என் அருள்‌ உனக்குப்‌ போதும்

அருட்சகோதரி ஜோவிதா, தூய சிலுவை மடம், திருச்சி‌.

உண்மையான அன்பு அருள்‌ என்பது அன்பின்‌ பிறப்பிடம்‌. எங்கு அன்பு உண்டோ. அங்கு ஆண்டவரின்‌ அருளும்‌ கூடவே வரும்‌, அன்பும்‌, நட்பும்‌ எங்குள்ளதோ அங்கே இறைவன்‌ வாழ்கின்றார்‌. தந்தையாம்‌ இறைவன்‌ நம் மீது கொண்ட அன்பினால்‌ தம்‌ அன்ப மகன்‌ இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினர்‌. அதற்‌குக்‌ கருவியாக அன்னை மரியா இறை சித்தத்‌தற்கு தன்னை முழுமையாக ஓப்புக்கொடுத்தார். எனவே, நம்மில்‌ இறையன்பு, அவரின்‌ அருள் பெருகிட வேண்டுமென்றால்‌ நம்மையே நாம் முழுமையாக இறைவனிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌. தூய பவுலடியார்‌ பல பாடுகள்‌ பட்டு இறையன்பை அகிலத்திற்கம்‌ பறைசாற்றினர்‌. அத்துன்பத்தின்‌ மத்தியில்‌ இறை சித்தத்தை கற்றார்‌. ஆண்டவரிடம்‌ பலமுறை மன்றாடி துன்பம்‌ நீங்கிட வேண்டுதல்‌ செய்த அவருக்கு கிடைத்த பதில்‌ "என்‌ அருள்‌ உனக்குப்‌ போதும்” (2கொரி 12:9), எனவே, எங்கு உண்‌மையான அன்பு உண்டோ அங்கு துன்பம்‌ கண்டு மனம்‌ சோராது. மாறாக மனம்‌ உறுதி பெறும்‌, அதுதான்‌ உண்மையான அன்பு. அன்பில்‌ பகிர்வு உண்டு, தியாகமும்‌ உண்டு.

எனவே, அன்பு என்பது பிறரிடம்‌ இருந்து பெறுவதில்‌ மட்டுமல்ல, கொடுப்பதிலும்தான்‌ அன்பு அதிகரிக்கும்‌, தந்தையாம்‌ இறைவன்‌ இயேசுவை தியாகப்‌ பலியாக்கி நமக்கு மீட்பு கொடுத்தும்‌, ஆபிரகாம்‌ ஆண்டவரின்‌ சித்தத்திற்கு அடிபணிந்து தன்‌ ஒரே மகனை பலிகொடுக்கத்‌ துணிந்தார்‌. யோபு சாத்தானால்‌ சோதிக்கப்பட்டு உடமை எல்லாம்‌ இழந்தார்‌. ஆயினும்‌ இறையன்பு, இறை நம்பிக்கையில்‌ அவர்‌ மனம்‌ தளரவில்லை. சாரத்‌ நாட்டு பெண்‌ இசையாஸ்‌ தீர்க்கத்தரிசி உணவு கேட்டபோது தயங்கினாள்‌. இசையாஸ்‌ தீர்க்கதரிசியின்‌ வார்த்தைக்குக்‌ கீழ்ப்படிந்து அவருக்கு உணவு கொடுத்‌தார்‌. அன்றிலிருந்து அவரது மாவு பிசையும்‌ தொட்டியும்‌, கூடையும்‌ குறையின்றி கூடிக்‌கொண்டே இருந்தது. தொநூ 28:8 இவ்வாறு கூறுகிறது... னவே நாம்‌ பிறரூர்குக்‌ கொடுக்‌கும்போது எந்தக்‌ குறையும்‌ வராது. மாறாக எல்லா நன்மைகளும்‌ அதிகரிக்கும்‌.

நம்பிக்கையினால்‌ இறையருள் அதிகரிக்கும். பெரும்பாலான பெற்றோர்‌ எப்ரல்‌, மே, சூன்‌, சூலை மாதங்களில்‌ தம்‌ பிள்ளைகளைப்‌ பற்றி குவலைப்படுவதுண்டு. ரிசல்ட்‌ எப்படியோ? எங்கு படிக்க வைப்பது? கல்லூரியா? மருத்‌துவமா? பொறியியலா? பணத்திற்கு யாரை அணுகலாம்‌? என்று தங்களுக்குள்ளே கலங்கித்‌ தவிப்பதுண்டு, அதிலும்‌ நல்ல ரிசல்‌ட்‌ இன்றி, தோல்வி என்ற செய்தியைக்‌ கேட்டால்‌ குடும்‌பமே புலம்பித்‌ தவிப்பதுண்டு. அப்படியான நேரத்தில்‌ நம்‌ ஆண்டவர்‌ கூறுவது "அஞ்சாதே, நான்‌ தேவன்‌ (எசா 41:10). இந்த இறைவார்த்தையை நம்பு, அவரே அனைத்தையும் பார்த்துக்‌ கொள்வார்‌. காசுக்கு இரண்டு குருவிகள்‌ விற்பதில்லையா? எனிலும்‌.

எனவே, அஞ்சாதீர்கள்‌" (மத்‌ 10:29-38) என்ற இறைவார்த்‌தைகளை நம்பி நாம்‌ செபித்து இறைவனிடம்‌ எல்லாவற்றையும்‌ ஒப்படைப்போம்‌. “சும்மாயிரு” (லூக் 14:14) என்ற இறைவார்த்தையின்படி நம்மையே நால்‌ முழுமையாக அர்ப்பணித்து ஆண்டவரை நம்பும்போது புதிய வாழ்வு, புதியவழி, புதிய ஒளி கிடைக்கும்‌. மேலும்‌ “நான்‌ உங்களுக்குச்‌ சொல்கிறேன்‌ கேளுங்கள்‌ உங்களுக்குக்‌ கொடுக்கப்படும், தேடுங்கள்‌ நீங்கள்‌ கண்டடைவீர்கள்‌, தட்டுங்கள்‌ உங்களுக்குத்‌ திறக்கப்படும்‌” (ஜூலை‌ 11:9) என்ற இறை வார்த்தை வாழ்வாக்கி மனிதரிடம்‌ தஞ்சம்‌ புகுவதைவிட இறைவளிடம்‌ தஞ்சம்‌ புகுவதே மேல்‌ என்று ஆண்டவன நம்பினால்‌ அனைத்‌துக்‌ காரியங்களும்‌ வெற்றியாய்‌ அமையும்‌.

துன்பத்தில்‌ சோர்ந்து போகாதே “தடைகளை நீக்கிப்‌ போடுகிறவர்‌ உனக்கு முன்பாக நடத்து போகிறார்” (மீக்கா 2:13). “என்‌ சமூகம்‌ உனக்கு முன்பாகச்‌ செல்லும்‌” (விப 34:14), இவற்றை உன்‌ வாழ்வின்‌ தாரகமந்திரமாக ஏற்று வாழும்போது துன்பத்திற்கு பதில்‌ நன்மையே நடக்கும்‌. “ஆண்டவரே என்‌ விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தரூளும்‌. எனெனில்‌ நாண்‌ உம்மை நோக்கியே மன்றாடுகிறேன்‌” (திபா 5:1-2) என்போம். அவரை தேக்கி மன்றாடும்போது இஸ்ரவேலாகிய உன்னைக்‌ காக்கிறவர்‌ கண்ணயர்வதமில்லை, உறங்குவதுமில்லை. (திபா 121:4) என்று அவரே உன்னிடம்‌ பேசி உன்னைத்‌ தேற்றுவார்‌, மேலும்‌ “உமது கண்ணின்‌ மணியென என்னைக்‌ காத்தருளும்‌, உம்‌ சிறகுகளில்‌ நிழலில்‌ என்னை மூடிக்கொள்ளும்‌” (திபா 17:8) என்று செபிக்கும்போது உன்‌ துன்பம்‌ எதுவும்‌ வெளியில்‌ தெரியாது.

யோபு தன்‌ வாழ்வில்‌ சொத்து, சுகம்‌, பிள்ளைகள்‌ அனைத்‌தையும்‌ இழந்து சாத்தானால்‌ சோதிககப்பட்டார். ஆனால்‌ அவர்‌ தன்னை கேலி செய்த நண்பர்கள்‌, மனைவி ஆகியோரை மன்னித்து நண்பர்‌களுக்காகச் ‌ செபித்த நோத்தில்‌ யோபுவின்‌ வேண்டுதல்‌ கேட்ட ஆண்டவர்‌ அவருக்கு இரட்டப்பான ஆசிர்வாதங்களை வழங்கினார்‌. (யோ 42:10), எனவே, கடன்‌, பணத்தால்‌, பிள்ளைகளால்‌, கணவனால்‌ துன்பமா? கலங்கா‌தே, உன்னையும்‌ என்னையும்‌ படைத்தவர்‌ கைவிடமாட்டார்‌... ஆண்டவர்‌ சீயோனிலிருந்த உனக்கு ஆசிவழங்குவராக. காணும்படி செய்‌வாராக. மேலும்‌ ஆண்டவர் கிருபையும்‌, அருளும்‌ உன்னைக்‌ காப்பதாக. "எப்பொழுதும்‌ மகிழ்ச்சியாய்‌ இருங்கள்‌. இடைவிடாது இறைவனிடம்‌ செபியுங்கள்‌. எல்லா சூழ்நிலைகளிலும்‌ நன்றி கூறுங்கள்‌” (1தெச 5:15). அப்போது மனதில்‌ அமைதி, ஆண்டவர் பெருகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  கிறிஸ்து