இறந்தோர்‌ நினைவு !

அருள்பணி ஞானதாஸ் (ஊட்டி)

நவம்பர்‌ மாதம்‌ இறந்த ஆன்மாக்களின்‌ நினைவைக்‌ கொண்டாடும்‌ மாதமாகும்‌. இவ்வுலக வாழ்வில்‌ நம்மை விட்டுப்‌ பிரிந்து சென்ற நமது அன்புக்குரியவர்கள்‌, “கடவுளின்‌ திட்டத்தால்‌ தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்‌; கடவுள்‌ தமது திருவுளத்தின்‌ திட்டப்படி அனைத்தையும்‌ செயல்படுத்தி வருகிறார்‌. அவரது தீர்மானத்தால்‌ நாம்‌ முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய்‌ அவரது உரிமைப்‌ பேற்றுக்கு உரியவர்களானோம்‌”' (எபே. 1:11) என்னும்‌ பவுலடியாரின்‌ படிப்பினையைச் சிந்தித்திருக்கிறோம்‌.

உரிமைப்‌ பேறு! அஃது என்ன?

இந்த உரிமைப்‌ பேற்றைப்‌ பலரும்‌ வாழ்வில்‌ அதிகமாகப்‌ பொருட்படுத்தாததால்‌, பல வேளைகளில்‌ கடவுளின்‌ தீட்டத்தை அறியாமல்‌ இறைவனையும்‌, இறைவனின்‌ நன்மைத்தனத்தையும்‌ இரக்கத்தையும்‌ இழிவுப்படுத்தும்‌ போக்குகளைப்‌ பார்க்கிறோம்‌.

வெளிநாட்டில்‌ ஒரு பங்குத்தலத்தில்‌ பணியாற்றியபோது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ஒரு தாய்க்குத்‌ தன்னுடைய பெற்றோரின்‌ ஆன்ம அமைதிக்காக 42 ஆண்டுகளாக ஒவ்வொரு நவம்பர்‌ மாதத்திலும்‌ திருப்பலி ஒப்புக்கொடுக்கின்ற வழக்கம்‌ உண்டு; ஒரு நவம்பர்‌ மாதம்‌ 43ஆம்‌ ஆண்டுக்கான திருப்பலியை அர்ப்பணிக்கப்‌ பங்குப்‌ பணியாளர்‌ அலுவலகத்திற்குப்‌ பதிவு செய்ய வந்தார்‌. “43 ஆண்டுகளாகத்‌ திருப்பலி ஒப்புக்கொடுக்கிறீர்களா?” என்று பங்குப்‌ பணியாளர்‌ கேட்க, அந்தத்‌ தாய்‌ மறுமொழியாக, “என்‌ பெற்றோர்‌ நிஜமாகவே இறைவனைச்‌ சேர்ந்து விட்டார்களா என்பது பற்றி எனக்கு எப்படித்‌ தெரியும்‌? ஒருவேளை உத்தரிக்கும்‌ நிலையில்‌ இருப்பதாக இருந்தால்‌...? அதற்காகத்தான்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ பெற்றோருக்காகத்‌ திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன்‌” என்றார்கள்‌.

இதைக்‌ கேட்டுக்கொண்டிருந்த பங்குப்‌ பணியாளர்‌ புன்முறுவலோடு, “உங்கள்‌ மனநிலையை மாற்றிக்‌ கொள்ளுங்கள்‌. ஒருமுறை திருப்பலி ஒப்புக்கொடுத்தாலே போதும்‌; அதனுடைய ஒப்பற்ற ஆற்றல்‌ எல்லா நிலைகளையும்‌ எதீர்பார்ப்புகளையும்‌ நிறைவேற்றும்‌” என்றார்‌. உடனே அந்தத்‌ தாய்‌, “சரி பாதர்‌, யாரும்‌ நினையாத ஆன்மாக்களுக்குத்‌ திருப்பலி ஒப்புக்கொடுக்கீறோமே! அஃது எதற்கு?” என்று கேட்டவுடன்‌, ௮ந்தப்‌ பங்குப்‌ பணியாளர்‌, “அதோ! அங்கே அடுத்த அறையில்‌ உள்ள அருட்தந்தையிடம்‌ கேளுங்கள்‌” என்று அடியேனைக்‌ காண்பித்தார்‌.

அந்தத்‌ தாய்‌ உடனே எனது அலுவலக அறைக்குள்‌ வந்தார்கள்‌; “யாரும்‌ நினையாத என்று யாரையும்‌ குறிப்பிட முடியாது. இவ்வுலகத்தில்‌ சிலர்‌ நம்மை நினைக்காமல்‌ இருக்கலாம்‌. உங்களை முன்குறித்து, உங்கள்‌ உரிமைப்‌ பேற்றுக்கு உரியவர்களாக்கிய இறைவன்‌; உங்களை நினைக்காது இருக்க முடியாது. யார்‌ மறந்தாலும்‌ இறைவன்‌ நம்மை மறக்க முடியாது; இனைக்காமல்‌ இருக்க முடியாது: எனவே யாரும்‌ நீனையாத என்று வார்த்தைகளால்‌ அந்த இறைவனை ஒழிவுப்படுத்துகிறோம்‌'” என்றேன்‌. அந்தத்‌ தாய்‌ இந்த விளக்கத்தைக்‌ கேட்டு உரிமைப்‌ பேறு என்ற வார்த்தையின்‌ பொருளைப்‌ புரிந்துகொண்டு சென்றார்கள்‌.

திருமுழுக்கின்‌ மகத்துவத்தைப்‌ புரிந்துகொண்ட நமக்கு, மேலும்‌ திருமுழுக்கின்‌ ஆற்றலால்‌ நம்‌ ஒவ்வொருவருக்கும்‌ கிடைத்த உரிமைப்பேற்றை இளமைப்‌ பருவத்திலிருந்தே அதிகமாக நீனைத்து வாழ்வது எல்லாவற்றிலும்‌ சிறந்ததாகும்‌.

உரிமைப்‌ பேறு என்றாலே இந்த உரிமையை எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ யாரும்‌ தகர்க்க முடியாது; மாற்ற முடியாது. உரிமை எக்காலத்திற்கும்‌ உரியது என்பதை மனதில்‌ நிறுத்துதல்‌ நலமாகும்‌.

திருமுழுக்கினால்‌ கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும்‌ நாம்‌ அனைவரும்‌ அவருடைய சாவிலும்‌ அவரோடு இணைந்திருக்கீிறோம்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்‌தை உயிர்த்தெழச்‌ செய்தார்‌. அவ்வாறு நாமும்‌ புது வாழ்வு பெற்றவர்களாய்‌ வாழும்படி திருமுழுக்கின்‌ வழியாய்‌ அவரோடூ அடக்கம்‌ செய்யப்பட்டோம்‌. ௮வர்‌ இறந்தது போலவே நாமும்‌ அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழந்தது போலவே நாமும் அவரோடு உயிர்த்தெழுவோம். (உரோ. 6:3-5).

மேலும் இறந்த இயேசுவை உயிர்த்தெழச்‌ செய்தவரின்‌ ஆவி உங்களுள்‌ குடி கொண்டிருந்தால்‌, கிறிஸ்துவை உயிர்த்தெழச்‌ செய்தவரே உங்களுள்‌ குடி கொண்டிருக்கும்‌ தம்‌ ஆவியினாலே சாவுக்குரிய உங்கள்‌ உடல்களையும்‌ உயிர்பெறச்‌ செய்வார்‌”. இதுவே உரிமைப்‌ பேற்றின்‌ உறுதிப்பாடு.

இவ்வுலக வாழ்வில்‌ தங்கள்‌ இறப்பினால்‌ தங்கள்‌ வாழ்வை முடித்தாலும்‌, “உரிமைப்‌ பேறு' கொடுத்த உறுதிப்பாட்டினால்‌, அவர்கள்‌ தொடர்ந்து உயிரோடு இருக்கின்றார்கள்‌. எனவேதான்‌ ஒரு காலத்தில்‌, “ஆன்ம அமைதிக்காக' என்று திருப்பலியை ஒப்புக்கொடுத்ததை “இறந்தோர்‌ நீனைவாக' என்று சொல்கிறோம்‌.

இறந்தோர்‌ நினைவு !

இறந்தோர்‌ நினைவு என்பதன்‌ அர்த்தமே, நம்மை விட்டுப்‌ பிரிந்தவர்‌, இறைவனோடு என்றென்றும்‌ வாழ்கிறார்‌; அந்த வாழ்வை நினைத்து, இறைவனின்‌ முடிவில்லா வாழ்வுக்கு நன்றி கூறுவதே இறந்தோரின்‌ நினைவாகச்‌ சிறப்பிப்பதாகும்‌. இந்த உண்மையை நம்மால்‌ புரிந்துகொள்ள முடிகிறதா?

இறந்தோரின்‌ நினைவைப்‌ பற்றி விவாதிக்கும்‌ போது, திருமுழுக்குப்‌ பெற்றவர்களையே இறை இயேசுவில்‌ இணைக்கப்பட்டவர்கள்‌ (கலா. 3:27), ஏற்புடையவர்கள்‌ (உரோ. 5:21) உரிமைப்பேறு பெற்றவர்கள்‌ (கலா. 3:29) என்றெல்லாம்‌ ௮ழைக்கிறோம்‌. திருமுழுக்குப்‌ பெறாத மக்களின்‌ நிலை என்ன? பவுலடியார்‌ இதற்கு விளக்கம்‌ கொடுக்கிறார்‌: “நற்செய்தியின்‌ வழியாக, பிற இனத்தாரும்‌ கிறிஸ்து இயேசுவின்‌ மூலம்‌ உடன்‌ உரிமையாளரும்‌ வாக்குறுதியுடன்‌ உடன்‌ பங்காளிகளும்‌ ஆகியிருக்கிறார்கள்‌ என்பதே அம்மறைபொருள்‌” (எபே. 3:6). இந்த உண்மையைப்‌ பவுலடியார்‌ இன்னும்‌ வலியுறுத்தி, “பிற இனத்தாருக்கும்‌ அவர்‌ கடவுள்‌ அல்லவா? ஆம்‌, பிற இனத்தாருக்கும்‌ அவரே கடவுள்‌. ஏனெனில்‌ கடவுள்‌ ஒருவரே” (உரோ. 3:29) என்கிறார்‌.

ஆக, இயேசுவில்‌ இணைந்து உரிமைப்பேறு பெற்றுள்ள நாம்‌ வாழ்ந்து காட்டும்‌ நற்செய்தி வழியாக எல்லாரும்‌ உடன்‌ பங்காளிகளாகி இயேசுவின்‌ உயிர்ப்பை அனுபவிக்கிறார்கள்‌ என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது.

நன்றி:-சலேசியன் செய்தி மலர்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
>