jabam03

விசுவசியுங்கள். உங்களுக்குக் கைகூடும்.

"ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்: நீங்கள் கேட்டபடியே நடக்கும். நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்" என்று கூறினார். " மாற்கு 11:24,25.

இயேசு நமக்கு செபிக்கக் கற்றுக் கொடுத்தவர் மட்டுமில்லை. நமக்கு முன்மாதிரியாக செபித்துக் காட்டியுள்ளார். கடவுளின் மகனாக இருந்தாலும், மனிதனாய் பிறந்த இயேசு தம் தாய்தந்தையிடமும், யூதர்களின் ஆலயங்களிலும் செபிக்கக் கற்றுக் கொண்டார். அவர்தன் வாழ்வில் திருமுழுக்குப் பெற்ற பொழுதிலிருந்து கல்வாரியில் உயிர் விடும்வரை தொடர்ந்து செபித்தார். மனிதபலவினங்களிலும் குறிப்பாக லாசார் கல்லறையிலும் செபித்தார். அவர் தன் செபத்தை நன்றி செபமாகவே செய்து வந்தார்.

அவரின் செபத்தில் மனிதநேயம், இறைவனுக்கு நன்றி, தந்தையின் செயல்கள் அனைத்துமே தன் நன்மைக்கே என்ற ஆழமான நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. சிலுவைமரத்தில் அவர் தொங்கியபோது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த மனிதநேயமும், தந்தையின்பால் அவர் கொண்ட நம்பிக்கையும் தெரியும் விதத்தில் அவரது ஏழு வார்த்தைகள் அமைந்திருந்தது. அவரின் செபம் கேட்கப்பட்டது. தந்தையும் அவரை தான்பால் ஈர்த்தக்கொண்டார் இயேசுவின் செபங்கள் கேட்க்கப்பட்டன. அதுவே நாம் செபவாழ்வின் பலமும். அசைக்கமுடியாத நம்பிக்கையும் ஆகும்.


இயேசுவின் செபத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை..
உண்மையான செபம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும்.


இயேசு செபிக்கும் போது வேறும் வார்த்தைகளாலும், உணர்வுகளாலும் அல்லாமல் உள்மனத்திலிருந்து செபித்தார். 'அறையினுள் சென்று உங்கள் தந்தையே நோக்கி செபியுங்கள். அவரும் உங்கள் செபங்களைக் கேட்பார்.' என்று இயேசு கூறும்போது அறை என்பது நம் உள்மனமே ஆகும். உண்மையான செபம் ஆழமான விசுவாசத்திலிருந்து வரவேண்டும்.

தன் வானகத்தந்தையை நோக்கி செபிக்கும்போது இயேசு அளவில்லா விசுவாசம் கொண்டிருந்தார். அந்த விசுவாசமே அவரின் மரணம் மட்டும் நிலைத்திருந்தது. ஒரு குழந்தை உள்ளம் கொண்டு நம்மை அன்பு செய்யும் பரமதந்தையிடம் செபிக்க அழைக்கிறார்.
இயேசுவே! உமது அன்பிற்காக எல்லோரையும் முழு மனத்தோடு மன்னிக்கவும், மன்னிப்புக் கேட்கவும், வேண்டிய கிருபையும், சக்தியும், மனத்திடனும் தாரும்.

இயேசுவே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் தகுந்த நேரத்தில் நீர் தருகின்றீர் என்று நாங்கள் நம்புகின்றோம்.


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்