இறந்தால்தான்‌ உயிர்‌ வாழ்வோம்‌

அருள்திரு ஆ.சிலுவைமுத்து ச.ச.

அன்பு நிறை நண்பர்களே,
“இறந்தால்தான்‌ உயிர்‌ வாழ்வோம்‌” என்பதை நினைவுட்டும்‌ மாதம்தான்‌ நவம்பர்‌ மாதம்‌. “கிறிஸ்து உயிருடன்‌ எழுப்பப்படவில்லை என்றால்‌ நீங்கள்‌ கொண்டருக்கும்‌ நம்பிக்கை பயனற்றதே” (1கொரி.15;17). கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்‌, இறந்த அனைவரும்‌ கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவர்‌, நாமும்‌ இறந்து உயிர்த்தெழுவோம்‌ என்பது நமது நம்பிக்கை. “இறந்தோர்‌ உயிர்த்தெழ மாட்டார்‌ எனில்‌ கிறிஸ்துவும்‌ உயிருடன்‌ எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்‌.” 1கொரி. 15:13. விவிலியம்‌ நமக்குக்‌ கூறும்‌ நம்பிக்கை இறைவாக்குகள்‌ இவை.

கிறிஸ்து இறந்து உயிர்க்காமல்‌ இன்னும்‌ உயிரரோடு வாழ்ந்திருப்பார்‌ எனில்‌ இறையாட்சி இவ்வளவுக்குப்‌ பரவியிருக்காது. அனைத்துப்‌ புனிதர்கள்‌ விழாவில்‌ நவம்பரைத்‌ தொடங்கி இம்மாதம்‌ முழுவதும்‌ இறந்தோரை நினைவில்‌ வைத்து அவர்களுக்காகச்‌ செபிக்க இருக்கின்றோம்‌.

ஒவ்வோர்‌ இறப்பும்‌ நம்‌ இருப்பை நினைவுக்குக்‌ கொண்டு வர வேண்டும்‌. இன்று அவர்கள்‌; நாளை நாம்‌. வாழ்க்கைப்‌ பற்றிய கண்ணதாசனின்‌ பாடல்‌ வரிகள்‌...

“தேடிய செல்வம்‌ என்ன திரண்டதோர்‌ சுற்றம்‌ என்ன?
கூடு விட்டு ஆவி போனால்‌ கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?”
- (பாத காணிக்கை,1962.)

இதுதான்‌ வாழ்க்கை, இதுதான்‌ நியதி. ஒவ்வொரு முறையும்‌ நாம்‌ கல்லறையில்‌ கால்‌ வைக்கும்போது நமக்கும்‌ விளக்கு வைக்க யாராவது வரும்‌ காலம்‌ தொலைவில்‌ இல்லை என்னும்‌ நினைவு நம்‌ மனதில்‌ மறையாமல்‌ எழ வேண்டும்‌. புகழ்ப்பற்ற சில கல்லறை வாசகங்கள்‌: கவிஞர்‌ ஷெல்லி தனது தாயாரின்‌ கல்லறையில்‌, “சப்தமிட்டு நடக்காதீர்கள்‌, இங்கேதான்‌ என்‌ அருமைத்‌ தாயார்‌ இளைப்பாறிக்கொண்ழருக்கிறார்கள்‌.” உலகப்‌ பேரழகி கிளியோபாட்ராவின்‌ கல்லறையில்‌, “உலகத்திலேயே அழகான பிணம்‌ இங்கே உறங்கிக்‌ கொண்டிருக்கிறது. நல்ல வேளை இவள்‌ பிணமானாள்‌, இல்லாவிட்டால்‌ இந்தக்‌ கல்லறைக்குள்‌ உரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்‌.” மகா அலெக்சாண்டரின்‌ கல்லறையில்‌, “இந்த உலகம்‌ முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு, இந்தக்‌ கல்லறைக்‌ குழி போதுமானதாக ஆகிவிட்டது.” தொழிலாளியின்‌ கல்லறையில்‌, “இங்கே புதைகுழியில்‌ கூட இவன்‌ கறையான்களால்‌ சுரண்டப்படூகிறான்‌.” அரசியல்வாதியின்‌ கல்லறையில்‌, “தயவு செய்து இங்கே கைத்‌ தட்டி விடாதீர்கள்‌, இவன்‌ எழுந்து விடக்கூடாது.” விலை மகளின்‌ கல்லறையில்‌, “இங்குத்தான்‌ இவள்‌ தனியாகத்‌ தூங்குகிறாள்‌. தொந்தரவு செய்யாதீர்கள்‌. பாவம்‌ இனி வர முடியாது இவளால்‌.” போர்வீரனின்‌ கல்லறையில்‌, “மற்றவர்கள்‌ வாழ்வதற்காக, தான்‌ இறந்தவர்‌.” “இங்கே ஒரு தமிழ்‌ மாணவன்‌ உறங்குகின்றான்‌” என்று ஜி.யூ போப்‌ அவரது கல்லறையில்‌ எழுதச்‌ சொன்னதாகச்‌ சொல்வர்‌.

உலகையே நடுங்க வைத்த ஹிட்லர்‌ தன்‌ சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்‌. முசோலினி இறந்த போது ரஷ்ய தலைநகரில்‌ முசோலினியின்‌ பிணத்தைத்‌ தலைகீழாகத்‌ தொங்கவிட்டுப்‌ பொதுமக்கள்‌ தங்களது செருப்பால்‌ அந்தப்‌ பிணத்தை அழித்துத்‌ தங்கள்‌ மனக்குமுறலைத்‌ தீர்த்துக்‌ கொண்டார்களாம்‌. நமது இறப்பு இழப்பாகக்‌ கருதப்பட வேண்டுமெனில்‌ பசித்தவனுக்கு உணவு, தவித்த வாய்க்குத்‌ தண்ணீர்‌... என்னும்‌ மத்தேயு 25ஆம்‌ அதிகாரத்தை நம்‌ வாழ்வாக்குவோம்‌. திருஅவையின்‌ அறிவுறுத்தலின்படி, இறந்தோருக்காகத்‌ திருப்பலி ஒப்புக்கொடுத்து நற்கருணை உட்கொள்ளல்‌, திருவிவிலியம்‌ வாசித்தல்‌, காலை மாலை செபங்கள்‌ செய்தல்‌, அழக்கடி ஆலத்திற்குச்‌ சென்று ஆண்டவர்‌ கற்றுக்கொடுத்த செபத்தையும்‌, விசுவாச அறிக்கையும்‌ செபித்தல்‌, இரக்கத்தின்‌ ஆண்டவர்‌ செபத்தைச்‌ செபித்தல்‌, கல்லறைகளைச்‌ சந்தித்தல்‌, சிலுவைப்பாதை செய்தல்‌, செபமாலை செபித்தல்‌, நற்கருணை ஆதாரனை செய்தல்‌, திருத்தலங்களுக்குச்‌ சென்று செபித்தல்‌, தியானம்‌ செய்தல்‌ போன்றவற்றின்‌ வாயிலாக இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்களின்‌ பாவங்களுக்குக்‌ கழுவாய்‌ தேடி, நமக்குப்‌ புண்ணியங்களைச்‌ சம்பாதித்துக்‌ கொள்ளும்‌ அதே வேளையில்‌ நம்முடன்‌ இருப்போரை இருக்கும்‌ வரையில்‌ நல்ல நிலையில்‌ வாழ வைத்து விண்ணகத்தை நமது இருப்பிடமாக்கிக்‌ கொள்வோம்‌.

இறக்கும்‌ வரை இருப்பதைக்‌ கொடுப்போம்‌; நம்‌ இறப்பும்‌ இழப்பாகும்‌, அப்போதுதான்‌ நாம்‌ செத்தாலும்‌ சாகாமலிருப்போம்‌!

நன்றி:-சலேசியன் செய்தி மலர்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  நவம்பர்