கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்க மூன்று நிகழ்ச்சிகளை இன்றைய வார்த்தை வழிபாடு நமக்குத் தருகிறது.
இறைவாக்கு உரைக்க இறைவன் எசாயாவை அழைத்தபோது, நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் என்றார் எசாயா. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைவனுக்கு எசாயாவின் உதடுகளைச் சுத்தப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்? இறைவன் எசாயாவின் உதடுகளைத் தொட, பரிசுத்தமாக்கப்பட்ட எசாயா, இதோ நானிருக்கிறேன். என்னை அனுப்பும் என்றார்.
இரண்டாவது, புனித பவுல் உயிர்த்த இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். எந்த சக்தியாலும் இயேசுவின் உயிர்ப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று உரைத்தார் துணிவோடு.
மூன்றாவது, பேதுரு, செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான் இரவு முழுவதும் கடலிலே ஒன்றும் அகப்படாமல் சோகத்தில் இருந்தபோது, இயேசு அவர்களைச் சந்திக்கிறார். மீன் ஒன்றும் அகப்படவில்லை என்று கலங்கிய கண்களோடு பேதுரு இயேசுவை நோக்கிக் கூற , ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார் இயேசு. அவ்வாறே பேதுருவும் யாக்கோபும், யோவானும் நம்பி வலைகளை ஆழத்தில் வீச, ஏராளமான மீன்களை வளைத்துப் பிடித்தனர். ஆம்! இயேசுவால் ஆகாதது ஒன்றுமில்லை.
விமான ஓட்டி ஒருவர் நள்ளிரவில் பயணிகளைப் பார்த்து, நாம் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றார் ஆங்கில மொழியில். ஆங்கிலம் தெரியாத ஒருவர் தன் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, விமானஓட்டி என்ன சொல்கிறார் என்று கேட்டார். கேட்டவருக்குக் கிடைத்த பதில், நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார் என்பது.
நாம் இவ்வுலகில் வாழ்வதே நம்பிக்கையில்தான். நாம் நம்பவில்லை என்றால் உலகில் ஒரு நொடிப்பொழுதும் வாழவே முடியாது. ஆகவே நம்பிக்கையை ஆடையாக அணிந்து, இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அப்போது அவர் நம்மீது கருணை மழை பொழிந்திடுவார்.
நம்புகின்றவர்கள் வெற்றிபெறுவார்கள்
நம்பிக்கை என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு குட்டிக்கதை! பேரரசன் ஒருவன் ஓர் ஊரில் ஓர் அழகான கோயிலைக் கட்ட விரும்பினான். கோயில் கட்டும் வேலை துவங்கியது. கோயில் கட்டப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் குடிசை ஒன்று ! அந்தக் குடிசைக்குள்ளே சிறுவன் ஒருவன். அவன் தினம் தினம் கோயில் கட்டும் இடத்திற்குச் சென்று கோயில் கட்டப்படுவதை வேடிக்கைப் பார்ப்பான். கோயில் கட்டப்படும் வேலை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கோபுரத்தின் உச்சிப்பகுதி கட்டப்பட்டது.
அந்தக் கோபுரத்தின் மீது ஏற வேண்டும். ஏறி அங்கிருந்து ஊரைப் பார்க்கவேண்டும். சிறுவனது கனவு நனவாகும் நாள் வந்தது.
கோபுரத்தின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்த கொத்தனாரின் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது. நல்ல வெயில்! கொத்தனார் குனிந்து பார்த்தார். அங்கே அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருந்தான். கொத்தனார் அவனைப் பார்த்து, தம்பி, என் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது ; அதை எடுத்துத்தர முடியுமா? என்று கேட்டார்.
நிச்சயமாக, இதற்காகத்தானே இத்தனை நாள்கள் , இத்தனை மாதங்கள் காத்திருந்தேன் எனச் சொல்லி, சிறுவன் துண்டை எடுத்துக்கொண்டு ஏணியில் ஏறினான். பாதி தூரம் சென்றிருப்பான். என்ன நினைத்தானோ தெரியவில்லை, கீழே குனிந்து பார்த்தான்.
அதள பாதாளம்! கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. கொத்தனாரைப் பார்த்து, ஐயா எனக்கு மயக்கம் வருகின்றது என்றான். அதற்குக் கொத்தனார், தயவு செய்து கீழே பார்க்காதே, மேலே பார், என்னைப் பார் என்றார். அந்தச் சிறுவனும் அப்படியே மேலே பார்த்தபடியே ஏணியில் ஏறினான்.
உச்சியை அடைந்தான். அவன் கனவு நனவாகியது; எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தான்.
இந்நிகழ்ச்சியில் வந்த சிறுவன் கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் நம்பிக்கை.
கொத்தனார் நம்மைவிடப் பெரியவர். அவர் சொல்வதில் உண்மையிருக்கும் என அந்தச் சிறுவன் நம்பினான்.
கதையில் வந்த கொத்தனாரைப் போன்றவர்தான் கடவுள் ! கடவுள் நம்மைவிடப் பெரியவர், அவர் சொல்லும் சொல்லில் உண்மையைத் தவிர வேறொன்றும் இருக்காது என்று சொல்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
இதோ, பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் இரண்டு உதாரணங்கள். தானியேல் நூல் இயல் 6. அங்கே நாம் தானியேல் இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம். அவர் அரசனின் தவறான ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் சிங்கங்களின் குகைக்குள் எறியப்பட்டார். ஆனால் அவரோ தம் கடவுள் இறந்தவர்களின் கடவுள் அல்ல, உயிருள்ளவரின் கடவுள் என்று நம்பி, தமது நம்பிக்கை நிறைந்த கண்களைக் கடவுள் பக்கம் திருப்பினார். சிங்கங்களின் வாய்கள் கட்டப்பட்டன ! அவர் காப்பாற்றப்பட்டார்.
இன்றைய நற்செய்தி புனித பேதுருவின் வாழ்க்கையில் நடந்த ஓர் அருமையான நிகழ்வை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றது.
அது காலை நேரம். கிழக்கு வெளுத்தது, கீழ்வானம் சிவந்தது. பறவைகள் எல்லாம் கூட்டைவிட்டு வானில் பறந்து கானம் பாடின. தெவிட்டாத தீந்தென்றல் இயற்கையை அழகாகத் தாலாட்டியது.
கடல் சிரித்தது ! கரை சிரித்தது !
ஆனால் அந்த மீனவர்களின் முகங்களில் சிரிப்பு இல்லை. காரணம் இரவு முழுவதும் பாடுபட்டும் எந்த மீனும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கே இயேசு தோன்றுகின்றார்.
கவலையா? அங்கே இயேசு தோன்றுவார்.
கண்ணீரா? அங்கே இயேசு தோன்றுவார்.
மயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.
தயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.
அந்த மீனவர்கள் மனத்தினிலே கவலை! நடந்ததை அறிந்துகொண்டு இயேசு ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் (லூக் 5:4) என்றார். இரவு முழுவதும் முயன்றும் எங்களுக்கு மீன் கிடைக்கவில்லை. ஆனால் உமது வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வலையை வீசுகின்றோம் என்று சொல்லி அந்த மீனவர்கள் வலையை வீசினார்கள். ஏராளமான மீன்கள் கிடைத்தன.
இன்று நாம் சிங்கக் குகைக்குள் எறியப்படாமலிருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வறுமை என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம். நோய் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.
மரணம் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.
பல சமயங்களில்
முத்துக்குள் சிப்பி இருப்பதில்லை!
மண்ணுக்குள் மாணிக்கம் இருப்பதில்லை!
தண்ணீருக்குள் தாமரை இருப்பதில்லை!
எத்தனை முறை முயன்றாலும், எவ்வளவு முயன்றாலும் படிக்கும் பாடத்தில் வெற்றி கிடைப்பதில்லை!
இல்லறத்திலும் சுகம் இல்லை , துறவறத்திலும் சுகம் இல்லை !
எடுக்கும் முயற்சியில் சிகரம் கிடைப்பதில்லை ! இல்லறத்திலும் துன்பம், துறவறத்திலும் துன்பம்!
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் (மத் 11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து நமது நம்பிக்கையுள்ள கண்களை நற்கருணை ஆண்டவர் பக்கம் திருப்பி, வளமோடும் நலமோடும் வாழ்வோம். எசாயாவின் நம்பிக்கையை (முதல் வாசகம்), புனித பவுலடிகளாரின் நம்பிக்கையை (இரண்டாம் வாசகம்) நமது நம்பிக்கையாக்கிக் கொள்வோம்.
மேலும் அறிவோம் :
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (குறள் : 661).
பொருள் : செயல்திறம் என்று அறிஞர் பெருமக்கள் போற்றிப் புகழ்வது ஒருவருடைய மன உறுதியே ஆகும். ஏனைய உறுதிகள் அனைத்தும் செயல் உறுதி என்று கூறப்படா!
மனநோய் மருத்துவமனை ஒன்றில் ஒருநாள் காலையில் ஒரு மனநோயாளி தனது கட்டிலுக்கு அருகிலிருந்த சுவற்றில் தனது காதை வைத்து அச் சுவற்றிலிருந்து ஏதோ கேட்பதைப் போன்று காட்டிக் கொண்டார். அவரைப் பார்த்த மற்ற மனநோயாளிகளும் சுவற்றில் காதை வைத்துக் கேட்டனர், காலை 10.00 மணிக்கு மனநோயாளிகள் பிரிவுக்கு வந்த மருத்துவரும் தனது காதை சுவற்றில் வைத்துக் கேட்க, அவர் காதில் ஒன்றும் கேட்கவில்லை . எனவே அவர் மனநோயாளிகளிடம், "சுவற்றில் என்ன கேட்கின்றீர்கள்? என் காதில் ஒன்றும் கேட்கவில்லை ” என்றார். ஒரு மனநோயாளி மருத்துவரிடம், "நீங்கள் சுத்தப் பைத்தியம், நாங்கள் காலையிலிருந்தே காதை வைத்துக் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இன்னும் ஒன்றையும் எங்களால் கேட்க முடியல்லை; அப்படியிருக்க உங்களுக்கு மட்டும் வந்தவுடனே கேட்குமா?" என்றார்.
ஆழத்திற்குப் படகைத் தள்ளி வலையை வீசும்படி பேதுருவை இயேசு கேட்டபோது பேதுரு அவரிடம், "நீங்கள் கடலைப் பற்றிய விபரம் தெரியாத ஆள் போல் இருக்குது; கடலைப் பற்றி நன்கு அறிந்த நாங்களே இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லை. உங்க பேச்சைக் கேட்டு வலையை வீசினால் மீன் ஆகப்படுமா?” என்று அந்த மனநோயாளி மருத்துவரைக் கேட்டதுபோல கேட்டிருக்கலாம். ஆனால், பேதுரு அவ்வாறு செய்யாது இயேசுவிடம், "உமது சொல்லை நம்பி வலையைப் போடுகிறேன்" என்றார், வலைகள் கிழிந்து போகும் அளவுக்கு ஏராளமாக மீன்கள் அகப்பட்டன.
கடவுளை உண்மையாகவே நம்புகிறவர்களுக்கு எல்லாம் கை கூடும், "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை " (லூக் 1:37). கடுகளவு நம்பிக்கை மலையையும் பெயர்க்கும் சக்தி வாய்ந்தது (மத் 17:20). கடவுளிடம் நம்பிக்கை கொண்டோர் இறப்பினும் உயிர் வாழ்வர் (யோவா. 11:25).
காதலர்கள் இருவர் ஓர் ஆழமான கிணற்றில் பேசிக் கொண்டிருந்தனர், "நீங்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு அவர்கள், "எங்கள் காதல் ஆழமானது" என்றார்களாம், கடவுள் மேல் நமக்குள்ள நம்பிக்கையும் ஆழமானதாக இருக்க வேண்டும். "ஆழத்திற்குப் படகைத் தள்ளிக் கொண்டு போங்கள்” என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
நமது நம்பிக்கை மேலோட்டமாக அமையாமல் வேரோட்டமாக இருக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகலாகாது. தோல்வி நம்மைத் துரத்திக் கொண்டு வந்தால் வெற்றி நம்மை நெருங்கி வருகிறது என்று நினைக்கவேண்டும், "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில்; இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒருநாளில்" "நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத்தீர்ப்பு".
கடவுள் ஒரு சிலரைத் தமது இறையரசின் முழு நேரப் பணியாளர்களாகும்படி அழைக்கிறார். அவ்வாறு கடவுளால் அழைக்கப்பட்ட எசாயா, பவுல், பேதுரு ஆகிய மூவருமே தங்களது தகுதி இன்மையை உணர்கின்றனர்.
முதல் வாசகத்தில் எசாயா, "தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்" என்கிறார் (எசா 6:5). இரண்டாம் வாசகத்தில் பவுல், "திருத்தூதர் என அழைக்கப் பெற தாம் தகுதியற்றவர்” என்கிறார் (1 கொரி 15:9). நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார் (லூக் 5:8).
ஆனால், மேற்கூறப்பட்ட மூவரையுமே கடவுள் தமது ஊழியத்துக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். நெருப்புப் பொறியால் எசாயாவின் உதடுகளைத் தொட்டு, அவரிடமிருந்த குற்றப் பழியையும் பாவங்களையும் அகற்றுகிறார் (எசா 6:6-7), திருத்தூதர் பவுல், "நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை " என்கிறார் (1 கொரி 15:10). இயேசு பேதுருவிடம், "அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்கிறார் (லூக் 5:10).
கடவுள் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் என்பதைவிட, தகுதியற்றவர்களை அழைத்து அவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார் என்பதே உண்மை . இன்றும் கடவுள் தமது பணிக்கு இளைஞர்களையும் இளம் பெண்களையும் அழைக்கின்றார். அவர்கள் தங்களது சொந்தப் பலத்தை நம்பாமல். கடவுளின் அருளை நம்பி, எசாயா கூறியது போன்று. "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்று பதிலளித்துக் கடவுளின் அழைத்தலை ஏற்க முன்வரவேண்டும்.
துறவற வாழ்வு மட்டுமல்ல, இல்லற வாழ்வும் இறைவனுடைய அழைத்தலே என்பதை அனைவரும் உணரவேண்டும். கடவுள் எல்லார்க்கும் ஒரே விதமான அழைத்தலைக் கொடுப்பதில்லை. "அருள்கொடைகள் பலவகை; ஆனால் ஆவியார் ஒருவரே" (1 கொரி 12:4).
திருப்பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் பொதுநிலையினர் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும். குருக்கள் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் வசீகரம் செய்கின்றனர். ஆனால், பொதுநிலையினரோ உலகையே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்று 2ஆம் வத்திக்கான் சங்கம் பணிந்து கூறுகிறது (தி. எண். 34), குடும்பம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்ற உலக அமைப்பைப் பொதுநிலையினர் நற்செய்தி உணர்வால் ஊடுருவி உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர்.
ஒரு பேருந்தில் ஒரு பிச்சைக்காரர் கை நீட்டிப் பயணிகளிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார், அவரிடம் பேருந்து நடத்துனர், "டேய் பிச்சைக்காரா! கீழே இறங்கு. நீயும் கை நீட்டிக் காசு வாங்குற: நானும் கை நீட்டிக் காசு வாங்குறேன். நம்ம இரண்டு பேரிலே யார் நடத்துனர், யார் பிச்சைக்காரன் என்று மக்களுக்குத் தெரியாமல் போயிடும்" என்றார்.
இன்று திருச்சபையில் யார் திருப்பணியாளர், யார் பொதுநிலையினர் என்ற வேறுபாடு தெரியாமல் ஒரு குழப்பச் சூழ்நிலை உருவாகி வருகிறது. திருப்பணியாளர்களின் பணிகளைப் பொதுநிலையினரும், பொதுநிலையினரின் பணிகளைத் திருப்பணியாளரும் செய்து வருகின்றனர். இந்த அவல நிலையைப் பார்த்து மறைந்த திருத்தந்தை 2ஆம் ஜான்பால் பின்வருமாறு கூறினார்: "சாமியார்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின் சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்".
திருப்பணியாளர்கள் இதுவரை செய்து வந்த ஒரு சில பணிகளைப் பொதுநிலையினர் தற்போது செய்து வருவதால் அவர்கள் திருப்பணியாளர்கள் ஆவதில்லை. உலகைச் சார்ந்து இருப்பது பொதுநிலையினரின் தனிப்பண்பாகும். உலகின் நடுவில் புளிப்புமாவு போல் செயல்பட்டு உலகக் காரியங்களில் நற்செய்தியைப் புகுத்துவது பொதுநிலையினருக்குரிய தனிப்பட்ட அழைத்தலாகும்.
எனவே, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தத்தம் அழைத்தலுக்கு ஏற்பத் திருத்தூதுப்பணி ஆற்றுவதே காலத்தின் கட்டாயமாகும், உலகின் நடுவில் வாழ்ந்து பொதுநிலையினர் நற்செய்திப் பணிபுரியட்டும். அதே பணியை உலகிலிருந்து பிரிந்து குருக்களும் துறவறத்தாரும் ஆற்றட்டும். அரங்கை மாற்றாமல் அனைவரும் ஆண்டவருக்கு ஊழியம் புரிய ஆண்டவர் அருள்வாராக!
தகுதியின்மையே தகுதி!
திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலகத் திருஅவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்த முதல் நேர்காணல் அது. நிருபர்கள் கேட்ட முதல் கேள்வி: “நீங்கள் யார்?” திருத்தந்தை கிஞ்சித்தும் எதிர்பார்க்காத கேள்வி அது! சிறிது அதிர்ந்தபின் அவர் சொன்னார்: “நான் ஒரு பாவி” நிருபர்கள் எதிர்பாராத பதில் அது! திருத்தந்தை தொடர்ந்தார்: “நான் ஒரு பாவி. ஆனால் பாவியான என்னைக் கடவுள் தனது இரக்கப் பெருக்கினால் தனது திருப்பணிக்கு அழைத்திருக்கிறார். நான் இருப்பது இயங்குவது எல்லாமே இறைவன் போட்ட பிச்சை”.
வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்கள் நம்மை மாற்றுகின்றன. வாழ்வில் திருப்புமுனைகளாகின்றன.
குஜராத் மாநிலத்தில் பிறந்த அண்ணல் காந்தி தன் தாயின் அனுமதி பெற்று மதிப்புமிக்க பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் நகர் சென்றார். தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தென் ஆப்பிரிக்கா சென்று தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். அந்த நாட்டு இரயிலில் பயணம் செய்த அனைவரும் வெள்ளையர்கள். காந்தி மட்டுமே கருப்பராக இருநதார். இனவெறி கொண்ட வெள்ளையர் ஒருவர் அண்ணல் காந்தி முதல் வகுப்பில் பயணம் செய்வதைக் கண்டு பொங்கி எழுந்தார். விரைந்து வந்து காந்தியின் சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்து ஓடும் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு, “முதல் வகுப்பில் பயணம் செய்யக் கருப்பர்களுக்கு உரிமையில்லை' என்று உரக்கக் கத்தினார். மனித நேய உணர்வின்றி காட்டு மிராண்டித்தனமாக. நடந்து கொண்ட வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியே தீர வேண்டும் என்று அன்று முடிவெடுத்தார் காந்தி.
1946 ஆகஸ்டு 16இல் கொல்கத்தா நகர் சமயக் கலவரத்தால் இரத்தக்காடானது.தன் பராமரிப்பில் உள்ள 300 குழந்தைகளுக்கு உணவு தேடிக் கலவர வீதியில் நடந்த அன்னை தெரசாவை; சிதைந்து சிதறிக் கிடந்த மனித உடல்கள், கவனிப்பாரற்று மனித மாண்பிழந்து நின்ற மனித உருவங்கள் தொட்டன. அடுத்த செப்டம்பர் 10இல் அன்னையின் வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தியது இந்த மரண ஒல அதிர்ச்சிதான்.
அனுபவங்கள் வாழ்வின் திருப்புமுனைகளாவதை இன்றைய வழிபாட்டு வாசகங்கள் மூன்றும் நமக்கு உணர்த்துகின்றன. இறைவாக்கினர் எசாயா பெற்ற அழைப்பு. பவுலான சவுல் பெற்ற அழைப்பு. மீனவர் பேதுரு பெற்ற அழைப்பு. மூன்றுக்கும் உள்ள பொது அம்சங்கள் 1. தங்கள் பாவநிலை, இயலாமை பற்றிய தன்னுணர்வு பெற்றார்கள் என்பது. 2. அந்த இயலாமையில் இறைவனின் தூய்மையை, ஆற்றலைக் கண்டு கொண்டார்கள் என்பது. 3. இறைவனுடைய அழைப்பை, பணியை உவந்து ஏற்றார்கள் என்பது.
இறைவனின் அழைப்பை எசாயா கேட்டதும் “தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான் (எசா. 6:5) அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும்?” என்று திகைத்து நின்ற வேளையில் ஆண்டவர் அவர் உதடுகளைத் தூய்மைப்படுத்தி “துணிந்து செல். தயக்கம் வேண்டாம். நான் என்றும் உன்னோடு” என்று ஆறுதல் தருகிறார். எங்கோ எதையோ சாதிக்கத் துடிதுடித்த சவுலை இறைவன் திசைதிருப்பித் திருத்தூதர் பவுலாக்குகிறார். “நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்.” (1 கொரி. 15:9) எனத் தன் இயலாமையையும் இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும். ஏற்றுக் கொள்கிறார் பவுல்.
பேதுருவின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு இன்றைய நற்செய்தி. “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்.” (லூக். 5:4) என்ற இயேசுவின் வார்த்தைக்குப் பணிந்து பெரும் திரளான மீன்களைப் பிடிக்கிறார் பேதுரு. அவருக்கு இது ஆழமானதோர் அனுபவம். அவர் கடலின் ஆழத்திற்கு மட்டுமா சென்றார்? தனது மனதின் ஆழத்திற்குச் சென்று தன் நிலையை முற்றிலும் உணர்ந்து “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்.” (லூக். 5:8) என்றார். இயேசுவின் உடனிருப்பால் இயேசு யார் என்பதையும் தான் யார் என்பதையும் உணர்ந்து கொள்கிறார். -அந்த நேரத்தில்தான் அவர் புதியதோர் பணிக்கான அழைப்பைப் பெறுகிறார். “அஞ்சாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்.” (லூக். 5:10).
வாழ்க்கைப் படகை ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போக பணிக்கிறார் இயேசு. நிறைவாழ்வைக் காண விரும்புபவர்கள் ஆழத்திற்குப் போகத் தயங்கலாகாது. அதற்கான துணிவு இயேசுவின் சீடனுக்கு மிக இன்றியமையாதது. நுனிம்புல் மேய்வதல்ல கிறிஸ்தவ வாழ்வு. ஆழமான அனுபவங்களுக்கு அழைப்பு வீடுப்பது கீற்ஸ்தவம். மேலோட்டமாக வாழ்வது அல்ல, வேறோட்டமாக வாழ்வது கிறீஸ்தவம். அப்போது நம்மிடம் உள்ள தகுதியின்மைகள், நம்மை அழைக்கும் இறைவனுக்கு என்றும் தடைகளாய் தோன்றுவதில்லை.இந்த உண்மையை உணர்ந்து அவரது வார்த்தையை - அழைப்பை ஏற்போமாயின் நாம் இறைவனின் மகத்தான திட்டங்களுக்கு கருவிகளாய் அமைந்துவிடுவோம் என்பது நிச்சயம். . நாம்நல்லவர்களாக கருக்கிறோம் என்பதற்காக அழைப்பதில்லை. மாறாக நம்மை நல்லவர்களாக்குவதற்காகவே கடவுள் நம்மை அழைக்கிறார்.
தகுதியைப் பார்த்து வேலைக்கு ஆள் எடுப்பது உலக நியதி. தகுதியற்றவருக்குத் தகுதி தந்து பணி செய்ய வைப்பது இறைவனின் நியதி. திருத்தூதர் பவுலுக்கு இயேசு கூறியது: “என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” (2 கொரி. 12:9). இதை உணர்ந்து பவுல் எழுதுவார்: “என் வலுவின் மையிலும் இகழ்ச்சியிலும், இடரிலும் “ இன்னவிலும், நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாய் இருக்கிறேன் ” (2 கொரி. 12:10). ஆகவே இறைவனின் இதயத்தில் இடம் பிடிக்க தகுதியற்றவர்களாகிய நாம் தகுதியுடையவர்களே!
சிறுவன் தாவீதை இஸ்ரயேல் மக்களின் அரசனாக அருள்பொழிவு செய்யும் நிகழ்வு உள்ளத்தைத் தொடும் ஒன்று. தாவீ து திருப்பொழிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால் தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்தா? “மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது இல்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்.
திருப்பணியாளர்கள் கடவுளின் ஈடு இணையற்ற, செல்வத்தைக் கொண்டுள்ள மண்பாண்டங்கள். அவர்கள் தகுதி அவர்களிடமிருந்து வரவில்லை. கடவுளிடமிருந்தே வருகிறது (2 கொரி. 4:7). கடவுள் தகுதி உள்ளவர்களை அழைப்பதில்லை. மாறாகத் தான் அழைத்தவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார்.
தகுதியின்மையில் கூடத் தகுதியைப் பார்ப்பவர் இறைவன். உலகப்புகழ் பெற்ற சிற்பி இத்தாலி நாட்டு மைக்கிள் ஆஞ்சலோ, ஒரு சிற்பியாகச் சிகரம் ஏற, வாழ்க்கை இரகசியம் என்ன என்று கேட்டபோது, அவர் சொன்னார். “கரடுமுரடாக இருந்தாலும் ஒவ்வொரு கல்லுக்குள்ளும் அழகான சிற்பம் ஒளிந்திருக்கிறது. உளி எடுத்துத் தேவையற்ற வெளிப்பகுதிகளைச் செதுக்கி அகற்றினால், உள்ளே இருக்கும் எழிலான சிற்பம் தன் முகத்தைக் காட்டிவிடும்”. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒர் அற்புதமான சிற்பம் இருப்பதைக் கடவுள் அறிவார். தனது சாயலில் அவர் உருவாக்கிய படைப்புத்தானே மனிதன்! (தொ.நூ. 1:27). கடவுளாகிய தனக்குச் சற்றே சிறியவராகத் தானே மனிதனைப் படைத்தார்! (தி.பா. 8:5).
தெய்வ பயம் ஞானத்தின் தொடக்கம். ஆம், அது வெறும் தொடக்கமே! அதன் முடிவு, அது காணும் முழுமை, நிறைவு - தெய்வ அன்பு. பயம் முதலில் அன்பு முடிவில்! “உங்கள் மீட்பை அச்சத்திலும் நடுக்கத்திலும் உழைத்துப் பெறுங்கள்” என்கிறார் பவுல்.
தெய்வ பயத்தில் தொடங்கி தெய்வ அன்பில் நிறைவு பெறுவதே ஞானம். ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறு பெற்றோர். “கடவுளுக்கு நான் அஞ்சுகிறேன். கடவுளுக்கு அடுத்தபடி கடவுளைக் கண்டு அஞ்சாதவனுக்கு அஞ்சுகிறேன்” என்பது யாரோ சொன்னது.
திருமுழுக்கு யோவானிடம் இயேசு திருமுழுக்கு பெற்ற நிகழ்வை நான்கு வாரங்களுக்கு முன் சிந்தித்தோம். இந்த நிகழ்வைக் குறித்து மக்களுக்கு மறையுரையாற்றிய ஒருவர், இறுதியில் ஒரு சிறு செபத்தைச் சொன்னார்: "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்று அவர் வேண்டினார்.
இது மிகவும் ஆபத்தான, அபத்தமான, தவறான செபம். போலித்தாழ்மைக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர் நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே நம்மைத் தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன் அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் எம்மை மாற்றும் என்று சொன்ன அதே மூச்சில் போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.
பணிவைப் பற்றிய தெளிவான எண்ணங்கள் இல்லாதபோது, இவ்விதம் அரைகுறை கருத்துக்கள் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன. நமது சிறுவயது முதல் நமக்கு பணிவுப் பாடங்கள் பல சொல்லித் தரப்பட்டுள்ளன. கீழை நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும் பெருமை, பணிவு என்ற பாடங்களுக்கும் மேலை நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும் பாடங்களுக்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு.
பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும் இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே நம்மிடையே உள்ள பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். உண்மையான பணிவு, உண்மையான பெருமை என்பவை யாவை என்று கருத்துக்களைத் திரட்ட நான் முற்பட்டபோது, போலியான பணிவு, போலியான பெருமை என்பவைகள் பற்றிய கருத்துக்களையே அதிகம் கண்டேன். ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள போலியானப் பணிவு, போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப் புரிந்துகொள்வது நல்லது.
கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர் 1942ம் ஆண்டுமுதல், ஈராண்டுகள் BBC வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்து, Mere Christianity - குறைந்தபட்ச கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன: "எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இந்த உலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல், போட்டிப் போடுதல் என்பவைக் குறித்து அழகாக விவரிக்கிறார்:
“ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. ‘என்னிடம் ஒன்று உள்ளது’ என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம்’ என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை" என்று கூறும் Lewis, தொடர்ந்து அகந்தையின் மற்றொரு தவறான அம்சத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வேறுபல குறையுள்ள மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இணைந்துவந்து மகிழும் வாய்ப்புண்டு. ஆனால், அகந்தையில் ஊறிப் போனவர்கள் சேர்ந்துவருவது இயலாதச் செயல். அப்படியே சேர்ந்துவந்தாலும், அவர்களில் யார் மிக அதிக அகந்தை உள்ளவர் என்பதை நிரூபிக்கும் போட்டி உருவாகும்.”
இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். “தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.
இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு என்ற மூன்று விவிலியத்தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும் வார்த்தைகளை இன்றைய ஞாயிறு வாசகங்கள் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி. 15:8 -10 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
இயேசு, பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த நடுப்பகலில் மீன்பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு, பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள் இவை: லூக்கா 5:8: - “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து, தங்களைப்பற்றி கொண்டிருந்த உண்மையான பெருமையிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை.
தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி அல்லது, பணிவு என்பது உள்ள நிறைவிலிருந்து, உண்மையான பெருமையிலிருந்து வரும்போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும்.
தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும் பரிதாபமாக போலித் தாழ்ச்சியுடன், போலிப் பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும். போலித் தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று:
இஸ்லாமிய அறிஞர் நஸ்ருதீன் ஒருநாள் தொழுகைக் கூடத்தில் வேண்டிக் கொண்டிருந்தபோது, இவ்வுலகில் தான் எவ்வளவு சிறியவன் என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்தது. அவர் உடனே தரையில் விழுந்து, கடவுளிடம், "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கக் கத்தினார். அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரும் செல்வந்தர் அந்நேரம் தொழுகைக் கூடத்தில் இருந்தார். அவர் எப்போதும் அடுத்தவர்களின் பார்வையில் உயர்ந்தவராகத் தெரியும்படி வாழ்ந்து வந்தவர். நஸ்ருதீன் உரத்தக் குரலில் சொல்லிய வார்த்தைகள் அவரது காதில் விழவே, அவர் சுற்றிலும் பார்த்தார். அங்கிருந்தோர் கவனமெல்லாம் நஸ்ருதீன் மீது திரும்பியிருந்ததைக் கண்ட அவர், உடனே விரைந்து சென்று நஸ்ருதீன் அருகில் அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கக் கத்தினார். அந்நேரம், தொழுகைக் கூடத்தைச் சுத்தம் செய்வதற்காக, ஓர் ஏழைப் பணியாள் அங்கே வந்தார். அவரும் நஸ்ருதீன் அருகே அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கச் சொன்னார். இதைக் கண்ட செல்வந்தர், நஸ்ருதீனைத் தன் முழங்கையால் இடித்து, "'நான் ஒன்றுமில்லாதவன்' என்று சொல்பவர் யார் என்று பாருங்கள். இதை யார் சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிற்று" என்றார்.
அகந்தையில் சிக்கி, கிறிஸ்தவர்களை அழித்து வந்த சவுல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருத்தூதர் பவுலாக மாறியபின், உண்மையான உள்ள நிறைவோடும், பெருமையோடும், அதே நேரம் பணிவோடும் சொன்ன வார்த்தைகள் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12: 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 61-9)
இறை அழைத்தல் என்பது சமுதாயத்தில் ஒரு நபருக்கு இருக்கக் கூடியத் தகுதியையும், கெளரவத்தையும் பொறுத்தது அல்ல. மாறாக இறைவவின் விருப்பத்தையும், பேரிரக்கத்தையும் பொறுத்தது. எனவேதான், தான் தகுதியற்றவரெனக் கருதப்பட்ட போதும், தன்னைத் தகுதியற்றவரென இறைவாக்கினர் முதல் எசாயா இறைவனிடம் உரைந்தப் போதும், இறைவன் அவரைத் தூய்மைப்படுத்தி தகுதியுள்ளவராக்குகிறார். இறைவாக்கினர் எசாயாவும் இறையணிக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி 150-10)
கிறிஸ்தவர்களைக் கொன்று கூவிப்பதற்காகச் சென்றத் திருத் தூதர் பவுலை, இயேசு கிறிஸ்து தன் பணிக்கென அழைத்தார் இவரும் இன்றைய வாசகத்தில், தனது தகுதியின்மையை எடுத்து- ரைக்கிறார். எனவேதான் திருத்தூதர்களிலெல்லாம் கடையனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். இறைவனின் அருளும், ஆசீரும் எத்த கையவரையும் மாற்றம் பெற வைக்கிறது, இறைபணிக்கெனத் தகுதி படைத்தவராகவும் ஆக்குகிறது,
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 5:1-11)
இயேசு பேதுருவை அழைக்கும் முன்பே அவரை யோர்தான் ஆற்றங்கரையில் சுந்தித்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு. பேதுருவின் அழைப்பு நிகழ்கிறது. அந்த யோர்தான் ஆற்றங்கரைச் சந்திப்பு பேதுருவுக்கான அழைப்பின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. அப்பொழுதே இயேசுவின் ஓரப்பார்வையாளது பேதுருவின் உள்ளத்தை வருடிச் சென்றிருக்கிறது. அந்தச் சந்திப்பே இந்த அழைப்பை உறுதி செய்திருக்கிறது. இல்வழைப்பானது மீன்களைப் பிடித்திட அல்ல, மாறாக இயேசுவை நோக்கி மக்களை அழைத்திட.
மறையுரை
அழைப்பு என்பது ஓர் ஆன்மீகத்தின் ஆணிவேர் என்று கூறலாம். இவ்வாணிவோதான் இன்று திருச்சபையைக் கட்டிக்காக்கக் கூடிய பக்கவேர்களாக ஆயர்களையும், குருக்களையும், கன்னியர்களையும் மற்றும் பொதுநிலையினரையும் உருவாக்கித் தந்திருக்கின்ற மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இவ்வழைப்பு சாதாரண அழைப்பல்ல, இவ்வழைப்பு சாமார்த்தியக்காரர்களுக்கான. தல்ல, மாறாக இவ்வழைப்பு சாமானியரையும் சரித்திரம் படைக்கத் தூண்டும் மாபெரும் அழைப்பு. இறைவனே இவ்வழைப்பிற்கான மூலதனம். இதயமே அதன் பிறப்பிடம். எனலே, இத்தகைய மகத்துவமிக்க மாண்புமிக்க இறை அழைத்தலானது, நமது குடும்பங்களிலும் உலா வருவதென்பது எவ்வளவு சாலச்சிறந்தது!
இன்றைய மூன்று இறைவாசகங்களுமே, இறை அழைத்தலின் இனிமையை நம் காதுகளில் தவழவிடும் தேனடைகளாக இருக்கின்றன. திருச்சபையின் வரலாற்றைத் திருத்தி எழுதிய மூன்று முக்கியத் திருச்சபைத் தலைவர்களையும் அவர்களது அழைப்பின் மேல்மையையும் எடுத்துரைக்கின்றன இல்வாசகங்கள். இன்றைய முதல் வாசகமானது எசாயா இறைவாக்கினரின் அழைத்தல் பற்றி கூறுகிறது. எசாயா இறைவாக்கிணிடம் இறைவன் கேட்கின்றார், “யாரை நான் அனுப்புவேன், என் பணிக்காக யார் செல்வார்?” (எசாயா 68). இக்கேள்விக்குரியப் பதிலை எசாயா இறைவாக்கினர் உடனடியாக உரைக்கிறார், “இதோ நான் இருக்கிறேன், எனை அனுப்பும்”. இவ்வாறு, இறைவாக்கினர் எசாயா, 'இறைவிருப்பத்திற்கு உடனடியாக இணக்கம் தெரிவிக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில் பார்க்கிறோம், இறைவன் தன் 'பணிக்காகத் தேர்ந்தெடுத்திருப்பதை உணர்ந்தவராய், தூய பவுல் நற்செய்தியின் தூதுவராகக் காட்சி தருகிறார். கிறிஸ்தவத்தை அடியோடு அழிக்க புறப்பட்ட சவுல், கிறிஸ்தவ மதிப்பீடுகளை விதைக்கப் புறப்பட்ட பவுலாகிறார். யூத மத வெறியனாக இருந்த சவுல் கிறிஸ்துவின் பணியாளராகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகமும் தூய பேதுருவின் அழைப்பு பற்றிய ஆழமான செய்தியைத் தருகிறது. “இன்று முதல் நீ மனிதரைப் பிடிப்பவராவாய்” என, மக்கள் பணிக்காக இடமாறுதல் உத்தரவை, இயேசு தூய பேதுருவு்குப் பிறப்பிக்கின்றார். இவ்வாறு, திருச்சபையில், இறை அழைத்தலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் பலர், இத்தகைய மேலான இறை அழைப்பினால்தான் திருச்சபையின் ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இறை அழைத்தல் என்பது எதிர்பாராத ஒரு நிகழ்வு அல்வழைப்பானது செல்வந்தருக்கு மட்டுமே உரித்தான இலவச இணைப்பு அல்ல. உயர்ந்த மதிப்பில் உள்ளோருக்கான உத்தரவாத ஓலையல்ல, படித்தவர்கள் மட்டுமே பெறுகின்ற பல்கலைக்கழகப் பட்டமுமல்ல, ஜாதிக்கறை படிந்தோருக்கென தாளம் போடும் மத்தளமும் அல்ல, அரசியல் என்ற போர்வையில் குளிர் காய்ந்து, ஜனநாயகத்தைக் கூறுபோடும் சர்வாதிகாரமுமல்ல. மாறாக, இறை அழைத்தலானது, இறைவிருப்பத்துடன் எவர் வேண்டுமானலும் பெறக்கூடியப் பொதுவுடைமை. ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என இறைவன் ஆள் பார்த்து, பாரபட்சம் காட்டிச் செயல்படுவதில்லை. இறைக் கனலை நனவாக்க உயிர்த் துடிப்புடன் செயல்படும் ஒவ்வொருவரையும் இறைவன் அழைக்கிறார். தகுதியற்றவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களாக மாற்றுகிறார். எனவேதான் திக்குவாயான மோசேயும், ஒழுங்கு முறைத் தவறிய தாவீதும் கூட இறை அழைத்தலுக்குத் தகுதியாளராயினர்,
இறை விருப்பமானது இறை அழைத்தலாகிறது. எனவேதான், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்” என இயேசு கூறுகிறார். அத்தகைய இறை விருப்பமானது, சமுதாயத் தால புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டு, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. எனவேதான், இயேசு, மீன்பிடி தொழில் புரிவோரையும், வரி வசூலிப்பு என்ற பெயரில் மக்களை ஏய்த்துப் பிழைப்போரையும், சமுதாயத் துரோகிகள், பாவிகள் எனக் கருதப்படுவோரையும், தமது சீடர்களாக அழைத்ததோடு மட்டுமல்லாமல், அகில உலகத் திருச்சபையின் பொறுப்பையும் ஒப்படைக்கின்றார். இதற்கான பதிலை இயேசு கூறுகிறார், “நோயற்றவர்க்கு அல்ல, நோயற்றவர்க்கே மருத்துவர் தேவை" (மத்தேயு 9:12). ஒறையழைத்தல் இரு முக்கியப் படிநிலைகளைக் கொண்டுள்ளது. 1. மனத்தாழ்ச்சி மற்றும் 2. முழு ஈடுபாடு
இறையழைத்தலானது முழுமையான அர்த்தம் பெறுவது. மனந்தாழ்ச்சியினால் தான் என்பது. மறுக்க முடியாத உண்மை. இறைவன், இறைவாக்கினர் எசாயாவை அழைக்கும் போது, “தான் ஒரு தூய்மையற்ற உதடுகள் பெற்றவன்' எனத் தனது குறைபாடு: களை ஏற்று, தனது. தகுதியின்மையை எணிபிக்கின்றார். இயேசுவீன் தாயாக அன்னை மரியாளை இறைவன் தேர்ந்தெடுத்தபோது, “நான் உமது அடிமை, உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும்" என லூக்கா நற்செய்தி 138.இல் தனது தாழ்நிலையை மரியாள் வெளிப் படுத்துகின்றாள். இவ்வாறு, மனத்தாழ்ச்சியானது, இறைசாட்சி. வயத்திற்கான முதல் படிநிலையாக இருக்கிறது. மனத்தாழ்ச்சி நம்மில் அடித்தளமாகும் போது இறையாட்சி எனும் மகுடம் நம் வாழ்வை அலங்கரிக்கும்.
முழு ஈடுபாடு என்பது எல்லோரிடத்திலும் காணப்படுவது அரிது. இயேசுவின் சீடர்கள் அவரின் உயிர்ப்புக்குப்பின் முழு ஈடு பாட்டோடு நற்செய்தியைப் பறைசாற்றினார்கள் என்றால் கிறிஸ்து வின் மேல் கொண்ட மேலான நம்பிக்கையேக் காரணம். “இதோ, ஒநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்” (மத்தேயு 10:16) என்றார் இயேசு. முழு ஈடுபாடின்றி இத்தகையப் பணியைத் தொடங்குவதும் கடினம், தொடர்வதும் கடினம்.
இத்தகைய சவால் நிறைந்த இறையழைத்தலில் நமது நிலைப்பாடு என்ன? இறையழைத்தல் என்பது பணிக்குருத்துவம், பொதுக்குருத்துவம் என இரண்டையுமே உள்ளடக்கியது. இறை: பணியாளர்களைப் போலவே, இறைமக்களும் இறைலிருப்பத்தை நிறைவேற்றுவதில் பங்குதாரர்களே. இரண்டாம் வத்திக்கான் சங்கம் இவ்வாறு உரைக்கிறது, “திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும் அதன் அங்கத்தினாக இருப்பதால், தாய வாழ்விற்கான பொதுக்: குருத்துவ அழைப்பில் பங்குபெறுகின்றார்கள்" (இன்றைய உலகில் திருச்சபை 40). இறையழைத்தலானது எவ்வகையிலாவது பிறர்பணி புரிந்து தூயவாழ்வு வாழத்துணை நிற்கிறது. “ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என் மேல் உள்ளது, ஏனெவில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார், ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு வீடுதலையை பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார் "(எசா.. 61:1) இத்தகையப் பணி நோக்கத்தோடு வாழ்ந்த அன்னைத் தெரேசாள் அருளாளராக உயர்த்தப்பட்டாள். நமது பணி நோக்கம் என்ன?.
“விழுகின்ற மழை நீரெல்லாம் விவசாய லளர்ச்சிக்கில்லை. பிறக்கும் மாந்தரெல்லம் பிறர்பணி செய்வதில்லை இத்தகையப் பிறர் பணிபுரிந்து இறைவனை மாட்சிப்படுத்த, இறைவன் இறை அழைத்தல் என்ற இனிய கொடையை நம் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ளார். நமது வாழ்வும் "பத்தோடு பதினொன்று, அத்தோடு நான் ஒன்று' என இருந்து விடாமல், “இறைவனின் வீணையில் நானும் ஒரு நரம்பு என இணைந்து, பிறர் பணியாற்றும் இசையாக வலம்வரச் சிந்திக்கும் நேரம் இது. விரைவில் அச்சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⏺ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல இறைவன் வலிமை அற்றோரை அழைத்து தன் வல்லமையால் தன் பணிக்காக வலிமையுடையோராய் ஆக்குகிறார்.
⏺ இறைவன் அழைக்கும்போது புறத்தோற்றத்தை உற்று நோக்காமல் அகத்தின் தூய்மையைப் பார்த்து தன் பணிக்காக அழைக்கிறார்.
⏺ அன்பினால் பணிசெய்து அனைவரையும் தூய வாழ்வுக்கு அழைக்க வேண்டுமென்பதே அவரது அழைப்பின் நோக்கம்.
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
இன்றைய இறைவாக்குளில் முதல் வாசகமும் நற் செய்தியும் இறையழைத்தல் எனும் கருத்தில் ஒன்றிணைகின்றன. அதிலும் குறிப்பாக அழைக்கப்பட்ட எசாயாவும் பேதுருவும். இறைவன் முன் தங்களின் பாவத்தையும் பலவீனத்தையும் உணர்வதில் மிசுவும் ஒத்திருக்கின்றனர். இதன் உள்பொருளை விவாதிப்பதற்கு முன் இன்றைய நற்செய்தி பற்றிய சில பின்னணித் தகவல்களை தெரிந்துகொண்டு, பின் புனித சீமோன் பேதுருவின் கதாபாத்திரத்தின் பண்பு நலன்களை சிறிது அலசி ஆராய்ந்து அதிலிருந்து நமது வாழ்வுக்குச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
நற்செய்திப் பகுதியின் பின்னணி
லூக்கா தனது நற்செய்தியில் இிருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வை பிற நற்செய்திகள்போல தொடக்கத்திலேயே கூறி விடாமல், இயேசு தனது பணிவாழ்வை தொடங்கும்வரை காத்திருந்து (காண். லூக் 474-44) இப்போது விவரிக்கின்றார். ஓத்தமை நற்செய்திகளில் மாற்கும் மத்தேயுவும் முதல் இருத் தூதர்களை அழைத்ததை விவரிக்கும் விதத்திற்கும் லூக்கா இதைவிவரிப்பதற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. மாற் 1:76-20 இதை மிகவும் சருக்சமாக அதிக விவரங்களை சேர்க்காமல் விவரிக்கின்றது. மத் 4:18-22 மாற்கின் வழியையே பின்பற்றுகின்றது. லூக்கா 5:1-11இந்த நிகழ்வை விவரித்து, பெரும் மீன்பாடு புதுமையோடு இணைத்துச் கூறுகின்றது. இந்நிகழ்வு யோவான் 27:1-11 உயிர்த்த இயேசுவின் திருக்காட்சியோடு தொடர்புடைய நிகழ்வோடு ஒத்திருக்கின்றது, அங்கும் பெரும் மீன்பாடு புதுமை காணப்படுகின்றது.
இறைவாக்கினரான இயேசு
இயேசு நாசரேத்துக்குச் சென்று எசாயாவின் சுருளேட்டை வாசித்து தன்னை ஓர் “இறைவாக்கின மெசியா'வாக பிரகடனப் படுத்தினார். அவர் இந்த நிகழ்வில் தனது ஆற்றலை வெளிப் படுத்தும்' இறைவாக்கினரான தன்னை வெளிப்படுத்துகின்றார். இறைவாக்கினரின் இன்னொரு பரிமானம் வர இருப்பதை முன்கூட்டியே அறிவிப்பது.“ ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் (வச.4) என்றபோது ஓர் இறைவாக்கனராக பின்நிகழ இருப்பதை இயேசு முன்கூட்டியே அறிந்திருந்தார். இதே ஒரு கண்ணோட்டத்தோடுதான் “இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்' (வச.10) என்று இயேசு கூறியதை நாம் உற்று நோக்கவேண்டும். இது பிற்காலத்தில் திருத்தூது பணியிலும் (காண். திப 2:41) திருஅவையின் வரலாற்றிலும் உண்மையானதை நாம் அறிவோம். இனி இந்த இறையழைத்தல் நிகழ்வில் பிற திருத்தூதர்கள் (யாக்கோபு, யோவான் வச. 10) இருந்தாலும் வாசகரின் கவனத்தையெல்லாம் பேதுருவின் மீது லூக்கா குவிப்பதால் அவரின் பண்பு நலன்கள் சிலவற்றை இவண் விரிவாகக் காண்போம்.
1. மறுப்பும் ஏற்யும்
இயேசு மீனவர்களான சீடர்களிடம் ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், மீன் பிடிக்க வலைகளை வீசச் சொன்னபோது முதலில் பேதுரு அதை எதிர்ப்பதுபோல, 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் படைக்கவில்லை” (வச. 5) என்று கூறினாலும் பின் இயேசுவின் கட்டளையை ஏற்கும் விதமாக, “ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” 9 வச. 5) என்கின்றார். இதை கொஞ்சம் ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு இது, “இது எப்படி, நிகமும்? நான் கன்னி ஆயிற்றே! (லூக் 1:39) என்று வானவன் செய்தியை முதலில் எதிர்த்து பின், “நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறி ஏற்றுக்கொண்ட மரியாவை ஓத்திருப்பது புலப்படும்.
இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிடும்போது பல உண்மைகள் புலப்படுகின்றன. முதலாவது மரியா வானவன் வழியாக வந்த இறைவனின் வார்த்தையை நம்பினார்; பேதுரு இயேசுவின்வார்த்தையை நம்பினார். இரண்டவதாக மரியாவுக்கு எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருத்தரித்திருப்பதை சுட்டிக்காட்டி “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' (லூச் 1:37) என்பதைப் புரிய வைக்கின்றார். இங்கு பேதுருவுக்கு பெரும் மீன்பாட்டைத் தந்து அதே, செய்தியை அதாவது கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்பதை வார்த்தையால் சொல்லாமல் செயலால் விளங்க வைக்கின்றார். எனவே மரியாவைப்போல, மனித அறிவுக்கு எட்டாது, சாத்தியப் படாது என்பதையும் இறைவார்த்தையை நம்பி ஏற்றதால் பேதுருவும் நம்பிக்கையின் மனிதராய் காட்சித் தருகின்றார்.
2. நான் பாவி
முதல் வாசகத்தில் எசாயாவைப்போல, இறைவனைச் சந்திக்க பார்க்கு வாய்க்கப் பெற்றவர்கள், பெரும் இறைவாக்கின ரைச் சந்திப்பவர்களின் உணர்வுகள் தான் பேதுருவுக்கும் இருந்தது. அந்த வகை இறைச்சந்திப்பின் உச்சத்தில் “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” (வச. 8) என்கின்றார். இங்கு பேதுரு தன்னை' பாவி? என்றுகுறிப்பிட்டதை ஓர் அறநெறிக் கண்ணோட்டத்தில் பொருள் கொள்ளக்கூடாது. மாறாக தூயவரான இறைவனின் ஆற்றலின் முன் தனது வியப்பையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துவதாகக் கொள்ளவேண்டும். எனவே இது பயத்தினாலும் குற்ற உணர்விலும் கூறப்பட்டதல்ல மாறாக வியப்பிலும், தாழ்ச்சியிலும் கூறப்பட்டவை. அதேபோல “நீர் என்னை விட்டுப் போய்விடும்” (வச. 8) என்பதையும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும். உண்மையில் “என்னை விட்டுப் போய்விடும்” என்று கூறிய இயேசுவைத் தான் பேதுரு "அனைத்தையும் விட்டுவிட்டு” பின்பற்றினார் (வச.11).
இதுதான் இறையனித சந்திப்பில் நிகழ்வது. இறைவன் மனிதரை சந்திக்கின்ற போது அம்மனிதர் சற்றும் எதிர்பாராத கூழவில்,எதிர்பாராதநிகழ்வுகளில் அவர்களை தடுத்து ஆட்கொள் கின்றார். இதுதான் பவுலடியாருக்கும் தமஸ்கு நகர் நேரக்கிய பயணத்தில் நிகழ்ந்தது. பேதுருவை இயேசு கெனசரேத்து ஏரியில் தடுத்தாட்கொண்டார். எனவே பேதுருவைப்போல இறை வார்த்தையை நம்பிய மனிதர்களாக இருக்கவும், இறைவனால் தடுத்தாட் கொள்ளப்படவும் வேண்டுவோம்.
பொதுக்காலம் - ஐந்தாம் ஞாயிறு
முதல் வாசகம் :எசா 6:1-8
கண்ணுக்குப் புலப்பபாதவரை, அளவற்ற ஆற்றல் உள்ளவரை பரிசுத்தத்தின் உறைவிடத்தை, ஒப்பற்ற ஜோதியை எசாயா காட்சியில் கண்டார். தனக்குவமை இல்லாதான் பாவியாகிய எசாயாவை அழைத்த நிகழ்ச்சியே இன்றைய வாசம்.
அழைப்பவரின் மாண்பு
மன்னர்க்கு மன்னராம் இறைவன் அரியணை அமர்ந்துள்ளார்; அவரது தொங்கலாடை திருக்கோயிலை நிரப்பியது; அவருக்கு மேலே அவாது தூதர்களாகிய செொபின்கள் நின்றன. இறைவனது ஜோதியைக் காணக் கண் கூசியதால் தம் இறக்கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டன இறைவன் சந்நிதானத்தில் பாதம் படியக் கூடாதென்பதால், தம் இரு இறக்கைகளால் அவற்றை பறைத்துக் கொண்டன; அவாது கட்டளைமை நிறைவேற்ற காத்து நிற்கும் பாவனையில், இரு இறக்கைகளால் பறக்கத் தயாராயின (1-2). “சேனைகளின் ஆண்டவர் பரிசுகத்தர்: உலக முழுவதும் அவரது மகிமை நிறைந்துள்ளது" என்று இன்னிசை முழங்கின (3). அப்பொழுது கோயில் நிலைகள் அதிர்ந்தன; புகை மண்டலம் கூழ்ந்தது. இறைவனின் மாண்பும் மகத்துவமும் இங்கு விளக்கம் பெறுகின்றன (காண்: விப. 33:20; திபா. 19-1-4; 29:1-2,104) “பாரார் விசம்பு உளர். பாதாளத்தார் புறத்தார் ஆனாலும் காண்டற்கு அரியானாகிய” (திருவாசகம்) இறைவனை எசாயாவை அழைத்தார். என்னையும் என் பெயர் சொல்லி கிறிஸ்தவனாக துறவியாக அழைத்துள்ளார். என்னே என் பெருமை!
எசாயாவின் சிறுமை
பரிசுத்தரின் ஆலயத்தில் இறைவன் முன்னிலையில் தான் பாவியாக நிற்பதை எசாயா உணர்ந்தார். “ஆண்டவரே, நான் பாவி; என்னை விட்ட அதலும்” என்று பேதுரு கூறியதுபோல, தன் பாவ நிலையைக் கண்டு பதை பதைத்து, “ஐயோ! நான் அழிந்தேன்; எனெனில் அசுத்த உதடுகள் கொண்டவன் நான்; சேனைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்களால் கண்டேனே” என்று புலம்பினார் (5). உண்மையான பக்தன் பரிசுத்தரின் முன் தன் பாவ நிலையை, அனைத்தும் உள்ளவர் முன் தன் ஒன்றுமில்லாமையை, எல்லாம் வல்லவர் முன் தன் ஏலாமையை உணர்கின்றான். ஒருவன் தன்னை அறிந்து தன்னை வெறுமையாக்கிக் கொள்ளும்பொழுது தான் ஆண்டவர் அவனது உள்ளத்தைத் தன் அருளால் நிரப்புகிறார். தான் சக்தியற்றவன் என்று எண்ணும்பொழுது தான், இறைவன் அவனை தன் சக்தியால் நிரப்புகிறார். அவனும் இறைபணிக்கு ஏற்ற கருவியாக மாறுகிறான்.
தினை அத்தனையும் தெளிவு அறியாப் பாவியேன்
நினைவில் பரம் பொருள் நீ நேர் பெறவும் காண்பேனோ?
(தாயுமானவர்)
அழைப்பை ஏற்றார்
எசாயாலின் நாவைச் சுட்டு எரித்த, இறைவன் அவரைத் தூய்மைப் படுத்தினார். இதுவே அவரது குருப்பட்ட விழா. அன்று அருள் பெற்றார்; மனத்திடம் பெற்றார். “யாரை அனுப்புவோம்?” என்ற இறைவனின் கூரல் கேட்டு “இதோ நான்” என்கிறார். “ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டு (காண்: திப. 22 : 10) “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” (1கொரி.9: 16- 18) என்றுகூறி இறைப்பணியில் இறங்கிய பவுலைப்போல, ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு, அனைத்தையும்விட்டு அவரைப்பின் சென்ற திருத்தூதர்கள் போல (லூக் 5: 27; மாற்: 1:16) எசாயா இறை அழைப்பை ஏற்றார்; அதில் வெற்றியும் கண்டார். ஆண்டவரின் அழைப்பை ஏற்ற நான் அதில் உறுதியுடன் நிற்கின்றேனா? ஊக்கத்துடன் பணி புரிகின்றேனா?
இதோ அடியேன்: என்னை அனுப்பும்.
இரண்டாம் வாசகம்1கொரி. 15:1-11
15-ஆம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பற்றிச் பவுல் எடுத்துரைக்கிறார். கிறிஸ்தவர்களின் உயிர்ப்புக்கு மூலமும் முன்னோடியுமாயிருப்பதால், கிறிஸ்துவின் உயிர்ப்பு பவுலின் மடல்களில் முக்கிய இடம் பெறுகிறது. இன்றைய வாசகத்தில் நற்செய்தியின் கருப்பொருளான இயேசுவின் உயிர்ப்பும், உயிர்த்த இயேசுவின் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
கிறிஸ்து உயிர்த்தார்
கிறிஸ்துவ விசுவாசத்தை இரத்தினச் கருக்கமாய்த் தன்னுள் அடக்கியுள்ள ஒரு விசுவாச அறிக்கை அல்லது மறைபொருள் இன்றைய வாசகம். “இது விசுவாசத்தின் மறைபொருள்” என்று குருவானவர் கூற, “கிறிஸ்து இறந்தார். கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்” என்று நாம் பதிலிறுப்பதும் இதையே சுட்டுகிறது. கிறிஸ்துவின் “இறப்பு-உயிர்ப்பு” தாள் திருத்தூதர் சாட்சியத்தின் அடிப்படை உண்மை (திப.3: 13- 15;4: 19. கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்தார்; நமது பாவங்களுக்காகவே, அவற்றைக் குழுவே உமிர் பெற்றெழுந்தார். இன்றைய வாசகத்திலே, கிறிஸ்து “இறந்தார், அடக்கம் செய்யப்பட்டார்; தோன்றினார்” என்ற வினைச்சொற்கள் கடந்த காலத்து உண்மைகளாகவும், உயிர்த்தெழுந்துள்ளார்”' என்பது கடந்த காலத்தில் தொடங்கி நிகழ் காலத்திலும் தொடர்ந்து நடக்கும் உண்மையாகவும் கிரேக்க மூலத்தில் காணப்படுகிறது. இதிலிருந்து பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பு என்றும் எங்கும் தொடர்ந்து செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறார் எனலாம். எவ்வளவு ஆறுதல் அளிக்கும் உண்மை இது! கிறிஸ்துவின் உயிர்ப்பு ஏதோ பழங்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியன்று; இன்னும் எங்கெல்லாம் நற்செயல்கள் செய்யப்படுகின்றனவோ, எங்கெல்லாம் அன்பு அணை பரண்டு ஓடுகிறதோ, எங்கெல்லாம் நீதிக்குரல் முழக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் ஏழை எளியவர், நோயாளிகள் புதுவாழ்வு பெறுகின்றனரோ அங்கெல்லாம் கிறிஸ்து உயிர்த்தக் கொண்டே இருக்கிறார். கிறிஸ்துவின் இல்வுயிர்ப்பு நிகழ்ச்சியில் நாமும் பங்குபெற வேண்டுமெளில், அன்பு செய்வோம், அறம் செய்வோம். நம் வாழ்விலே கிறிஸ்து உமிர்த்துக் கொண்டே இருக்கிறாரா?
கிறிஸ்து தோன்றினார்
ஒரு வகையிலே கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு அவர் தந்த காட்சிகள் ஆதாரம் என்றாலும், இக்காட்சிகள் வழி கிறிஸ்து புகட்டும் உண்மை ஒருவர் ஒருவருக்கு ஆறுதலும் துணையுமாயிருக்க வேண்டுமென்பதாகும். தம்மை மறுதலித்த “கேபா” எனும் பேதுருவுக்கு இயேசு தோன்றியது அவரது விசுவாசத்தை உறுதிப்படுத்தவாகும். பாடுகளின்போது பயந்து, தம்மைவிட்டு அகன்றோடிய பன்னிருவருக்குக் காட்சி அளித்து, அவர்களோடு என்றும் இருப்பார் என்று காட்டுவதற்காகவேயாகும் (மத் 28: 20). அதே போன்று, ஏனையோருக்கும் தம்மை வெளிப்படுத்தியது, அவர்கள் வேத விரோதிகளைக் குண்டு அஞ்சி அவநம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதற்காகவேயாகும். இவ்வாறு, தாம் இல்வுலகில் வாழ்ந்தபோது எவ்வாறு ஏழை எளியவர்களுக்கு, பாவிகளுக்கு நோய்வாய்ப்பட்டோருக்கு இயேசு உறுதுணையாயிருந்தாரோ, அங்வாறே தாம் உயிர்த்த பின்னும் தமது அன்புப் பணியைத் தொடர்ந்து செய்கிறார். இயேசுவின் உயிர்த்த வாழ்வில் பங்குபெறும் நாமும் (உரோ. 5 : 17 - 19) அவ்வுயிர்த்த வாழ்வுக்குச் சாட்சியங்களாக வாழ வேண்டும், தாம் உயிர்த்த வாழ்வு வாழ்கிறோம் என்பதற்கு ஆதாரம் அல்லது அறிகுறி ஏழைகளுக்கு இரங்குவது, நோயாளிகள், சிறைப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல் அளிப்பது; உள்ளம் உடைந்தோருக்கு உறுதுணையாயிருப்பது போன்ற நற்செயல்களே என்பதை உணர்ந்து, உயிர்த்த வாழ்வு வாழ முயற்சிப்போம்
“முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்” (குறள் 618)
(கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்தார். )
நற்செயதி: லூக்கா 5:1-11
மீனவர்களைக் தேர்ந்துகொண்டார்
இயேசு இறையரசுப் பணிக்கு சாதாரண மனிதர்களை அழைத்தார். உலகம் தாழ்ந்தோர் எனக் கருதியவனரத் தம் சீடர்களாகத் தேர்ந்துகொள்கிறார். ஆம், “கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார் ” (கொரி 1:27 - 28)
இறைவன் ஏழைகளைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் அவர்கள் அவர் அருகில் இருப்பதால் தான். அவர்கள் அவரை சார்ந்து சிக்கெனப் பிடித்துக்கொள்வர். எனவே தான் இயேசு குழந்தைகளோடு, ஏழை எளியவரோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இறைவன். நம்மில் செயல்பட நம்மையே வெறுமையாக்குவோம். இறைவனுக்குச் சொந்தமான ஏழை எளிய மக்களோடு ஐக்கியப்படுவோம். நம்மையும் இறைவன் தேர்ந்துகொள்வார். இறைவன் தேர்ந்துகொள்ளும் தாழ்ந்தோரையே நமது நண்பர்களாகக் கொள்வோம். நாமும் இயேசுவின் நண்பர்களாவோம்.
இரவு முழுவதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை.
நம் முயற்சிகள் தோல்லியடையும்போது இறைவன் துணை நமக்கு வெற்றியளிக்கிறது. திருத்தூதர்கள் பாடுபட்டுப் பலன் காணாத நிலையில். இயேசுவின் ஒரே வார்த்தை அவர்களுக்கு அபரிமித பலன் அளிக்கிறது” நம் சொந்த செயல்களையும் முயற்சிகளையும் மட்டுமே நம்பும்போது இறையரசுப் பணியிலே பலன் காண முடியாது என்பதை இங்கு இயேசு தெளிவுடுத்துகிறார். ஆம்!" ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்” (திபா. 127). நம் பணியும் ஆண்டவரின் வார்த்தையோடு இணைந்த செயல்பாடாயிருந்தால்தான் பயன் விளையும்.
தனித்துநின்று உழைத்தால் நாம்களிதா பாட்டோம். “ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த களி தருவார். என்னைவிட்டுப் பீரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” (யோவா. 15:5-7)
இறைவனின் ஆற்றல் நம்மில் விளங்கும் போது நம் செயல் படைப்பாற்றல் மிக்கதாய் விளங்குகிறது. நம் குறைகளும் இறைவனுக்குத் தடையல்ல. ஒரு வேளை நம் பலவீனமே ஆண்டவரின் செயல் விளங்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இது தூய பவுலின் அனுபவம்: “வலுவின்றி இருக்கும் போதுதான், நான் 'வலிமைமிக்கவனாய் இருக்கிறேன்”.
நாமும் நம் பணியில் தளர்ச்சியறும்போது, பலவீனத்தால் மனம் சோர்வுறும்போது திருத்தூதர்களின் மீன் பிடித்த அனுபவத்தை நினைவு கூர்வோம். நாம் வெற்றி காணாத வேளைகளில் இயேசுவின் வார்த்தை நமக்கு எப்போதும் உறுதுணையாயிருக்கட்டும்.
“அஞ்சாதே! இன்று முதல் மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்!”
இயேசுவின் பிரசன்னம், நம் பணியில் பலன் அளிப்பதோடு, நம் மன அச்சத்தையும், விரக்திமையும் ஓட்டுகிறது. நம்மில் மறைந்து கிடக்கும் சக்திகளையும் வெளிக்கொணர்ந்து நிறைவு அளிக்கிறது.
மீன் பிடிக்கும் பேதுரு, மனிதர்களைக் கூட்டிச் சேர்க்கும் திருச்சபையின் தலைவராக மாற்றப்படுகிறார்.
இயேசுவை சந்திக்கும்போது... இயேசுவின் அழைப்புக்கு பதில் அளிக்கும்போது, நம் வாழ்வு புதுமை அடைகிறது.
இயேசுவின் பணியில் நம்மை. அர்ப்பணிக்கும் போது நாம் இழப்பதை விட பெறுவதே அதிகமாகிறது. வலையையும், படகையும் விட்டு வந்த பேதுரு, இயேசுவின் அருளால் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்
.
தேவ அழைத்தல் எவரிடமும் பறிமுதல் செய்வதில்லை, மாறாக. நம்மை நிரப்புகிறது.
உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்.
குறையே … இறையால் … நிறையாய்!
மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் புழங்கிய கதை இது (மெல் கிப்சன் அவர்கள் இயக்கிய ‘அப்போகாலிப்டோ’ என்ற திரைப்படத்தில் (2006) இக்கதை ஷாமான் ஒருவரால் சொல்லப்படுவதாக அமைந்திருக்கும்): மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், ‘நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்’ என்றன. மனிதன், ‘எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்’ என்றான். கழுகு, ‘என் பார்வையை உனக்குத் தருகிறேன்’ என்றது. ‘யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்’ என்றான். ஜகுவார், ‘நான் தருகிறேன்’ என்றது. ‘பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்’ என்றான். பாம்பு, ‘அதை நான் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தன. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, ‘மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது’ என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, ‘இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: ‘இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை’.
மனித உள்ளத்தில் இருக்கும் இக்குறை அல்லது வெற்றிடத்தைத் தானாகவே மனிதர்கள் அறிந்துகொள்வார்களா? அவர்கள் அக்குறைகளை அறிந்துகொண்டவுடன் அக்குறைகள் எப்படி நிறைவு செய்யப்படும்? குறையுள்ள மனிதர்கள் மற்றவர்களின் குறைகளை நிறைவாக்க முடியாத நிலையில், மனிதர்கள் விரும்பும் நிறைவைத் தருபவர் யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
‘மனிதர்கள் எல்லாமே குறையுள்ளவர்கள்’ என்று நாம் சொல்லும்போது, அது சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக, அறநெறி, உடல்நலம் என பல தளங்களைச் சுட்டிக்காட்டினாலும், நம்மை முன்னேறாமல் தடுத்து, சில நேரங்களில் நம்மைப் பின்னிழுக்கின்ற குறைகள் பெரும்பாலும் நம் உள்ளம் சார்ந்தவையே. இவற்றிலிருந்து நாம் விடுபட நாம் இறைவனோடு கைகோர்த்தால் மட்டுமே முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 6:1-8) எசாயா இறைவாக்கினரின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். எசாயா அழைப்பு நிகழ்வு, மோசே, கிதியோன், எரேமியா ஆகியோரின் அழைப்பு நிகழ்வுகளை ஒத்திராமல், எசேக்கியேல் இறைவாக்கினரின் (1-3) அழைப்பு நிகழ்வையே ஒத்திருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி வருகிறது. இந்த நிகழ்வு கடவுளின் அரசவையில் நடப்பதுபோல எழுதப்பட்டுள்ளது. உசியா அரசர் மறைந்த ஏறக்குறைய கி.மு. 742ஆம் ஆண்டில் இந்நிகழ்வு நடக்கிறது. இப்படி வரலாற்று பின்புலம் காட்டப்படுவது எதற்காக என்றால், இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு என்ற உண்மைநிலையைக் காட்டுவதற்கே. ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பியிருக்கின்றது. செராபின்கள் அரியணையைச் சுற்றி இருக்கின்றன. ‘செராபின்’ என்றால் எபிரேயத்தில் ‘எரிந்து கொண்டிருப்பது’ அல்லது ‘எரிபவை’ என்பது பொருள். இந்த செராபின்கள் வெறும் அழகுப் பதுமைகள் அல்ல. மாறாக, அவை ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்’ என்று பாடிக்கொண்டிருக்கின்றனர். இறைவனின் பிரசன்னத்தையும், அவரைப் பற்றிச் செராபின்கள் பாடுகின்ற குரலொளியையும் கேட்கின்ற எசாயா. சட்டென தன் நிலையை உணர்கின்றார். ‘நான் அழிந்தேன்!’ என கத்துகின்றார். தூய்மையின் முன் தன் தூய்மையின்மையை உணர்கின்றார். எசாயா செய்த பாவம் அல்லது அவர் கொண்டிருந்த குற்றவுணர்வு என்னவென்று குறிப்பிடப்படவில்லை. உடனே நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து வரும் செராபின் ஒருவர் எசாயாவின் உதடுகளை தூய்மைப்படுத்துகின்றார். குற்றப்பழியும், பாவமும் அகற்றப்படுகின்றது. இவ்வளவு நேரம் நடந்தவையெல்லாம் வெறும் காட்சியாக இருக்கின்றது. இப்போது யாவே இறைவனே பேசுகின்றார். ‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’ எனக் கேட்கிறார். தூய உதடுகளைப் பெற்ற எசாயாவும், ‘இதோ, நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்’ என்கிறார்.
ஆக, தன்னுடைய தூய்மையின்மையை இறைவனின் தூய்மையோடு ஒப்பிட்ட எசாயா இறைவாக்கினரின் வெட்கம் என்ற குறையை, இறைவன் நெருப்புத் துண்டால் தூய்மைப்படுத்தி அவரை நிறைவாக்குகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:1-11) பவுல் கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய இன்னொரு பிரச்சினை பற்றி எழுதுகின்றார்: ‘இறந்தவர் உயிர்ப்பு.’ கொரிந்து நகரம் கிரேக்கச் சிந்தனையில் மூழ்கியிருந்தது. கிரேக்க சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை வெறுத்தது. நிலைவாழ்வு என்பது ஆன்மா உடலிலிருந்து பெரும் விடுதலை என்றே கிரேக்கர்கள் நினைத்தார்கள். ஆனால், பவுலோ, உயிர்ப்பு என்பதே நிலைவாழ்வு என்றும், உயிர்ப்பின்போது நம் உடலும் மாற்றம் பெறும் எனவும் எழுதுகின்றார். கிறிஸ்து உயிர்பெற்றெழுந்ததை சான்றாக வைத்து, இறந்தவர்கள் உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திருஅவைக்கு பவுல் தரும் இறையியல் விளக்கம் தருகின்றார்.’கிறிஸ்து நம் பாவங்களுக்காக…இறந்தார்…அடக்கம் செய்யப்பட்டார்…உயிருடன் எழுப்பப்பட்டார்’ – தொடக்கத் திருஅவையில் துலங்கிய முதல் நம்பிக்கை அறிக்கை இதுவே. இதைப்போன்ற அறிக்கைகளை நாம் பிலி 2:1-13 மற்றும் கலா 3-அலும் வாசிக்கின்றோம். இந்த நம்பிக்கையின் நீட்சியாக உயிர்த்த இயேசு கேபா, யாக்கோபு என்று பலருக்குத் தோன்றியபின், இறுதியாக, ‘காலம் தப்பிப் பிறந்த குழந்தையைப் போன்ற’ தனக்கும் தோன்றியதாகப் பெருமை கொள்கின்றார் பவுல். இவர் இப்படிப் பெருமை பாராட்டும் நேரத்தில் இவருடைய உள்ளத்தில் உடனடியாக இவருடைய பழைய வாழ்க்கை பற்றிய நினைவு தோன்றுகிறது. தன் இறந்த காலத்தில் தான் செய்த ‘கடவுளின் திருச்சபையைத் துன்புறத்திய செயல்’ அவரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகின்றது. ஆனால், ‘கடவுளின் அருளால்’ நான் திருத்தூதர் நிலையில் இருக்கின்றேன் எனக் கடவுளின் அருள் தன் குற்ற உணர்வைக் களைந்ததையும் நினைவுகூருகிறார் பவுல்.
ஆக, தன்னிடம் இருந்த குற்ற உணர்வு என்னும் குறையை கடவுளின் அருளாலும், அந்த அருள் உந்தித் தள்ளிய உழைப்பாலும் நிறைவாக்குகிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 5:1-11), ‘இயேசு முதல் சீடரை அழைக்கும் நிகழ்வை’ லூக்கா நற்செய்தியாளரின் கண்கள் வழியாகப் பார்க்கின்றோம். இது நடக்குமிடம் கெனசரேத்து ஏரிக்கரை அல்லது கலிலேயாக்கடல் பகுதி. முதல் சீடர்களை அழைத்தல் என தலைப்பு இடப்பட்டிருந்தாலும், பேதுரு மட்டுமே இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றார். அவரின் சகோதரர் அந்திரேயாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், செபதேயுவின் மக்களான யாக்கோபு மற்றும் யோவானின் பெயரும் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், இந்த நிகழ்விற்கு எப்படி பெயரிடுவது? போதனை (5:1-3), அறிகுறி (5:4-10அ), அழைப்பு (5:10ஆ-11) என மூன்று இலக்கியக் கூறுகள் ஒரே இடத்தில் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ‘தச்சனுக்கு தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?’ என முதலில் சந்தேகிக்கின்ற பேதுரு, ‘இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை’ என்று தயங்குகின்றார். பின் அவரே, ‘உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என வலைகளைப் போட மிகுதியான மீன்பாடு கிடைக்கின்றது. தான் கொண்ட ‘சந்தேகத்திற்காக’ மனம் வருந்தும் பேதுரு, ‘ஆண்டவரே, நான் பாவி. என்னைவிட்டு அகலும்!’ என மன்றாடுகின்றார். ஆனால், ‘அஞ்சாதே’ என அவரின் பயம் அகற்றும் இயேசு, ‘நீ இது முதல் மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்’ என்ற புதிய பணியைக் கொடுக்கின்றார்.
ஆக, ‘சந்தேகம்’ என்ற பேதுருவின் குறையை இயேசு, ‘அஞ்சாதே!’ என்று தேற்றி நிறைவு செய்கின்றார்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் எசாயாவின் ‘வெட்கம்’ என்ற குறையை ‘உதடுகளைத் தூய்மைப்படுத்தி’ நிறைவு செய்கிறார் கடவுள். இரண்டாம் வாசகத்தில், பவுலின் ‘குற்றவுணர்வு’ என்ற குறையை ‘திருத்தூதர் நிலை’ என்ற நிலைக்கு அருளால் உயர்த்தி நிறைவு செய்கிறார் கடவுள். நற்செய்தி வாசகத்தில், பேதுருவின் ‘சந்தேகம்’ அல்லது ‘ஐயம்’ என்ற குறையை ‘அஞ்சாதே’ என்று நீக்கி, அவரை நிறைவுள்ளவராக்குகின்றார் இயேசு.
ஆக, குறையுள்ள ஒன்று நிறைவுள்ள இறைவனின் தொடுதலால் நிறைவுள்ளதாகின்றது. குறையை நிறைவாக்குவது இறையே என்பதும் புலனாகிறது. இன்று நாம் நம்மிடம் உள்ள குறைகளை எப்படி இனங்கண்டு, அவற்றை இறைவனின் துணையால் நிறைவு செய்வது?
- நம் கொடைகளைக் கொண்டாடுவது
எசாயா என்னதான் தன்னைக் கடவுளின் தூய்மையோடு ஒப்பிட்டு, தன்னையே, ‘தூய்மையற்றவன்’ எனக் கருதினாலும், அவர் கடவுளைக் காட்சியாகக் காணும் பேறு பெறுகின்றார். தன்னுடைய சம காலத்தில் யாருக்கும் காட்சி அளிக்காத கடவுளைக் காட்சியில் கண்டவராகின்றார் எசாயா. பவுல், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தியவர் ஆனாலும், கடவுளின் அருள் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தான் பெற்ற அருளை வீணாக்காமல் மிகுதியாகப் பாடுபட்டு உழைக்கிறார் பவுல். பேதுரு, தன் வெறுமை நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டுகொள்கின்றார். ‘கடவுளின் காட்சி,’ ‘கடவுளின் அருள்,’ ‘மீன்பாடு’ என தாங்கள் பெற்ற கொடைகளை முதலில் நினைவுகூறுகின்றனர் எசாயாவும், பவுலும், பேதுருவும். ஆக, நம் குறைகளைக் காண்பதற்கு முன் முதலில் நம்மைச் சுற்றியுள்ள நிறைகளைக் கணக்கில் எடுக்க வேண்டும்.
- பழையதை விடு, புதியதை அணி
‘நமக்காக யார் போவார்?’ எனக் கடவுள் கேட்டவுடன், ‘இதோ நானிருக்கிறேன், எனை அனுப்பும்’ என முன் வருகிறார் எசாயா. ‘ஐயோ, என் இறந்தகாலம் மிகவும் மோசமானதே!’ என தற்பழி எண்ணம் கொண்டிராமல், ‘நான் வருகிறேன்’ என திருத்தூதுப்பணிக்கு முன்வருகின்றார் பவுல். ‘ஆண்டவரே, பாவி என்னைவிட்டு அகலும்’ என்று இயேசுவைத் தன்னிடமிருந்து அகற்றியவர், ‘மனிதர்களைப் பிடிப்பவராக’ முன்வருகிறார் பேதுரு. ஆக, நம் குறைகளைக் கண்டவுடன் அவற்றை நாம் பற்றிக்கொண்டிருக்காமல், பழையனவற்றை விட்டுவிட்டு, புதியனவற்றை அணிந்துகொள்ள முன்வருதல் வேண்டும்.
- வலுவின்மையில் வல்லமை செயலாற்ற அனுமதிப்பது
இறையை நாம் அனுமதிக்காவிடில் அவர் நம் குறையை நிறைவாக்க மாட்டார். ‘நான் வருகிறேன்’ என்ற முன்னெடுப்பும், ‘என் படகில் ஏறிக்கொள்ளும்’ என்ற தாராள உள்ளமும் நாம் அவருக்குக் காட்ட வேண்டும். எசாயா, பவுல், பேதுருவிடம் முறையே விளங்கிய வெட்கம், குற்றவுணர்வு, மற்றும் ஐயம் என்னும் உணர்வுகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன. நான் என்னிடம் பொய் சொல்லும்போது வெட்கமும், மற்றவரிடம் பொய் சொல்லும்போது குற்றவுணர்வும், இறைவனிடம் பொய் சொல்லும்போது சந்தேகமும் வலுக்கிறது. இறைவன் என்னும் உண்மை இப்பொய்மைகளை அகற்றிவிட அவரை நான் அருகில் அனுமதிக்கிறேனா? அல்லது அவர் அருகில் நான் செல்கிறேனா?
இறுதியாக, என் உள்ளத்தில் உள்ள வெற்றிடமும் துவாரமும் என் ஆற்றல் இழப்புக்குக் காரணமாக இருந்தாலும், என் ஆற்றல்களை நான் கொண்டாடத் தொடங்கும்போது, என் அருகில் வருகின்ற அவர் தன் நிறைவால் என் குறையை நிறைவாக்குவார். ‘நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும்!’
குறைகள் நிறையப்பெற்ற ஒருவர் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து (காண். திபா 138), ‘ஆண்டவரே, என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்’ என்று பாடுவார்.