புனித பத்தாம் பத்திநாதர்

சந்தியாகு

புனித பத்தாம் பத்திநாதர் - St.PIUS X (1835-1914)

இத்தாலி நாட்டில் ரீயேஸ் நகரில் 1835 ஆம் ஆண்டு உழ வுத் தொழில் செய்து வந்த ஓர் ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தார். திருமுழுக்குப் பெயர் ஜோசப் சார்டோ. 1903 ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பத்திநாதர் என்ற பெயரைத் தேர்ந்து கொண்டார்.

இளமையிலிருந்தே இவரிடம் மிக மேலான முறையில் அறிவுக் கூர்மையும், ஞானக் காரியங்களில் ஆர்வமும் காணப்பட்டன. 23 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். துணைப் பங்குக் குருவாக முதலில் பணியாற்றிய பொழுது பங்கு மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந் தார். நோயாளிகளைப் பேணினார். மிகவும் திறம்பட திருமறை உரை யாற்றி வந்தார். பல மணி நேரம் பாவசங்கீர்த்தனம் கேட்டார். இவ் வாறாக குருத்துவப் பணியில் தமது முழு கவனத்தையும் செலுத்தினார்.

பங்குக் குருவாக நியமிக்கப்பட்டபோது 'எல்லா மனிதர்களுக்கும் எல்லாம்' என்ற குறிக்கோளோடு திருப்பணியைத் தொடர்ந்தார். சிறு பிள்ளைகளுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுப்பதன் மூலமே இறை வார்த்தையாகிய வித்துக்கு நல்ல நிலம் தயார் செய்யப்படுகிறது என்பார்.

தனது 49 ஆம் வயதில் ஆயராக நியமனம் பெற்றார். திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் (Leo) 1893 ஆம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார். பின்பு இவரை வெனிஸ் நகரின் பிதாப்பிதாவாக (Pa- triarch) உயர்த்தினார். இவர் உழவுத் தொழில் செய்யும் குடும்பத்தி லிருந்து தோன்றியதால் தொழிலாளரின் நலனில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். இவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக, நாத்திகக் கட்சியில் இருந்த தொழிலாளர் பலர் தங்களை அந்தக் கட்சியினின்று விடுவித்துக் கொண்டனர். 13 ஆம் சிங்கராயர் இறந்தபின் 1903 ஆம் ஆண்டு இவர் திருத்தந்தையாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். ஆயராக இருந்தபோது தனது விருதுவாக்காகிய 'கிறிஸ்துவின் வழியாக எல்லாவற்றையும் புதுப்பித்தல்' என்பதையே திருத்தந்தை யான போதும் விருதுவாக்காகக் கொண்டார். மக்கள் உண்மையான கிறித்தவ வாழ்வு வாழ இறை வழிபாடானது உதவியாயிருக்க வேண்டுமென வழிகள் பல வகுத்தார். திருப்பலி, குருக்களின் கட்டளை செபம், திருச்சபைச் சட்டங்கள், கத்தோலிக்கச் சமுதாயத் தொண்டு ஆகிய இவைகளே இவரது கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.

புத்தி விவரம் அறிந்த சிறு வர்களுக்கு திவ்விய நன்மை வழங்கலாம் என்று சட்டம் இயற்றினார். அருள் வாழ்வு நிலையில் இருக்கும் அனை வரும் சுத்த கருத்துடன் நாள் தோறும் திவ்விய நன்மை வாங்கலாம் என்று உத்தர வளித்தவர் இவரே.

திவ்விய நன்மை வாங்குகிற வர்கள் இயேசுவுக்குப் பிரியப் படும்படி இயேசுவோடு ஒன் றித்து அவர்போல வாழும்படி, குற்றங்களை விலக்க ஒரு மருந் தாக திவ்விய நற்கருணை உட்கொள்ள வேண்டும். நன்மை வாங்கிய பின் ஒவ்வொருவரும் இயேசுவுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். இன்றைக்கு இவர் 'திவ்விய நற்கருணைப் பாப்பரசர்' என்று புகழப்படுகிறார்.

1914 ஆம் ஆண்டு தனது 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

"நான் ஏழையாகப் பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன். ஏழை யாக இறக்க விரும்புகிறேன்" என தனது மரண சாசனத்தில் இவர் எழுதி வைத்திருக்கிறார். "நினைவு, சொல், செயல் இவற் றில் விழிப்பாயிருந்து தன்னை கண்டிப்புடன் அடிக்கடி பரி சோதிக்கிறவன் தீமையை வெறுத்து விலக்கவும், நன் மைத்தனத்தை வளர்க்கவும் அதிக வலிமை பெறுகிறான்" என்று புனித பத்தாம் பத்திநாதர் கூறியுள்ளார்.

புனிதரின் திருநாள்: ஆகஸ்ட் 21

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது