அன்னை மரியாளின் வணக்கமாதம்

திருமதி அருள் சீலி அந்தோணி
	'தாயே நீ! கருவைச் சுமக்காமல்
	கருணையை சுமந்ததால்
	உலகிற்கெல்லாம் தாயானாய்"
	அன்னை தெரசா
	'அன்னை மரியாள் இயற்கைகளின் மணிமகுடம்
	இறைவன் வரைந்த வண்ண ஓவியம் அன்னை மரியாள் "

அன்பர்களே!
அன்னை மரியாளுக்கு மே மாதம் முழுவதும் வணக்கம் செலுத்தி மகிமைப்படுத்துகின்றது தாய் திருச்சபை. இந்நாட்களில் அன்னையைத் தரிசிக்கப் பக்த கோடிகள் சமயம் கடந்து வந்து தரிசிக்கும் அழகைக் காணும்போது பெருகுமே ஆனந்தம், பேரானந்தம்.

இயற்கையின் மகா சக்தி அன்னை மரியா எவ்வாறு? தூய ஆவி அன்னையிடம் நிழலிட்டது என்ற வானத்தூதரின் வார்த்தைகள் உலக மகா சக்தியோடு அன்னை தன்னை இணைத்துக் கொண்டாள். இந்த உண்மையின் அடைமொழிகளே! மாட்டுத் தொழுவத்தில் மகனைப் பெற்றெடுத்தாள் என்ற வார்த்தைகளின் கருப் பொருள். இதை உணர்ந்த புனித அரசியார் பிறப்பை "குடில்" என்ற கலைவடிவத்தில் சித்தரிக்கின்றார்.

விடுதலை நாயகி

அன்னை மரியா இயற்கையின் அடையாளம் எவ்வாறு எனில் பன்னிரு விண்மீன்களைச் சூடியவராக, நிலவின் மேல் நிற்பவராகக் காட்டப்படுகின்றாள். இவையே நம்மை இயற்கை சக்திகளோடு இணைக்கும் விடுதலை காவியமாக அன்னை மரியின் பக்தி உருப்பெறுகின்றது.

அன்னை மரி என்ற அற்புதக் காவியம் அக விடுதலைக்கு அடித்தளமாக அமைகிறது. ஒட்டு மொத்தச் சமுதாய விடுதலையை இலக்காகக் காட்டுகிறது. இயற்கையெல்லாம் அணிவகுக்கின்ற எழில் காவியம் அன்னை மரியா! எழில் நிலையைச் சுட்டிக்காட்டி நிறை விடுதலை வாழ்வை நிஜமாக்குகிறது!

எனவே தான் கோடை வெயிலில் கோடி நன்மை பெற மே மாதம் முழுவதும் அன்னையின் மாதமாகத் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. எனவே பக்தர்களாகிய நாம் அன்னையோடு இணைந்து அவரது வாழ்வில் ஏற்படும் உண்மை விடுதலை கூறுகளை நம தாக்கி ஆரவாரமில்லாத புனித புரட்சி மாலை எனும் செபமாலை சொல்வதின் மூலம் இச்சமுதாயத்தை மாற்றியமைக்க! நாட்டில் நல்லாட்சியாக்க! இலங்கைத் தமிழர் விடுதலை சுவாசக் காற்றைச் சுவாசிக்க!

இந்நவ நாள் மென்மையாக மாறும் என்ற நம்பிக்கை கீற்றை நமது உணர்வில் பதிப்போம். செபிப்போம் செபமாலை சொல்வோம். வாரீர் இறைகுலமே! மனுகுலமே!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் கருத்தோவியம்