மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:
எசாயா 62:1-5 | 1கொரிந்தியர் 12:4-11 | யோவான் 2:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும்.....

சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர் பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன் கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால் பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல் கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம் சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின் குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே, தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும், செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ் பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு டாக்டர்.

ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின் சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின் கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக (எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை நோக்கி மன்றாடுவதாகும்.

அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின் புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசு நம்மோடு இருக்க, நமக்குக் குறையேது?

இயேசு ஒரு போதும் நமது குறையைப் பார்க்கமாட்டார்; நமது நிறையைத்தான் பார்ப்பார். இன்றைய நற்செய்தியிலே வரும் கதாப்பாத்திரங்களைப் பாருங்கள்.
மாதா - நிறைவுள்ளவர்.
சீடர்கள் - நிறைவுள்ளவர்கள்.
பணியாளர்கள் - நிறைவுள்ளவர்கள்.
பணியாளர்களின் தலைவனுக்குத் தெரியுமே திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று! தெரிந்திருந்தும் அவன் நன்றி சொல்லவில்லை! அவன் நன்றி சொல்ல மறந்தவன்.
கணவனும் மனைவியும் - அவர்களும் நன்றி சொல்லவில்லை!
விருந்தினர்கள் - அவர்களும் நன்றி சொல்லவில்லை.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்பார் திருவள்ளுவர்.
திருமண வீட்டில் 3 பேர் நிறைவுள்ளவர்கள் ! 3 பேர் குறையுள்ளவர்கள்! ஆனால், இயேசு குறையைப் பார்க்காமல், நிறையைப் பார்த்து புதுமை செய்தார்.
இயேசு எப்பொழுதுமே நிறைவைப் பார்ப்பவர், நேர்மறையாகச் சிந்திப்பவர்.
மத் 9:9-13 முடிய உள்ள பகுதி :
எல்லாரும் புனித மத்தேயுவிடம் ஒரு பாவியைப் பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவருக்குள் ஒரு புனிதரை, ஒரு நற்செய்தியாளரைப் பார்த்தார்.
யோவா 4:1-42 முடிய உள்ள பகுதி :
எல்லாரும் அந்த சமாரியப் பெண்ணுக்குள் ஒரு பாவியைப் பார்த்தனர்! ஆனால் இயேசுவோ அவளுக்குள் ஒரு புனிதையை, இறைத் தூதரைப் பார்த்தார்.
எல்லாரும் சவுலிடம் ஒரு சமய விரோதியைக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, அவரிடம் ஒரு திருத்தூதரை, மறைச்சாட்சியைக் கண்டார்.
நாம்தான் அடிக்கடி நமது குறைகளை நினைத்துக் கூனிக் குறுகிப் போகின்றோம். ஆனால் இயேசுவோ, நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்த்து நம்மை ஆசிர்வதிக்கக் காத்துக்கொண்டிருக்கின்றார்.
இந்த உண்மை , மன்னிப்பே உருவான , அன்பே உருவான, கருணையே உருவான, பரிவே உருவான, பாசமே உருவான இயேசுவின் பக்கம் நம்மை உந்தித் தள்ளட்டும்.
இயேசு நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் (முதல் வாசகம்) ; தள்ளிவிடமாட்டார். அவரது மன்னிப்பில் தூய்மை பெற்று, அவரது வரங்களால் நிரப்பப்பட்டு (இரண்டாம் வாசகம்) புத்தாண்டில் நாம் புது வாழ்வைத் தொடங்குவோம்.
மேலும் அறிவோம் :

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).

பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார்.

இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் மற்றவனிடம், "வீட்டிலே யார் பெரியவங்க? அப்பாவா அல்லது அம்மாவா?" என்று கேட்டான். அதற்கு மற்றவன், "நிச்சயமாக அம்மா தான் பெரியவங்க. ஏனென்றால், எங்கள் அப்பா தனது தொழிற்சாலையிலே 100 பேரை அடக்கி ஆள்கிறார். ஆனால், வீட்டிலே அம்மா எங்க அப்பாவையே அடக்கி ஆளுகிறாங்க" என்றான். இச்சிறுவன் கூறியதைப் போலவே புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார்: "கடவுளை விடச் சக்தி வாய்ந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்தவர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்”, புனித வியான்னியின் கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பது கானாவூர் திருமணத்தில் புலனாகிறது. மரியாவின் வேண்டுகோளுக்குக் கிறிஸ்து முதலில் முடியாது: எனது நேரம் இன்னும் வரவில்லை ' என்று சொல்லிவிட்டார். ஆனால், மரியா மனந்தளராது. பணியாளர்களிடம் 'இயேசு சொல்வதைச் செய்யுங்கள்' என்று கூறியபின், இயேசுவால் தம் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை. தமது முதற் புதுமையைச் செய்கிறார். 'முடியாது' என்ற சொன்ன இயேசுவை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார் மரியா.

நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1). நமக்குத் தேவையானது கிடைக்கும்வரை நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்: தேடிக்கொண்டே இருக்க வேண்டும் (லூக் 11:9-10). புனித மோனிக்கா தமது மகன் அகுஸ்தினார் மனமாற்றத்திற்காக 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணீர் சிந்திச் செபித்தார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு திரு மணவிருந்தில் நான்கு பந்திகளிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து பந்தி பரிமாறியவர், "என்னப்பா நாலு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுற; எனக்கு ஞாபக சக்தி இல்லை என்றா நினைக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சாப்பாட்டு ராமன். "என்ன செய்கிறது? உங்களுக்கோ ஞாபக சக்தி அதிகம்; எனக்கோ ஜீரண சக்தி அதிகம்" என்றார்! பலருக்கு ஜீரண சக்தி அதிகம். சாப்பாட்டிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அடுத்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், மரியாவுக்கு ஞாபக சக்தி அதிகம். பிறருடைய தேவைகளைக் குறிப்பறிந்து உணர்ந்து அவற்றைப் போக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். "பெண்கள் வல்லினமா? மெல்லினமா? இடையினமா?" என்று ஓர் அறிஞரைக் கேட்டதற்கு அவர், “பெண்கள் செலவினம்" என்றார். ஆனால், உண்மையில் பெண்கள்
"மரியினம்": மரியாவின் வாரிசுகள். மரியாவைப் போன்று மென்மையான தாய்மை உணர்வுடன், "உண்டி கொடுத்தார், உயிர் கொடுத்தார்" என்ற கொள்கைக்கேற்ப, பசித்தவர்களுக்கு உணவளித்து உயிர் கொடுப்பவர்கள் பெண்கள். பெண்ணாகப் பிறப்பது ஒரு சாபக்கேடு அல்ல, மாறாக அது ஒரு மாபெரும் பேறு; ஏனெனில் தாமரை போன்ற அவர்களது கைகளால் தான் உலகில் அறங்கள் வளரும்.

இளவரசன் உதய குமாரனை மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தன் தலையை மொட்டை அடித்து, காவி உடை அணிந்து, அமுத சுரபியைக் கொண்டு மக்களின் பசி போக்கிய மணிமேகலை பேரழகி, எப்பொழுதெல்லாம் பெண்கள் பிறரை வாழ வைக்கின்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பேரழகிகளாகத் திகழ்கின்றனர். பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, கடவுள் எல்லாருக்கும் ஒரே விதமான கொடைகளைக் கொடுப்பதில்லை. மாறாக, வெவ்வேறு வரங்களைப் பொது நன்மைக்காகப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:4- 11). பெண்ணிடத்தில் தாய்மைப் பண்பு மற்ற எல்லாப் பண்புகளைவிட விஞ்சி நிற்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த புதுமையின் இறுதிப் பயன் என்ன என்பதை யோவான் அழுத்தமாகக் கூறியுள்ளார். "இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம், இது கலிலேயாவிலுள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவா 2:11).

ஒருதாய் தம் மகளுக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து, கடைசியில் மகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து பெருமிதம் அடைகிறார். அவ்வாறே மரியாவும் தம் மகன் கிறிஸ்துவினுடைய மீட்பின் நற்செய்தியைக் கானாவூரில் அரங்கேற்றம் செய்து எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார், கிறிஸ்துவின் மாட்சிமை வெளிப்படவும் அவருடைய சீடர்கள் அவரிடம் விசுவாசம் கொள்ளவும் மரியா மூலகாரணமாக இருக்கிறார். எனவே, மரியா கிறிஸ்துவின் மகிமையை மறைக்கிறவர் அல்ல, மாறாக அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். மரியாவைப் பின்பற்றி, மரியாவின் திருத்தலங்கள் மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் காசு சம்பாதிக்காமல், கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகத் திகழவேண்டும்,

ஒருவர் போலிப் போதகரா? அல்லது உண்மையான போதகரா? என்பதை அறிந்து கொள்ள உதவும் அமிலப் பரிசோதனை என்ன? போலிப்போதகர்கள் தங்களை மையமாக வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடுவார்கள். ஆனால், உண்மையான போதகர்கள் மரியாவைப் போன்று கடவுளை மையப்படுத்தி அவரை மகிமைப்படுத்துவார்கள். திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையான போதகர்கள், "அவரது (கிறிஸ்துவின்) செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்னும் மனநிலையைக் கொண்டிருப்பர். மரியாவின் இறுதிக் கட்டளை; "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5).

மரியா கிறிஸ்துவின் தாய் என்பதைவிட கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார். கிறிஸ்துவின் சீடராகத் திகழ வேண்டுமென்றால், அவரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். “என் வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், என் சீடராய் இருப்பீர்கள்" (யோவா 8:31). நாம் கிறிஸ்துவின் விசிறிகளா? அல்லது அவருடைய சீடர்களா? கடவுள் இஸ்ரயேல் மக்களோடு திருமண உடன்படிக்கை செய்து கொண்டார் (முதல் வாசகம், எசா 62:1-5). கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் மணமகன், அவர் கொண்டு வந்த இறையாட்சி ஒரு திருமண விருந்தாகும். அவர் தமது முதல் புதுமையை ஒரு திருமணத்தில் செய்தது மிகப் பொருத்தமானது. அவர் கொடுத்த முதல் தரமான இரசம் நற்கருணை என்னும் அன்பு விருந்துக்கு அடையாளம், அதில் பங்கு பெறும் நாம் பேறுபெற்றோர். சட்டமென்னும் பழைய சித்தையில் அன்பு என்னும் புதிய இரசத்தை ஊற்றாது. புதிய சித்தையில் புதிய இரசத்தை மாற்றுவோம். இனி நாம் சட்டத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாக அன்பின் அடிமைகள். அன்பே அனைத்திலும் சிறந்த நெறி (1 கொரி 12:31)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனதுக்குள்ளே மற்றொரு கண்

மாபெரும் கவிதைப் போட்டி. தலைப்பு: "கானாவூர் திருமணம்". குறிப்பிட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இளைஞர், பெரியோர் என கவித்திறன் கொண்ட பலர் பங்கேற்றனர். கற்பனை வளம் சேர்த்து எல்லோரும் காவியம் எழுதினர். ஒருவர் மட்டும் தன் கைகளைத் தலைக்கு முட்டுக்கொடுத்தவராய் ஒரு வார்த்தை கூட எழுதத் தொடங்காமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “நேரம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன'' என்ற அறிவிப்பைக் கேட்டதும் அப்பொழுதுதான் விழித்தவர் போல நான்கு வார்த்தைகளைக் கிறுக்கிக் கொடுத்துவிட்டு வெளியேறினார். இறுதியாகப் பரிசு யாருக்கு? அந்த நான்கு வார்த்தைகளைக் கிறுக்கிக் கொடுத்தவருக்குத்தான்! பரிசு வெற்றவர் ஆங்கிலக் கவிஞர் பைரன். பரிசுக்குரிய கவிதை என்ன? "நாதன் நோக்கினான். நாணிச் சிவந்தாள் நங்கை" என்பதுதான்.
ஆண்டவர் இயேசுவைக் காதலனாகவும், ஆறு கல் தொட்டி நீரைக் காதலியாகவும் உருவகித்து காதலனைக் கண்ட காதலி முகம் சிவப்பது போல, இயேசு நோக்க, நிறமற்ற தண்ணீர் செந்நிறத் திராட்சை மதுவானதாம்!
தலைவன் நோக்கத் தண்ணீர் மட்டுமா சிவந்தது? திருமணமேயன்றோ சிவந்து நின்றது, சிறப்புப் பெற்றது!
இன்றைய நற்செய்தியில் "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்" (யோ. 2:1,2) என்ற அந்த வரிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் .... திருமணமே சிறுமை அடைந்திருக்காதா?
இயேசுவும் மரியாவும் அழைக்கப் பெற்ற கிறிஸ்தவனின் வாழ்வு அடைவது சிறப்பு. இயேசுவும் மரியாவும் அழைக்கப்பெறாத கிறிஸ்தவனின் வாழ்வு அடைவது சிறுமை.
மனிதனின் தனி வாழ்க்கை மட்டுமல்ல மணவாழ்க்கையும் அப்படியே!
திருமண நாளில் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இயேசுவையும் மரியாவையும் அழைத்தால் ஒருவருடைய வாழ்வு முன்பு போல் ஒரு போதும் இருக்காது. முற்றிலும் மேன்மை கண்டிருக்கும்.
உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் கனிந்த அக்கறையோடும் ஈடுபாட்டோடும் அல்லவா மரியா செயல்படுகிறாள்! நண்பர்களாக அல்ல கடன்காரர்களாக அன்றோ நம்மைக் காட்டிக் கொடுக்கின்றன இன்றையத் திருமணங்கள். மொய் எழுதிக் கொடுக்கல் வாங்கல் போல அமைகிறதேயொழிய உறவை, கனிவை, எங்கே வெளிப்படுத்துகின்றன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று சொன்னவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும். வந்தோம். வாழ்த்தினோம். உண்டோம். ஓடினோம் என்று தங்களை மட்டுமே நினைத்துச் செயல்படும் மக்கள் மத்தியில் மரியா வித்தியாசமாக நேசக்கரம் நீட்டி எப்படித் துன்பத்தின் சூழலை மாற்றுகிறாள்!
“அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாக மாட்டாய். வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்பட மாட்டாய்” (எசா. 54: 4) என்ற எசாயாவின் இறைவாக்கு நிறைவேற, கானாவூர் திருமணத்தில் பற்றாக்குறை என்ற இக்கட்டில் தன் மாட்சிமையை மட்டுமல்ல தனது மன உருக்கத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு!
நெஞ்சில் மனதுருக்கம் நீரைத் தேனாக்கும், திராட்சை மதுவாக்கும்!
தங்கள் தூரத்து உறவுப் பெண்ணான கமலாவைக் கண்ணன் அழைத்து வருவதைப் பார்த்ததும் அவன் அம்மா திடுக்கிட்டாள்.
“கமலா பாவம்'மா. அவளுக்கு ஆதரவாய் இருந்த அவள் அம்மாவும் திடீர்னு பஸ் விபத்தில் இறந்துட்டா. இனி அவளுக்கு யார் இருக்கா? அதான் நானே அவளைக் கல்யாணம் செய்துக்கிறதா முடிவு பண்ணிட்டேன்”.
கமலா உள்ளே போனதும் அம்மா வெடித்தாள். “ஏன்டா வரதட்சனைக்கு வழியில்லாத ஏழைன்னுதானே முந்தியே அவளை ஒதுக்கினே! இப்ப அவ அம்மா செத்ததும் இரக்கம் வந்திருச்சா?”
அவன் கிசுகிசுத்தான்: “ஐயோ அம்மா! உனக்கு விவரம் பத்தாது. பஸ் விபத்துலே அவ அம்மா செத்ததுக்கு எப்படியும் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும்னு வக்கீல் சொல்லியிருக்கார். ஒரு லட்ச ரூபாய்னா சும்மாவா?”. அவன் அம்மா திகைப்பில் வாயைப் பிளந்தாள்.
உதவிக்குக் கூட உள்நோக்கம் வைக்கிற காலம் இது. உதவி என்பது இரக்கம் என்ற உணர்வின் உந்துதலால் ஏற்படும் ஒரு செயல். ஆள் அல்ல, உறவல்ல அடிப்படை, அவசியம்' என்பதே அடிப்படை.
“எல்லோருக்கும் மனசுல ஒரு காது, ஒரு கண் இருக்கு. திறந்து வைச்சுக்கிட்டா, அடுத்தவுங்க பிரச்சனை புரியும். மூடிக்கிட்டா தனது தவறுகூட தெரியாமப் போயிடும்” என்கிறார் அறிஞர் ஒருவர்.
“கண்ணிருந்தும் குருடர்கள். காதிருந்தும் செவிடர்கள்” இயேசுவின் இந்தச் சிந்தனைக்குப் பொருள் என்ன? உடலில் கண் உண்டு, காது உண்டு. இது போதாது. மனதில் கண் வேண்டும், காது வேண்டும் என்பதுதானே!
நம் உள்ளிருக்கும் மனக் கண்ணையும் காதையும் திறந்து வைத்து பிறர் துன்பங்களைச் சொல்லாமலே கூர்ந்து கவனித்து உதவி செய்வது என்பது உன்னதமான மனிதத்தன்மை. மரியாவின் மனம் அது!
அன்னை தெரசா குறிப்பிடுவது போல எதையும் கண்டுகொள்ளாமை என்பதுதான் இன்றைய உலகின் மிகப் பெரிய பாவமாகும். எல்லாருக்கும் கண்களை ஒரே மாதிரியாகத்தான் படைத்திருக்கிறார் கடவுள். ஆனால் பார்வையோ எப்படியெல்லாம் வேறுபடுகிறது! பல்லக்கைப் பார்க்கும்போது அதில் பயணிக்க மாட்டோமா என்று ஒருவன் ஏங்குகிறான். இன்னொருவனோ அந்தப் பல்லக்கைச் சுமப்பவர்களின் தோள் வலியை நினைத்து வருந்துகிறான். எல்லோருக்கும் அன்பும் இரக்கமும் கண்களில் வந்துவிடுவதில்லை.
தனது முதல் புதுமை வழியாக இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்தி தன்னில் தன் சீடர் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
இன்றைய நற்செய்தியில் தன் இறைமாட்சியை மட்டுமல்ல, மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்பதையும் இயேசு உணர்த்தியிருக்கிறார். யோவான் தன் நற்செய்தியில் மரியாவைப் பற்றி இரண்டு இடங்களில்தான் குறிப்பிடுகிறார். ஒன்று கானாவூர்த் திருமணம். மற்றொன்று கல்வாரிச் சிலுவையடி. இரண்டிலும் மரியாவை “இயேசுவின் தாய்” என்றே குறிப்பிடுகிறார். மரியாவுக்கு இடைநிலையாளராகச் செயல்படும் முக்கிய பங்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காகவே அவ்வாறு குறிப்பிடுகிறார்.
பங்கு ஒன்றில் நடைபெற்ற பாஸ்கா நாடகத்தில் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், "ஐயோ, பழிபாவமற்றவரைக் காட்டிக் கொடுத்துப் பாவம் செய்தேனே” என்று தூக்கிலிட்டு வயிறு வெடித்துச் சாகிறான் (மத். 27:3-4, தி.ப. 1:18-19). அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தன் தாயிடம் “அம்மா, யூதாஸ் மாதாவிடம் போயிருக்கலாமே, கண்டிப்பாக மாதா காப்பாற்றியிருப்பார்களே” என்று உரக்கச் சொன்னாள். கேட்டவர் அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி சொன்னது போல் யூதாஸ் இறை அன்னையிடம் சென்றிருந்தால் நரக வேதனையை அனுபவித்திருக்க மாட்டான். இப்படித் துன்புறுபவர்களைத் தேற்றும் அன்னை அன்றோ மரியா!
அது சரி, எங்கள் வீட்டில் குடிபோதை எங்கள் குடும்பத்தைக் கெடுக்கிறது. அங்கே இயேசு தண்ணீ ரை ரசமாக அல்ல, என் கணவர் பருகும் (மது) ரசத்தை தண்ணீராக மாற்ற மாட்டாரா என்று ஏங்குகிறீர்களா? மாற்றுவார். உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக மாறும். தண்ணீ ரை திராட்சை ரசமாக மாற்றியவர் - பிறகு ஒரு நாள், ஏன் இன்றுகூட திராட்சை ரசத்தைத் தன் ரத்தமாக மாற்றி, நமக்கு வாழ்வளிப்பவர் அல்லவா!
அன்னை மரியா அருள் வரங்களின் வாய்க்கால். அவள் இறுதியாகச் சொன்னது: “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோ. 2:5). இயேசு சொல்வதுதானே நமக்கெல்லாம் நற்செய்தி!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவையும், மரியாவையும் அழைத்து...

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது, தமிழ் பாரம்பரியத்தில் நிலவிவரும் நம்பிக்கை. பிறந்துள்ள தை மாதத்தில், மக்கள் வாழ்வில் வழி பிறக்கும், மற்றும், வழி திறக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கு, இறைவாக்கினர் எசாயா வழங்கும் ஆசி மொழிகள், இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன:

இறைவாக்கினர் எசாயா 62: 3-4

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். "கைவிடப்பட்டவள்" என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; "பாழ்பட்டது" என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.

தை பிறந்ததும், பல குடும்பங்களில் திருமணங்கள் நடைபெறும். இத்தகைய ஒரு சூழலில், இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட ஒரு திருமண விழா, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. புனித யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள கானா திருமண விழாவின் அறிமுக இறைவாக்கியம் இதோ:

யோவான் 2: 1
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

பொதுவாக, எந்த ஒரு கதையிலோ, வரலாற்றிலோ ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வேளையில், அவரைப்பற்றிய பல விவரங்கள் வழங்கப்படும். இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய மரியாவை, புனித யோவான், தன் நற்செய்தியில், முதன்முதலாக அறிமுகம் செய்யும்போது, "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளியச் சொற்களில், அன்னையை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்தத் தாயின் பெயரைக்கூட அவர் பதிவு செய்யாமல், 'இயேசுவின் தாய்' என்ற அடைமொழியை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், மரியாவின் 'கன்னிமை', 'தாய்மை' என்ற இரு அம்சங்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில், மரியாவின் 'கன்னிமை'யைச் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், (மத். 1:18-24), லூக்காவும் (லூக். 1:26-38) கூறியுள்ளனர். மரியாவின் 'தாய்மை'யை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை, யோவான் குறிப்பிட்டுள்ளார். யோவான் நற்செய்தியில், இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று, கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள் (யோவான் 19:25-27).

தன் பணிவாழ்வின் துவக்கத்தில், கானா திருமணத்தில், இயேசு, முதல் 'அரும் அடையாள'த்தைச் செய்தபோது, "இயேசுவின் தாய் அங்கு இருந்தார்". அதுமட்டுமல்ல, அந்த அரும் அடையாளத்தை இயேசு செய்வதற்கு, அவரே தூண்டுதலாகவும் இருந்தார். அதேவண்ணம், தன் பணிவாழ்வின் இறுதியில், கல்வாரி மலைமீது, சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது, "சிலுவை அருகில் இயேசுவின் தாய்... நின்றுகொண்டிருந்தார்" (யோவான் 19:25).

அன்னை மரியாவின் பிரசன்னம், அற்புதங்கள் நடைபெற தூண்டுதலாகவும், துன்ப வேளைகளில், ஆறுதல் தரும் அருமருந்தாகவும் உள்ளது என்பதை, இவ்விரு நிகழ்வுகள் வழியே, நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார்.

கானா திருமணத்திற்குத் திரும்புவோம். திருமணம் என்றாலே, பலவிதமான, பலமான ஏற்பாடுகள் செய்யப்படும். என்னதான் கவனமாக, ஏற்பாடுகள் செய்தாலும், திருமணங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறைகள் எழத்தான் செய்யும். திருமண வைபவங்களில், பெரும்பாலும், சாப்பாட்டு நேரங்களில்தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும்; பிரச்சனைகள் வெடிக்கும். கானாவில் நடந்த திருமணத்திலும், சாப்பாட்டு விடயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் திருமணங்களில், திராட்சை இரசம் தீர்ந்து போவதென்பது, பெரிய மானப்பிரச்சனை.

திருமண வைபவங்களில் குறைகள் ஏற்படும்போது, அவற்றை, விளம்பரப்படுத்தி, வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. அன்னை மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம் கூறுகிறார். அன்னை மரியா தன் மகனிடம் இந்தக் குறையை எடுத்துரைத்த அழகை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

யோவான் 2: 3

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார். மரியாவின் இந்தக் கூற்றை, அழகான ஒரு செபம் என்று, பல இறையியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது, எதார்த்தமான ஒரு கூற்று. அதை எப்படி செபம் என்று சொல்வது என்று, ஒரு சிலர் தயங்கலாம். இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல்களை கடவுளிடம் அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச் சொல்வது இன்னும் அழகான செபங்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இத்தகைய செபத்தைச் சொல்வது, எளிதல்ல. இத்தகைய செபத்தைச் சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் நம் உண்மை நிலையைச் சொன்னால் போதும் என்ற மனநிலையுடன் செபிப்பதற்கு, ஆழமான நம்பிக்கை வேண்டும். இவ்வகைச் செபத்தை, ஒரு சிறு கற்பனை வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

வீட்டுத்தலைவன் செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? ‘தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள்’ என்பதுதானே? அவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை. "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்ற சொற்கள் வழியே, மரியாவும், இப்படி ஒரு செபத்தை, இயேசுவிடம் எழுப்புகிறார். நம்முடைய செபங்கள், இவ்வகையில் அமைந்துள்ளனவா என்பதைச் சிந்திப்பது நல்லது.

விவிலியம் முழுவதிலும், நான்கு நிகழ்வுகளில் மட்டுமே, அன்னை மரியா பேசியதாக கூறப்பட்டுள்ளது. வானதூதர் கபிரியேலுடன் மரியா மேற்கொண்ட உரையாடல் (லூக்கா 1:26-38), உறவினரான எலிசபெத்தின் இல்லத்தில் அவர் எழுப்பிய புகழ்ப்பாடல் (லூக்கா 1:46-56), எருசலேம் கோவிலில், சிறுவன் இயேசுவிடம் கேட்ட கவலை நிறைந்த கேள்வி (லூக்கா 2:48) என்ற மூன்று நிகழ்வுகள், லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ளன. யோவான் நற்செய்தியில், கானா திருமண நிகழ்வில் மட்டுமே அன்னை மரியா பேசியுள்ளார். அதுவும், இரு அழகான, பொருள் நிறைந்த கூற்றுகளை கூறியுள்ளார்.

'இரசம் தீர்ந்துவிட்டது' என்று இயேசுவிடம் 'சிம்பிளாக'ச் சொன்ன மரியன்னை, பின்னர், பணியாளர்களைப் பார்த்து, இன்னும் 'சிம்பிளாக' "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அகன்றார். அதன்பின், அந்தத் தாயைப் பற்றி எவ்வித கூற்றும் இல்லை இன்றைய நற்செய்தியில். தன் மகன் புதுமை ஆற்றும்போது, அருகில் நின்று, 'இது என் மகன்' என்று அனைவரிடமும் அறிமுகம் செய்து, அங்கு எழும் பிரமிப்பில், மகிழ்வில், தனக்கும் பங்கு உண்டு என்பதை நிலைநாட்டும் எண்ணங்கள் அன்னை மரியாவிடம் எழவில்லை.

இதுதான் அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்துவிடுவார். நல்ல காரியம் ஒன்று நடக்கும்போது, அதற்கு எவ்வகையிலும் காரணமாக இல்லாத பலரும், அது தன்னால் நிகழ்ந்தது என்பதை, பல வழிகளிலும் பறைசாற்றிக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின் வரிப்பணத்தில், வறியோருக்கு உதவிகள் செய்யப்படும் வேளையில், அந்த உதவிகளை தங்கள் சொந்தப் பணத்தில் செய்வதுபோல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், நம்மை, வேதனையிலும், வெட்கத்திலும், தலைகுனிய வைக்கிறது. அதே வேளையில், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தாங்கள் செய்யும் நற்செயல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பதையும் நாம் அறிவோம். இவர்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, மனிதகுலத்தின் மீது நம் நம்பிக்கை வளர்கிறது. இவர்கள் அனைவரும் அன்னை மரியாவின் வாழ்க்கைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள். அன்னை மரியாவிடம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள், நம் வாழ்நாள் முழுமைக்கும் போதாது.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று, தங்களிடம், மரியன்னை சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் அதுவரைப் பார்த்ததில்லை. அந்த இளைஞனைப் பார்த்தால், பிரச்சனையைத் தீர்த்துவைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்தவர், மரியன்னை என்பதால், அவர் மட்டில் பணியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அதுவும், அந்த அன்னை, அதுவரை, பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததை, கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், அந்த இளைஞன், அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.

பணியாளர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு, தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில், கை, கால் கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த ஆறு தொட்டிகளைக் கண்ட இயேசு, பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார்.
இந்தக் காட்சியை, நாம் வாழும் காலத்திற்கு ஏற்றதுபோல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில் நடக்கும் திருமண விழாவைக் கற்பனை செய்துகொள்வோம். கை, கால் கழுவ, குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், பிளாஸ்டிக் வாளிகளில் அல்லது சிமென்ட் தொட்டிகளில் தண்ணீர் வைத்திருப்பர். விருந்துக்கு வருவோர், கைகளையும், கால்களையும் கழுவ, அந்த தண்ணீர் பயன்படுத்தப்படும். அதை யாரும் குடிப்பதில்லை. அந்தத் தொட்டிகளில், தண்ணீரை நிரப்பச் சொன்னார், இயேசு.

இயேசு சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதேநேரம், இயேசு சொன்ன கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம், அவர்கள் மனதில் ஏதோ ஒருவகை நம்பிக்கையைத் தந்தது. தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப்போல், இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அங்கு என்ன நடந்தது என்பதை, இன்றைய நற்செய்தி இவ்வாறு கூறியுள்ளது:

யோவான் நற்செய்தி, 2: 7-9

இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்த புதுமை நடந்தது?

வழக்கமாக, இயேசுவின் சொல்லோ, செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை. "தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது அவர் கரங்களை நீட்டியதாகவோ, வேறு எதுவும் சொன்னதாகவோ, நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஓர் அழகிய வாக்கியத்தை இணைத்துள்ளார். “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று இயேசு சொன்னதும், அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள் (யோவான், 2: 8). இதுதான் அந்த பொருள்நிறைந்த வாக்கியம். எப்போது அந்தப் பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது என்று நாம் கூறமுடியும்.

இயேசு சொல்லியதைக் கேட்டு, குழப்பத்தோடும், கோபத்தோடும் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், தொட்டிகளை அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீரையும் இரசமாக மாற்றியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள், தாங்கள் செய்யும் செயலை, முழுமையாகச் செய்த அந்த நேரத்தில், அவர்கள் ஊற்றிய தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும், மன நிறைவைத் தருவதோடு, வாழ்வில் பல அற்புதமான மாற்றங்களையும் உருவாக்கும். புத்தாண்டின் துவக்கத்தில், இப்புதுமையின் வழியே, இப்படிப்பட்ட ஒரு பாடத்தை நாம் பயில்வது பயனளிக்கும்.

இறுதியாக, இந்நாட்களில் திருமண உறவில் இணையும் மணமக்கள் வாழ்வில் அன்னை மரியாவும், இயேசுவும் பங்கேற்கவும், அந்த அன்னையின் பரிந்துரையால், மணமக்கள் வாழ்வில், இறைவன், அற்புதங்களை ஆற்றவும், சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ இரண்டாம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 62:15)

கடவுளின்‌ எல்லையில்லா அன்பு எருசலேமிற்கு என்றும்‌ உண்டு என்பதை உறுதிபடுத்துகின்றார்‌ எசாயா இறைவாக்கினர்‌. கடவுள்‌ எருசலேமுக்குப்‌ “எப்சியா' (அவளில்‌ நான்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌) என்ற புதியப்‌ பெயரை வழங்கி தன்னுடைய உறவைப்‌ புதுப்பித்துக்‌ கொள்கின்றார்‌. இது அவர்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கடவுளோடு ஒன்றித்திருக்க உதவுகின்றது. இந்த வாசகம்‌ முழுக்க முழுக்க, எருசலேம்‌ ஆண்டவருடைய அருள்‌ வாக்கின்‌ மீது கொண்டுள்ள ஆனந்தக்‌ களிப்பைப்‌ பற்றிப்‌ பாடும்‌ பாடலாக அமைகின்றது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (கொரி. 12:4-11)

ஆண்டவர்‌ கொரிந்து நகர மக்களை ஆன்மீக கொடைகளால்‌ அபரிவிதமாக ஆசிர்வதித்துள்ளார்‌. ஏனென்றால்‌ அவர்களுடைய ஆன்மீகப்‌ பணி சிறப்பாக இருக்க வேண்டும்‌ என்று அவர்‌ விரும்பிணார்‌. ஆனால்‌ அவர்கள்‌ தங்களுக்கு அருளப்பட்டக்‌ கொடைகளில்‌, உயர்ந்தது, சிறந்தது என்று பாகுபாடுகள்‌ ஏற்படுத்திச்‌ சண்டையிடத்‌ தொடங்கினர்‌. அப்பொழுது பவுல்‌ எக்கொடை முக்கியமானது, எது உண்மையானது, எது தேவையானது எது பயனுள்ளது என்று விளக்கி ஆன்மீகக்‌ கொடையின்‌ மேன்மையைக்‌ கொரிந்து நகர மக்கள்‌ உணரச்‌ செய்தார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (யோவான்‌ 21-12)

கானாவூர்‌ திருமண நிகழ்வு யோவான்‌ நற்செய்தியில்‌ மட்டுமே நாம்‌ காணமுடியும்‌. மரியாள்‌, ஒருவேளை இத்திருமண வீட்டாருக்கு நெருங்கிய உறவினராக இருந்து இருக்கலாம்‌, ஆகையால்தான்‌ அவர்களுடைய துன்ப நிலையைக்‌ கண்கொண்டு பார்த்த நிலையில்‌ தன்‌ மகனிடம்‌ பரிந்து பேசுகின்றாள்‌. இப்புதுமை இயேசுவின்‌ பணி வாழ்வின்‌ தொடக்கமாக அமைகின்றது. திருமண விழாவிற்கு வருகைத்‌ தரும்‌ அனைவரும்‌, விழாவிற்குப்‌ பயன்தரும்‌ ஏதாவது ஒரு பொருளைக்‌ கொண்டு வருவது யூதர்களின்‌ வழக்கமாக இருந்தது. திராட்சை இரசம்‌ விருந்தில்‌ பரிமாறுவது அங்கு பாரம்பரிய வழக்கமாக இருந்தது. நற்செய்தியாளர்‌ யோவானின்‌ நோக்கமானது, கடவுளின்‌ வல்லமை இயேசுவின்‌ இந்த அற்புதத்தின்‌ வழியாக வெளிப்பட வேண்டும்‌ என்பதற்காக இந்தத்‌ திராட்சை இரச தட்டுபாட்டினைக்‌ கடவுள்‌ ஏற்படுத்தினார்‌! என்பதாகக்‌ கொள்ளலாம்‌,

மறையுரை

இறைவனின்‌ மாட்சி ஒரு திருவெளிப்பாடு! “கனவுகளைச்‌ சுமந்துகொண்டு நடந்துச்‌ செல்லும்‌ பொழுது, தோல்விகள்‌ தோழமைகளால்‌ தொடர்கின்ற பொழுது, நம்‌ தனித்தன்மை நம்மை விட்டு தொலைந்து விடும்பொழுது, சமுதாயச்‌ சூழமைவுகள்‌ நம்‌ சுதந்திரத்தைச்‌ சுரண்டுகின்ற பொழுது, நம்‌ வாழ்வு இவ்வுலகை விட்டு பிரிய நினைக்கும்‌ பொழுது, ஒரு திருவெளிப்பாடு என்னில்‌ நிகழக்கூடாதா? இறைவனின்‌ மாட்சி என்னில்‌ வெளிப்படுத்தபடாதா?” என்ற ஏக்கமும்‌, உணர்வுகளும்‌ நம்‌ ஒவ்வொருவருடைய மனதிலும்‌ எழுந்து கொண்டுதான்‌ இருக்கின்றன!

ஈராயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு திருமண விழா இறைமகன்‌ இயேசு கிறிஸ்துவின்‌ மாட்சியினை உலகிற்கு வெளிப்படுத்தும்‌ ஒரு மாபெரும்‌ விழாவாக மாறிய நிகழ்வைத்‌ தியானித்துப்‌ பார்க்க இன்றைய வாசகம்‌ நம்மை அழைக்கின்றது. கலிலேயாவில்‌ உள்ள கானான்‌ என்னும்‌ ஊரில்‌ நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு அன்னை மரியாளும்‌, இயேசுவும்‌, அவருடைய சீடர்களும்‌ சென்றிருந்தணர்‌. ஒரு திருமண விழா என்றால்‌ அங்கு விருந்து அதிக முக்கியத்துவம்‌ பெறுகிறது. ஆம்‌, வந்தாரை, வயிறார உண்ண வைத்து அவர்களுடைய வாழ்த்துகளைப்‌ பெறுவது, திருமணம்‌ செய்பவர்களின்‌ சிறப்பியல்பை வெளிப்படுத்து- கின்றது. அத்தகைய விருந்து உபசரிப்பில்‌ திடீரென்று திராட்சை இரசம்‌ தீர்ந்துவிடத்‌ திருமண வீட்டார்‌ செய்வதறியாது திகைத்து நிற்கையில்‌, விருந்திற்கு வந்தவர்களிடையே ஏற்படும்‌ உரையாடல்கள்‌ இறைவனின்‌ மாட்சி வெளிப்பட ஒரு தருணமாக அமைகின்றது.

1. பிறருடைய இன்னல்களைத்‌ தன்னுடையதாக உணர்ந்து போராடுதல்‌.
2. பிறருடைய மனத்துயரைப்‌ போக்குவதற்காகத்‌ தன்னையே முழுமையாக ஒப்புக்கொடுத்தல்‌.
இவ்விரண்டு உணர்வுகளையும்‌ எவரெல்லாம்‌ தன்‌ இதயத்தில்‌ வைத்து வாழ்ந்து வருகின்றனரோ, அவர்கள்‌ செய்கின்ற ஒவ்வொரு செயலிலும்‌ இறைவனுடைய மாட்சி முழுமையாக வெளிப்படுகின்றது. கானாவர்‌ திருமணத்தில்‌ அன்னை மரியாள்‌ அத்திருமண வீட்டார்‌ துன்ப நிலையை யாரும்‌ அறிவிக்காமலேயேத்‌ தாமாகவே அறிந்தவராய்‌, அதற்காகத்‌ தன்‌ மைந்தன்‌ இயேசு கிறிஸ்துவிடம்‌ பரிந்து பேசுகின்றார்‌. அன்னை மரியாள்‌ பல்வேறு திருமண வீட்டிற்கு விருந்திற்குச்‌ சென்றிருக்கலாம்‌. அங்கு இதை போலவே திராட்சை இரசம்‌ தீர்ந்து போனதால்‌ ஏற்பட்ட குழப்பங்களைக்‌ கண்டிருக்கலாம்‌. ஆனால்‌ பிறர்க்குத்‌ தன்னால்‌ முடிந்த உதவியைச்‌ செய்ய வேண்டும்‌ என்ற மனநிலையைப்‌ பெற்றிருந்ததால்‌ தான்‌ இயேசுவிடம்‌ சென்று, “ஏதாவதுச்‌ செய்‌” என்று கூறுகின்றாள்‌. நல்லது நடக்க வேண்டும்‌, பிறர்‌ மனம்‌ மகிழ்ச்சியில்‌ மகிழ வேண்டும்‌ என்ற எதிர்ப்பார்ப்போடு மரியாள்‌ அங்கு செயல்பட்டது இறைவனை மகிழ வைத்தது. அவர்‌ மாட்சியினை வெளிப்படுத்த உதலவியாயிருந்தது.

அன்று இஸ்ராயேல்‌ மக்கள்‌ எகிப்தில்‌ அடிமைகளாகச்‌ சொல்லண்ணா வேதனைகளோடு வாழ்வின்‌ நாட்களை நகர்த்தி கொண்டிருந்த பொழுது, கடவுள்‌ தம்‌ மக்களின்‌ வேதனைகளை அறிந்தவராய்‌, அவர்களின்‌ துன்ப நிலையை உணர்ந்தவராய்‌, அவர்களை அடிமை தளையிலிருந்து மீட்க இறைவாக்கினர்‌ மோசேவை அழைத்தார்‌. கடவுள்‌ தான்‌ கேர்ந்தெடுத்த மக்களான இஸ்ராயேலைப்‌ பார்த்து கூறுகிறார்‌, “என்‌ மக்களே உம்மை எவ்வாறு நான்‌ கைவிட முடியும்‌, என்‌ அன்பு நிறை இதயம்‌ இதைச்‌ செய்ய ஒரு போதும்‌ அனுமதிக்காது, ஏனெனில்‌ என்‌ அன்பு உறுதியானது” (ஓசே 11:1-11). இயேசு கிறிஸ்து இரு குருடர்களைக்‌ கண்டு மனமிரங்கி, அவர்களுடைய விசுவாசத்திற்கு வெகுமதியாக, அவர்களுக்குப்‌ பார்வைக்‌ கொடுத்து தன்‌ மாட்சியை வெளிப்படுத்தி அவர்களுடைய விசுவாசத்தை வளர்ப்பதைப்‌ பார்க்கலாம்‌ (மத்தேயு 9:27-28). மேலும்‌ இயேசு மக்களைப்‌ பார்த்து மனமிரங்கினார்‌, இரக்கம்‌ கொண்டார்‌ என்று வாசிக்கின்றோம்‌ (மத்தேயு 9:36). இயேசுவின்‌ மூன்று ஆண்டுப்‌ பணி வாழ்வில்‌ ஒவ்வொரு நிகழ்வும்‌, இறைவனுடையப்‌ பராமரிப்பை வெளிப்படுத்தும்‌ வண்ணமாக அமைந்திருப்பதை நாம்‌ காண முடியும்‌.

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இறைவாக்கினர்‌ எசாயா கடவுளின்‌ கனிவான, ஆறுதலான வார்த்தைகளை எருசலேம்‌ மக்களுக்கு எடுத்துரைப்பதை வாசிக்கக்‌ கேட்டோம்‌. இங்கு கடவுளின்‌ மாட்சி யாரிலே வெளிப்படுத்தப்படும்‌ என்பதைத்‌ தெளிவாக அறிந்து கொள்ளலாம்‌. கடவுள்‌ எருசலேமைக்‌ குறித்து மகிழ்ச்சி கொள்கின்றார்‌, அன்பு செய்கின்றார்‌. கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வு கடவுளின்‌ மாட்சிக்கு வழிவகுக்கும்‌ என்று தெளிவாகக்‌ குறிப்பிடுவதைக்‌ காணலாம்‌.

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ இறைவன்‌ தரும்‌ ஆன்மீகக்‌ கொடைகள்‌ பற்றி புனித பவுல்‌ கொரிந்து மக்களுக்கு எடுத்துரைப்பதைக்‌ காண்கின்றோம்‌. இறைவனைச்‌ சார்ந்த, இறைவனுக்கு ஏற்புடைய இறைவனை அன்பு செய்து அவர்‌ மாட்சியில்‌ மகிழ ஆன்மீகக்‌ கொடைகள்‌ மிக அவசியமாகும்‌. அருங்கொடைகளைப்‌ பெற்றவர்களான நாம்‌ நம்முடைய ஓவ்வொரு செயலிளும்‌ பிறரின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டவர்களாக வாழ முயல வேண்டும்‌. கொரிந்து மக்கள்‌, அவ்வாறு இல்லாது தனக்கு வழங்கப்பட்டக்‌ கொடைகள்‌ பெரியது, சிறந்தது என்று சண்டையிட்டு கொண்டு அக்கொடைகளின்‌ மேன்மையை உணராதவர்களாகச்‌ செயல்பட்டனர்‌. அப்பொழுது புனித சின்னப்பர்‌ அவர்களிடம்‌, “உங்களுக்கு அருளப்பட்டிருக்கும்‌ இக்கொடைகள்‌, பிறரை அன்பு செய்வதற்கும்‌, அவர்களுடைய சுமைகளை இறக்கி வைப்பதற்கும்‌ கருவிகளாகப்‌ பயன்படுத்த வேண்டும்‌” என்று உணர்த்துவதைக்‌ காண்கின்றோம்‌. நம்‌ அன்றாட வாழ்விற்கு வருவோம்‌. இன்றைய சூழலில்‌ உறவினர்களின்‌, நண்பர்களின்‌ அழைப்பை ஏற்று திருமணத்திற்குச்‌ செல்லுகின்ற .நாம்‌, எத்தனை முறை அடுத்தவர்களின்‌ துன்பத்திற்குத்‌ தோள்‌ கொடுத்திருக்கின்றோம்‌? மணமக்கள்‌ வீட்டாரைப்‌ பற்றி எவ்வளவு தூரம்‌ நாம்‌ அக்கரை கொள்கின்றோம்‌? பிறரை நேசிப்பது புதிதல்ல! பிறர்‌ உறவை நேசிப்பது பெரிதல்ல! பிறர்‌ துன்பத்தை நேசிப்பதுதான்‌ முக்கியம்‌. இங்குதான்‌ நம்‌ அன்பின்‌ ஆழம்‌ வெளிப்படுத்தப்படுகின்றது. நேசிக்கக்‌ கற்றுக்கொன்வோம்‌, ஒருவருக்கொருவர்‌ ஆறுதலாய்‌ இருப்போம்‌. இத்தகைய ஒரு கிறிஸ்தவ வாழ்வைதான்‌ இறைமகன்‌ இயேசு கிறிஸ்து நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றார்‌. அன்னை மரியாள்‌ திருமண லீட்டாரின்‌ கலக்கமான சூழ்நிலையை உணர்ந்து, அவர்கள்‌ மேல்‌ அக்கறை கொண்டு, அவர்களின்‌ துன்பத்திற்காக இறைஞ்சுகிறாள்‌!

பிறரின்‌ நலனுக்காக தன்னையே அர்ப்பணிக்கும்‌ அன்புடையவர்களின்‌ செயல்பாட்டைப்‌ பார்த்த பிறகுதான்‌ ஆண்டவர்‌ மாபெரும்‌ அற்புதத்தைச்‌ செய்து கடவுளின்‌ மாட்சியை வெளிப்படுத்தினார்‌.

வாழ்வின்‌ ஒவ்வொரு கணமும்‌ என்‌ கடவுளின்‌ மாட்சியைக்‌ காண மாட்டேனா என்று பரிதவிப்போடு இருக்கும்‌ அன்பு உள்ளங்களே! கிறிஸ்து நம்மிடம்‌ எதிர்பார்ப்பதெல்லாம்‌ பிறருடைய துன்பத்திலும்‌, கண்ணீரிலும்‌ பங்கெடுக்கும்‌ அர்ப்பண வாழ்வுதான்‌. கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்வாக நம்‌ வாழ்வு மாறும்‌ பொழுது நமது குடும்பத்தில்‌ ஏற்படும்‌ எதிர்பாராத பரிதவிப்பு, தோல்விகள்‌, துன்பங்கள்‌, ஏமாற்றங்கள்‌ அனைத்தும்‌ நம்மை விட்டு மறைந்து போகும்‌. இறைவனின்‌ மாட்சி மகிமையுடன்‌ வெளிப்படுத்தப்படும்‌.

அப்பொழுது நாம்‌ அனைவரும்‌ நிறைவாக மகிழ்ச்சியோடு இறைவனின்‌ பராமரிப்பை ஒரு “திருவெளிப்பாடு” என்று பறைசாற்றுவோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

இயேசுவின்‌ தாய்‌ பணியாளரிடம்‌, “அவர்‌ உங்களுக்குச்‌ சொல்லுவதெல்லாம்‌ செய்யுங்கள்‌ என்றார்‌” இது அன்னை மரியாள்‌. இயேசுவின்‌ மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.
யாருக்கு என்ன நடந்தாலும்‌ நமக்கு என்ன! என்று இல்லாமல்‌, அன்னை மரியாள்‌ உடனே அக்கறை கொண்டு தன்‌ இரக்கக்‌ குணத்தை வெனளிப்படுத்தினார்‌.
“தாமதமாக வந்தாலும்‌ நன்கு தரமாக உள்ளது” என்று கூறுமளவுக்குத்‌ தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றும்‌ பொழுது இயேசு அங்கு வல்லமையுடன்‌ செயல்பட்டார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவாக்குப் பயணம்


பொதுக்‌ காலம்‌ மூன்றாம்‌ ஞாயிறு

இன்றைய இறைவாக்குகள்‌ மூன்றுமே மிகவும்‌ ஆழமான காகவும்‌, பொருள்‌ பொதிந்தவையாகவும்‌ உள்ளன. அதிலும்‌ குறிப்பாக முதல்‌ வாசகமும்‌ நற்செய்தியும்‌ பல நிலைகளில்‌ ஒத்திருக்கின்றன. எஸ்ராவைப்‌ போல இயேசுவும்‌ செபக்கூடத்தில்‌ இறைவாக்குகளின்‌ ஏட்டை வாசிக்கின்றார்‌. இருவரும்‌ அதற்கு விளக்கமும்‌ தருகின்றனர்‌. இங்கு பக்கங்களின்‌ அளவு கருதி நற்செய்திப்‌ பகுதியை மட்டும்‌ விளங்கிக்கொள்ள முயற்சி எடுப்போம்‌.

1. அர்ப்பணம்‌

இன்றைக்கு நற்செய்தியாக நமக்கு அளிக்கப்பட்டிருப்பது லூக்கா நற்செய்தியின்‌ இரு வேறு அதிகாரங்களிலிருந்த இரு சிறு பகுதிகளாகும்‌. அதாவது முதல்‌ அதிகாரத்தின்‌ முதல்‌ நான்கு வசனங்களும்‌, நான்காம்‌ அதிகாரத்தின்‌ சில வசனங்களுமாகும்‌.

முதல்‌ அதிகாரத்தின்‌ முதல்‌ வசனங்கள்‌ நிகழ்ச்சிப்‌ பகுதிக்கு வெளியே மொத்த நூலுக்கும்‌ முன்னுரையாக, மாண்புமிகு தியோபில்‌ என்பவருக்கு அர்ப்பணமாக அமைகின்றது. அதன்‌ ஒரு சில உள்கூறுகளை இவண்‌ காண்போம்‌.

அ. வரலாற்று நூல்‌

லூக்கா தனது நற்செய்தியை எழுதத்‌ தொடங்கும்முன்‌ தான்‌ ஒரு வரலாற்று தலை எழுதப்‌ போகின்றோம்‌ என்று உணர்ந்திருந்தார்‌. நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி எழுதியது', "பலர்‌ இதை எழுத முயன்றது (வச. 1), நேரில்‌ கண்டவர்களைப்‌ பற்றிய குறிப்பு (வச. 2), நற்செய்தியாளர்‌ கருத்தாய்‌ செய்த ஆராய்ச்சி (வச. 3), அதை ஒழுங்குபடுத்தியது (வச. 4) ஆகியவற்றைப்பற்றி குறிப்பிடுவதன்‌ வழியாக அவர்‌ ஒரு சிறந்த வரலாற்று நாலை எழுதப்‌ போகின்றார்‌ என்பதை உணர்ந்திருந்தார்‌ என்பது புலப்‌ படுகின்றது.

ஆ. வித்தியாசமான நூல்‌

லூக்கா தனக்கு முன்பே சிலர்‌ இயேசுவின்‌ வரலாற்றை முறைப்படுத்தி எழுதியுள்ளனர்‌, அல்லது எழுத முயன்றுன்னனர்‌ என்பதை அறிந்திருந்தார்‌. அதை பதிவும்‌ செய்திருக்கின்றார்‌ (வச. 7-2). ஆனால்‌ லூக்கா அதில்‌ எதிலும்‌ நிறைவு அடைந்ததாகத்‌ தெரியவில்லை. ஏனெனில்‌ அவை முழுமையாக இல்லை என்பது அவரது கருத்தாக இருக்கலாம்‌. அதே வேளையில்‌ தன்னுடைய நூல்‌ அந்த முந்தைய நரல்களைவிட சிறந்ததாக முழுமையானதாக இருப்பதாகவும்‌ அவருக்கு ஓர்‌ உணர்வு இருந்ததை நாம்‌ உணரமுடிகின்றது. எனவே லூக்காவின்‌ நாலை சிறப்பானதாக ஆக்குவது மாற்றுவது எது எனும்‌ கேள்வி எழுகின்றது. லாக்காவே இதற்குப்‌ பதில்‌ தருகின்றார்‌. அதாவது, அவரின்‌ “ஒழுங்குபடுத்துதல்‌' (வச. 4) சரியானதாக, முழுமையானதாக அமைகின்றது. இந்த “ஒழுங்குபடுத்துதல்‌” எதில்‌ அடங்கியிருக்கின்றது எனும்‌ வினாவிற்கு நிகழ்ச்சிகளுக்கு இடையேயுள்ள தொடர்பை ஆஅரக்கா சரியாக கணித்திருப்பதாக உணர்ந்திருக்கலாம்‌ என சில அறிஞர்கள்‌ எண்ணுகின்றனர்‌. இந்தத்‌ “தொடர்புகள்‌ பிற நூல்களின்‌ ஆசிரியர்களுக்கு புரிபடாமல்‌ போயிருக்கலாம்‌.

இ. நற்செய்தி நூவின்‌ நோக்கம்‌

இந்தப்‌ பகுதிக்கு இது முக்கியமானது. லூக்கா இந்த நற்செய்தி நாலை எழுதுவதற்கு முக்கிய நோக்கம்‌ தியோபிலும்‌, அவரைப்‌ போன்ற பிறஇன கிறிஸ்தவர்களும்‌ நம்பி ஏற்றிருக்கும்‌ இயேசுவைப்‌ பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுவதற்காகத்தான்‌.

ஈ. இறையியல்‌ நோக்கம்‌

இந்த முன்னுறையை வெறும்‌ வரலாற்று நாலுக்கோ அல்லது ஓர்‌ இலக்கியப்‌ படைப்புக்கோ அளிக்கப்பட்ட அர்ப்பண மாக மட்டும்‌ பார்க்கக்கூடாது. மாறாக இங்கும்‌ ஓர்‌ இறையியல்‌ செய்தியையும்‌ பதிவு செய்கின்றார்‌ நற்செய்தியாளர்‌. எனவே இந்த நற்செய்தி நூல்‌ ஏற்கெனவே இருந்த நூல்களையும்‌, தரவுகளையும்‌ லூக்கா தொடக்கத்திலிருந்தே ஆய்ந்து, அறிந்து. எழுதிய அவர்‌ காலத்து “அறிவியல்‌” பூர்வமான வரலாற்று நூல்‌ என்று மட்டும்‌ கொள்ளக்‌ கூடாது. மாறாக இது ஓர்‌ இறையியல்‌ புத்தகமாகவும்‌ பார்க்கப்பட வேண்டும்‌. அதை இந்த அதிகாரத்தின்‌ முதல்‌ வசனத்திலேயே குறிப்பிடுகின்றார்‌. அதாவது வரலாற்று நிகழ்ச்சிகளை “நிறைவேறிய (வச. 7) நிகழ்ச்சிகள்‌ எனக்‌ குறிப்பிடுகின்றார்‌. எனவே இயேசு காலத்திலும்‌, அதற்கு பின்னும்‌ நிகழ்ந்தவை வெறும்‌ வரலாற்‌ று நிகழ்ச்சிகள்‌ மட்டுமல்ல, மாறாக அவை மீட்புத்‌ திட்டத்தின்‌, விவிவிய வரலாற்றின்‌, தொடர்ச்சியும்‌, நீட்சியுமாகும்‌. எனவே பிறஇனத்தாராகிய தியோபில்‌ போன்ற வர்கள்‌ கிறிஸ்துவை ஏற்று இருப்பது இறைத்திட்டத்தின்‌ மீட்பு வரலாற்றின்‌ ஒரு நோக்கம்‌ ஆகும்‌. இதை விரிவாக விளக்குவதே இந்நூலின்‌ நோக்கமாகும்‌. திருத்தூதர்‌ பணிகள்‌ நூலையும்‌ இந்த நற்செய்தியோடு இணைத்துப்‌ பார்த்தால்‌ இக்கருத்து தெளிவாய்‌ விளங்கும்‌. அங்கும்‌ அவர்‌ தியோபிலுக்கு அந்நரலை அர்ப்பணிப்பதையும்‌ நாம்‌ நோக்க வேண்டும்‌. இனி இன்றைய நற்செய்திப்‌ பகுதியின்‌ இரண்டாம்‌ பகுதியான நாசரேத்தில்‌ இயேசு நிகழ்த்தியவற்றின்‌ பொருளைக்‌ காண முயல்வோம்‌.

2. நாசரேத்தில்‌ இயேசு

இயேசுவின்‌ பணி வாழ்வின்‌ தொடக்கத்தில்‌ நிகமும்‌ இந்த நிகழ்ச்சி இயேசுவின்‌ வாழ்வில்‌ ஒரு முக்கியமான நிகழ்வாகும்‌. இங்கு இயேசுவின்‌ பணியின்‌ இலக்கை நிர்ணயிக்கும்‌ 'நாசரேத்து அறிக்கை” அறிவிக்கப்படுகின்றது. மேலும்‌ இந்நிகழ்ச்சி இயேசு யார்‌ என்பதையும்‌ விளக்க லாக்காவுக்குப்‌ பயன்படுகின்றது. இயேசு மெசியா என்பதை லூக்கா நற்செய்தியை தொடக்க முதல்‌ வாசிப்பவர்‌ அறிந்திருப்பர்‌. ஆனால்‌ அவர்‌ எத்தகைய மெசியா என்பதை இந்த நற்செய்திப்‌ பகுதி விளக்குகின்றது. இறைவாக்கினர்‌ ஏசாயாவின்‌ சுருள்‌ ஏடு (வச. 77) அதில்‌ அண்டவரின்‌ ஆவி இறைவாக்கினர்‌ மேல்‌ உள்ளது (வச. 18), அருள்‌ பொழிவு (வச. 18), மறைநூல்‌ வாக்கு நிறைவேறுவது (வச. 27) ஆகியவை பற்றிய குறிப்புகள்‌ எல்லாம்‌ அவர்‌ *இறைவாக்கினரான மெசியா” என்பதைப்‌ புலப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சிப்‌ பகுதிக்கு அடுத்துவரும்‌ பகுதியில்‌ இறைவாக்கினர்களான எலியாவும்‌ (வச. 23-26), எலிசாவும்‌ (வச. 27) குறிப்பிடப்படுவதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகின்றது.

3. ஏழையருக்கான பணி

இயேசு தன்‌ பணி என ஏற்றுக்கொண்ட இந்த அறிக்கையில்‌ இருவிடயங்கள்‌ நோக்கப்படவேண்டும்‌ இயேசு தனது பணி ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிப்பது, பார்வையற்றோருக்கு பார்வை தருவது, ஓடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்குவது என சமூகத்தின்‌ கடைநிலையில்‌ உள்ளவருக்கே என தெளிவுபடுத்துகின்றார்‌. இரண்டாவதாக, ஆண்டவர்‌ அருள்தரும்‌ அண்டினை” முழக்கமிடுவதைப்‌ பற்றிய குறிப்பு, கடன்கள்‌ மன்னிக்கப்பட்டு, நிலங்கள்‌ உரியவரிடம்‌ சேர்ப்பிக்கப்பட்டு, அடிமைகள்‌ விடுதலைபெற்று அனுப்பப்படும்‌ யூபிவி ஆண்டைக்‌ குறிப்பதாக அமைகின்றது. இதைப்‌ பற்றிய குறிப்புகள்‌ லேவி 25:70-18ல்‌ மேலும்‌ காணக்கிடக்கின்றன.

இந்த விடுதலை வாழ்வை நிஜமாக்குவதற்கு உதவுவதற்‌ காகத்தான்‌ யூபிலி ஆண்டுகள்‌ கொம்பூதி அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ்‌ அவர்களும்‌ இறையிரக்கத்தின்‌ சிறப்பு யூபிலி அண்டை புனிதக்‌ கதவுகளை திறந்து துவங்கி வைத்தார்‌. இயேசு தனது பணி என்று ஏற்றுக்‌ கொண்ட கடைநிலையினரின்‌ நல்வாழ்வு, விடுதலை வாழ்வு நமது பணியாகவும்‌, அறிக்கையாகவும்‌, பிரகடனமாகவும்‌ ஆகட்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - மூன்றாம்‌ ஞாயிறு
மூன்றாம்‌ ஆண்டு

முதல் வாசகம்: நெகே. 8:2-6,8

பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப்‌ பின்‌ எருசலேம்‌ வந்த மக்கள்‌ அழிந்த ஆலயத்தை நெகேமியா தலைமையில்‌ மீண்டும்‌ கட்டி எழுப்பினர்‌. எஸ்ரா என்னும்‌ திருச்சட்ட வல்லுநர்‌, மோசேயின்‌ சட்டத்தை மக்கள்‌ கடைப்‌ பிடிக்கும்‌ பழக்கத்தைப்‌ புதுப்பித்தார்‌. விழாக்‌ காலங்களில்‌ வேத நூல்கள்‌ வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன. இன்றைய வாசகத்தில்‌ வரும்‌ நிகழ்ச்சி, திருப்பலியில்‌ வரும்‌ இறைவார்த்தை வழிபாட்டின்‌ எதிரொலியாகவும்‌ நமதாண்டவர்‌ நாசரேத்தூர்‌ செபக்‌ கூடத்தில்‌ ஏட்டுச்‌ சுருளை வாசித்து விளக்கம்‌ அறித்ததன்‌ பின்னணி ஆகவும்‌ அமைந்துள்ளது.

வார்த்தை வழிபாடு

திருச்சட்ட நூல்‌ வேதவாக்கு ஆனதால்‌ அதற்குத்‌ தக்க வணக்கம்‌ செலுத்தப்படுகிறது. எஸ்ரா, பன்னிருவர்‌ புடை சூழ திருச்சட்ட நூலை எடுத்து வருகிறார்‌; மேடைக்குச்‌ செல்லுகிறார்‌ (4) நூலைத்‌ திறந்து வாசிக்கிறார்‌; அனைத்து மக்களும்‌ எழுந்து நிற்கின்றனர்‌; எஸ்ரா இறைவனைத்‌ துதித்து வாழ்த்தவே அனைவரும்‌ கைகளை உயர்த்தி 'ஆமென்‌, ஆமென்‌' என்று சொல்லிப்‌ பணிந்து, முகம்‌ குப்புற விழுந்து கடவுளைத்‌ தொழுதார்கள்‌ (7); வாசிக்கப்பட்ட பகுதிக்கு லேவியர்‌ விளக்கம்‌ கூறினர்‌.

வார்த்தை வழிபாட்டில்‌ பக்தியுடன்‌ பங்கெடுக்க வேண்டுமானால்‌, வேத ஏடுகள்‌, தேவ ஏடுகள்‌, இறைவனின்‌ வார்த்தைகளைக்‌ கொண்ட ஏடுகள்‌ என்ற விசுவாசம்‌ தேவை. “இதோ பார்‌! என்‌ சொற்களை உன்‌ வாயில்‌ வைத்துள்ளேன்‌" எரே.1: 9). ஆண்டவரின்‌ வாக்கு எரேமியாவுக்கு அருளப்‌ பட்டது. "இஸ்ரயேலின்‌ கடவுளாகிய ஆண்டவர்‌ இவ்வாறு கூறுகிறார்‌: நான்‌ உனக்குச்‌ சொல்லியிருக்கும்‌ சொற்களை எல்லாம்‌ ஏட்டுச்‌ சுருளில்‌ எழுதிவை'' (எரே. 30 : 2). “மறைநூல்‌ அனைத்தும்‌ கடவுளின்‌ தூண்டுதல் பெற்றுள்ளது" (2 திமொ. 3 : 16). “தூய ஆவியால்‌ ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள்‌ கடவுள்‌ அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும்‌ மனித விருப்பத்தால்‌ உண்டானது அல்ல” (2 பேது. 1 : 21) இறைவார்த்தையைப்‌ படிக்கும்‌ பொழுதும்‌ கேட்கும்‌ பொழுதும்‌ அதற்குரிய வணக்கத்தைச்‌ செலுத்துகிறேனா? நாள்தோறும்‌ திருவிவிலியம்‌ படிக்கும்‌ நல்ல பழக்கம்‌ உண்டா?

வார்த்கையின்படி நடக்கவேண்டும்‌

“உம்‌ சொற்படியே எனக்கு நிகழட்டும்‌” என்றாள்‌” மரியா. திருச்சட்ட நூலை வாசிக்கக்‌ கேட்ட மக்கள்‌, சட்டங்களை மீறியதற்காக மனம்‌ வருந்தி அழுதனர்‌. அழவேண்டாமென அவர்களைத்‌ தடுத்து, இந்த நல்ல நாளில்‌ நீங்கள்‌ விருந்துண்டு, உணவு இல்லாதவர்களுக்கு உணவு அனுப்பி வையுங்கள்‌ என்கிறார்‌ எஸ்ரா. இதுவே இறைவாக்குகளைக்‌ கேட்டதன்‌ பயனாயிருக்க வேண்டும்‌. தூய ஆவியின்‌ தூண்டுதலால்‌ எழுதப்பட்ட இறைவாக்கு “கற்பிப்பதற்கும்‌ கண்டிப்பதற்கும்‌ சீராக்குவ தற்கும்‌ நேர்மையாக வாழப்‌ பயிற்றுவிப்பதற்கும்‌ பயனுள்ளது'' (2 திமொ. 3 : 16).

இறைவார்த்தை எந்த வாளினும்‌ கூர்மையானதாய்‌ ஆன்மாவின்‌ உள்ளாழத்தையும்‌, ஆவியின்‌ உள்ளாழத்தையும்‌ ஊடுருவி, மூட்டு மச்சை வரை எட்டி (எபி. 4 : 12) நம்மில்‌ ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும்‌. வார்த்தைகளைக்‌ கேட்டு, அதன்படி நடக்காதவன்‌ முகச்சாயலைக்‌ கண்ணாடியில்‌ பார்த்துவிட்டுப்‌ போனதும்‌, அச்சாயலை மறந்து விடுபவனுக்குச்‌ சமம்‌ என்கிறார்‌ யாக்கோபு (1: 24). வார்த்தைகளைக்‌ கேட்டு அதன்படி நடப்பவன்‌ பாறைமீது அடித்தளம்‌ அமைத்து வீடு கட்டுபவனுக்குச்‌ சமம்‌ என்கிறார்‌ நமதாண்டவர்‌ (லூக்‌. 6 : 7). இறைவார்த்தையைக்‌ கேட்டும்‌ அதன்படி நடக்காதவனைத்‌ தீர்ப்பிடுவது இறைவார்த்தையே என்கிறார்‌ இயேசு (யோ. 12 : 48). எத்தனை முறை இறைவார்த்தையை நான்‌ வாசித்துள்ளேன்‌, கேட்டுள்ளேன்‌. என்னில்‌ ஏற்பட்ட மாற்றம்‌ என்ன?

அவர்கள்‌ மக்களுக்குப்‌ புரியும்படி தெளிவாகவும்‌ பொருளோடும்‌ வாசித்தனர்‌.

அருட்கொடைகள்‌ வெளிப்படும்‌ வகையிலும்‌ அவற்றின்‌ செயல்முறையிலும்‌ வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ அனைத்து வரங்களும்‌ ஒரே தெய்வீக ஊற்றிலிருந்தே பிறக்கின்றன (12 : 4 - 10. திருச்சபையின்‌ பொது நன்மைக்காகவே இவை அளிக்கப்படுகின்றன என்பதை பவுல்‌ உடலின்‌ உவமை வழியாகத்‌ தெளிவுபடுத்துகிறார்‌.

கிறிஸ்துவில்‌ உறவு

நமக்கும்‌ கிறிஸ்துவுக்கும்‌ உள்ள உறவு வேறு எந்த உறவுடனும்‌ ஒப்பிட முடியாத உறவு. புறக்கண்ணுக்குப்‌ புலப்படாத உறவு. ஆனால்‌ இது ஒர்‌ உண்மையான இணைப்பு. யூதராயினும்‌, புறவினத்தாராயினும்‌ ஒரே ஆவியால்‌, ஒரே உடலாகிய கிறிஸ்துவுக்குள்‌ திருமுழுக்கு பெற்றதால்‌ வரும்‌ உறவு (1: 18; காண்‌. உரோ 4: 25). உறுப்பினர்கள்‌ கூடித்தான்‌ ஒர்‌ அமைப்பை உருவாக்குவர்‌. ஆனால்‌ திருச்சபையாகிய அமைப்பில்‌ உறுப்பினர்கள்‌ சேர்ந்து அதை உருவாக்குவதில்லை. மாறாக, கிறிஸ்துவே மனிதர்களைத்‌ தம்‌ உறுப்புகளாக ஏற்றுக்கொள்ளுகிறார்‌. எனவே “கிறிஸ்துவின்‌ உடல்‌” என்னும்‌ தொடர்‌ வெறும்‌ உருவகம்‌ அன்று; இது ஓர்‌ உண்மைச்‌ செயல்‌. கிறிஸ்தவர்களின்‌ உடல்கள்‌ கிறிஸ்துவின்‌ உறுப்புகள்‌ (6 : 15; எபே. 8 : 30); கிறிஸ்துவே தலை (கொலே. 1 : 18), அதனின்றே முழு உடலும்‌ ஊட்டம்‌ பெறுகிறது. அதன்‌ செயலால்தான்‌ உறுப்புகள்‌ ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன (கொலே 2 : 19). நமது தலையுடன்‌ ஏனைய உறுப்புகள்‌ பொருந்தி ஒரே உயிரைப்பெற்று வாழ்வதுபோலவே, நாமும்‌ கிறிஸ்துவை தலையாகக்கொண்ட திருச்சபை என்ற உடலின்‌ உறுப்புகளாக இருக்கின்றோம்‌ என்பதை உணர்கின்றோமா?

படிப்பினைகள்‌ பல

“கண்‌ கையைப்‌ பார்த்து நீ எனக்குத்‌ தேவையில்லை என்று கூறுவதில்லை” (21). அப்படியே திருச்சபையில்‌ உள்ள அனைவரும்‌ ஒருவர்‌ மற்றவருக்குத்‌ தேவை. உடல்‌ உறுப்புகளில்‌ உயர்ந்தவை, தாழ்ந்தவை, பயனுள்ளவை ! பயனற்றவை என்ற பாகுபாடு இல்லை. அனைத்தும்‌ உடலுக்குத்‌ தேவை. அப்படியே திருச்சபைக்கு அனைத்துப்‌ பணியாளர்களும்‌ தேவை. ஆண்டவரோடு வாழ்ந்து, அவரது உயிர்ப்புக்குச்‌ சான்று கூறிய திருத்தூதர்கள்‌ (திப. 1 : 22), திருநூலுக்கு விளக்கம்‌ சொல்லி விசுவாசப்‌ படிப்பினைகளின்‌ பொருளையும்‌, கிறிஸ்தவ மரபுகளையும்‌ எடுத்துரைக்கும்‌ போதகர்கள்‌ (காண்‌. உரோ. 12 : & கலா. 6 : 6), சமூகத்‌ தொண்டர்கள்‌ (உரோ. 12:7) இறைமக்களை வழிநடத்திச்‌ செல்லும்‌ மேற்பார்வையாளர்கள்‌, மூப்பர்கள்‌ (திப 20 : 17, 28) ஆகிய அனைவரும்‌ திருச்சபைக்குத்‌ தேவை. ஒருவர்‌ அழைப்பையும்‌ பணியையும்‌ கண்டு மற்றவர்‌ பொறாமைப்படுதலும்‌, ஒருவர்‌ பெற்றுள்ள அருட்கொடைகளைக்‌ கண்டு மனம்‌ புழுங்குதலும்‌ கிறிஸ்துவின்‌ உடலையே வெறுக்கும்‌ பாவமாகும்‌. உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும்‌ அருட்கொடைகள்‌ திருச்சபையைக்‌ கட்டி எழுப்பவே அளிக்கப்படுகின்றன. ஐந்து தாலந்து பெற்றவன்‌ அதை மேலும்‌ ஐந்து தாலந்தாகப்‌ பெருக்க வேண்டும்‌.

"உறுப்பு ஒன்று துன்புற்றால்‌, எல்லா உறுப்புகளும்‌ அதனுடன்‌ சேர்ந்து துன்புறும்‌; உறுப்பு ஒன்று மாண்புற்றால்‌, எல்லா உறுப்புகளும்‌ சேர்ந்து இன்புறும்‌” (26). ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌, மற்றவனின்‌ துன்பத்திலும்‌ இன்பத்திலும்‌ பங்குகொள்ள வேண்டும்‌ என்ற பாடமே இங்கு போதிக்கப்படுகிறது.

“எவ்‌ உயிரும்‌ என்‌ உயிர்போல்‌ எண்ணி இரங்கவும்‌ நின்‌
தெய்வ அருட்கருனணை செய்வாய்‌ ! பராபரமே! (தாயுமானவர்‌?)

என்‌ உடன்‌ உழைப்பாளிகளுடன்‌ இணைந்து செயல்படுகின்றேனா? ஒற்றுமையின்‌ கருவியாக உள்ளேனா?

நீங்களோ கிறிஸ்துவின்‌ உடல்‌; ஒவ்வொருவரும்‌ ஒர்‌ உறுப்பு

நற்செய்தி : லூக்‌ 1 : 1-4; 4 : 14-21

அருள்பொழுவு செய்துள்ளார்‌.

செபக்கூட்டத்தில்‌ இயேசு தம்‌ பணியின்‌ இலட்சிய இலக்கை அறிவிக்கிறார்‌. இறைவாக்கினர்‌ வரிசையில்‌ தாம்‌ அனுப்பப்பட்டவர்‌ என்பதைக்‌ குறிக்க அருள்பொழிவு செய்துள்ளார்‌” என சாட்சியம்‌ கூறுகிறார்‌. பேதுருவும்‌ தம்‌ அருளுரையில்‌ இஸ்ரயேல்‌ மக்களுக்கு சாட்சியம்‌ கூறுகிறார்‌. “கடவுள்‌ நாசரேத்து இயேசுவின்‌ மேல்‌ தூய ஆவியாரின்‌ வல்லமையைப்‌ பொழிந்தருளினார்‌..." (திப. 10 : 38).

இயேசுவில்‌, இயேசுவைப்போல்‌ நாமும்‌ திருமுழுக்கில்‌ அருள்பொழிவு பெற்றுள்ளோம்‌.
“தடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்‌; அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்‌. அவரே நம்‌ மீட்பை உறுதிப்படுத்தும்‌ அடையாளமாகத்‌ தூய ஆவியை நம்‌ உள்ளத்தில்‌ பொழிந்து நம்மீது தம்‌ முத்திரையைப்‌ பதித்தார்‌" (2 கொரி. : 22).
நாம்‌ பெற்ற அருள்பொழிவு கடவுளின்‌ மக்களாகும்‌ ஒரு உரிமை மட்டுமல்ல... கடவுள்‌ மக்களாக வாழ்வதற்கு ஒரு சவால்‌. இறை அடியார்களின்‌ அருள்பொழிவு அனுபவத்தை உள்ளார்ந்த விதமா விளக்குகிறது திருமந்திரம்‌:

“விளக்கைப்‌ பிளந்து விளக்கினையேற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத்‌ தூண்டு
விளக்கில்‌ விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான்கழல்‌ மேவலுமாமே. "

எளியோர்க்கு நற்செய்தி

எல்லா இறைவாக்கினருமே ஏழைகளுக்கு சார்பாக... ஏழைகளின்‌ உரிமைகளுக்காகக்‌ குரல்‌ கொடுத்தனர்‌. குறிப்பாக ஆமோஸ்‌ இறைவாக்கினர்‌ சாட்சியம்‌ நம்‌ உள்ளத்தைத்‌ தொட்டு உலுக்குகிறது.

“எளியவனை ஓரு சோடி செருப்புக்கு விற்கிறார்கள்‌ (2 : 6) ஏழை மக்களது கூக்குரல்‌ இறைவனை எட்டுகிறது என்கிறார்‌ திருப்பாடல்‌ ஆசிரியர்‌. அவர்களே இறைவனைச்‌ சார்ந்து வாழ்கிறார்கள்‌ (திபா. 9. 22.25,69). ஏழைகளின்‌ எதிரிகள்‌ இறைவனின்‌ எதிரிகள்‌ (திபா. 18 : 23; 9 :14). எனவே இறைவனின்‌ அன்புக்குச்‌ சிறப்பாக உரியவர்களாகிறார்கள்‌ ஏழை மக்கள்‌.
“இறைவா! நீ எடுத்துள்ள எண்ணிலா வடிவங்களுள்‌ ஏழை வடிவத்தை நான்‌ என்றென்றும்‌ ஏத்துவேனாக!”' என்று விவேகானந்தர்‌ வேண்டினார்‌. ஏழைகள்‌ பற்றிய நம்து கண்ணோட்டம்‌ என்ன? ஏழைகளை நண்பர்களாகக்‌ கொள்ள நாம்‌ பெருமிதப்படுகிறோமா? இயேசுவும்‌ ஒரு ஏழைதானே!

ஆண்டவர்‌ அருள்குரும்‌ ஆண்டினை அறிவிக்க

அருள்‌ தரும்‌ ஆண்டு ஜூபிலி ஆண்டைக்‌ குறிக்கிறது. லேவியர்‌ ஆகமத்தில்‌ (25 : 10 - 13) இவ்வாண்டு மெசியாவின்‌ ஆண்டை, மீட்பின்‌ காலத்தைக்‌ குறிக்கிறது. ஜூபிலி ஆண்டின்‌ மகிழ்ச்சியை இயேசுவின்‌ வருகை கொணர்ந்துள்ளது என்பது இங்கு அறிவிக்கப்படுகிறது. ஏன்‌? ஜூபிலி ஆண்டில்‌ (ஏழாவது ஏழு ஆண்டுகளின்‌ நிறைவு) அதாவது ஒவ்வொரு 50-வது ஆண்டிலும்‌ மக்கள்‌ மத்தியில்‌ சமத்துவ - சகோதரத்துவ உறவுகள்‌ மலர, சில உடைமைகள்‌ பகிர்ந்துகொள்ளப்பட்டன. இது மன்னர்கள்‌ ஆட்சி வருமுன்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ மத்தியில்‌ நிகழ்ந்த சமூக சீர்திருத்தமாகும்‌. யாவே ஆண்டவரே நிலம்‌ அனைத்திற்கும்‌ உரிமையாளர்‌. மக்கள்‌ அவரது பங்காளிகள்‌. எனவே ஒரு சிலர்‌ மட்டும்‌ நிலம்‌ வைத்திருப்பது இறைவனின்‌ திட்டத்திற்கு எதிரானது என உணர்ந்திருந்தனர்‌ (எசா. 5 : 8 - 10; எசே. 46- 7). இந்த நிலவுடைமைப்‌ பார்வையும்‌, கருத்தும்‌ சமத்துவ சமுதாயம்‌ உருவாக மிகவும்‌ அடிப்படையென்று நாம்‌ விஞ்ஞானப்பூர்வமாக அறிகிறோம்‌.

இன்று ஏழைகள்‌ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ முக்கியமான அம்சம்‌ நிலஉடைமைச்‌ சீர்திருத்தமாகும்‌. ஏனெனில்‌ நில பகிர்வு இல்லையேல்‌, அடிப்படை - நீதியான- நிலையான - சமத்துவம்‌ நிகழ முடியாது.

ஆண்டவரின்‌ ஆவி என்மேலே... என்னை அருள்பொழிவு செய்துள்ளார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறுதிவரை நல்ல இரசம்!

புத்தாண்டு தொடங்கி இன்று 19-ஆவது நாள். புத்தாண்டு அன்று நாம் நிறைய வாக்குறுதிகள் எடுத்திருப்போம் அல்லது கொடுத்திருப்போம். ‘காலையில் சீக்கிரம் எழுதல், புத்தகம் வாசித்தல், கோபம் குறைத்தல், அனைவரோடும் நட்பு பாராட்டுதல், உடல்நலம் பேணுதல், நிதிவளம் மேம்படுத்துதல், குழந்தைகள்மேல் அதிக கவனம் செலுத்துதல்’ போன்ற வாக்குறுதிகளை எடுத்திருப்போம். இவை நாம் நமக்கு அளித்த வாக்குறுதிகள். ஆனால், நாமே அவற்றை தன்விருப்பத்தோடு அளித்திருந்தாலும் அவற்றை நிறைவேற்றத் தவறியிருப்போம். ‘ஐயோ, என்னால இத செய்ய முடியலயே!’ என்ற கலக்கம், குற்றவுணர்வு, பயம் நம்மைத் தழுவத் தொடங்கியிருக்கும். இறுதிவரை நல்ல இரசத்தை நாம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி, மீண்டும் நம் புத்தாண்டுப் பயணத்தை நெறிப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறுதி வரை நல்ல இரசம் வேண்டுமெனில் அங்கே இறைவன் இருத்தல் வேண்டும்!

இயேசுவின் பணிவாழ்வை அறிமுகம் செய்கிற ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் (மாற்கு, மத்தேயு, லூக்கா) அவர் தொழுகைக்கூடத்தில் அல்லது வீதியில் நற்செய்தியை அறிவிப்பவராகவும், தொழுகைக்கூடத்தில் பேய் ஓட்டுபவராகவும், தொழுநோய் பீடித்தவருக்கு நலம் தருபவராகவும் அறிமுகம் செய்கிறார்கள். இவர்களுக்கு முற்றிலும் மாறாக, யோவான் நற்செய்தியாளர், திருமண விழா என்னும் சூழலில் இயேசுவின் முதல் போதனையை, அறிகுறியை (வல்ல செயலை) பதிவு செய்கிறார்.

கானாவூர் திருமண விழாவில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றும் நிகழ்வை இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம். முதலில் இந்நிகழ்வில் உள்ள சில இறையியல் மற்றும் இலக்கியக் கூறுகளைப் புரிந்துகொள்வோம். பின்னர், இந்நிகழ்வு நமக்கு அளிக்கும் வாழ்க்கைப் பாடங்களை எடுத்துக்கொள்வோம்.

(1) எதிர்பாராத நிகழ்வு

மனிதர்கள் எதிர்பாராத வேளையில் கடவுள் மனுவுரு ஏற்கிறார். அவர்கள் எதிர்பாராத நேரங்களில் இடங்களில் அவர் அவர்களைச் சந்திக்கிறார். திருமண விழாவுக்கான முன்தயாரிப்பாகத் தயாரிக்கப்பட்ட திராட்சை இரசம் – தேவையான அளவு செய்யப்பட்டிருந்தாலும் வாங்கப்பட்டிருந்தாலும் – எதிர்பாராத விதமாக இரசம் தீர்ந்துவிடுகிறது. இயேசுவே எதிர்பாராத வேளையில் அவருடைய தாய், ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’ எனச் சொல்லி அறிகுறி நிகழ்வைத் தொடங்குகிறார். பந்தி மேற்பார்வையாளரே எதிர்பாராத அளவுக்கு நல்ல இரசம் இறுதி வரை பரிமாறப்படுகிறது. இதுவரை தங்களில் ஒருவர் என இயேசுவை நினைத்த சீடர்கள் எதிர்பாராத விதமாக புதிய அனுபவம் – கடவுளின் மாட்சி இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டதை – உணர்கிறார்கள்.

(2) அனைவரின் ஒத்துழைப்பு

கூட்டொருங்கியக்கத்தின் பொருளை நாம் இந்த அறிகுறியில் கண்டுகொள்ள முடிகிறது. அனைவரும் அவரவருக்குரிய பணியைச் செய்கிறார்கள். மரியா செயலைத் தொடங்குகிறார். இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்துகிறார். பணியாளர்கள் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகிறார்கள். அவர்களே மொண்டு இரசத்தைப் பரிமாறுகிறார்கள். பந்தி மேற்பார்வையாளர் நிகழ்வில் மணமகனைப் பாராட்டுகிறார். சீடர்கள் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கிறார்கள். அனைவரும் அவரவருடைய பணிகளைச் செய்வதோடல்லாமல், ஒருவருடைய பணி மற்றவர்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற நிலையில் அவர்களுடைய பணிகள் ஒன்றோடொன்று பிண்ணிக்கிடக்கின்றன. வெறுமனே மேஜிக் செய்து திராட்சை இரசத்தை உருவாக்கவில்லை இயேசு. பணியாளர்கள் நிரப்பிய தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றுகிறார் இயேசு. கடவுள் நம் வாழ்வில் திராட்சை இரசம் என்னும் அறிகுறியை நிகழ்த்த வேண்டுமெனில் நம் தொட்டிகளைத் தண்ணீர்கொண்டு நாம்தான் நிரப்ப வேண்டும்.

(3) இயேசுவே மணமகன்

யோவான் நற்செய்தியில் பொருள் இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. மேலோட்டமான வாசிப்பில், நிகழ்வு திருமண விழா போல இருக்கிறது. ஆழமான வாசிப்பில், சில கேள்விகள் எழுகின்றன. திருமண நிகழ்வில் விருந்தினர்கள், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், மணமக்கள் எங்கே? பழைய ஏற்பாட்டில், எப்போதெல்லாம் கதாநாயகர்கள் தண்ணீர்த்தொட்டிக்கு அல்லது கிணற்றுக்கு அருகில் வருகிறார்களோ அங்கே அவர்களுக்குத் திருமணம் நிறைவேறும்: ஈசாக்கிற்காக பெண் தேடுகிற ஆபிரகாமின் பணியாளர் ரெபேக்காவை கிணற்றருகில் காண்கிறார். யாக்கோபு இராகேலைக் கண்டது, மோசே மிதியானின் அர்ச்சகருடைய மகளைக் கண்டதும் கிணற்றருகில்தான். சவுல் இஸ்ரயேல் மக்களின் அரசன் என்னும் நிகழ்வும் அவர் தண்ணீர் சுமந்துவந்த பெண்களைக் காணும்போதுதான் நிறைவேறுகிறது. ஆறு கல்தொட்டிகளில் தண்ணீர். அத்தண்ணீர் அருகில் வருகிற இயேசு, புதிய இஸ்ரயேல் என்னும் மணமகளை மணமுடிக்கிற மணமகனாக மாறுகிறார். மேலும், இறுதிவரை திராட்சை இரசத்தைத் தக்க வைக்கிற மேன்மையான மணமகனாகவும் இருக்கிறார்.

(4) இயேசுவே நல்ல இரசம்

‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’ என்று சொல்வதன் வழியாக, இயேசுவின் தாய், பழைய உடன்படிக்கையின் இரசம் தீர்ந்துவிட்டது என்று சொல்கிறார். பழைய உடன்படிக்கையை கனியால் அறிமுகம் செய்த ஏவா போல, புதிய உடன்படிக்கையை திராட்சை இரசத்தால் அறிமுகம் செய்கிறார் மரியா. ஏற்கெனவே இருந்த சட்டம், இறைவாக்குகள், அச்சம் என்னும் இரசம் தீர்ந்துவிட, இரக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட புதிய உடன்படிக்கை இயேசுவில் தொடங்குகிறது. ‘திராட்சை இரசம் எங்கிருந்து வந்தது’ என்பது பணியாளர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ‘இவர் எங்கிருந்து வந்தவர்?’ என்பது யோவான் நற்செய்தியின் முதன்மையான கேள்வி. நிக்கதேம் தொடங்கி, இறுதியில் பிலாத்து வரை, ‘இயேசு எங்கிருந்து வந்தவர்?’ என்ற கேள்வியோடு நிற்கிறார்கள். பதில் தெரிந்ததுபோலவும் இருக்கிறது, தெரியாதது போலவும் இருக்கிறது.

(5) இயேசுவின் மாட்சி

‘இந்நிகழ்வின் வழியாக இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்தினார்’ என்று பதிவு செய்கிறார் யோவான். தன் நற்செய்தியின் முகவுரையில் மனுவுருவாதல் பற்றிய நிகழ்வை மாட்சியின் வெளிப்பாடு என்றே குறிப்பிடுகிறார்: ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்’ (யோவா 1:14). நிகழ்வில் ஒரு முரணும் இருக்கிறது. இயேசுவின் மாட்சி அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், இரசம் எங்கிருந்து வந்தது என்பது அனைவருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. அடித்தளப் பணியாளர்களுக்கே வெளிப்படுத்தப்படுகிறது. வெளிப்பாடும் மறைபொருளும் இணைந்தே நிற்கிறது இயேசுவில். கடவுள் தம்மை வெளிப்படுத்தினாலும் அவர் மறைபொருளாகவே இருக்கிறார்.

(6) சீடர்களின் நம்பிக்கை

நிகழ்வின் இறுதியில், ‘அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்’ எனப் பதிவு செய்கிறார் யோவான். திருமண விழாவுக்கு விருந்தினர்களாக வந்தவர்கள் புதிய மணமகனின் நம்பிக்கையாளர்களாக மாறுகிறார்கள். இந்த மாற்றம் நிகழ்வதால்தான் இயேசுவின் வல்ல செயலை ‘அறிகுறி’ எனப் பதிவு செய்கிறார் யோவான். இயேசுவின் செயல்கள் அனைத்தும் அவர் யார் என்பதைச் சுட்டிக்காட்டும் விரல்களாக இருக்கின்றன.

இந்நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) பிரச்சினைக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள தூரம் குறைய வேண்டும்

‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது’ என்பது ஒரு பிரச்சினை. திராட்சை இரசக் குறைவு என்பது திருமண விழாவின் மகிழ்ச்சியைக் குறைப்பதோடு, மணவீட்டாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். இந்தப் பிரச்சினையைக் கண்டவுடன் உடனடியாக செயலாற்றுகிறார் இயேசுவின் தாய். பிரச்சினையை இயேசுவிடம் முன்மொழிந்ததோடல்லாமல், ‘அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்!’ என்று பணியாளர்களுக்குக் கட்டளை இடுகிறார். இயேசுவும் தொடர் செயல் ஆற்றுகிறார். வெற்றி என்பது பிரச்சினைக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள இடைவெளிக் குறைவைப் பொருத்ததே. எனக்கு உடல்நலக் குறைவு என்றால் அதை சரி செய்வதற்கான செயல்பாட்டை உடனடியாக நான் தொடங்க வேண்டும். ஒரு நூல் அல்லது கட்டுரை எழுத வேண்டும் என்னும் தேவை இருந்தால் அதை உடனடியாக நான் தொடங்க வேண்டும். ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் ஒரு சொலவடை உண்டு: ‘தவறான பேருந்தில் ஏறிவிட்டோம் எனத் தெரிந்தால், உடனடியாக அதிலிருந்து இறங்கிவிடு. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் திரும்பி வருவதற்கான நேரத்தையும் பொருள்செலவையும் கூட்டும்.’ உடனடியான செயல்பாடு நம் வாழ்வை மேம்படுத்துகிறது. வெறும் எண்ணம் அல்ல, மாறாக, செயல்பாடே மாற்றத்துக்கு வழிவகுக்கிறது.

(ஆ) ஒவ்வொருவரும் அவரவர் பணியைச் செய்ய வேண்டும்

‘அருள் கொடைகள் பலவகையுண்டு … திருத்தொண்டுகள் பலவகையுண்டு’ என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகின்றன’ என்கிறார். திராட்சை இரசம் நிறைவாகக் கிடைக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் பணியைச் செய்ய வேண்டும். குறிப்பாக இயேசு நம் இல்லம் வர வேண்டும். இயேசு நம் இல்லம் வராதவரை தொட்டிகளில் தண்ணீர் மட்டுமே இருக்கும். மேலும், நம் செயல்பாடு இல்லாமல் கடவுள் செயலாற்ற இயலாது. நம்மால் முடிந்ததை நாம் முழுமையாகச் செய்யும்போது கடவுள் செயலாற்றத் தொடங்குவார்.

(இ) மகிழ்ச்சி என்னும் அளவுகோல்

நிகழ்வின் தொடக்கத்திலிருந்த இறுக்கம் மறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் மகிழ்ச்சியை வழங்குபவராக வருகிறார். ‘எப்சிபா’ (‘என் மகிழ்ச்சி அவளில்’), ‘பெயூலா’ (‘திருமணம் முடிக்கப்பட்டவள்’) என்னும் புதிய பெயர்களை இஸ்ரயேலுக்கு வழங்குகிறார் கடவுள். எகிப்திய இலக்கியங்களின் கூற்றுப்படி, மனிதர்கள் இறந்தவுடன் அவர்களுடைய ஆன்மா நிலைவாழ்வின் வாயிலுக்குச் செல்லும். அங்கே இரண்டு கேள்விகள் கேட்கப்படும்: ‘நீ உன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாயா?’ ‘உன்னால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா?’ இந்த இரண்டு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்று விடையளிக்கிற ஆன்மா பேரின்பத்துக்கும், ‘இல்லை’ என்று விடையளிக்கிற ஆன்மா நிலையான தண்டனைக்கும் செல்லும். திருமண விழா, மணமகன், திராட்சை இரசம் என அனைத்தும் மகிழ்ச்சியின் அடையாளங்களாக உள்ளன. இயேசுவின் உடனிருப்பு மகிழ்ச்சி தருகிறது. ஆறாவது கற்சாடிக்கு அருகில் ஏழாவது கற்சாடியாக நின்று நிறைவைத் தருகிறார் இயேசு. நம் வாழ்வின் மகிழ்ச்சியை நாம் இறுதிவரை தக்கவைத்துக்கொள்ளுமாறு வாழ்தல் நலம்.

18 ஜனவரி (நேற்று) முதல் 25 ஜனவரி வரை உள்ள வாரத்தை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் எனக் கொண்டாடுகிறோம். ஒரே கிறிஸ்துவை அறிக்கையிடுகிற நாம் நமக்குள்ளேயே பிளவுபட்டு நின்றால், ஒருமைப்பாட்டுக்காக இறைவேண்டல் செய்த கிறிஸ்துவுக்கு எதிர்சான்றுகள் ஆகிவிடுவோம். கிறிஸ்துவை மையப்படுத்திய பார்வையும் வாழ்க்கையும் நம் ஒன்றிப்பு வழிவகுக்கும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு