புனித சிலுவை யோவான்
சந்தியாகு
புனித சிலுவை யோவான் இத்தாலி நாட்டில் ஓவாதா என்னும் ஊரில் 1694 ஆம் ஆண்டு பிறந்தார். ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்த இவர் தனது பெற்றோரின் 16 பிள்ளைகளில் முதல் பிள்ளை. இவரது பெயர் பவுல் பிரான்சிஸ் டேனி. சிறு வயதிலிருந்தே சிலுவையே தனது புத்தகமாகவும், சிலுவையையே தனது முனமாதிரியாகவும் வைத்து வாழ்ந்ந்து வந்தார். நற்கருணை ஆண்டவர் முன் கூடுதலான நேரம் அமர்ந்து செபித்தார். இயேசுவின் பாடுகள் வழியாக இறைவனின் அன்பை முழுமையாகச் சுவைக்க முடியும் என்று அறிந்திருந்த பவுல் இயேசுவின் திருப்பாடுகளைப் பற்றி மேலும் மேலுமாய் தியானிக்க துறவறச் சபை ஒன்றைத் தொடங்க விரும்பினார்.
இயேசுவின் பாடுகள் வழியாக இறைவனின் அன்பை முழுமையாகச் சுவைக்க முடியும் என்று அறிந்திருந்த பவுல் இயேசுவின் திருப்பாடுகளைப் பற்றி மேலும் மேலுமாய் தியானிக்க துறவறச்சபை ஒன்றைத் தொடங்க விரும்பினார். 1720 ஆம் ஆண்டு காட்சியில் நமது ஆண்டவர் தனக்கு உணர்த்தியபடி புதிய சபைக்கான விதிமுறைகளை எழுதினார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குருத்துவ அருள்பொழிவு பெற்றார். தான் உருவாக்கிய சபையை ‘திருப்பாடுகளின் சபை’ () என்று அழைத்தார். மற்ற சிலரும் இந்தச் சபையில் சேர்ந்தார்கள். சபைக்கும், அதன் விதிமுறைகளுக்கும் அனுமதி பெற்ற பிறகு 1747-ஆம் ஆண்டு முதல் கூட்டம் நடைபெற்றது. பவுலின் விருப்பத்திற்கு மாறாக இவரையே தலைவராக எல்லாரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
தன் சபைக் குருக்களுடன் பங்குத் தளங்களில் தொடர் தியானப் பிரசங்கங்கள் மூலம் கிறிஸ்துவின் பாடுகளை மையமாக வைத்து பாவிகளைப் புண்ணிய பாதைக்குக் கொண்டுவர அயராது உழைத்தார். பொதுநிலையினரை ஒன்றுகூட்டி திருச்சிலுவைப் பவனி வருவதும், கண் விழிப்பதும், உபவாசங்கள், திருப்பலி இவற்றில் முழுமையாக, அர்த்தமுள்ள முறையில் ஈடுபடுத்துவதும் ஆகியவைகள் மூலம் பாவிகள் பலரை மனந்திருப்பினார். இவருடைய பரிந்துரையால் எண்ணற்ற புதுமைகள் நடந்தன. இவரின் வியத்தகு சொல்வன்மையால் பலர் மனமாற்றம் அடைந்தனர். புகழ் வாழ்ந்த கர்தினால் நியூமென் மனந்திரும்பி மெய்மறையைத் தழுவ பவுல் நிறுவிய திருப்பாடுகளின் சபைக் குருக்களே காரணம்.
பொது இடங்களில் பவுல் தொடர் மறையுரைகள் நிகழ்த்தும்போது தன்னைச் சாட்டைகளால் கொடூரமாக அடித்துக்கொள்வார். இதனால் மனதைப் பாறையாக ஆக்கியிருந்தவர்களும் பாவங்களை உணர்ந்து, பரிகாரம் செய்து மனந்திரும்பினர். ஒருமுறை இராணுவ வீரர் ஒருவர் இவரை சந்தித்து “நான் எத்தகைய பீரங்கிச் சத்தத்திற்கும் அஞ்சாதவன். ஆனால், உங்களது மறையுரையைக் கேட்கும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் நடுக்கம் ஏற்படுகிறது” என்று சொன்னார். இவர் இத்தாலி நாடெங்கும் 50 ஆண்டுகள் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். 1775 ஆம் ஆண்டு தனது 81வது வயதில் இறைவனடி சேர்ந்தார். 1867 ஆம் ஆண்டு இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.


