அன்னை மரியா - தாழ்ச்சியை ஆடையாக கொண்டவள்

திருமதி.அருள்சீலி அந்தோணி


அன்பு நெஞ்சகங்களே!
அன்னை மரியாள் தாழ்ச்சியின் மணிமகுடம்! அவர் எவ்வாறு தன் வாழ்க்கையில் தாழ்ச்சி, எளிமை, பொறுமை, நேசித்தல், மன்னித்தல், குறைகளை ஏற்றல், துன்பங்களை ஏற்றல் எனும் அடையாளங்களை  கொண்டு வாழ்ந்தாள் என்பதை இங்கே சற்று அறிவோம்.

தாழ்ச்சி எனும் பொருளில் பொதிந்துள்ள அடையாளங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

பொறுமை:
நாம் எந்த அளவு தாழ்ச்சியைக் கொண்டுள்ளோமோ அதே அளவு பொறுமையும் கொண்டுள்ளவர்களாக திகழ்கின்றோம். காரணம் சகிப்பு தன்மை இங்கே மேலோங்கும். கோபம் அறவே குறையும். கோபத்தினால் எதையும் சாதிக்க இயலாது. பொறுமையினால் எதையும் முடியும்.

எளிமை:
நம் பேச்சிலும், சொல்லிலும்,  செயலிலும் வாழ்க்கை முறையிலும் எளிமையை கடைபிடித்தால் இங்கே தாழ்ச்சி மேலோங்கி நிற்கும். எளிமையானது அதிகார போக்கினை அறவே அகற்றுகிறது. ஏழைஎளியோரை நம்மவராக ஏற்கின்றது.

அன்பு செயல்:
தான் சொல்வது, செய்வது தான் சரி என்று எண்ணுபவர்கள் புத்திசாலிகளாக இருக்கமுடியாது. அடுத்தவர்களை அன்பு செய்து அவர்களது நல்ல எண்ணங்களை ஏற்று செயலாக்கம் செய்வதே தாழ்ச்சியின் அடையாளமாகும்.

மன்னித்தல்:
உறவுகளில் பிளவுகள் ஏற்படுதும் இயல்பு. அந்த உறவுகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் உறவு வளர வேண்டும். இவ்வாறு நல்ல எண்ணங்களை கொண்டுள்ளவர்கள் இருப்பின் அவர்கள் தாழ்ச்சியில் வளர வேண்டியவர்கள் என்பதை உணர்ந்திடுவீர்.

குறைகளை ஏற்றுக் கொள்ளுதல்:
நாம் சில நேரங்களில் தவறுகளை நியாயப்படுத்துகின்றோம். பிறர் குறைகளை சுட்டிக் காட்டுகின்றோம். ஆனால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஆசிரியராக அமையமுடியும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு பாடமாக அமையும். எனவே குறைகளை ஏற்றுக் கொள்ளும் போது இங்கே தாழ்ச்சி மேலேதங்கி நிற்கின்றது. வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தாழ்ச்சி தேவையாகும்.

துன்பங்களை ஏற்றுக் கொள்ளுதல்.
நம் வாழ்வில் துன்பம் ஓர் அம்சமாகும். தோல்விகள், இழப்புகள் ஏதோ ஒரு வழியில் பலன் தரலாம். தரமால் போகலாம். ஆனால் மாற்றமுடியாத துன்பங்களை ஏற்றுக் கொள்வதே சரி! கடந்த காலம்ää எதிர்காலங்களை சிந்திக்காமல் நிகழ் காலத்தை சிறப்பாக செய்வதே தாழ்ச்சியின் அடையாளமாகும்.


 
 

மேற்கண்ட கருப்பொருயை நம் வாழ்வாக்கி கொள்ளும்போது மாமரியின் தாழ்ச்சியை நாம் ஆடையாக அணிந்துக் கொள்கின்றோம். எனவே தாழ்ச்சி தரணியை ஆளட்டும். ஒவ்வொருவரின் இதயங்களை ஆட்கொள்ளட்டும். தாழ்ச்சியின் அடையாளங்களை ஆடையாக அணிந்துக்கொள்வோம். அன்னை மரியின் சீடர்களாக வலம் வருவோம். மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் பக்கங்கள்


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்


ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com