புனித ஜெரோம் எமிலியானி

திரு சந்தியாகு

புனித ஜெரோம் (St. Jerome Emiliani)1486 ஆண்டு வெனிஸில் பிறந்தார், ஏஞ்சலோ எமிலியானி மற்றும் எலியோனோர் மௌரோசெனி எனும் தம்பதியருக்கு மகனாக ஓர்‌ உயர்‌ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌. தன்‌ தந்தை இறந்தபின்‌ 'இராணுவத்தில்‌ சேர்ந்தார்‌. ஒரு போரில்‌ கைதியாக்கப்பட்டு விலங்கிடப்பட்டார்‌. சிறையில்‌ அடைந்த இன்னல்களை மிகுந்த பொறுமையுடன்‌ ஏற்றுக்கொண்டார்‌.

இவர்‌ தேவதாயின்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. சிறையில்‌ நாட்களைச் செபத்திலும், தியானத்தில்‌ செலவழித்தார்‌. இதுவரை உலக நோக்குடன்‌ வாழ்ந்தவர்‌ தம்‌ வாழ்வைத்‌ திருத்தி அமைப்பதாகத் தேவதாய்க்கு வாக்களித்தார்‌. அற்புதமான முறையில்‌ சிறையிலிருந்து தப்பினார்‌. ‌அவர் தப்பித்ததற்கு கடவுளின் தாயின் பரிந்துரையே காரணம். மேலும் அவர் ஒரு சபதத்தை நிறைவேற்றும் வகையில், ட்ரெவிசோ மாதாவின் ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டார், அங்கு அவரது சங்கிலிகளைக் காணிக்கையாக விட்டுச் சென்றார்.

பத்து ஆண்டுகள்‌ படித்துக் குருப்பட்டம் பெற்றார்‌. அக்காலத்தில்‌ ஏற்பட்ட கொள்ளை நோய்களால்‌ வருந்துவோரைச்‌ சந்தித்து தம்மால்‌ இயன்ற உதவி அனைத்தையும்‌ அளித்தார்‌.

கொள்ளை நோயினாலும்‌, பஞ்சத்தினாலும்‌ பெற்றோரை இழந்த ஆதரவற்ற பிள்ளைகளைச்‌ சேர்த்து அவர்களுக்குத்‌ தொண்டு புரிந்தார்‌. அவர்களைப்‌ பேணுவதற்காகவே 1537 ஆம்‌ ஆண்டு ஒரு துறவற சபையை நிறுவினார்‌. சபையானது 1540 ஆம் ஆண்டு போப் பால் III அவர்களால் "கிளெரிசி ரெகுலரேஸ் எஸ். மஜோலி பாப்பியே காங்கிரேஷனிஸ் சோமாஸ்சே" (Humanitarian and Founder of the Somaschi Fathers) என்ற அதிகாரப்பூர்வ பெயருடன் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் இது இத்தாலி முழுவதும் பரவியது.

பல நகரங்களிலும்‌ இருந்த கைவிடப்பட்ட ஆதரவற்ற பிள்ளைகளை ஒன்றுசேர்த்துப்‌ பேணி வருவது இந்தச்‌ சபையினரின்‌ முதன்மையானக்‌ குறிக்கோளாக இருந்தது.

பின்னர்‌ இச்சபையைச்‌ சேர்ந்த துறவிகள்‌ சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கத்‌ தொடங்கினர்‌. வழிதவறிய பெண்களுக்கென்று இப்புனிதர்‌ ஒரு நிறுவனத்தை அமைத்தார்‌.

ஒருமுறை, வேகமாகப் பரவிய தொற்றுநோயின்போது சேவை செய்துகொண்டிருந்த ஜெரோம், பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கி.பி. 1537ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எட்டாம் நாளன்று, "சோமாஸ்கா" (Somasca) நகரில் மரித்தார்.

9 ஆம்‌ பத்திநாதர்‌ இவரை ஆதரவற்ற ஏழைகளுக்குப்‌ பாதுகாவலராக அறிவித்தார்‌.

புனிதர்பட்டம்: 1767 ஆண்டு திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமென்ட் (Pope Clement XIII) வழங்கினார்.

இப்புனிதரின் நினைவுநாள் பிப்ரவரி 8.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  புனிதர்‌கள்‌