- திருவருகைக்காலம் முதல் ஞாயிறு மறையுரை | 2-ஆம் ஆண்டு | அன்பின்மடல் | Tamil Catholic website

மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு மறையுரை
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 63: 16b-17; 64: 1, 3b-8 | 1 கொரிந்தியர் 3:1-3 | மாற்கு 13:33-37

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


.
.
.


திருவிவிலியம் காட்டும் விழிப்பு

திருவருகைக் காலத்திற்குள் காலடி வைத்திருக்கின்றோம், இறைவனின் வருகைக்காகத் தயார் செய்யும் காலம் இது, மலர் மணத்தைச் சந்திக்கிறது. ஆறு கடலைச் சந்திக்கிறது. கடல் கரையைச் சந்திக்கிறது. இதைவிட அழகான, ஆச்சரியமான, அற்புதமான சந்திப்பு விண்ணகம் மண்ணகத்தைச் சந்திப்பது. பாவத்தின் பிடியில் வழி தவறிய மனித குலத்தை மீட்க, தம் அன்பு மகனை அனுப்பியதில்தான் அவரின் அன்பு முழுமையடைகிறது. வானத்திற்கு மேல் எட்டாத தூரத்தில் இருந்து கடவுளை, தந்தை மகன் உறவைப்போல மனித குல மத்தியில் கொண்டு வந்து விடுகிறார் எசாயா. அச்சம் தவிர்த்து அன்பிலும் நம்பிக்கையிலும் தோய்த்து அவர் எழுப்பும் குரல், வானங்களைப் பிளந்து கடவுளை இறங்கி வரச்செய்கிறது. எங்களை வழிநடத்தும் உம்மைவிட்டு எங்கே போவோம் என்ற கேள்வி ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது. கடவுள் மேல் உள்ள எசாயாவின் நம்பிக்கை பளிச்சிடுகிறது. எம் மீட்பர், என்ற பெயரை கடவுளுக்குச் சூட்டுகிறார். நம்பிக்கையுள்ள மக்களாக வாழ வேண்டியது நமது கடமை, ஏனெனில் நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ளோம். நமக்குச் சொல் வன்மையும், நிறையறிவும் தந்து நம்மை அவர் செல்வர்களாக்கியுள்ளார் என்கிறது இரண்டாம் வாசகம்.

தன்னைப் பார்க்க வந்த துறவிக்குப் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான், அந்த மன்னன். காட்டுப்பாதை வழியாக தனது ஊருக்கு சென்ற துறவி, களைப்பாக இருந்ததாலும், இருட்டிவிட்டதாலும் கல்லறைக்கு அருகில் உள்ள மரத்தடியில் ஓய்வு எடுத்தார். சற்று நேரத்தில் கத்தியோடு நான்கு திருடர்கள் அந்த வழியாக வந்தார்கள். மன்னன் தனக்குக் கொடுத்த பொற்காசுகளை, கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள் என்று நினைத்த துறவி, எப்படித் தப்புவது என்று யோசித்து, உட்கார்ந்தபடியே தப்பிக்க முடிவு செய்தார். அவர்கள் என்ன செய்தாலும் தப்பிப்பேன் என்ற நம்பிக்கையோடும். . வலிவோடும் விழிப்பாக இருந்தார். யார் நீ? என்ன வைத்திருக் கிறாய்....? அதற்கு துறவி ஒன்றுமில்லை ! நேற்றுதான் என்னை இந்த கல்லறையில் புதைத்தார்கள். கல்லறைக்குள் ஒரே புழுக்கம் அதனால்தான் காற்று வாங்கலாம் என்று வெளியே வந்தேன் என்றார். இதைக் கேட்ட கொள்ளையர்கள், கொள்ளையடிக்க பொருட்களை எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அதன்பிறகு துறவி பயமில்லாமல் ஊர் போய்ச் சேர்ந்தார். துறவியின் முன் அறிவும், விழிப்பும் அவரைக் காப்பாற்றியது. எச்சரிக்கையாய் இருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாது. (இன்றைய நற்செய்தி)

திருவிவிலியம் காட்டும் விழிப்பு
குள்ளன் சக்கேயு எப்டியாவது இயேசுவைப் பார்க்க வேண்டும். அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் விழிப்பாக இருந்தான். அதில் வெற்றியும் பெற்றான். (லூக். 19:1-10)

இயேசு இந்த வழியாக வருவார் என்பதை அறிந்த பிறவிக் குருடன் விழிப்போடு இருந்தான். பலர் அதட்டியும் அவன் கேட்கவில்லை. அவனின் காத்திருப்பு விழிப்பானது விழிகளுக்கு பார்வையானது (மாற். 10:46-52).

இயேசு ஓர் ஊரை அடைந்தபோது மார்த்தா என்ற பெண் தன் வீட்டில் விழிப்பாக இருந்து வரவேற்றாள் (லூக். 10:38).

தொழுகைக்கூடத் தலைவன் தன் மகளைக் காப்பாற்ற விழிப்பாக காத்திருந்து, இயேசுவின் காலில் விழுந்து தன் வீட்டிற்கு அழைத்தான் (லூக். 8:41).

வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் விழிப்பாகச் செயல்பட மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு வழிகாட்டுகிறது.

விழிப்பின் நிலைகள்

  • தன்னையும் தனது நிறைகுறைகளையும் அறிந்திருக்கும் தன் உணர்வு நிலை.
  • தன்னை மட்டுமல்ல பிறரையும் அறிந்து வைத்திருக்கும் பிறர் உணர்வு நிலை.
  • தன்னையும் பிறரையும் கடந்த சக்தியான இறைவனின் அன்பை, உறவை உணர்கின்ற இறை உணர்வு நிலை.

இந்த மூன்று நிலைகளையும் சரியாக உணர்ந்தவன், எப்போதும் எல்லா காலத்திலும், விழிப்பாகவே செயல்படுவான் என்பது பொருள். இதை நினைவுபடுத்தும் காலம்தான் திருவருகைக் காலம். இது பய உணர்வுகொண்ட விழிப்பல்ல. பாசத்தோடு கூடிய விழிப்பு. பாசமுள்ள தாய் தன் பிள்ளையின் வருகைக்குக் காத்திருப்பதுபோல் இயேசுவின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்கும் நிலையாகும்.

காட்டில் எதிர்பாராத நேரத்தில் ஒரு புலியிடம் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். தப்பிக்க வேறு வழியில்லை. நடக்கவே மூச்சு வாங்கும் அவன், தன் முழு பலத்தையும் திரட்டிக் கொண்டு ஓடுகிறான். தன்னால் முடியாது என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படும் போது மட்டுமே மனிதன் விழிப்பாகச் செயல்படுகிறான். அப்படி அன்று, எல்லா நேரங்களிலும், சூழ்நிலைகளிலும் விழிப்போடு செயல்படும் மனநிலையைப் பெற்றிருந்தால் அவன் எப்போதும் வெற்றி பெறுவான். காரணம் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. திருடன் எப்போது வருவான் என்பது உங்களுக்குத் தெரியாது (திருவிவிலியம்).

திருவருகைக் காலத்தில் நாம் விழிப்போடு காத்திருக் கின்றோமா...? இல்லையா...? நம் கடவுள் ஒரு தந்தையைப்போல நம்மை வரவேற்க விழிப்போடு காத்திருக்கிறார். நமது உள்ளங்களிலும், இல்லங்களிலும் தகுதியோடு விழிப்பாக இருந்து வரவேற்க, நம்பிக்கையோடு விழிப்பாயிருந்து செபிப்போம்.

அன்பை ஆடையாக அணிந்துகொண்டு இதயத்தில் விழிப்பு என்ற தோரணம் கட்டி இல்லங்களில் நம்பிக்கை என்ற விரிப்பு விரித்து இயேசுவை வரவேற்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் நினைவெல்லாம் இறை இயேசுவே

நம்பிக்கைக்குரிய (இரண்டாம் வாசகம்) கடவுள் நம்மைத் தேடிவரப் போகின்றார். அவரைக் குறித்து எசாயா முதல் வாசகத்தில், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை ; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன் ; நாங்கள் அனைவரும் உம்கைவேலைப்பாடுகளே (எசா 64:8) என்கின்றார். - எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறுவது போல, முற்காலத்தில் பலவகைகளில் இறைவாக்கினர் வழியாக நமது மூதாதையருடன் பேசிய கடவுள், நமது காலத்தில் தனது மகன் வழியாகப் பேசப்போகின்றார் (எபி 1:1-2).

கடவுள் நம்மை சந்திக்க வரும்போது நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று இயேசு நமக்கு இன்றைய நற்செய்தியின் வழியாக அறிவுறுத்துகின்றார்.

விழித்திருத்தல் என்றால் என்ன? என்பதை சுட்டிக்காட்ட இதோ ஒரு நிகழ்வு:

இளைஞன் ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று, நான் வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். ஞானியோ, நீ இருபத்திநான்கு மணி நேரமும் விழிப்பாயிரு என்றார்.

சற்று புரியும்படி சொல்லுங்களேன் என்றான் இளைஞன். சரி, என்று சொல்லி குளம் ஒன்றிற்கு அந்த இளைஞனை அந்த ஞானி அழைத்துச் சென்றார். தண்ணீரில் இருவரும் இறங்கினார்கள்.

திடீரென அந்த இளைஞனின் தலையை தண்ணீருக்குள் அமுக்கினார் அந்த ஞானி. இளைஞனோ திணறிக்கொண்டு வெளியே வர முயற்சித்தான். உடனே அவனுக்கு அந்த ஞானி விடுதலை அளிக்கவில்லை. சற்று நேரம் கழித்து அந்த இளைஞனின் தலைக்குச் சுதந்தரம் அளித்தார். அந்த இளைஞனின் தலை தண்ணீரைவிட்டு வெளியே வந்ததும் ஞானி, நீ தண்ணீருக்குள் இருந்தபோது உன் நினைவெல்லாம் எங்கே இருந்தது? என்றார். அவனோ, தண்ணீரைவிட்டு வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது என்றான். வேறு எதைப்பற்றியாவது நினைத்தாயா? என்றார் ஞானி, இளைஞனோ, இல்லை என்றான்.

அப்போது ஞானி, உன் எண்ணமெல்லாம் நீ எதை விரும்புகின்றாயோ அதன்பக்கம் மட்டுமே திரும்பியிருந்தால், எங்கும் எப்போதும் எதிலும் உன் அறிவு தூங்காமல் விழித்திருந்தால் நீ வெற்றி அடைவாய் என்றார்.

நமது மனம் ஒரு வெற்றுக் காகிதம் போன்றது. அதில் தூக்கம் என்று எழுதினால் நாம் தூங்கிவிடுவோம். விழிப்பு என்று எழுதினால் விழித்திருப்போம், வெற்றி பெறுவோம்.

இந்தத் திருவருகைக்காலத்திலே நாம் எப்போதும் இறை இயேசுவின் வருகையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த விழிப்புணர்வு நம்மை எல்லாவித தீய எண்ணங்களிலிருந்தும் தீய செயல்களிலிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் விடுவித்து, கடவுளை நாம் முறையாக வரவேற்க, நம்மையே நாம் தயாரித்துக்கொள்ள நமக்குப் பெரிதும் உதவும்.

நமது அன்றாட ஆன்மிக வாழ்க்கையில் சற்று கண்ணயர்ந்தாலும் போதும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோதிப்பவன். சாத்தான் தீய எண்ணங்கள் என்னும் விதைகளை நமது மனமென்னும் நிலத்தில் விதைத்துவிடுவான்.

கதையில் வந்த இளைஞன் முழுமூச்சோடு தண்ணீரைவிட்டு வெளியே வர ஏங்கியது போல நாமும் இயேசு ஆண்டவரைச் சந்திக்க எங்கும், எதிலும், எப்பொழுதும், என் நினைவெல்லாம் இயேசுவே என வாழ முன்வருவோம்..

மேலும் அறிவோம் :

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள் : 605).

பொருள் :
விரைந்து செய்யவேண்டிய செயலை மெதுவாகக் காலம் நீட்டித்துச் செய்வது, செய்யக் கருதிய செயலை மறப்பது, சோம்பிக் கிடப்பது, தூங்கித் தொலைவது ஆகிய நான்கும் அழிந்து போகும் இயல்புடையார் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் நினைவெல்லாம் இறை இயேசுவே

நம்பிக்கைக்குரிய (இரண்டாம் வாசகம்) கடவுள் நம்மைத் தேடிவரப் போகின்றார். அவரைக் குறித்து எசாயா முதல் வாசகத்தில், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை ; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன் ; நாங்கள் அனைவரும் உம்கைவேலைப்பாடுகளே (எசா 64:8) என்கின்றார். - எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறுவது போல, முற்காலத்தில் பலவகைகளில் இறைவாக்கினர் வழியாக நமது மூதாதையருடன் பேசிய கடவுள், நமது காலத்தில் தனது மகன் வழியாகப் பேசப்போகின்றார் (எபி 1:1-2).

கடவுள் நம்மை சந்திக்க வரும்போது நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று இயேசு நமக்கு இன்றைய நற்செய்தியின் வழியாக அறிவுறுத்துகின்றார்.

விழித்திருத்தல் என்றால் என்ன? என்பதை சுட்டிக்காட்ட இதோ ஒரு நிகழ்வு:

இளைஞன் ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று, நான் வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். ஞானியோ, நீ இருபத்திநான்கு மணி நேரமும் விழிப்பாயிரு என்றார்.

சற்று புரியும்படி சொல்லுங்களேன் என்றான் இளைஞன். சரி, என்று சொல்லி குளம் ஒன்றிற்கு அந்த இளைஞனை அந்த ஞானி அழைத்துச் சென்றார். தண்ணீரில் இருவரும் இறங்கினார்கள்.

திடீரென அந்த இளைஞனின் தலையை தண்ணீருக்குள் அமுக்கினார் அந்த ஞானி. இளைஞனோ திணறிக்கொண்டு வெளியே வர முயற்சித்தான். உடனே அவனுக்கு அந்த ஞானி விடுதலை அளிக்கவில்லை. சற்று நேரம் கழித்து அந்த இளைஞனின் தலைக்குச் சுதந்தரம் அளித்தார். அந்த இளைஞனின் தலை தண்ணீரைவிட்டு வெளியே வந்ததும் ஞானி, நீ தண்ணீருக்குள் இருந்தபோது உன் நினைவெல்லாம் எங்கே இருந்தது? என்றார். அவனோ, தண்ணீரைவிட்டு வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது என்றான். வேறு எதைப்பற்றியாவது நினைத்தாயா? என்றார் ஞானி, இளைஞனோ, இல்லை என்றான்.

அப்போது ஞானி, உன் எண்ணமெல்லாம் நீ எதை விரும்புகின்றாயோ அதன்பக்கம் மட்டுமே திரும்பியிருந்தால், எங்கும் எப்போதும் எதிலும் உன் அறிவு தூங்காமல் விழித்திருந்தால் நீ வெற்றி அடைவாய் என்றார்.

நமது மனம் ஒரு வெற்றுக் காகிதம் போன்றது. அதில் தூக்கம் என்று எழுதினால் நாம் தூங்கிவிடுவோம். விழிப்பு என்று எழுதினால் விழித்திருப்போம், வெற்றி பெறுவோம்.

இந்தத் திருவருகைக்காலத்திலே நாம் எப்போதும் இறை இயேசுவின் வருகையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த விழிப்புணர்வு நம்மை எல்லாவித தீய எண்ணங்களிலிருந்தும் தீய செயல்களிலிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் விடுவித்து, கடவுளை நாம் முறையாக வரவேற்க, நம்மையே நாம் தயாரித்துக்கொள்ள நமக்குப் பெரிதும் உதவும்.

நமது அன்றாட ஆன்மிக வாழ்க்கையில் சற்று கண்ணயர்ந்தாலும் போதும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோதிப்பவன். சாத்தான் தீய எண்ணங்கள் என்னும் விதைகளை நமது மனமென்னும் நிலத்தில் விதைத்துவிடுவான்.

கதையில் வந்த இளைஞன் முழுமூச்சோடு தண்ணீரைவிட்டு வெளியே வர ஏங்கியது போல நாமும் இயேசு ஆண்டவரைச் சந்திக்க எங்கும், எதிலும், எப்பொழுதும், என் நினைவெல்லாம் இயேசுவே என வாழ முன்வருவோம்..

மேலும் அறிவோம் :

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள் : 605).

பொருள் :
விரைந்து செய்யவேண்டிய செயலை மெதுவாகக் காலம் நீட்டித்துச் செய்வது, செய்யக் கருதிய செயலை மறப்பது, சோம்பிக் கிடப்பது, தூங்கித் தொலைவது ஆகிய நான்கும் அழிந்து போகும் இயல்புடையார் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விழித்திரு

இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம் ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார் "அழிவு சிதைவு இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம் புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது.

மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.

திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம் - விழிப்பாயிருங்கள் என்பதுதான் காரணம்? 'உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை.13:11)

போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.

- பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைச் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை சோகத்தை ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.

- இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன" (எசாயா 64:6)

- இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. "ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?” (எசாயா 53:7) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி "நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்" (எசா64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.

- களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக்குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?” (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு: திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: "ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!

ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்னேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' (தி.ப1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?

'விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர். எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:35)

சென்னையில் ஓர் அரசு அலுவலர் தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை மன்னியுங்கள். ஒர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்” என்பது கடித வாசகம், இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்.

குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.

"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை என்று யார் சொன்னது? விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முழுமையான ஞானத்துடன் முடிவைச் சந்திக்க...

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

நவம்பர் 26, 2004 கடந்த ஞாயிறு, தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக, நாகப்பட்டினத்தில் சுனாமி வரக்கூடும் என்ற வதந்தி வலம் வந்தது. கடவுளின் கருணையால் இந்த வதந்தி உண்மையாகவில்லை. பலருடைய மனங்களில் இந்த 26ம் தேதி, 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியை நினைவுக்குக் கொணர்ந்திருக்கும். அன்று, கிறிஸ்மஸ் முடிந்து அடுத்தநாள், ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல ஆசிய நாடுகளின் கடற்கரைகளைத் தாக்கிய சுனாமிப் பேரலைகள் அழிவுகளைக் கொணர்ந்தன. பல இலட்சம் மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட ஒரு பேரழிவு அது.

சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம், சூறாவளி என்று இயற்கையின் சீற்றங்கள் சூழும் வேளையில், இதுதான் உலகின் முடிவோ என்ற கேள்வியும் உடன் எழுகிறது. இயற்கை சீரழிவுகள் இல்லாத நேரங்களில், ஆண்டின் ஒரு சில நாள்களையொட்டி, உலகின் முடிவைக் குறித்த பேச்சு எழுகிறது.

2012ம் ஆண்டு நிறைவுக்கு வந்த வேளையில், நம்மில் ஒரு சிலர், அல்லது, பலர் கலக்கத்துடன் இருந்தோம். இந்த உலகம் முடியப்போகிறது என்ற கலக்கம் அது. ஆம், 21-12-2012 அதாவது 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி இந்த உலகம் முடியப்போகிறது என்று, மெக்சிகோ நாட்டின் பழம்பெரும் மாயன் கலாச்சாரத்தில் சொல்லப்பட்டிருந்ததாக யாரோ சொல்ல, அது பெரும் தாக்கத்தை மக்களிடையே உருவாக்கியது உண்மை.

மனித வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தி அடிக்கடி பேசப்பட்டுள்ளது.
· கி.பி. 204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர் அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு, அவர்கள், இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.
· கி.பி. 999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள், உரோம் நகரில், புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும் உலக முடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
· இருபதாம் நூற்றாண்டில் உலக முடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலக முடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள், நமக்கு அதிர்ச்சியைத் தந்தன.
· 1999ம் ஆண்டு முடிந்து 2000மாம் ஆண்டு ஆரம்பமாக இருந்தபோது, இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது, நமக்கு நினைவிருக்கலாம்.

இன்று தாய் திருஅவை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில், இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்தால், பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது. மாற்கு நற்செய்தி 13: 33-37

விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்துகொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது நல்ல பெயர் எடுக்கவேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை எல்லா நேரத்திலும் நானும் மதித்து நடந்து கொள்வதுதான் உண்மையான பொறுப்புணர்வு.

இத்தாலி நாட்டின் வடபகுதியில் Villa Asconti என்ற மிக அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச்சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்துவந்த இந்த மாளிகையும் தோட்டமும் ஒருவரது மேற்பார்வையில் எந்தக் குறையும் இல்லாமல் விளங்கியது. ஒருநாள் சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன" என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல முதலாளி எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார். "நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில் சொன்னார்.
12 ஆண்டுகளாய் ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த மேற்பார்வையாளரைப் போல் நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

தலைவன் வந்தாலும் சரி, வராவிடினும் சரி என்று தன் பணிகளை ஒழுங்காகச் செய்த இவர், மற்றொரு சம்பவத்தை நினைவுறுத்துகிறார். 20th Century Fox என்ற திரைப்பட நிறுவனம் 'விற்பனை செய்யும் திறமை பெற்றவர் ஒருவர் தேவை' என்று ஒருமுறை விளம்பரம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்திற்குப் பதில் அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி அனுப்பியிருந்த பதில் நிறுவனத்தினரின் கவனத்தை ஈர்த்தது. "நான் தற்போது ஒரு கடையில் மேசை, நாற்காலிகள் விற்கும் பணி செய்து வருகிறேன். இந்தக் கடைக்கு நீங்கள் வந்தால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இங்கிருக்கும் பணியாளர்களில் எனக்கு மட்டுமே தலைமுடி சிவந்த நிறத்தில் உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் கடைக்கு வந்து, நான் பணிசெய்யும் விதத்தைக் கவனிக்கலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நன்மதிப்பைப் பெறும் வகையில், நீங்கள் வரும் நேரம் மட்டும் நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. நான் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் திறமையையே நீங்கள் வரும் நாளிலும் நான் வெளிப்படுத்துவேன். அந்தத் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு உங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுங்கள்" என்று அந்தப் பெண் எழுதியிருந்தார். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த பல ஆயிரம் பேரில் அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லவும் வேண்டுமா?

ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், பிறரது கவனம் நம்மீது இருக்கிறது என்பதை உணரும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், வித்தியாசமாக இருக்கும். அதுவும் நாம் சந்திக்கச் செல்வது, மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நாம் நடந்துகொள்வோம். கைக்குழந்தைகளிடமும், மிகவும் வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிடமும் இந்த மாறுதல்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள், எந்த நேரத்திலும், ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன், ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாக வேண்டும்.

புனித பிலிப் நேரி அவர்கள், "A joyful heart is more easily made perfect than a downcast one." "துக்கத்தில் வாழும் ஒரு மனதைவிட, மகிழ்வுடன் வாழும் மனம், எளிதில் உன்னதத்தை அடையும்" என்ற விருதுவாக்குடன் வாழ்ந்தவர். நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப்பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ சாகப்போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். ஒரு சில நொடிகள் சிந்தித்த பிலிப், அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம்.

சாவை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, சாவைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்ல விதமாக, பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எந்த வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு புனித பிலிப் நேரி அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு. சாவின் வழியாகத் தன்னைச் சந்திக்கப்போவது அல்லது தான் சென்றடையப் போவது இறைவன் தான் என்றான பிறகு ஏன் பயம், பரபரப்பு எல்லாம்? தேவையில்லையே. பிலிப் நேரியைப் பொருத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர் சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். வாழ்க்கையில் இறைவனை அடிக்கடி சந்தித்து வந்த பிலிப்புக்கு பயம் பரபரப்பு எதற்கு? இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல.

ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன் சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச்செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவற்றை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"விழிப்பாயிருங்கள்: எதிர்பார்ப்பின் காலம் தொடங்கிவிட்டது!"

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு (First Sunday of Advent). இன்றைய தினத்தில் ஒரு புதிய திருவழிப்பாட்டு ஆண்டைத் தொடங்குகிறோம். இது காத்திருப்பதற்கும், நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குமான காலம்.இன்றைய நற்செய்தியில் (மாற்கு 13:33-37) இயேசு விடுக்கும் ஒரே அழைப்பு: "விழிப்பாயிருங்கள்!" (Be Watchful! Be Alert!).
1. வானத்தைப் பிளந்து வாரும் (The Longing for God)
முதல் வாசகத்தில் (ஏசாயா 63-64) இறைவாக்கினர் உருக்கமாகச் செபிக்கிறார்: "ஆண்டவரே, நீர் வானத்தைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?" நாம் செய்த பாவங்களால் நாம் காய்ந்துபோன இலைகளைப் போல இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்கிறார்.
• சிந்தனை: திருவருகைக் காலம் என்பது நம்முடைய இயலாமையை ஒப்புக்கொண்டு, இறைவனின் வருகைக்காக ஏங்குவதாகும். "ஆண்டவரே, என் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது, நீரே ஒளியாக வாரும்" என்ற ஏக்கமே இந்த வாரத்தின் தொடக்கம்.

2. களிமண்ணும் குயவனும் (The Potter and the Clay)

ஏசாயா ஒரு அழகான உருவகத்தைச் சொல்கிறார்: "ஆண்டவரே, நீர் எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்." * விளக்கம்: களிமண் குயவனின் கையில் மென்மையாக இருந்தால் தான் அழகான பாண்டமாக மாற முடியும். நாமும் கர்வத்தைக் குறைத்து, இறைவனின் விருப்பத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம்மை ஒரு புனிதமான பாத்திரமாக மாற்றுவார்.

3. விழிப்பாயிருங்கள்: கதவு எப்போது திறக்கும்? (The Watchful Servant)

இயேசு ஒரு வீட்டின் உரிமையாளர் தன் ஊழியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் பயணம் செல்வதை உதாரணமாகக் கூறுகிறார். அவர் மாலையிலோ, நள்ளிரவிலோ அல்லது விடியற்காலையிலோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். • பாடம்: விழிப்பாய் இருப்பது என்பது தூங்காமல் இருப்பது அல்ல, மாறாக "ஆயத்தமாக" இருப்பது. நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் (அன்பு, நீதி, செபம்) சரியாகச் செய்து கொண்டிருந்தால், அவர் எப்போது வந்தாலும் அது நமக்கு மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் நாம் செய்ய வேண்டியவை:
• திருவருகைக் கால வளையம் (Advent Wreath): இன்று உங்கள் இல்லங்களிலும் ஆலயத்திலும் திருவருகைக் கால வளையத்தின் முதல் ஊதா நிற மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
இது "எதிர்பார்ப்பின்" அடையாளம். அந்த மெல்லிய ஒளி உங்கள் உள்ளத்தின் இருளை அகற்றட்டும்.
• விழிப்பான செபம்: இந்த வாரம் அதிகாலையில் அல்லது இரவு உறங்குவதற்கு முன் ஒரு 5 நிமிடம் அமைதியாக இருந்து, "ஆண்டவரே, வாரும்" (Maranatha) என்று செபியுங்கள்.
• மனந்திரும்புதல்: குயவனின் கையில் இருக்கும் களிமண் போல நம்மை மாற்றிக்கொள்ள, ஒரு நல்ல ஒப்புரவு அருட்சாதனத்திற்கு (Confession) நம்மைத் தயார் செய்வோம்.
• பகிர்வு: காத்திருத்தல் என்பது வெறுமனே அமர்ந்திருப்பது அல்ல; தேவையிலுள்ளவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவனின் வருகையை அர்த்தமுள்ளதாக்குவோம்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"திருவருகைக் காலம் என்பது வெறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தயாரிப்பு அல்ல, அது நம் இதயத்தில் இயேசு மீண்டும் பிறப்பதற்கான தயாரிப்பு. தூக்கத்திலிருந்து விழிப்போம்; நம் வாழ்வின் குயவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்போம்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்காலம்‌ முதல்‌ ஞாயிறு - முதல் ஆண்டு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 6:7 - 64:12)

பழைய ஏற்பாட்டில்‌ காணப்படும்‌ மேலான பல மன்றாட்டுகளில்‌ இதுவும்‌ ஒன்றாகும்‌. திருவருகைக்‌ காலத்தின்‌ அடிப்படையான நம்பிக்கையை இம்மன்றாட்டு வலியிறுத்துகிறது. கடவுளை நம்பி னோர்‌ கைவிடப்படாரென்ற கருத்து இம்மன்றாட்டில்‌ இழையோடு கிறது. இது பாபிலோனிய அடிமை நிலையில்‌ (கி.மு. 587) பாடப்பட்டது. இஸ்ராயேல்‌ மக்கள்‌ இறைவன்‌ தங்கள்‌ மீது காட்டிய அன்பினை நினைத்துப்‌ பார்த்து தங்கள்‌ குற்றங்களுக்காக மனம்‌ வருந்துகின்றனர்‌. இந்நிலையில்‌ இஸ்ராயேலருக்கு உறுதுணையாக வரக்கூடியவர்‌ இறைவன்‌ ஒருவரே. பிள்ளையின்‌ அழுகுரல்‌ கேட்டு ஓடோடி வந்து உதவும்‌ உறுதுயர்‌ தந்‌்தைபோல இறைவன்‌ அவர்களை மறந்துவிடவில்லை. “எங்களுக்கு மீட்பு கிடைக்குமா?” என்ற கேள்வி கணையுடன்‌ இஸ்ராயேல்‌ மக்கள்‌ ஏங்கி தவிப்பதை படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறது முதல்‌ வாசகம்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (1கொரி. 1:3-9)

தூய பவுல்‌ கிறித்தவ சமூகத்திற்கும்‌ தன்னுடைய பணிக்கும்‌ தொடர்புடைய சொற்‌ றொடர்களைப்‌ பயன்படுத்‌துகிறார்‌. கொரிந்தியருக்கு இறைவன்‌ செய்த, செய்யவிருக்கும்‌ நன்மைகளை எடுத்துக்‌ கூறி, அவற்றிக்காக தூய பவுல்‌ இறைவனுக்கு நன்றி கூறுகிறார்‌. இயேசு கிறிஸ்துவில்‌ அவர்களுக்கும்‌ பவுலுக்கும்‌ உள்ள உறவைப்‌ பற்றி கூறி அனைவரும்‌ ஒரே இறைவனின்‌ குழந்தைகள்‌ என்பதை உணர்த்துகிறார்‌. ஏனெனில்‌ அனைவரும்‌ இயேசுவால்‌ அழைக்கப்பட்டுள்ளோம்‌; அவரால்‌ புனிதப்படுத்தப்பட்டுள்ளோம்‌. இறுதியாக நன்றியறிதலுடன்‌ நிறைவு செய்கிறார்‌. தான்‌ ஒரு குழப்பத்தின்‌ மத்தியில்‌ இருக்கும்‌ குழுமத்திற்கு எழுதுகிறேன்‌ என்பதை உணர்ந்தே எழுதுகிறார்‌. இருந்த போதிலும்‌ இறைவன்‌ பெயரால்‌ அவர்கள்‌ பெற்ற நலன்களுக்கு அவர்‌ நன்றி கூறுகிறார்‌. ஆனால்‌ இதுவே அவர்களிடம்‌ பிரிவினையை ஏற்படுத்தியது. ஆகவே தூய பவுல்‌, அவர்கள்‌ அடைந்த அனைத்து கிருபைகளும்‌ இயேசுவிடமிருந்தே வந்தன என்பதை வலியுறுத்துகிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 13:33-37)

இந்த பகுதியில்‌ “விழிப்பாயிருங்கள்‌' என்ற கருத்து மையமாக உள்ளது. விழிப்பாயிருத்தல்‌ என்றால்‌ எந்த நேரத்திலும்‌ மனம்‌ தளராது, எதிர்பார்ப்புடன்‌ வாழ்தலே ஆகும்‌. இன்றைய நற்செய்தி, இறை இயேசுவின்‌ வருகைக்காக விழிப்பாயிருக்க அழைப்பு விடுக்கிறது. அவர்‌ வரும்‌ நேரம்‌ யாருக்கும்‌ தெரியாது. ஆகவே அன்றாடம்‌ நம்‌ கடமைகளை நிறைவேற்ற வேண்டும்‌. நம்‌ வாழ்வு முழுவதும்‌ நம்‌ இயேசுவிற்காக காத்திருக்க வேண்டும்‌ என்ற கருத்து பரவலாகக்‌ காணப்படுகின்றது. இயேசு தம்‌ சீடர்களை தயார்‌ செய்யும்‌ விதமாக இந்த மறையுரையை வழங்குகிறார்‌.

மறையுரை

அவரவர்‌ பணி செய்தலே விழிப்பாயிருத்தல்‌

ஒரு பங்கில்‌ பாட்டி ஒருவர்‌ இருந்தார்‌. அவரிடம்‌ யாரைப்பற்றிக்‌ கேட்டாலும்‌ நல்லதாகத்தான்‌ சொல்லுவார்‌. இளைஞர்கள்‌ சிலர்‌ தங்களுக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்‌ கொண்டனர்‌. ஒரு இளைஞன்‌ இன்று பாட்டி வாயால்‌ “கெட்டவன்‌” என்று சொல்ல வைக்கிறேன்‌ என்று ரூ.100யை பந்தயம்‌ கட்டினான்‌. பாட்டியிடம்‌ சென்று அவன்‌ நீங்கள்‌ பேயைப்‌ பற்றி என்ன நினைக்கீறிர்கள்‌? என்று கேட்டான்‌. அதற்கு பாட்டி “தம்பி பேய்‌ எப்போதும்‌ தன்‌ வேலையில்‌ சுறுசுறுப்பாய்‌ இருக்கிறது” என்றார்‌.

சாத்தான்‌ எப்போதும்‌ தன்‌ வேலையில்‌ சுறுசுறுப்பாய்‌ இருக்கிறது. அதனால்தான்‌ இன்றும்‌ இந்நேரத்திலும்‌ தீமை, துன்பம்‌, கொடுமை போன்றவை அனைத்தும்‌ நம்‌ மத்தியில்‌ தலைவிரித்தாடு கின்றன. உலகம்‌ படைக்கப்பட்ட காலம்‌ முதற்கொண்டு பணி செய்யத்‌ தொடங்கிய சாத்தான்‌, இன்றும்‌ இவ்வேளையிலும்‌ தன்‌ பணியைச்‌ செய்து கொண்டு இருக்கிறான்‌.

நம்‌ குறைகளை அறிதலே விழிப்புணர்வின்‌ முதற்படி

இன்றையக்‌ காலக்கட்டத்தில்‌ மனித வாழ்வுக்குத்‌ தேவை: யான இன்றியமையாத மதிப்பீடுகளில்‌ ஒன்றாகக்‌ கலந்து அதுவே வாழ்வாகி விட்டது. எது பாவம்‌? என்ற கேள்வி நம்முள்ளே எழுகிறது. மனிதர்களிடையே குற்றமற்ற மனப்பாண்மை நிலவி வருகிறது. கொலை செய்தாலும்‌ கடவுள்‌ முன்‌ தன்‌ குற்றத்தை ஏற்காத காயினைப்‌ போல பல வேளைகளில்‌ நாமும்‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்‌. இன்றைய முதல்‌ வாசகத்திலே இஸ்ராயேல்‌ மக்கள்‌ தாங்கள்‌ செய்த குற்றங்களை கடவுள்‌ முன்‌ ஏற்று பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்‌. அவர்கள்‌ கடவுள்‌ மீது கொண்ட நம்பிக்கையை இழந்தார்கள்‌. நேர்மையாளர்களாக வாழந்திட தவறினார்கள்‌. கடவுளின்‌ திட்டத்தை மாற்றினார்கள்‌. அவருடைய நாமத்தை மறந்தார்கள்‌. கடவுளைப்‌ பற்றிக்‌ கொள்ளாமல்‌ வாழ்ந்தார்கள்‌. தீச்‌ செயல்களின்‌ அடிமைகளாக வாழ்ந்தார்கள்‌. நாமும்‌ பல வேளைகளில்‌ நம்முடைய பலவீனங்களாலும்‌, சுய நலன்களாலும்‌ இஸ்ராயேல்‌ மக்களைப்‌ போல்‌ தவறுகள்‌ செய்து இருப்போம்‌. எனவே அவர்களைப்‌ போல நாமும்‌ “கடவுளே கடுஞ்சினம்‌ கொள்ளாதிரும்‌, குற்றத்தை என்றென்றும்‌ நினையாதிரும்‌, உம்‌ மக்களாகிய எங்கள்‌ அனைவரையும்‌ கண்ணோக்கும்‌' என்று இறைவனிடம்‌ மன்றாடுவோம்‌. நம்‌ குற்றங்களை ஏற்று நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக்‌ கொள்வோம்‌.

கடவுளிடம்‌ இணைதலே விழிப்பாயிருத்தலின்‌ 2-ஆம்‌ படி

“கிளைகள்‌, திராட்சை செடியோடூ இணைந்திராவிடில்‌ தாணக. கனிதர இயலாது. அதுபோல நீங்களும்‌ என்னோடு இணைந்திருந்தால்‌ அன்றி கனிதர இயலாது' (யோவான்‌ 15:4). என்கிறார்‌ இயேசு. இறைமகன்‌ இயேசுவுடன்‌ இணையாவிடில்‌ நாம்‌. கனிதர இயலாது. நம்‌ குறைகளை தன்‌ தோளில்‌ சுமந்து நமது. வாழ்வை சீராக்குபவர்தான்‌ நம்‌ இறைமகன்‌ இயேசு. இதைதான்‌ தூய பவுல்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகத்தில்‌ குறிப்பிடுகிறார்‌. கடவுள்‌ நம்பிக்கைக்குரியவர்‌, தம்‌ மகனும்‌ நம்‌ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்‌ நட்புறவில்‌ பங்கு பெற உங்களை அழைத்துள்ளார்‌ செய்யவேண்டும்‌. இதனால்‌ நம்மை சந்திக்க வரும்‌ இறைவன்‌ பெரும்‌ மகிழ்ச்சி கொள்வார்‌.

நம்‌ குறைகளை அறிதலே விழிப்புணர்வின்‌ முதற்படி இன்றையக்‌ காலக்கட்டத்தில்‌ மனித வாழ்வுக்குத்‌ தேவை: யான இன்றியமையாத மதிப்பீடுகளில்‌ ஒன்றாகக்‌ கலந்து அதுவே வாழ்வாகி விட்டது. எது பாவம்‌? என்ற கேள்வி நம்முள்ளே எழுகிறது. மனிதர்களிடையே குற்றமற்ற மனப்பாண்மை நிலவி வருகிறது. கொலை செய்தாலும்‌ கடவுள்‌ முன்‌ தன்‌ குற்றத்தை ஏற்காத காயினைப்‌ போல பல வேளைகளில்‌ நாமும்‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்‌. இன்றைய முதல்‌ வாசகத்திலே இஸ்ராயேல்‌ மக்கள்‌ தாங்கள்‌ செய்த குற்றங்களை கடவுள்‌ முன்‌ ஏற்று பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்‌. அவர்கள்‌ கடவுள்‌ மீது கொண்ட நம்பிக்கையை இழந்தார்கள்‌. நேர்மையாளர்களாக வாழந்திட தவறினார்கள்‌. கடவுளின்‌ திட்டத்தை மாற்றினார்கள்‌. அவருடைய நாமத்தை மறந்தார்கள்‌. கடவுளைப்‌ பற்றிக்‌ கொள்ளாமல்‌ வாழ்ந்தார்கள்‌. தீச்‌ செயல்களின்‌ அடிமைகளாக வாழ்ந்தார்கள்‌. நாமும்‌ பல வேளைகளில்‌ நம்முடைய பலவீனங்களாலும்‌, சுய நலன்களாலும்‌ இஸ்ராயேல்‌ மக்களைப்‌ போல்‌ தவறுகள்‌ செய்து இருப்போம்‌. எனவே அவர்களைப்‌ போல நாமும்‌ “கடவுளே கடுஞ்சினம்‌ கொள்ளாதிரும்‌, குற்றத்தை என்றென்றும்‌ நினையாதிரும்‌, உம்‌ மக்களாகிய எங்கள்‌ அனைவரையும்‌ கண்ணோக்கும்‌' என்று இறைவனிடம்‌ மன்றாடுவோம்‌. நம்‌ குற்றங்களை ஏற்று நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக்‌ கொள்வோம்.‌

கடவுளிடம்‌ இணைதலே விழிப்பாயிருத்தலின்‌ 2-ஆம்‌ படி

“கிளைகள்‌, திராட்சை செடியோடூ இணைந்திராவிடில்‌ தாணக. கனிதர இயலாது. அதுபோல நீங்களும்‌ என்னோடு இணைந்திருந்தால்‌ அன்றி கனிதர இயலாது' (யோவான்‌ 15:4). என்கிறார்‌ இயேசு. இறைமகன்‌ இயேசுவுடன்‌ இணையாவிடில்‌ நாம்‌. கனிதர இயலாது. நம்‌ குறைகளை தன்‌ தோளில்‌ சுமந்து நமது. வாழ்வை சீராக்குபவர்தான்‌ நம்‌ இறைமகன்‌ இயேசு. இதைதான்‌ தூய பவுல்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகத்தில்‌ குறிப்பிடுகிறார்‌. கடவுள்‌ நம்பிக்கைக்குரியவர்‌, தம்‌ மகனும்‌ நம்‌ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்‌ நட்புறவில்‌ பங்கு பெற உங்களை அழைத்துள்ளார்‌ என்று கூறுகிறார்‌. இன்று நாம்‌ அனைவரும்‌ இறைவனுடன்‌ இணைய அழைக்கப்பட்டிருக்கிறோம்‌. இவ்வாறு இயேசுவோடு இணைய அவரது வார்த்தைக்கு முதலிடம்‌ கொடுக்கக்‌ கற்றுக்கொள்வோம்‌. அவரையே நம்‌ தலைவராக ஏற்றுக்கொள்வோம்‌.

அவரவர்‌ பணி செய்தலே விழிப்பாயிருத்தல்‌

நம்‌ குறைகளைக்‌ களைந்து இறைமகன்‌ இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நாம்‌, இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ கூறுவது போல கிறிஸ்துவுடன்‌ இணைக்கப்பெற்று சொல்வன்மையும்‌ நிறையறிவையும்‌ பெற்று நாம்‌ நம்‌ வாழ்விலே அதை நிருபிக்க வேண்டும்‌. நாம்‌ ஒவ்வொருவரும்‌ குடும்பத்திலே தந்தையானவர்‌, தூாயானவர்‌, சொல்வன்மையுடனும்‌, நிறை அறிவுடனும்‌ கடவுள்‌ மீது நம்பிக்கைக்‌ கொண்ட கணவனாக, தந்தையாக, மனைவியாக, தாயாக, குறிப்பாக நேர்மையான கணவணக, மனைவியாக கடவுள்‌ திட்டத்தை வாழ்வில்‌ நடைமுறைப்படுத்தும்‌, மொத்தத்தில்‌ நல்ல மனிதர்களாக அவரது வார்த்தையின்படி வாழுகிற மக்களாக வாழ்ந்து அதன்படி நம்‌ பணியை செய்தலே விழிப்பாயிருத்தல்‌.

விழிப்பாய்‌ இருந்தார்‌ நம்‌ மீட்பர்‌
மீட்பு பிறந்தது. 
நாம்‌ விழிக்க போவது எப்போது??
அதற்கான அருள்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌


🕇 நமது ஒன்றுமில்லாமையை உணர்ந்து கடவுள்‌ மீது நம்பிக்கை வைத்து வாழ்வது.
🕇சிந்தனை, சொல்‌, செயல்‌, உடல்‌, ஆவி அனைத்திலும்‌ பரிசுத்தமாய்‌ இருத்தல்‌,
🕇 கடந்தது கடந்துவிட்டது, எதிர்‌ காலம்‌ நமது கையில்‌ இல்லை,
🕇நிகழ்‌ காலம்‌ நம்முடையது நன்மை செய்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு முதல் ஆண்டு

இன்று அன்னையாம் திருஅவை ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் தொடங்குகின்றது. அதன் முதல் பகுதியாக திரு வருகைக் காலம் அமைகின்றது. இந்தத் திருவருகைக் காலம் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவிற்கான உடனடித் தயாரிப்புக் காலமாக அமைந்தாலும் அதன் உண்மையான நோக்கம் இன்னும் ஆழமானது, விசாலமானது. அதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குக் கோடிட்டு காட்டுகின்றன.

இன்றைய முதல் வாசகம் மெசியாவின் வருகைக்காகக் காத்திருக்கும் எசாயாவின் வார்த்தைகளாக அமைகின்றன. "உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?” தொடர்ந்து மெசியாவின் காலம் எப்படி இருக்கும் என விவரிக்கின்றது. இரண்டாம் வாசகம் கொரிந்து திருஅவையின் நம்பிக்கை ஒன்றை வெளிப்படுத்து கின்றது. தொடக்கக் கிறிஸ்தவர்கள் 'ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருப்பதாக' தெரிவிக்கின்றார் புனித பவுலடியார். ஆக, இரு வாசகங்களும் இருவேறு வருகை களைப்பற்றி குறிப்பிடுகின்றன. நற்செய்தியோ இவற்றோடு ஒட் டாததுபோல தோன்றுகின்றது. இதை சரிவரப் புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னணித் தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாக விளக்கிவிட்டு இறுதியில் இன்றைய நற்செய்தியின் பொருள் என்னவெனக் காண்போம்.

இன்றைய நற்செய்திப் பகுதியானது இலக்கியவகை எனப் பார்க்கும்போது 'வெளிப்பாட்டு இலக்கிய' வகையைச் சார்ந்தது ஆகும். இவ்வகை இலக்கியம் எதிர்காலத்தைப் பற்றியும், கடவுளின் செயல்பாடுகளைப் பற்றியும் உருவகங்கள், காட்சிகள், கனவுகள் ஆகியவற்றை கொண்டு விளக்க முற்படுகின்றது. புதிய ஏற்பாட்டின் 'திருவெளிப்பாட்டு' நூல் இத்தகைய இலக்கிய நடையில் எழுதப் பட்டுள்ளது.

இதன் அரசியல் சமூக சூழலை வைத்துப் பார்க்கின்றபோது இவை ‘ஆற்றலிழந்தவர்களின் இலக்கியம்' எனப்படுகின்றது. அதாவது அரசியல், இராணுவ மற்றும் பொருளாதாரச் செல் வாக்குள்ள அரசர்களையும், கொடுங்கோலர்களையும் அதே ஆற்றலைக் கொண்டு எதிர்த்து வீழ்த்த இயலாத அடிமைப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களிடையே உருவாவது இந்த இலக்கியம். இதன் மையச் செய்தி 'ஆற்றல் மிக்க இறைவன் ஒதுக்கப்பட்டு, நீதி புறக்கணிக்கப்பட்டு இருக்கும் நீதிமான்கள் பக்கம் நின்று, கொடுங்கோலரை அழித்து மீண்டும் ஒரு பொற்காலத்தை உருவாக்குவார்' என நம்புவதாகும். அது நாள்வரை நீதிமான்கள் தங்கள் நம்பிக்கையில் தளராமல், விழித்திருந்து அதில் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறுவதாகும்.

மாற்கு நற்செய்தியின் பதின்மூன்றாம் அதிகாரம் முழுவதும் இந்த இலக்கிய வகையில் அமைந்திருக்கின்றது. எருசலேம் ஆலயத்திற்கு ஏற்பட இருக்கும் அழிவைப் பற்றி இயேசு கூறும் பின்னணியில் இவை அனைத்தும் கூறப்படுகின்றன. இதனடிப் படையில் மாற்கு பதின்மூன்றாம் அதிகாரத்தின் செய்திகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்.


பகுதி 1: போலி மெசியாக்களின் தோற்றம்- சீடருக்கு ஏற்படவிருக்கும் துன்பங்கள் (வச. 5-13).
பகுதி 2: நடுங்க வைக்கும் தீர்ப்பினால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் போலி மெசியாக்கள், போலி இறைவாக்கினர் (வச. 14-23).
பகுதி 3 : இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் காப்பாற்றப்படல் (வச. 24-27).
பகுதி 4: உவமைகள் வாயிலாக இறைத்திட்டத்தில் நம்பிக்கை கொள்ளவும், விழிப்பாயிருக்கவும் அழைப்பு (வச. 28-37).

இன்றைய நற்செய்திப் பகுதி இந்த அதிகாரத்தின் இறுதியில் மேற்கூறியவை (பகுதி 1-3) நிகழும்போது நம்பிக்கையாளர்கள் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றது. இந்த இறுதிப் பகுதியை மேலும் பின்வருமாறு பிரிக்கலாம்.


உவமை( வச. 28-29).
நேரத்தைப் பற்றிய குறிப்பு (வச. 30).
இறைவார்த்தையின் அதிகாரம் (வச. 31).
நேரத்தைப் பற்றிய குறிப்பு (வச. 32).
உவமை (வச. 33-37).

எனவே, இந்த இறுதிப் பகுதியின் மைய செய்தி இறைவன் மீதும், அவர் தந்த வாக்குறுதியின் மீதும், அவரது வார்த்தையின் மீதும் நம்பிக்கைகொள்ள அழைக்கின்றது. ஏனெனில் "மிகுந்த வல்லமையோடும், மாட்சியோடும் மானிட மகன் மேகங்கள்மீது வருவார்" (வச. 26). எனவே, இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருப்பதே இந்தப் பகுதியின் முதல் செய்தி.

இரண்டாவதாக, இந்த நம்பிக்கையோடு இவ்வுலகில் வாழும்போது நம்பிக்கையாளர் துன்பங்களையும், போராட்டங் களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், போலி மெசியாக்கள், போலி இறைவாக்கினர்களால் தவறாக வழிநடத்தப்பட நேரிடலாம். அந்நேரங்களிலெல்லாம் அவர்கள், 'கவனமாயும், விழிப்பாயும்' இருக்க வேண்டும் (வச. 33). இந்த 'விழிப்பாயிருங்கள்' எனும் கட்டளை இன்றைய நற்செய்திப் பகுதியிலேயே மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது (வச. 33, 35, 37). இன்றைய நற்செய்திப் பகுதிக்குமுன் இதே அதிகாரத்தில் மூன்று முறை கவனமாயிருப்பது பயன்படுத்தப்பட்டுள்ளது (வச. 5, 9, 23). ஆக மொத்தம் இந்த இரண்டாம் வருகையின் காலம்வரை இறைமக்கள் கவனமாயும், விழிப்பாயுமிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும். இதை விடுத்து, அந்த நேரத்தைக் கணிக்கும் யுக்திகளில் ஆருடங்களில் காலத்தை விரயமாக்கக்கூடாது.

எனவே, திருவருகைக் காலம் என்பது இயேசுவின் பிறப்புப் பெருவிழாவிற்கு நம்மை தயாரிப்பதோடு, இயேசு பிறந்து, பணி செய்து இறையாட்சியைத் தொடங்கி வைத்துள்ளார். அவரின் மாட்சியின் இரண்டாம் வருகையின்போது அந்த இறையாட்சி நிறைவுக்கு வரும், அதற்காக, அது நாள் வரை நாம் விழிப்போடும், கவனமாயும் இருந்து அந்த இறையாட்சியின் நிறை வருகைக்காய் தொடர்ந்து உழைக்கும் பணியாளர்களாய் (வச. 34) இருக்கும்படி நம்மை அழைக்கின்றது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு முதல் ஆண்டு

முதல் வாசகம் : எசா 2: 1-5

அமைதி தருவார் மெசியா

இன்று வாசிக்கப்படும் இவ்வாசகம் பபிலோனியப் படையெடுப்பால் எருசலேம் அழிவுற்றபின் (கி.மு. 587) எழுதப்பட்டது. புதிய எருசலேம், அதனின்று பிறக்கும் சமாதானம் ஆகியவை பற்றி இங்கு விவரிக்கிறார். அமைதியும் சமாதானமும் நிரம்பிய புத்துலகப் படைப்புக்கு மேற்கோளாக, ஐக்கிய நாடுகளின் சபை, எசா. 2 4-ஐச் சுட்டிக்காட்டுகிறது. "அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள் களாகவும் அடித்துக்கொள்வார்கள். ஓர் இனத்தாருக்கு எதிராக வேறோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள்” (மிக்கா இறைவாக்கினர் 4: 1-4-ம் எசாயா 2:1-5-ம் ஏறத்தாழ ஒரே சொற்களை உடையன).

மீட்பு அளிப்பார் மெசியா

இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கும் திருச்சபை புதிய எருசலேமை நம் கண்முன் வைக்கிறது. இங்கு “ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள (சீயோன்) மலை," "ஆண்டவரின் மலை”, “யாக்கோபின் கடவுளது கோயில்", “சீயோன்”, என்று எருசலேம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இஸ்ரயேலருக்கு (நமக்கும்) மீட்பு இறைவனிடமிருந்தே, அவர் வதியும் "சீயோன் மலையிலிருந்தே" வருகிறது. "மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்; 'உதவி எனக்கு எங்கிருந்து வரும்?' என்றேன்" (திபா 121: 1) என்ற வினாவுக்கு திருப்பாடல் ஆசிரியர், "உதவி எனக்கு ஆண்டவரிடம் இருந்தே வரும்" (திபா 121: 2) என்று பதில் கூறியதுபோல, "சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிப்படும்" "எருசலேமிருந்தே ஆண்டவர் வாக்குப் புறப்படும்” என்று கூறி இறைவன் தரும் மீட்பை நம்பிக்கையுடள் எதிர்பார்க்க எசாயா அழைக்கிறார்.

“நம்பினார்க்கருள் செய்யும் அந்தணர்" நம் இறைவன்.
- சுந்தரர் தேவாரம்

ஆம், திருவருகைக் காலம் நம்பிக்கைக் காலம். அனைவருக்கும் உண்டு மீட்பு இறைவன் அளிக்கும் இம்மீட்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேலுக்கு மட்டுமன்று; புறவினத்தாருக்கும் இதில் பங்குண்டு. "மக்களினங்கள்" "பலநாட்டு மக்கள்” அனைவரும் இறைவனிடம் வந்து அவருடைய வழிகளைக் கற்றுக்கொள்வர். இறைவனும் இஸ்ரயேலருக்குச் செய்தது போன்று, இவர்களுக்கும் நீதியும் அமைதியும் சமாதானமும் வழங்குவார். கிறிஸ்து தமது பிறப்பால் கொண்டு வந்த சமாதானம் (லூக் 2:14) கிறிஸ்த வர்களுக்கு மட்டுமே உரிய தனியுடைமையன்று; அனைவருக்குமுரிய அருட்கொடை. எனவே, திருவருகைக் காலத்தில் நமது செபங்களிலும் தியானங்களிலும் பிற மக்களின் மீட்பு, சமூக நீதி, உலக அமைதி ஒரு முக்கிய இடம் பெற வேண்டும்.

செபம், தவம், அன்பு செய்வோம்

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக " (லூக் 2:14) என்று இயேசுவின் பிறப்பின்போது விண்ணவர் திரள் பாடியது. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, மக்களிடை நீடிய அமைதியே இறைவனின் திட்டமாகும். அமைதியில்லா உலகு அழிந்துவிட்ட உலகு. அமைதியில்லா உள்ளம் அழிந்துபட்ட உள்ளம். இறைவனே தரும் இவ்வமைதியை அடைய “ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்ல வேண்டும்"; "ஓடிச் செல்ல வேண்டும்." ஆம், விடாமுயற்சி, (செபம், தவம், ஒறுத்தல், அன்பு ஆகியவை) தேவை. "செப்புவதெல் லாம்செபம் நான் சிந்திப்ப தெல்லாம்நின் ஒப்பில் தியானமென ஒர்ந்தேன்; பராபரமே!" - தாயுமானவர்

நம்மிடமுள்ள வாள்கள், ஈட்டிகள் ஆகிய சுயப்பற்று, அநீதியான வாழ்வு, தீய குணங்கள் முதலியவற்றை அடித்து ஒடுக்க வேண்டும். கலப்பைக் கொழுக்கள், அரிவாள்கள் ஆகிய பிறருக்கு நன்மை பயக்கும் அன்பு, நீதி, நேர்மையான வாழ்வு இவற்றைப் பேணி வளர்க்க வேண்டும். அப்போது தான் நாம் ஆண்டவரின் ஒளியிலேயும் நெறிகளிலேயும் நடந்து, அவருடைய திருவருகைக்கு உண்மையிலேயே நம்மைத் தயார் செய்கிறவர்களாவோம்.

ஆண்டவரின் ஒளியிலே நாம் நடப்போம்.

இரண்டாம் வாசகம் : உரோ 13:11-14

கிறிஸ்தவர் ஒளியில் வாழ வேண்டியவர்

“இருள் நீங்கி இன்பம் பயக்கும்" வாழ்வு அவனது. (குறள் 352)

எனவே, இருளாகிய பாவ வாழ்வை விட்டகன்று இயேசு கிறிஸ்துவாகிய ஒளியை அணிந்துகொள்ள வேண்டும். புனித அகுஸ்தீனாரின் மனமாற்ற வாழ்வுக்கு இவ்வாசகம் காரணமாயிருந்தது என்று அவர் வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். திருவருகைக் காலத் தொடக்கத்திலே இவ்வாசகம் வழி பவுல் அடியார் நம் மனமாற்ற வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார்.

இறுதிக் காலம் வந்துவிட்டது

கிறிஸ்துவின் உயிர்ப்பிலே, திருச்சபையின் வரலாற்றிலே நாம் அனைவரும் இறுதிக் காலத்திலே வாழ்கிறோம். "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன். விடுதலை நாளில் நான் உனக்குத் துணையாய் இருந்தேன்" (2 கொரி 6 : 2) என்று இன்று நம்மைப் பார்த்து இறைவன் கூறுகிறார். "நமக்கோ விண்ணகமே தாய்நாடு" (பிலி 3: 20). எனவே இவ்வுலகிலே நாம் வேற்று நாட்டினரென, அந்நியர் போன்று வாழ்வு நடத்தவேண்டும் (எபி 11:13).

“இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது 
பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி” - நாலடியார்

வாழ்வின் இறுதிக் காலத்தில் வாழ்பவர்கள்போல் என்றும் இறைவனைச் சந்திக்கத் தயாரான வாழ்க்கையை வாழ வேண்டும். இயேசுவின் உயிர்ப்பு எனும் ஒளியில் இருளைக் காணாதவர்களாய், ஒளியின் மக்களென வாழ முயல்வோம் (எசா 4:5-6; 60:1-2; எபே 5:8-14).

மீட்பு அண்மையில் உள்ளது

உலக முடிவிலே, அல்லது வாழ்வின் இறுதியிலே வழங்கப்படும் தீர்ப்பு அன்று இது; அன்றாட வாழ்வில் ஆரம்பித்து வளர்வது. "நம் மீட்பை உறுதிப் படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பெற்றுக் கொண்ட நாம்" தூய ஆவியாரை அச்சாரமாகப் பெற்ற நாம் (2 கொரி 1:22) நம்முடைய நற்செயல்களினாலே இம்மீட்பிலே பங்கு பெறுகிறோம்; வளர்கிறோம். இறுதி நாளில் இம்மீட்பு முழுமையடையும். எனவே கிறிஸ்தவருக்கு எந்நாளும் மீட்பு நாளே. இங்கே, இப்போது, இன்று கிறிஸ்து மனிதரை ஆட்கொள்ளும் செயல் மனிதர் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படும் செயல் இதுதான் மீட்பு. திருவருகைக் காலத் தொடக்கத்தில் இதனை மனத்திலிருத்தி இறைவனுடைய மீட்பிலே பங்கு பெறும் நிலையினை அடைதற்கான செயல்களைச் செய்வோம். இத்திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு நாளும், மீட்பர் இயேசுவின் நாளாக, நமது மீட்பின் நாளாக அமைய நம்முடைய செயல் முறைகளைத் திருத்தி அமைப்போம்.

கிறிஸ்து இயேசுவை அணிந்துகொள்வோம்

“இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக் கலங்களை அணிந்துகொள்வதே” (13:12) கிறிஸ்துவை அணிந்து கொள்வதாகும்.

“படைக்கல மாகஉன் நாமத் தெழுத்தஞ்சென், நாவிற் கொண்டேன்” -அப்பர் தேவாரம்

“கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்" (கலா 3 : 27). கிறிஸ்துவுக்குள் வாழும் நாம் கிறிஸ்துவின் மனநிலையையும் மதிப்பீடுகளையும் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவிலே அனைத்து மக்களையும் சகோதர சகோதரிகளாக ஏற்று, ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, அன்பு வாழ்வு வாழ வேண்டும் (கலா 3:28; உரோ 13 8-10). அத்தோடு தீய நாட்டம், சொல் செயல் முதலியவற்றை அகற்றி (13:13), ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களாகிய நம்பிக்கை, பற்றுறுதி, நீதி, நேர்மை முதலியவற்றிலே வேரடித்து வளர வேண்டும் (1 தெச 5:8; எபே 6:13-17). இத்திருவருகைக் காலம் நாம் ஒளியின் மக்களாக வாழ ஏற்ற காலமாய் அமைவதாக.

விழித்தெழும் நேரம் வந்துவிட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

நற்செய்தி: மத் 24 : 37-44

விழிப்பு வேண்டும்

மத்தேயு 24-ஆம் அதிகாரம், இறுதிக் காலம் பற்றி இயேசு விட்டுச் சென்ற அறிவுரையாகும். இதிலே எருசலேமின் அழிவும் (கி.பி. 70), உலகத்தின் முடிவும் இரண்டறக் கலந்து நிற்கின்றன. காலத்தினாலே இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் பிரிந்திருந்தாலும், இறையியல் மரபில், இவற்றில் முன்னையது பின்னையதற்கு முன்னோடியாகவும் அறிகுறியாகவும் அமையும். கிறிஸ்துவின் வருகைக்குத் தயார் செய்யும் முறையிலே, அவரின் இறுதி வருகையின்போது எவ்வாறு நாம் விழிப்பாயிருந்து அவரை எதிர்கொள்வோமோ, அத்தகைய விழிப்பை எதிர்பார்க்கிறது இவ்வாசகம்.

மனம் மாறுவோம்

நோவாவின் காலத்திலே மனிதரின் அக்கிரமம் பெருகியது. எல்லா மனிதர்களும் தீமையையே நாடினர் (தொநூ.6: 5). 'நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது" (தொநூ 6:8). ஆண்டவரை விசுவசித்து, “அதே நம்பிக்கையினால் உலகைக் கண்டனம் செய்து, அந்த நம்பிக்கையினாலே இறைவனுக்கு ஏற்புடையவராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்" (எபி 11:7). நாமும் நோவா போன்று ஆண்டவரில் மட்டுமே விசுவாசம் வைத்து வாழ்வோமா? அல்லது நோவா காலத்து மக்கள் போன்று உண்டும் குடித்தும் கேளிக்கைகளில் நேரத்தைப் போக்கியும், அநீத வாழ்வு நடத்தியும், அன்பற்ற வாழ்வில் அமிழ்ந்தும் இறைவனை மனம் நோக வைப்போமா? (தொநூ 6: 6). நோவா காலத்துப் பெரும் வெள்ளம் மக்களின் அக்கிரமங்கள் மேல் இறைவன் கொண்ட கோபத்தின் வெளிப்பாடு (தொநூ 6: 12-13). பாவ வாழ்க்கையில் உழன்று திரியும் நம்மையும், நாம் எதிர்பாரா வேளையிலே இறைவனின் கோபமாகிய பெருவெள்ளம் அடித்துச் சென்றுவிடக் கூடும் என்பதை அறியாது நாம் வாழ்க்கை நடத்தலாமா? எந்நேரத்திலும் இறைவனின் கோபம் வெளிப் படலாம்; எவ்வேளையிலும் இறைவன் நம் நடத்தையைக் கணக்கிட வருவார்.

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று 
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும் 
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் 
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே! - அப்பர் தேவாரம்

என்பதை உணர்ந்து, நாம் மனம் மாறிய வாழ்க்கை நடத்த முயற்சி செய்வோம். திருவருகைக் காலம், இயேசுவின் வருகை முதலியன நமக்கு நோவாவுக்குக் கிடைத்த ஆசீராயமையுமா? அல்லது நோவா காலத்து மக்களுக்குக் கிடைத்த சாபத் தீர்ப்பாயமையுமா? மனம் மாறுவோம்; இறைவனை அணுகுவோம். "நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைய வராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆவோம்" (எபி 11:7).

ஆண்டவர் நாள் நாம் எதிர்பாராத போது வரும்

திருடன் அறிவித்துவிட்டு வரமாட்டான். எதிர்பாராத வேளையிலே நம்மை ஏமாற்றி, நம் உடைமைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுவிடுவான். ஆண்டவரின் வருகையும் அவ்வாறே இருக்கும். “திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும்" என்பது உங்களுக்குத் தெரியும். "எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை” என்று மக்கள் கூறும்போதே, "கருவுற்றிருப்பவர்களுக்குப் பேறுகால வேதனை ஏற்படுவது போலத் திடீரென அவர்களுக்கு அழிவு வரும்" (1 தெச 5: 2-3; 2) என்பார் தூய பவுல் அடியார். எனவே விழித்திருப்போம். திருவருகைக் காலம், விழிப்புக்காலம். அதே வேளையில் இரக்கத்தின் காலம். எப்போதும் தயாராயிருப்போம். இரக்கத்தின் கடவுள் நம்மிடம் வரும் வேளையிலே “விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டு" (மத் 25: 1-13) “அன்பே தகழியாய் ஆர்வமே நெய்யாக”, விழித்திருந்து வரவேற்போம். நல்ல உள்ளத்தோடு, விசுவாசமாகிய ஏனத்தில், அன்பாகிய எண்ணெயோடு காத்திருப்போம். "ஏனெனில் நாளும் நேரமும் நமக்குத் தெரியாது" (மத் 25:13).

ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்”

நிகழ்வு எப்பொழுதும் துறுதுறுவென்று இருக்கும் மகள் ஷாலினை அழைத்த அவளுடைய அம்மா, “பாப்பா! கடைக்குச் சென்று முட்டை வாங்கிக்கொண்டு வருகிறாயா? அம்மா சமையற்கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார். ஷாலின் “சரி” என்று சொன்னதும், அவளிடம் முட்டைக்குரிய பணத்தைக் கொடுத்து, கடைக்கு அனுப்பி வைத்தாள் அவளது அம்மா.

ஷாலின் முட்டை வாங்கச் சென்ற கடை, அவளது வீடு இருந்த தெருவின் முனையில்தான் இருந்தது. அதனால் அவள் மெதுவாக நடந்து சென்று கடையை அடைந்ததும், தன் அம்மா தன்னிடத்தில் கொடுத்த பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்து, “இந்தப் பணத்திற்கு முட்டை தாருங்கள்” என்று கேட்டு, கடைக்காரர் கொடுத்த முட்டைகளைத் தன் இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

வரும் வழியில் சேவல்கள் இரண்டு மிகவும் உக்கிரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள் ஷாலின். அதுவரைக்கும் சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டதைப் பார்த்திராத அவள், அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். பின்னர் அவள், ‘நேரமாகிவிட்டால் அம்மா திட்டுவாள்’ என நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவள் சேவல்கள் சண்டையிடுவதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

அப்பொழுது எங்கோ பார்த்துக்கொண்டு எதிரே வந்த ஒருவர்மீது ஷாலின் மீதோ, அவளுடைய கையிலிருந்த முட்டைகள் கீழே விழுந்து உடைந்துபோயின. இதனால் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்ற ஷாலினிடம் அவளுடைய அம்மா, “என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். அவள் நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னாள். உடனே அவளுடைய தாய், “இனிமேலாது கவனமாய் இரு” என்றார்.

ஆம், நாம் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை மிகப்பெரிய ஆபத்தில் போய் முடிந்துவிடும். திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு, “கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்” என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, ஆன்மிக வாழ்க்கையிலும் எப்படிக் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

அவர் வரும் நேரம் எப்பொழுது என்று தெரியாது
இன்று நாம் திருவருகைக் காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். ஆதலால், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, மானிட மகனின் வருகைக்காக எப்படி நம்மை அணியமாக்குவது என்பதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது.

ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகை எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்காக வாயிற்காவலர் அல்லது வீட்டுப் பொறுப்பாளர் உவமையைப் பயன்படுத்துகின்றார். அக்காலத்தில், இன்றைக்கு இருப்பது போன்று போக்குவரத்து வசதியோ அல்லது தொடர்பு வசதியோ கிடையாது, ஆதலால் பணிநிமித்தமாக நெடும்பயணமோ அல்லது வெளியூரோ செல்லும் வீட்டுத் தலைவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். அவர் வீட்டிற்கு வருகின்ற நேரத்தில் வாயிற்காவலரோ அல்லது வீட்டுப் பொறுப்பாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினைச் செய்துகொண்டிருப்பவராக இருக்கவேண்டும். இல்லையென்றால், வீட்டுத் தலைவரிடமிருந்து அவர் தண்டனை பெறுவார். இந்த அடிப்படை உண்மையை உவமையாகச் சொல்லும் இயேசு, மானிட மகனும் எந்த நேரத்தில் வருவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் கவனமாகவும் விழிப்பாகவும் இருங்கள் என்கின்றார். அப்படியென்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனை எதிர்கொள்ள நாம் நமது கடமைகளைச் செய்துகொடிருப்பவர்களாக இருக்கவேண்டும்.

தம் வழியைக் நினைவில் கொள்வோர்க்குத் துணை வருகின்றார் ஆண்டவர்.
மானிடமகன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம், அதனால் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு கூறுகின்ற அதே நேரத்தில், இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோர்க்கும் அவர் துணை செய்ய விரைகின்றார் என்கின்றார். அவ்வாறெனில், யாரெல்லாம் நேர்மையைக் கடைப்பிடித்து, ஆண்டவருடைய வழிகளில் நடந்து, கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு ஆண்டவர் உதவி செய்ய விரைகின்றார் என்று பொருள் கொள்ளலாம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசக இறைவார்த்தைப் பகுதியானது, கிமு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டவர், அறுபது கால அடிமைத்தன வாழ்விற்குப் பின்பு, பெர்சிய மன்னன் சைரசால் அவர்களுடைய சொந்த நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டபொழுது, என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. இந்த இறைவார்த்தைப் பகுதி பல்வேறு உணர்வுகளை எடுத்துக்கூறுவதாக இருந்தாலும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோருக்கு ஆண்டவர் துணை செய்ய வருகின்றார் என்ற முக்கியமான செய்தியை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இதன்மூலம் ஆண்டவரின் வழிகளை நினைவில் கொண்டு, கவனமாகவும் விழிப்போடும் செயல்படுவோருக்கு ஆண்டவர் துணை செய்ய விரைகின்றார் என்பது உண்மையாகின்றது.

குறைச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் மானிட மகன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோருக்கு, கவனமாகவும் விழிப்பாகவும் இருப்போருக்கு ஆண்டவர் துணை செய்வார் என்று இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். ஒருவேளை ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்ளாமல், எப்படியும் வாழும் ஒருவர் திடீரென்று மானிடமகன் வருகின்றபொழுது, அவர் குறைசொல்லுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றார்.

கொரிந்து நகரில் இருந்தவர்கள் கடவுள் கொடுத்த கொடைகளைத் தவறாகவும், தங்களுடைய நலனுக்காகவும் பயன்படுத்தி, முறைகேடாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறும் பொருட்டே புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்” என்கின்றார். அப்படியெனில், மானிட மகன் - ஆண்டவர் இயேசு – வருகின்றபொழுது நாம் குறைச் சொல்லுக்கு ஒருபோதும் ஆளாகாமல் இருக்கவேண்டும். அதற்கு நாம் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தம் வழிகளை நினைவில் கொள்வோருக்குத் துணை செய்யும் ஆண்டவர் நமக்கும் துணை செய்வார்.

ஆகையால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரக்கூடிய மானிட மகனை எதிர்கொள்வதற்கு நாம் எப்படியும் வாழாமல், கவனமாகவும் விழிப்பாகவும், ஆண்டவரின் வழிகளைக் நினைவில் கொண்டும் வாழ்வோம்.

சிந்தனை
‘நீங்கள் எதைச் செய்தாலும், கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்யுங்கள்’ என்பார் புனித அல்போன்சா. எனவே, நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனை நல்லமுறையில் எதிர்கொள்ளும் வகையில், எதைச் செய்தாலும் கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்வோம். நாம் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கின்றோம் என்பதை, நாம் கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்யும் செயல்களால் நிரூபிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு