என் செபமாலை...

கஸ்மீர் ரோச், சின்னமலை, சென்னை.
r1
01. அன்னைக்கொரு மாலையாகுமே
02. குடும்பத்திற்கே விளக்காகுமே
03. திருக்குடும்பத்தைப் போல மாறச் சொல்லுமே
04. குடும்பம் மகிழும் பூங்காவாகுமே
05. குழந்தைகள் மகிழ்ந்திடும் ஞானமாகுமே
06. நல்லோர் நடமாடும் சோலையாகுமே
07. அன்னையோடு இணைக்கும் பாசக் கயிறாகுமே
08. வரும் தலைமுறை காக்க நான் ஈட்டிய சொத்தாகுமே
09. வாலிபர் கழுத்தில் ஊஞ்சலாகுமே
10. கூடி செபிக்க அருள்மழையாகுமே
r2
11. எனக்கொரு ஆறுதலாகுமே
12. செப உதவிக்கான கலமாகுமே
13. பாதை காட்டும் கலங்கரையாகுமே
14. தன்னந்தனிமையில் துணையாகுமே
15. மனக்காயம் ஆற்ற மருந்தாகுமே
16. மனபாரம் குறை மந்திரமாகுமே
17. உயர் எண்ணம் கொள் ஏணியாகுமே
18. என்னை பிரதிபலிக்கும் அடையாளமாகுமே
19. நான் என்ற கர்வம் குறைத்த தேனாகுமே
20. நடந்தோ அமர்ந்தோ செபிக்க மனம் பூவாகிடுமே
r3
21. நோயுற்றோர் அருகில் உறவாகுமே
22. விண்ணுறவு நுழைவுச் சீட்டாகுமே
23. தீமனதை தடுக்கும் வேலியாகுமே
24. பாவநாட்டம் தடுக்கும் கேடயமாகுமே
25. நற்செயலாற்ற தூண்டும் உந்து சக்தியாகுமே
26. சாத்தானை எதிர்கொள்ள தீப்பிழம்பாகுமே
27. எண்ணில்லா வரம் தரு பழச்சோலையாகுமே
28. அலைபாயாது நடத்தும் நற்சாலையாகுமே
29. கண்ணீரை துடைக்கின்ற கரமாகுமே
30. அன்னையோடு பேச ஒலிவாங்கியாகுமே
r4
31. உலகிற்கு பயன்தர உதவும் நல்உப்பாகுமே
32. புரியாத மக்களுக்கு ஒரு ஆச்சரியமாகுமே
33. உணர்ந்து சொல்வோருக்கு அதிசயமாகுமே
34. பயண அசதி குறைக்கும் வசந்தமாகுமே
35. செபிக்க செபிக்க வாழ்வின் உரமாகுமே
36. பயம் போக்கிடும் உண்மை நண்பனாகுமே
37. தீங்காற்று தாக்கா அன்பு வீடாகுமே
38. அன்னைக்காக உழைக்கும் அடிமையாக்குமே
39. நெஞ்சம் நிறை வான் இனிமையாகுமே
40. இயேசுவோடிருக்க விண்கருவியாகுமே
r5
41. ஆன்ம உணவுக்கான குடிநீராகுமே
42. நற்கருணையை சுட்டிக்காட்டும் வழிகாட்டியாகுமே
43. தூயஆவியின் கொடைகளை நினைவூட்டும் உறைவிடமாகுமே
44. இயேசுவின் வாழ்வை சித்தரிக்கும் புத்தகமாகுமே
45. கைகளில் உறவாடும் வான் திரவியமாகுமே
46. கட்டுகளை விரட்டி கொல்லும் ஆயுதமாகுமே
47. நற்குணங்களை சேமிக்கும் பாத்திரமாகு மே
48. இயேசுவைத் தொடும் சுவாசமாகுமே
49. நம்பிக்கையை பலப்படுத்தும் தீபமாகுமே
50. ஆழ்மனதில் நீங்காது ஒலிக்கும் ரீங்காரமாகுமே
r6
51. வான் வீட்டில் எனக்கான இருக்கையாகுமே
52. இயேசுவோடு என்னை இருத்திடும் ஆணி வேராகுமே
53. என்றும் எப்பொழுதும் எங்கும் என்னை தாங்கிடுமே...
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் பக்கங்கள்


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com