மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 14-ஆம் ஞாயிறு
திருத்தூதர் தோமையார் பெருவிழா-3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 52:7-10(அ)திருத்தூதர்பணிகள் 10:24-35 | எபேசியர் 2:19-22(அ) 1பேதுரு 1:3-9 | யோவான் 20-24-29

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


அன்புடையீர்,
இந்த ஆண்டு பொதுக்காலம் 14ஆம் ஞாயிறை, இந்தியத் திருஅவை (03/07/2022) புனித தோமா இந்தியாவின் திருத்தூதர் பெருவிழாவாக கொண்டாடுகிறது.
இந்த வாரத்திற்கான மறையுரைச் சிந்தனை வழக்கம்போல் அமையவில்லை. இருந்தபோதிலும் உங்களுக்கு சில குறிப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் உங்கள் மறையுரைத் தயாரிப்புகளுக்கு உதவும் என்று நம்புகின்றோம்.


ser

இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டு அறிக்கையிடத் தயாரா?

இன்று நமது தாய் திருஅவையானது புனித தோமா அப்போஸ்தலரின் விழாவைக் கொண்டாடுகிறது. இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான திதிமஸ் என்றும் அழைக்கப்படும் தோமா பொதுவாக "சந்தேக தோமா" என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் இயேசுவின் உயிர்த்தெழுதலை முதலில் சொன்னபோது அவர் சந்தேகித்தார்; உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசுவைப் பார்க்கும் வாய்ப்பை தோமா தவறவிட்டார், மற்ற சீடர்கள் அவரைச் சந்தித்தனர். இது அவருக்கு ஒருவித ஏமாற்றத்தை உருவாக்கியது. மேலும் எப்படியாவது இயேசுவைக் பார்க்கவேண்டும் எனும் விருப்பம் அவரிடம் அதிகமாக இருந்தது. இந்த ஆழ்ந்த விருப்பத்தின் வெளிப்பாடு ஒரு சந்தேகமாக மாறியது, மேலும் அவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான ஆதாரத்தைக் கேட்டார்.

இயேசு, அவருடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு, அவர் எதிர்பார்த்த படி சிலுவையில் அறையப்பட்ட காயங்களைக் காட்டினார். கண்ட உடனே அவர் தனது நம்பிக்கையை ஒப்புக்கொண்டார். ஆம், இயேசுவின் தெய்வீகத்தன்மையை "என் ஆண்டவரே என் கடவுளே" என வெளிப்படையாக ஒப்புக் கொண்ட முதல் நபர் புனித தோமா.

புனித தோமா மூலமாக, நம்பிக்கையுள்ள நபர்களாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை இயேசு நம் அனைவருக்கும் அளிக்கிறார்.

சிறிது நேரம் நம்மை ஆராய்வோம். ஒருவர் தனது கடவுள் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது நாம் எவ்வளவு தூரம் நம்புகிறோம்? நாம் அவர்களை சந்தேகிக்கிறோமா? அல்லது நம் வாழ்க்கையிலும் இதேபோல் நடக்கவில்லையே என்று எதிர்பார்க்கிறோமா? கடவுளை நம்பக் கற்றுக்கொள்வோம், எல்லா அதிசயங்களும் நம் வாழ்வில் நடக்கும்.

புனித தோமா இயேசுவை ஆண்டவராக, கடவுளாக ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், இயேசுவை அறிவிக்க நம் இந்திய நாட்டுக்கு வந்தார் என வரலாறு கூறுகிறது. அவரைப் போல நம்முடைய நம்பிக்கையின்மை அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவை நம்முடைய இறைவன் என்று ஏற்றுக் கொண்டு அவரை உலகம் முழுவதும் அறிவிப்போம்.

இறைவேண்டல்
எங்கள் ஆண்டவரும் கடவுளுமான கிறிஸ்துவே எல்லா சூழ்நிலைகளிலும் நீரே எங்கள் இறைவன் என்று ஏற்றுக்கொண்டு அறிவிக்க அருள் தாரும். ஆமென்.

ser

புனித தோமா – இந்தியாவின் திருத்தூதர், பெருவிழா

இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித தோமாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும், இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு புனித தோமா.

இயேசுவின் இறப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் மூன்று நிலைகளில் செயல்படுகின்றனர்: (அ) யூதர்களுக்குப் பயந்து, அதாவது, தங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடுமோ என்று பயந்து பூட்டிய அறைக்குள் இருக்கின்றனர். இது பெரும்பாலும் எருசலேமில் உள்ள திருத்தூதர்களின் செயல்பாடாக இருந்திருக்கும். (ஆ) எருசலேமை விட்டு வெளியே சென்றவர்கள், தங்கள் சொந்த ஊரான கலிலேயப் பகுதிக்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடிக்கும் பணிக்குச் சென்றனர். (இ) புனித தோமாவோ மக்களோடு மக்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றார்.

புனித தோமா பற்றி யோவான் நற்செய்தியாளரே அதிகமான குறிப்புகளைத் தருகின்றார். இலாசரின் இறப்பு செய்தி கேட்டு இயேசு புறப்படத் தயாரானவுடன், அவருடைய திருத்தூதர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தோமா, 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' (காண். யோவா 11:16) என்று துணிகின்றார். இயேசுவின் இறப்பை இது முன்னுரைப்பதுடன், இறப்பிலும் இயேசுவோடு உடனிருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

தொடர்ந்து, இறுதி இராவுணவுக்குப் பின் இயேசு வழங்கிய பிரியாவிடை உரையில், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்று கேட்கின்றார் தோமா. அவருக்கு விடையளிக்கின்ற இயேசு, 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என அறிக்கையிடுகின்றார். 'நானே' என்ற வார்த்தை இங்கே முதன்மையானது. ஏனெனில், முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில், 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்று ஆண்டவராகிய கடவுள் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.

இறுதியாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது. 'ஆண்டவரைக் கண்டோம்' என திருத்தூதர்கள் தோமாவிடம் சொல்கின்றனர். 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து' என்று, எந்தவொரு தலைப்பும் இல்லாமல், 'அவர்' என்று இயேசுவை அழைக்கின்றார். ஆனால், இயேசு தோன்றி, 'இதோ! என் கைகள்!' என்று சொன்ன அடுத்த நொடி, சரணாகதி அடைகின்றார் தோமா. 'நான் சீடர்களிடம் சொன்னது இயேசுவுக்கு எப்படி தெரிந்தது?' என அவர் தன் மனதிற்குள் கேட்டிருப்பார். அல்லது இயேசுவின் இருத்தல் அவரை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கும். தோமா இந்த இடத்தில் செய்யும் நம்பிக்கை அறிக்கை மிகவும் மேலானது: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்கின்றார் தோமா.

இதுதான் தோமா இன்று நமக்கு முன்வைக்கும் பாடம். ஆண்டவராகிய கடவுளை நான் தனியாக அனுபவித்தாலன்றி அவரை நம்ப முடியாது. இறையனுபவம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். நம் தந்தை மற்றும் தாயின் அனுபவத்தைப் போன்றே இது தனித்துவமானது. இறையனுபவம் பல நேரங்களில் நமக்குப் புலப்படும் விதமாக இருப்பதில்லை. புலன்களுக்குப் புறம்பானதால் அது இல்லை என்று ஆகிவிடுவதில்லை. 'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்ற சரணாகதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருந்தால் எத்துணை நலம்!

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா, 'நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, 'உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோரின் பாதங்கள் மலைமேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!' என உரைக்கின்றார். மெசியா வருகையை முன்னுரைக்கும் பாடமாக இருக்கும் இந்த இறைவாக்கு, நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் தருகின்றது. பழங்காலத்தில் செய்திகள் அறிவிப்பவர் மலைமேல் ஏறி நின்றி எல்லா மக்களுக்கும் கேட்குமாறு அறிவிப்பார். போர் மற்றும் வன்முறையின் செய்திகளைக் கேட்டுப் பயந்து நின்ற மக்களுக்கு, ஆறுதல் மற்றும் அமைதியின் செய்தியை அறிவிக்கின்றார் இத்தூதர். இவரின் செய்தி நல்வாழ்வைவும் விடுதலையையும் தருகின்றது. புனித தோமா நம் மண்ணில் அறிவித்த செய்தியும் நமக்கு நல்வாழ்வையும் விடுதலையையும் கொண்டு வந்தது. இன்று நாம் ஒருவர் மற்றவருக்கு நற்செய்தி அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் வாழ்வையே நற்செய்தியாக அமைத்துக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் வாசகத்தில், கட்டடம் என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி, திருஅவையின் ஒழுங்கு மற்றும் ஒருங்குநிலையை எபேசு நகர மக்களுக்கு எடுத்துரைக்கின்றார் பவுல். திருத்தூதர்கள் இக்கட்டடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எடுத்துரைத்த நற்செய்தியின் வழியாகவே நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு இணைகிறார்கள்.

தோமா என்னும் கதைமாந்தரை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி என்று சொல்லப்படுகின்ற, 'தோமையாரின் நற்செய்தியிலும்' பார்க்கின்றோம். இவர் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

1. பெயர்
யோவான் நற்செய்தி இவரை திதிம் என்னும் தோமா என்றும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி இவரை திதிம் யூதாசு தோமா என்றும் அழைக்கின்றது. 'திதிம்' (இரட்டை) என்ற சொல்லைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இவர் இரட்டையர்களில் ஒருவர் என்று அதிகமாகச் சொல்லப்படுவதுண்டு. நான், 'திதிம்' என்பதை இரு நிலைகளில் புரிந்துகொள்கிறேன்: (அ) 'திதிம்' என்பது தோமாவிடமிருந்த இரட்டிப்புத்தன்மையைக் குறிக்கிறது. இவர் தன்னிலேயே பிளவுண்ட மனிதர். இயேசு யூதேயாவுக்குச் செல்ல விரும்பும்போது, அவரோடு சென்று இறக்க விரும்புகிறார் (காண். யோவா 11:16). ஆனால், உயிர்த்த ஆண்டவர் மற்ற சீடர்களுக்குத் தோன்றியபோது, 'நான் நம்பமாட்டேன்' (காண். யோவா 20:25) என அவநம்பிக்கை கொள்கின்றார். ஒரே நேரத்தில் துணிவும் அவநம்பிக்கையும் கொண்டவர் இவர். (ஆ) இவருடைய நற்செய்தியில், 'இயேசுவும் நாமும் - எல்லா மனிதர்களும் - இரட்டையர்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இயேசுவைப் பற்றிய புதிய புரிதலையும், நம்மைப் பற்றிய புதிய புரிதலையும் தருகின்றது. இயேசு நம்மைப் போன்றவர். நாம் அனைவரும் இயேசு போன்றவர்கள். இன்னும் அதை நாம் உணராமல் இருக்கிறோம். அதுதான் பிரச்சினை.

2. கேள்வி கேட்பது நல்லது
யோவான் மற்றும் தோமா நற்செய்தி நூல்களில், தோமா கேள்வி கேட்கும் நபராக இருக்கின்றார். 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?' (காண். யோவா 14:5) என்று யோவானிலும், மற்றும் இறையாட்சி பற்றிய நிறைய கேள்விகளைத் தோமாவிலும் கேட்கின்றார். நம் வாழ்வில் எழும் கேள்விகளை இயேசுவிடம் - கடவுளிடம் - எழுப்புவது நலம் எனக் கருதுகிறேன்.
3. குழுமம் இன்றியமையாதது
உயிர்த்த இயேசு வந்தபோது தோமா அவர்களோடு இல்லை (காண். யோவா 20:24). குழுமம் இயேசுவின் சீடர்களுக்கு மிக முக்கியமானது. இந்தக் குழுமம் ஒருவர் மற்றவர்முன் இயேசுவைப் பற்றிச் சான்றுபகரும் இயங்குதளமாக அமைகின்றது.
4. இயேசுவே கடவுள்
'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' (காண். யோவா 20:28) என்று யோவானில் அறிக்கையிடுகிறார் தோமா. தோமா நற்செய்தியில் இயேசுவே தன்னைக் கடவுளாக அவருக்கு வெளிப்படுத்துகின்றார்.
5. காணாமல் நம்புதல்
நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக, அதுவும் காணாமலே நம்புவதற்கான பாடமாக நம்முன் என்றும் நிற்பவர் தோமா.
6. வழிப்போக்கனாய் இரு
தோமா நற்செய்தி (வசனம். 42) இயேசு சொல்லும் இந்தக் குறுகிய வசனத்தைக் கொண்டுள்ளது: 'வழிப்போக்கனாய் இரு!' அதாவது, எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் சுமக்காமல், எதன்மேலும் இலயிக்காமல், நீ தொடங்கிய புள்ளியையும், அடைய வேண்டிய புள்ளியையும் மனத்தில் வைத்து நடந்துகொண்டே இரு. அதிக சுமை தூக்கும் வழிபோக்கனும், அதிகமாய்க் கவனம் சிதறும் வழிப்போக்கனும் இலக்கை அடைவதில்லை. சற்றே வித்தியாசமான ஒரு விடயமும் தோமா நற்செய்தியில் (வ. 16, 6) இருக்கிறது:

'நீங்கள் நோன்பிருந்தால் பாவம் செய்வீர்கள்.செபித்தால் தீர்ப்புக்கு உள்ளாவீர்கள்.தர்மம் செய்தால் உங்கள் ஆன்மாவுக்குத் தீங்கிழைப்பீர்கள்.... ...ஆனால், பொய் சொல்லாதீர்கள். நீங்கள் வெறுக்கும் ஒன்றை நீங்களே செய்யாதீர்கள்.ஏனெனில், எல்லாம் உண்மையை நோக்கியே இருக்கிறது.'
தோமாவும் அவருடைய நற்செய்தியும் மறைபொருளே.

புரிவது போலவும், புரியாததுபோலவும் இருக்கும் அவரும், அவருடைய நற்செய்தியும், இன்றும் அவரை 'திதிம்' ('இரட்டை') என்றே அடையாளப்படுத்துகின்றன.

ser

புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர்

ஒரு கப்பலிலே மக்கள் எல்லோரும் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஆட்டம், பாட்டம் என்று அந்தக் கப்பலே குதூகலத்தால் நிரம்பி இருந்தது. அப்போது திடிரென்று குழந்தை ஒன்று தவறி கடலுக்குள் விழுந்துவிட்டது. இதைப் பார்த்த கப்பல் மாலுமி உடனே கடலுக்குள் பாய்ந்து, குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்.

உறவினர்களோடு மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், தன்னுடைய குழந்தை கடலுக்குள் விழுந்து, காப்பாற்றப் பட்டதைக் கேள்விப்பட்டு பதறிப்போய் ஓடி வந்தாள். அங்கே குழந்தை பத்திரமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.

சிறிது நேரத்தில் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “என் குழந்தையை யார் காப்பாற்றினார்” என்று சத்தமாகக் கேட்டாள். குழந்தையைக் காப்பாற்றிய தன்னை நிச்சயம் பாராட்டுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த மாலுமி, “நான்தான்” என்றார். உடனே அந்தப் பெண், “என்னுடைய குழந்தை போட்டிருந்த கொலுசைக் காணவில்லை. அதை எடுத்தீர்களா?” என்று சந்தேகத்தோடு கேட்டாள். இதைச் சற்றும் எதிர்பாராத, மாலுமி திகைத்துப்போய் நின்றார்.

ஆபத்தில் உதவியவர்களையே சந்தேகப்படும் மனிதர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்று இக்கதையானது நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இன்றைக்கு நாம் விழாக் கொண்டாடும் தூய தோமா சந்தேகப் பேர்வழியாகவே அறியப்பட்டவர். ஆனாலும் உயிர்த்த ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிகிறார்.

நற்செய்தி வாசகத்திலே இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டதை சீடர்கள் அவரிடத்திலே சொன்னபோது அதனை நம்ப மறுத்து, “அவருடைய கைகளில் ஏற்பட்ட காயங்களில் என் விரலையும், அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களில் என் கையையும் விட்டாலன்றி நம்ப மாட்டேன்” என்கிறார். இறுதியில் இயேசு அவருக்குத் தோன்றியபோது, “ஆண்டவரே! என் தேவனே” என்று தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்துகிறார்.

பல நேரங்களில் நாமும் கடவுளை நம்பாதவர்களாக, ஏன் நம்மோடு வாழும் மனிதர்களைக்கூட நம்பாத மக்களாகவே இருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். குடும்பத்தில் கணவன் மனைவியின் மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். ஆதலால் சந்தேகம் என்னும் சாபக்கேட்டை நம்மிடமிருந்து அகற்றுவோம்.

தூய தோமையாரைப் போன்று நாமும் இயேசுவுக்காக உயிர்கொடுப்போம் (யோவா11:16). தூய தோமையார் கடல் கடந்து நம்முடைய நாட்டிற்கு வந்து, நற்செய்தியை அறிவித்தது போன்று, நாமும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிப்போம். இறைவனின் அருள் பெறுவோம்.

ser

அருள்வாக்கு இன்று...
இன்றைய நற்செய்தியில் இயேசு தோமாவை சந்திக்கின்றார். ஏனென்றால் தோமாவின் ஐயப்பாடுகள் நியாயமானவையே. எப்படி எனில் மனிதனாக பிறந்து மானிடருக்காக சிலுவை சாவை ஏற்று மரித்து மீண்டும் உயிர்த்தார் என்பது அன்று உள்ளவர்கள் அறிவார்கள். ஆனால் தோமா தான் கேள்வியின் மூலம் முக்காலத்திற்கும் விடை தேடுகின்றார். இதனை உணர்த்தியவரும் தந்தையே ஆவார். எனவே தான் இறைமகன் தோமாவை நோக்கி நீ கண்டதினால் நம்பினாய். ஆனால் இன்றைய சூழலை மனதில் கொண்டு காணாமல் நம்புவோர் தான் பேறு பெற்றவர்கள் என்று முத்திரை பதிக்கின்றார் இயேசு. ஆம் சகோதரர்களே! இன்று நாம் கண்ணுக்கு புலபடாத இறைவனை கண்டோம்ää கேட்டோம், அவரில் மகிந்தோம் என்பவை நமது உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

அருள்வாக்கு இன்று...
இன்றைய நற்செய்தியில் இயேசு, தோமாவுக்கு தோன்றுகிறார். காரணம் அவர் உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை தம் சீடர்களுக்கு அறிவிக்கும் போது அங்கு தோமா இல்லை. எனவே சீடர்கள் இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியை சொன்னது "நான் அவரது விலாவிலும் கைகளிலும் கால்களிலும் எனது விரலை விட்டாலன்றி நம்பமாட்டேன்" என்று சொல்லிருந்தார். இந்த உயிரோட்டமான வரிகள் முக்காலத்திற்கும் இயேசுவின் உயிர்ப்பை பறை சாற்றும் உயிருள்ள வார்த்தைகளாகும். அதன்படியே இயேசு தோமாயிருக்கும்போது மீண்டும் தோன்றி "இதோ என் கைகள் கால்கள், விலா உனது விரலை விடுமென்றதும்" "என் கடவுளே என் தேவனே" என்ற ஆற்றல் மிக்க உயிரோட்ட அலைகள் தோமாவின் சான்று இன்றள்ள மானிடருக்கு ஒரு சான்றாக உள்ளது.

அருள்வாக்கு இன்று...
இன்றைய நற்செய்தியில், இயேசு, உயிர்த்த பின் தம் சீடர்களுக்குத் தோன்றுகின்றார். அப்போது பன்னிருசீடர்களில் திதீமு எனும் தோமா அங்கில்லை. எனவே சீடர்கள், “ஆண்டவரைக் கண்டோம்” என்றதை நம்பவில்லை. மற்றொரு நாள் இயேசு, சீடர்கள் அறையில் கூடியிருந்தபோது அங்கு அவர்கள் நடுவில் தோன்றி, “உமக்கு அமைதி உண்டாகுக” என்றார். அங்கிருந்த தோமாவை நோக்கி, “இதோ என் கைகள் - என் விலா. இங்கே உன் கைகளை இடு” என்றார். இதனைக் கண்ட தோமா, “என் ஆண்டவரே, என் தேவனே” என்று நம்பிக்கை ஒலியை எழுப்பினார். இயேசு, “தோமா, நீ என்னைக் கண்டதனால் நம்பினாய். காணாமல் நம்புவோர் பேறு பெற்றோர்” என்றார். காரணம் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இறைவாக்கு இவ்வுலகில் வலம் வருவதும், சீடர்கள்-புனிதர்கள்-வேத சாட்சிகளின் உடனிருப்பும் நம் இறைமகனின் பேரொளியும் உடன் பிரகாசிக்கின்றன. நமது நாட்டுப் பாதுகாவலர் விடுத்த வினா, நம் போன்றோருக்குச் சான்றாகும்..

அருள்வாக்கு இன்று...
இன்றும் நம்மில் பலர் குரங்கின் மனம் கொண்டுள்ளனர். விசுவாசமின்றி அந்த சபைக்கு போகலாமா? இந்த சபைக்கு போகலாமா? என்று தாவிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தான் தோமையார் இந்த கேள்வியை முன் வைக்கின்றார். கண்டதால் நம்பிக்கை கொண்டாய். உலகம் முடியும் மட்டும் தோன்றும் என் சந்ததிகள் என்னை காணாமல் விசுவசித்து இறைசித்தத்தை நிறைவேற்றுவார்கள். அவரே பேறுபெற்றோர் என்று நம்மீது இயேசு கொண்டுள்ள நம்பிக்கையை சுட்டி காட்டுகின்றார். இதை நாம் உணர்ந்தவர்களாய் இறையாட்சியை தடம் பதிப்போமா?

ser ஞாயிறு சிந்தனைகள்- நன்றி திருஇருதயத்தூதன் ஜூன்2022

இறைவன் மீது உள்ள தாகத்தால் அவர் மீது உள்ள ஆவலால் அவரை ஏற்றுக்கொண்டு வாழத் துடிக்கும் ஒவ்வொருவரையும் தூய ஆவியாரின் ஆற்றலால் உரிமைப் பிள்ளைகளாக்கி மிகப் பெரிய சாட்சியாய் உயர்த்தி வைக்கிறார் நம் கடவுள்.

மிகவும் அன்பு செலுத்திய தம் தலைவரை, நண்பராகப் பாவித்த இறைமகனை இழந்த சோகத்திலிருந்த சீடர்கள் இயேசுவை உயிருடன் கண்டதால் பேருவகை கொண்டு இருந்திருக்க வேண்டும். அந்நேரத்தில் அங்கில்லாத தோமா வந்ததும் “ஆண்டவரைக் காணோம்" என்ற வார்த்தை தோமாவின் உள்ளத்தில் ஆவலை தாகத்தை ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

“தழும்பைப் பார்த்து, அதில் விரலை இட்டு, விலாவில் என் கைகளை இட்டாலன்றி" என்ற வார்த்தைகள் இயேசுவைப் பார்க்க வேண்டும் அவரைத் தொட வேண்டும் என்ற தோமாவின் ஏக்கத்தையும் தாக்கத்தையும் வெளிப் படுத்துகின்றது. தாகமுள்ளவர்களைத் தேடி வருகின்ற நம் இயேசு மீண்டும் சீடர்களுக்குத் தோன்றி தோமாவின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றார். அப்போது தோமா கூறிய “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" என்ற நம்பிக்கை அறிக்கை நம்பிக்கையின் உறுதியை பறைசாற்றியதால்தான் நம் திருப்பலிகளில் அந்த வார்த்தை முக்கியத்துவம் வாயந்ததாகக் கருதப்பட்டு அறிக்கையிடப் படுகிறது. தோமா நம்பிக்கையின் அடையாளமாகிறார்.

தியானிக்க
புனித தோமா நம்பிக்கையின் அடையாளமா, சந்தேகத்தின் அடையாளமா, என்பது குறித்து தியானித்திருக்கிறோமா?
ஆண்டவர் நமக்கு முன் வந்தால் நாம் அவரிடம் எதைக் கேட்போம் ?
கடவுளின் பிரசன்னத்திற்கு முன் இவ்வுலக விருப்பங்கள் பெரிதாகத் தெரியுமா ?

ser Some thoughts on today's scripture from Sacred Space
Thomas found it difficult to take the word of his companions - even if he hoped they were right. I consider what it's like for me to trust in those around me. How do I show people around me that I trust them and value their opinions? Thomas seemed sure of what he was going to do; in the presence of Jesus, however, he let his plans go. I ask God to give me the freedom to let even my good plans go when I know Jesus' presence.

I try to imagine myself present in the scene the passage describes. What must Thomas be feeling? He is certainly mortified for his excessive reaction to the news that Jesus had appeared to the others when he was not there. Yet Jesus is full of compassion as he gently invites him to touch his wounds, to believe that he is truly risen. How often do I regret my outbursts! Yet Jesus’ reaction is always one of compassionate understanding of my frailties. I ask to know how to be compassionate with others when they disappoint me. Rather than being the doubting one, Thomas pronounces one of the most beautiful expressions of faith in the Gospel, My Lord and my God. I let these words echo in my heart, shedding light on my faith in Jesus and on my lack of it.

When Jesus rose from the dead, witnesses – like Mary Magdalen – went and told his disciples. These believed the word of the messengers. But not Thomas – nothing less than ‘proof’ would satisfy him. There are varying degrees of faith : Jesus is quite clear that Thomas’s ‘proof” is rare : those who come to Christian faith in the future are not going to have this kind of strut for their belief. But their deeper faith will have a special reward. And even though the group of Jesus’ first followers were up-close to the new reality ushered in by his resurrection – it took a while, apparently, for their faith to strengthen. This scene positions them still cowering in fear behind closed doors, even after the Risen One had paid them a visit eight days before. We should not be too shocked at ourselves if we find that our own believing – like that of the disciples – needs to grow.

In this reading Jesus is saying in effect to Thomas, “I am in the process of leaving you and ascending to my Father. This means that you will have to find me present in a new way or through your faith in my love for you”. This is like when someone you love and who loves you goes away for a long time. Since he or she is no longer physically or emotionally present, you have to rely on what you have learned to believe about this person’s love for you. Jesus leaves you with the Gospel stories and invites you to listen to what they are saying to you about how he looks at and loves you now. He does this so that you might believe what each Gospel story is saying to you about his love for you.

We can only imagine how ashamed and angry at themselves the Apostles must have been after their desertion of Jesus. To miss Jesus' apparition must have been the last straw for Thomas. Yet Jesus has no words of reproach but of peace. He accepts Thomas' emotional reaction and gently leads him to one of the finest expressions of faith in the whole of the Gospel: “My Lord and my God”. The Risen Jesus brings peace to troubled hearts, he heals us and leads us to faith. I imagine him taking me gently by the hand and letting me physically feel his presence at my side. What words well from my grateful heart? Thomas' anger led him to discover the deep faith he had in Jesus. Sometimes I might be unaware how helpful my strong emotions may be in growing as a person and as a believer. I ask to hear the Risen Jesus' favourite greeting: “Peace be with you”, words that enable me to look deep into my heart.

Thomas refused to believe in the resurrection until he saw the risen Lord for himself. When he does encounter Jesus and puts his hands in the holes the nails made, and in his side, his doubts disappear and he makes the profound act of faith 'My Lord and my God!' As the case of Thomas illustrates, even the disciples sometimes had doubts. Jesus meets us wherever we are on life’s journey. He knows that in our walk of faith we face many challenges. I pray Lord, that when I encounter trials in my life, I still have the courage to proclaim my act of faith in you.

We might well be grateful to Thomas for expressing and representing some of our own doubts. Even though Jesus rebukes Thomas for his lack of faith, he does not dismiss him. In fact, the encounter becomes an occasion for a profound and personal profession of faith by Thomas: ‘My Lord and my God!’ So too Jesus brings something good from my doubts. ‘Blessed are those who have not seen and yet have come to believe.’ To what extent do I appreciate the true blessing and gift of my Christian faith? Do I constantly thank God for it and strive to put it into practice in my daily life?

Thomas moves from disbelief to the wonderful affirmation on which the Gospel of John is centred: ‘My Lord and my God!’ We are blessed when we believe in the constant personal presence of the living Jesus, even though we do not see him. People sometimes worry when they question the Church’s teaching, but it is healthy to examine what we believe, in order to come to an adult understanding of our faith. Believers are to be thinkers, and doubting can be an honest step in our struggle to believe.

When Thomas says, "Unless....I will not believe", what do I hear in that voice? Hard man? A skeptic? /I've been hurt once and won't let it happen again?/ Whatever was going on in Thomas' heart was put to rights in the meeting with Jesus. How does this speak to me? This is the Resurrection from the point of view of a sceptic who won't simply take the word of others. How do I respond to Thomas? With laughter, scorn, sympathy or fellow-feeling? If I follow through the scene with Thomas, I might learn much about faith and about myself. We see that Thomas lacked faith in his brothers and sisters. His independent mindedness refused to accept their word, wanting to reach his own conclusions for himself. If I am to be a Christian I am called to belong to others - to grow in trust of them if I am to grow in faith in God. I have not seen and yet have come to believe. Jesus speaks of me in this gospel and blesses me.

Thanks to Sacred Space ser

Holy Gospel of Jesus Christ according to Saint John 20,24-29. written by Fr. Luis A. Zazano

Thomas, called Didymus, one of the Twelve, was not with them when Jesus came. So the other disciples said to him, “We have seen the Lord.” But he said to them, “Unless I see the mark of the nails in his hands and put my finger into the nailmarks and put my hand into his side, I will not believe.”

Now a week later his disciples were again inside and Thomas was with them. Jesus came, although the doors were locked, and stood in their midst and said, “Peace be with you.”

Then he said to Thomas, “Put your finger here and see my hands, and bring your hand and put it into my side, and do not be unbelieving, but believe.”

Thomas answered and said to him, “My Lord and my God!”

Jesus said to him, “Have you come to believe because you have seen me? Blessed are those who have not seen and have believed.”

An Apostle of Faith
1) He was Not with Them: There are times in our lives when we find ourselves doing too many things, leading us to distance ourselves from our communities. We end up isolating ourselves from family and friends by doing too much; it becomes a self-imposed wilderness. We become out of touch with our families and our communities. We forget that it is in our communities and families that we meet Jesus. We were not made to be alone. The Apostles were great examples of how important community is. We were made to encounter Jesus through the people and places He brings us to. Do not isolate yourself from these places. Share your gifts with others, even if you find it difficult. God will be with you.

2) The Doubting Thomas-I Can’t See: Sometimes we get weighed down and end up having a negative attitude towards others. It is true that the bumps in the road of life can make us hard and at times, actually distance us from God; the same God who chose us to speak on His behalf. An apostle of Jesus who isolates himself from the community and who neglects that encounter with Jesus, can become hard. Community and prayer are the key to being an apostle.

3) Believe: Faith is what leads us to see Jesus here and now. It is Jesus who comes to meet us everyday and lights our desires for an encounter with Him. He demands faith. It is faith that helps us to be happy. It is faith that gives us strength in every moment and circumstance of our lives. It is faith that leads us to be the ‘better person’ even when everyone would like to see you fall. Have faith and dare to do big things. May God bless you and be with you in the name of the Father, the Son and of the Holy Spirit. Peace.

ser

Doubting Thomas from Pencil Preaching by Pat Marrin St. Thomas the Apostle is important for the faith community because his doubts led to a deeper explanation of the nature of faith itself. How many believers have wished they could ask the question Thomas posed when the other disciples told him they had seen the risen Jesus? We all want proof, and the boldness of Thomas’ demand goes to the heart of the question: Was the risen Christ really the same person as the dead, crucified Jesus?

John’s Gospel is furthest in time from the events of the crucifixion and the Easter appearances. John is also the most theological of the Gospels, so it is natural that our questions seek a definitive answer on this most central of truths about our faith. But a careful reading of all four Gospels shows that the authors and the faith communities they wrote for preserved a zone of mystery around the crucified and risen Jesus. The disciples encountered a transformed, divine Being, not a resuscitated corpse. They recognized their friend and teacher, Jesus of Nazareth, but he was now their Lord in glory.

Easter faith requires a graced movement from the Jesus of history to the Christ in glory, the Son of God. The story of Thomas witnesses to this transition. He moved from seeking physical proof to a theophany that brought him to his knees in worship. He wanted to “see” with his human eyes, but instead his mind and heart were opened to a mystery only believers can apprehend. All the appearance stories in the Gospels are more than fact checking; they are life-changing encounters with a mystery that transcends time and space.

Thomas intrigues us for another reason. He is called Didymus, the “Twin.” That this detail was preserved in the tradition may mean he was an actual twin, or perhaps, that Thomas the doubter and Thomas the believer were aspects of the same person in transition to faith. Two famous novels explore this theme, The Other, by Thomas Tryon, and The Secret Sharer, by Joseph Conrad.

Perhaps we are all “twins,” before-and-after Christians who have had to make the journey from doubt to faith. Crossing the threshold from knowledge to belief is more than just an intellectual feat. Another Thomas, the great St. Thomas Aquinas, described the pursuit of God as “faith seeking understanding” instead of understanding seeking faith. The gift of faith comes first, for no amount of reasoning can reveal the face of the living Christ, the crucified and risen Jesus as our personal encounter with God.

We commemorate Thomas the Apostle because he helps us understand that our faith is a living relationship with Jesus and not a problem to be solved. The Christian life is not a program to be mastered, but an endless mystery that will guide us through this life into an eternity of discovery and joy.

Thanks to The National Catholic Reporter/Pencil Preaching

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு