புனித சார்லஸ் பொரோமேயோ

திரு.சந்தியாகு

இப்புனிதர்‌ இத்தாலியில்‌ 1538 ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. இளமையிலேயே குருத்துவ நிலையை நாடினார்‌. நாட்டின்‌ சட்டங்களையும்‌, திருச்சபையின்‌ சட்டங்களையும்‌ கற்று அறிஞர்‌ என்னும்‌ பட்டத்தைப்‌ பெற்றார்‌.

இவர்‌ 22 ஆம்‌ வயதில்‌ திருத்தொண்டராக (டீக்கன்‌) இருந்தபோதே மிலான்‌ மறைமாவட்‌ டத்தின்‌ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்‌. குருப்பட்டம்‌ பெற்றபின்‌ 27 ஆம்‌ வயதில்‌ மிலான்‌ நகரின்‌ பேராயராக திருநிலைப்படுத்தப்‌ பட்டார்‌. அப்போது திருத்தந்தையாக இருந்த நான்காம்‌ பத்திநாதருக்கு திரிதெந்தின்‌ சங்கத்‌. தைப்‌ புதுப்பித்து சங்கத்தை திறமையுடன்‌ நடத்துவதற்குப்‌ பெரிதும்‌ உதவிபுரிந்தார்‌.

தமது 27வது வயதிலிருந்து 46வது வயது முடிய மிலான்‌ நகர்‌ ஆயராகப்‌ பணியாற்றிய போது எல்லா ஆமர்களுக்கும்‌ சிறப்பான முன்‌ மாதிரிகையாகத்‌ திகழ்ந்தார்‌. ஸ்விஸ்‌ நாட்டுக்குப்‌ பயணமாகும்‌ பல பகுதி மக்களையும்‌ சந்தித்து கத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும்‌ நிலை நாட்டிய பெருமை இவருக்கு உண்டு. திருச்‌ சபை முழுவதும்‌ திரிதெந்தின்‌ சங்கத்‌ தீர்மானங்‌ களைக்‌ செயல்படுத்தத்‌ திறம்பட முயன்றார்‌.

தம்மைப்‌ பொறுத்தமட்டில்‌ கடுமையான எளிமைத்தனத்தில்‌ வாழ்ந்தார்‌. ஏழைகளின்‌ பேணுதலுக்கு ஏராளமான பணத்தைச்‌ செலவழித்தர்.

நாட்டில்‌ கொள்ளை நோய்‌ பரவியது. மக்களின்‌ பாவங்களுக்காக தம்மையே பலிப்‌ பொருளாக கடவுளுக்கு ஒப்புக்‌ கொடுத்தார்‌. தவ ஊர்வலத்தின்போது தெருக்களில்‌ வெறும்‌ காலுடன்‌ நடந்தார்‌. தோளில்‌ ஒரு பாரச்‌சிலுவையைத்‌ தூக்கிச்‌ சென்றார்‌. ஏழைகளுக்கு தந்தைபோல்‌ இருந்து அடிக்கடி அவர்களை சந்திப்பார்‌. இத்தகைய அரும்பெரும்‌ தியாக முயற்சிகள்‌ அவரது உடல்‌ நிலையைப்‌ பெரிதும்‌ பாதித்தது, “நான்‌ ஒரு வயது முதிர்ந்த ஆயராக இருக்க வேண்டும்‌ என்பதல்ல; மாறாக நான்‌ நல்லவனாக இருக்க வேண்டும்‌ என்பதே என்‌ உயிர்மூச்சு” என்று அடிக்கடி கூறுவார்‌.

மேலும்‌, இவர்‌ கல்லூரிகளும்‌, குரு மடங்களும்‌ கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி அரிய நூல்‌ நிலையம்‌ ஒன்று அமைத்தார்‌.

சார்லஸ்‌ பொரோமேயோ தமது 46வது வயதில்‌ இறைவனடி சேர்ந்தார்‌. இவர்‌ எழுதிய நூல்களைத்‌ தெளிவாகப்‌ படித்து முடித்தபின்‌ திருத்தந்தை 23 ஆம்‌ அருளப்பர்‌ இவரை ஆயர்‌ களுக்கு ஆசிரியர என அழைக்கத்‌ தயங்க வில்லை. இப்புனிதர்‌ தந்த பொன்மொழிகள்‌
சில...

“ஒவ்வொரு நாளையும்‌ புதிய ஆர்வத்துடன்‌ தொடங்கு. நன்மை செய்யும்படி கடவுள்‌ இன்னும்‌ ஒரு நாளைத்‌ தந்திருக்கிறார்‌. நன்மை ஏராளமாகச்‌ செய்வேன்‌ என்னும்‌ உறுதியுடன்‌ தொடங்கு!”

“கடவுளது பிரசன்னத்தில்‌ வாழ பெரும்‌ முயற்சிகள்‌ செய்‌.”

நீ செய்யும்‌ அனைத்திலும்‌ கடவுளது மகிமையையும்‌, பாவிகளின்‌ ஈடேற்றத்தையுமே தேட வேண்டும்‌.”

புனிதாின் திருநாள் - நவம்பர் 4

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது