்பதற்கு ‘கடவுளின் அருள்’ என்ற பொருளும் உண்டு. ஆக, அன்றைய காலத்தில் செல்வம் என்பது கடவுளின் வரம் அல்லது அருள் என்றும், ஏழ்மை என்பது கடவுளின் சாபம் என்றும் கருதப்பட்டது. செல்வந்தர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாகவும், இன்றியமையாதவர்களாகவும், தங்களுடைய நடை, உடை, அணிகலன்களால் மற்றவர்களை ஈர்க்கிறவர்களாகவும் இருந்தனர். ஆனால், ஏழைகளோ சமூகத்தில் எளிதில் காயப்படுத்தப்படுகிறவர்களாகவும், தூக்கியெறிப்படுகிறவர்களாகவும், பார்ப்பதற்கு அறுவறுப்பாகவும் இருந்தனர். செல்வந்தர்-ஏழைகள் பாகுபாடு சமூகத்தில் இருந்ததுபோல நம்பிக்கையாளர் குழுமத்திலும் இருக்கின்றது. செல்வந்தர்களுக்கு முதன்மையான இருக்கைகள் வழங்கப்பட, ஏழைகளோ வெளியே நிறுத்தப்படுகின்றனர். இதைக் கேள்விப்படுகின்ற ஆசிரியர் கோபம் கொள்கின்றார்.

‘பாகுபாடு பாராட்டுவது’ என்பது ‘தீர்ப்பிடுவதற்கு’ சமம் என்கிறார் ஆசிரியர். ஏனெனில், நாம் மனத்தில் இடும் தீர்ப்பே வெளியே செயலாக வெளிப்படுகின்றது. கடவுள் ஏழையரின் நிலையை உயர்த்தியுள்ளார் என்றும், அவர்கள் செல்வத்தில் ஏழைகளாக இருந்தாலும் நம்பிக்கையில் செல்வந்தர்கள் என்றும், நம்பிக்கையாளர் என்ற நிலையில் அனைவரும் சமமே என்றும் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார். இவ்வாறாக, கடவுள் அனைத்தையும் நன்றாகச் செய்துள்ளார் என்று ஆசிரியர் அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

நற்செய்தி வாசகம் (மாற் 7:31-37) மாற்கு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இதை அறிகுறி அல்லது வல்ல செயல் என்று பார்ப்பதை விட, உருவகம் அல்லது உவமை என்று பார்க்கலாம். மூன்று விடயங்கள் இங்கே கவனத்திற்குரியவை: (அ) மெசியா இரகசியம் – தான் நிகழ்த்திய வல்ல செயல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாமென இயேசு கற்பிக்கின்றார். (ஆ) திக்கிப் பேசுதல் – இயேசுவிடம் கூட்டி வரப்படுகிறவர் திக்கிப் பேசுகிறார் – அவர் முழுமையான ஊமையும் இல்லை, நன்றாகப் பேசக்கூடியவரும் இல்லை. பாதி-பாதி நிலையில் இருந்தவர். இயேசுவுடன் இருந்த சீடர்களின் நிலையும் மாற்கு நற்செய்தியில் அப்படித்தான் இருக்கிறது. இயேசுவை முழுமையாக அவர்கள் இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளையில் அவரை நிராகரிக்கவும் இல்லை. (இ) புறவினத்து மக்கள் கூட்டத்தினர் இயேசுவைக் கண்டு வியந்து ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால், அவருடன் இருந்த யூதச் சீடர்கள் அவரைப் பற்றி இடறல்பட்டனர், அல்லது அவரைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தனர்.

‘தீர், சீதோன், தெக்கப்போலி’ போன்ற நகரங்கள் புறவினத்தாரின் குடியேற்றப் பகுதிகளாக விளங்கின. காதுகேளாதவரும் திக்கிப் பேசுகிறவருமான ஒருவரை மற்றவர்கள் இயேசுவிடம் கூட்டி வருகின்றனர். இயேசுவின் பதிலிறுப்பை ஆறு வினைச் சொற்களால் பதிவு செய்கின்றார் மாற்கு: ‘கூட்டத்திலிருந்து தனியே அழைத்து,’ ‘விரல்களைக் காதுகளில் இட்டு,’ ‘எச்சில் உமிழ்ந்து,’ ‘நாக்கைத் தொட்டு,’ ‘பெருமூச்சுவிட்டு,’ ‘திறக்கப்படு’ என்று கட்டளையிட்டார். இயேசு மூன்று நிலைகளில் செயலாற்றுகின்றார்: (அ) தன் சமகாலத்து மருத்துவர்கள்போல எச்சில் உமிழ்ந்து பூசுகின்றார், (ஆ) ஒரு சராசரி மனிதன் போல பெருமூச்சுவிட்டு இறைவனிடம் மன்றாடுகின்றார், மற்றும் (இ) கடவுள் போல, ‘திறக்கப்படு’ என்று கட்டளையிடுகின்றார். ‘உடனே’ வல்ல செயல் நடந்தேறுகிறது. அவர் கேட்கவும் பேசவும் செய்கின்றார். ‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என இயேசு கட்டளையிடுகின்றார். ஏனெனில், வல்ல செயல் என்பது இறைவனின் தனி அனுபவம். ‘இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்!’ என்று கூட்டம் அக்களிக்கிறது. திருத்தூதர்களும், ‘இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார்’ என்று அறிக்கையிடுகின்றனர் (காண். திப 10:38). காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் என்னும் சொல்லாடல்கள், இயேசுவின் சீடர்கள் வாய்திறந்து அவரைப் பற்றி அறிக்கையிடுவார்களா? இந்நிகழ்வு பற்றி வாசிக்கும் வாசகரின் இதயமும் திறக்கப்படுமா? என்னும் கேள்விகளை எழுப்புகின்றது.

இயேசு அனைத்தையும் நன்றாகச் செய்கின்றார்.

முதல் வாசகத்தில், கடவுளின் நன்மைத்தனம் அவருடைய நீதி மற்றும் இரக்கத்தில் வெளிப்படுகின்றது. கடவுளே மாற்றத்தை முன்னெடுக்கின்றார். முந்தைய நன்னிலைக்கு நாட்டையும் மக்களையும் கொண்டுவருகின்றார்.
இரண்டாம் வாசகத்தில், கடவுள் ஏழையரை நம்பிக்கையில் செல்வராக்குவதன் வழியாகவும், அவர்களின் நிலையை உயர்த்தி வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப் பேறாகவும் தருவதன் வழியாகவும் தன் நன்மைத்தனத்தை வெளிப்படுத்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், மக்கள் இயேசுவிடம் விண்ணப்பம் செய்ய, இயேசுவும் அவர்களுக்குச் செவிகொடுக்கின்றார். மனித நிலையிலிருந்து இறைநிலைக்குக் கடந்து செயல்படுபவராக இருக்கிறார் இயேசு. மக்கள் இயேசுவை மெசியா என அறிக்கையிடுகின்றனர். மக்களின் வாயும் திறக்கப்படுகின்றது.

இன்றைய இறைவார்த்தையை நாம் எப்படி வாழ்வது?

இன்று உள்ளம் உறுதியற்றவர்களாக நாம் இருக்கக் காரணம் என்ன? நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கள் எவை? நம் வாழ்வில் நாம் மீண்டும் திரும்ப வேண்டிய பழைய நன்னிலை எது?
நான் மற்றவர்களை பாலினம், சாதி, மதம், மற்றும் பொருளாதார நிலை அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறேனா? நாம் ஏழைகளை மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்றைச் செய்யுமுன், ‘இதை நான் உங்களுக்குச் செய்யட்டுமா!’ என்று அனுமதி கேட்க வேண்டும். ஏழைகளின் மாண்பு மனித மாண்பு என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு எனக்கு அருகில் வரும்போது நான் அவரைக் கண்டுகொள்கிறேனா? அவரிடம் சென்று என் குறையை எடுத்துரைக்கின்றேனா? மற்றவர்களின் குறைகளுக்காகப் பரிந்து பேசுகிறேனா? ‘அவர் யாவற்றையும் நன்றாகச் செய்துள்ளார்’ என்று அவரைப் பற்றி அறிக்கையிடுகிறேனா? கடவுள் அனைத்தையும் நன்றாகச் செய்துள்ளார் எனில், நானும் அனைத்தையும் நன்றாகச் செய்யலாமே!

இறுதியாக,

அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஏனெனில், ஆண்டவரின் இரக்கமும் நீதியும் நம்மோடு இருக்கின்றன. தீமையை யார் வேண்டுமானலும் செய்ய இயலும். ஆனாலும், யாவற்றையும் நன்மையாக நம்மால் மட்டுமே செய்ய இயலும். நம்மைக் காண்கின்ற மற்றவர்கள், ‘அவர் அனைத்தையும் நன்றாகச் செய்துள்ளார்’ என்று சொல்கிறார்கள் எனில், யாவற்றையும் நன்றாகச் செய்கின்ற கடவுள் நம்மோடு இருக்கின்றார்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திறந்த இதயம் கொள்வோமா!

இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு காது கேட்காத வாய் பேச இயலாத ஒருவரை குணமாக்கும் நிகழ்வு தரப்பட்டுள்ளது. இந்த வல்ல செயல் நிகழ்த்தும் போது இயேசு ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார். " எப்பத்தா " என்ற வார்த்தை அது. அதன் பொருள் "திறக்கப்படு " என்பதாகும். இவ்வார்த்தையைக் கூறி இயேசு அம்மனிதனின் காதுகள் திறக்கப்படவும் நாக்கு கட்டவிழ்க்கப்படவும் செய்கிறார். இன்றும் இதே வார்த்தையை நமக்கு கூறுகிறார். எப்பத்தா ......என்று கூறி நம் புலன்கள் மட்டுமல்ல பூட்டிக்கிடக்கின்ற நம் இதயங்களும் திறக்கப்பட வேண்டும் என்ற செய்தியை இன்று கூறுகிறார். ஏனென்றால் இதயங்கள் திறக்கப்பட்டால் நம் புலன்களும் சரியானவற்றை நோக்கி நிச்சயம் திறக்கப்படும் அன்றோ!

திறந்த இதயம் என்பது என்ன? அதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? அதற்கு இன்றைய இரண்டாம் வாசகம் சிறந்த பதிலைத் தருகிறது. திறந்த இதயம் என்பது திறந்த மனநிலை. அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் உளப்பாங்கு. பணம், பதவி, விருப்பு வெறுப்புகள், சாதி, மதம், மொழி, நிறம் போன்றவற்றை கடந்து மனிதர்களை ஏற்றுக்கொண்டு பண்போடும் மாண்போடும் நடத்தும் மனநிலையே திறந்த மனநிலை.

அதேபோல் முதல்வாசகம் கூறுவதைப்போல வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு இறைவார்த்தையின் படி வாழ்ந்து இறைவன் தரும் ஆறுதலை பெற்றுக்கொள்ள பொறுமையோடு காத்திருக்கும் அந்த நல்ல மனமே திறந்த மனம்.

இயேசு நம் இதயங்கள் திறக்கப்பட விரும்புகிறார். பூட்டிக்கிடக்கின்ற நம் இதயத்தின் வாயிலருகே நின்று தட்டிக்கொண்டே இருக்கிறார். திறப்போமா ....திறக்கப்பட ஒத்துழைப்போமா!
சிந்தனை செய்வோம். வாழ்வில் வருவதை வருவது போல் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் திறந்த மனநிலையோடு மதிப்போடு நடத்தி இறையருள் பெறுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! உம் அருளால் கடின எங்கள் இதயங்கள் திறக்கப்படட்டும். ஆமென்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 35:4-7)

ஏறக்குறைய கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு. 587) எசாயா இறைவாக்கினர்‌ வாழ்ந்து வந்தார்‌. அப்போது இஸ்ராயேல்‌ மக்களின்‌ கீழ்படியாமையால்‌ கடவுள்‌ அவர்களை பாபிலோன்‌ அரசுக்கு அடிமைகளாக ஒப்புவித்தார்‌. அப்போது எருசலேம்‌ பேராலயம்‌ தரைமட்டமாக்கப்பட்டது. மக்கள்‌ பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்‌. ஏறக்குறைய நூறு கல்‌ தொலைவு அவர்கள்‌ இரவும்‌ பகலும்‌ நடந்தே செல்கின்றார்கள்‌. வழியில்‌ பல விதமான துன்பங்களுக்கும்‌, இன்னல்களுக்கும்‌ ஆளா கிறார்கள்‌. இந்த சூழ்நிலையில்‌ தான்‌ எசாயா இறைவாக்கினர்‌ மக்களின்‌ மனமாற்றத்திற்காக அழைப்பு கொடுக்கின்றார்‌. கடவுளின்‌ அன்பும்‌, இரக்கமும்‌ இன்றும்‌ என்றும்‌ மாறாமல்‌ இருப்பதே எடுத்துக்‌ கூறுகின்றார்‌. கடவுளின்‌ இரக்கம்‌ இஸ்ராயேல்‌ மக்கள்‌ மீது இரங்கியது. எனவே அரசனின்‌ மனதை மாற்றி தம்‌ மக்களை விடுவிக்க செய்தார்‌. இதனால்‌ பலரும்‌ எருசலேம்‌ திரும்பி வந்தார்‌ கள்‌. மீண்டும்‌ கோவிலை கட்டி எழுப்பி கடவுளுக்கு ஏற்ற மக்களாக வாழ்கின்றார்கள்‌. சிலர்‌ பாபிலோனிலே தங்கி விட்டார்கள்‌. காரணம்‌ அவர்கள்‌ தொழிலில்‌ முன்னேற்றம்‌ கண்டு வளமையோடு வாழ்ந்தார்‌கள்‌ என்பதை பின்னணியாக கொண்டு அமைகின்றது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (யாக்‌. 2:1-5)

மரபு கருத்துப்படி இந்த யாகப்பர்‌ ஆண்டவரின்‌ சகோதரர்‌. எருசலேம்‌ திருச்சபையின்‌ தலைவர்‌. பவுலுடன்‌ நெருங்கிய தொடர்பு கொண்டவர்‌. ஆனால்‌ அறிஞர்கள்‌ மொழி நடையிலும்‌, கருத்து களிலும்‌ இயேசுவோடு நெருக்கமாக இருந்ததால்‌ இவர்‌ கடிதம்‌ வெளிப்படுத்தாதால்‌ இதை வேறு யாக்கோபு எழுதியிருக்க கடும்‌ என எண்ணுகிறார்கள்‌. இன்றைய பகுதியில்‌ ஏழை பணக்காரர்‌களிடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி கூறுவது போல்‌ அமைகின்றது. காரணம்‌ அவரது காலத்தில்‌ அவர்‌ வாழ்ந்த பகுதியில்‌ இத்தகைய வேறுபாடு நிலவியிருந்தது. பணக்காரர்கள்‌ கடவுளின்‌ ஆசிரைப்‌ பெற்றவர்கள்‌. ஏழைகளோ சபிக்கப்பட்டவர்கள்‌, பாவிகள்‌ என எண்ணியிருந்தார்கள்‌. ஆனால்‌ கடவுளின்‌ பார்வையில்‌ ஏழை பணக்காரர்‌ என்ற வேறுபாடு இல்லை என்பதை எடுத்து கூறுகிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 7:31-37)

இன்றைய நற்செய்தியில்‌ காது கேளாதவனும்‌, திக்கு வாயனுமான ஒருவன்‌ குணமடையும்‌ புதுமை இடம்‌ பெறுகின்றது. வழக்கமாக வார்த்தையாலோ, அல்லது தொட்டு குணமாக்கும்‌ இயேசு இங்கு சில அடையாளங்களை செய்து குணமாக்குகிறார்‌. காரணம்‌ காது கேட்காத, திக்கு வாய்‌ கொண்ட மனிதனும்‌, கடவு ளின்‌ அன்பையும்‌, இரக்கத்தையும்‌ உணர்ந்து கொள்ள வேண்டும்‌ என அவ்வாறு செய்கின்றார்‌. மேலும்‌ மாற்குவின்‌ கருத்துப்படி இயேசு அதிகாரம்‌ இந்த உலகை ஆட்சி செய்ய வல்லது என வெளிப்படுத்தும்‌ வண்ணம்‌ அமைகிறது. “பெத்தா” என்பது இயேசு பேசிய அரமாய்க்‌ மொழி ஆதிக்கிறிஸ்தவர்கள்‌ இயேசுவின்‌ தாய்‌ மொழி மீது அதிக மரியாதை கொண்டதால்‌ மாற்கு அரமாய்க்‌ மொழி வார்த்தையை அப்படியே பயன்படுத்துகின்றார்‌. கடவுளின்‌ அன்பையும்‌, இரக்கத்தையும்‌ மையக்கருத்தாக கொண்டு அமை கின்றது இவ்வாசகம்‌.

மறையுரை

“ஏழை இயேசுவை உங்கள்‌ இதயத்தில்‌ ஏற்றுக்‌ கொள்‌ ளுங்கள்‌”. இன்றைய மூன்று வாசகங்களும்‌ சேர்ந்து ஒரு ஆழமான இறையியல்‌ உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. முதல்‌ வாசகம்‌ முன்னுரையாகவும்‌ நற்செய்தி வாசகம்‌ மைய உரை: யாகவும்‌, இரண்டாம்‌ வாசகம்‌ முடிவுரையாகவும்‌ அமைவது இன்றைய நாளின்‌ சிறப்பாகும்‌. ஏன்‌ முதல்‌ வாசகம்‌ முன்னுரையானது? இறை மகன்‌ இயேசுவின்‌ வருகையும்‌ அவர்‌ வந்தவுடன்‌ மண்ணுலகில்‌ நடக்கப்போகும்‌ புதுமைகளையும்‌, அதிசயங்களையும்‌, மகத்துவத்‌ தையும்‌, மாட்சியையும்‌ இசையாஸ்‌ இறைவாக்கினர்‌ வாயிலாக முன்னுரைக்கப்படூுவதால்‌ முன்னுரையானது. நற்செய்தி மைய உரை யானது ஏன்‌? இசையாஸ்‌ முன்னுரைத்தது கிறிஸ்து வழியாக நிறைவேற்றப்படூுகின்றது. எத்தனையோ புதுமைகளை இயேசு செல்லும்‌ இடமெல்லாம்‌ செய்கிறார்‌. அதில்‌ ஒன்று தான்‌ இன்றைய நற்செய்தியில்‌ கேட்பது. காது கோளாத திக்கு வாயன்‌ ஒருவன்‌ இயேசுவால்‌ குணமாக்கப்படுகிறார்‌ இதனால்‌ கடவுளின்‌ மீட்பு திட்ட மானது இறைவாக்கினர்‌ முன்னுரைத்தப்படி இயேசு வழியாக முழுமையடைவதை காண முடிகிறது. ஒருநாள்‌ அல்ல ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்பே, ஏன்‌ தொடக்ககாலத்திலிருந்தே இந்த திட்டமானது தொன்று தொட்டு வருவதை விவிலியத்தில்‌ காணலாம்‌. தொ.நூ. 3:15-இல்‌ “உன்‌ வித்துக்கும்‌ அவள்‌ வித்துக்கும்‌ பகையை உண்டாக்குவேன்‌” என்று இயேசுவையும்‌, மரியாவையும்‌ முன்‌ குறித்து கூறப்பட்டுள்ளது. பாவ வாழ்க்கையால்‌ தம்மை விட்டு விலகிச்‌ சென்ற தம்‌ மக்களை இறைவாக்கினர்கள்‌, அரசர்கள்‌ வழியாக மீண்டும்‌ தம்‌ உடன்படிக்கையில்‌ வாழ அழைத்த இறைவன்‌ இறுதியாக தன்‌ ஒரே மகனையே உலகிற்கு அனுப்பி தம்‌ மக்களை மீட்க திருவுளம்‌ ஆனார்‌. யோவான்‌ 3:17 “உலகிற்கு தன்னை தீர்ப்பளிக்க அல்ல, தம்‌ மகன்‌ வழியாக அதை மீட்கவே கடவுள்‌ அவரை உலகிற்கு அனுப்பினார்‌'' என வாசிக்கின்றோம்‌.

ஆனால்‌ இயேசு வந்த பின்‌ முடிவு என்ன என்பதை இரண்டாம்‌ வாசகம்‌ விளக்குகிறது. கடவுளின்‌ திட்டப்படி இறைமகன்‌ இயேசு வந்தார்‌. ஆனால்‌ யூத சமூதாயம்‌ எதிர்பார்த்தது போல்‌ மாட மாளிகையில்‌, தாவீது குலத்தின்‌ மன்னராக, மக்களின்‌ அரசராக, ஆடம்பரத்தோடும்‌ ஆர்பாட்டத்தோடும்‌ வரவில்லை. மாறாக அடிமையின்‌ கோலம்‌ கொண்டு ஏழையாக எளிய மாட்டு குடிசையில்‌, மரியாளின்‌ மகணக, ஒரு சாதாரண குழந்தையாக பிறந்தார்‌.

இரண்டாம்‌ வாசகம்‌ யாக்‌. 2:3-இல்‌ யூதர்கள்‌ பணக்காரரை பார்த்து தயவுசெய்து இங்கே அமருங்கள்‌ என்று உயர்ந்த முதலிடத்தை கொடுப்பார்கள்‌. ஏழையைப்‌ பார்த்து அங்கே போய்‌ நில்‌ அல்லது என்‌ காலடியில்‌ உட்காரு என்று கேவலமாக நடத்துவார்கள்‌. இதுதான்‌ இயேசுவுக்கும்‌ நடந்தது. யூத சமுதாயமும்‌, பரிசேயரும்‌, சதுசேயரும்‌ ஏழையாக இயேசுவை மெசியாவாக ஏற்க மறுத்தார்கள்‌. விவிலியத்தில்‌ பார்க்கிறோம்‌ சொந்த ஊரில்‌ இயேசு புறக்கணிக்கப்படுகிறார்‌. இவன்‌ தச்சருடைய மகன்‌ அல்லவோ! என்று இயேசு அங்கிகரிக்கப்படுகின்றார்‌.

பரிசேயர்‌, சதுசேயர்‌ வெறுப்புக்கும்‌ சூழ்ச்சிக்கும்‌ ஆளாக்கப்‌ படுகின்றார்‌. இன்னுமாக தாம்‌ தேர்ந்தெடுத்த சீடர்கள்‌ இவரை விட்டு ஒட தனிமையாக்கப்படுகின்றார்‌. தம்‌ சீடருள்‌ ஒருவரால்‌ காட்டிக்கொடுக்கப்படுகின்றார்‌. மற்றவரால்‌ மறுதலிக்கப்படுகின்றார்‌. ஓசான்னா பாடிய மக்களே ஒழிக என்று ஓலமிடும்‌ அளவிற்கு ஒதுக்கப்படுகிறார்‌, வெறுக்கப்படுகிறார்‌, தனிமையாக்கப்படுகிறார்‌, அவமானப்படுத்தப்படுகிறார்‌ இறுதியாக மரணத்திலே மிக கொடுமையானதும்‌ கீழ்தரமானதுமான சிலுவைச்‌ சாவை தண்டனையாக கொடுத்து கொல்லப்பட்டார்‌. மீண்டும்‌ இரண்டாம்‌ வாசகம்‌ யாக்‌. 2:5-இல்‌ சொல்வது போல்‌ உலகப்‌ பார்வையில்‌ ஏழையான இயேசு, தன்‌ தந்தை மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையாலும்‌, தன்னையே தாழ்த்தி, இறை திருவுளத்திற்கு தன்னை பணித்ததாலும்‌, கடவுளின்‌ தமது பேரரசின்‌ அறியணையை அவருக்கு மணியாக சூட்டி உயர்த்துகிறார்‌. உலகிற்கு அரசாணக உயர்த்துகிறார்‌.

நமது வாழ்க்கைக்கு வருவோம்‌, இயேசு இன்றும்‌ ஏழையின்‌ தன்மை பூண்டு, எளிமையின்‌ கோலம்‌ கொண்டு, நம்‌ மத்தியிலே வாழ்கின்றார்‌. நமது குடும்பத்திலுள்ள முடியாத முதியோர்களை நாம்‌ மதிக்கின்றோமா? நோயாளிகளை பாசத்தோடு கவனிக்‌ கின்றோமா? வீடு தேடி வந்து பிச்சைக்‌ கேட்கும்‌ நண்பர்களுக்கு உதவுகின்றோமா? பணியிலும்‌, குளிரிலும்‌, வெயிலிலும்‌, மழையிலும்‌ வாடி வதங்கும்‌ அநாதை நண்பர்கள்‌ தெருவோரங்களில்‌ இருக்க அவர்களைக்‌ கண்டு மனமிறங்கி ஆடையோ போர்வையே கொடுத்த துண்டோ? நாள்‌ முழுக்க சுற்றி அலைந்து, சோத்துக்கு நாலு காசு கிடைக்குமா என்று வரும்‌ வியாபாரியிடம்‌ 50 பைசா, 1 ரூபாய்‌ பேரம்‌ பேசாமல்‌ வாங்குவதுண்டா? மாணவ மாணவிகளே, பள்ளியில்‌ படிக்கமுடியாத ஏழை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்ததுண்டா? மற்றவர்களோடு ஏழை பணக்காரர்‌, உயர்சாதி, கீழ்சாதி என்று பாகுபாடு பாராமல்‌ பழகுவதுண்டா? ஏழை பிள்ளை களுக்கு பேனாவோ, பென்சிலோ வாங்கி கொடுத்து உற்சாகப்‌ " படுத்தியதுண்டா? பயணத்தில்‌ முதியவர்‌, ஊனமுற்றோர்‌ வந்தால்‌ அமர இடம்‌ கொடூத்ததுண்டா? இது போன்று பல விதமான உருவத்தில்‌ இன்றும்‌ இயேசு நம்மைத்‌ தேடி வந்து கொண்டு தான்‌ இருக்கின்றார்‌. ஆனால்‌ அவரை ஏற்றுக்‌ கொள்கின்றோமா?

உங்கள்‌ உள்ளக்கண்கள்‌ இன்று திறக்கப்படுக இது போன்ற 'இயேசுக்களை கண்டு கொள்ளுங்கள்‌. உங்கள்‌ இதயக்‌ கதவுகள்‌ திறக்கப்படுக இவர்களுக்கும்‌ உங்கள்‌ இதயத்திலிடம்‌ கொடுங்கள்‌. இயேசு கூறுகிறார்‌, “சின்னஞ்சிறிய எம்‌ சகோதரர்களுக்கு செய்வதெல்லாம்‌ நீங்கள்‌ எனக்கே செய்கிறீர்கள்‌”. இவ்வாறு கிறிஸ்துக்கு நம்பிக்கைகுரியவராக மாறுவோம்‌. இறையரசு கண்ணுக்கு தெரிய வான மண்டலத்தில்‌ இல்லை மாறாக நமது மத்தியில்‌ நமக்குள்‌ இருக்கின்றது. அவற்றை உரிமையாக்கி கொள்வோம்‌. கிறிஸ்துவின்‌ பங்காளியாவோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

  • மீட்பு திட்டம்‌ இயேசுவில்‌ முழுமையடைந்து இன்றும்‌ தொடர்‌கின்றது.
  • இயேசு உடல்‌ உள்ள நோய்களுக்கு சிறந்த மருத்துவர்‌. அவரை நாடுங்கள்‌ குணம்‌ பெறுவீர்கள்‌.
  • நம்மிடம்‌ இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வோம்‌.
  • வேற்றுமையை தகர்லேோம்‌ ஒற்றுமையில்‌ வளர்வோம்‌, அனைவரும்‌ இறைவனின்‌ பிள்ளைகளே!
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முதல்‌ வாசகம்‌ : எசா. 35 : 4-7

பாபிலோனியாவில்‌ பரதேசி வாழ்வு வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல்‌ அளிக்கும்‌ வகையில்‌ அருளப்பட்ட இறைவாக்கு இன்றைய வாசகம்‌. அந்நிய நாட்டில்‌ எவ்வளவு தான்‌ அல்லல்பட்டாலும்‌, இஸ்ரயேல்‌ மக்கள்‌ தம்‌ சொந்த நாட்டில்‌ ஒருநாள்‌ குடியேறுவர்‌; அவர்களது அடிமை வாழ்வுக்கு ஒரு விடிவு ஏற்படும்‌ என்ற உறுதியும்‌, நமது விண்ணகப்‌ பயணத்தில்‌ நாம்‌ வெற்றி பெறுவோம்‌ என்ற நம்பிக்கையும்‌ இங்கு இடம்‌ பெறுவதைக்‌ காணலாம்‌.

நம்பிக்கையூட்டும்‌ இறைவாக்கு

ஆதிப்‌ பெற்றோர்‌ இன்பவனத்தில்‌ யாதொரு குறைவின்றி, இறைவனது அன்பையும்‌ அருளையும்‌ பெற்று வாழ்ந்தனர்‌. இறைவனுடன்‌ இணைந்திருந்த அவ்வாழ்வு விண்ணக வாழ்வின்‌ சின்னம்‌; அதன்‌ தொடக்கம்‌. இதை இழந்த ஆதிப்பெற்றோர்களுக்கு மெசியா வருவார்‌ என்ற வாக்கு நம்பிக்கை அளித்தது.

“பாழ்வெளியில்‌ நாம்‌ பாதையொன்று அமைப்போம்‌;
பாலை நிலத்தில்‌ ஆறுகள்‌ ஓடச்‌ செய்வோம்‌ ( 43 : 19)

“நீ அஞ்சாதே; ஏனெனில்‌ நாம்‌ உன்னோடிருக்கிறோம்‌. நம்பிக்கையில்‌ தளராதே, ஏனென்றால்‌ நாம்‌ உன்‌ கடவுள்‌; நம்முடைய வலக்கை உன்னைத்‌ தாங்கிக்கொள்ளும்‌ ' (41: 10).

தாய்நாடு திரும்பும்‌ மக்கள்‌ உள்ளத்தில்‌ ஊற்றெடுக்கும்‌ உவமையின்‌ எதிரொலியே மேற்கண்ட கவிதை. சீருஸ்‌ என்பவனே பாபிலோனிய அடிமைத்தளையை அறுத்தெறிந்த அரசன்‌. பாவத்‌ தளைகளைத்‌ தகர்த்து நம்மை இறைவனுடன்‌ இணைக்கவரும்‌ மெசியாவின்‌ முன்னோடி அவன்‌. நமதாண்டவரின்‌ வருகையால்‌ ஊனமுற்றோரைப்‌ பிணித்திருந்த தளைகள்‌ தகர்க்கப்பட்டன என்பதற்கு நற்செய்தி சான்று பகர்கிறது. அவரது வருகையால்‌ புதிய வாழ்வு-புதிய அரசு-இவ்வுலகில்‌ நிறுவப்பட்டுவிட்டது. நித்திய வாழ்வின்‌ தொடக்கம்‌ இது. இவ்வாழ்வு விண்ணுலகில்‌ நிறைவு பெறும்‌. இதை நோக்கியே நம்‌ பயணம்‌ செல்லுகிறதா?

இறைவாக்கு நிறைவேறிற்று

மக்களுடன்‌ இறைவன்‌ ஒர்‌ உடன்படிக்கை செய்து கொண்டார்‌. அவர்கள்‌ அவரது மக்கள்‌: அவர்கள்‌ அவரது கட்டளைகளுக்குப்‌ பணிந்து நடக்க வேண்டும்‌. அவர்களைக்‌ காப்பது இறைவனின்‌ பொறுப்பு. ஆனால்‌ மக்கள்‌ நாளடைவில்‌ இவ்வுடன்படிக்கையை மறந்தனர்‌; அதை மீறினர்‌. அந்நிய தெய்வங்களை அண்டிச்‌ சென்றனர்‌. இறையுறவை இழந்தனர்‌. பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாயினர்‌. அவநம்பிக்கையின்‌ எல்லையில்‌ நின்றனர்‌. இவர்களைப்‌ பார்த்துத்‌ தான்‌, “உறுதியாக இருங்கள்‌; அஞ்சவேண்டாம்‌. இதோ உங்கள்‌ கடவுள்‌ பழி தீர்க்க வருகிறார்‌. கடவுள்‌ தாமே வந்து உங்களை மீட்பார்‌ என்ற உறுதிமொழி கூறப்பட்டது.

இவ்வாக்கு பொய்த்துவிடவில்லை. மெசியாவாகிய கிறிஸ்து. தமது மரணத்தால்‌ நம்மை மீட்டு நமக்கு விடுதலை அளித்தார்‌. இவரது வருகையால்‌ மக்களின்‌ ஞானக்‌ கண்‌ திறந்தது. மக்கள்‌ ஒளியில்‌ நடந்தனர்‌. இறைவார்த்தைக்குச்‌ செவிடராயிருந்த மக்களின்‌ செவிகள்‌ திறக்கப்பட்டன; ஊமையர்‌ இறைபுகழ்‌ பாடினர்‌. நமது ஞான வாழ்வில்‌, திருச்சபையின்‌ வரலாற்றில்‌ இருண்ட காலம்‌ தோன்றலாம்‌. நமது விண்ணகப்‌ பயணத்தில்‌ பாவச்‌ சோதனையின்‌ பளு தாங்காது தடுமாறலாம்‌. திருச்சபைக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளைக்‌ கண்டு மனம்‌ தளரலாம்‌. இவ்‌ வேளைகளில்‌ “உறுதியாயிருங்கள்‌; அஞ்ச வேண்டாம்‌” oi . என்ற இறைவாக்கு நமக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்‌. இறைவன்‌ அருகில்‌ இருக்க நான்‌ எதற்கு அஞ்ச வேண்டும்‌?

உள்ளத்தில்‌ உரமில்லாதவர்களை நோக்கி “உறுதியாயிருங்கள்‌: அஞ்ச வேண்டா... கடவுள்‌ தாமே வந்து உங்களை மீட்பார்‌ என்று சொல்லூங்கள்‌.

இரண்டாம் வாசகம் யாக். 2:1-5

“கடவுள்‌ முன்னிலையில்‌ புனிதமும்‌ மாசற்றதுமான தொண்டு எதுவெனில்‌ வேதனையுறும்‌ அனாதைகள்‌, கைம்பெண்கள்‌ இவர்களை ஆதரிப்பதாகும்‌” என்று குறிப்பிட்ட யாக்கோபு (1 : 27) இங்கு விசுவாசியாகிய ஏழை செல்வந்தனை விடச்‌ சிறந்தவன்‌ என்றும்‌, ஏழை பணக்காரன்‌ என்ற பாகுபாடு திருச்சபையாகிய குடும்பத்தில்‌ இடம்‌ பெறக்கூடாதென்றும்‌ அறிவுரை கூறகின்றார்‌.

ஆளுக்கொரு நீதி

“ஆளுக்கொரு நீதி என்பது கடவுளிடம்‌ இல்லையென்பது” (உரோ. 1: 11) பவுலின்‌ அனுபவம்‌. தெய்வத்‌ திருமகனில்‌ குற்றம்‌ காண வந்தவர்களும்‌ அவரது பாரபட்சமற்ற நிலையைப்‌ பாராட்டியுள்ளனர்‌: “போதகரே, நீர்‌ உண்மையுள்ளவர்‌; எவர்‌ தயவும்‌ உமக்கு வேண்டியதில்லை; ஏனெனில்‌ முகத்தாட்சண்யம்‌ பாராமல்‌ கடவுளின்‌ வழியை உண்மைக்கேற்பப்‌ போதிக்கின்றீர்‌'” (மாற்‌ 9 : 4). “தீர்ப்பிடுகையில்‌ அநீதி இழைக்காதே. சிறியோர்‌ பெரியோர்‌ என முகம்‌ பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன்‌ நீதி வழங்கு'' என்கிறது லேவியராகமம்‌ (19 : 15).

தமது பணி ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தல்‌ என்கிறார்‌ இயேசு. தொடக்க காலத்தில்‌ திருச்சபை, ஏழைகள்‌, அடிமைகள்‌, சமுதாயத்தில்‌ ஒதுக்கப்பட்டோர்‌ போன்றோரிடையே வேகமாகப்‌ பரவியது. நாளடைவில்‌ எஜமானனும்‌ அடிமையும்‌, ஏழையும்‌ பணக்காரனும்‌ ஒரே வழிபாட்டில்‌ பங்கெடுத்தனர்‌. செல்வந்தர்களுக்குத்‌ தனி வரவேற்பு அளித்து அவர்களின்‌ உதவியைத்‌ திருச்சபை நாடியது. இந்தப்‌ பாரபட்ச நிலையைக்‌ கண்டிக்கிறார்‌ யாக்கோபு: “பொன்‌ மோதிரமும்‌ பளபளப்பபான ஆடையும்‌ அணிந்த ஒருவரும்‌ அழுக்குக்‌ கந்தையணிந்த ஏழை ஒருவரும்‌ உங்கள்‌ தொழுகைக்‌ கூடத்தினுள்‌. வருகிறார்கள்‌ என வைத்துக்கொள்வோம்‌. அப்போது நீங்கள்‌ பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம்‌ செலுத்தி, அவரைப்‌ பார்த்து “தயவுசெய்து இங்கே அமருங்கள்‌ ' என்று சொல்கிறீர்கள்‌. ஏழையிடமோ, “அங்கே போய்‌ நில்‌" என்றோ அல்லது “என்‌ கால்பக்கம்‌ தரையில்‌ உட்கார்‌ என்றோ சொல்கிறீர்கள்‌. இப்படி வேறுபாடு காட்டுவது நியாயமா?” என்று கேட்கிறார்‌. இறைவனே பாரபட்சம்‌ காட்டாதபோது, கிறிஸ்தவர்கள்‌ காட்டுவது சமுதாயத்‌ துரோகம்‌ என்கிறார்‌. இன்று நமது கோயில்களில்‌, கல்லறைகளில்‌, திருவிழாக்களில்‌ செலுத்தப்படும்‌ மரியாதைகளில்‌, மேல்‌ சாதி கீழ்‌ சாதி என்ற பாகுபாடு இல்லையா? யாக்கோபின்‌ அறிவுரை-கண்டனக்குரல்‌-பணத்தால்‌- சாதியால்‌-மொழியால்‌-பிளவுபட்டுள்ள நமது சமுதாயத்திற்கு முற்றிலும்‌ பொருந்தும்‌ எனலாம்‌.

ஏழ்மையே செல்வம்‌

ஏழைகளை இழிந்தவர்கள்‌ என்று எண்ணுவது பாவம்‌. இவர்கள்‌ உண்மையிலேயே செல்வந்தர்களை விடச்‌ சிறந்தவர்கள்‌. ஏழைகள்‌ என்றுமே இறைவனின்‌ தனிக்‌ கவனத்தைப்‌ பெறுகின்றனர்‌. இவர்களுக்காகப்‌ பரிந்து பேசி, செல்வந்தர்களுக்கு எதிராக இறைவாக்குரைக்கின்றார்‌ ஆமோஸ்‌ (காண்‌ 2:7; 5: 11; எசா. 3: 15).

“அவர்‌ செல்வராயிருந்தும்‌ உங்களுக்காக ஏழையானார்‌” (2 கொரி. 8 : 9). “ஏழைகளே, நீங்கள்‌ பேறுபெற்றோர்‌; ஏனெனில்‌ இறையாட்சி உங்களுக்கு உரியதே” என்கிறார்‌ இயேசு (லூக்‌. 6 : 20). இறைவனால்‌ தெரிந்து கொள்ளப்பட்டவர்களின்‌ செல்வம்‌, விசுவாசமேயாகும்‌. விசுவாசிகளின்‌ செல்வமாகிய இவ்விண்ணரசு அழியாதது (மத்‌ 5 : 3). விசுவாசமாகிய செல்வத்தைப்‌ பெற்றுள்ளது பற்றிப்‌ பெருமை அடைகின்றேனா? இதைப்‌ பத்திரமாகப்‌ பேணிக்காத்து, மேலும்‌ இச்செல்வத்தைப்‌ பெருக்கிக்கொள்ள நான்‌ என்ன செய்கிறேன்‌?

உலகினர்‌ கண்ணுக்கு ஏழையாக உள்ளவர்களைக்‌ கடவுள்‌ வாக்களித்த அரசில்‌ உரிமை தர தேர்ந்து கொள்ளவில்லையா?

மாற்கு மட்டுமே குறிப்பிடும்‌ புதுமை இது. “இயேசுவின்‌ கடல்‌” என்று அழைக்கப்படும்‌ கலிலேயக்‌ கடற்கரைப்‌ பகுதியில்‌ ஊமையும்‌ செவிடனுமாகிய ஒருவனின்‌ ஊனம்‌ நீக்கிய நிகழ்ச்சி இது. இயேசு மெசியா என்பதற்கும்‌, இறையாற்றல்‌ எண்ணற்ற வழியில்‌ வெளியாகும்‌ என்பதற்கும்‌ சான்று பகர்கிறது இப்புதுமை.

ஊனமுரற்றுவன்‌

“அப்போது பார்வையற்றோரின்‌ கண்கள்‌ பார்க்கும்‌ காது கேளாதோரின்‌ செவிகள்‌ கேட்கும்‌. காலூனமுற்றோர்‌ மான்போல்‌ துள்ளிக்‌ குதிப்பர்‌; வாய்பேசாதோர்‌ மகிழ்ந்து பாடுவர்‌ ' என்ற எசாயா இறைவாக்கு (35 : 5 - 6)இங்கு நிறைவேறுவதைக்‌ காண்கிறோம்‌. “ஒரு வார்த்தை சொல்லும்‌; என்‌ ஊழியர்‌ நலமடைவார்‌ ' என்று வேண்டினான்‌ நூற்றுவர்‌ தலைவன்‌ (லூக்‌ 7 : 7). இங்கும்‌ ““திறக்கப்படு'' என்ற ஒரே வார்த்தையால்‌ ஊனம்‌ நீங்குகிறது. நோயாளிகளை அன்புடன்‌ தொட்டுக்‌ குணமாக்குபவர்‌ இயேசு. இங்கும்‌ தன்‌ விரல்களால்‌ செவிடனின்‌ காதுகளைத்‌ தொடுகின்றார்‌; உமிழ்நீரால்‌ அவன்‌ நாவைத்‌ தொட்டுப்‌ பேசும்‌ சக்தி அளிக்கிறார்‌. உமிழ்நீரைத்‌ தடவி, பேய்களை ஓட்டும்‌ பழக்கம்‌ யூதரிடையே இருந்தது. தான்‌ மெசியா என்பதை உடனே அறிவிக்க இயேசு விரும்ப வில்லை. எனவேதான்‌ மருத்துவர்கள்‌, அல்லது பேயோட்டுபவர்கள்‌ செய்வது போலவே செய்து செவிடனைக்‌ குணமாக்கியதாக மக்களுக்கு உணர்த்த விரும்புகிறார்‌. மேலே அண்ணாந்து பார்ப்பது இயேசு இறைவனோடு ஒன்றிக்கிறார்‌ என்பதையும்‌, பெருமூச்சு விடுவது அவரது கனிந்த இதயத்தையும்‌ காட்டுகிறது. ஊனமுற்றோரின்‌ உற்ற நண்பன்‌ இயேசு.

தெய்வத்‌ திருமகன்‌ எண்ணினாலே போதும்‌; அது செயலாகும்‌; ஒரு வார்த்தை கூறினாலோ ஆர்ப்பரித்த கடலும்‌ அடங்கும்‌ (மத்‌. 8 : 27). இங்கு உமிழ்நீரைக்‌ கருவியாக்கி, அதன்மூலம்‌ தன்‌ அருளன்பு வழிந்தோட வழி வகுக்கிறார்‌. உமிழ்நீரும்‌, 'திறக்கப்படு” என்ற சொல்லும்‌ அவரது கருணையைச்‌ சுமந்து செல்லும்‌ கருவிகள்‌. எதையும்‌ கண்டும்‌, கேட்டும்‌, தொட்டும்‌ அறியத்‌ துடிக்கும்‌ மக்களுக்கு ஏற்ற வகையில்‌ இப்புதுமை அமைந்துள்ளது. தான்‌ திருச்சபைக்கு விட்டுச்‌ செல்லவிருக்கும்‌ அருட்‌ சாதனங்களின்‌ முன்னோடியே இச்சின்னங்கள்‌. இறைப்‌ பிரசன்னமும்‌, அவரது அருளும்‌ இன்று நமக்குத்‌ திருவருட்சாதனங்கள்‌ வழியாகவே வெளிப்படுகின்றன. திருவருட்சாதனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ தண்ணீர்‌, எண்ணெய்‌, சொற்கள்‌ போன்ற கருவிகள்‌ வழியாக நமது பாவ ஜனங்கள்‌ நீங்குகின்றன. ஆன்மீக வாழ்வில்‌ இறைவார்த்தை கேளாத செவிடர்களாய்‌-இறைபுகழ்‌ கூறாத ஊமையராய்‌ வாழ்கின்றோமா? அனைத்தையும்‌ குணமாக்கும்‌ அற்புத மருத்துவர்‌ இயேசுவிடம்‌ செல்வோம்‌. மனித சமுதாயத்தில்‌ தம்‌ குறைகளைக்‌ கூற முடியாத நிலையில்‌ - கூறினால்‌ - தண்டனை பெறும்‌ நிலையில்‌ பலர்‌ உள்ளனர்‌. இவர்களே தாழ்த்தப்‌ 2 பட்டவர்கள்‌; ஒதுக்கப்பட்டவர்கள்‌. இவர்களுக்காகக்‌ குரல்‌ கொடுக்கும்‌ பணியாளர்களாக - துயர்‌ களையும்‌ தொண்டர்களாக - இயேசுவின்‌ கருணையுள்ளம்‌ கொண்டு இவர்களுக்காகக்‌ குரல்‌ கொடுப்போமா?

இறைபுகழ்

இயேசுவின்‌ புதுமைகளைக்‌ கண்ட மக்கள்‌ அவரது ஆற்றலையும்‌ அன்பிரக்கத்தையும்‌ அனைவர்க்கும்‌ பறை சாற்றினர்‌. இறைவனை மகிமைப்படுத்த- அவரது புகழ்பாடவே மனிதன்‌ படைக்கப்பட்டான்‌. ஆண்டவரின்‌ படைப்புகள்‌ அனைத்தும்‌ அவருக்கு மெளனகீதம்‌ பாடுகின்றன.

“வானங்கள்‌ இறைவனின்‌ மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன:
வான்வெளி அவர்தம்‌ கைகளின்‌ வேலைப்பாட்டை விவரிக்கின்றது " (காண்‌ : திபா. 19 : 1)

“கதிரவன்‌ கிரணக்‌ கையால்‌ கடவுளைத்‌ தொழுவான்‌
புட்கள்‌ சுதியோடு ஆடிப்பாடித்‌ துதி செய்யும்‌
தருக்கள்‌ எல்லாம்‌ பொதிஅலர்‌ தூவிப்போற்றும்‌
பூதம்தம்‌ தொழில்‌ செய்தேத்தும்‌,
அதிர்கடல்‌ ஒலியால்‌ வாழ்த்தும்‌ தென்னே”
(தேசியவிநாயகம் பிள்ளை)

இயற்கையின்‌ இறை புகழை என்‌ குரலுடன்‌ இணைத்துப்‌ பாடவேண்டும்‌. இறைவனிடமிருந்து எண்ணற்ற வரம்‌ பெற்ற நாம்‌ அவர்‌ புகழ்‌ பாடுகின்றோமா?

எல்லாம்‌ நன்றாகச்‌ செய்திருக்கிறார்‌. செவிடர்‌ கேட்கவும்‌, ஊமைகள்‌ பேசவும்‌ செய்கிறார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser