புனிதர்‌ யார்?

மனிதன்‌ இறை சாயலால்‌ படைக்கப்பட்டவன்‌. படைடக்கப்பட்டவன்‌ படைத்தவரைப்‌ போற்றிப்‌ புகழ்வதே. நன்று, படைத்‌தான்‌ படைப்பை மனுவுக்காக: மனுவைப்‌ படைத்தான் தன்னை வணங்க! புனிதர் பலரும் இறைசித்தத்தின்படி நடந்து இறைவனைப்‌ போற்றி புகழ்ந்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வணங்கினர். எனவே மனிதன் புனிதமடைய முதற்படி இறைவனைப் போற்றுதல். அவரின்‌ சித்தம்‌ அறிந்து அதன்படி வாழ வேண்டும்‌. ஒருவன்‌ சாட்சிய வாழ்வு வாழ இவை இரண்டும்‌ துணை புரிந்து விசுவாசத்தில்‌ நாளும்‌ வளர தூண்டுகோலாக உதவுகின்றன.

கிறித்தவ குடும்பத்தில்‌ பிறந்துதிருமுழுக்குப்‌ பெறும்‌ போது நமது ஜென்மப்‌ பாவம்‌ நீங்கப்பட்‌டு ஆவியானவர்‌ அருள்பெற்று திருச்‌ சபை உறுப்பினராக மாறுகிறோம்‌. கிறித்தவன்‌ என்‌ றாலே இயேசுவின்‌ அன்பைச்‌ சுவைத்து கிறிஸ்து வழி நடத்தலாகும்‌. இதனையே நம்‌ ஆண்‌டவர் பலமுறை “நீங்கள்‌ உலகிற்கு ஒளி” (மத்‌ 5:14), “எழுந்து பிரகாசி; உன்னில்‌ ஒளி வந்தது" (எசா 60:13, “ஞானம்‌ மிக்கவன்‌ ஆகாய மண்டலத்தின்‌ ஒளியைப்போல பலரை நல்வழிப்படுத்துவான்‌” (தானி 3:12) என்று கூறுகின்றார்‌.

இறையன்பு, இறைசித்தம்‌ உள்ளவனிடத்தில்‌ ஞானம்‌. ஒளி உண்டு. இக்குணங்கள்‌ எல்லா புனிதர்களிடத்தும்‌ காணப்பட்டன. 'நானே வழி, சத்தியம்‌' என்ற ஆண்டவர்‌ வாக்கின்படி சத்தியம்‌, திருச்சபை ஒழுங்குமுறைகளைக்‌ கடைப்பிடித்து இறையன்பின்‌ சாட்சிகளாய்‌ வாழ்ந்தவர்களே புனிதர்கள்‌. இப்புனிதர்கள்‌ அனைவருமே நாம்‌ அன்றாட வாழ்வில்‌ இயேசுவின்‌ சாட்சிகளாய்‌ வாழத்‌ துணைபுரிகின்றனர்‌.

இளம்‌ வயது புனிதர்கள்‌ புனித பங்கிராஸ்‌, புனித ஸ்தனிஸ்லாஸ்‌, புனித டோமினிக் சாவியோ ‌... இவர்கள்‌ தம்‌ இளம்‌ வயதில்‌ இயேசுவின்‌ அன்‌ பைச்‌ சுவைத்து, அவருக்குச்‌ சாட்சிகளாய்‌ வாழ்ந்து, பல இளம்‌ உள்ளங்களை , இயேசுவின்‌ அடிச்சுவட்டை யும்‌, அவரின்‌ அன்பையும்‌ சுவைத்து புனிதமாய்‌ வாழ வழிகாட்டி தங்கள்‌ உயிரை இயேசுவுக்காகப்‌ பலியாக்‌ கிய புனிதர்கள்‌. புனித பங்கி ராஸ்‌ நற்கருணை நாதர்‌ முன்‌ அளவற்ற அன்பு கொண்டு விளையாட்டை பெரிதாக எண்ணாது. நோயுற்றோருக்கு நற்கரு னணயை எடுத்துச்‌ செல்‌ கையில்‌ வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டார்‌. ஆயினும்‌ நற்கருணைநாதரைப்‌ பத்திரமாகப்‌ பாதுகாத்த புனிதர்‌.

புனித தனிஸ்லாஸ்‌ துற வறப்‌ பயிற்சி காலத்திலே தன்னை ஒடுக்கி வாழ்ந்து இயேசு மட்டும்‌ போதும்‌ என்று புனித லொயோலா இஞ்ஞாசியார்‌ கூற்றை வாழ்வில்‌ கடைப்பிடித்து “ஒருவன்‌ உலக முழுவதை யும்‌ ஆதாயமாக்கிக்‌ கொண்டு தன்‌ ஆத்மாவை இழந்தால்‌ என்ன பயன்‌?! (மத்‌ 16:28) என்ற வசனத்தின்படி உடலை ஒறுத்து இயேசுவுக்காக வாழ்ந்து மரித்த புனிதர்‌.

புனித சாவியோ குறும்புகள்‌ பல செய்து வறு மையாலும்‌, அறியாமையாலும்‌ வாழ்ந்தாலும்‌ இயேசுவின்மீது தணியாத பற்று, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு பாவம்‌ செய்வதைவிட சாவதே மேல்‌ என்று பாவநாட்டங்களில்‌ ஈடுபடாது தன்‌ மனச்சாட்சியின்படி வாழ்ந்து பல இளம்‌ உள்ளங்கள்‌ இயேசுவின்‌ அன்பைச்‌ சுவைத்து புனிதராய்‌ வாழ வழிகாட்டிய இளம்‌ செம்மல்‌.

மறை பரப்பிய புனிதர்கள்‌

புனித சவேரியார்‌, புனித இஞ்ஞாசியார்‌, புனித அந்தோணியார்‌, புனித பவுலடியார்‌, திருத்தூதர்கள்‌, அப்போஸ்தலர்கள்‌... இவர்கள்‌ எல்லோரும்‌ இயேசுவின்‌ வாழ்க்கையைப்‌ பற்றி திருவிவிவிய கருத்துக்களை எடுத்துக்கூறி சாட்சிகளாகவும்‌ இரக்கச்சாட்சிகளாய்‌ மரித்தவர்கள்‌. ஆயினும்‌ முதல்‌ வேதசாட்‌ சியாய்‌ மரித்தவர்‌ புனித முடியப்பர்‌, இவர்‌ கல்லால்‌ எறியப்பட்டு கொல்லப்பட்டார்‌. நம்‌ நாட்டில்‌ வாழ்ந்த புனிதர்கள்‌ சவேரியார்‌, அருளானந்தர்‌. இதில்‌ அருளானந்தர்‌ குடும்ப உறவு, கணவன்‌-மனைவி ஆகியோர்‌ உறவின்‌ புனிதத்‌தைத்‌ துணிந்து கூறினார்‌. எனவே, இவர்‌ தலை வெட்டப்பட்டு இரத்தச்சாட்சியாம்‌ மரித்தார்‌.

அன்றும்‌ இன்றும்‌ இறைவார்த்தையை செவி மடுக்காத செவிடர்‌ பலருண்டு. எனவே, அந்தோ ணியார்‌ கடல்‌ மீன்களிடம்‌ போதித்ததாக கூறப்படு கிறது, புனிதபிரன்சிஸ்‌ அசிசி இயற்கை வழி மக்கள்‌ இறையன்பை உணரச்‌ செய்து தியான திலை, மெளன நிலை இறைவனை காணச்‌ செய்தார்‌. எங்கு இறையன்பு உண்டோ அங்கு துன்பம்‌, தியா கம்‌ உண்டு. “என்னைப்‌ பின்பற்றி வர விரும்பினால்‌ தன்னைத்தான்‌ வெறுத்து தன்‌ சிலுவையைச்‌ சுமந்து கொண்டு என்‌ பின்னே வரட்டும்‌” (மத்‌ 18:24) என்ற இயேசுவின்‌ வார்த்தைகளை தங்கள்‌ வாழ்வின்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு. துன்பங்கள்‌ பல பட்டு, புனிதராய்‌ வாழ்ந்து, அன்பின்‌ சாட்சி களாய்‌ மரித்த இவர்கள்தான்‌ நம்‌ திருச்சபை போற்றும்‌ புனிதர்கள்‌.

இளம்பெண்களான பல புனிதர்கள்‌

புனித மரியகொரற்றி, புனித ஆக்னஸ்‌, புனித ஆகத்தா, புனித கிளாரா, புனித செசிலியா, புனித மார்கிரேட்‌, புனித குழந்தை தெரசாள்‌... இன்னும்‌ பலர்‌ இருப்பினும்‌ கற்பை பாதுகாத்து மரித்த மரிய கொரற்றி, ஆக்னஸ்‌, செசிலியா போற்றுதலுக்‌ குரியவர்கள்‌.

இன்றைய நாகரீக உலகில்‌ கற்பு என்பது கடைச்சரக்காய்‌ விலை பேசப்பட்டு வாழ்வை வீணாக்கும்‌ பெண்கள்‌ பலர்‌ உண்டு. ஆனால்‌ இயேசு மட்டும்‌ போதும்‌ என்று பற்பல இன்னல்கள்‌ பட்டு சாட்சிகளாய்‌ மரித்த கன்னிப்பெண்கள்‌ இவர்‌ கள்‌. புனித மார்கிரேட்‌ மேரி அலகோத்‌ நற்கருணை நாதர்மீது தன்னிகரற்ற பற்றுக்கொண்டு இரவுபகல்‌ அவர்‌ பிரசன்னத்தில்‌ அவரைப்‌ போற்றி புகழ்ந்து பாடி அவரின்‌ திருமுகத்‌ தரிசனம்‌ பெற்றவர்‌. எனவே தான்‌ நம்‌ கத்தோலிக்க திருச்சபை நற்கருணை நாதர்மீது அழியா நம்பிக்கை, ஆழ்ந்த விசுவாசம்‌ கொண்டுள்ளது. புனித அல்போன்சா நம்நாட்டின்‌ முதல்‌ இளம்‌ புனிதை என்பது நம்மை விசுவாசத்‌ தில்‌ ஆழ்த்துகிறது.

இல்லறத்தில்‌ இணைத்து பின்‌ புனிதர்களாய்‌ வாழ்த்த சிலர்‌

புனித மோனிக்கா, புனித சாந்தம்மாள்‌. புனித எட்விச்சு, புனித எலிசபெத்து ஆப்‌ போர்ச்சுக்கல்‌, புனித பிரிஜிட்‌, புனித எலிசபெத்‌ ஆப்‌-ஹங்கேரி இப்படி பல பெண்கள்‌ அரச குடும்பத்தில்‌ பிறந்தும்‌ அனைத்து செல்வங்களையும்‌ துறந்து இயேசு மட்டும்‌ போதும்‌ என்று அவரையே சார்ந்து, தங்கள்‌ வாழ்வை அன்பு காணிக்கையாய்‌ அர்ப்பணித்து புனிதம்‌-மனிதம்‌ மலர இம்மண்ணில்‌ இயேசுவின்‌ சாட்சிகளாய்‌ வாழ்ந்தனர்‌. அவர்களின்‌ குடும்பங்‌ களில்‌ அன்பு, அமைதி, மனமாற்றம்‌, இறையாட்சி யின்‌ ஆளுமை காணப்பட்டன. நாம்‌ தியாக வாழ்‌ வில்‌ சிறக்க இளம்‌ உள்ளங்களை ஊக்குவித்தால்‌ இம்மண்ணில்‌ இறையாட்சி மலரும்‌. குடும்பங்‌ களில்‌ உறவு ஓங்கும்‌. புனித சுவக்கீன்‌ குடும்பம்‌ புனிதம்‌ மிக்கது என்பதை மரியா வழியாக அறிய முடிகிறது.

எழ்மையாய்‌ வாழ்த்த புனிதர்கள்‌.

புனித வின்சென்ட்‌, புனித டோமினிக்‌, புனித ஆசீர்வாதப்பர்‌, புனித பிரான்சிஸ்‌ அசிசி, புனித கிளாரா... இவர்கள்‌ வாழ்வில்‌ ஏழ்மை மிகுந்து பகிர்வு ஓங்கி, பாசம்‌, நேசம்‌, இறைப்பற்று காணப்‌ படவே எல்லோருக்கும்‌ எல்லாமுமாய்‌ வாழ்ந்து மறைக்கல்வி ஆண்டின்‌ போதனையை அன்றே வாழ்ந்து காட்டினார்கள்‌. அன்னை தெரசாவின்‌ எளிமை அகிலமே அறிந்தது.

இறைமகன்‌ இயேசு தம்மை தாழ்த்தி அடிமை யாகி சிலுவையில்‌ மரித்தது ஏன்‌? (பிலி 2:6-8), இயேசுவின்‌ ஏழ்மை வெறுமை நிலை பற்றிக்‌ கூறுகிறது. அபிரகாம்‌ தன்‌ ஒரே மகனையே பலியாக்கிடத்‌ துணிந்தது என்‌? கீழ்ப்படிதல்‌ என்ற இறைத்திட்டத்தை ஏற்றல்‌. இவ்வாறு நம்‌ கூடும்‌ பங்களில்‌ எளிமை, இறை சித்தத்தின்படி வாழும்‌ போது புனிதம்‌, இறைநம்பிக்கை, பெற்றோர்‌- பிள்ளைகள்‌ உறவு, இறைபராமரிப்பு, தியாகம்‌ பெருகும்‌. கடவுள்‌ உலகின்மீது அளவற்ற அண்பு கொண்டு தம்‌ ஒரே மகனை உலகிற்கு அனுப்பி னார்‌ (யோவா 35:16). எனவே, உலகிற்கு மீட்பு கிடைத்தது. அவரின்‌ வழியைப்‌ பின்பற்றி அவர்‌ அன்பிற்குச்‌ சாட்சிகளாய்‌ வாழும்‌ நாமும்‌ புனிதர்களே.

இளம்‌ தென்றலை விரும்பாதோர்‌ யாருண்டு? கடல்‌ துணையின்‌ அழகைக்‌ கண்டு மயங்காதோர்‌ உண்டோ? ஒளியின்‌ உரசல்‌ இருட்டைப்‌ போக்கி அச்சத்தை அகற்றுகிறது அல்லவா! காலைக்‌ சுதிரவன்‌ கண்விழிக்கச்‌ செய்கிறது அல்லவா! ஆம்‌, இவையெல்லாம்‌ உண்மை. இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியவர்‌ நம்‌ பரம தந்‌தை, அவரின்‌ அன்பை. அகிலத்திற்கு அளித்தவர்‌ நம்‌ மீட்பர்‌ இயேசு.

இவரின்‌ போதனைப்படி வாழ்ந்து இரத்தம்‌ சிந்தி மரித்தவர்‌ பலருண்டு. இறைவசனத்தை துணிவுடன்‌ போதித்து மாண்டவர்‌ பலருண்டு. தம்‌ இளமை அழகை அன்பர்‌ இயேசுவுக்கு அர்ப்‌ பணித்து வாழ்ந்த நங்கையர்‌ பலர்‌ உண்டு. குடும்ப உறவைவிட அன்பர்‌ இயேசுவின்‌ அன்பு உயர்ந்‌ தது என்று (செல்வம்‌) பொருள்‌ செல்வம்‌, மக்கள்‌ செல்வம்‌ துறந்து இயேசுவின்‌ சாட்சிகளாய்‌ வாழ்ந்த புனிதர்‌ பலருண்டு.

நாம்‌ இயேசுவுக்காய்‌ நம்‌ விசுவாசத்தைக்‌ காத்து துணிவுடன்‌ அவரின்‌ சாட்‌சிகளாய்‌ வாழ்ந்து நம்‌ புனிதத்தை இம்மண்ணில்‌ விதைத்து, விண்ணும்‌-மண்ணும்‌ இணைந்து அன்பின்‌ சிகரத்தை அடைந்திட வாமும்‌ நாமும்‌ புனித மடைவோம்‌. போற்றுவோம்‌. புகழ்வோம்‌ நம்‌ பரமனை (திபா 150:1-49. அவரைப்‌ போற்றி மகிழ்‌ வோம்‌. அல்லேலூயா பாடும்‌ புனிதர்‌ கூட்டத்துடன்‌ சேர்ந்து நாமும்‌ போற்றிப்‌ பாடுவோம்‌ [திபா 149:17, அல்லேலூயா! ஆண்டவருக்குப்‌ புதியதொரு பாடலைப்‌ பாடுங்கள்‌. அவரது அன்பர்‌ சபையில்‌ அவரது புகழப்‌ பாடுங்கள்‌.

நவம்பர்‌ முதல்‌ தேதி கொண்டாடப்படும்‌ எல்லாப்‌ புனிதர்கள்‌ கூட்டத்தில்‌ நாமும்‌ இணைந்து போற்றுவோம்‌. இம்மண்ணில்‌ புனிதம்‌ பூத்திட, அன்பு அதிகரிக்க, அமைதி ஓங்கிட ஆண்டவர்‌ அருள்‌ வேண்டி புகழ்ந்து பாடுவோம்‌.

எனவே, புனிதர்கள்‌ இறையாசிரைப்‌ பெற்றுத்‌ தந்து நம்‌ துன்பங்களில்‌ துணைபுரிந்து நமக்காய்‌ பரிந்து பேசுபவர்கள்‌. அவர்களைப்போல்‌ விசுவாசத்‌ தில்‌, இறையன்பில்‌ வாழ விசுவாச ஆண்டாகிய இவ்‌ வாண்டில்‌ நாம்‌ இறையன்பில்‌ பிறர்‌ அன்பில்‌ வளர நம்‌ புனிதர்களை வாழ்த்துவோம்‌. அவர்களிடம்‌ நமக்காய்‌ செபிப்போம்‌. அகிலம்‌ ஆண்டவன்‌ அருள்பெற்று மனிதநேயத்துடன்‌ மன்னித்து வாழ இறையருளை இந்நாளில்‌ புனிதர்‌ பலரும்‌ நமக்குப்‌ பெற்றுத்தர நாமும்‌ புனிதமாய்‌ வாழ முயல்வோம்‌.

அருட்சகோதரி ஜோவிதா புனித சிலுவை கன்னியர்‌ மடம்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது