இறைஇரக்கத்தின் நேரம்
டிசம்பர் 8ஆம் நாள்
திருமதி. அருள்சீலி அந்தோணி
நாமே அமல உற்பவி
அன்பார்ந்தவர்களே!
நவம்பர் 24, 1946 முதல் டிசம்பர் 8, 1947 வரையிலான காலகட்டத்தில், அன்னை மரியாள் அருட்சகோதரி பியரினாவுக்கு (Sr. Luisa Piccarreta) இத்தாலியின் (Montichiari) மோன்டிச்சியாரியில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் பதினொரு முறை தோன்றினார்..
காட்சி தந்த கன்னிமரி தன்னை 'இரகசிய ரோஜா' என்று வெளிப்படுத்தினார்கள். 1947ல் நவம்பர் 16ஆம் நாள் அன்னை கொடுத்த முக்கிய செய்தி: எந்த மானிடரின் துயர் துடைக்க இறைமைந்தன் புவி இறங்கினாரோ, அதே மக்கள் தூய்மைக்கு எதிரான பாவங்கள் செய்து வருவதால் என் மகன் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். புனித தன்மைக்கு விரோதமான பாவங்கள் அதிகரித்து வருவதால் நீங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக தவ முயற்சிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
நமது தவமுயற்சிகள் என்னவெனில் நம் ஒவ்வொருவரின் வாழ்வில் நாள் தோறும் எழக்கூடியத் துயரமான சிலுவைகளை முணுமுணுக்காமல் நல்மனதுடன் தாங்கிக் கொள்வதே தவமுயற்சியாகும்.
1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி 12 மணியளவில் கன்னி மரியா அருட்சகோதரி பியோரினோவுக்குக் காட்சி தந்தார். இந்த நேரம் 'தேவ கிருபையின் நேரம்' என்று மரியாள் குறிப்பிட்டார். அனைவரும் 12 மணிமுதல் 1மணி வரை செபத்தில் ஈடுபடுங்கள். தேவனின் கிருபையைப் பெற்றிடுங்கள்! என்பதே அக்காட்சி வலியுறுத்தும் செய்தி!
'தேவகிருபையின் நேரம்' - தாயின் வேண்டுகோள்
- டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அமல அனனை "நாமே அமல உற்பவி" என்று பறைசாற்றிய அன்னையின் பெருவிழா அன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை உன்னதான 'தேவ கிருபைநேரம்'
- தேவ கிருபை நேரத்தில் ஒரு இல்லத்திலோ ஆலயத்திலோ தங்கியிருந்து. செபிக்க அழைப்பு பெறுகின்றனர். அந்த வேளையில் பிராக்குகளைத் தவிர்த்திடுங்கள்! (உம்) அலைபேசி - தொலைபேசி - கதவுகள் தட்டும் ஓசையோ - பிற ஒலிகளோ முற்றிலும் தவிர்த்தல் அவசியம்! அகம் - புறம் இறைவன்பால் சங்கமித்தல் அவசியம். இறைவனின் உடனிருத்தலை உணரும் வண்ணம் நிசப்தம் நிலவ வேண்டும். தடைபடாத செபம் அவசியம் தேவை
- 51ஆம் திருப்பாடலில் கரம் விரித்து மூன்று முறை சொல்லி இந்த தேவ கிருபை நேரத்தைத் தொடங்க வேண்டும்.
- இறைமகனின் நற்கருணை பிரசன்னத்தில் இறை - மனித - உரையாடல் மௌனத்தில் இடம் பெற வேண்டும்.
வரம்
கேட்கும் வரம் கிடைக்கும் நேரமிது சுயநலம் தவிர்த்து - பொதுநலம் காண வரம் கேட்டுப் பெறுதல் நல்லது. "நற்கருணை நாதர் - என்னோடு சிறிது நேரம் உரையாடுவாயா? என்று அழைப்பு விடுக்கின்றார். அகிலமே இறைவனில் ஒன்றித்து மனமுருகி உரையாடி தேவனின் கிருபையைப் பெறும் நேரமிது என்பதனை மனதில் பதிவுச் செய்திடுவோம்.
தாமே அமல உற்பவியாக நமது பாவங்களைக் கழுவிடவும் தேவனின் கிருபையைப் பெற்றுக் கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றார். தேவனின் கிருபையைப் பெற்றிடுவோம். அவனியைக் காத்திடுவோம்.