திரு இருதயத்தின் சிறப்பு

அருட்சகோதரி ஜோவிதா

“நல்ல இதயம் ஒன்று தா" என்று நாவால் பாடுகின்றோம். நல்ல இதயத்தில் இரக்கமும், ஈகையும் உண்டு. அம்மாவின் இதயம் தியாகம் அன்பு மிகுந்தது. அப்படி அந்த அம்மா. இதயத்தைப் படைத்த ஆண்டவனின் இதயம் அதைவிடப் பெரியதும், தியாகம் மிக்கதாகயும்தான் இருக்கும். ஆம், அந்த இதயம் ஆறுதலின் இதயம், அடைக்கலம் தரும் இதயம். அன்புமிகு இதயம். பார் போற்றும் பரிசுத்த இதயம். எனவே, திரு இருதயத்தை போற்றி வணங்கும் கிறித்தவர்களாகிய நாம் அன்பில் சிறந்து, பகைவரை மன்னித்து, பகிர்வில் பாசத்தைப் பொழியும்போது நம் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஆம், அதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு.

தூய இதயத்தின் தன்மை

1கொரி 13 இல் கூறப்பட்டுள்ளது போல அன்பு பொறுமை, பரிவு, நன்ன யம்.... ஆகிய அனைத்துப் பண்பு களையும் தன்னகத்தே கொண்டது. அதில் இறுமாப்பு கிடையாது. மாறாக எல்லோரின் நலனில் அக்கறை காட்டி டும். மனத்தாழ்ச்சியும், மன்னிப்பும் மிகுந்த இதயம்தான் ஆண்டவரின் திரு இருதயம். அந்த அன்பு இதயத் தின் ஆதரவைத் தேடி ஆயிரக் கணக்கான மக்கள் முதல் வெள்ளிக் கிழமை அன்று இடைக்காட்டூர் சென்று மகிழ்ந்து மனதாரப் போற்றுகின்றனர். எனவே, இடைக்காட்டூர் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படு கின்றன. அந்த ஆண்டவரின் அன்புப் பிள்ளைகள் அவர் வழியில் நடந்து அவருக்குச் சாட்சியாய் வாழ சூன் மாதம் நமக்கு நினைவூட்டுகிறது.

இறையாட்சி இம்மண்ணில்

நாம் எல்லோரும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, படைத்த பரமனை போற்றிப் புகழ்வது நம் முதல் கடமை. நம்மைப் படைத்த ஆண்டவர் நம்மை அன்புசெய்வது போல் நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம் என்று 2யோவா 1:5 கூறுகிறது. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது (1யோவா 1:6), எனவே, அன்பு எங்கு உண்டோ அங்கு புதிய படைப்பு உருவாகின்றது (யோவா 3:16). "தம் ஒரே மகன்மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியாமல் மீட்புப் பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவிற்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந் தார்". அதுதான் அன்பின் ஆழம். அது அளவிட முடியாதது என்று பாடுகின்றோம். எங்கு அன்பு உண்டோ, அங்கு இறைப் பிரசன் னம் உண்டு. இறைவன் நம்மோடு குடிகொள்ளும்போது நம்பிக்கை யும், நலன்களும் பெருகும். பகைமை ஒழியும். பாசம் பொங் கும். 'ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்' என்று மனிதன் மனிதனை மதித்து மாண்புடன் வாழும்போது இறையாட்சி அங்கு மலரும். இறைவனும், மனிதனும் இணையும்போது பூமியில் புதுவாழ்வு பூரிக்கும். அதுதான் அன்பின் மாண்பு.

ஆண்டவரின் இதயம் உறவின் பாலம்

மனம் திருந்தும் ஒரு பாவியை நினைத்து மகிழும் இதயம்தான் ஆண்டவரின் இதயம் (லூக் 15:10). மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண் டாகும். அதற்கு மனமாற்றம், மன்னிப்பு மிகத் தேவை (மத் 5:23-24). மன்னிப்பு, மனமாற்றம் எங்கு உண்டோ அங்கு பகைமை அழியும். பாசம் பொங்கும். எனவே, நாம் இறைவேண்டல் செய்யும் போது யாரிடம் மனத்தாங்கல் உண்டோ அவரிடம் மன்னிப்பு வேண்டும்போது நம் வேண்டுதல் ஏற்கப்படும். இறைவனுக்கும், நமக்கும் நல்லுறவு உண்டாகும். பாவத்தால் பரம தந்தையின் உறவை இழந்த நாம் “அப்பா தந்தாய்” என்று அழைக்கும் உரிமை பெற்றுத் தந்தவர் நம் இயேசு. இரத்தம் சிந்தி உறவை வளர்த்து, அமைதியான வாழ்வு வாழ வழிகாட்டிய இதயம்தான் திரு இருதயம்.

குழந்தை உள்ளம் விண்ணரசின் நுழைவாயில்

மத் 18:3-5 தாழ்ச்சியான இதயத்தை நேசிக்கும் ஆண்டவர் "நீங்கள் மனம் திருந்தி.... சிறுபிள்ளைகள்போல் தன்னை தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரிய வர்" என்கிறார். எனவேதான் இயேசு “பெருஞ்சுமை சுமந்து.... ஆம் என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது" (மத் 11:28-30) என்றார். தன்னையே தாழ்த்தும்போது மன அமைதி, ஆறுதல் கிடைக்கும். அதுதான் திரு இருதயத்தின் சிறப்பு. தன்னைத் தாழ்த்திய மார்க்கரேட் அம்மாவிடம் தம் திரு இதயத்தைக் காட்டி ஆசீர் அளித்தார் ஆண்டவர். தம் இதயம் அன்புத் தீயால் பற்றி எரிவதைக் கண்ட மார்க்கரேட் திரு இருதய ஆண்டவரிடம் அளவற்ற பக்தி கொண்டார். குடும்பங்களில் அன்புத் தீ பற்றி எரிய திரு இருதயப் படம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இத்திரு இருதயம் நம்மை கூடிச்செபிக்கத் தூண்டுகிறது. அன்பில் வளர, உறவை வளர்க்க திரு இருதய ஆண்டவரிடம் செபிப்போம். பகைமை அழிந்து பாசம் பொங் கிட திரு இதயம் நமக்குத் துணை புரிவதாக. அகில உலகினை ஆண்டவரிடம் ஒப்படைத்து தூய நெஞ்சத்தினராய் வாழ திரு இருதயம் நமக்கு நல்வழிகாட்டி. இறையாட்சி இம்மண்ணில் மலர சிறப்பாக சூன் மாதத்தில் நம் குடும்பங்களில் திரு இருதய பக்தியில் வளர்ப்போம்.
தேற்றும் ஆவியின் அனல்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது