மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
திருவெளிப்பாடு 7:2-4,9-14 | 1யோவான் 3:1-3 | மத்தேயு 5:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்

இலையுதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம்.

சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்கள் உதயத்திற்குத் தொடக்கம்.

மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது.

கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால் தான் பயிர் முளைத்துப் பலன் தரும்.

எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த சிறுமியைப் பார்த்து, அவள் சாகவில்லை , உறங்குகிறாள் (லூக். 8:52) என்றும், நம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா. 11:11) கூறினார். ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு எதார்த்தமானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, இறை - மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு இந்த உலக இறப்பு, இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா. 11:25). இதை விளக்கும் வகையில் தான், ஆண்டவருக்குள் இறந்தவர்கள் செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று திருவெளிப்பாடு நமக்குத் தருகிறது.

இன்று தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில், புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை. முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில் உள்ள ஒரு எழுத்து மட்டும் தான். ஆம், மனிதம் என்றாலே புனிதம் பிறக்கிறது. மனிதமும், புனிதமும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா. 3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். (முதல் வாசகம்). ஏழ்மையையும், துன்பத்தையும், நோயையும், பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே புனிதர்கள், பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார் (மூன்றாம் வாசகம் ).

அன்பார்ந்தவர்களே, புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று முளைத்த காளான்கள் போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க வேண்டிய ஒன்று. கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனுக்கு அவரது காரியதரிசி ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பது தான் கவலை என்றார் லிங்கன். ஆம், நாம் இறைவனோடு இணையும்போதுதான் (யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். இத்தகைய எண்ணற்ற புனிதர்கள் இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும் வாழ்கிறார்கள் என்பதைத்தான் நாம் நினைவு கூறுகிறோம். ஏனெனில் தூய பவுல் கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ. 15:55). நாமும் இவர்களைப்போல, நான் யார் ? எதற்காக இங்கே வந்தேன்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை உணர்ந்து வாழ்வோம். இதற்காக புனிதர்களிடம் மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மாயையான சிந்தனைகள் புனிதர்‌ அனைவர்‌ பெருவிழா.

புனிதர்கள்‌ உறவின்‌ ஒன்றிப்பை ஏற்று நம்புபவர்கள்‌ நாம்‌. வெற்றித்‌ திருஅவை - புனிதர்கள்‌, துன்புறும்‌ திருஅவை - உத்தரிக்கும்‌ ஆன்மாக்கள்‌, போரிடும்‌ திருஅவை - உலக மாந்தர்கள்‌ - இந்த மூன்று திருஅவைகளுக்குமிடையே திகழும்‌ உறவுக்கும்‌ பொலிவுக்கும்‌ நாம்‌ எடுக்கும்‌ விழாக்களே இன்றைய அனைத்துப்‌ புனிதர்‌ பெருவிழாவும்‌ நாளைய இறந்தோர்‌ நினைவு நாளும்‌.

புனிதமா! அது என்ன? எவனோ ஒருவன்‌ கக்கிய கதையை மென்று . அசைபோட்டு உரையாற்றத்‌ தொடங்குகிறார்‌ அந்த சிந்தனைஜீவி. மறைக்கல்வி வகுப்பாம்‌. மாணவர்களைப்‌ பார்த்து ஆசிரியை கேட்கிறாராம்‌. “உங்களில்‌ யார்‌ யார்‌ மருத்துவராக விரும்புகிறீர்கள்‌?”” பலர்‌ கைகளை உயர்த்துகிறார்கள்‌.

“எத்தனை பேர்‌ பொறியாளர்களாக?” வேறு சிலர்‌ கைகளைத்‌ தூக்குகிறார்கள்‌.

“எத்தனைபேர்‌ வழக்கறிஞர்களாக?” ஒரிருவர்‌ தங்கள்‌ விருப்பத்தைத்‌ தெரிவிக்கின்றனர்‌.

“எத்தனை பேர்‌ புனிதராக விரும்புகிறீர்கள்‌?”” ஒருவர்‌ கூட முன்வருவதாகத்‌ தெரியவில்லை. எல்லாரும்‌ தலையைக்‌ கவிழ்த்துக்‌ கொள்கிறார்கள்‌. ஆசிரியைக்கோ ஆச்சரியம்‌! ஏன்‌ இந்த மெளனம்‌? என்று கேட்கிறார்‌. தயங்கித்‌ தயங்கி ஒரு மாணவன்‌ பதில்‌ சொல்கிறான்‌: “புனிதர்கள்‌ எல்லாம்‌ ஒரு மாதிரியானவர்கள்‌, அசடு வழிய முகத்தை மூன்று முழம்‌ நீட்டிக்‌ கொண்டிருப்பவர்கள்‌. எப்போதும்‌ செபித்துக்‌ கொண்டிருப்பவர்கள்‌. கோவில்‌ குளம்‌ என்று திரிபவர்கள்‌”.

பதிலைக்‌ கேட்டுச்‌ சிரித்துக்‌ கொண்டே உரையாளர்‌ தொடர்கிறார்‌: “பார்த்தீர்களா? புனிதம்‌ என்பதெல்லாம்‌ இயல்பான ஒன்றல்ல. இன்னும்‌ சொல்லப்போனால்‌ புனிதம்‌ என்று எதுவும்‌ இல்லை. மனிதமே புனிதம்‌”.

வகுப்பு ஆசிரியையோ, கதை சொன்ன மேதையோ நமக்கு எதை உணர்த்த விரும்புகிறார்கள்‌? மனிதத்தின்‌ சிறப்பையா? மரமண்டைக்குள்‌ இருக்கும்‌ புனிதம்‌ பற்றிய தங்கள்‌ அறியாமையையா?

கதையில்‌ வரிசைப்படுத்திய கேள்விப்‌ பட்டியலே கோளாறானது. மருத்துவர்‌, பொறியாளர்‌, வழக்கறிஞர்‌ என்று கேட்டபின்‌ புனிதருக்குப்‌ பதிலாக “எத்தனைபேர்‌ மனிதர்களாக விரும்புகிறீர்கள்‌?”” என்று கேட்டிருந்தால்‌ எல்லோரும்‌ நான்‌ நான்‌ என்று போட்டி போட்டுக்‌ கொண்டு கைகளை உயர்த்தியிருப்பார்களோ?

மருத்துவராவது, பொறியாளராவது, வழக்கறிஞராவது ... இவையெல்லாம்‌ தொழில்‌ சார்ந்த, தெரிவுக்குரிய (விரும்பினால்‌ ஏற்கலாம்‌, வேண்டாம்‌ என்றால்‌ விட்டுவிடலாம்‌) வாழ்க்கை நிலைகள்‌ மனிதம்‌, புனிதம்... என்பதெல்லாம்‌ மாண்பு சார்ந்த, தெரிவுக்குரிய அல்ல தேவையான, தேடி வளர்த்துக்‌ கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பண்புகள்‌.

மனிதமே புனிதம்‌ என்பதை எண்பிக்க இவர்கள்‌ இயேசுவை வேறு சாட்சிக்‌ கூண்டில்‌ ஏற்றுவார்கள்‌. நல்ல சமாரியர்‌ உவமையென்ன, ஒய்வு நாளில்‌ குணமளித்த புதுமையென்ன சீடர்கள்‌ கோதுமைக்‌ கதிர்களைக்‌ கொய்து தங்கள்‌ பசியைப்‌ போக்கிக்கொண்ட நிகழ்ச்சியென்ன ... இவைகளையெல்லாம்‌ நினைவுபடுத்துவார்கள்‌. மேற்கோள்‌ காட்டுவார்கள்‌. ஆனால்‌ இவைகள்‌ வழியாக இயேசு சொல்ல விரும்பியது மனிதமே புனிதம்‌ என்பதல்ல, புனிதம்‌ என்று மனிதன்‌ நினைப்பலதல்லாம்‌ புனிதம்‌ அல்ல என்பதுதான்‌.

பெத்தானியா இல்லத்தில்‌ இயேசுவுக்கான விருந்தோம்பலில்‌ மார்த்தா காட்டிய பரபரப்புகூட மனித நேய வெளிப்பாடுதான்‌ (லூக்‌. 10:38-42). அப்படியென்றால்‌ “மார்த்தா மார்த்தா நீ பலவற்றைப்‌ பற்றிக்‌ கவலைப்பட்டுக்‌ கலங்குகிறாய்‌. தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுத்துக்‌ கொண்டாள்‌” என்றாரே இயேசு அதற்குப்‌ பொருள்‌ என்ன? தேவையானது, நல்ல பங்கு என்று இயேசு குறிப்பிட்டது எதை?

“நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்ள நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?” என்ற கேள்வியோடு இயேசுவைப்‌ பின்பற்ற விரும்பிய பணக்கார இளைஞனிடம்‌ ““உனக்கு இன்னும்‌ ஒன்று குறைபடுகிறது”” (மார்க்‌. 10:17-22) என்று இயேசு சொன்னது எதை?

“அவரை (இயேசுவை) எதிர்நோக்கி இருக்கிற அனைவரும்‌ அவர்‌ தூயவராய்‌ இருப்பதுபோல தம்மையே தூயவராக்க வேண்டும்‌” (1 யோ. 3:3) என்று திருத்தூதர்‌ யோவான்‌ சுட்டிக்‌ காட்டுவது எதை?

"இந்தியா டுடே' என்ற ஆங்கில இதழில்‌ வெளியான அன்னை தெரசாவின்‌ புனித பட்டத்துக்கான தயாரிப்புப்‌ பற்றிய கட்டுரையைப்‌ படித்துவிட்டு வாசகர்‌ மடலில்‌ “தெரசா நமக்கு அன்னையாகவே "இருக்கட்டும்‌. அவரைப்‌ புனிதராக்கி நம்மிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டாம்‌”. ஒன்று ஒருவர்‌ எழுதியிருந்தார்‌. அந்த அன்னை தெரசா “என்னைச்‌ சமூகப்‌ பணியாளர்‌ என்று அழைக்கும்‌ போதெல்லாம்‌ நான்‌ மிகவும்‌ வருந்துகிறேன்‌. ஏனெனில்‌ நான்‌ சமூக சேவகி அல்ல. நான்‌ இறைப்பணியாளர்‌, கிறிஸ்து சேவகி” என்று சொன்னது ஏன்‌?

தந்‌தை கடவுளின்‌ திருவுள ஏற்பு, இயேசுவோடு ஆழ்ந்த ஒன்றிப்பு, தூய ஆவியாரில்‌ புதுவாழ்வு இவைகள்தாம்‌ புனிதத்தின்‌ அம்சங்கள்‌.

புனிதம்‌ என்பது அன்பு போல, அழகுபோல, கற்புப்‌ போல வார்த்தைக்குள்ளோ, வருணனைக்குள்ளோ அடங்காதது. அனுபவச்‌ சுவைக்குரியது.

ஒரு நாத்திகன்‌ - கடவுள்‌ நம்பிக்கை இல்லாதவன்‌ - மனிதமே புனிதம்‌ என்றால்‌ புரிந்து கொள்ளலாம்‌. தன்னைக்‌ கடவுளின்‌ பிள்ளை என்று சொல்லிக்‌ கொள்பவன்‌, இறையாட்சிப்‌ பணிக்கென இறைவனால்‌ அழைப்பு பெற்றதாகக்‌ கருதுபவன்‌ மனிதமே புனிதம்‌ என்றால்‌ அவனது வாழ்க்கையின்‌ ஊனத்துக்குக்‌ கட்டுகிற சப்பையோ என்னவோ! ஏதோ ஒர்‌ ஒட்டையை அடைக்கப்‌ பயன்படுத்தும்‌ சக்கையோ என்னவோ! அடிப்படை மனிதப்‌ பண்புகளை வெளிப்படுத்தாதவனெல்லாம்‌ மனிதமே புனிதம்‌ என்று கொடிபிடித்துத்‌ திரிவதுதான்‌ அருவருப்பாய்‌ இருக்கிறது.

அதற்காகப்‌ புனிதர்கள்‌ எல்லாரும்‌ தவறு செய்யாதவர்களா? இல்லை. பலமுறை தடுமாறி நின்றவர்கள்‌. பரிதாபமாகத்‌ தடுக்கி விழுந்தவர்கள்‌. ஆனால்‌ திருந்‌(த்‌)திய பதிப்புக்கள்‌. A SAINT IS A DEAD SINNER REVISED QAND EDITED என்று புனிதர்‌ யார்‌ என்ற கேள்விக்கு விளக்கம்‌ அளிக்கிறது அலகையின்‌ அகராதி (THE DEVIL'S DICTIONARY) என்ற ஆங்கில ஏடு.

சுருங்கக்‌ கூறின்‌ மனிதமின்றிப்‌ புனிதமில்லை. நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால்‌ மனிதம்‌ புனிதம்‌ அன்று. மனிதத்தின்‌ பயண இலக்கு புனிதம்‌. “நீங்கள்‌ தூயோராவதே கடவுளுடைய திருவுளம்‌ ... கடவுள்‌ நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல; தூய வாழ்வுக்கே அழைத்தார்‌” (1 தெச. 4:3-7).

விண்ணகத்தில்‌ இருப்பதால்‌ புனிதர்கள்‌ அல்ல. மாறாக இம்மண்ணுலகத்திலேயே புனிதர்களாய்‌ வாழ்ந்தார்கள்‌. இன்று விண்ணக மாட்சியில்‌ பங்கு கொள்கிறார்கள்‌. விண்ணுலகு செல்ல எளிய வழி? ஒவ்வொரு நாளும்‌ நாம்‌ செய்வதை எல்லாம்‌ கடவுளுக்காகச்‌ செய்துவிட்டால்‌ போதும்‌. “நீங்கள்‌ உண்டாலும்‌ குடித்தாலும்‌ எதைச்‌ செய்தாலும்‌ எல்லாவற்றையும்‌ கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்‌” (1 கொரி. 10:31).

இயேசுவைப்‌ பின்பற்றுவதில்‌ புனிதர்களை எடுத்துக்காட்டாகக்‌ கொள்கிறோம்‌. திருத்தூதர்‌ பவுல்‌ கூறுவார்‌ : “நான்‌ கிறிஸ்துவைப்‌ போல்‌ நடப்பது போன்று, நீங்களும்‌ என்னைப்‌ போல்‌ நடங்கள்‌” (1 கொரி 11).

புனிதர்களிடம்‌ நாம்‌ தேடுவதெல்லாம்‌ இவைதான்‌:
1. அவர்களின்‌ வாழ்விலே எடுத்துக்காட்டு.
2. அவர்களின்‌ ஒன்றிப்பில்‌ தோழமை.
3. அவர்களின்‌ பரிந்துரையால்‌ பேருதவி.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புனிதர் அனைவரின் பெருவிழா

2014ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும், திருத்தந்தை 23ம் யோவான் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். அவ்வேளையில், John Paul II - A Saint for Canada, கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் யோவான் பவுல் என்ற நூல் வெளியானது. கனடா நாட்டில் வாழும் Thomas Rosica என்ற அருள்பணியாளர் வெளியிட்ட இந்நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள், இன்று நாம் கொண்டாடும் புனிதர் அனைவரின் பெருவிழாவன்று, புனிதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன:

"ஒருவர் 'முத்திப்பேறு பெற்றவர்' என்றோ 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல அது. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பு அல்ல... முத்திப்பேறு பெற்றவராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர், கடவுளின் கருணையைச் சார்ந்து, கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியோரையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில், அவர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச்சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது."

அருள்பணி Thomas Rosica அவர்கள் கூறியுள்ள இப்பண்புகள் பலவற்றையும், தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தியவர்கள், புனிதர்கள். இவர்களில் சிலரை, கத்தோலிக்கத் திருஅவை, அருளாளர்கள் என்றும், புனிதர்கள் என்றும், உலகிற்குப் பறைசாற்றுகின்றது. ஆனால், அந்த அதிகாரப்பூர்வமான பறைசாற்றலைப் பெறாமல், இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்கள், நம் கண்முன்னே, நற்செய்தியின் சான்றுகளாக, வலம்வருகின்றனர்.

வாழ்க்கையை நற்செய்தியாக மாற்றியப் பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். லூத்தரன் சபையைச் சேர்ந்த ஆல்பர்ட் அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில், தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப்பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில், மருத்துவமனையொன்றை நிறுவி, பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச் செய்துவந்தார்.

இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதற்கு அடுத்த ஆண்டு, அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் சென்றார். இரயிலில் வந்திறங்கிய அவரை வரவேற்க, பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆல்பர்ட் அவர்கள், இரயிலைவிட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்கவேண்டும் என்று வேண்டியபடி, ஆல்பர்ட் அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்தவர்களிடம் திரும்பிவந்தார் ஆல்பர்ட். நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான், முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.

இளமையில், நற்செய்தியை, மறையுரைகளாய் வழங்கி புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில், நற்செய்தியை, வாழ்வாக்கினார். நடமாடும் மறையுரையாக வாழ்ந்த மருத்துவர் ஆல்பர்ட் அவர்கள், புனிதர் என்ற பட்டத்தைப் பெறாதவர். இவரைப் போல், இன்னும் பலகோடி மனிதர்கள், புனிதர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனினும், உன்னத மனிதர்களாக நம் உள்ளங்களில் குடிகொண்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களாக நம்மை வதைத்துவரும் கொள்ளைநோய் கொடுமையால் துன்புற்ற பலருக்கு, உடலளவிலும், ஆன்மீக அளவிலும் உதவிகள் புரிந்து, அப்பணிகளில் தங்கள் உயிரையே வழங்கிய பல்லாயிரம் நல்ல உள்ளங்களை, இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். இவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘பக்கத்து வீட்டுப் புனிதர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். நம்மைச்சுற்றி வாழும் ‘பக்கத்து வீட்டுப் புனிதர்களை'க் கொண்டாட கத்தோலிக்கத் திருஅவை வழங்கியுள்ள அற்புதமான வாய்ப்பு, புனிதர் அனைவரின் பெருவிழா.

இப்பெருவிழாவன்று, 'பேறுபெற்றோர்' என்ற ஆசீருடன், இயேசு வழங்கிய புனிதத்துவத்தின் பல்வேறு அம்சங்கள், நமது நற்செய்தியாக ஒலிக்கிறது. இப்பகுதியை நாம் அடிக்கடி கேட்டு, சிந்தித்திருக்கிறோம். இன்றைய சிந்தனைக்கு நாம் இரு எண்ணங்களை மட்டும் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். இயேசு மலை மீது அமர்ந்ததையும், அவர் வழங்கிய ஆசி மொழிகளையும் நம் சிந்தனைகளின் மையமாக்குவோம். "இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர்ந்தார்" (மத். 5:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

மலை... உடலிலும், மனதிலும், மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளைச் சூழ்ந்திருக்கும் அமைதி, மலைப்பகுதிகளில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வை உருவாக்கும். மேலும், மலை மீது நிற்கும்போது, நமது பார்வை, பரந்து விரிந்ததாக மாறும். அமைதி, தூய்மை, புத்துணர்வு, பரந்து விரிந்த பார்வை, என்ற உன்னத அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களில் கருதப்படுகின்றன.

மலைமீது அமர்ந்த இயேசு, தன் போதனைகளை, ஆசி மொழிகளுடன் ஆரம்பிக்கிறார். அவர் ஆசீரால் நிறைந்தவர் என்பதால், அவர் இவ்வுலகில் வாழும் அனைவரையும், குறிப்பாக, இவ்வுலகில் துயரங்களைச் சந்திப்போரை, ஆசீர்வதித்து, தன் படிப்பினைகளை வழங்குகிறார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். இந்தக் கூற்றை சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று எப்படி சொன்னீர்?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்து இறைவனையேத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும் இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும், நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர்பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர்பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தையும் சபிக்கப்பட்டதாய் காணும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசீர்களை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை, நமக்கு வந்த சாபங்கள் என்று பெரிதுபடுத்துவதால், நம் வாழ்வு, சாபங்களால் நிறைந்துள்ளதைப்போன்ற உணர்வைத் தருகிறது.

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் அறிவிக்கவந்த தலைமைத் தூதர் கபிரியேல், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். மரியாவைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் மலைப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார். 'பேறுபெற்றோர்' அதாவது, 'ஆசி பெற்றவர்' என்று இயேசு மலை மீது முழங்கிய கூற்றுகள், உலகப் புகழ்பெற்றவை:

மத்தேயு 5 3-10

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; துயருறுவோர் பேறுபெற்றோர்; கனிவுடையோர் பேறுபெற்றோர்; நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்...

'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறிய ஆசி மொழிகள், பல்லாயிரம் உள்ளங்களில் உன்னத எண்ணங்களை விதைத்துள்ளன. அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியை, இம்மலைப்பொழிவில் ஆணித்தரமாக அறிவித்துள்ள இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோரையும் அதிகம் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, அவர்கள் மேற்கொண்ட அகிம்சை வழி போராட்டங்களுக்கு, உந்துசக்தியாக இருந்தது.

பேறுபெற்றோர் என்று இயேசு கூறிய இந்த வரிசையில், இறுதியாக அவர் கூறியுள்ள நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் என்ற சொற்கள், நம் எண்ணங்களை, மும்பைச் சிறையில் வாடும் அருள்பணி ஸ்டான் சுவாமி, மற்றும் அவருடன் சிறைப்பட்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவர் மீதும் திருப்புகின்றன. பேறுபெற்றோர் வரிசையில் கூறப்பட்டுள்ள எட்டு பேறுகளில், ஏனைய ஏழு பேறுகளைப்பற்றி இயேசு கூடுதலான விளக்கங்கள் தரவில்லை. இறுதியில், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று கூறிய இயேசு, அதன் விளக்கத்தையும் வழங்கியுள்ளார். இந்த விளக்கத்துடன் இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தி நிறைவடைகிறது.

மத்தேயு 5:10-12

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

அனைத்துப் புனிதரின் பெருவிழாவான இந்த ஞாயிறன்று, இயேசு கூறிய இச்சொற்கள், சிறையில் வாடும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கும், ஏனைய மனித உரிமை போராளிகளுக்கும் மன உறுதியையும், நிறைவான ஆசீரையும் வழங்க இறைவனை மன்றாடுவோம்.

இறுதியாக, ஓர் எண்ணம்... நவம்பர் 1 புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவுநாள். இவ்விரு நாட்களும், இந்த வரிசையில், ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பொதுவாக, ஒருவர் இறந்தபின்னரே, அவர், புனிதரென அறிவிக்கப்படுவார். எனவே, முதலில் இறந்தோரின் நினைவுநாளையும், அதைத்தொடர்ந்து, புனிதர்களின் திருநாளையும் கொண்டாடுவதுதானே பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமும், இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஒருவர் இறந்ததும், அவரைப் பற்றி நல்லவைகளே அதிகம் பேசப்படும். ஒருவரது குறைகளைக் குறைத்து, மறைத்துவிடும் வல்லமை பெற்றது மரணம். ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே.

இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில், வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், அவ்வாறே சூழ இருப்பவர்களால் போற்றப்படும் மனிதர்கள், புனிதர்கள் என்ற நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.

இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான், கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து.

“ஒரு தலைவன் அல்லது நாயகன், இவ்வுலகில் பெரும் ஒளியைத் தூண்டுகிறார். இருள் சூழ்ந்த இவ்வுலக வீதிகளில் மக்கள் நடப்பதற்கு அவர் ஒளிப் பந்தங்களை ஏற்றி வைக்கிறார். புனிதரோ, உலகின் இருளான பாதைகளில் தானே ஒளியாக நடந்து செல்கிறார்” என்று கூறியவர், பீலிக்ஸ் அட்லர் (Felix Adler).

"The hero is one who kindles a great light in the world, who sets up blazing torches in the dark streets of life for men to see by. The saint is the man who walks through the dark paths of the world, himself a light." (Felix Adler).

இருள் சூழ்ந்த இவ்வுலகைப் பற்றி அடிக்கடி வேதனைப்படுகிறோம். "இருளைப் பழிப்பதைவிட, ஒளியை ஏற்றுவோம்" என்று பல மேதைகள் கூறியுள்ளதைக் கேட்டிருக்கிறோம். இருள் சூழ்ந்த இவ்வுலகில் ஒளியை ஏற்றுவோம்; ஒளியாக வலம்வருவோம்; இறுதியில் நாம் இவ்வுலகைவிட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச்சென்றோம் என்ற திருப்தியுடன் விடைபெற்றுச் செல்வோம். அதுவே புனிதர்களின் அழகு!

"புனிதவாசல் நமக்கும் திறந்திருக்கிறது - பேறுகளின் வழிப்பயணம்"

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 5:1-12) இயேசு வழங்கிய "மலைப்பொழிவு - எண்வகைப்பேறுகள்" புனிதர்களின் வாழ்வின் வரைபடமாக அமைகின்றது.

1. எண்ணற்ற மக்கள் கூட்டம் (The Multitude in White)

முதல் வாசகத்தில் (திருவெளிப்பாடு 7:2-14) யோவான் ஒரு காட்சியைப் பார்க்கிறார்: எந்த ஒரு மனிதனும் எண்ண முடியாத அளவுக்குப் பெரியதொரு மக்கள் கூட்டம் அரியணையின் முன் நிற்கிறது. அவர்கள் துயரங்களைக் கடந்து வந்தவர்கள், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் உடைகளை வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
• சிந்தனை: புனிதர்கள் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; அவர்கள் நம்மைப் போலவே கஷ்டங்களை அனுபவித்தவர்கள், தோல்விகளைக் கண்டவர்கள். ஆனால், அவர்கள் கடவுளின் அருளால் மீண்டும் எழுந்து நடந்தவர்கள். புனிதத்துவம் என்பது சிலருக்கு மட்டுமே உரியது அல்ல, அது நம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு.

2. நாம் கடவுளின் பிள்ளைகள் (Children of God)

இரண்டாம் வாசகத்தில் (1 யோவான் 3:1-3) புனித யோவான் கூறுகிறார்: "தந்தை நம்மேல் எத்துணை அன்பு கூர்ந்தார் என்று பாருங்கள்! நாம் கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படுகிறோம்; அவ்வாறே இருக்கிறோம்."
• பாடம்: ஒரு புனிதரின் முதல் தகுதி, தான் கடவுளின் பிள்ளை என்ற உணர்வைக் கொண்டிருப்பதுதான். இந்த உணர்வு இருக்கும்போது, நாம் உலகப் போக்கிற்கு அடிமையாகாமல், தூய்மையைத் தேடி ஓடுவோம்.

3. புனிதத்துவத்தின் வழித்தடம் (The Beatitudes)

இயேசு காட்டும் எட்டுப் பேறுகள் உலகத்தின் போக்கிற்கு முற்றிலும் மாறானவை. உலகம் "செல்வம், அதிகாரம், சிரிப்பு" ஆகியவற்றை ஆசீர்வாதம் என்கிறது. ஆனால் இயேசு, "ஏழ்மை, துயரம், அமைதி, நீதி" ஆகியவற்றை ஆசீர்வாதம் என்கிறார்.
• விளக்கம்: புனிதர்கள் இந்த எட்டுப் பேறுகளையும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்தார்கள். துயரப்படும்போது இறைவனிடம் ஆறுதல் தேடினார்கள், நீதிக்காகப் போராடும்போது சிலுவையைச் சுமந்தார்கள்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்தப் பெருவிழாவில் நாம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள்:
• பெயர் புனிதரை அறிதல்: உங்கள் பெயருக்குரிய புனிதரைப் பற்றி இந்த வாரம் தேடி வாசியுங்கள். அவர்களின் வாழ்வில் உங்களைக் கவர்ந்த ஒரு நற்பண்பையாவது பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
• அன்றாட புனிதத்துவம்: புனிதத்துவம் என்பது பெரிய அற்புதங்களைச் செய்வதில் இல்லை. அன்னை தெரசா அல்லது குழந்தை தெரசா கூறியது போல, "சாதாரண காரியங்களை அசாதாரண அன்போடு செய்வது" தான் புனிதத்துவம். இந்த வாரம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் (சமைப்பது முதல் அலுவலகப் பணி வரை) அன்போடு செய்யுங்கள்.
• புனிதர்களிடம் பரிந்துரை: உங்களுக்குப் பிடித்த புனிதர்களிடம் உங்கள் குடும்பத் தேவைகளுக்காகவும், குறிப்பாகப் பங்கின் வளர்ச்சிக்காகவும் உருக்கமாகப் பரிந்துரை கேளுங்கள்.
• கல்லறைத் திருநாளுக்குத் தயார்: நாளை (நவம்பர் 2) மரித்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள். இன்று மாலை உங்கள் குடும்பத்தில் மரித்த முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு நன்றி கூறிச் செபியுங்கள்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"புனிதர்கள் என்பவர்கள் ஒருபோதும் தவறு செய்யாதவர்கள் அல்ல; விழுந்த போதெல்லாம் இறைவனின் கரம் பிடித்து எழுந்தவர்கள். அவர்கள் இன்று விண்ணகத்தில் நமக்காகக் காத்திருக்கிறார்கள். நாமும் அந்தப் புனிதப் பயணத்தைத் தொடர்வோம்."

அனைத்து தூயவர்கள்‌ (நவம்பர்‌ 1)

“தனக்காகவும்‌ பிறருக்காகவும்‌ வாழ்கிறவன்‌ தான்‌ மனிதன்‌; பிறருக்காகவும்‌ கடவுளுக்காகவும்‌ மட்டூம்‌ வாழ்கிறவன்‌ புனிதன்‌”. நாம்‌ ஒவ்வொருவரும்‌ புனிதர்களாக வாழ, இன்றைய நாளில்‌ இறைவன்‌ நம்மை அழைக்கிறார்‌.

புனிதர்கள்‌ யார்‌? புனிதர்கள்‌ கடவுளா? புனிதர்களை நாம்‌ வழிபடுகின்நோமா? வணங்குகின்றோமா? புனிதர்களிடம்‌ நாம்‌ மன்றாட வேண்டுமா? ஏன்‌, நமது தாய்த்‌ திருச்சபை புனிதர்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கிறது? இவ்வாறான நம்முடைய, மற்றும்‌ பிற சபையைச்‌ சார்ந்தவர்களுடைய பல கேள்விகளுக்கும்‌ சந்தேகங்களுக்கும்‌ இன்றைய பெருவிழா நமக்கு விளக்கம்‌ தருகிறது.

புனிதர்கள்‌ என்பவர்கள்‌ இவ்வுலகில்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்களாக விசுவாசத்தில்‌ உறுதிகொண்டூ மற்றவர்களுக்கு இறைவனைக்‌ காண்பித்து இன்று விண்ணக வாழ்வைச்‌ சுவைத்துக்‌ கொண்டிருப்பவர்கள்‌. எபிரேயருக்கு எழுதியத்‌ திருமுகம்‌ 12:22- 23-இல்‌ கடவுளின்‌ நகர்‌ விண்ணக எருசலேம்‌. அதனைப்‌ பல்லாயிரக்‌- கணக்கான வானதூதர்கள்‌ சூழ்ந்துள்ளனர்‌. விண்ணகத்தில்‌ தாய்த்‌ திருச்சபை விழா கூட்டமென அங்கே கூடியுள்ளது என்று கூறும்‌ இறைவார்த்தை நமக்கு இதனை உறுதிப்படுத்துகிறது.

திருச்சபையின்‌ முதல்‌ நூற்றாண்டுகளில்‌ திருச்சபையால்‌ நினைவு கூறப்பட்ட புனிதர்கள்‌ அனைவரும்‌ வேதச்‌ சாட்சிகளே. வேதசாட்சிகளைத்‌ தவிர ஏராளமான புனிதர்களும்‌ மோட்சத்தில்‌ புனிதர்களாகப்‌ பேரின்பப்‌ பாக்கியம்‌ அனுபவித்து வருகிறார்கள்‌.

புனிதர்களாக யாரும்‌ பிறப்பதில்லை. மனிதர்களாக பிறந்து புனித நிலைக்குத்‌ தங்களையே மாற்றிக்‌ கொண்டவர்கள்தான்‌ புனிதர்கள்‌. இவர்கள்‌ தங்கள்‌ வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து, கிறிஸ்தவ விசுவாசத்தில்‌ ஊன்றி நின்று, ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்கள்‌. புனிதர்கள்‌ தவறு செய்தவர்கள்தான்‌, ஆனால்‌ உணர்ந்து திருந்தியவர்கள்‌. ஒரேயடியாக வீழ்ந்துவிடவில்லை, வீழ்ந்தாலும்‌ எழுந்தவர்கள்‌.

கி.பி. 153-ஆம்‌ ஆண்டு ஆயர்‌ பொலிக்கார்ப்‌ என்பவர்‌ மறைசாட்சி முடி பெற்றார்‌. இதை வானகப்‌ பிறப்பு நாளாக தொடக்கக்‌ கிறிஸ்தவர்கள்‌ கொண்டாடினர்‌. நமக்கு முன்சென்ற இவர்களின்‌ வானகப்‌ பிறப்பு நாளைக்‌ கொண்டாடும்‌ போது நாமும்‌ சாட்சி பகர நம்மையேத்‌ தயாரித்துக்‌ கொள்கிறோம்‌.

பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக கி.பி. 387-ஆம்‌ ஆண்டு நிசயாவில்‌ இரண்டாவது பொதுச்சங்கம்‌ கூட்டப்பட்டது. இதில்‌ புனித உருவங்களை நாம்‌ பார்க்கும்போது இவைகள்‌ எந்த ஆட்களைக்‌ குறிக்கின்றனவோ அவர்களை நினைவு படுத்துகின்றன என்றும்‌ அவர்களை நினைத்துக்கொள்வதனால்‌, அவர்களைப்‌ பின்பற்ற முயலுகிறோம்‌. அவர்களுக்கு வணக்கம்‌ செலுத்துகிறோம்‌ என்றும்‌ விளக்கம்‌ கொடுக்கப்பட்டது.

கி.பி. 8-ஆம்‌ நூற்றாண்டிலேயே நவம்பர்‌ ஒன்றாம்‌ தேதி அனைத்துப்‌ புனிதர்கள்‌ பெருவிழாக்‌ கொண்டாடப்பட்டது. குறிப்பாகப்‌ பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில்‌. கி.பி. 9-ஆம்‌ நூற்றாண்டில்‌ இத்திருவிழாவின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து மற்ற பல பகுதிகளிலும்‌ கொண்டாடப்பட்டது. கி.பி. 10-ஆம்‌ நூற்றாண்டில்‌ உரோமாபுரியில்‌ இரவு செபத்தோடூ உபவாசமிருந்து கொண்டாடப்பட்டது. இவ்வாறாகத்‌ திருச்சபை வரலாற்றில்‌ இப்பெருவிழா முக்கிய இடம்‌ பெற்றது.

உலகிலுள்ள எல்லாருமே கடவுளின்‌ காயலாகப்‌ படைக்கப்‌- பட்டவர்கள்‌. கடவுளின்‌ பண்பைப்‌ பெற்றுள்ள நாம்‌ எந்தச்‌ சூழ்நிலையிலும்‌ நன்மையையேச்‌ செய்திட அழைக்கப்பட்டுள்ளோம்‌. இவ்வழைத்தலை ஏற்று வாழும்போது ஒருவர்‌ புனிதராகிறார்‌.

புனிதர்கள்‌ கடவுளா?

இல்லை. புனிதர்கள்‌ கடவுள்‌ இல்லை. கடவுள்‌ முழுமை- யானவர்‌, அனைத்தையும்‌ படைத்தவர்‌ கடவுள்‌. அனைத்தையும்‌ சாதாரண மனிதர்கள்‌. தங்கள்‌ வாழ்வால்‌ புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள்‌. அவர்கள்‌ கடவுளோடு கொண்ட நெருங்கிய உறவால்‌ அந்த முழுமையை நோக்கிப்‌ பயணம்‌ செய்தவர்கள்‌. கடவுளுக்காகக்‌ கடவுளின்‌ திட்டப்படி இவ்வுலகில்‌ வாழ்ந்தவர்கள்‌. அதற்குப்‌ பரிசாகக்‌ கடவுளை முகமுகமாய்த்‌ தரிசிக்கும்‌ வரத்தைப்‌ பெற்று விண்ணகத்தில்‌ நமக்காகப்‌ பரிந்துப்‌ பேசுகின்றவர்கள்‌.

கிறிஸ்தவர்களாகிய நாம்‌, புனிதர்கள்‌ யார்‌? கடவுள்‌ யார்‌? என்ற வேறுபாட்டைத்‌ தெரிந்து கொள்வது அவசியம்‌. பலர்‌ ஆதித்‌ திருச்சபையில்‌ வேதகலாபனை நேரத்தில்‌ விசுவாசத்தைக்‌ காப்பாற்ற பல வேதனைகள்‌ பல கஷ்டங்களை எதிர்கொண்டார்கள்‌, ஏன்‌ தங்கள்‌ உயிரையேத்‌ தியாகம்‌ செய்தார்கள்‌. இவர்களை மறைசாட்சிகள்‌ என்றழைக்கிறோம்‌. பின்பு, பலர்‌ சாதாரண மரணம்‌ அடைந்தாலும்‌ தங்கள்‌ வாழ்க்கை மற்றவர்களுக் கு எடுத்துக்காட்டான விசுவாச வாழ்வு வாழ்ந்ததால்‌ இவர்களைப்‌ புனிதர்கள்‌ என்றழைக்கிறோம்‌. ஆதலால்‌ புனிதர்கள்‌ கடவுள்‌ அல்லர்‌, கடவுளால்‌ படைக்கப்பட்ட மனிதர்கள்‌ என்ற தெளிவானச்‌ சிந்தனை கொள்வோம்‌.

புனிதர்களுக்கு நாம்‌ செலுத்துவது வழிபாடா? வணக்கமா?

புனிதர்களை நாம்‌ வழிபடுவதில்லை. ஆராதிப்பதில்லை. புனிதர்களுக்கு நாம்‌ வணக்கம்‌ செலுத்துகிறோம்‌. வழிபாடு கடவுளுக்கு மட்டும்‌ உரித்தானது.
மரியாதை : நாம்‌ நம்‌ பெரியவர்களுக்குச்‌ செலுத்துவது
வணக்கம்‌ - நாம்‌ புனிதர்களுக்குச்‌ செலுத்துவது
மகத்தான வணக்கம்‌ - நாம்‌ புனித கன்னி மரியாள்‌, இறைவனின்‌ தாய்க்குச்‌ செலுத்துவது
ஆராதனை வழிபாடு - நாம்‌ கடவுளுக்குச்‌ செலுத்துவது

எந்தப்‌ புனிதரும்‌ தங்களைக்‌ கடவுள்‌ நிலைக்கு உயர்த்தியதில்லை. கடவுளுக்குச்‌ சமமாக நினைத்ததில்லை. நான்தான்‌ கடவுள்‌ என்று கூறியதுமில்லை. இவர்கள்‌ கடவுளுக்காக வாழ்ந்தவர்கள்‌. விண்ணக வீட்டில்‌ வாழ்கிறவர்கள்‌. நமக்காக இடைவிடாமல்‌ கடவுளிடம்‌ மன்றாடுகிறவர்கள்‌. நாம்‌ புனிதர்கள்‌ மூலம்‌ கடவுளிடம்‌ வேண்டுகிறோம்‌. இவர்கள்‌ நம்‌ விண்ணப்பத்திற்கு ஒரு பாலமாக, ஒரு இணைக்‌ கருவியாகத்‌ திகழ்கிறார்கள்‌.

திருத்தந்தை 23-ஆம்‌ யோவான்‌ “கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக்‌ காட்டும்‌ வணக்கம்‌ வெறும்‌ மரியாதை மட்டூமன்று: அல்லது வேளா வேளைகளில்‌ எழுப்பும்‌ சிறு சிறு மன்றாட்டு மட்டுமன்று; ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும்‌. அவர்கள்‌ நமக்குத்‌ தந்துள்ள விலைமதிக்கப்‌ பெறாத முன்மாதிரிகையும்‌ பாடமும்‌ நமக்கு மகிழ்ச்சியூட்டும்‌ ஊக்குவிக்கும்‌ உதவிகளாகும்‌'” என்று கூறுகிறார்‌.

புனிதர்களுக்கு நாம்‌ செய்யக்கூடிய மிகப்பெரிய வணக்கம்‌ அவர்களுடைய புனிதத்துவமான வாழ்வு முறையைப்‌ பின்பற்றுவதே. புனிதர்கள்‌ அனைவரும்‌ நாம்‌ எவ்வாறு கடவுளின்‌ விருப்பப்படி வாழ வேண்டும்‌ என கற்றுத்‌ தருகிறார்கள்‌.

புனிதர்களிடம்‌ ஏன்‌ மன்றாட வேண்டும்‌?

மனிதர்களால்‌ எல்லாம்‌ சாத்தியமில்லை. லூக்கா எழுதிய நற்செய்தி 5:17-26-இல்‌ முடக்குவாதமுற்ற ஒருவரைக்‌ குணமாக்கக்‌ நான்குபேர்‌ கூரைமேல்‌ ஏறி ஒடுகளைப்‌ பிரித்து அவரைக்‌ கட்டிலோடு இயேசுவுக்குமுன்‌ இறக்கி அவனை குணமடையச்‌ செய்ததாக வாசிக்கிறோம்‌. அந்த நால்வரின்‌ விசுவாசத்தால்‌ அவன்‌ குணம்‌ பெற்றான்‌. அந்த நான்கு நபர்கள்‌ முடக்குவாதமுற்றவன்‌ குணம்பெற உதவியாக இருந்தார்கள்‌. அதேபோல்‌ நம்முடைய இயலாத நிலையில்‌ புனிதர்கள்‌ நமக்காக இறைவனிடம்‌ மன்றாடூவார்கள்‌. மேலும்‌ புனிதர்களின்‌ பரிந்துரையை நாம்‌ மேலான முறையில்‌ விரும்பவேண்டும்‌. ஏனெனில்‌ நாம்‌ நமது மன்றாட்டினால்‌ பெறமுடியாத நன்மைகளை அவர்களின்‌ மன்றாட்டின்‌ பயனாகப்‌ பெறலாம்‌. இதனால்தான்‌ திருத்தொண்டர்‌, குருத்துவ, ஆயர்‌ திருநிலைப்பாடூ மற்றும்‌ துறவறசபையினரின்‌ நித்திய வார்த்தைப்பாடு நடைபெறும்‌ போதும்‌ பாஸ்கா திருவிழிப்பு ஞாயிறன்றும்‌ புனிதர்களின்‌ மன்றாட்டு மாலை முக்கிய இடம்‌ பெறுகிறது.

திருச்சபை ஏன்‌ புனிதர்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கிறது என்ற கேள்விக்குப்‌ பதிலாக, புனிதர்களும்‌ திருச்சபையின்‌ அங்கத்தினர்கள்‌. நம்‌ குடும்பத்தில்‌ ஒருவரின்‌ வெற்றி குடும்பத்தில்‌ உள்ள அனைவருக்கும்‌ மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல்‌ கிறிஸ்தவத்‌ திருச்சபை என்ற நம்‌ குடும்பத்தில்‌ பலர்‌ புனிதர்களாக வாழ்ந்து இறந்திருக்கிறார்கள்‌. அவர்களுடன்‌ நாமும்‌ சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவதுதானேச்‌ சிறந்தது. அதற்காகத்‌ திருச்சபை நமக்குத்‌ தரும்‌ ஒரு அரியச்‌ சந்தர்ப்பம்தான்‌ இப்பெருவிழா.

இப்பெருவிழாவின்‌ முக்கிய நோக்கம்‌ புனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோ, பெருமைப்படுத்துவதோ அல்ல. மாறாக, நாமும்‌ இவர்களைப்போல புனித நிலைக்கு உயர்த்தப்பட, இவர்களைப்போல வாழத்‌ திருச்சபை அறிவுறுத்துகிறது.

புனித வாழ்வு வாழ்ந்தவர்கள்‌ ஏராளம்‌ ஏராளம்‌. புனிதர்கள்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ மட்டுமல்ல; எண்ண முடியாத வேறு நீதிமான்களையும்‌ நாம்‌ காண்கிறோம்‌. அவர்கள்‌ கடவுளையும்‌ அவருடையச்‌ செம்மறியாகிய இயேசுவையும்‌ புகழ்கிறார்கள்‌. புனிதர்கள்‌ எத்தனையோ பேபர்‌ திருச்சபைப்‌ பட்டியலில்‌ இடம்பெறவில்லை. ஆனால்‌ கடவுளின்‌ பட்டியலில்‌ அவர்கள்‌ விடுபடவில்லை. இவ்வாறு திருச்சபையின்‌ பட்டியலில்‌ இடம்பெற்ற, இடம்பெறாத அனைத்துப்‌ புனிதர்களையும்‌ நினைவு கூர்ந்து கொண்டாடும்‌ இத்திருநாளில்‌ நாமும்‌ கடவுளின்‌ பட்டியலில்‌ இடம்பெற்று விண்ணக வாழ்வைச்‌ சுவைக்கப்‌ புனிதமிக்க வாழ்வு வாழ்ந்து, வரும்‌ தலைமுறைக்கு வழிகாட்டிகளாக வாழ்வோம்‌.

நாம்‌ விசுவாசப்‌ பிரமாணத்தில்‌ புனீதர்களுடையச்‌ சமூதிதப்‌ பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்‌ என்று அறிக்கையிடூம்போது, விண்ணக எருசலேமை நினைவு கூர்ந்து அவ்விடம்‌ நோக்கிப்‌ பயணம்‌ செய்ய நம்‌ வாழ்வை ஆயத்தமாக்குகிறோம்‌. அவர்களுடைய பெயரை நமக்குச்‌ சூட்டியிருக்கிறோம்‌. அப்புனிதரைச்‌ சந்தித்து நாமும்‌ அவரைப்‌ போல்‌ வாழ முயற்சிப்போம்‌.

நாம்‌ அனைவரும்‌ பயணிகள்‌. விண்ணகத்தை நோக்கியுள்ளப்‌ பயணத்தில்‌ நாம்‌ புனிதர்களாக மாற முயற்சி எடுப்போம்‌. முயற்சிகள்‌ தவறலாம்‌. ஆனால்‌ முயற்சி செய்யத்‌ தவறாதே என்ற விருதுவாக்கோடு அனைத்துப்‌ புனிதர்களிடம்‌ இன்று மன்றாடிப்‌ புனித நிலைக்கு நம்மை மாற்றிக்‌ கொள்ள முயற்சி எடுப்போம்‌.

மனிதனாகப்‌ பிறந்தோம்‌. புனிதனாக வாழ்ந்து சாவோம்‌. மனிதர்களாக இவ்வுலகிற்கு வந்தோம்‌, புனிதர்களாக வாழ்ந்து விண்ணகத்திற்குச்‌ செல்வோம்‌.

“இறைவனைப் பிரதிபலிப்பவர்களாவோம்”

நிகழ்வு
எப்பொழுதும் ஏதாவது ஒரு கேள்வியைத் தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவன் ஒருவன், ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் தந்தையுடன் திருப்பலிக்குச் செல்லும்பொழுது, “அப்பா! புனிதர்கள் என்றால் யார்?” என்றான். தன் மகன் கேட்ட கேள்விக்குத் தந்தை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. பங்குக்கோயிலை அடைந்ததும், மகனைக் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த தந்தை, கண்ணாடி சன்னல்களில் வரையப்பட்டிருந்த புனிதர்களின் திருவுருவங்களைக் காட்டி, இவர்கள்தான் புனிதர்கள்” என்றார்.

அவர் இவ்வாறு சொன்னபொழுது, காலைக் கதிரவன் கண்ணாடி சன்னல்களில் பட்டு கோயில் எங்கும் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு மகன் தன் தந்தையிடம், “புனிதர்கள் என்றால் யார் என்று எனக்கு இப்பொழுது நன்றாகப் புரிகின்றது... கடவுளைத் தங்கள் வழியாகப் பிரதிபலிக்கின்றவர்களே புனிதர்கள்” என்றான். தன் மகன் இப்படி அறிவுப்பூர்வமாகப் பேசிவதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த தந்தை அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

‘இறைவனைப் பிரதிபலிக்கின்ற யாவருமே புனிதர்கள்’ என்று அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் சொன்ன பதில், புனிதர்கள் என்றால் யார் என்பதற்கு சொல்லப்பட்ட மிகத் தெளிவான விளக்கம் என்றே சொல்லலாம். இன்று தாயாம் திருஅவை புனிதர் அனைவரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.

புனிதர்கள் - கடவுளின் மக்கள்
‘புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன்’ என்று அறிக்கையிடுகின்ற நாம், திருத்தந்தை நான்காம் கிரகோரி கி.பி. 837 ஆம் ஆண்டு, ‘புனிதர் அனைவர்’ விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்த நாளிலிருந்தே இவ்விழாவைக் கொண்டாடி வாழ்கின்றோம்.

திருஅவை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புனிதரை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றபொழுது, புனிதர் அனைவருக்கும் என தனியாக ஒரு நாளை ஒதுக்கி, அவர்களுக்கு விழாக் கொண்டாடுவது பொருத்தமானதா? என்ற கேள்வி எழலாம். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று, ஓர் ஆண்டில் வருகின்ற 365 அல்லது 366 புனிதர்கள் போக எத்தனையோ பேர் கடவுளைத் தங்களுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் பிரதிபலித்திருக்கின்றார்கள் (திவெ 8: 9). அவர்கள் அனைவரையும் நினைவுகூர்வதற்காக இந்தப் புனிதர் அனைவர் விழா கொண்டாடப்படுகின்றது. இரண்டு, புனிதர்கள் அனைவரும் விண்ணகத்தில் இறைவனின் திருமுன் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களை நன்றியோடு நினைவுகூர்வதற்காகவும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி நாம் நடப்பதற்காகவும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

திருஅவையால் புனிதர்கள் என அங்கீகரிக்கப்பட்ட, கடவுளைத் தங்கள் வாழ்வாலும் வார்த்தையாலும் பிரதிபலித்தும் திருஅவையால் புனிதர்கள் என அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்ற யாவரும் கடவுளின் மக்களாக இருக்கின்றார்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் எடுத்துக் கூறுகின்றார். புனித யோவான் கூறக்கூடிய கடவுளின் மக்களாவது எல்லாராலும் சாத்தியப்படுமா...? அந்த நிலையை அடைய ஒருவர் என்ன செய்யவேண்டும்...? என்பன குறித்து தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எல்லாராலும் கடவுளின் மக்களாக, புனிதராக முடியும்
கடவுளின் மக்களாவது அல்லது புனிதராவது ஒருசிலரால்தான் முடியுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனென்றால், திருவெளிபாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் சார்ந்த, யாராலும் எண்ணிக்கையிட முடியாதவர்கள் அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்ததை தான் கண்டதாக யோவான் கூறுகின்றார். எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் சார்ந்தவர்கள் விண்ணகத்தில் இருந்தார்கள் எனில், எல்லாராலும் மக்களின் மக்களாக, புனிதர்களாக முடியும் என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், மண்ணகத்தில்தான் பாகுபாடும் வேற்றுமையும் இருக்குமே ஒழிய, விண்ணகத்தில் பாகுபாடு இருக்காது. அதனால் எல்லாரும் கடவுளின் மக்களாக, புனிதர்களாக முடியும். இதையே புனித அகுஸ்தின், “கிறிஸ்துவைப் பின்பற்றித் தூய்மையாக எத்தனையோ ஆண்களும் பெண்களும் வாழ்ந்திருக்க, நான் ஏன் வாழக்கூடாது” என்பார். அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் மக்களாக, புனிதர்களாக மாறமுடியும். இந்த நிலையை நாம் அடைவதற்கு உதவியாக இருப்பவைதான் நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய எட்டுவிதமான பேறுகள்.

புனிதர்கள் விண்ணுலகில் மிகுந்த கைம்மாறு பெறுவார்கள்
மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, ஏழையரின் உள்ளம், துயருறுதல், கனிவு, நீதியை நிலைநாட்டும் வேட்கை, இரக்கம், தூய்மையான உள்ளம், அமைதி, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படல் ஆகிய எட்டுவிதமான பேறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு விளக்கம் அளிக்கின்றபொழுது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், மலைப்பொழிவில் இடம்பெறுகின்ற எட்டுவிதமான பேறுகளும் இயேசுவிடத்தில் இருப்பவை. அதனால் அது தன்னிலை விளக்கமே என்று கூறுவார். அவ்வாறெனில், நாம் இயேசுவைப் போன்று அல்லது மலைப்பொழிவில் இடம்பெறுகின்ற எட்டுவிதமான பேறுகளின்படி நாம் நடக்கின்றபொழுது, நாம் கடவுளின் மக்களாகவும், புனிதர்களாகவும் ஆகின்றோம் என்பது உண்மையாகின்றது. இத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கின்றபொழுது, இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்வது போல், நமக்கு விண்ணுலகில் மிகுந்த கைம்மாறு கிடைக்கும் என்பதும் உறுதி.

ஆதலால், நாம் எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் கடவுளைப் பிரதிபலித்துப் புனிதர்களாகியிருக்கும்பொழுது, நம்மால் புனிதர்களாக முடியும் என்ற நம்பிக்கையோடு இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளின் மக்களாக, புனிதர்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை
‘கடவுளின் பார்வையில் எதுவும் சிறியதும் அல்ல, யாரும் சிறியவரும் அல்லர். எல்லாருமே விலையேறப்பெற்றவர்கள்! அதனால் நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அன்போடு செய்வோம்’ என்பார் குழந்தை இயேசுவின் புனித தெரேசா. ஆகையால், நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் அன்போடு செய்து, கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், புனிதர்களாய் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

“மலைப் பொழிவு” இறை வார்த்தை சிந்தனைகள்

அன்று, இறைமகன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர்… என்று விவலியம் கூறுகிறது. இந்த மலைப் பொழிவும் அவ்வாறு அவரைத் தொடர்ந்த மக்களுக்காக மலைமீது ஏறி அமர்ந்து, அவர் கற்பித்ததுதான் - இன்று - உலகம் போற்றும் மலைப்பொழிவு என்ற இறை வார்த்தைகள். அண்ணல் காந்தி அவர்களுக்கும் இந்த வார்த்தைகள் அவருடைய அகிம்சை போராட்டத்திற்க்கு அடித்தளமாயிற்று.

இயேசு வாழ்ந்த காலத்தில் ஒரு சாமானியனின் வாழ்க்கை இன்று நாம் வாழும் வாழ்க்கையை போல் இருக்கவில்லை. அன்றைய சாமானியர்களின் வாழ்க்கை அதிகாரம், பணபலம், அடிமைத்தனம், வறுமை, ஜாதிப் பாகுபாடு, தீண்டாமை போன்ற சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்படிப்பட்ட மக்கள் தங்களை சூழ்ந்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபடவும், உரிமைக்குக் குரல் கொடுக்கவும், ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழவும், இறைவனை நேசிக்கவும் இறைமகன் கற்பித்த இனிய மொழிகள்தான் இந்த மலைப்பொழிவு.

வாழ்க்கையில் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ" பழகிக் கொள்ள வேண்டும். இஃது, நம்மிடம் உள்ள வளங்கள், வசதிகள் மற்றும் சூழலைக் கொண்டு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதைக் குறிக்கும் ஒரு சிறந்த வாழ்க்கைத் தத்துவமாகும். இதை இயேசு “ஏழையரின் உள்ளதோர் பேறுபெற்றோர்” என்கிறார். நாம் வாழும் சூழ்நிலையில் உள்ளத்தில் ஏழ்மையும் - வாழ்க்கையில் எளிமையையும் பின்பற்றும்போது “அவன் அருளால் அவன் தாள் பணிந்து” என்பதற்கு இணங்க நிறைவும் நிலைவாழ்வும் நமது சொந்தமாகும்.

இந்த வாழ்க்கை முறை இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் என்று இருக்கலாம். எப்படி பிறந்த குழந்தை பிரசவ வேதனையை மறக்கச் செய்கின்றதோ அதுபோல நிறைவையும், நிலை வாழ்வையும் பெற்றிட “துயருறுவோர் பேறு பெற்றோர்” என்கிறார் இறைமகன்.

இத்தகைய வாழ்க்கையில் நம்மைச் சூழ்ந்தும் சார்ந்தும் இருப்பவரோடு - “கனிவுடையோர் பேறு பெற்றோர்” என்றும் கூறுகின்றார். கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்கிறது தமிழ். இனிய உளவாக இன்னாதல் கூறேல் - என்கிறது வள்ளுவம். பிறர் மனம் மகிழும் கனிவுடைய இன்சொல் நல்ல நண்பர்களையும் அதன் விளைவாக அவர்களின் இதயத்திலும், வாழ்விலும், வாழும் இடத்திலும் - உரிமை பெற்றவர்களாக நம்மை மாற்றுகிறது. நல் உள்ளங்களில் இந்த உரிமையினால் ஏற்படும் இரக்க உணர்வு “இரக்கமுடையோர் இரக்கம் பெறுவர்” என்பதற்கு இணங்க அவர்களுக்கும் - நமக்கும் நன்மை பயக்கின்றது. கடந்த காலத்தில் சென்னையின் வெள்ளப்பெருக்கின் போதும், கொரோனா காலத்திலும் இரக்க உள்ளம் கொண்ட - நாம் அறியாத நல் உள்ளங்கள், அவர்கள் உயிர்களைப் பணையம் வைத்துச் செய்த; உயிர்காக்கும் உதவிகளை யார் மறக்க முடியும்?. இரக்க உணர்வு என்பது … இறைவன் மனிதர்களுக்கு மட்டும் தந்த மாபெரும் பொக்கிஷம். ஆம் இரக்கமுடையோர் பேறு பெற்றவர்கள். மேலும் இரக்கம் என்பது மனிதனின் தனி அடையாளமாகும்.

ஒரு மனிதன் உயிர் வாழ எப்படி தனக்குள் ஏற்படும் பசியையும் தாகத்தையும் பூர்த்தி செய்யாமல் இருக்க முடியாதோ, அதுபோல் வாழும் சமூகத்தில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் காண “நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவர்களாக” வாழ்வதும் அவசியம்.தனக்கும், தான் வாழும் சமூகத்திற்கும் தேவைப்படும் “நீதியின் பொருட்டு துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்” ஆவர். விண்ணரசு இவர்களின் உரிமையாகும் என்பது இறை வாக்கு.

தனி ஒருவருக்கும் மனு குலத்திற்கும் பயன் தரும் மேற்குறிப்பிட்ட அரிய பண்புகளுடன் வாழக்கூடியவர்கள் தூய உள்ளம் உடையோராகவும் - அமைதியை அள்ளித் தருபவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே தான் “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் : அமைதியை ஏற்படுத்துபவர் பேறுபெற்றோர்” ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்களாக, கடவுளைக் காண்பவர்களாக வாழ்வார்கள் என்கிறார் இயேசுபிரான்.

“நாம் முடியாது என்று நினைப்பதை யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கின்றார்” என்ற ஒரு வார்த்தை உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்று நாம் யோசிப்பதை இவைகளை நம்மால் பின்பற்ற முடியுமா என்று ஆலோசிப்பதை - அன்போடு, ஆவலோடு, உறுதியுடன் அகிலத்தில் செய்து காட்டியவர் மரியின் மைந்தர் இயேசு என்பதில் ஐயமில்லை. இதோ, நாங்கள் அவர்களுடைய சீடர்கள் அவருடைய வார்த்தைகளை வாழ்பக்குபவர்கள் - என்பதால் … நம்முன் வரும் இடர்களுக்கும் இன்னல்களுக்கும் அஞ்ச வேண்டாம் மகிழ்ந்து களிகூருங்கள் உங்களுக்குக் கைமாறு மிகுதியாகும் என்கிறார் இம்மானுவேலன்.

இன்று நாம் புனிதர்களின் பெரு விழாவைக் கொண்டாடுகிறோம்.
உண்மையாகவே இறைமகனை நம்பியவர்கள், அவர் வழி வாழ்ந்தவர்கள் இன்று திருஅவை போற்றும் புனிதர்கள் என்றால் மிகையாகுமா?… ஆகாது. உலக தேவைகளுக்காக - புனிதர்களை என்றும் நாடும் நாம் ; நமது ஆன்மீக தேடலாம் - நிலை வாழ்விற்காக ; அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை பின்பற்ற, முயற்சிக்க உறுதி கொள்வோம். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நமது நாட்டிலும் அருளாளர்களும் புனிதவதிகளும், புனிதர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இன்று, நிலைவாழ்வைச் சென்றடையும் பேறு பெற்றவர்களாக நாம் மாறிட; நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உலகை மாற்றிய இந்த மலைப்பொழிவை உண்மையுடன், உள்ளார்ந்த வாஞ்சையுடன், “உழவனின் - ஏர்கலப்பையாக” நம் உள்ளங்களுள் பயன்படுத்த அழைக்கப்படுகிறோம். பண்பட்ட நிலமென 30, 60, 100 எனப் பலன் தருவோம். “பேறுபெற்றோர் என்ற அழைப்பு அற்பமானது அல்ல அது அற்புதமானது” என உலகிற்கு பறைசாற்றுவோம்.
“இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.”