உன்னில் சரண் அடைந்தேன்.
அ.அல்போன்ஸ், திருச்சி
நற்செய்திகளை ஒருமுறை படித்தால் மீட்பின் கதை தெரியும், மறுமுறை படித்தால் வாழ்வின் உண்மைகள் தெரியும். வேறொரு முறை படித்தால் ஆழமான தத்துவங்கள் புரியும் இப்படி ஒவ்வொரு முறையும் ஆழ்ந்து படிக்கப் படிக்க அளவிடமுடியாத அதன் பெருமை புதிது புதிதாகத் தோன்றும்.
நற்செய்திகளின் வார்த்தைகளின் அழுத்தங்களிலும், கருத்துகளின் அமைப்பிலும் நம்மை ஆழ்ந்து போகச் செய்கின்றன. அன்பிற்கு இலக்கணமாகின்றன.
இங்கே தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போராட்டத்தைப் பார்க்கமுடிகின்றது. அன்பெனும் தர்மத்தை இயேசு வாழ்ந்து காட்டுகின்றார். பொறுமையை யோசேப்பிடமும், தாழ்மையை அன்னை மரியிடம் காண்கின்றோம். தர்மம் அல்லாதது அதர்மம்.
தர்மம் ஒருவரது உறவுச் சூழல், எடுத்துக் கொண்ட பணியெனப் பல்வேறு பரிமாணங்களில் காணப்படுகின்றது. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் உள்ள போராட்டம்: நற்செய்தி ஆரம்பத்திலேயே காட்சிப்படுத்தப்படுகிறது. தொடக்கநூல் 3:15 இல் ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்றார். இந்த யுத்தம் கல்லாரியில் உள்ள சிலுவை வரை நீள்கிறது. இயேசுவுக்கும், சாத்தானுக்குமுள்ள சோதனையை மலைமீது காண்கின்றோம். அதன் பின்னர் மதகுருமார்கள், சதுசேயர், பரிசேயர், யூதசங்கம் இயேசுவை கொல்லத் துடிக்கின்றனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான முக்கியமான காட்சியைக் காண இரவோடு இரவாகக் கெத்சமேனி தோட்டத்திற்குச் செல்வோம். அங்கே யூதாஸ் காட்டிக் கொடுக்க இயேசுவை யூதவீரர்கள் பிடித்து, கட்டிக்கொண்டு போனார்கள். இயேசுவின் மீது வழக்கு விசித்திரமான வழக்கு
வினோதமான வழக்கு.
ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர். குற்றசாட்டு இல்லாமல் கைது செய்யபட்டார். சாட்சிகள் இல்லாமல் தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பு இல்லாமல் தண்டிக்கின்றார்கள்
வழக்கில் சந்தித்த சந்தர்ப்ப வாதங்கள், சறுக்கி விழவைக்கப்பட்ட சாட்சிகள், இரத்தப்பற்கள் - முறைத்த ஓநாய் அன்னாஸ், முரட்டுகுணம் கொண்ட கைப்பாஸ், முற்றிலும் வேறாகக் குற்றப்பத்திரிகையை மாற்றிய முரண்பாடுகள் முதலில் கடவுளின் மகன் என்று யூதசங்கம் மரணத்தண்டனை கொடுத்தது.
பின்னர் பிலாத்துவிடம் செசாரின் எதிரி என்று குற்றப் பத்தரிகையை மாற்றிய முரண்பாடுகள் - முதுகெலும்பில்லாத வாதங்கள் - கேள்விகள். இயேசுவை குற்றவாளியாக்கி யூதர்கள் சட்டத்தின் போர்வையில் ஒளிந்து கொண்டார்கள்.
இயேசுவுக்கு வாதாடச் சட்ட உதவி செய்ய ஆளில்லை. யூதசங்கம் ஏற்கவும் இல்லை. இயேசுவுக்கு அது மறுக்கப்பட்டது. நீரை கலக்கிய பழியை ஆட்டின் மீது சுமத்தினார்கள். தீர்ப்பைத் தீர்மானித்துக் கொண்டு துவங்கிய வழக்கு இது.
எதிர்வாதம் இல்லாத வழக்கு, ஏனெனில் வாதிட்டுக் கொண்டிருப்பது வாய்மை மட்டுமே. இப்பொழுது வழக்குப் பிலாத்துவிடம் வந்தது. கடவுளின் மகன் என்ற குற்றப்பத்திரிக்கை மாற்றி உரோமைஅரசிற்கு எதிராகக் கலகம் விளைவித்தான் என்று கட்டியம் கூறினார்கள்.
பிலாத்துவும் இயேசுவிம் இரண்டு முறை விசாரணைகளில் ஆறு கேள்விகளால் விசாரித்தார். ஒவ்வொருமுறையும் இயேசுவிடம் குற்றம் என்றும் காணவில்லை என்று ஒருமுறையல்ல, இருமுறையல்ல, மூன்றுமுறை குற்றம் ஒன்றும் இல்லை என்று இயேசுவை வீரர்களிடம் தண்டனையை நிறைவேற்றக் கூறினார்.
நீதிதராசு இந்த வழக்கில் எப்படி வேலை செய்கிறது ? நீதி தராசை - தட்டைத் தரையில் படும்படியாகவே பிடித்துக்கொண்டிருந்தது யூதசங்கமும், தலைமை குருக்களும் நீதி தராசை நியாயமாகப் பிடித்தவள் பிலாத்துவின் மனைவி அவள். தன்தீர்ப்பை பிலாத்துவிடம் சொன்னாள். பிலாத்துவோ அதை உணரவல்லை சிறிது அயர்ந்து தராசு தட்டிலேயே நீட்டிப் படுத்து விட்டார். சுருதி பிசகி ஒரு மரணமும் பாடப்பட்டு விட்டது. பிலாத்து ஒரு திசைதெரியாத பறவை. பிலாத்து, மனைவியின் வார்த்தையை உணரவில்லை. இயேசுவின் மௌனத்தையும் புரிந்து கொள்ள வில்லை. மரணதண்டனை கொடுக்கின்றார்.
தீர்ப்பு வந்ததும் யூதர்கள் தெரிந்துகொண்டார்கள். இயேசு தான் நீதிபதி என்று. பிலாத்துவோ குற்றவாளி கூண்டில். நீதி தராசின் முள்ளே நெஞ்சில் குத்திய கதை. நற்செய்திகளை வெறும் தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான எழுந்த போராட்டம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. வழக்கில் பார்த்துத் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போராட்டம் தான். வாழ்க்கையின் மர்ம சுழற்சியில் தர்மத்துக்கும் தர்மத்துக்குமே போராட்டம் வந்துவிடுகிறது. எளிதாகத் தோன்றும் தர்மம் அதனைப் பற்றி ஒழுகும்போது சிக்கலாகிவிடுகின்றது. ஒருவர் சொல்லுக்குக் கட்டுபட்டு இன்னெருவரின் சொல்லை மீறவேண்டி வந்தால், மனம் போன வழியில் நடக்கும்போது தர்மத்திற்கு எதிராகவே போராட்டம் தொடங்கியது. இங்கே யூதாஸின் நிலையை எடுத்துக் கொள்வோம்.
யூதாஸ் இயேசுவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தார். இயேசு மக்களுக்குப் போதத்த தினசரி பிரசங்கத்தைக் கேட்டது மட்டுமல்லாமல் அவருடைய அற்புதமான அற்புதங்களை அவர் கண்டதுமட்டுமல்லாமல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவின் பரிபூரணங்களையும் அனுபவித்தார். இத்தனைக்குப் பிறகும் உணராமல் மாறாமல் இருந்தானா? யூதாஸ் ஒரு பை வைத்திருந்தான். இரவு விருந்திற்குத் தேலையானவற்றை வாங்கவும், ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். அவன் முப்பது வெள்ளிகாசுகளைப் பையில் நிரப்பிக் கொண்டான் என்பதைச் சீடர்கள் அறியவில்லை. கடைசி இரவு விருந்தில் இயேசுவிடம் அப்பதுண்டை வாங்கினவன் உடனே அங்கிருந்து சென்றான். இயேசு இவன் பாதங்களையும் கழுவினார்.இயேசுவை தோட்டத்தில் வீரர்களுடன் வந்து முத்தமிட்டான்.
நீதிதராசு இந்த வழக்கில் எப்படி வேலை செய்கிறது ? நீதி தராசை - தட்டைத் தரையில் படும்படியாகவே பிடித்துக்கொண்டிருந்தது யூதசங்கமும், தலைமை குருக்களும் நீதி தராசை நியாயமாகப் பிடித்தவள் பிலாத்துவின் மனைவி அவள். தன்தீர்ப்பை பிலாத்துவிடம் சொன்னாள். பிலாத்துவோ அதை உணரவல்லை சிறிது அயர்ந்து தராசு தட்டிலேயே நீட்டிப் படுத்து விட்டார். சுருதி பிசகி ஒரு மரணமும் பாடப்பட்டு விட்டது. பிலாத்து ஒரு திசைதெரியாத பறவை. பிலாத்து, மனைவியின் வார்த்தையை உணரவில்லை. இயேசுவின் மௌனத்தையும் புரிந்து கொள்ள வில்லை. மரணதண்டனை கொடுக்கின்றார்.
தீர்ப்பு வந்ததும் யூதர்கள் தெரிந்துகொண்டார்கள். இயேசு தான் நீதிபதி என்று. பிலாத்துவோ குற்றவாளி கூண்டில். நீதி தராசின் முள்ளே நெஞ்சில் குத்திய கதை. நற்செய்திகளை வெறும் தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான எழுந்த போராட்டம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. வழக்கில் பார்த்து தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போராட்டம் தான். வாழ்க்கையின் மர்ம சுழற்சியில் தர்மத்துக்கும் தர்மத்துக்குமே போராட்டம் வந்துவிடுகிறது. எளிதாகத் தோன்றும் தர்மம் அதனைப் பற்றி ஒழுகும்போது சிக்கலாகிவிடுகின்றது. ஒருவர் சொல்லுக்குக் கட்டுபட்டு இன்னெருவரின் சொல்லை மீறவேண்டி வந்தால், மனம் போன வழியில் நடக்கும்போது தர்மத்திற்கு எதிராகவே போராட்டம் தொடங்கியது. இங்கே யூதாஸின் நிலையை எடுத்துக் கொள்வோம்.
யூதாஸ் இயேசுவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தார். இயேசு மக்களுக்கு போதத்த தினசரி பிரசங்கத்தை கேட்டது மட்டுமல்லாமல் அவருடைய அற்புதமான அற்புதங்களை அவர் கண்டதுமட்டுமல்லாமல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவின் பரிபூரணங்களையும் அனுபவித்தார். இத்தனைக்கு பிறகும் உணராமல் மாறாமல் இருந்தானா? யூதாஸ் ஒரு பை வைத்திருந்தான். இரவு விருந்திற்கு தேலையானவற்றை வாங்கவும், ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். அவன் முப்பது வெள்ளிகாசுகளை பையில் நிரப்பிக் கொண்டான் என்பதை சீடர்கள் அறியவில்லை. கடைசி இரவு விருந்தில் இயேசுவிடம் அப்பதுண்டை வாங்கினவன் உடனே அங்கிருந்து சென்றான். இயேசு இவன் பாதங்களையும் கழுவினார்.இயேசுவை தோட்டத்தில் வீரர்களுடன் வந்து முத்தமிட்டான்.
யூதாஸ் முத்தமிட்டபொழுதே இயேசு கொல்லப்பட்டு விட்டார், இயேசுவை கொன்ற முதல் ஈட்டி யூதாஸின் முத்தம்தான். இங்கு இயேசுவுடனே வாழ்ந்தவன் அவருக்கு எதிராக மாறினான். எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் (எபி6:8) யூதாஸுக்காக எழுதப்பட்ட வரிகள் "நிலம், அதன்மீது, அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி வேளாண்மை செய்வோருக்குப் பயன்தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசிப்பெற்றதாகும், மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின், அது பச்சாபத்திற்குள்ளாகும். முடிவில் அது தீக்கு இரையாக்கப்படும். யூதாஸ் ஒரு உதாரணம்.
அடுத்ததாக சீமோன் பேதுருவைப் பார்ப்போம்…
சீமோன் பேதுரு வலைகளை வீசி மீன்களைப் பிடித்தவர், இயேசுவின் வலையில் விழுந்தார். பிரதம சீடரானார் இவர்தான் இயேசுவை முதன்முதலாக அவர் தெய்வீகத்தையும், மெசியா என்பதையும், கடவுளின் மகன் என்பதையும் உணர்வு பூர்ணமாக உள்ளத்தில் நிறுத்தினார். அருள்மொழிகளையும், அற்புதங்களையும் கண்ணால் கண்ட சாட்சியானர். மறுரூபமானதை பார்த்தவர். ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார். இயேசு கைது செய்யும் நேரத்தில், தன்வாளால் வீரனின் காதை வெட்டினார். இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றபொழுது, அவர்களைப் பின்தொடர்ந்து தலைமை குரு முற்றத்தில் தீ முட்டிக் குளிரில் காய்ந்திருந்தார்.
இயேசுவை மறுதலிக்க…
சேவலும் கூவுவதற்கு அங்கே காத்திருந்தது. இயேசுவை மறுதலித்தார். சேவல் கூவியது. பேதுருவை இயேசு நோக்கினார். பின் மனம் உணர்ந்து அழுதார். மனந்திரும்பினார்.யூதாஸ் - இவன் திசை மாறிய ஓடை. இயேசுவை காட்டி கொடுப்பாய் என்று முன்னறிவித்தும் முத்தமிடும்போது “தோழா” என்று அழைத்த பொழுதும் அவன் மனந்திரும்பாமல் தற்கொலை செய்து கொண்டான்.
பேதுரு - இவர் நடை மறந்த நதி…
இயேசுவின் பார்வைபட்டதும் மனந்திருந்தி மீண்டும் புதுவாழ்வை தொடங்கினார். தர்மத்திற்கும் தர்மத்திற்குமே ஏற்படும் போரட்டங்கள் சிலுவையிலும் தொடர்கின்றது. சிலுவையின் அருகே செல்லுவோம்.
இயேசு சிலுவையில்…
மரணத் தீர்ப்பைத் தந்த தீயவர்களுக்குப் பிதாவிடம் மன்னிப்பு கேட்டார். கள்ளனுக்கு விண்ணரசில் இடம் தந்தார். அன்னைமரிக்கு ஆறுதலாக ஒரு மகனைக் காண்பித்தார்.
இப்பொழுது “என்தேவனே! என்தேவனே! ஏன் என்னைக் கைவிட்டடீர்” என்று கூக்கிரலிடுகிறார். கலங்குகிறார். மீண்டும் கூவி கதறுகின்றார்.
கடவுள், தந்தை தன் மகனைக் கைவிட்டுவிடுகின்றார்…
இயேசு திருமுழுக்கு பெற்றவுடன், வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறாவாக இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத் 3: 16-17)
மறுரூபமான போதும் கடவுளின் குரலைக் கேட்டோம். இப்பொழுது கைவிட்ட நேரத்தில் கடவுளின் குரலைக் கேட்கமுடியவில்லை. வானம் இருள் சூழ்ந்தது. இயேசு, நானும் தந்தையும் ஒன்று என்றார். தந்தையில் தன்னையும், தன்னில் தந்தையும் ஒன்றாக இருந்தனர் இது தர்மமே. உலகன் பாவங்களுக்காக இயேசுவை, தன் மகனைக் கைவிடுவதும் தர்மமே. கடவுள் இயேசுவை கைவிட்ட அந்தக் கணம் ஒரு நேர்மறையான விதிமீறல் நிகழ்ந்தது.
தர்மத்திற்கும் தர்மத்திற்கும் நிகழ்கின்ற போராட்டங்கள் இதை நற்செய்தி எவ்வாறு எதிர் கொள்கிறது? தனிதன்மைமிக்க ஒவ்வொருவரும் ஒரு திருப்பு முனையை நிகழ்த்துவதை நாம் பார்க்கின்றோம். இயேசு பின் எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
இங்கே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் உண்டான பேராட்டத்தைக் காண்கின்றோம். எதிர்மறை இயல்புகளை அருகருகே காண்பித்து ஆன்மீகத்தின் பொருளை ஆழமாக அறியச் சொல்கின்றது நற்செய்திகள்.
வெவ்வேறு விதமான தர்மங்கள் எல்லாருமே ஒவ்வொரு வகையில் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் எதைப் பின்பற்றுவது என்ற குழப்பங்கள் எழுந்து, அதில் நல் வழிக்காட்டியாக நல்ல பண்புகளை அள்ளித் தருவது நற்செய்திகள்..
அதர்மத்திற்கும் தர்மத்திற்குமான போராட்டங்களும், தர்மத்திற்கும் தர்மத்திற்குமான போராட்டங்களை எல்லாம் தெளிவாகக் கூறுகின்றது.
அதன் பயனாக மொத்த புத்தகத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஞானம் ரத்தினகம்பளத்தின் மேல் விரித்து உரைக்கப்படுகிறது.