வரி வசூலித்த ஆயக்காரர்
புனித மத்தேயு
அருட்சகோ.பெர்னார்டு லூர்துமேரி
இயற் பெயர் : லேவி
அழைப்பிற்கு பின் : புனித மத்தேயு
பெயரின் பொருள் : இறைவனுடைய கொடை (எபிரேய மொழி)
எழுதிய நூல் : மத்தேயு நற்செய்தி
தந்தை : அல்பேயு
தாய் : மரியாள்
பிறப்பு : கலிலேய நாட்டிலுள்ள கப்பர்நாகூம்.
மையக்கருத்து : மெசியாவைச் சுட்டிக்காட்டுதல்
எழுதிய இடம் : உரோம்
தொழில் : சுங்கத் துறையில் வரி வசூலிப்பது
குடும்பம் : இறைவனை வழிபடுவதற்காகவும், பணி செய்வதற்காகவும் குறிக்கப்பட்ட ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அழைப்பு : சுங்கத் துறையில் அமர்ந்திருக்கையில் இயேசுவால் அழைக்கப்பட்டார்.
1. என்னைப் பின்பற்றி வா. - இரக்கத்தைப் பெற்றார்.
2. இதயக்கதவை இயேசு தட்டினார். இதயத்தில் இடம் பெற்றார்.
3. மத்தேயுவும் இயேசுவும் மகிழ்ந்து உணவு உண்டனர்.
4. மனமாற்றம் : இயேசுவின் போதனையால் கவரப்பட்டு தன் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய பின் மனமாற்றம் அடைந்தார்.
5. கோவில் வரி : இயேசுவும், சீடர்களும் 2 திராக்மா கோவில் வரியாக மத்தேயுவிடம் செலுத்தினர்.
6. சிறந்த எழுத்தாளர்: மத்தேயு நற்செய்தியை எழுதினார். அதில் இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் தம் நூலில் எழுதியுள்ளார்.
சின்னம் : இறக்கைகள் கொண்ட மனித முகம், இறகுப் பேனா.
முக்கிய போதனை:
இயேசுவைப் பற்றிய: மூன்று - மறையுண்மைகளை இவர் வலியுறுத்துவதைக் காணலாம்.
- இயேசு மெசியா அல்லது கிறிஸ்து என்றும், இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என எண்பிக்கிறார்.
- இயேசு தாவீதின் மகன் தாவீதின் நகரான பெத்லகேமில் பிறந்தார் என்றும் தாவீதின் மகனானதால் ஏரோது கொன்றான் என்றும்,
- தாவீதின். மகனே என இரு குருடர்களும் பிறஇனப் பெண்ணும் அழைப்பதாகவும் கூறுகிறார்.
- பேதுருவின் விசுவாச அறிக்கையில் இறைமகன் இயேசு என்று அமைக்கிறார்.
- என் தந்தை என்று இறைவனை இயேசு அழைக்கிறார்.
- நீர் கடவுளின் மகனான மெசியாவோ? என்று தலைமைக் குரு கேட்கிறார்.
மத்தேயுவை பற்றிய சிறப்பு
16-ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த புனித பிரான்சிஸ் சேவியர் புனித மத்தேயு நற்செய்தி நூலைத்தான் கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.
நமது தேச தந்தை மகாத்மா காந்தியையும் இந்நற்செய்தி, முக்கியமாக மலைப்பிரசங்கம் (அதி 5,67) கவர்ந்து விட்டது. தனது அறப்போராட்டத்தினை (சத்தியாக்கிரகம்) மலைப்பிரசங்கத்தின் வழியாக. - அமைத்தார் என்பதை அவரே ஒரு முறை கூறியும் விட்டார்.
மரணம் : - யூப்ரெட்டிஸ் நதி அருகில் மரபுக் என்னுமிடத்தில் வேதத்திற்காக கல்லால் எறிந்து இரத்த சாட்சியாக மரித்தார்.
திருவிழா: செப்டம்பர் 21
சிந்தனை: இயேசுவின் அழைப்பையேற்றபின் அனைத்தையும் விட்டுவிட்டு. இயேசுவைப் பின் தொடர்ந்தது போல நாமும் இயேசுவால் அழைக்கப்படவும் அழைப்பிற்குப் பின் உலக. ஆதாயப்போக்கை விட்டுவிட்டு அவர்வழி நடக்க முயற்சிப்போம்.
செபம் : ஆண்டவரே உம் திருவுளம் நிறைவேற்ற தேவரீர் என்னை அழைத்துள்ளீர், இதோ அடியேன்.