குழந்தை இயேசுவின் காணிக்கை!

திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர்
jesus

ஓ, பரிசுத்த திருக்குடும்பமே ...!
இன்று 40 ஆம் நாள் உம் திருமகனை தன் தந்தைக்கு காணிக்கையாக அர்ப்பணிக்கின்றீர்களோ!
ஐயோ! நாங்களும் இயேசு பாலகனை அர்ப்பணிக்கும் நேரம் எங்களையும் காணிக்கையாக்க ஆலயம் வந்துள்ளோம்.
ஆனால் ...எங்கள் நாட்டின் சோக கதையை கொஞ்சம் கேளுங்களேன்.

எங்கள் இந்திய நாடு குருதி சிந்திய நாடு. இருட்டில் இருந்து கொண்டு சுதந்திரம் என்ற ஒளிக்காக விரதம் இருந்த காலம் அன்று. இன்று எமக்காக நீர் மண்ணகத்தில் பிறந்து தவழ்ந்து உலகின் ஒளியாக மிளிர்வதை காண மனமில்லாதவர்கள் ஒருபுறம். உமது அர்ப்பணம் எம் போன்ற எளியோருக்குதான் என்பதை உறுதியூட்ட அன்று நீதிமான் சிமியோன் திருமுகத்தை காணாமல் உயிர் விடுவதில்லை என்று காத்திருந்தார். அவரது கண்கள் உமது பேரொளியை கண்டு கொண்டன. இதனை உணர்த்தவே அவரை இறைவன் பல ஆண்டுகள் வாழ வைத்தார்.

இறைமைந்தனே, உமது பிறப்பு பலாது வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் வித்தாக அமையும் என்பதை அவரது வாயிலாக வெளிப்படுத்தியவர் தந்தையே!

இன்று காணிக்கை அன்னையாக மகிழ்வோடு அர்ப்பணிக்கின்ற அன்னை தன் மகனின் 33வது வயதில் தன் மார்பு திறக்கப்பட்டு வியாகுல அன்னையாக நிற்பாள் என்பதை வெளிப்படுத்தியவரும் நீதிமான் சிமியோன். அன்று அந்த அன்னை உணர தொடுத்த அம்பே, "உன்னையும் ஒரு வாள் ஊடுருவும்" என்ற வார்த்தைகள் எத்தகையதோ! என்று அன்னை மரி மனதில் பொதிந்து வைத்து சிந்தித்து கொண்டிருந்தார். ஆனால், இன்று எமது நாட்டில் வெளிச்சத்தில்தான் வாழ்கின்றோமென்று சொல்லத்தான் கேட்கின்றோம். ஆனால், தாய் நாட்டின் மீது பற்றற்றவர்கள் சாதியின் மீதோ பற்றுள்ளவர்கள் மதத்தின் மீதோ வெறியுள்ளவர்கள் உமது நாமத்தை உச்சரிக்கின்றவர்களைக் கொன்று குவிக்கின்றார்களே! அவர்கள் ஆன்மாவையும் இந்நாளில் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம். அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியை தந்தருளும் இயேசுவே!

காணிக்கை அன்னையே,
மகன் அனைவருக்கும் அன்பு செய் என்றார். ஆனால், அவரது கூற்றில் எழுத்துப் பிழை இருப்ப காட்டதாக கருதி இந்த மானிடர் வம்பு செய் என்று மக்களை வதைக்கின்றார்கள்

காணிக்கையாகும் எம் அன்பு இயேசுவே, நீர் மட்டும் அரசியலில் தலைவர் ஆனால் உமக்காக தீக்குளிக்க அனேகர் உண்டு, ஆனால், அது உம்மால் முடியாது. உயிர்களை காக்கத் தானே இந்த மண்ணகம் வந்து உதித்தாய்!

உண்மை ஒன்றுதானே உமது வேதவாக்கு. அடுத்தவருக்காக தம் உயிரை விடத்தானே உமக்கு தெரியும். எங்கள் நாட்டு ஏழைகள் பனியில் மழையில் நனைகின்றனர். வெயிலில் வெந்து போகின்றனர். வீதியில் விதியே என்று வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த சாத்திரமும் இடம் கொடுக்கவில்லை. வறுமையின் கொடுமையில் திருடர்களாய், விபச்சாரிகளாய், பிச்சைக்காரர் களாய் அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை.

இன்னும் .... இன்னும் .... காணாமல் போன ஆடுகளாக திரிகின்றனர். காணிக்கையாகும் இயேசு பாலகனே காணாமல் போவது இவர்களது வேலை முடிந்தால் கண்டுபிடி. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது அவனது செயலினாலே என்பதை எவரும் உணர்வதில்லை. பாவிகளை மீட்க புவி இறங்கிய மைந்தனே! நீர் காணிக்கை யாகும் இந்நாளில் ஏழைகளின் சொர்க்கம் நீர்தான் என்பதை உமது போதனைகளாலும் செயல்பாட்டினாலும் புதுமைகளாலும் உவமைகளினாலும் பதிவு செய்துள்ளீர் என்பதை நின் உமது மனுக்குலம் படித்திட அடைத்திட ருசித்திட செயல்பாட்டிலும், வாழ்விலும் வாழ்ந்து இன்றைய நாள் பொன்னாளாக ஒளிர்ந்திட வேண்டிவரம் தாரும் அன்னையே. குழந்தை இயேசுவே ... ஆமென்

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு இறைமகன் இயேசு