மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
செக்கரியா 9: 9-10 | உரோமையர் 8: 9, 11-13 | மத்தேயு 11: 25-30

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்







இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 520 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி இஸ்ரயேல் நாட்டுக்குள் புகுந்த மக்களோடு வந்த இறைவாக்கினரில் செக்கரியா என்பவரும் ஒருவர் செக்கரியா என்பதற்கு ஆண்டவர் நினைவுகூர்ந்தார் என்பது பொருள் நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம் அவர்களது விழுந்து கிடந்த நகரங்களும் அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய யெருசலேம் ஆலயமும்தான் மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொள்ளத் தொடங்கின. அந்த நேரத்தில்தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பாரத்து, “மக்களே! உங்களுக்கு நீதியையும் வெற்றியையும் சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார்” என்றார் இதைத்தான் முதல் வாசகம் குறிப்பிடுகிறது.

அறிவிக்கப்பட்ட அரசருக்காக இஸ்ரயேல் நாடு காத்திருந்தது! ஆண்டுகள் மறைந்தன!... ஆண்டவர் பிறந்தார் வளர்பிறைபோல் வளந்தார்! 30 ஆண்டுகள் மறைந்து இருந்தவர் ஒரு நாள் அவர் செக்கரியா முன்னுரைத்த அரசர் நானே என்பதைச் சுட்டிக்காட்ட எளிமையின் மறு உருவாய் வாழ்ந்து மக்களைப் பார்த்து: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11:28-29) என்றார் இந்த உண்மையைத்தான் நற்செய்தி சுட்டிக்‌காட்டுகிறது!

உலகம் தேடுகின்ற நீதியையும் வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு நமக்கு எப்படித் தருகிறார் என்பதற்கு இரண்டாம் வாசகம் பதில் கூறுகின்றது. ஒருவர் தன் இதயத்தில் வாழுகின்ற கிறிஸ்துவின் ஆவியினால் இயக்கப்பட்டு, அந்த ஆவியின் வழி நடந்தால் (கலா.5:22-25) அவர் தேடும் அனைத்தையும் பெறுவார் என்கிறார் புனித பவுல்

கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதற்கு இதோ ஒரு சான்று.

அவர் பெயர் நிக்கி க்ரூஸ் புபெடோ ரிக்கோவைச் சேர்ந்தவர் அவர் வீட்டில் 17 உறுப்பினர்கள் நியூயார்க் நகருக்கு வேலை தேடிச் சென்றார் அங்கே என்ன நடந்தது என்பதை அவர் எழுதிய ஓடு பாப்பா ஓடு (Run Baby Run) என்னும் புத்தகத்தில் விளக்குகின்றார் வேலை கிடைக்கவில்லை. ப்ரூக்ளின் நகரின் தெருக்களில் கொள்ளையடிக்கும் கூட்டம் ஒன்றில் சேர்ந்தார் நிக்கி க்ரூஸ் பின் கூட்டத்தின் தலைவனானார் அவர் செய்யாத பாவம் இல்லை என்று சொல்லலாம் அன்று அவரிடம் வேண்டிய அளவு பணமிருந்தது!
ஆனால் அவர்‌  இதயத்திலிருந்த அமைதியை அவர் இழந்துவிட்டார்‌!

ஒரு நாள் ஒரு செபக் கூட்டத்திற்குள் வேடிக்கைப் பார்ப்பதற்காக அந்த கொள்ளைக்காரர் நுழைந்தார்! கல்வாரியில் கள்வனை மனம் மாற்றிய கர்த்தர் அவருக்காக அங்கே காத்திருந்தார்

அங்கே அதுவரை அவன் வாழ்க்கையில் அனுபவிக்காத நிகழ்ச்சி ஒன்று நடந்தது! இயேசுவின் ஆவி அவன் உள்ளத்தைக் கிள்ளினார்! அப்போது அவன் ஏதேதோ பேச நினைத்தான் ஆனால் பேசமுடியவில்லை. தான் பேச நினைத்ததைத் தனது புத்தகத்திலே எழுதியுள்ளார் என் இறைவா, நீ என்னை அன்பு செய்தால் என் வாழ்க்கையில் இன்று குறுக்கிடும் நான் ஓடிக் களைத்துவிட்டேன் நான் ஓடியது போதும் என்னை மாற்றும் என்னை தயவுசெய்து மாற்றும் - இதுதான் அவன் சொல்ல நினைத்தது!

அவர் செபம் கேட்கப்பட்டது. அதன் பிறகு அவர் அந்த செபக் கூட்டத்தில் கேட்ட முதல் இறைவார்த்தை: ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார் (2 கொரி. 5:17) என்பதாகும்

அவர் ஆன்மாவிற்கு ஆறுதல் கிடைத்தது, இளைப்பாற்றி கிடைத்தது! உள்ளம் தெளிய உடலும் தெளிந்தது! இன்று நற்செய்தியாளராகப் பணியாற்றி எண்ணற்ற இளைஞர்களின்‌ வாழ்க்கையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறார் நிக்கி க்ரூஸ்

நம் இறைவன் நமக்கு என்றுமே ஆறுதல் அளிக்கும் இறைவன்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும்
என்னிடம் வாருங்கள்

மகன் ஒருவன் அவனுடைய தகப்பனை அடியோடு வெறுத்தான் வயதான காலம்!தந்தை திண்ணையில் படுத்திருந்தார் உன்னால் இந்த வீட்டிற்கு என்ன நன்மை? செத்துத் தொலைய வேண்டியதுதானே! “ஏன் என் உயிரை வாங்குறே! என்றான் மகன்

ஒரு நாள் சவப்‌பெட்டியோடு தகப்பன் முன்னால் வந்து நின்றான் மகன் !தகப்பனைப் பார்த்து, இந்தச் சவப்‌பட்டிக்குள் படு என்றான் தகப்பன் மகனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டார் அப்பெட்டியை அந்த மகன் ஓர் உயரமான மலை உச்சிக்குக் கொண்டு சென்றான் மலை உச்சியை அடைந்த போது, மகன் செத்துத் தொலை என்று சொல்லிக்கொண்டு சவப்பெட்டியை உருட்டிவிடப் போனான்

அப்போது பெட்டிக்குள்ளேயிருந்த தகப்பன் பட்டியின் மேல்பகுதியைத் தட்டினார் எதையோ சொல்ல மறந்துவிட்டார் போலும் என்று நினைத்து பெட்டியைத் திறந்தான் மகன்‌!

அப்போது அந்தத் தந்தை, மகனே! இந்தப் பெட்டி அழகாக இருக்கின்றது! இதை ஏன் வீணாக்குகின்றாய்‌? நானே குதித்து
 செத்துவிடுகின்றேன் என்றார் தகப்பன் என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதை மகன் புரிந்துகொண்டான்‌!

உடனே தந்தையின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்!அப்பா! ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க மறுத்தால் யாருமே இந்த உலகில் நிம்மதியாக வாழமுடியாது! வாங்க வீட்டுக்குப் போவோம் என்றான் மகன்

நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சுமையைச் சுமக்க நாம் முன்வந்தால்தான் மற்றவர்களால் சுகமாக வாழமுடியும்   இது ஆண்டவர் இயேசுவுக்கு நன்றாகத் தெரியும்!இதனால்தான் இன்று உலக மக்களைப் பார்த்து, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் [மத் 11: 28) என்கின்றார்

சில சுமைகளை நாமே இறக்கிவைத்துவிடலாம்!சில சுமைகளை மற்றவர்களின் உதவியோடு இறக்கிவைத்துவிடலாம்!சில பெருஞ்சுமைகளை கடவுளால் ஆண்டவர் இயேசுவால் மட்டுமே இறக்கிவைக்கமுழியும்‌!

சுமை என்றால் துன்பம்‌!
சுமை என்றால் துயரம்‌!
சுமை என்றால் இழப்பு!
சுமை என்றால் ஏமாற்றம்‌!

தங்கள் இல்லத்திலிருந்த, உள்ளத்திலிருந்த, பெருஞ்சுமைகளையல்லாம் இறக்கிவைக்க முடியாமல் மக்கள் தவித்த போது அவர்களின் சுமைகளையெல்லாம் இறக்கி வைத்தார் இயேசு.
இதோ சில உதாரணங்கள்‌:

யோவா 2: 1-11 இங்கே இயேசு தாகரமெனும் சுமையை இறக்கிவைக்கின்றார்
யோவா 6: 1-13 இங்கே இயேசு பசியன்னும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 17: 11-19 இங்கே இயேசு நோரயன்னும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 19: 1-10 இங்கே இயேசு பாவிமனும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 7: 01-15 இங்கே இயேசு மரணரமனும் சுமையை இறக்கிவைக்கின்றார் .
திப 2: 1-13 இங்கே இயேசு பயமெனும் சுமையை இறக்கிலைக்கின்றார்

ஆக, இயேசுவின் திருவழகளில் சரணாகதி அடைகின்றவர்கள் சுமைகளிலிருந்து விடுதலை அடைந்து சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பார்கள்

இயேசு நீதி நிறைந்தவர் (முதல் வாசகம்‌) அவரவர்க்கு உரியதை அவரவர்க்குத் தவறாமல் தந்துவிடுவார் விண் மண் நீர் நெருப்பு, காற்று அனைத்தையும் அவர் கட்டுக்குள் கொண்டுவந்து, மகிழ்ச்சி தரும் அற்புதக் கருவிகளாக மாற்றுவார்

நாம் இறந்தால் கூட, இயேசு நம்முள்ளே வாழுகின்ற தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்‌) வழியாக சாவுக்குரிய நமது உடலை உயிர்த்தெழச்செய்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்

ஆகவே, நமது நம்பிக்கை நிறைந்த கண்களை ஆற்றலும் அன்பும் மிக்க இயேசுவின் பக்கம் திரும்புவோம்

மேலும் அறிவோம் :

தனக்குவமை கல்லாதான் தாள்சேர்ந்தார்க்‌(கு) அல்லால்‌
மனக்கவலை மாற்றல் அரிது (குறள்: 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும் ஏனையோர் மனக்கவலை மாறாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆற்றங்கரையில் இருந்த தேள் ஒரு தவளையிடம், "எனக்கு நீந்தத் தெரியாது, என்னை உன் முதுகில் ஏற்றி ஆற்றின் மறு கரைக்குக் கொண்டு செல்" என்று கேட்டது. அதற்குத் தவளை தேளிடம், "நான் உன்னை என் முதுகில் ஏற்றிக்கொண்டு ஆற்றில் நீந்தும்போது பாதி வழியில் என்னைக் கொட்டிவிடுவாய்" என்றது. ஆனால் தேள் தவளையை அவ்வாறு கொட்டமாட்டேன் என்று சத்தியம் செய்ததன் பேரில், தவளை தேளைத் தன் முதுகில் ஏற்றி ஆற்றில் நீந்தியபோது நடு ஆற்றில் தேள் தவளையைக் கொட்டிவிட்டது. "சத்திய வாக்கை மீறி நீ என்னைக் கொட்டினாய்?" என்று தவளை தேளைக் கேட்டதற்குத் தேள் கூறியது: "நான் என்ன செய்வது? என் இயல்பை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ!"

நாம் நமது இயல்பை மாற்ற முடியவில்லை. சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது என்பது பழமொழி. ஆனால் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள்" (உரோ 8:13), ஊன் இயல்பின் செயல்களில் ஒன்று: சீற்றம். அதாவது கோபம் (கலா 5:21). தூய ஆவியின் கனிகளில் ஒன்று: பொறுமை, அதாவது சாந்தம் (கலா 5:22). ஊன் இயல்பின் செயலாகிய கோபத்தைக் குழிதோண்டி புதைத்து விட்டு, ஆவியின் செயலாகிய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சினத்தை நாம் அடக்காவிட்டால் சினம் நம்மை அடக்கம் செய்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்,

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தன் இயல்பைப் பற்றிக் கூறுகிறார்: "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11:29). கிறிஸ்துவின் தனிச்சிறப்புப் பண்புகள் கனிவும் மனத்தாழ்மையும், அதாவது, சாந்தமும் மனத்தாழ்ச்சியும், இவையே கடவுளின் தனிப் பண்புகள் என்று கூறுகிறது இன்றைய பதிலுரைப் பாடல்: "ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்" (திபா 145:8),

இன்றைய முதல் வாசகத்தின் சுருக்கம்: மெசியா சாந்தமுள்ளவராய்க் கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமைதியின் மன்னராக எருசலேில் நுழைவார் (செக் 95-10), செக்கரியாவின் இந்த "இறைவாக்கைக் கிறிஸ்து குருத்து ஞாயிறு அன்று நிறைவேற்றினார்‌" (மத் 21:1-5).

கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் சாந்தம் உள்ளவராக வாழ இன்றைய அருள்வாக்கு வழிபாடு நம்மை அன்புடன் அழைக்கிறது. சாந்தம் உள்ளவர்கள் தான் கனிவுடையோர் (மத் 5:5) அவர்கள்தான் அனாவிம் என அழைக்கப்படும் இறைவனின் ஏழைகள்‌; இவர்களே நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் இவர்களில் முதல் இடம் வகிப்பவர் கிறிஸ்து. அவர் சிலுவைச் சாவை எற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழத்தினார் (பிலி 2:8)

இரண்டு பேர் கிணற்றில் குதித்தனர் அவர்களில் ஒருவர் தண்ணீரில் செத்தார் ஏனெனில் அவர் தலைக்கனம் பிடித்தவர் மற்றவர் தண்ணீர் மூழ்கால் மிதக்கின்றார்‌; ஏனெனில் அவர் மண்டை அவ்வாறே கிறிஸ்துவின் சீடர்களில் ஒரு சிலர் தலைக்கனம் பிடித்தவர்கள் முதலிடத்திற்காகரச் சண்டை போட்டனர் வெறு சிலர் கிறிஸ்துவின் போதனையை புரிந்துகொள்ள முடியாத, மந்தல் புத்தியுள்ள மரமண்டைகளாய்த் திகழ்ந்தனர். இந்திலையில் கிறிஸ்து அவர்களுக்குச் செய்முறை விளக்கம் கொடுத்தார். அவர்களுடைய காலடிகளைக் கழுவித் துடைக்தபின் அவர்களிடம், "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்‌” (யோவா 13:18) என்றார்

கிறிஸ்து செய்தது ஓர் அடிமையின் வேலை, பிறகுடைய பாதங்களைக் கழுவும் அளவுக்கு நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும் "ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்‌” (கலா 5:13) என்று திருத்தூதர் பவுல் நமக்கு அறிவறுத்துகிறார். "அடியார்க்கு அடியார் ” என்று திருத்தந்தை கையொப்பமிடுகிறார்.

ஒரு தாய் தனது எழு வயது மகனைக் கடைக்குக் கூட்டச் சென்று தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையை வாங்கிக் கொடுத்தார் இப்போது அவன் அம்மாவிடம் "இது வேண்டாம்‌: அதுதான் நீ சொல்வதெற்கெல்லாம் தலை ஆட்ட வீட்டில் அப்பா இருக்கிறார். வேறு எதாவது உருப்படியாக வாங்கக் கொடு” என்றான்

பெரியவர்கள் சொல்வதற்கெல்லால் தலையை ஆட்டும் கீழ்ப்படிதல் முறையானது அல்ல, தமது கீழ்ப்படிதல் அறிவு சார்ந்த கீழ்ப்பதலாகவும் அதே நோத்தில் விசுவாசக் கீழ்ப்படிதலாகவும் இருக்கு வேண்டும் மரியா கன்னியாய் இருந்துகொண்டே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானதூதர் கூறியபோது. "இது எப்படி நிகழும்‌?" நான் கன்னி ஆயிற்றே” (லூக் 1:24) என்று கேள்வி கேட்டார் வானதூதர் உரிய வணக்கம் கொடுத்த பின்னைரே, "நான் ஆண்டவருடைவ அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்‌” (லூக் 1:38) என்றார்‌

கடவுள் தம்மை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதாக இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார் (மத் 13:25). குழந்தைகளிடத்தில் இறுமாப்பு,
செருக்கு இல்லை. "ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது" (திபா 131:1-2)

குழந்தைகளின் உள்ளத்துடன் இறுமாப்பின்றி இருக்கும் போது, கிறிஸ்து நமது சுமைகளை எளிதாக்குவார் அவரது நுகம் அழுத்தாது: அவரது சுமை எளிது (மத் 11.30)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சிலுவைகள் சிறகுகளாய்...

ஏதோ ஒரு சமய உங்களை அழைத்திருக்கிறார்? ஜெர்மனி நாட்டு எழுத்தாளர் ஷில்லர் குழந்தைகளுக்குச் சொன்ன உற்சாகமூட்டும் கதையைக் கேளுங்கள்.

"ஒரு காலத்தில் பறவைகளுக்கு இறக்கைகள் இல்லாமல் இருந்தது. பூமியின் மீது அவை ஊர்ந்து நகர்ந்தன. ஒரு நாள் கடவுள் இறக்கைளை அவற்றிடம் வீசி, அவற்றை எடுத்து முதுகில் சுமக்கச் சொன்னார். முதலில் பறவைகளுக்கு அவை மிகவும் கடினமாக இருந்தன. சிறிய பறவைகள் கனமான அந்தப் பெரிய இறக்கைகளை சுமக்க விரும்பவில்லை. ஆனால் அவை கடவுளை நேசித்தன. அதனால் அவர் சொல்லுக்குப் பணிந்து இறக்கைகளை எடுத்துத் தங்கள் முதுகில் வைத்துக் கொண்டன. இறக்கைகளும் பறவைகளின் முதுகில் ஒட்டக் கொண்டன. ஒரு கட்டத்தில் அழுத்தின்ற பாரம் எனத் தோன்றிய இறக்கைகள் அவை மேலே மேலே பறப்பதற்கு உதவியன."

வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் இது! நாம் சுமக்கின்ற பாரங்களை, தேவையில் காரணமாகவோ அல்லது நம் விரும்பத்தின் பொருட்டு நம்மைக் கீழே தள்ளுவதற்குப் பதிலாக, மேலே உயரச் செய்து விடுகின்றன. சிலுவைகளே நமக்குச் சிறகுகளாகும்.

உண்மையில் வாழ்க்கையின் ஒரு பகுதியே சுமைகள். அவைகள் பற்றி நாம் கொள்ளும் பார்வை, அவற்றைச் சந்திக்கும் பக்குவம் இவை நம்முடைய துயரத்தை மகிழ்ச்சியாகும்.

வரலாற்றில் எத்தனை பேர் அடிமைகளாகவே இருந்து தங்களை சக்தியையும் மீறிய பாரங்களைச் சுமந்திருக்கிறார்கள். பாய் மரங்கள், எந்திரங்கள் இல்லாத காலத்தில் பழங்காலக் கப்பல்களைத் துடுப்புகள் மூலம் வலித்த மனிதர்களின் தசைப் பலத்தை நினைத்தும் பார்த்தால். அமெரிக்க கருப்பினமக்கள்கள் ஆறுகளில் பெரிய மரங்களை, படகுகளை இழுத்துச் சென்ற காட்சியும், முதுகு ஒடிய மூட்டைகளைச் சுமந்து சென்ற அவலமும் நினைவுக்கு வரும். அப்பொழுதெல்லாம் அவர்கள் செய்த்து என்ன? பாட்டுப் பாடினார்கள். வாழ்க்கை எந்தச் சுமையை உங்கள் மீது திணித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்… பாடுங்கள்!

இது ஓர் உளைவியல் உண்மை. உளைவியல் மேதைகள் தோன்றுவதற்கு முன்னதாகவே பழங்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உண்மை. சொல்லப்போனால் முதுகெலும்பை முறிப்பது சுமைகள் அல்ல. சுமக்கத் தெரியாமல் சுமப்பகும், துணையின்றித் தன்னந்தனியாகச் சுமப்பதும்தான்.

படிப்பறிவில்லாத பாமரன் ஒருவன் பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு தலையில் பெரும் சுமையோடு அவசர அவசரமாக இரயிலில் ஏறினான். தலையில் கனக்கிற பாரத்தை எங்காவது இறக்கி வைத்துவிட்டுப் படுத்து உறங்க வேண்டும் போல் இருந்தது. அதற்குள் இரயிலும் புறப்பட்டுவிட்டது. சுமையை எங்கே இறக்கி வைப்பது? சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணில் பட்டது அபாயச் சங்கிலி. அதில் மூட்டையைக் கட்டித் தொங்க விட்டால் என்ன? நினைத்தான்; செய்தான்.

திட்ரென்று இரயில் நின்றது. அதிகாரிகள் விரைந்து வந்தனர். தலையில் அடித்துக் கொண்டார்கள். அவனோ ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். அபாயச் சங்கிலியில் தொங்கிய மூட்டையை அவிழ்த்து எடுத்து சரக்கு இருக்க வேண்டிய பகுதியில் வைக்கச் சொல்லி அவனைக் கண்டித்து அபராதமும் விதித்தார்கள். அந்த விவரம் அறியாத அப்பாவியைப் போன்று சோதிடம், போதைப் பொருள், மூட நம்பிக்கை போன்ற தவறான இடங்களில் பாரத்தை இறைக்கி வைத்து இளைப்பாற நினைத்தால் பயணமும் தடைப்படும்; தண்டனையும் கிடைக்கும்; விளைவும் சிக்கலாகும்.

இன்று பாடியோ, உளவியல் அறிஞர்களைத் தேடியோ அல்ல, “என் நுகம் இனிது என் சுமை எளிது (மத்.1:3) என்று கூறி இயேசுவே நம் சுமை தாங்கியாக நின்று அழைக்கிறார்: "பெருஞ்சுமை சுமந்து. சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்'' (மத். 11:28).

ஒருவன் தலையில் சுமையோடு தள்ளாடி நடந்து கொண்டிருந்தான். அந்த வழியே கார் ஒன்று வந்தது. கார் உரிமையாளான் அவன் நிலை கண்டு இரக்கப்பட்டு காருக்குள் அழைத்து உட்காரச் சொன்னான். காருக்குள் உட்கார்ந்த பின்னும் தலையில்லையே சுமையை வைத்திருந்தானாம். அதேபோல்தான் கார் உரிமையாளார், சுமையை இறக்கிக் கீழே வைத்தால் என்ன என்று கேட்டபோது அவன் சொன்னானாம்: “நான்தான் காரைக்குப் பாரமாய் இருக்கிறேன். என் சுமையும் பாரமாக இருக்க வேண்டுமா என்ன?”. இயேசுவே சுமைதாங்கியாக இருக்கும்போது சுமைகள் பற்றிய கவலை நமக்கு எதற்கு?

வாழ்க்கையில் தான் எத்தனை விதமான சுமையின் அழுத்தங்கள்! சமயங்கள், சட்டங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் இவற்றிற்கிடையில்

1. பாவம் என்ற சுமை: “என் பாவத்தால் என் எழும்புகளில் வலுவே இல்லை. என் குற்றங்கள் தலைக்கு மேலே போய்விட்டன. தாங்கவொண்ணாச் சுமையோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன”. (தி.பா. 38:3,4). “எங்கள் பாவங்களின் பாரை எங்களால் தாங்கமுடியவில்லை” (தி.பா. 65:3).

2. பொறுப்பு, கடமை என்ற சுமை: குடும்பப்பாரத்தால் ஆற்றாமை. “கழுத்தில் நுகத்தோடு விரட்டப்படுகிறோம். சோர்ந்து போனோம். எங்களுக்கு ஓய்வே இல்லை” (புலம்பல் 5:5)

3. உடல் ஒரு சுமை: உடல் நோய்கள், ஊனியல்பு இச்சைகள். “அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ் நோக்கி அழுத்துகின்றன. இந்த மண்கூடாரம் கவலை தோய்ந்த மனத்துக்குச் சுமையாய் அமைகிறது” (சா.ரா.9:15). “சாவக்குள்ளாக்கும் இந்த கடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?” (உரோ. 7:24) திருத்தூதர் பவுலின் மனக்குறை!

4. கவலை பிரச்சனை என்ற சுமை: ஓ! என் வேதனைகள் (என்னை அழுத்தும் சஞ்சலங்கள்). “கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை. அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது” (யோபு. 6:3,4)

இந்தச் சுமைகளால் தள்ளாட்டமா? தடுமாற்றமா? விழுந்து விடுவோம் என்ற அச்சமா? விழுந்தாலும் கடவுள் கரத்தில் விழு. ஏனெனில் “என்றுமுள கடவுளே உனது புகலிடம். என்றுமுள அவரது புயமே அழித்தளம்” (இ.ச.33:27).

தஞ்சம் அளிக்கவும் அவர் கைகள் தாங்கி நிற்கும்! “ஆண்டவன் மேல் உன் கவலையைப் போட்டுவிடு. அவன் உனக்கு ஆதரவளிப்பார்” (தி.பா. 55:22). “ஆண்டவன் மோசையை நோக்கி ... எகிப்தியர் அடிமைபடுத்தி வைத்திருந்த இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன் படிக்கையை நினைவு கூர்ந்துள்ளேன். நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டும்: நான் ஆண்டவன். எகிப்தியன் பாரச் சுமைகளை நான் உங்களை மிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அழைம்படுத்தவதிலிருந்து விடுவிப்பேன். எகிப்தியன் சமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவன் நான் என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று கூறினார்” (வி.ப. 6:5–7).

பிறக்கும்போதும் சுமையாகத் தாயின் கருவறையில் இருக்கிறோம்.

இறக்கும்போதும் சுமையாக நான்கு போர் தோளில் இருக்கிறோம்.

வாழும் போதாவது யாருக்கும் சுமையாக இருக்க வேண்டாம். மாறாகப் பிறருடைய சமையத் தாங்கி நிற்போம். “ஒருவர் மற்றவருடைய சுமையத்தை தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்” (கலா 6:2).

“கடவுளுக்கு வல்லமைமிகக் கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” (பேதுரு. 5:6–7).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி, அப்பொல்லோ 13 என்ற விண்வெளிக்கலம் நிலவை நோக்கிப் பாய்ந்தது. அதில் பயணம் செய்த James Lovell, John Swigert மற்றும் Fred Haise என்ற மூன்று விண்வெளி வீரர்களும் நிலவில் காலடி பதித்துவிட்டு, பூமிக்குத் திரும்பும் நோக்கத்துடன், இந்தப் பயணம் ஆரம்பமானது. ஆனால், அப்பொல்லோ 13 புறப்பட்டுச் சென்ற இரு நாட்களில், அக்கலத்திலிருந்த ஆக்சிஜன் பேழையொன்று வெடித்ததால், அந்த விண்வெளிக்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பவேண்டியதாயிற்று. பல ஆபத்தான பிரச்சனைகளைச் சமாளித்து, விண்வெளி வீரர்கள் மூவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். அந்த ஆபத்து நேரத்தில் திறமையாகச் செயல்பட்ட தலைவன், James Lovell அவர்களை உலகமே பாராட்டியது. அவருக்கு விருதுகள் பல வழங்கப்பட்டன.

ஒருமுறை, Lovell அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளையில், "இந்த விபத்து நடந்தபோது, நீங்கள் அதிகம் கவலைப்பட்டீர்களா?" என்று ஒருவர் கேட்டார். அர்த்தமற்ற வகையில் அந்தக் கேள்வி கேட்டவரை, சூழ இருந்தவர்கள் கேவலமாகப் பார்த்தனர். ஆனால், Lovell அவர்கள், அவருக்கு அழகான பதிலொன்றைக் கூறினார்: "இல்லை. நான் கவலைப்படவில்லை. கவலைப்படுவது பயனற்ற ஓர் உணர்ச்சி. அங்கு எழுந்த பிரச்சனையைத் தீர்ப்பது ஒன்றே என் எண்ணங்களை நிறைத்திருந்தது. எனவே, கவலைப்பட எனக்கு நேரமில்லாமல் போனது" என்று Lovell அவர்கள் பதில் சொன்னதும், கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி, அவரைப் பாராட்டினர்.

'கவலைப்படுவது பயனற்றது' என்பது, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை. கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? (மத்தேயு 6: 27) என்று இயேசு கேட்கும் கேள்வியை முற்றிலும் ஆமோதிப்பவர்களாக இருந்தாலும், கவலைப்படுவதை நாம் நிறுத்துவதில்லை. கவலை என்ற சுமையால் கனத்துப் போயிருக்கும் நமக்கு, இயேசு தரும் அற்புதமானத் தீர்வு, இன்றைய நற்செய்தியில் ஓர் அழைப்பாக ஒலிக்கிறது. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11: 28) என்று இயேசு விடுக்கும் இந்த அழைப்பு, நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.

கேட்பதற்கு எளிதாக, இதமாக ஒலிக்கும் இவ்வழைப்பை நம்மில் பலர் முழுமையாக நம்பி, ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கூறுவது, எதார்த்தமான, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத வார்த்தைகள் என்றும், இதை ஓர் ஆன்மீக அழைப்பாக மட்டுமே கருதமுடியும் என்றும் நாம் நினைக்கிறோம். வயதில் வளர்ந்துவிட்ட நாம், வாழ்வில் சந்திக்கும் கவலைகளை, சுமைகளைச் சமாளிக்க, பல அறிவுப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதுவதால், இயேசு விடுக்கும் அழைப்பு மிக எளிமையானதாக, சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது. எனவே அதை முழுமனதுடன் ஏற்க நமக்குள் தயக்கம் உருவாகிறது.

நமது தயக்கத்தைப் புரிந்தவர்போல, இயேசு, இந்த அழைப்பை விடுப்பதற்கு முன், ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். இது, இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியாக ஒலிக்கிறது. இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள பொருளை, விண்ணகத்தந்தை, ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். இயேசுவின் அழைப்பைப் புரிந்துகொள்ள, நாம் குழந்தை மனம் பெற்றிருக்கவேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக இவ்வுலகம் காட்டும் வழிகள் ஏராளம். பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, இவ்வுலகம் காட்டும் தவறான பல வழிகளை எண்ணிப் பார்க்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது.

கோழிப்பண்ணை வைத்திருந்த ஒருவர், தன் பண்ணையில் திடீரென 10 கோழிகள் இறந்ததும், பயந்துபோய், அருகிலிருந்த கோழி வளர்ப்புத் துறை அலுவலகத்தைத் தேடிச் சென்றார். தன் கோழிகள் இறந்த விடயத்தை அவர் சொன்னதும், அங்கிருந்த ஓர் அதிகாரி, மீதமுள்ள கோழிகளுக்கு 'ஆஸ்பரின்' மருந்தைக் கொடுக்கச் சொன்னார். கோழி வளர்ப்பவர், அந்த மருந்தைக் கொடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் 20 கோழிகள் இறந்தன. இம்முறை அவ்வதிகாரி, வேப்பெண்ணெயைக் கொடுப்பது நல்லது என்று சொல்லி அனுப்பினார். அவ்விதமே செயல்பட்ட கோழிப்பண்ணைக்காரர், இம்முறை 30 கோழிகள் இறந்தன என்று முறையிட்டார். இம்முறை, 'பெனிசிலின்' கொடுத்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லி அனுப்பினார், அனைத்தும் தெரிந்த அவ்வதிகாரி. 'பெனிசிலின்' கொடுக்கப்பட்ட இரு நாட்களில் பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும் இறந்தன. இதைக் கேள்விப்பட்ட அதிகாரி, "சே! என்ன அவமானம்! என்னிடம் இன்னும் பலவகை மருந்துகள் உள்ளனவே! அவற்றையெல்லாம் முயற்சி செய்வதற்கு முன், அனைத்து கோழிகளும், இப்படி, அவசரப்பட்டு, அநியாயமாய், இறந்துவிட்டனவே!" என்று வருத்தப்பட்டார்.

வேடிக்கையாக ஒலிக்கும் இந்த உவமை, இவ்வுலகின் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சனைகளை இவ்வுலகம் எவ்விதம் தீர்க்கின்றது என்ற பாடத்தையும் சொல்லித்தருகிறது. "பெருஞ்சுமை சுமந்திருப்போரே, வாருங்கள்! இதோ, உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ள விடுமுறைத் திட்டம்!" என்றோ, "இந்த மாத்திரையை விழுங்கினால், பத்து நொடியில் பறந்திடும் உங்கள் சுமைகள்!" என்றோ கூவிக் கூவி விற்கும் எத்தனை விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்!
நாம் சுமக்கும் சுமைகளுக்கு, கடற்கரை விடுமுறைகள், மயக்கம்தரும் மருந்துகள், மதுபானங்கள், போதைப் பொருள்கள் போன்றவை, தீர்வாக அமையும் என்று, இவ்வுலகம் சொல்லித் தருகிறது. இத்தீர்வுகள், நம் சுமைகளை மறக்கவும், மறுக்கவும் தூண்டும், பொய்யான வழிகள். சுமைகளிலிருந்து தப்பிக்கும் வழிகள்.

இதற்கு நேர்மாறாக, இயேசு தருவது, பொய்யான, தவறான வாக்குறுதி அல்ல. சுமைகளுடன் அவரிடம் சென்றால், இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதே, அவர் தரும் வாக்குறுதி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11: 29) என்பது இயேசு விடுக்கும் அர்த்தமுள்ள அழைப்பு. இவ்வழைப்பில் இயேசு பயன்படுத்தும் நுகம் என்ற உருவகம், நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
இரு மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும்போது, அவ்விரு மாடுகளும் இணைந்து செயல்பட, அவற்றின் கழுத்துப் பகுதியை இணைப்பதற்குப் பொருத்தப்படும் கட்டையை நுகம் என்று அழைக்கிறோம். கலிலேயா பகுதியில், நுகம் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர் இயேசு; எனவே, அவர் அனுபவத்திலிருந்து, இந்த வார்த்தைகளைக் கூறுகிறார் என்று, புகழ்பெற்ற விவிலிய விரிவுரையாளர், வில்லியம் பார்க்லே (William Barclay) அவர்கள் கூறியுள்ளார். நாசரேத்தில், இயேசுவின் தச்சுக்கூடத்தின் மீது விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தால், அதில், "உங்களுக்குப் பொருத்தமான நுகம் இங்கு செய்து தரப்படும்" என்ற வார்த்தைகளே பொறிக்கப்பட்டிருக்கும் என்று, பார்க்லே அவர்கள், இந்த வரிகளுக்கு விளக்கம் தரும்போது, குறிப்பிட்டுள்ளார்.

"என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு விடுக்கும் இவ்வழைப்பை, இரு வழிகளில் சிந்திக்கலாம். ஒன்று, இயேசு, தன் தச்சுக்கலைத் திறமையால், நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நுகத்தையே செய்து தருவார். அதாவது, நம்மை அழுத்தி, வதைக்காத நுகத்தையே, அவர், நம் தோள்மீது சுமத்துவார் என்ற கோணத்தில் சிந்திக்கலாம். அல்லது, இயேசுவிடம் வந்தால், நுகத்தை நாம் தனியே சுமக்கத் தேவையில்லை அவர் ஏற்கனவே அந்த நுகத்தின் மறுபாதியைச் சுமந்தவண்ணம் நிற்கிறார்; அந்நுகத்தில் இணைந்து தோள்கொடுப்பதற்கு நம்மை அழைக்கிறார் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். இயேசுவோடு இணைந்து நாம் சுமப்பதனால், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்பதையும் அவர் இன்றைய நற்செய்தியில் உறுதியாகக் கூறியுள்ளார்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்று இயேசு அழைக்கும்போது, என்னிடம் வந்தால், உங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன் என்ற பொய்யான விளம்பரத்தை இயேசு தரவில்லை. மாறாக, அவர் சொல்வதெல்லாம் இதுதான்: "சுமையோடு என்னிடம் வாருங்கள். நான் ஒரு சுமைத்தாங்கியாக இருந்து, உங்கள் சுமைகளை ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடன் இணைந்து நீங்களும் நுகத்தை ஏற்று, உங்கள் பணியைத் தொடருங்கள். நான் உங்களுடன் இருப்பதால், நீங்கள் சுமக்கும் நுகம் அழுத்தாது, சுமையும் எளிதாகும்" என்பதே, சுமைகளைச் சமாளிக்க, இயேசு கூறும் தீர்வுகள்.

சுமைகளைச் சுமப்பது, ஒவ்வொருவர் வாழ்விலும், தவிர்க்கமுடியாத எதார்த்தம். இருப்பினும், நாம் சுமப்பது, தேவையான சுமைதானா என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவு நமக்குத் தேவை. பெரும்பாலான நேரங்களில், தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். எனவே, தேவையான சுமை எது, தேவையற்ற சுமை எது என்று இனம் காணும் தெளிவு நமக்குக் கிடைக்கவேண்டும் என்று, முதலில் மன்றாடுவோம்.

வாழ்வில் நாம் சுமக்க வேண்டிய, தேவையான சுமைகளை நாம் தனியே சுமப்பதில்லை. இயேசுவும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும், நம்பி ஏற்றுக்கொள்ளவும், இறைவனின் வரத்தை வேண்டுவோம். இந்த வேண்டுதலுக்கு, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையை நாம் நாடலாம். ஏனெனில் அவர் தன் சுமைகளை எவ்விதம் சுமப்பது, எவ்விதம் இறக்கிவைப்பது என்ற பக்குவத்தைப் பெற்றிருந்தார்.
புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைத் துவக்கியவேளையில், பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவ்வேளையில், அவர், ஒவ்வோர் இரவும், உறங்கப் போவதற்குமுன், சிறு செபம் ஒன்றைச் சொன்னார்: "ஆண்டவரே, இயேசுவே, நான் இப்போது உறங்கச் செல்கிறேன். இது உமது திருஅவை. இதனை நீர் பாதுகாத்தருளும்" என்ற வார்த்தைகளுடன் உறங்கச் சென்றதால், தன்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.
2ம் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Dwight Eisenhower அவர்கள், பிரச்சனைகளின் பாரத்தால் பல நாட்கள் துவண்டார். அந்நாட்களில் உறங்கச் செல்லும் முன் அவர், "இறைவா, என்னால் முடிந்த அளவு நல்ல முறையில் இன்று நான் செயல்பட்டுள்ளேன். நாளை விடியும்வரை, நீர் இனி செயலாற்றும்" என்ற செபத்துடன் உறங்கச் சென்றார்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடப் பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு எளிதான, விரைவான, பொய்யான, தவறான வழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களை இதுவரை நாம் கற்றுவந்திருந்தால், அவற்றை மறப்பதற்கும், மறுப்பதற்கும் தேவையான உள்ளொளியையும், உறுதியையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"சுமை தாங்கும் சுமைதாங்கி: இயேசுவிடம் இளைப்பாறுவோம்"

இன்றைய நற்செய்தியில் இயேசு உலகிற்கு ஒரு மகத்தான அழைப்பை விடுக்கிறார்: "வருந்திச் சுமப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

1. எளியவர்களுக்கு வெளிப்படும் மறைபொருள் (God of the Humble)
இயேசு தந்தையைப் போற்றுகிறார். ஏன்? ஏனெனில் இறைவனின் இரகசியங்கள் அறிவாளிகளுக்கும் மேதைகளுக்கும் மறைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு (எளிய உள்ளம் கொண்டவர்களுக்கு) வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
• சிந்தனை: ஆன்மீகம் என்பது மூளையினால் புரிந்துகொள்வது அல்ல, இதயத்தால் உணர்வது. நாம் எப்போது "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற கர்வத்தை விடுத்து, ஒரு குழந்தையைப் போல இறைவனிடம் சரணடைகிறோமோ, அப்போதுதான் அவர் நம் வாழ்வின் வழிகாட்டியாக மாறுகிறார்.
2. இயேசுவின் நுகம் (The Yoke of Jesus)
"என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்." அந்த காலத்தில் இரு மாடுகள் இணைந்து வண்டி இழுக்கும்போது 'நுகம்' பயன்படுத்தப்படும்.
• விளக்கம்: இயேசு நம்மை மட்டும் சுமையைச் சுமக்கச் சொல்லவில்லை. அவரோடு இணைந்து (அதே நுகத்தில்) சுமையைச் சுமக்க அழைக்கிறார். "என் நுகம் மென்மையானது, என் சுமை இலகுவானது" என்கிறார். ஏனெனில், அவரோடு இணையும்போது சுமையின் பெரும்பகுதியை அவரே தாங்கிக்கொள்கிறார்.
3. சாந்தமும் மனத்தாழ்மையும் (Gentleness and Humility)
முதல் வாசகத்தில் (செக்கரியா 9:9-10) மெசியா எப்படி வருவார் என்று சொல்லப்பட்டுள்ளது? அவர் ஒரு போர் வீரனாக குதிரையில் வராமல், ஒரு கழுதையின் மேல் ஏறி 'தாழ்மையுள்ளவராக' வருகிறார்.
• பாடம்: கர்வமும் அகந்தையும் தான் நம் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம். இயேசுவிடம் இருக்கும் சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் நாம் கற்றுக்கொண்டால், நம் உள்ளம் அமைதி (இளைப்பாறுதல்) அடையும்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்த வாரம் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியவை:
• இயேசுவிடம் ஒப்படைத்தல்: உங்களுக்குத் தீர்க்க முடியாத மனக்கவலை, கடன் பிரச்சனை அல்லது குடும்பச் சிக்கல் இருந்தால், அதை இன்று நற்கருணை ஆண்டவரிடம் சொல்லுங்கள். "ஆண்டவரே, என் சுமையை உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன்" எனச் செபியுங்கள்.
• மென்மையைக் கடைப்பிடித்தல்: கோபம் வரும்போது அல்லது ஒருவரை விமர்சிக்கத் தோன்றும் போது, இயேசுவின் "சாந்தத்தை" நினையுங்கள். இந்த வாரம் ஒருமுறை கூடக் கோபப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
• ஆறுதல் அளிப்பவர்களாய் மாறுதல்: இயேசு நமக்கு இளைப்பாறுதல் தருவது போல, நாமும் மற்றவர்களுக்குச் சுமையாக இருக்காமல், அவர்களின் சுமையைக் குறைப்பவர்களாக இருப்போம். வயதானவர்கள் அல்லது நோயாளிகளின் சிறு தேவைகளை நிறைவேற்றுங்கள்.
• உடலால் அல்ல, ஆவியால் வாழ்வோம்: இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 8:9-13) பவுல் அடியார் கூறுவது போல, நம் உடலின் இச்சைகளுக்கு அடிமையாகாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவோம்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"வாழ்க்கை ஒரு பாரமான சிலுவை அல்ல, அது இயேசுவோடு இணைந்து சுமக்கும் ஒரு நுகம். நாம் அவர் பக்கம் சாய்ந்து கொண்டால், நம் பாதைகள் இலகுவாகும், நம் பயணம் இனிமையாகும்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 14ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (சக்‌. 9:9-10)

சக்கரியா, மலாக்கி, ஆக்காய்‌, இவர்கள்‌ மூவரும்‌ பன்னிரண்டு சிறிய இறைவாக்கினர்களில்‌ இறுதியானவர்கள்‌. கி.மு. 520இல்‌ பாபிலோனிய அடிமைத்தனத்தில்‌ இருந்து மீண்டு வரும்‌ போது, மக்கள்‌ புலம்பினார்கள்‌. எப்போது ஆண்டவரின்‌ திரு நகரத்தை காணபோம்‌ என்றும்‌ எப்போது அவரது இல்லத்தில்‌ தங்கி இளைப் பாருவோம்‌ என்றும்‌ ஏங்கி தவித்தார்கள்‌. தவித்த வாய்க்கு தண்ணீர்‌ கொடுக்கும்‌ விதமாய்‌ இறைவாக்கினர்‌ சக்கரியாவின்‌ இறைவாக்கு அமைகின்றது. இது ஆண்டவர்‌ இயேசுவின்‌ வருகைக்கு முன்னால்‌ முன்னறிவிக்கப்பட்ட இறைவாக்கு.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (உரோ. 8: 9,11-13)

உரோமைக்‌ குடிமக்களாய்‌ இருந்து ஆண்டவர்‌ இயேசுவை அறிந்து மனம்மாறிய கிறிஸ்தவர்களுக்கு, உலக நாட்டத்தில்‌ இருந்து, உடல்‌ இச்சைகளில்‌ இருந்து, விலகிவாழ அழைப்பு விடுக்கிறார்‌. உண்மைக்‌ கிறிஸ்தவர்களாக வாழ்ந்து ஆண்டவரின்‌ பேரின்ப வாழ்வில்‌ நிலைத்து நிற்க ஆவியின்‌ ஆற்றல்‌ ஒவ்வொரு வரிலும்‌ குடிகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்‌. தூய ஆவியின்‌ துணையில்லாமல்‌ மனிதன்‌ பாவ சூழ்நிலைகளை வெறுத்து ஒதுக்கி வாழ முடியாது என்பதை தூய பவுல்‌ தெளிவுபடுத்துகிறார்‌

.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மத்தேயு 11:25-30)

இயேசு கலிலேயாவின்‌ சுற்றுப்பகுதி முழுவதும்‌ தனது புதுமைகளை செய்து வந்தார்‌. ஆயினும்‌ மக்கள்‌ ஆண்டவர்‌ இயேசு தான்‌ மெசியா என்பதை உறுதிபட நம்ப மறுத்தனர்‌. எனவேதான்‌ சோதோம்‌, கொமாரா பகுதிகளில்‌ வாழ்ந்த பாவிகளுக்கு வரும்‌ அழிவை விட உங்கள்‌ மீது வரும்‌ அழிவானது மிகுதியாகும்‌ என்கிறார்‌. 12 திருத்தூதர்களையும்‌ 72 சீடர்களையும்‌ சிறு குழந்தை கள்‌ என்று அழைக்கிறார்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ குழந்தை பெற்றோ ருக்கு கீழ்ப்படிந்து வாழ்வது போல்‌ ஆண்டவரின்‌ வார்த்தைக்கு பணிந்து மனமாறி தூய உள்ளத்தினராக விளங்கினர்‌. என்‌ நுகம்‌ எளிது என்கிறார்‌. நம்‌ சுமைகளை அவர்மேல்‌ இறக்கி வைத்தால்‌ சுகமாய்‌ இருக்கும்‌ என்கிறார்‌.

மறையுரை

ஆண்டவர்‌ இயேசுவின்‌ பாசறையில்‌ இன்று பாடம்‌ சொல்லித்‌ தரப்படுகிறது. யாருக்குத்தான்‌ துன்பமில்லை? யாருக்குத்தான்‌ தோல்வியில்லை? ஒவ்வொருவருமே தான்‌ மட்டுமே இவ்வுலகத்தில்‌ துன்பப்படுவதாகவும்‌ மற்றவர்‌ அனைவரும்‌ மகிழ்ச்சியோடு வாழ்வ தாகவும்‌ கணக்குப்‌ போடுகிறார்கள்‌. துன்பத்தை நாம்‌ அணுகுகின்ற, அனுபவிக்கின்ற முறையில்‌ மட்டுமே வித்தியாசம்‌ உள்ளது. இச்சூழ லில்‌ துன்பத்தை நாம்‌ எப்படி அணுக வேண்டும்‌ என்ற கேள்விக்கான விடையை ஆண்டவர்‌ இயேசு இன்று அவரது பாசறையில்‌ பாடம்‌ சொல்லித்‌ தருகிறார்‌.
ᐉ வாருங்கள்‌ என்கிறார்‌.
ᐉ இளைப்பாருங்கள்‌ என்கிறார்‌.
ᐉ கற்றுக்‌ கொள்ளுங்கள்‌ கற்றுக்‌ கொடுங்கள்‌ என்கிறார்‌.

வாருங்கள்‌ என்ற அழைப்பை எங்கும்‌ நாம்‌ காணமுடியும்‌. திருமண அழைப்பிதழில்‌ பார்க்கலாம்‌, புதுமனை புகுவிழா அழைப்‌ பிதல்‌, பிறந்தநாள்‌ விழா அழைப்பிதழ்‌ இது போன்ற மகிழ்ச்சியை பகிர்ந்துக்‌ கொள்ளும்‌ நிகழ்வுகளில்‌ வாருங்கள்‌ என்ற வார்த்தை இருக்கும்‌. அதே வார்த்தையை முற்றிலும்‌ மாறுபட்ட விதத்தில்‌ பயன்படுத்துகிறார்‌. உள்ளம்‌ கலங்குகிறதா? வேதனையா? வாழ்க்கை சுமையாய்‌ தெரிகின்றதா? நாள்‌ முழுவதும்‌ ஒரே பிரச்சனையாய்‌ உள்ளதா? முதலில்‌ என்னிடம்‌ வா, என்று அழைப்பு விடுக்கிறார்‌. இப்படிப்பட்ட அழைப்பைத்தான்‌ இன்றைய நற்செய்தியில்‌ வாசிக்க கேட்டோம்‌. ஆண்டவரின்‌ போதனையை கேட்ட திருமுழுக்கு யோவா னின்‌ சீடர்கள்‌ இயேசுவைப்‌ பார்த்து, “ஆண்டவரே எங்கு தங்குகிறீர்‌” என்று கேட்டனர்‌. ஆண்டவர்‌ “வந்து பாருங்கள்‌” என்று அழைப்பு விடுக்கிறார்‌. மேலும்‌ “வந்து இளைப்பாருங்கள்‌” என்று சொல்கிறார்‌. “இளைப்பாறுங்கள்‌” என்ற ஆண்டவரின்‌ வார்த்தையானது கீழ்காணும்‌ கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ᐉ என்னிடம்‌ வந்து என்னோடு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்‌.
ᐉ உங்களின்‌ சுமைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்‌.
ᐉ தீய ஆவிகள்‌ உங்களுக்கு அடிபணிகின்றன என்பதைக்‌ குறித்து மகிழ்ச்சி கொள்ளவேண்டாம்‌. மாறாக, உங்கள்‌ பெயர்கள்‌ விண்ணகத்தில்‌ எழுதப்பட்டுள்ளன என்பதைக்‌ குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்‌.
ᐉ ஓய்வெடுப்பது உடலளவில்‌ மட்டும்‌ அல்ல, மனதை ஒருமுகப்‌ படுத்தி இறைவனின்‌ நன்மைத்தனத்தில்‌ மகிழ்வதாகும்‌.
ᐉ தூய ஆவிக்குறிய பாடல்களைப்பாடி இறைவனைப்‌ புகழ்வது நல்லது.

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ நாம்‌ எப்படி வாழ வேண்டும்‌ என்று நிறைவாய்‌ கற்றுத்‌ தருகிறார்‌. தூய ஆவிக்கு உட்பட்டு ஊனியல்புகளை விட்டு அகன்று ஆவிக்குரியவர்களாக கிறிஸ்துவ மதிப்பீடுகளின்படி வாழுங்கள்‌ என்று சொல்லித்‌ தருகிறார்‌.

இன்றைய காலக்கட்டத்தில்‌ கடவுள்‌ தந்த வாழ்வை மறந்து நமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்‌ கொள்கிறோம்‌. நமது வாழ்வின்‌ சுமைகள்‌ நாம்‌ பிறக்கும்‌ போது இலவச இணைப்பாய்‌ வருவது அல்ல, மாறாக நாமாக ஏற்படுத்திக்‌ கொள்கிறோம்‌.
ᐉ வேகமாக பரவும்‌ நுகர்வு கலாச்சாரத்தில்‌, பன்னாட்டு கலாச்‌ சாரத்தை இன்றைய நாகரீகம்‌ என்று கருதி, இன்று நமது கலாச்சாரமே ஒரு சுமையாய்‌ தெரிகிறது.
ᐉ அலுவலகத்தில்‌ வேலை செய்யும்‌ போது நேர்மை தவறி கடமை தவறி செய்யும்‌ வேலைகள்‌ ஒரு சுமையாய்‌ தெரிகிறது.
ᐉ குடும்பத்தில்‌ மற்றவர்களோடு நம்மை ஓப்பிட்டுப்‌ பார்த்து, அவர்‌ களிடம்‌ இருப்பது போல நம்மிடம்‌ இல்லையே என்ற எண்ணத்‌ தால்‌ வரவுக்கு மேல்‌ செலவு செய்கிறோம்‌. அப்போது வாழ்க்கை ஒரு சுமையாய்‌ தெரிகிறது.

இத்தனை சுமைகளும்‌ நாமாய்‌ தேடிக்‌ கொள்வது. தூய ஆவியால்‌ உந்தப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள்‌ வாழும்‌ போது, சாத்தானின்‌ சோதனையால்‌ சிறு சிறு இன்னல்கள்‌ வாழ்வில்‌ வந்து பார்க்கும்‌. அப்போது வாருங்கள்‌ என்று சொன்ன ஆண்டவரிடம்‌ ; செல்வோம்‌ இளைப்பாருவோம்‌.

வாழக்‌ கற்றுக்‌ கொண்டு பிறருக்கு கற்றுக்‌ கொடுப்போம்‌. “சுமைகள்‌ சுகமானதே, ஏனெனில்‌ அவர்‌ நுகம்‌ எளிது”.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

🕁 “உங்கள்‌ கவலைகளை என்மீது சுமத்தி விடுங்கள்‌. உங்கள்‌ மீது எனக்கு அக்கறை உண்டு (1பேது. 5:7). “இயேசுவே என்‌ கவலைகளை எடுத்துக்‌ கொள்ளும்‌, ஏற்றுக்கொள்ளும்‌, சுமந்து கொள்ளும்‌, விடுதலை தாரும்‌” என ஓப்புக்‌ கொடுத்தால்‌, அவர்‌ சுமந்து கொள்வார்‌. நாம்‌ சுகமாவோம்‌.

🕁 இன்பத்தை பகிர்ந்து கொள்ளும்‌ போது இன்பம்‌ இரட்டிப்பா கின்றது. துன்பத்தை மற்ற மனிதரோடு பகிர்ந்து கொள்ளும்போது துன்பம்‌ பாதியாக குறைகிறது. ஆனால்‌ இயேசுவோடு பகிர்ந்து கொள்கிறது துன்பம்‌ துயரம்‌ தருவதில்லை. துன்பம்‌ காயங்களை ஏற்படுத்துவதில்லை. துன்பம்‌ அருள்சாதனமாக மாறி அருளைத்‌ தந்து இயேசுவின்‌ மீட்பு பணியில்‌ பங்கு கொள்ள செய்கின்றது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் பதினான்காம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி இயேசுவைப் பற்றிய மூன்று வெளிப்பாடுகளையும் அவற்றை பெற்றுக் கொள்கின்ற இருவகை மக்களையும் பற்றியதாக இருக்கின்றது.

மூன்று வகை வெளிப்பாடுகள்

இயேசு இந்த நற்செய்தியில் மூன்று முக்கியவெளிப்பாடுகளைத் தருகின்றார்.

1. குழந்தைகளுக்கு வெளிப்பாடு

முதலாவதான வெளிப்பாடு இன்றைய நற்செய்தியில் 25-26 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு இறைவன் ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறையுண்மைகளை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காக இயேசு அவரைப் புகழ்கின்றார். இது நன்றிப் பாடலின் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது யார் புகழ்கின்றார்? (இயேசு) யாரைப் புகழ்கின்றார்? (விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவரை). புகழ்ச்சிக்கான காரணம்? குழந்தைகளுக்கு வெளிப்பாடு அருளப்பட்டதால்) ஆகியவை கூறப்பட்டுள்ளன.

2. தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு

இரண்டாவதான வெளிப்பாடு இருபத்தி ஏழாம் வசனத்தில் காணப்படுகின்றது. இயேசு ''என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறோரோ அவரென்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்கிறார். இதென்படி இயேசுவுக்கும், இறைத் தந்தைக்கும் இடையேயான இணைக்கமான உறவு வெளிப்படுத்தப்படுகிறது. அடுத்ததாக இறைத்தந்தையைப் பற்றிய முழுமையான வெளிப்பாடு இயேசுவிடமன்றி வேறு எங்கும் கிடைக்காது.

3. இயேசு இளைப்பாறுதல் தருகின்றவர்

இன்றைய நற்செய்தியின் மூன்றாம் வெளிப்பாடு 28 முதல் 30ஆம் வசனம் வரை காணப்படுகின்றது. அதாவது இயேசு பெருஞ்சுமை சோர்ந்திருப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருபவர். இந்த இளைப்பாறுதல் இயேசுவின் எளிய, அழுத்தாத நுகத்தை ஏற்றுக் கொள்வதில் அடங்கியுள்ளது.அப்படியானால் அழுத்தக்கூடிய சுமை, கனமான சுமை எது எனும் கேள்வி எழுகிறது. சீராக்கின் ஞானம் கூறுகின்ற கருத்துப்படி ஞானத்தின் பாரத்தை அல்லது பழைய தோரா சட்டங்களை' அழுத்துகிற நுகமாகக் கொள்ளலாம் (சீஞா 51:26-27). அதற்கு மாறாக இயேசு அழுத்தாத, எளிதான் அன்புக் கட்டளையைத் தருகின்றார்.

இறை வெளிப்பாட்டுன் இருவகை மக்கள்

மேலே கூறப்பட்ட இயேசுவைப் பற்றிய மூன்று வெளிப்பாடுகளும் இருவகைப்பட்ட மக்களுக்கு அருளப்படுகிறது. இரு வகைப்பட்ட மக்கள் இயேசுவின் வெளிப்பாட்டினால் பயன் பெறுகின்றனர். அவர்களைக் குறித்து காண்போம்.

1. குழந்தைகள்

25 ஆம் வசனத்தில் இறைதந்தை தம் திருவெளிப்பாடுகளை ஞானிகளுக்கும்,அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதாகக்கூறுகின்றார். உலக நியதியின்படியும், யூதக் கண்ணோட்டத்தின்படியும் பெரும் உண்மைகள் பெரும் கதாநாயகர்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும், ஞானம் நிறைந்த வர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் மட்டுமே அருளப்படும் எனஎண்ணப்பட்டது.அதன்படிபார்த்தால் இயேசுவின் காலத்தில் பரிசேயர்களும், சதுசேயர்களும் பிற சமயத் தலைவர்களுமே இதற்குத் தகுதியுடையவர் என எண்ணப்பட்டது. ஆனால் இயேசு அதை மாற்றி, இறை வெளிப்பாடு குழந்தைகளுைக்கு, எளியவர்களுக்கு அருளப்படுவதாக கூறுகின்றார். இயேசுவின் வரலாற்று காலத்தில் இது அதிக சமூக, சமய அந்தஸ்து இல்லாமல் அதிக படிப்பறிவும், சமய அறிவும், சட்ட அறிவும் இல்லாமல் இருந்த சாதாரண சாமானிய மக்களையும் இன்னும் குறிப்பாக இயேசுவையும், அவரது வார்த்தைகளையும் நம்பி வந்த அவரது சீடர்களையும் குறிக்கும். அவர்களுக்கு இயேசு இறை தந்தையைப் பற்றியும், இறையாட்சியைப் பற்றியும் விளைக்குகிறார்.

2. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்

இரண்டாவதாக இயேசுவின் வெளிப்பாட்டின் பயனாளி கள் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்கள். மத்23:4இல் இயேசு மறைநூல் அறிஞர், பரிசேயர் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். "சுமத்தற்கரிய சுமைகளைக் கட்டி மக்களின் தோள்களில் அவர்கள் வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.'' ஆக, யூதச் சட்டம் எனும் பெருஞ்சுமைகளை சுமந்துசொர்ந்துபோனபேருங்கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்தது. இயேசு அவர்களைத் தம்மிடம் அழைத்துக்கொள்கிறார். பெருஞ்சுமைகளைத்தள்ளிவிட்டு அவர்களுக்கு இனிதான நுகத்தைத் தந்து அவர்களுக்கு இளைப் பாறுதல் தருவதாக வாக்குறுதி தருகின்றார். எனவே,யூதச் சட்டங்களைஉதறித் தள்ளிவிட்டு, கனிவும், மனத்தாழ்மையும் உள்ளவராகிய தம்மை நோக்கி வர இயேசு கரம் விரித்து எல்லா மக்களையும் அழைக்கின்றார்.

ஆக, இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக இயேசு இறைத் தந்தையைபற்றியபேருண்மைகளை குழந்தை போன்ற தம் சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். சட்டதிட்டங்களை, பெரும் சுமைகளைச் சுமந்து அல்லலுறும் எல்லா மக்களுக்கும் ஆறுதல் அளிப்பவராக இருக்கின்றார்.

நமது வாழ்விலும் பல வேளைகளில் நாம் பெரும் சுமை களைச் சுமந்து அல்லைலுறுகின்றோம். நாம்அவற்றையேல்லாம் விட்டொழித்து கனிவும், மனத்தாழ்ச்சியும் உடைய இயேசுவை நோக்கி வந்து , அழுத்தாத, எளிதான, இயேசுவின் இறையன்பு பிறரன்புக் கட்டளைகளைக் கொண்டு இளைப்பாறுதல், அமைதி பெற அழைக்கப்படுகின்றோம்.ஆற்றுப்படுத்தவும், ஆறுதல் தரவும் இயேசு தயாராயிருக்கிறார். அவரை நோக்கிச் செல்லவும், அவரை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாரா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - பதின்நான்காம்‌ ஞாயிறு முதல்‌ ஆண்டு

முதல் வாசகம் : செக். 9:9-10

வரவிருக்கும்‌ மெசியா பற்றி இன்றைய வாசகம்‌ எடுத்துக்‌ கூறுகிறது. அம்மெசியாவின்‌ குணங்களாக எளிமையையும்‌ நீதியையும்‌ சமாதானத்தையும்‌ சுட்டுகிறார்‌ செக்கரியா.

மெசியா எளியவர்‌

அவர்‌ எளியவர்‌ என்பதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ சொல்‌ “ani” என்பதாகும்‌. இது பொருளற்ற, பணமற்ற புற எளிமையை மட்டும்‌ சுட்டாது; தாழ்ச்சி என்ற அகக்‌ குணத்தையும்‌ குறிக்கும்‌. இத்தாழ்மையைக்‌ காட்டவே, அவர்‌ கழுதையின்‌ மேலும்‌ பொதிமிருகக்‌ குட்டியின்மேலும்‌ அமர்ந்து வருகிறார்‌ (9 : 9) என்று கூறப்படுகிறது. வேதாகமத்திலே குதிரை போர்வீரரோடு இணைத்துக்‌ கூறப்படும்‌. “பாரவோனின்‌ குதிரைகள்‌, தேர்கள்‌, குதிரைவீரர்கள்‌, படை வீரர்கள்‌... பாளையம்‌ இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர்‌” (விப. 14 : 9); “இதோ, சிவப்புக்‌ குதிரைமேல்‌ ஏறிவந்த மனிதர்‌ ஒருவரை நேற்றிரவு கண்டேன்‌” செக்‌. 1 : 8 - 11) என்பவற்றைக்‌ காண்க. மாறாக, கழுதை அமைதியோடு இணைக்கப்படுகிறது. “ துவன்‌ திராட்சைச்‌ செடியில்‌ தன்‌ கழுதையையும்‌, செழுமையான திராட்சைக்‌ கொடியில்‌ தன்‌ கழுதைக்‌ குட்டியையும்‌ கட்டுவான்‌ (தொநூ. 49 : 11; 'சாலமோனை என்‌ கோவேறு கழுதையின்‌ மேல்‌ அமர்த்திக்‌ கீகோனுக்கு அழைத்துச்‌ செல்லுங்கள்‌” (1 அர. 1: 33) என்பவற்றைக்‌ காண்க. இயேசுவும்‌ அமைதியின்‌ காவலராக, எளிமையின்‌ வெளிப்பாடாக கழுதையின்‌ மேலும்‌ பொதிமிருகக்‌ குட்டியின்‌ மேலும்‌ சாந்தமாக எருசலேமுக்குள்‌ நுழைகிறார்‌ (மத்‌. 21: 4 -5). மெசியாவின்‌ மக்களான புதிய இஸ்ரயேலரும்‌ இவ்‌ஏழ்மைக்‌ குணத்தையே வெளிப்படுத்த வேண்டும்‌.ஏழை எளியோரை உன்‌ நடுவில்‌ நான்‌ விட்டுவைப்பேன்‌ ' என்பார்‌ இறைவன்‌ (செப்‌. 3 : 21) எளியோர்‌ இடத்திலேதான்‌ நேர்மை, நீதி இருக்கும்‌ என்ற முறையிலே, “நாட்டிலிருக்கும்‌ எளியோரே! ஆண்டவரின்‌ கட்டளையைக்‌ கடைப்பிடிப்போரே! அனைவரும்‌ ஆண்டவரைத்‌ தேடுங்கள்‌; நேர்மையை நாடுங்கள்‌; மனத்தாழ்மையைத்‌ தேடுங்கள்‌ ” (செப்‌. 2 : 3) என்பதையும்‌ காண்க. எளிய மெசியாவின்‌ மக்களாகிய நாம்‌ எளிமையை, தாழ்ச்சியை, சாந்தத்தை, நேர்மையை, மெசியாவை நாடுவோமா?

மெசியா நீதியுள்ளவர்‌

“ஆண்டவரைத்‌ தேடுங்கள்‌... நேர்மையை நாடுங்கள்‌ '' (செப்‌. 2 : 3) என்பதிலிருந்து ஆண்டவரையும்‌ நீதியையும்‌ பிரிக்கமுடியாது என அறியலாம்‌. எகிப்தியருடைய அநீதிக்‌ கொடுமைகளினின்று, தம்‌ மக்களை விடுவித்துக்‌ கொண்டுவந்த அரசரே! “ நீதியை நீர்‌ விரும்புகின்றீர்‌' (திபா. 99 : 4), “நிலவுலகை நீதியுடனும்‌ மக்களினங்களை உண்மையுடனும்‌ தீர்ப்பிடுவார்‌ ' (96 : 13) என்று திருப்பாடல்‌ ஆசிரியர்‌ ஏத்துகின்றனர்‌. அவ்‌ஆண்டவரே நீதியின்மேல்‌ பசிதாகமுள்ளோர்‌ பேறுபெற்றோர்‌... நீதியினிமித்தம்‌ துன்புறுத்தப்படுவோர்‌ பேறு பெற்றோர்‌ (மத்‌. 5 : 6, 10) என்று சொல்லி, நாம்‌ நீதிக்காகச்‌ செபிப்பதோடு மட்டும்‌ நின்றுவிடக்கூடாது; நீதியை நிலைநாட்டப்‌ போராட வேண்டும்‌ என்று நம்மை அழைக்கிறார்‌.

மெசியா சமாதானம்‌ தருபவர்‌

தேர்ப்படை, குதிரைப்படை, போர்க்கருவிகளை அழித்தல்‌ என்பது சமாதானத்தைச்‌ சுட்டும்‌ அறிகுறிகள்‌. “அவர்கள்‌ தங்கள்‌ வாள்களைக்‌ கலப்பைக்‌ கொழுக்களாகவும்‌, தங்கள்‌ ஈட்டிகளைக்‌ கருக்கரிவாள்‌ களாகவும்‌ அடித்துக்கொள்வார்கள்‌; ஒர்‌ இனத்திற்கு எதிராக மற்றோர்‌ இனம்‌ வாள்‌ எடுக்காது; அவர்கள்‌ இனி ஒருபோதும்‌ போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்‌” (எசா. 2 : 4) என்பதைக்‌ காண்க. மெசியா அமைதியின்‌ அரசர்‌. அவர்‌ பிறப்பிலே அமைதி கொணர்ந்தார்‌ (லூக்‌. 2 : 14), வாழ்விலே அபைதி அளித்தார்‌ (7 : 50); உயிர்த்த பின்னும்‌ சமாதானமே அவரது நற்செய்தியாய்‌ அமைந்தது (24 : 36). அவர்‌ நமக்கு அளித்த நற்செய்தியும்‌ “சமாதானம்‌ செய்வோர்‌ பேறுபெற்றோர்‌.” சமாதானத்தின்‌ சாட்சியங்களாக நமது வாழ்வை அபைப்போமா? குறிப்பு: “ஒரு கடல்‌ முதல்‌ மறு கடல்வரை” என்பது மத்திய தரைக்கடல்‌ துவக்கி, சூயஸ்‌ - அக்வாபா கணவாய்‌ வரைக்கும்‌; “பேராறு முதல்‌ மாநிலத்தின்‌ எல்லைகள்‌ வரை” என்பது யூப்ரத்தீஸ்‌ நதிக்குக்‌ கிழக்கிலுள்ள பகுதி அனைத்தும்‌ என்றும்‌ குறிக்கும்‌. எனவே, வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு என்று “உலகின்‌ கடை எல்லைகளை” சுட்டும்‌ (காண்‌. திபா. 2 : 8; 72 : 8). “உலகமனைத்தும்‌ என்பது இதன்‌ பொருள்‌.”

இதோ உன்‌ அரசர்‌ உன்னிடம்‌ வருகிறார்.

இரண்டாம் வாசகம் உரோ: 8: 9,11-13

கிறிஸ்தவர்‌ உள்ளத்திலே ஆவியானவர்‌ குடிகொண்டுள்ளார்‌. எனவே அவ்‌ஆவியானவரின்‌ வாழ்வை நாம்‌ வாழவேண்டுமென்று பவுல்‌ நம்மை அழைக்கிறார்‌. இச்சிறு பகுதியில்‌ “ஆவி என்ற சொல்‌ 6 முறை வருதல்‌ காண்க. இந்த ஆவி “கிறிஸ்துவின்‌ ஆவி”, “கடவுளின்‌ ஆவி, “கிறிஸ்தவனின்‌ ஆவி" ஆவார்‌.

ஊனியல்பின்‌ வாழ்வு

ஊனியல்பின்‌ வாழ்வு என்பது ““சட்டத்திற்குரிய பழைய நெறியில்‌” வாழும்‌ வாழ்வு (7 : 5 - 6); சட்டத்திற்கு அடிமையாக வாழ்வது. இது பாவத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ வாழ்வு. ஏனெனில்‌ “சட்டம்‌ இல்லாதிருந்தால்‌ நான்‌ பாவத்தை அறிந்திருக்க மாட்டேன்‌” (7 : 7 - 8) என்பார்‌ பவுல்‌. தொடக்க நூலில்‌, “பாம்பு என்னை ஏமாற்றியது” (தொநா. 3 : 12) என்பதைச்‌ “சட்டம்‌ என்னை வஞ்சித்தது” என்று கூறலாம்‌ (காண்‌: தொநா. 3:3). ஆம்‌, ஊனியல்பு நம்மைப்‌ பாவத்திற்கு இட்டுச்‌ செல்கிறது என்பதையே யோவானும்‌ “உலகு சார்ந்தவையான உடல்‌ ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச்‌ செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருபவை அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை” (1 யோ. 2 : 16) என்பார்‌. இந்த “ஊனியல்பின்‌ இச்சை தூய ஆவிக்கு முரணானது... ஊனியல்பின்‌ செயல்களான... பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம்‌, பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம்‌, கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்‌ முதலியவை ஆகும்‌” (கலா. 5 : 16 - 21).

இத்தகைய தீமைகளையும்‌ பாவங்களையும்‌ விளைவிக்கும்‌ ஊனியல்புக்கு நாம்‌ விடுதலை பெற்றுள்ளோம்‌. “நீங்கள்‌ ஊனியல்புக்கு உட்பட்டவர்கள்‌ அல்ல” (8 : 9) என்பார்‌ பவுல்‌. இது மட்டுமன்று. “நாம்‌ கடமைப்பட்டி ருப்பது ஊனியல்புக்கன்று; அதன்படி நாம்‌ வாழவேண்டியதில்லை ' (8: 12) என்றும்‌ எச்சரிப்பார்‌. திருமுழுக்குப்‌ பெற்று, கிறிஸ்துவுக்குள்‌ நாம்‌ வாழும்‌ புதுவாழ்வு, புனிதமானது. எனவே, “உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால்‌ ஏமாந்து அழிவுறும்‌ பழைய மனிதருக்குரிய இயல்பைக்‌ களைந்துவிடுங்கள்‌ ” (எபே. 4 : 22) என்ற சொற்களைக்‌ கேட்டு நடப்போம்.‌

ஆவியில்‌ வாழ்வு

கிறிஸ்துவ வாழ்வு ஆவியாரின்‌ வாழ்வு. நாம்‌ “ஆவியின்‌ செயலுக்கு உட்பட்டவர்கள்‌. ஏனெனில்‌ கடவுளின்‌ ஆவி நம்மில்‌ குடியிருக்கிறார்‌ (8:9) (இங்குத்‌ தமிழ்‌ மொழி பெயர்ப்பு தவறாயிருக்கிறது. கடவுளின்‌ “ஆவி உங்களுள்‌ குடியிருத்தல்‌ வேண்டும்‌ ' என்று நடக்கவிருப்பதைப்‌ பவுல்‌ சுடறவில்லை; மாறாக, “கடவுளின்‌ ஆவி நம்மில்‌ குடியிருக்கிறார்‌ ' என்று திருமுழுக்கால்‌ நடந்துவிட்ட ஒரு நிலையைச்‌ சுட்டுகிறார்‌. இந்தப்‌ பொருளிலே வசனம்‌ 9 ஐ வாசிக்கவும்‌).

ஆவியார்‌ நம்மில்‌ குடியிருப்பதால்‌ உடலின்‌ செயல்களை நாம்‌ சாகடிக்க வேண்டும்‌ (8 : 13). அப்போதுதான்‌ நாம்‌ வாழ்வதாகக்‌ கூறலாம்‌. “ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில்‌ விதைப்போர்‌ அந்த ஆவி அருளும்‌ நிலைவாழ்வை அறுவடை செய்வர்‌” (கலா. 6 : 8). ஆவியானவர்‌ இறந்தோரிட மிருந்து இயேசுவை உயிர்ப்பித்தார்‌. அதே ஆவியாரே “சாவுக்குரிய நம்‌ உடல்களை உயிர்பெறச்‌ செய்வார்‌ ” (8:19. ஆவியில்‌ உயிர்‌ பெற்ற வாழ்வுதான்‌ ஆவி விளைவிக்கும்‌ பலன்களைக்‌ கொண்ட வாழ்வு. “தூய ஆவியின்‌ கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம்‌, நம்பிக்கை கனிவு, தன்னடக்கம்‌ என்பவை ஆகும்‌. இவையுள்ள இடத்தில்‌ திருச்சட்டத்திற்கு இடமில்லை ” (கலா. 5 : 22 - 23), ஆம்‌, அன்பு வாழ்வு வாழ்வோம்‌, அதுவே திருமுழுக்கு வாழ்வு, அதுவே ஊனியல்பின்‌ இச்சைகளை அடக்கிய வாழ்வு, அதுவே புது வாழ்வு. அதுவே ஆவியாரின்‌ வாழ்வு. “அன்பினில்‌ பிறந்த இறைகுலம்‌ நாமே, அன்பினைக்‌ காத்து அறம்‌ வளர்ப்போமே. ' “அன்புற்று அமர்ந்தவழக்கென்ப வையகத்து இன்புற்றார்‌ எய்தும்‌ சிறப்பு” (குறள்‌ 75)

கடவுளின்‌ ஆவி உங்களுக்குள்‌ குடிகொண்டிருக்கிறார்‌.

நற்செய் மத். 11:25-30

இன்றைய நற்செய்தி இரு பகுதிகளைக்‌ கொண்டது. முதற்பகுதியில்‌ (11: 25 - 27) இயேசு தம்‌ தந்தைக்கு நன்றி கூறுகிறார்‌; இரண்டாம்‌ பகுதியில்‌ (11 : 28 - 30) இயேசு சோர்ந்திருக்கும்‌ மக்களைத்‌ தம்பால்‌ அழைக்கிறார்‌.

இயேசுவின்‌ நன்றி

லூக்கா நற்செய்தியில்‌, இயேசு அனுப்பிய 72 சீடர்கள்‌ திரும்பி வந்து மகிழ்ச்சியுடன்‌ தாங்கள்‌ செய்த பணிபற்றிக்‌ கூறியபோது இயேசு இந்நன்றிச்‌ செபத்தைச்‌ செய்ததாகவுளது (லூக்‌. 10 : 1 - 20). இங்கோ, கலிலேய நகர்‌ மக்கள்‌ தம்‌ போதனையை ஏற்காததற்காக அவர்களுக்குச்‌ சாபமளித்த பின்‌, இயேசு செய்யும்‌ நன்றிச்‌ செயமாக இது அமைகிறது. நற்செய்திக்குப்‌ பெரியோர்‌, அறிஞர்‌, வலியவர்கள்‌ காது கொடுக்கபாட்டார்கள்‌. எளியோர்‌, சிறுவர்‌, சாதாரண மக்களே செவிகொடுப்பர்‌. இயேசுவின்‌ வாழ்வில்‌ இதுவே உண்மைப்பட்டது. எனவே “தந்தையே, விண்ணுக்கும்‌ மண்ணுக்கும்‌ ஆண்டவரே உம்மைப்‌ போற்றுகிறேன்‌. ஏனெனில்‌ ஞானிகளுக்கும்‌ அறிஞர்களுக்கும்‌ இவற்றை மறைத்துச்‌ சிறுவருக்கு வெளிப்படுத்தியதால்‌ உம்மைப்‌ புகழ்கிறேன்‌” (11 : 25) என்பார்‌ இயேசு.

ஞானிகளுக்கும்‌ விவேகிகளுக்கும்‌ நற்செய்தி மறுக்கப்பட்டது; அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பு கிடையாது என்பதல்ல இங்கு பொருள்‌. ஆனால்‌ சாதாரணமாக, தங்களுக்கு எல்லாம்‌ தெரியும்‌, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லையென்று “தலைக்கனம்‌”' கொண்டவர்‌ கள்‌, நற்செய்தியை ஏற்கமாட்டார்கள்‌ என்பதுதான்‌ பொருள்‌. மாறாக, இங்கே, “சிறுவர்‌ ' என்பது வயதில்‌ சிறாரைக்‌ குறிக்காது. எளிய மனத்தோர்‌, திறந்த மனநிலையினர்‌. “சாதாரணர்‌'' என்று யாரைக்‌ கூறுகிறோமோ, அவர்களைச்‌ சுட்டும்‌. இன்றும்‌ நாம்‌ காண்பது இதுதானே? பணம்‌ படைத்தோர்‌, அறிஞர்‌ என்று சொல்லிக்கொள்வோர்‌ முதலியோருக்கு நற்செய்தி செவிடன்‌ காதிலே ஊதின சங்காகத்தானே ஒலிக்கின்றது! நாம்‌ “சாதாரணரா?” “அறிஞர்களா?” “சாதாரணர்‌' என்று ஏற்றுக்கொண்டால்‌, நற்செய்திக்கு நம்‌ செவிகளைத்‌ திறந்த இறைவனுக்கு நன்றிப்பா பாடுவோம்‌, மேலும்‌ நற்செய்தியின்‌ தூண்டுதல்களுக்கு கீழ்ப்படிவோம்‌.

இயேசுவின்‌ அழைப்பு

எல்லோருக்கும்‌ அழைப்பு விடப்படுகிறது. செவிமடுப்போரோ சிலரே (லூக்‌. 14 : 15 - 24). இயேசு சிறப்பாகத்‌ துன்புறுவோர்‌, துயருறுவோர்‌, பாவிகள்‌, ஒடுக்கப்பட்டோர்‌ முதலியோரை அழைக்கிறார்‌, அரவணைக்கிறார்‌ என்பது நற்செய்தி காட்டும்‌ உண்மை. “சுமை சுமந்து சேர்ந்திருப்பவர்களே, எல்லோரும்‌ என்னிடம்‌ வாருங்கள்‌; உங்களை நான்‌ இளைப்பாற்றுவேன்‌ (11: 28) என்பார்‌ இயேசு. ஆம்‌, இயேசு ஒரு சுமை தாங்கி. நம்‌ பாவங்கள்‌, துன்பங்கள்‌ தொல்லைகள்‌ அனைத்தையும்‌ சுமக்கும்‌ சுமைதாங்கி. இச்சுமை தாங்கியில்‌ நம்‌ பாவங்கள்‌, துன்பதுயரங்களாகிய சுமைகளை வைப்போம்‌. அப்போது நமக்கு இளைப்பாற்றி கிடைக்கும்‌. அவரில்‌ சாந்தி அடைய விரும்புகிறோமா?

“என்‌ நுகம்‌” என்று இயேசு சொல்வது இறையரசுக்குரிய பணிகள்‌ என்று பொருள்படும்‌. இறையரசை, இயேசுவின்‌ மதிப்பீடுகளை ஏற்று நடப்பது என்பது கடினமாயிருந்தாலும்‌, இயேசுவே நமக்கு ஆறுதலும்‌ மகிழ்ச்சியும்‌ அளிப்பார்‌. அவரிடமுள்ள சாந்தத்தையும்‌ மனத்தாழ்ச்சியையும்‌ அவரே நமக்குக்‌ கற்றுத்‌ தருவார்‌. அப்போது நம்‌ ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்‌. ஏனெனில்‌ இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோருக்கு, அவருடைய நுகம்‌ இனிதாயிருக்கும்‌; அவர்‌ சுமை எளிதாகவமிருக்கும்‌. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்‌ ஆண்டவர்‌ இருக்கின்றார்‌; நைந்த நெஞ்சத்தாரை அவர்‌ காப்பாற்றுகின்றார்‌'' (திபா. 34 : 18). இயேசுவின்‌ அழைப்புக்குக்‌ செவிமடுத்து, அவரிடம்‌ அண்டி வருவோம்‌; அவரிடம்‌ நம்‌ சுமைகளைப்‌ போடுவோம்‌.

குறிப்பு :

“சுமை” யென்பது சட்டத்தின்‌ கெடுபிடிகளைக்‌ குறிக்கலாம்‌. ஆனால்‌, இங்கு ஏழைகளின்‌ பளு, ஏழையர்‌ நசுக்கப்படல்‌ முதலியவற்றைச்‌ சுட்டும்‌ (காண்‌. 5 : 3 - 5). “இயேசுவின்‌ சுமை” என்பது இறையரசின்‌ தேவைகள்‌. கடமைகள்‌ என்று பொருள்படும்‌.

உங்களை நான்‌ இளைப்பாற்றுவேன்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அழுத்தாத நுகம்

வேலை முடிந்து வீடு திரும்பிய நடுத்தர வயதுடைய ஒருவர் வழியில் இருந்த பூங்கா ஒன்றில் இளைப்பாறச் சென்றார். அவருடைய வீட்டிலும் சில பிரச்சனைகள் இருந்தன. தன் முதுகில் தான் சுமந்து நின்ற வேலைக் கருவிகளை இறக்கிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். அவருக்கு எதிரே இருந்த கிரேக்கக் கடவுள் அட்லஸின் சிலை கண்களில் பட்டது. சேயுஸ் கடவுளால் சபிக்கப்பட்ட அட்லஸ் தன் வாழ்நாள் முழுவதும் பூமியைத் தோளில் தூக்கிச் சுமக்கும் தண்டனையைப் பெறுகிறார். அட்லஸின் கண்களில் தன் வலியை உணர்ந்தார் அந்த நபர். எல்லாருக்கும் வாழ்க்கை சுமையாகிக்கொண்டுதான் இருக்கிறது என்று நினைத்தவாறு வெளியே வந்தார் நபர். அந்தப் பக்கம் குழந்தை இயேசுவின் திருவிழாப் பவனி கடந்து போய்க்கொண்டிருந்தது. சப்பரத்தில் இருந்த திருஉருவத்தைப் பார்த்தார். குழந்தை இயேசுவின் கைகளிலும் பூமி உருண்டை. ஆனால், அந்தக் குழந்தையின் முகத்தில் எந்தவொரு வலியும் இல்லை. புன்முறுவலோடு பூமிப் பந்தை ஏந்தி நின்றார் குழந்தை இயேசு.

தண்டனையாக ஒன்றை நினைத்துச் சுமக்கும்போது அது வலியாக மாறுகிறது.

தாமே விரும்பிச் சுமக்கும்போது அது இனிமையாக மாறுகிறது.

ஞானம் பெற்றார் அவர்.

‘என் நுகம் இனிமையானது. என் சுமை எளிதானது’ என்று நம்மிடம் கூறுகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உவமைப் பொழிவுக்கான தயாரிப்புப் பகுதியாக உள்ளது. இந்த வாசகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில், இயேசு தந்தையிடம் புகழ்ச்சி இறைவேண்டல் செய்கிறார். தாம் வெளியே நிகழ்த்திய அரும் அடையாளங்கள் கண்டுகொள்ளப்படாமல் போனது தமக்கு அருகில் இருந்த திருத்தூதர்கள் தம்மைக் கண்டுகொண்டதற்காக நன்றி கூறுகிறார். இரண்டாவது பகுதியில், ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.’ என்கிறார்.

இயேசுவின் சமகாலத்தில் மக்கள் அரசியல், சமூக, சமயத் தளங்களில் நிறைய சுமைகளைத் தாங்கி நின்றார்கள். அவர்களின் சுமைகளை நீக்குவதாக அல்ல, மாறாக, அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு மொழிகிறார்.

தொடர்ந்து, ‘என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். ‘நுகம்’ என்னும் விவசாயச் சொல் மாடுகளுக்கும் ஏருக்கும் அல்லது வண்டிக்குமான இணைப்பைக் குறிக்கிறது. விவிலியத்தில் ‘நுகம்’ என்பது அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. இயேசுவின் நுகத்துக்குக் கீழ் நம்மையே தாழ்த்தும்போது நாம் இளைப்பாறுதல் பெறுகிறோம்.

‘நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்’ என்று இயேசு தம் மதிப்பீடுகளை இங்கே எடுத்துரைக்கிறார். மலைப்பொழிவில் கனிவுடையோர் பேறுபெற்றோர் என வாழ்த்துகிறார்.

இன்றைய பதிலுரைப்பாடல், ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர் என எடுத்துரைப்பதுடன், தாழ்த்தப்பட்டோரை ஆண்டவர் உயர்த்துகிறார் என்னும் எதிர்நோக்கையும் தருகிறது.

முதல் வாசகத்தில், செக்கரியா இறைவாக்கினர் வரப்போகிற மெசியாவை முன்னுரைக்கிறார். அவர் கழுதைக்குட்டியின்மேல் ஏறி வருபவராகவும் அமைதியை அறிவிப்பவராகவும் மக்கள் நடுவே வருவார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் ஆவிக்குரிய இயல்பில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம்மை அழைக்கிறார்.

நாம் கற்கும் மூன்று பாடங்கள்: (அ) நம் சுமைகளை இயேசு நீக்குவதில்லை. அவற்றைச் சுமப்பதற்கான வழியைக் கற்பிக்கிறார். (ஆ) கனிவும் மனத்தாழ்மையும் இருக்கும் இடத்தில் சுமைகள் கனமாக இருப்பதில்லை. (இ) இயேசுவுடைய நுகத்தை நாம் ஏற்றுக்கொள்ள அவருடைய இயல்பில் பங்குபெற வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறை இயல்புகளை நம்‌ இதயம்‌ சுமப்போம்‌

“உங்கள்‌ நண்பர்‌ யாரெனச்‌ சொல்லுங்கள்‌; நீங்கள்‌ யாரெனச்‌ சொல்கிறேன்‌” என்றொரு பழமொழி உண்டு. கடவுளை நாம்‌ பல உறவுநிலைகளில்‌ பார்த்தாலும்‌ நட்பு ரீதியான உறவோடு அணுகும்போது அதனில்‌ பெறும்‌ அனுபவம்‌ அலாதியானது. கடந்த கத வாரத்தில்‌ கடவுளோடுள்ள சீடத்துவ சிந்தனையைப்‌ பெற்ற நாம்‌, இந்த வாரத்தில்‌ இறைநட்பை இதயம்‌ அனுபவித்து வாழ இன்றைய வாசகங்கள்‌ நம்மை அழைக்கின்றன. முக்கியமாக, கடவுளின்‌ மூன்று இயல்புகள்‌ மிகத்‌ தெளிவாக வெளிப்படுகின்றன. கடவுளோடு நட்புப்‌ பாராட்டும்‌ நம்‌ வாழ்விலும்‌ அந்த இயல்புகள்‌ மிளிர அறைகூவல்‌ விடுக்கிறது இன்றைய ஞாயிறு வழிபாடு.

1. கடவுள்‌ நீதியும்‌ எளிமையுமானவர்‌ : எபிரேயத்தில்‌ -"TSADDIQ" என்ற சொல்‌ நீதியைக்‌ குறித்துக்காட்டும்‌. இது உலகியல்‌ பார்வை கொண்ட “தவற்றுக்குத்‌ தண்டனை” எனப்‌ பொருள்‌ பொதிந்து நிற்கிறது. ஆனால்‌ கடவுளின்‌ நீதியை “MISHPAT" என்ற வார்த்தையால்‌ வருணிக்கிறது விவிலிய மூலநூல்‌. இச்சொல்லுக்கு “ஒடுக்கப்‌ பட்டவருக்கு விடுதலை தரும் நீதி” எனப்‌ பொருள்‌. அந்த உரிமைநிறை நீதியை நிலைநாட்ட அவர்‌ எளிமையின்‌ பாதையைத்‌ தேர்ந்தார்‌, எனவேதான்‌ செக்‌ 9:10 “கழுதையின்‌ மேல்‌, கழுதைக்‌ குட்டியாகிய மறியின்மேல்‌ ஏறி வருகிறவர்‌” என்று குறிப்பிடுகிறது. நீதி இல்லாத எளிமை பலமின்மை; எளிமை இல்லாத நீதி கொடுங்கோன்மை.

2. மழலை மனம்‌ கொண்டவர்‌ : நற்செய்தியின்‌ தொடக்கப்‌ பகுதியில்‌ இயேசுவின்‌ இறைவேண்டலில்‌ சொல்லப்படும்‌ “குழந்தைகள்‌” பருவத்தையோ, அறியாமையையோ, உருவத்தையோ குறிப்பது அல்ல. அது மழலை மன உணர்வோடு வாழும்‌ எளியவரைக்‌ குறிப்பது. நம்புதல்‌, ஏற்றுக்கொள்ளுதல்‌, சார்ந்திருத்தல்‌, மறைக்காத அன்பு என்ற பணபுகளை மனம சுமந்து வாழும்‌ ஒவ்வொருவருக்கும்‌ கடவுள்‌ தம்மை வெளிப்படுத்துகின்றார்‌. கடவுள்‌ தம்‌ அருளைத்‌ தூய உணர்வோடு வாழும்‌ மமலை உள்ளத்திலேதான்‌ ஊற்றி உறவாடுவார்‌.

கனிவும்‌ மனத்தாழ்மையுமானவர்‌ : “கனிவு என்பது கடவுளின்‌ முதல்‌ பண்பு” என்பார்‌ இந்த ஆண்டின்‌ கதாநாயகர்‌ அசிசி நகர்ப்‌ புனித பிரான்சிஸ்‌. இச்சிந்தனையை உள்வாங்கிய நாம்‌ மேனாள்‌ திருத்தந்தை யார்‌ ? “கனிவு என்பது கடவுளின்‌ பெயர்‌” (Misericordiae Vultas) எனச்‌ சொல்வார்‌. இயேசு தம்மை வல்லவர்‌, நல்லவர்‌, அற்புதர்‌, சாதனையாளர்‌ என எங்கும்‌ குறிப்பிடவில்லை. மாறாக அவர்‌ தம்மை “கனிவும்‌ தூழ்மையும்‌ உடையவன்‌” என்றே சுய அறிமுகம்‌ செய்கின்றார்‌. இந்தப்‌ பண்புகளே சுமக்கத்‌ தயாரானது. நாம்‌ யாரும்‌ வாழ்வைத்‌ தனியாகச்‌ சுமக்கவில்லை. நம்மோடு, நமதான எல்லாச்‌ சுமைகளையும்‌ இயேசுவும்‌ சுமக்கிறார்‌.

நாம்‌ கடவுளிடம்‌ நீதி கேட்கும்போது எளிமையாய்‌ வந்து எல்லாவற்றையும்‌ நிறைவேற்றும்‌ அரசராகிறார்‌. நாம்‌ தவறுகளை மன்னிக்க வேண்டும்போது அவற்றை மறந்து நம்மை ஏற்கும்‌ மழலையாக வெளிப்படுகிறார்‌. நாம்‌ சுமைகளைச்‌ சுமந்து சோர்ந்து போகும்போது இளைப்பாறுதல்‌ தரும்‌ கனிவான நண்பராகிறார்‌. இத்தகு கடவுளோடு உறவாடும்‌ நம்‌ வாழ்விலும்‌ இந்த இயல்புகள்‌ வெளிப்பட வேண்டும்‌ என்பதே அவரது எதிர்பார்ப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு