விவிலியம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி
அ.அல்போன்ஸ்-திருச்சி
பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுத் தினமும் திருப்பலி பக்தியுடன் வாசிக்கப்பட்டு வருவது விவிலியம்.
விவிலியத்தை நுட்பமாக வாசிக்கும்பொழுது இயேசு கடவுளின் மகனாகப் பிறந்து மானிடராய் வாழ்கின்றனர். இயேசு யார்? இந்தக் கேள்வி விவிலியத்தால் மிக அழுத்தமாகத் துவக்கப்பட்டது. விவிலியத்தின் கருவானது. விவிலியம் முழுக்க முழுக்க இந்தக் கேள்விக்கான வெவ்வேறு விடைகளும் அதன் விளைவான போராட்டங்களும் காணப்படுகின்றன.
இயேசு யார் ? விவிலியம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி.
இயேசு சீடர்களிடம் ஒருமுறை ”நான் யார்?” (மத்தேயு 16:16) என்று கேட்கின்றார். எருசலேம் ஊர்வலத்திலும் தாவீதின் அரசரே என்று வாழ்த்தினர். ஆனாலும் கூட்டத்தில் ஒருவர் 'யார் இவர்' என்று குரல் எழும்புகிறது. இன்னும் சொல்லபோனால் அவரைக் கொல்லத் துடிக்கும் தலைமைகுருக்கள், பரிசேயர் இயேசுவின் அடையாளத்தைத் தான் கேட்கிறார்கள். அதுதான் பின்பு குற்றப்பத்திரிகையாக மாறுகிறது.
இயேசு யார் என்ற விடைக்கான தேடலில் ஒவ்வொரு பக்கமாக விவிலியத்தை மறுவாசிப்புச் செய்வோம்.
இயேசு அறிமுகமாகும்பொழுது மரியாவிடம் வானதூதர் “உன்னதக் கடவுளின் மகன்!” என்று கூறுகின்றார். இடையர்களுக்குக் கிறிஸ்து எனும் மீட்பர் என்று உரைக்கப்படுகிறது. பிறந்தபொழுது ஞானியர்கள் “யூதர்களின் அரசர்“ என்கிறார்கள்.
இயேசு திருமுழுக்கு பெறும் பொழுதும், உருமாற்றத்தின் பொழுதும் வானத்திலிருந்து வந்த குரல் இவர் என் அன்பார்ந்த மகன் என்கின்றது.
இயேசு தன்னைப் பற்றிக் கூறும்பொழுது நானே வழியும், உண்மையும், வாழ்வும் என்கின்றார். பிறிதொரு இடத்தில் உலகின் ஒளி, உயிரும் உயர்ப்பும் நானே என்கின்றார் இதை நாம் தத்துவார்த்தமாகத் தான் உணர முடியும். இன்னுமொரு சமயத்தில் நானும் தந்தையும் ஒன்று, தந்தை என்னிலும், நான் தந்தையினுள்ளும் இருக்கிறோம் என்கின்றார்.
சீடர்களோ மெசியா, இறைமகன் என்று கூறினார்கள். இவர்கள் அன்றாடம் அருளுரைகள் அதிசயங்கள் நேரடியாகக் கண்டு, உணர்ந்து கூறுகின்றனர். ஆனாலும் அதில் உறுதியாக இல்லை. ஒரு நெருக்கடி வரும்பொழுது அவரை விட்டு ஓடியதை, கெத்சமேனி தோட்டத்தில் வீரர்கள் இயேசுவை பிடிக்க வந்தபொழுது காண்கின்றோம். அவர்கள் ஏதேனும் ஓர் ஆவேசத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் கூறிவிடுகின்றார்கள்.
இயேசுவை பின் தொடர்ந்த மக்கள் என்ன கூறினார்கள். தாவீதின் குமாரனே என்கின்றனர். இவர் நசரேத்து தச்சன் மகன், இவர் தாய் மரியாள். மற்றும் யூதர்களின் அரசர், மெசியா என்றும் கூறுகின்றனர்.
இப்பொழுது இயேசு தலைமைகுருக்கள், பரிசேயர் முன்னிலையில், யூதர்கள் யூதேயாவற்கு சட்டத்தைச் சொன்னவர்கள் அவர்கள் தான். அதை மீறியவர்களும் அவர்கள் தான். மீறச்சொன்னவர்களும் அவர்கள் தான். இன்று பொய்சாட்சி கூறி விசாரனையைத் தொடங்கினார்கள்.
அன்னாஸ் முன்னாள் தலைமைகுரு மெசியாவா? என்று இயேசுவை கேட்கின்றான். கைப்பாஸ் இயேசுவை இறைமகனா? என்கின்றார். பிலாத்துவோ கலிலேயனா? யூதர்களின் அரசனா? என்று கேட்கின்றார்.
வாசிப்பை முடித்துவிட்டோம்...
இதுவரை பார்த்த இயேசுவை இருபரிமாணங்களில், இரட்டை குவிமையத்தில் (Duste Focus) பிறந்தது முதல் சிலுவையில் அறையும்வரை காண்கின்றோம். மனுமகனாவும், கடவுளின் மகனாகவும் அறிகின்றோம்… ஒவ்வொரு சமயத்தில் அற்புதங்களைச் செய்து தைறைமகனாய் காட்சியளிக்கும், அதே சமயத்தில் சாதாரண மனிதனாக அழுகின்றார். கோபப்படுகின்றார்.
விசாரனையின் பொழுது யூதசங்கத்தின் முன்பு இறைமகன் என்றும், உரோமை அரசு பிலாத்துவின் முன் அரசுக்கு எதிராக யூதர்களின் அரசன் எனவும் காண்கின்றோம்.
இதுவரை மக்கள் இயேசுவை பார்த்தது, சீடர்கள் இன்னும் நெருக்கமாகவும், தலைமை குருக்களும், பரிசேயர், யூதசங்களும் பார்த்தவிதத்தை விவிலியம் விலாவரியாகச் சொல்ல முடிக்கின்றது. இயேசு யார் என்பதை இப்பொழுது நாம் பார்ப்போம்.
யூதசங்கம் இயேசுவின் மீது பகை கொண்டது. அவருடைய செயல்களை நிறுத்தமுடியாமல் போனது. மக்கள் இயேசுவை தொடர்கிறார்கள். அவர்களால் இயேசுவை வெல்லமுடியவில்லை. எந்த ஆயுதமும் இல்லாத இயேசு இன்னும் தோற்கவில்லையே என்று சினம் கொள்கிறார்கள். முடிவில் அவர்கள் தந்தது சிலுவை மரணம்.
இயேசு சிலுவையில் எல்லாம் முடிந்தது என்று உரக்க கத்தி உயர்விட்டார்.
அப்பொழுது நூற்றுவர் தலைவன் இவர் உண்மையாகவே இறைமகன் என்றான்.
சிலுவையில் யூதர்களின் அரசன் இயேசு என்று எழுதியாருந்தது.
இதுவரையில் இயேசு உயிரோடு இருந்தபொழுது அவரைப் பற்றிச் சூழ்ந்திருந்த சீடர்களும், சுற்றிவந்த மக்களும் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கும், நூற்றுவர் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்?
இயேசுவை அன்றாடத் தேவைகளுக்காக ஆண்டவரே, தாவீதின் மகனே என்றார்கள். சீடர்கள் தங்கள் குரு யார் என்று கேட்டும்பொழுது மெசியா, இறைமகன் என்றார்கள், இந்த வார்த்தைகள் உள்ளத்தின் ஆழுத்திலிருந்து உணர்வோடு வரவில்லை. வீரர்கள் இயேசுவை சூழ்ந்தபொழுது ஒடியவர்கள்.
நூாற்றுவர் தலைவனோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், யாரும் கேள்வி கேட்காமல் அவனே தன் உள்ளத்தின் அடி ஆடித்திலிருந்து கூறுகின்றான் இயேசு இறைமகன் என்று.
இவன் பாடுகளின் தொடக்கத்திலிருந்தே பார்க்கின்றான். இவன் இயேசுவின் தெய்வீக தன்மைபற்றிய யூத நம்பிக்கைகளை அறிந்திருக்காத ஓர் உரோமை அரசின் படைவீரன்.
இயேசுவை பிடித்துக் கட்டி, கைது செய்து, இழுத்து சென்று அன்னாஸ், கைப்பாளிங் முன்னிலையில் நிறுத்தினார்கள் யூதவீரர்கள். அங்குக் இயேசுமேல் துப்பி, முகத்தை மூடிக் கையால் குத்தி, கன்னத்தில் அறைந்தனர்.
பிலாத்துவன் முன்னிலையில் முள்முடி பின்னித் தலையின் மேல் வைத்து, கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பிச் சிலுவையில் அறைந்தனர்.
உலையில் இருக்கும் பாத்திரத்திற்குக் கொதிநிலை வரும். பெருமூச்சு வரும். பாடுகள் பட்ட இயேசுவுக்கு எதுவுமே வரலில்லை. மௌனமாக நின்றார்.
இவையனைத்துமே நேரில் சாட்சியாா காண்கின்றான் வெகுதெளிவாகக் கூறுகின்றான் இயேசு இறைமகன் என்று...
பந்தி மேற்பார்வையாளன் கானாவூரில் திராட்சை ரசமாக மாறியிருந்த தண்ணீரை சுவைத்தான்.
நூற்றவர் தலைவன் இயேசு கிறிஸ்துவாக மாறியதை சுவைத்தான்.
திருப்பாடல் பாடியதே (34:1) ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்தைப் போல, யூதரல்லாத ஒருவன் இந்த அறிவிப்பை வெளியிட்டது, இயேசுவின் தெய்வீகதன்மை மற்றும் அவரது மரணத்தைச் சுற்றுயுள்ள சூழ்நிலைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை.
கிறிஸ்துவ நம்பிக்கையில் நூற்றுவர் தலைவரின் இந்த அறிக்கை, இறைமகனாக இயேசுவை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியமாகவும், மனித குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக அவரது தியாக மரணத்தை உறுதிப்படுத்துவதாகவும் கருதலாம்.
இவன் யூதர்கள் விலக்கப்பட்ட கல்லை மூலை கல்லாகப் பார்த்தான்.
இவன் ஆயனின் குரல் ஆடு கேட்ட ஆடு!
பார்வையற்ற இவன் பார்வை பெற்றான்!
நாமும் - பார்ப்போம்...
விழியின் வழியே...
உணர்வோம் இறைமகனை...