புனித ரீத்தா

சந்தியாகு

இத்தாலிய நாட்டில் உள்ள காசியா என்ற ஊரில் 1388 ஆம் ஆண்டு ரீத்தா பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயத் தொழில் செய்து வந்தார். இயேசுவின் பாடுகள் மீது அதிக பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அயலரின் குடும்பங்களில் பிரச்சினைகள் உண்டாரும்போது அங்குசென்று இயேசுவின் பெயரால் சமாதானம் செய்து நல்வாழ்வு வாழ உதவி வந்தார்கள். ஆதலால் சமாதானம் ''செய்பவர்கள்' என்று அவ்வூர் மக்கள் ரீத்தாவின் பெற்றோமை அழைத்து வந்தார்கள்.

செபம், தனிமை இவற்றை நேசித்த ரீத்தா தனது 18வது வயதில் காசியாவில் இருந்த அகுஸ்தினர் மடத்தில் கன்னியாக வாழ விரும்பினார். ஆனால் பெற்றோர் இவருக்கு மணமுடித்து வைத்தனர். ரீத்தாவின் கணவன் ஒரு குடிகாரன். கோபகுணம் படைத்தவன். அடிக்கடி சண்டையிடுபவன். மனைவியின் பக்தி முயற்சிகளைக் கேலி செய்பவன், ரீத்தாவின் இரண்டு மகன்களும்தான் இவருக்கு ஆறுதல்.

இரு பிள்ளைகளும் தம் தாயுடன் தினமும் திருப்பலிக்குச் செல்வார்கள். இடைவிடா செயம், தவம், ஏழைகள் மற்றும் நோயுற்றோரைச் சந்தித்தல் இது போன்ற நற்செயல்கள் இறைவனின் இதயத்தைத் தொடவே ரீத்தாவின் கணைவன் முழுவதும் மணம் திரும்பினர். ஆனால், சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நாள் வெளியே சென்றிருக்கையில் யாரோ அவரைக் கொன்று போட்டார்கள். ரீத்தா பெரும் துயர் கொண்டார். முக்கியமாக உடலை விட்டு உயிர் பிரியும்போது அவரது ஆன்மா எந்த நிலை யில் இருந்ததே என்று ஏங்கினார்.

தன் கணவனைக் கொலை செய்தவர்களை முழு மனதோடு மன்னித்தார். ஆனால், அவருடைய இரு மகன்களும் கொலைகாரனை பழிவாங்கத் தீர்மானித்தார்கள். அப்படி எதுவும் செய்ய வேண்டாம் என்று ரீத்தா தடுத்துப் பார்த்தார், முடிவில் அவர்கள் இந்தப் பாவத்தை செய்வதை விட சாவதே நலம்” என்று கடவுளை நோக்கி வேண்டினார். ஓராண்டுக்குள் இரு மகன்களும் இறந்தன. அப்பொழுது ரீத்தாவுக்கு வயது 30. அகுஸ்தினார். மடத்தில் சேரவேண்டும் என்று அவர் சிறு வயதிலேயே கொண்டிருந்த எண்ணம் இப்பொழுது வலுப்பெற்றது. அவரை ஏற்றுக் கொள்ள இருமுறை மறுத்தார்கள்.

அவரின் விருப்பத்தை நிறை வேற்ற கடவுள் அற்புதமான வழியைக் கையாண்டார். ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவில் புனித அகுஸ்தீன், புனித திருமுழுக்கு யோவான், புனித தொலந்தீன் நிக்கோலாஸ் இவர்கள் மூவரும் செபித்துக் கொண்டிருந்த ரீத்தாவை கன்னியர் மடத்தின் கோவிலுக்குள் அழைத்துச் சென்று திருப்பேழை முன்விட்டும் சென்றார்கள். காலையில் கோவிலுக்கு வந்த கன்னியர் ரீத்தாவைக் கண்டனர். பூட்டுகள் திறக்கப்படாமவே அற்புதமாக நீத்தா உள்ளே நுழைந்திருப்பதை குறித்து அவர் கூறிய உண்மை விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

கன்னியர் மடத்தில் சேர்ந்து பரிசுத்தத்தனத்தில் மென்மேலும் வளர்ந்து வந்தார், தன் பெற்றோரைப் போன்று ஆண்டவர் இயேசு பட்டபாடுகள் மீது இவருக்கு அதிக பக்தியுண்டு. அவர் பாடுகளில் பங்குகொள்ள ஆசித்தார், 1442 ஆம் ஆண்டு ஒரு நாள் சிலுவையில் தொங்கிய இயேசுவின் முன் முழங்காலிட்டு தியானிக்கையில் இயேசுவின் முள் முடியிலிருந்து ஒளி புறப்பட்டு ஒரு முள் வெளி வந்து இவரது நெற்றியைத் தாக்கியது. அதனால் ஏற்பட்ட காயம் ஆற்ற முடியவில்லை. தூர்நாற்றம் எடுக்கவே, அவர் ஓர் அறையில் தனிமையாக எட்டு ஆண்டுகள் வேதனையின் கொடுமையில் மகிழ்வுடன் சகிந்து வாழ்ந்து வந்தார்.

1450 ஆம் ஆண்டு சியன்ளா பெர்னர்தீன் புனிதராக உயர்த்தப்பட இருந்த சமயத்தில் மற்ற கன்னியர்களுடன் தானும் சேர்ந்து அவ்விழாவில் கலந்து கொள்ள விரும்பினார். விருப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் நெற்றியில் இருந்த காயத்தை கடவுள் குணமாக்கினார். 1456, மே 22 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது