உறவுகள் உறங்குமிடம்

திருமதி அருள்சீலி அந்தோனி
மானிடா!

உறவுக்கும் - பிரிவுக்கும் என்ன முகவரியோ
அதே முகவரி தான் பிறப்புக்கும் -இறப்புக்கும்!

உறவும் - பிரிவும்  அடிக்கடி அரங்கேறுபவை!
பிறப்பும் - இறப்பும் வாழ்வில் ஒருமுறை தான்!

பிறப்பு 
தேகத்தீண்டலில் மோகம் கொண்டு ஆசைத்
திண்டலில் அஸ்திவாரம் போடுவது தான் பிறப்பு!

இறப்பு
சோகம் என்ற சிற்பி சேர்த்து அளித்த
ஒப்பனை அருளே இறப்பு!

மானிடா!
இவை இரண்டும் அன்றாடம் அரங்கேறும்
அத்தியாவசிய நிகழ்வுகள் தான்!

பிறப்புக்கள் மட்டுமே இருந்திருந்தால் -
மனிதன் அங்குல இடத்திற்கு அடித்தடி நடத்தியிருப்பான்!

இறப்புக்கள் மட்டும் இயற்ற பெற்றிருந்தால்
இல்லாமை என்னும் சொல்லான்மையே ஓங்கியிருக்கும்!

மானிடா!

இரண்டும் சமமாக இயற்றபட்டதாலேயே
இவ்வுலகம் இன்னும் இயங்குகின்றது!

மனிதனின் பிறப்பும் - இறப்பும் பல
கோணங்களில் பதிவாகப் படலாம்! ஆனால்
இடைப்பட்ட இடைவெளியில் இயற்றப்பட்ட
இதிகாசங்கள் தான் கொண்ட பெயருக்கு கொடைச் சேர்க்கும்.

ஊரின் எல்லகைள் தோறும் கல்லறைகள்
காணும் நாம் அவைகளின் அவலங்களை
நாம் கண்டும் காணாமலும் கேட்டும் கேளாமலும்
கடந்து செல்கின்றோம்! மானிடா!

என்றவது ஒருநாள் நம் சடலம்
அடங்கும் இடம் தானே கல்லறை!
மனித இனத்தின் இறுதி மணிமண்டபமும்
அதுவே என்பதை மறவாதே!மானிடா!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  நவம்பர்