மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு
Tamil Sunday Homily collection.
3-ஆம் ஆண்டு
இன்றைய வாசகங்கள்:-
உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
சுயநலத்தால், ஆணவத்தால், அதிகாரத்தால் தேங்கிய குட்டை போன்ற வாழ்வை ஓடும் நீரோடையாக மாற்றும் காலம். நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் பாலைவனச் சோதனைகளைக் கடந்து சுதந்திர பூமியில் கால் பதித்தார்கள். இயேசு நாற்பது நாட்களில் தனக்கு வந்த சோதனைகளை வென்று சாதனை படைத்தார். விவிலியத்தில் நாற்பது என்பது புனிதமான எண்ணாகும். நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள். இரவும் பகலும் மழை பெய்தது. இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம் செய்தார்கள் (இ.ச. 8:2). மோசே நாற்பது நாட்கள் சீனாய் மலையில் தங்கி இருந்தார் (வி.ப. 24:18). எலியா நாற்பது நாட்கள் உண்ணாமல் பயணம் செய்தார் (1 அரச 19:8). இயேசுவின் பாலைவன வாழ்வும் நாற்பது நாட்கள். தவக்கால 40 நாட்களும் நம்மையே சுய ஆய்வு செய்து, சோதனைகளை வென்று இறைவனின் அருளைப் பெறும் காலம். இக்காலம் நம்மையே புதுப்பிக்க அழைக்கிறது. எனவேதான் புனித பவுல் அடிகளார், இதுவே தகுந்த காலம் என்று கூறுகிறார் (2 கொரி. 2). நில், கவனி, செல் என்ற எச்சரிக்கை ஆன்மீக வாழ்விலும் தவக்கால தொடக்கத்திற்கும் பொருந்தும்
இயேசுவுக்கு மூன்று சோதனைகள் வந்தன:
1. உணவைக் குறுக்கு வழியில் பெற சோதனை
2. அதிசயங்களைப் பார்க்கச் சோதனை
3. அடிமைச் சுகம் காணச் சோதனை
இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. இயேசு பாலைவன சோதனையை வென்ற பிறகு தூய ஆவியின் துணையோடு போதிக்கும் பணியை, குணப்படுத்தும் பணியை, வழிநடத்தும் பணியை, அநீதியை எதிர்க்கும் பணியைத் தொடர கலிலேயாவில் காலடி பதித்தார் (லூக். 4:14).
பணக்காரன் ஒருவன் ஒரு துறவியிடம் சென்று, எனக்கு நிறையப் பணமிருந்தும் நிம்மதியே இல்லை. எந்த வேலையைத் தொடங்கினாலும் சோதனையாகவே இருக்கிறது. என்ன காரணம்?
என்று கேட்டான். துறவியானவர் பதில் சொல்லாமல், அருகில் இருந்த ஒரு குழந்தையை அழைத்து ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்தார். வலது கையால் வாங்கிக் கொண்டது. இன்னொரு பழத்தைக் கொடுத்தார். அதை இடது கையால் வாங்கிக் கொண்டது. மூன்றாவது பழத்தையும் கொடுத்தார். முதல் இரண்டு பழங்களையும் நெஞ்சிலே அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தை வாங்க முயற்சி செய்தது. ஆனால் பழம் நழுவி கீழே விழுந்தது. குழந்தை அழுதது. இரண்டு பழங்கள் போதும் என்று நினைத்திருந்தால் இப்போது அந்தக் குழந்தை அழத் “தேவையில்லை. அதுபோல, போதும் என்ற மனமிருந்தால் நிம்மதி கிடைக்கும். சோதனை இருக்காது என்றார் துறவி. இயேசுவின் மூன்று சோதனைகளும் நமக்குச் சிறந்த பாடமாக அமைகிறது.
பாவத்தைத் தவிர்க்கவும், மாயக்கவர்ச்சிகளில் மயங்காமல் "இருக்கவும், இயேசு நமக்கு வழிகாட்டுகிறார். சோதனையின்போது “செபம், தவம் இவைகளின் வழியாக இயேசு மனவலிமையைப் "பெற்றார். இன்றையச் சூழலில் நமக்கு இலக்குத் தெளிவாக இருந்தால் வெற்றி உறுதியாகும். சோதனை நேரத்தில் பேச (வேண்டிய நேரத்தில் இயேசு பேசினார். அமைதி காக்க வேண்டிய 'நேரத்தில் அமைதி காத்தார். இதைத்தான் நாமும் இயேசுவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சோதனை நேரத்தில் நாம் கடவுளோடு இருக்கிறோமா? என்பது முக்கியம். இயேசு தனது பணி வாழ்வில் 'தெளிவாகச் செயல்பட்டார். பணம், பதவி, புகழ் ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்திகளாகும். இவைகளை இயேசு தூய ஆவியானவரின் துணையால் வென்றார். நாமும் நமது வாழ்வில் சோதனை நேரங்களில் நிதானமாகச் செயல்பட்டு சாதனை படைப்போம்.
இன்றைய நற்செய்தி இயேசு அலகையால் பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.
அலகை என்றால் யார் என்பதற்கு யோபு என்னும் நூலில் விளக்கமொன்றை நாம் காண்கின்றோம் (யோபு 1:1-12].
இதோ அந்த விளக்கம்!
ஊசு என்ற நாட்டில் யோபு என்ற மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நீதிமான். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வாழ்ந்தவர். அவருக்கு ஏழு புதல்வரும், மூன்று புதல்வியரும் இருந்தனர். அவர் ஒரு பெரிய பணக்காரர்.
என் பிள்ளைகள் ஒரு வேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும் என்று யோபு நினைத்து, தினந்தோறும் காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லாருக்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார்.
ஒரு நாள் அலகை, அதாவது சாத்தான் கடவுள் முன்னால் நின்றான். கடவுள் சாத்தனைப் பார்த்து, எங்கிருந்து வருகின்றாய்?என்றார். அதற்கு சாத்தான், நான் உலகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டூ வருகின்றேன் என்றான். கடவுள் சாத்தானிடம், என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார்.
சாத்தானோ கடவுளைப் பார்த்து, நீர் அவனைப் பாதுகாப்பதால்தான் அவன் நீதிமானாய் இருக்கின்றான். அவனுக்குரியவற்றின் மீது நீர் கை வைத்தால் அவன் உன்னைப் பழிப்பான் என்றான்.
கடவுளோ, இதோ! அவனுக்குரியவையல்லாம் உன் கையிலே; அவன் மீது மட்டும் கை வைக்காதே என்றார்.
சாத்தான் யோபுவை சோதித்தான். யோபுவுக்கு சொந்தமானவை அனைத்தையும் அழித்தான். ஆனால் யோபு எந்த சோதனைக்குள்ளும் விழவில்லை! சாத்தான் திரும்பவும் ஆண்டவர் முன்னால் தோன்றி, யோபுவின்மீது கைவைக்க உத்தரவு கேட்டான். ஆண்டவர் சாத்தானிடம், இதோ அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை (யோபு 2:6] என்றார்.
சாத்தான் யோபுவை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களல் வாட்டி வதைத்தான் (யோபு 2:7]. ஆனால் யோபு கடவுளுக்கு எதிராக எதுவும் பேசவில்லை!
யோபு நூலின் வழியாக, சாத்தான் என்பவன் மனிதர்களை கடவுளின் மதிப்பீடுகளுக்கு எதிராகச் [6யாபு 1:8]) செயல்படத் தூண்டுகின்றவன் (யோபு 2:3) என்பது நமக்குப் புரிகின்றது.
இன்றைய நற்செய்தியில் சாத்தான் அவனது தீய செயல்பாட்டின்படி வாழ இயேசுவை அழைக்கின்றான்.
முதல் சோதனை சுயநலத்திற்கு இடம் கொடுக்கவும், இரண்டாவது சோதனை மண்ணாசைக்கு இடம் கொடுக்கவும், மூன்றாவது சோதனை தற்புகழ்ச்சிக்கு இடம் கொடுக்கவும், நான்காவது சோதனை (லூக் 4:13, 22:42அ) விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவும் இயேசுவை அழைக்கின்றன.
ஆனால் இயேசு எல்லா சோதனைகளையும் வென்றார். அவரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தது யார்? தூய ஆவியார்! கடவுளின் வல்லமையாகத் திகழ்பவர் தூய ஆவியார் (லூக் 4:1).
சாத்தானை அப்பாலே போ என்று சொல்லும் அளவுக்கு நமக்கு ஆற்றலைத் தரும் வல்லமை மிக்கவர் தூய ஆவியார்.
இன்றைய முதல் வாசகம் கூறுவது பால நமது ஆவி ஏக்கத்தோடு தூய ஆவியாரை நாளும் பொழுதும் தேட வேண்டும் (எசா 26:9அ)]; தூய ஆவியாரை நோக்கி, வாரும் தூய ஆவியாரே என்று மன்றாட வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல கடவுளை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகின்றார் (உரோ 10:12ஆ] மேலும் அறிவோம் :
வருமுன்னர்க் காலாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் : 435)
பொருள் :
குற்றம் எதுவும் வருவதற்கு முன்பே அது வாராதவாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக்கொள்ளாதவரின் வாழ்வு, நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட வைக்கோற்போர் போன்று அழிந்து ஒழியும்!
திருமணமாகாத ஒருவர் திருமணமான ஒருவரிடம், “கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள வேறுபா என்ன?” என்று கேட்டதற்கு அவர், “மனைவியே கடவுள் தந்த சோதனை தானே” என்று பதிலளித்தார்.
நாமனைவரும் பலவிதங்களில் சோதிக்கப்படுகிறோம். அப்போ "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், கடவுள் எவரையும் சோதிப்பதில்லை: மனிதர் தங்கள் தீயதாட்டங்களால் சோதிக்கப்படுகின்றனர். தீய நாட்டங்களே கருவுற்றுப் பாவத்தையும். பாவம் சாவையும் விளைவிக்கிறது என்கிறார் திருத்தூதர் புனித யாக்கோபு (காண், யாக் 3:13-78),
"நமக்குள் இயல்பாக இருக்கும் தீய நாட்டங்களைப் பயன்படுத்தி நம்மைச் சோதிப்பது அலகை. அலகையோ தொடக்க முதல் பொய்யன். பொய்மையின் பிறப்பிடம் (யோவா 8:44). அது மனிதரை வஞ்சித்துப் பாவத்தில் விழச் செய்கிறது. எனவேதான். “எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” (மத் 6:13) என்று மன்றாடக் கிறிஸ்து பணித்துள்ளார்.
கிறிஸ்துவே எல்லா வகையிலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டவர். எனினும் அவர் பாவம் செய்யாதவர் (எபி 4:15). அலகை கிறிஸ்துவை மூன்று விதங்களில் சோதித்தது. மூன்று முறையும் அவர் இறைவாக்கை மேற்கோள் காட்டி அலகையை வென்றார்.
"உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது (1 யோவா 5:19) என்றும், இவ்வுலகைச் சார்ந்தவை அனைத்தும் உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு என்றும் (1 யோவா 2:16) யோவான் இவ்வுலகின் தீய சக்திகளை இனம் காட்டுகிறார். இம்முப்பெரும் தீய சக்திகளைக் கொண்டு அலகை கிறிஸ்துவை திசை திருப்ப முயன்றது.
முதலாவது, மனிதரிடம் இயல்பாக உள்ளது உடல் ஆசை; ஊன் இயல்பின் இச்சைகள். உடலின் இச்சைகளைப் பூர்த்தி செய்வதில் மனிதர் குறியாக உள்ளனர்; தொகை தொகையாகச் செலவழித்து வகை வகையான இன்பங்களைத் துய்க்கின்றனர்.
40 நாள்கள் பாலைநிலத்தில் எதுவும் உண்ணாமல் நோன்பிருந்த கிறிஸ்து பசியுற்றார். அவரின் உடலின் தேவையை நகன்கறிந்த அலகை, கல்லை அப்பமாக மாற்றிச் சாப்பிடும்படி அவரைச் சோதித்தான். ஆனால், கிறிஸ்துவோ இணைச்சட்ட நூலிலிருந்து மேற்கோள்காட்டி “மனிதா அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” (இச 8:3) எனக்கூறி அலகையை வெல்லுகிறார்.
நமது ஐம்புலன்களின் இச்சைகளைத் தணித்துக் கொள்ளும்படி நவீன ஊடக உலகம் பல்வேறு கவர்ச்சிமிக்க விளம்பரங்களை நம் கண்முன் நிறுத்துகிறது. ஓர் உணவு விடுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏனென்றால், அவ்விடுதியில் குஷ்பு இட்டிலி, சிம்ரன் கோழிக் குழம்பு, ரம்பா தொடைக் கறி கொடுக்கிறார்களாம். “கோழி ருசியாய் இருந்தா கோழியைத் தின்பேன், குமரி ருசியாய் இருந்தா குமரியைத் தின்பேன்”. இது இவ்வுலகின் வழி, அலகை காட்டும் வழி.
நாம். பசிக்காகச் சாப்பிடுகிறோம். வெறும் ருசிக்காக மட்டும் மாப்பிடுவதில்லை. வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம், சாப்பிடுவதற்காக வாழ்வதில்லை. சாப்பாட்டிலேயே குறியாக உள்ளவர்களைப் பற்றித் திருத்தூதர் பவுல், "வயிறே அவர்கள் தெய்வம்” (பிலி 3:19) என்கிறார்.
உண்டு உண்டு கொழுத்து மாரடைப்பால் மாண்டு போகாமல், நமக்குள்ள உணவைப் பிறருடன் பகிர்வோம். பசியால் வாடும் ஒருவர்க்கு நாம் உணவு கொடுக்காததால் அவர் இறந்தால், நாம் அவரைக் கொல்லும் கொலைகாரர்கள். தவக்காலத்தில் நோன்பு இருந்து பசிப்பிணி ஒழிப்பிற்காகத் தாராள மனத்துடன் உதவ முன் வருவோம்.
செவிக்கு உணவு இல்லாத போதுதான். வயிறுக்குச் சிறிது உணவு கொடுக்கவேண்டும்.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும்சயப்படும்... .. (குறள் 412)
“மனிதர் அப்பத்தினால். மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றனர்” (இச8:3). எனவே. தவக்காலத்தில் வாழ்வு தரும் வார்த்தையைப் படித்து பயனடைவோம்.
சாதனையாளர்களின் பேரும் புகழும் தான் நம் நினைவுக்கு வருகிறதே தவிர அவர்கள் நடந்து வந்த பாதையில் கடந்து வந்த சோதனைகளையும் வேதனைகளையும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
மாமன்னன் நெப்போலியன் ஒருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஏதோ முக்கியமான திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கலந்துரையாடலில் நெப்போலியன் பேசியபோதெல்லாம் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு அமைச்சர்கள் சிரித்துக் கொண்டனர். சிரிப்பா என்று மன்னனுக்கு வியப்பு! கூட்டம் முடிந்தபின் அந்த அமைச்சர் இருவரையும் தனியாக அழைத்து இதுபற்றிக் கேட்டான். அவர்களோ உதறல் எடுத்துப் பயத்தில் ஒன்றுமே இல்லை என்று சத்தியம் செய்தனர். மன்னன் விடுவதாக இல்லை. உண்மையைச் சொன்னால் தண்டிக்கப் போவதில்லை என்று உறுதி அளித்தான். உடனே அந்த அமைச்சர்கள் “அரசே, நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் இரண்டு தோள்களையும் மேல்நோக்கிக் குலுக்குகிறீர்கள். அளவுக்கு அதிகமாகக் குலுக்கிக் கொண்டே பேசுவது பார்ப்பதற்குப் பரிகாசமாய் இருக்கிறது. எனவே சிரித்து விட்டோம். மன்னித்து விடுங்கள்” என்றனர். மன்னன் அவர்களை அனுப்பிவிட்டுத் தன் அறைக்குச் சென்று யோசித்தான். தீரச் சிந்தித்தவனாய் திடீரென்று எழுந்து இரண்டு கூரிய வாள்களைத் தன் இரு தோள்களுக்கு மேலே கட்டித் தொங்க விட்டு கூட்டத்தில் பேசுவதுபோல் பேசத் தொடங்கினான். தன் இயல்பான, வழக்கமான தோள் குலுங்கல் அப்போதும் ஏற்பட கூரிய வாள்கள் தோள்களைப் பதம் பார்த்தன. குருதி கொட்டியது. மன்னன் விடவில்லை. அப்பழக்கம் தீருமட்டும் பேசி இறுதியில் வெற்றி கண்டான்.
வாழ்க்கை என்பது சவால். சோதனைகளின்றி, போராட்டங்களின்றி எந்த மனீதனும் மேதையானதில்லை, வீரனானதில்லை, புனிதனானதில்லை.
இந்தப் பிண்ணனியில் இறைவார்த்தையை நினைத்துப் பாருங்கள். “பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் (சோதனையில்) "இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்க வில்லை”.(எபி.12:4)
ஆலிவ் எண்ணெய் வேண்டுமா? ஒலிவ இலைகள் நசுக்கப்பட வேண்டும். திராட்சை மது வேண்டுமா? திராட்சைக் கனிகள் பிழியப்பட "வேண்டும். வாசனைத் திரவியங்கள் வேண்டுமா? மல்லிகை போன்ற மலர்கள் கசக்கப்பட வேண்டும். அதுபோலத்தான் நசுக்கப்படாமல், பிழியப்படாமல், கசக்கப்படாமல், சோதிக்கப்படாமல் எதையும் சாதிக்க முடியாது.
புனிதர்கள் எல்லாம் சோதனைகளைக் கண்டு புலம்பியதில்லை. மகிழ்ச்சியோடு ஏற்று தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். “நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கே சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்” (2 கொரி.4:3-10) என்ற திருத்தூதர் பவுலின் மனஉறுதி இருந்தால் சோதனைகளைக் கண்டு துவண்டு விடமாட்டோம்.
லூக்.22:31இல் படிக்கிறோம்: “சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப் போல உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான் (யோபு நினைவுக்கு வரட்டும்). ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்” என்றார் இயேசு. சோதனையில் நாம் விழாதபடி, விழுந்தாலும் உடனே எழுந்துவிட இயேசு நமக்காகச் செபித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மறுதலித்த மறுகணம் பேதுருவால் மனந்திரும்ப முடிந்தது!
மனிதனுக்குச் சோதனைகளை அனுமதிக்கும் இறைவன், அனுமதிப்பதோடு வாளாவிருப்பதில்லை. திருத்தூதர் பவுல் மொழிவது போல் “கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு பல நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழிசெய்வார்” (1 கொரி.10:13)
சோதனைகளும் கீழான எண்ணங்களும் எழும் அதே ஆன்மாவில்தான் இறைவனும் உள்ளார் என்பதை மறந்து விடுகிறோம். அவர் நம்மைக் கைநெகிழ்ந்து விட்டது போன்ற உணர்ச்சிக்கும் உள்ளாகிறோம்.
இதே உணர்ச்சியின் தாக்குதலுக்கு ஆளான தூய சியன்னா கத்தரின் ஆண்டவரை வினவினார்: “ஆண்டவரே என் இதயம் தூய்மையற்ற எண்ணங்களால் நிறைந்தபோது நீர் எங்கே இருந்தீர்?” அவரோ அவளது இதயத்திலேயேதான் அவ்வமயம் இருந்ததாகக் கூறினார். அவளால் முதலில் நம்ப முடியவில்லை. அவர் இருக்கும் இதயத்திலும் அத்தகைய எண்ணங்களா? பின் ஆண்டவர் அவளிடம் “அச்சோதனைகள் உனக்கு வேதனை தந்ததா, மகிழ்ச்சி அளித்ததா?” எனக் கேட்க, தாளமுடியாத வேதனை என்று அவள் கூற, ஆண்டவர் “நான் உன் இதயத்தில் இருந்ததாலேயே நீ வேதனையுற்றாய். நான் இல்லாதிருந்திருப்பின் அவை உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். உனக்குள்ளே இருந்து உன் எதிரிகளிடமிருந்து உன்னைப் பாதுகாத்தேன்” என்றார்.
சுடச்சுட ஒளிரும் பொன் போல் சோதனையில் விழாது விளங்க விளங்க நம் இதயங்கள் இயேசுவின் திரு இருதயத்துக்கு ஏற்ற இதயங்களாகின்றன. ஏற்றவையா எனக்காணவே அவர் சோதிக்கிறார். “வெள்ளியை உலைக் களமும் பொன்னைப் புடக் குகையும் சோதித்துப் பார்க்கும். உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர் (நீதி.17:3).
சோதனைக்கும் சாதனைக்கும். என்ன வேறுபாடு? சோதனையின் கொம்பை முறித்தால் அது சாதனை!
‘சோதனை’ என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு, அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். சோதனை ஓர் எதிரிபோலவும், நம்மைத் தாக்கக் காத்திருக்கும் ஒரு மிருகம் போலவும் நம் கற்பனையில் பல உருவங்கள் உலா வருவதால், இந்த பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத ஒரு முக்கிய அம்சம் என்பது விளங்கும். சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை. இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் நமக்கு நல்ல பாடங்கள். ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது.
சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவற்றைத் தட்டியெழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதை நாம் நம்ப வேண்டும்.
நமது சொந்த சக்திக்கு மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளரவேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள், வெறும் கற்பனைக் கதைகளா? அல்லது, நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா? சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படையான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகளை அதிகமாக்கிக்கொள்ளும்போது தானே, அவற்றை எவ்வழியிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற சோதனைகளும் அதிகமாகும்?
சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்ற சவாலை சாத்தான் முன்வைக்கிறது. சிறுவர்கள் விளையாடும்போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அச்சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்குப் பயந்து, வீர சாகசங்கள் செய்து, அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான்.
"நீர் இறை மகன் என்றால்..." என்று சொல்லும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இறைமகன் என்பதை நிரூபிக்க, நிலை நாட்ட, புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயநலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்ய வேண்டும்.
தன் சக்தியை நிலைநாட்ட புதுமைகள் செய்பவர்கள், வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுயநலனுக்கு, சுயதேவைக்குப் புதுமைகள் செய்வது, புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.
இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலும் அழகானது. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் உணவைப்பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என்று, மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார் இயேசு. (இணைச்சட்டம் 8:3)
தன் சொந்த பசியைத் தீர்த்துக்கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள் திறமைகள் எதற்கு? சுயத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மட்டுமா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை வென்று, அதை தந்தையிடம் ஒப்படைக்கத்தானே இயேசு மனுவுருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அப்படி இயேசு உலகை வெல்லவேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை அவை முன் சரணடைந்திருக்கிறோம்? இப்படி சமரசம் செய்வதே, 'அட்ஜஸ்ட்' செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.
மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்கவேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம், தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகை போல இது அமையும். எருசலேம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர். 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமானப் பணி, இறுதி 3 நாட்கள் கொடிய வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப்பொழுது போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானைக் கடினமாக விரட்டியடிக்கிறார்.
மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. முதல் இரு சோதனைகளிலும், சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க இயேசு இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையில் அலகை இறை வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "Even the devil can quote the Bible" என்ற பழமொழி உண்டு.
வேதங்கள், வேத நூல்கள் உட்பட நல்லவை பலவும், பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதிமன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.
கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மைக் கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.
நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.
எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த மக்கள் தங்களுடைய விசுவாசத்தையும், நன்றிகளையும் எவ்வாறு கடவுளுக்கு வெளிப்படுத்த வேண்டும், கடவுளுக்கு நன்றி செலுத்த வெறும் வார்த்தைகளை மட்டுமல்லாமல், நம் உழைப்பின் முதற்கனிகளையும் நன்றியாக அர்ப்பணிக்க வேண்டும். இச் செயல்கள் நம்மை கடவுளின் பிள்ளைகளாக்கும் என்று எசாயா இறைவாக்கினர் கூறுகின்றார். இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 10:8-13)
கடவுளின் வார்த்தை ஏற்றுக்கொள்ள கூடியதாகவும், ஆற்றலை அளிக்கும் ஒன்றாகவும் செயல்படுகின்றது என்று தூய பவுல் தனது வீசுவாசத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த விசுவாசம் நம் இதயத்தில் மட்டும் இருக்கும் ஒன்றாக மட்டுமல்லாமல் வாழ்வில் வெளிப்படும் வீசுவாசமாக இருக்க வேண்டும். மனிதன் தன் வாழ்வையே கடவுளின் நற்செய்திக்காக அர்ப்பணிக்க வேண்டும். இத்தகைய வாழ்வு எத்தகைய வேறுபாடுமின்றி மனிதர் அனைவருக்கும் மீட்பைப் பெற்று தரும் என்கிறார். நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 41-13)
இயேசுவின் சோதனையானது அவருடையத் திருமுழுக்கை ஒத்ததாக அமைந்துள்ளது. இயேசு தன் பணி வாழ்வைத் தொடங்கத் தூய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு அர்ப்பணம் செய்யப்படுகின்றார். சாத்தானின் சோதனைகள், இயேசு உலகின் போக்கை முறியடிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அமைந்துள்ளன. இயேசுவின் சோதனைகளின்போது தூய ஆவியானவர் அவருடன் இருந்து செயல்படுகின்றார், உலகை போக்கிற்கும், உலக அரசுகளுக்கும் அப்பாற்பட்டது கடவுளின் அரசு என்பதைச் சாத்தானை வென்று உணர்த்துவதாக நற்செய்தி அமைந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு மூன் கடவுளின் படைப்பான உலகம் பற்றிய ஹாய்ச்சி நடைபெற்றது. பல. முடிவுகளை மனிதர்கள் வெளியிட்டனர். இறுதியாக அவர்கள் சொன்னார்கள் உலகம் உருண்டையானது. என்றும், உலகம் தன்னைத் தானேச் சுற்றி வருகின்றது என்றும் கண்டுபிடித்தார்கள். ஆனால் இந்த உலகம் “துச்சாணீ” இன்றி சூரியனைச் சுற்றி வருகின்றது.
இறைவனுக்கும் இறைவனுடையத் திட்டத்திற்கும் எதிராய் இருப்பவன் சாத்தான். ஆகவே இறைவனுடைய பிள்ளைகளாகிய நமக்கும், நம்முடைய வாழ்வில் நாம் சரியான பாதையில் செல்லும் போது ஆசை காட்டி அல்லல் பட வைப்பவன். மகிழ்ச்சி தருபவன் போலவும், ஜபத்தில் நம்மை காப்பாற்றுகின்றவன் போலவும் நம் சிந்தனை வழியாக நம் வாழ்க்கையில் நுழைந்து நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கின்றான். தவறான பாதையில் நம்மைம் கரம் பிடித்து அழைத்துச் சென்று பாதாளத்தில் தள்ளூவானே ஒழியக் கரம் கொடுத்து நம்மை காப்பாற்ற மாட்டான்.
ஏழை ஒருவனுக்கு அமெரிக்காவைக் கைப்பற்ற வேண்டும். என்ற சோதனை வராது. மாறாக சாண் வயிற்றைக் கழுவ யார் வயிற்றிலாவது அடிக்க வேண்டும் என்ற சோதனையைத்தான் சாத்தான் கொடுப்பான்.
தொடக்கநூலின் துவத்தில் கடவுள் அனைத்தையும் படைத்து உலகையே ஆண்டுகொள்ளும் அதிகாரத்தை ஆதாம், ஏவாள் பொறுப்பில் ஒப்படைத்தாரென வாசிக்கின்றோம். அவர்களுக்கு சோதனையோ சாதாரண பழத்தின் மேல். அவர்கள் சோதனையை வெல்லவில்லை: மாறாகச் சோதனைக்கு உட்பட்டார்கள். அவர்களின் வழியாகப் பாவம் இவ்வுலகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. அந்தச் சாத்தானின் ஆட்சியை நமதாண்டவர் முடிவுக்குக் கொண்டு வர மனிதணக அவதரித்து பல சோதனைகளை வென்று சாதனை படைத்து மனிதனுக்கு மீட்பை அளித்தார். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆணால் நாம் அவற்றை வென்று சாதனை படைக்கும்போது நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று இன்றைய நற்செய்தி வலியுறுத்துகின்றது.
உடல் பசி: இயேசு தந்தையுடன் உரையாடி இரண்டறக் கலகக வேண்டும் என்ற நோக்கில் நாற்பது நாட்கள் உண்ணவில்லை. ஆன்ம தாகத்தைப் போக்கப் பாலைவனம் சென்றுள்ள இயேசுவைத் தவறாகப் புரிந்துக் கொண்ட சாத்தான் மூக்குடைபட்டு பின் வாங்குகிறான்.
கடவுளின் சித்தம்: கடவுளின் நீண்ட நாள் ஆசை, சித்தம் தன்னுடைய ஆட்சியை உலகில் நிலைநாட்ட வேண்டும் என்பது அதற்கான வழிகள் செபம், தபம், ஒறுத்தல், பாடுகள், மரணம். உயிர்ப்பு, இலை அனைந்தையும் தன் பணியாகக் கருதி வாழ்கின்ற இயேசுவிடம் சாத்தான் கூறுகிறான், ஒரு சிறிய விளம்பரம் போட்டுக் காட்டுகிறான்.
உன்னுடைய இறையாட்சியை அடைய என்னைத் தெண்ட னிட்டு வணங்கியும், இறைமகன் என்ற மேன்மையில் இருந்து பாவம் என்ற பள்ளத்தில் குதித்தும் ஆட்சியை நிலைநாட்டலாமே என்ற விளம்பரம் போன்ற ஒரு சோதனை. ஆனால் இயேசுவுக்கு வந்தச் சோதனைகள் அனைத்தும் சாதனையாக, வெற்றியாக மாறியது. காரணம் அவர் பற்றற்றவைகளை இருகப் பற்றினார். ஆழ்ந்தச் செயம் செய்தார். ஆதாமின் மூலம் உலகில் நுழைந்தப் பாவத்தைப் போக்கி மீட்பை நமக்கு வழங்குகின்றார்.
இங்கு இயேசுவுக்கு வந்தது சாதாரண சோதனைகள் அல்ல. மாறாக அவர் எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ, அதையே விட்டு விலகவைக்கக் கூடிய சோதனைகள். இயேசுவோ வெற்றி கொண்டார். இந்தத் தவக்காலம் நமக்கும் ஒரு வெற்றியின் காரணமாக மாற வேண்டும்.
நம்முடைய அன்றாட வாழ்வில் எண்ணிலடங்காச் சோதனைகளைச் சந்திக்கின்றோம். மாறிவரும் முன்னேற்றத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப புதிய புதிய சோதனைகளை நாமும் சந்திக்- கின்றோம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: “சோதனையில் இருந்து விடுபட சிறந்த வழி, சோதனைக்கு உட்படுவதே”. அவ்வாறு நாம் செய்தோம் என்றால் நாம் கிறிஸ்துவின் அன்பு பிள்ளைகள் என்பதற்கும், நமக்காகக் கிறிஸ்து பட்டப் பாடுகளுக்கும் பொருள் இல்லாமல் போய்விடும்.
அனைத்து மனிதர்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்துவது. குடும்பம். இன்றோ குடும்பங்கள் எளிதில் அதன் தன்மையில் இருந்து மாறுபடுகின்றன. காரணம், தவறான வாழ்க்கை வாழ்பவர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றி நாமும் அதே வழியில் நடக்க முற்படுகின்றோம்.
அன்பு, இரக்கம், மன்னிப்பு, பரிவு போன்றவைகள். ஆனால் இன்றோ மனிதத் தன்மைகளை இழந்து மனிதன், மனித நிலையில் இருந்து விலங்கு என்ற கடை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். காரணம், உலகப் பற்றின் மீது அதிக நாட்டம்.
அந்தக் காலத்தில் ஒல்வொரு வீட்டிலும் செய அறை என்று ஒன்று இருக்கும். ஆனால் இன்று வீட்டில் உள் நுழைந்தவுடன் முற்றத்தில் இருப்பது சாத்தான் அறை. அதுதான் தொலைகாட்சி அறை. அலுவலகம், பள்ளி செல்லும் முன்பும், படுக்கும் முன்பும், துயில் எழுந்தவுடனும் தொலைக்காட்சிப் பெட்டியின் முகத்தில்தான் கண்விழிக்க ஆசைப்படுகின்றோம். கடவுளை நம்மிடமிருந்து எடுத்து. விட்டு நஞ்சை நம்மில் உருவாக்குகின்றது இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி.
இவ்வாறு இன்றும் நாம் சோதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சாத்தான் நம் வல்லமையைத் தீண்டுவான். கடவுளோ நம் வலுவின்மையில் வல்லமையைக் காண்பவர். நாம் வலுலிந்தவர்கள், சாதாரண மனிதர்கள். நாம் சோதனைகளை வென்று வெற்றி பெற வேண்டுமாயின் “பற்றற்றவரை இறுகப் பற்ற. வேண்டும்". பெரியவர்களாகிய நாம் செபிக்க வேண்டும், குழந்தைகளுக்கும் செபிக்கக் கற்றுத்தர வேண்டும். செபத்தின் வல்லமையை நாம் நம் குழந்தைகளுக்கு எடுத்துக்கற வேண்டும். இயேசு செபித்தார் வெற்றி கொண்டார். நமது வாழ்க்கைப். பயணத்தில் செபமே “அச்சாணி" யாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் எந்த ஆபத்துமின்றி நாம் இவ்வுலகில் பயணம் செய்ய முடியும். “செபிப்போம் சோதனைகளை வென்று சாதனை படைப்போம்".
தவக்காலம் என்பது அருளின் காலம், நாம் கடவுளூடன் கொண்டுள்ள அன்புறவைப் புதுப்பித்து, அவருக்காக வாழ முனைகின்ற காலம். இப்படி நாம் வாழ முனைகின்ற போது தடைகள் தவிர்க்க முடியாதவை. தடைகளை நாம் வெல்ல கேடயம் “இறைவார்த்தை” இறைவார்த்தை உயிருள்ளது. அந்த உயிருள்ள இறைவார்த்தை நம்மைக் கடவுளின் அன்புறவில் வாழ, வளர துணை செய்யும்.
உலகம் போக்கிலான வாழ்க்கை முறைகளைத் தவிர்த்து, உழைப்பு, ஆடம்பரம், பொழுது போக்கு போன்றவற்றைத் தவிர்த்து, இறைமகள் இறைவனைத் நேடி தனிமையான இடத்திற்குச் (பாலைவனத்திற்கு) சென்றது போல நாமும் இறை அனுபவம் பெற இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று இயேசு சோதிக்கப்பட்டது நமது தியானத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சோதனைப் பற்றிய குறிப்புகள் எபி 2:14-18; 415; மாற் 1:12-13 ஆெவற்றில் நேரடியாகவும், யோவா 6:14-15; 7:1-9; 12:27-28 அகிய இடங்களில் மறைமுகமாகவும் குறிப் பிடப்பட்டிருந்தாலும், மத் 4:1-11 மற்றும் லூக் 4:1-13-ல் தான் அது விரிவாக விவரிக்கப்படுகின்றது. இங்கு நமது சிந்தனைக்கு லூக்கா நற்செய்தியின்படியான பகுதியை எடுத்துக் கொள்வோம். அதற்குமுன் இப்பகுதிக்கான சில பின்னணித் தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. முதலாவதாக, இயேசுவின் காலத்தி லும் அதற்குப் பிந்தைய தொடச்கத் திருஅவையின் காலத்திலும் மெசியாவைப் பற்றிய எதிர்பார்ப்புக்கு இந்தப் பகுதி பதிலளிக் ன்றது. முதல் நூற்றாண்டு கால யூத சமயத்தில் மெசியாவும், இறையாட்சியும் வன்முறையாகவும், இராணுவப் பலத்துடனும், 'தீவிரவாதத்தோடும் வரும் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இயேசு அத்தகைய ஒரு மெசியாவாகவோ, அவரது இறையாட்சி அத்தகைய ஒன்றாகவோ இல்லாமல், அதாவது தனது உடல் தேவைக்கு இயற்கையை வளைக்காமல், தன் புகழுக்காக பிறருக்கு அடிபணியாமல், தனது பாதுகாப்புக்கு இறைவனை வளைக்காமல், எசாயா முன் மொழிந்த (காண். லூக் 4:14-30). ஊழியனாய், இறைவாக்கெரரய் “அமைதியின் வழியில்' (காண். லூக் 1:79; 2:14, 29; திப 10:36) வருவார் என்பதை நிறுவுவதற்கு இப்பகுதி பயன்படுகின்றது.
லூக்கா நற்செய்தியில் இப்பகுதி தலைமுறை அட்டவணைக்கும் (காண். லூக் 3:23-38), இயேசுவின் நாசரேத்து அறிக்கைக்கும் (காண். லூக் 4:14-30) இடையே வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, தலைமுறை அட்டவணையின் வழியாக இயேசு தூய ஆவியால் பிறந்த கடவுளின் மகன் என்பதை நிறுவிய பிறகு, அவர் எத்தகைய இறைவாக்கினராக - அருள் பொழிவு பெற்றவர், ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பவர், சிறைப்பட்டோரை விடுவிப்பவர், பார்வையற்றோருக்குப் பார்வை தருபவர், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்குபவர் - இருக்கப் போகின்றார் என்பதை விவரிப்பதற்கு முன்பாக, அவர் எப்படிப் பட்டவராக இருக்கமாட்டார் என்பதை விவரிக்க இந்தப்பகுதி பயன்படுகின்றது.
மேலே கூறப்பட்ட விவரங்களின் பின்னணியில் இது ஒரு போராட்டம்; இறைவனுக்கும் இய சக்திக்கும் இடையே, இறையாட்டிக்கும் அலகையின் ஆட்சிக்கும் இடையே நடக்கின்ற ஒரு போராட்டம். இதில் இயேசு தனது உள்ளத்தில் தனது மெசியா வழியை தேர்ந்தெடுக்க நடத்திய போராட்டத்தில் வெற்றிகண்டு இறையாட்கி சார்பாய் நின்று அலகையின் ஆட்சியை வென்றார் என்பதையும், இவ்வாறு அலகையின் ஆட்சிக்கு எதிராக இறையாட்சி தொடங்கிவிட்டது என்பதையும் நிரூபிக்க முயல்கிறார் புனித லூக்கா (மேலும் காண். லூக் 11:20)
இனி நற்செய்திப் பகுதிக்குள் நுழைந்து அது தரும் சில நுணுக்கமான செய்திகளை அறிந்துகொள்ள முயல்வோம். இந்த நற்செய்திப் பகுதியில் பாலைநிலம், நாற்பது, சோதனை ஆசிய அடையாளங்கள் குறிப்பிடப்படுகின்றன. இஸ்ரயேலரின் விவிலியப் பின்னணியில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன அவற்றை இவண் காண்போம்.
நாற்பது நாள் : இது மோசே உடன்படிககையின் வார்த்தைகளை பலகையில் எழுதுவதற்குமுன் உண்ணா நோன்பு இருந்ததையும் (காண். விப 34:28), எலியா ஒரேபு மலையை நோக்கி பயணம் செய்ததையும் (கண். 1 அர 19:8) நினைவுட்டுகின்றது.
பாலைநிலம்: இஸ்ரயேலர் நாற்பது ஆண்டுகள் சீனாய் பாலைநிலத்தில் பயணித்ததைக் (காண். இச 8:2; திபா 95:10; திபா 7:86) குறிப்பதாகக் கொள்ளலாம்.
சோதனை: இது இஸ்ரயேலர் பாலைநிலப்பயணத்தில் தங்களின் அடிமை நிலையில் சகமான கடத்த காலத்தையும், நிச்சயமான எதிர்காலத்தையும் வேண்டி இறைவனை சேதித்ததைக் (காண். எண் 11:1-3; 14:1-3 திய 7:39-41) குறிக்கும், அதே வேளையில் இது இறைவன், இறைச் சட்டத்தை இஸ்ரயேலர் பாதுகாப்பார்களா இல்லையா? என்று சோதித்ததையும். குறிக்கும் (காண். இச 8:2).
இனி இயேசுவுக்கு அலகை தந்த மூன்று சோதனைகளின் பொருளைக் காண்போம்.
இந்த மூன்று சோதனைகளும் இணைந்து இயேசு யார் அல்லது எத்தன்மையர் என்பதைத் தெளிவுபடுத்துகன்றன, அதாவது, இயேசு இந்தச் சோதனைகளை இறைவார்த்தையைக் கொண்டு, அதை மேற்கோள் காட்டி. வெற்றி கொள்கின்றார். ஆக, இறைவார்த்தை அவருக்கு விளக்காய், வாளாய் உதவுகின்றது (காண். வச 8:3 6:13,16). மேலும் இயேசு தனது பசியையும், தேவைகளையும், புகழையும், அதிகாரத்தையும், தேடாமல் இறைத்தந்தையின் திருவுளத்தைத் தேடி, அதற்குக் கீழ்ப்படிந்த இறைமகன் என்பதையும் இந்த மூன்று சோதனைகளும் சேர்ந்து தெளிவுபடுத்துகின்றன.
இனி ஒவ்வொரு சோதனையின் வழி நற்செய்தியாளர் உணர்த்தும் பாடம் என்ன எனக் காண்போம்.
மானுட வாழ்வுக்கு உணவே எல்லாம் அல்ல. அந்த உணவு புதுமையின் வழியாய் வருவதாயிருந்தாலும் அதையும் தாண்டி, மத்தேயு நற்செய்தியிலும் (காண். மத் 4:4), இணைச் சட்டத்திலும் (காண். இச 8:3) குறிப்பிடப்படுவதுபோல, இறை வார்த்தையினாலும் மனிதர் வாழ வேண்டும். அதனால்தான் இயேசு, “அழிந்துபோகும் உணவுக்காக உழைக்கவேண்டாம். நிலைவாழ்வுதரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்”
அனைத்து உயிர்களின் மூலக்காரணமாகிய இறைவன் ஒருவரே வணங்குவதற்கு உரியவர். அவருடைய இடத்தில் வைக்கப் படும்எந்தநபரும், பொருளும், கருத்தியலும் சிலைவழிபாட்டுச்குச் சமமேயன்றி உண்மை வழிபாடு அல்ல.
இந்தமூன்றாவது சோதனை கொஞ்சம் விஷமத்தனமானது. அலகையின் முதல் இரண்டு சோதனைகளையும் இறை வார்த்தையைக் கொண்டு வெற்றிக்கொண்ட இயேசுவை மடக்க அலகையும் இிருநூலை மேற்கோள்காட்டிப் (காண், திபா 91:11- 12) பேசுகின்றது. இதைத்தான் “சாத்தான் வேதம் ஓதுகின்றது” என்பது போலும்! அதனுடைய சோதனை இதுதான் “நீர் கடவுளின் மசுனானால் அதை இப்போது இந்த எருசலேம் ஆலயத்தின் உயர்ந்த பகுதியிலிருந்து குதித்து நிரூபித்துக் சொள்ளாம். ஏலெனில் விவிலியமே “உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துச் கட்டளையிடுவார்” என்றும் உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தரங்கிக்கொள்வார்கள்' (வச 10-11) என்கின்றது. அருங்கச் சொன்னால், இயேசுவை இறைவனை, சோதிக்கச் சொல்றது. ஆனால் நாம்தான் இறைத் இட்டத்திற்கு பணிந்து நடக்கவேண்டுமேயொழிய, இறைத் திட்டத்தை நமது விருப்பத்திற்கு வளைக்கக்கூடாது, இறைவனைச் சோதிக்கக் கூடாது என்னும் பொருளில் “உன் கட்வுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்” (வச. 12,6:16) என பதிலிறுத்தி வெற்றிகொள்கின்றார். அதாவது “நான் கடவுளைச் சோதிக்க மாட்டேன்” நீயும் என்னைச் சோதிக்காதே' என்று கூறுவதாகவும் கொள்ளலாம்.
இன்றைய உலகில் நல்ல மனிதராகவும், இறைத்திட்டத்திற்கு அமைந்த கிறிஸ்தவராகவும் வாழ்வதற்கு வரும் சோதனைகள் ஏராளம், ஏராளம். அதையெல்லாம் நாம் இறைவார்த்தையின் துணைகொண்டு எதிர்த்து நின்று வெற்றிகாண வேண்டும். தளர்ந்து தோல்வியடையக் கூடாது.
இஸ்ரயேலரின் “விசுவாச அறிக்கை” என்று கூறப்படும் வாசகங்களுள் (இச 6: 20-23; யோசு 24: 113; நெகே 9:7-25) இன்றைய வாசகமும் (இச 26: 4-10) ஒன்று, விளைச்சலின் புதுப் பலனை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வரும்போது, இஸ்ரயேலர் இவ் அறிக்கையை வெளியிட்டனர்.
நாடோடி மக்கள், புதுக்குடியேற்ற மக்கள், புலம் பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பத்தையும் இஸ்ரயேலர் அனுபவித்தனர். வேற்று நாடு, வேற்று இனத்தாரோடு என்றும் பூசலும் புகைச்சலும்; குடியேறிய நாட்டினரோ (எகிப்தியர்) இவர்களுக்குக் கொடுக்காத தொல்லைகள் இல்லை. “நம்மை ஒடுக்கித் துன்புறுத்தி, சுமக்க முடியாச் சுமைகளை நம்மேல் சுமத்தினர்” (26 : 6). இது இஸ்ரயேலர் நிலை மட்டுமன்று, நமது நிலையம்கூட, நம் தாயகமோ விண்ணகத்திலுள்ளது. இவ்வுலகில் வாழும் மட்டும் நாம் “அந்நியர்கள், வேற்று நாட்டினர்” (எபே. 11: 13, 1பேது 2: 11), இவ்வுலகத்திலே நாம் வாழ்ந்தாலும் இவ்வுலகத்தவர் போன்று வாழக் கூடாது. அந்நியர் என்ற முறையிலே நாம் இங்கு. வாழ்க்கை நடத்தும்போது, சில எதிரிகளை நாம் எதிர்ப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனையோரின் இகழ்ச்சி, பகைமை முதலியன நாம் கிறிஸ்தவர்கள் என்பதனாலே, அன்பு வாழ்வு வாழ்கிறோம், நீதிக்குப் போராடுகிறோம் என்பதனாலே, இவ்வுலக வழிமுறைகள், மதிப்பீடுகளை எதிர்த்து வாழ்வதாலே நம்மைத் துன்புறுத்தலாம்; ஏன், துன்புறுத்த வேண்டும். இத்தகைய துன்பங்களை நாம் அனுபவிக்கிறோமா? இல்லாவிடில் நம் கிறிஸ்தவ வாழ்வில் ஏதோ குறையிருக்கிறது எனலாம். எனவே துன்பங்களை விரும்பி ஏற்போம்.
இஸ்ரயேலின் துன்பத்தின் மத்தியிலேதான், அவர்களுடைய சிறுமையிலும் அவதிமிலும் துயரத்திலும்தான் (6:7-8) ஆண்டவரின் உதவியும் வலிமையும் (காண்: “வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும்) அவருடைய அருஞ்செயல்களும் (அடையாள அதிசயங்களைக் சாட்டி”) வெளிப்படுகின்றன. எங்கெல்லாம் கண்ணீர் கசிகிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்; எங்கெல்லாம் துயரம் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் துணைவர் இருக்கிறார்; எங்கெல்லாம் இன்னல் இடைஞ்சல்களை எதிர்ப்படுகிறோமோ அங்கெல்லாம் இறைவன் இருக்கிறார். இதுவே இன்றும் இறைவன் நமக்குக் கற்றுத் தரும் பாடம். எனவே, துன்பம் கண்டு துவண்டு விடாது இறைவன் கரத்தைப் பற்றிக்கொள்வோம். “தாழ்வற்ற நிலையில் நம்மை நினைவுகூர்பவர் அலர... நம் எதிரிகளிடமிருந்து நம்மை விடுவிப்பவர் அவரே" (திபா 135: 23 -24), அலைகளின் மத்தியிலே ஆண்டவரைக் காண்போமா? (மாற் 4: 35-41) “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” (மாற் 4: 40) என்ற இயேசுவின் சொற்கள் நம் காதில் ஒலிப்பனவாக.
இறைவன் செய்த உதவியை இஸ்ரயேலர் மறக்கவில்லை. துயர் களைந்த துணைவனுக்கு நன்றிக் கடன் செலுத்துகின்றனர் (26:10). “நன்றி பறப்பது நன்றன்று” என்பதை நாமும் உணர வேண்டும். அன்றாடம் நமக்கு உயிர், உண்டி, உடை, உறையுள் அளித்துப் பாதுகாத்து வரும் இறைவனுக்கு நம் உள்ளங்கள் தினமும் நன்றிப் பண் இசைக்கின் நனவா? இறைவன் நமக்கு உதவுவது தம் மக்கள் வழியாகவே என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கையை வளப்படுத்த உதவும் அனைவருக்கும் (நம் பெற்றோர், ஆசிரியர், குருக்கள், உறவினர், நண்பர்களுக்கு) நன்றிக் கடன்பட்டவர்களாக வாழ்கிறோமா? நன்றி என்பது ஒரு கடமை என்பதைத்தானே “நன்றிக் கடன்”, “நன்றிக் கடப்பாடு” என்ற சொற்கள் உணர்த்துகின்றன. எனவே கடமையுள்ளத்தோடு வாழ்வோம் “நன்றி யென்ற சொல் நம் நாவில் என்றும் நடனமாடுவதாக..
ஒருவன் மீட்பப் பெற வானத்தை அளக்க வேண்டியது இல்லை; கடலைத் தாண்ட வேண்டியதில்லை. கடவுளுடைய கட்டளைகளை அனுசரித்தாலே போதும் என்பது இணைச் சட்டத்தின் போதனை (30 : 11 - 12). அக்கட்டளைகள் உதட்டிலும் உள்ளத்திலும் இருக்க வேண்டும் என்றும் அதே நூல் கூறுகிறது. எனினும் யூதர்கள் சட்டங்களின் உட்பொருளை மறந்து, அவற்றின் வெளித்தோற்றத்திலேயே கவனம் செலுத்தினர். பவலடியாரோ “கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு. அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்” (10: 4) எள்ற உண்மையை இன்றைய வாசகத்தில் வலியுறுத்துகிறார்.
உரோமைய அரசனை, அவளது குடிமக்கள் ஆண்டவர் என்று அழைத்தனர். அரசர்கள் தங்களையே தெய்வமாக்கிக்கொண்டனர். ஆண்டவர் என்ற சொல் தெய்வத்தைச் கட்டும் சொல்லாகவும் பயன்பட்டதால், அரசர்களையும் மக்கள் தெய்வமாகவே எண்ணினர். இஸ்ரயேல் மக்கள் தம் ஒப்பற்ற கடவள் யாவேயை ஆண்டவர் என்றே அழைத்தனர். அகில உலகையும் ஆண்டு நடத்தும் தெய்வம் என்ற பொருளில்தான் இயேசுவையும் ஆண்டவர் என்று அழைக்கிறோம். இவருக்கு நிகரான கடவுள் இல்லையென்பதை ஆண்டவர் என்ற சொல்லினால் அறிக்கையிடுகின்றோம். தலைமையேற்போர், அதிகாரம் தாங்குவோர் ஆகியோர்க்கும் (கொலோ 2 : 10) படைப்பனைத்திற்குமே அவரே ஆண்டவர் என்பது (பிலி 2 : 10) பவுலடியாரின் உறுதியான போதனை. நமதாண்டவர் இயேசுகிறிஸ்து இன்றும் நம்முடன் வாழ்கிறார். திருத்தூதர்களின் உரையைச் செவிமடுத்த மக்கள், இயேசுவைத் தம் ஆண்டவராக ஏற்று அறிக்கையிட்ட பின்னரே திருமுழுக்குப் பெறுகின்றனர் (தி 2:36-14; 16:30-33)
“இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (9) என்கிறார் பவுல் அடியார். உள் மனத்தில் உறைந்து. கிடப்பதே உதடு வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளமும் உதடும் ஒன்றுபடும்பொழுது அது உண்மை; மாறுபடும் பொழுது அது பொய்மை. செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்; அப்படியே விசுவாசத்தின் ஆடப்படையில் தோய்ந்து வராத சொற்கள் வெறும் ஒலிகளே. உள்ளத்தில் ஆண்டவரை ஏற்றுக்கொள்வதுடன், உதட்டாலும் உலகறிய அவரை "அறிக்கையிட வேண்டும். “என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையம் பற்றி மானிட மகனும் தம் தந்தையுடன் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்”” (மாற்கு 8 : 38). இயேசு நம் ஆண்டவர் என்று உலகறிய. அறிக்கையிட்டதால்தான் தம் உயிரையும் இழந்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தனர் மறைசாட்சிகள். பலர் முன்னிலையில் ஏனனத்தையும், இழப்பையும் பொருட்படுத்தாது என்னையே கிறிஸ்தவனாக அறிமுகப் படுத்தும் திடமனது எனக்குண்டா?
“இதோ, சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகிறேன். அது பரிசோதிக்கப்பட்ட கல்... நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான் ” என்ற எசாயா இறைவாக்கினைக் குறிப்பிட்டு (28: 16) கிறிஸ்து என்ற மூலைக்கல்லின் மீது விசுவாசம் கொள்பவன் ஏமாற்றம் அடையான் என்கிறார் பவுல் அடியார் (19. என்னில் விசுவாசம் கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசம் கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான் என்ற நமதாண்டவரின் சொற்களை (யோவா 3: 16) நாம் மனத்தில் இறுத்த வேண்டும். இயேசுவில் விசுவாசம் கொள்பவர் களிடையே சாதி, பொழி, செல்வம், செல்வாக்கு என்ற அடிப்படையில். பிளவுகள் கூடாது. சாதி வெறி, பொழிப் பிரச்சனை, கட்சிப் பாகுபாடு. நம்மிடையே பிணக்குகளை ஏற்படுத்தும் பொழுது, நமதாண்டவரையே கூறுபோடுகின்றோம் என்ற அச்சம் நம்மிடம் ஏற்பட வேண்டும். நான் ஒற்றுமையின் கருவிய? அல்லது எதையும் கூறுபோடும் கோடரியா?
நற்செய்தி:லூக்கா 4:1-13
இயேசு எதிர்ப்பட்ட சோதனைகள் பற்றி லூக்கா எழுதியுள்ள பகுதி இன்றைய வாசகமாயமைகிறது. முதல் ஆண்டு 2 - ஆம் ஆண்டுக்குள்ள நற்செய்தி விளக்கத்தைக் காணவும். இயேசு எதிர்ப்பட்ட சோதனைகள் இன்று நாம் திருச்சமையிலே எதிர்ப்படும் சோதனைகளே. இயேசு அளித்த பதிலே நம்முடைய சோதனைகளிலும் நாம் அளிக்கும் பதில் ஆக இருத்தல் வேண்டும்.
அன்று இயேசு பசியால் சோதிக்கப்பட்டார். தம் பசிவைத் தீர்க்கப் புதுமை செய்ய விரும்பவில்லை. அதே இயேசு பிறர் பசியால் வாடியதைக் கண்டு “அவர்கள்மீது மனமிரங்கி ” (மாத் 6:34) , அவர்களுக்காக அப்பத்தையும் மீனையும் பலுக்கி, அவர்கள் பசியைப் போக்குகிறார். நம்முடைய பசியை, இயேசுவைப் போன்று நாம் ஏற்றுக்கொள்வது நமக்கு நலம் பயக்கும். எனினும் பிறர் பசிக்கக் காண்பது நமக்கு ஒரு சவாலாய் அமைய வேண்டும். இயேசு மனம் இரங்கிப் பிறர் பசி தீர்த்தார். நாம் மனமிரங்கிப் பசித்தோருக்கு உண்ணக் கொடுப்பது மட்டுமன்று, மனம் குமுறிப் பசியை. பிணியை ஒழித்திடப் போர்க் கொடி உயர்த்த வேண்டும். “தனியொரு வனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் பட்சி ஏக்கம் நம்மைத் தொடுமா? பசி, பிணியை நம்முடைய சூழலிலே போக்குவதற்கு நாம் என்ன முயற்சிகள் எடுக்கிறோம்? கடவுளின் சாயல்கள் பசியால் நலியக் கண்டு நாம் வாளாதிருப்போமா? அடுத்து, இயேசுவுக்கு வந்த சோதனை அதிகாரம், ஆட்சி, தன் உயர்வு. இயேசு செய்யவேண்டிய ஒன்று தன்னுடைய தலையாய குறிக்கோளை - தந்தையின் விருப்பப்படி நடப்பதை - நிறைவேற்றுவதாகும். எனவே “நாள்”, “எனது” என்பவற்றைத் தரைமட்டம் ஆக்குகிறார். தன் விருப்பமன்று, தந்தையின் விருப்பமே தலையாயது என்பார். “அவரை மட்டுமே ஆராதிப்பாயாக (4: 8) என்பதே அவரின் வாழ்க்கைக் குறிக்கோளாக மாறுகிறது. அதிகாரம், ஆணவம் நம்மை ஆட்டிப்படைக்க விடுவோமா? அல்லது “நீன்பற்று அலால் ஓர் பற்று மற்றது உற்றிலேன்” என்று இறையவனுக்கு மட்டுமே தலை பணிவோமா?' இறுதியாக, இயேசு, கடவுளையே சோதிக்குமாறு சாத்தான் தூண்டுகிறான். புதுமை செய்வாரோ இறைவன் என்பது கேள்வி. இயேசுவோ “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ” (4: 12) என்று பதிலிறுப்பார். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு புதுமைகளை நம்பியே நடப்பது எல்வளவு கீழ்த்தரமானது? கடவள் - மனித உறவை லியாபாரப் பொருளாகக் கணிக்கும் போது மதம் ஒரு போதைப் பொருள் தாளே? “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக ” என்பது நமது செயமாயமைவது எப்போது?" கடவுள் சித்தம் நமது பாக்கியம்.
லூக்கா இப்பகுதியில் தாய ஆவியாருக்கு முக்கியத்துவம் தருவது காணத்தக்கது. “பரிசுத்த ஆவியால் நிறைந்தவராய்” (4 : 1) இயேசு திருமுழுக்குப் பெற்று யோர்தானிலிருந்து (3 : 21-22) பாலைவனம் வருகிறார். “பின்னர் இயேசு அதே ஆலியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” (4:1). அவரின் செயல்கள் அனைத்தும் தூய ஆலவியாரால் தூண்டப்பட்டு நடைபெறுகின்றன. தூய ஆலியாருக்குப் பணிந்த நிலையிலேதான் அவர் சோதனைகளின் பேல் வெற்றி கொள்கிறார். பின்னர் சோதனைகளின் முடிவிலும் “தூய ஆவியாரின் வல்லமை உடையவராய் கலிலேயாவுக்குத் திரும்பி” (4 : 14) நற்செய்திப் பணிபுரிகிறார். சோதனைகளுக்கு முன்பும் சரி சோதனைகள் மத்தியிலும் சரி, சோதனைகளின் முடிவிலும் சரி, தூய ஆவியாரின் துணை இயேசுவுக்குத் தொடர்ந்து கிடைக்கிறது. இத்தூய ஆலியாரின் ஏவுதல்களுக்கும், உந்துதல்களுக்கும் திறந்த மனதுள் எவர்களாக வாழ்வது இத்தவக் காலத்தில் நாம் செய்யும் மேலான ஒரு பக்தி முயற்சியாக இருப்பதாக.