புனித லொயோலா இஞ்ஞாசியார்

st.Ignatius_of_Loyola
புனித இஞ்ஞாசியார் பெருவிழாவை நம் திருச்சபை ஜூலை31 ஆம் நாள் கொண்டாடிமகிழ்கின்றது. இனிகோ என்ற அவரது இனிய நாமத்தைப் போற்றிப் புகழ்வோம்! அவரிடம் மன்றாடுவோம்.


புனித இஞ்ஞாசியார் எசுப்பானியா நாட்டின் இராணுவத் துறையில் ஒரு சிறந்த போர் வீரனாகத் திகழ்ந்தார். அதே வேளை அவரது பணியும் போராட்டமாக இருந்த நிலையில் போரில் காயப்பட்டு முடமானார். இந்த அசம்பாவிதமான நிலையிலும் அவரை ஒரு நல்ல சந்தர்ப்பவாதியாக மாற்றி மேன்மைபடுத்தும் வல்லவர், நம் இறைவன்! இஞ்ஞாசியார் காயப்பட்டுப் படுக்கையில் இருந்த போது பல புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் மறைநூலையும் ஆழ்ந்துப் படித்து வந்தார்.


அதுவே அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக இறைமகனின் இறைவாக்கு


“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” (லூக் 9:25)

எனும் நற்செய்தியின் வரிகள் இஞ்ஞாசியார் வெகுவாக வீழ்த்தியது.

உலகமெல்லாம் உனக்கு! ஆனால் உன்னையே இழக்கும் நிலைக்கு....

இவ்வுலகப் பெருமை, புகழ், பணம், பதவி, பட்டம் உலக ஆசாபாசங்கள் அனைத்தும் நீ பெற்றிருந்தாலும் அஃது உன் நிலை வாழ்வை இழக்கும் நிர்பந்தம் என்றால் நீ எதைத் தேர்ந்துக் கொள்வாய்? என்ற கேள்வி அவரை உசுப்பியது.

கலைச் சித்திரம் வாங்கிரசிக்க
கண் இரண்டையும் விற்றாய் என்றால்
கண்டவர் கைக்கொட்டிச் சிரிப்பாரோ!

என்ற விவரம் அவனை ஆழ்ந்துச் சிந்திக்க வைத்தது.

புனித பவுலடிகளார் இயேசுவால் ஆட்கொண்ட பிறகு அவருக்குரிய பெரிய பதவியெல்லாம் குப்பை எனக் கருதினார் (பிலி 3:8), அவரது முன் மாதிரிகையைப் பின் தொடர்ந்து, புனித இஞ்ஞாசியார் தான் கொண்டிருந்த இராணுவத் தளபதி என்ற உயர் பதவியைத் துச்சமெனக் கருதி, அரசப் போர் வீரனாக இருப்பதைத் துறந்து, இயேசு கிறிஸ்துவின் போர் வீரனாக மாறினார்.

இக்னேஷியஸ் என்றால் நெருப்புக்குரியவர்! யுத்த வீரனுடைய வீரத்தை, ஆண்டவர் இயேசு மூட்டிய அக்னி ஆவியில் நெருப்பாக மாறி, அதே அக்னி அபிஷேகமாக மாற்றிடும் வீரனாக மாறினார்.

உலகப் புகழை விட இறைவன் புகழுக்கு உழைத்திடுவேன் என்ற உறுதிப் புண்டு “அனைத்தும் ஆண்டவரின் அதிமிக மகிமைக்கே” என்ற விருது ஏற்று அதற்கேற்பத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார்

திருப்பயணியாக எருசலேமுக்குச் சென்று தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார் தான் பெற்ற பயனை அனைவரும் பெறும் பொருட்டு “ஆன்மிகப் புரட்சி” எனும் அரிய நூலை எழுதினார். தமக்கு உதவியாகச் சிலரைத் தேர்ந்து அவர்களை “இயேசு சபை” என்னும் பெயரில் நிறுவினார்.

அதில் துவக்கக் குழுவில் நமது நாட்டுப் பாதுகாவலர் புனித சவேரியார் - இவர்களைத் தொடர்ந்து ஆயிரமாயிரம் பேர் இயேசு சபைத் துறவியர் பல நாடுகளில் பல துறைகளில் பணிச் செய்து இறை அரசைப் பரப்பி வருகின்றனர். அவர் காலத்தில் திருச்சபையிலுள்ளச் சூழ்நிலைகளினால் பிரிவினைச் சபைகள் தோன்றிது.

இதை எதிர்க்கும் நிலை இஞ்ஞாசியார்க்கு இருந்தது. இன்றும் அந்நிலை நம் தலதிருச்சபையின் உள்ளதை நாம் அறிவோம். அவரைப் பின் தொடார்ந்துத் துறவிகளும், தொண்டர்களும், பக்தர்களும் ஒருங்கிணைந்து இன்றும் தோன்றியுள்ள சமயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண்போம்.

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இறைமகனின் வாக்கு நம்மில் ஊடுருவி இறைஅன்பில் என்றென்றும் நிலைத்திடப் புனித இஞ்ஞாசியார் வழியாக இயேசுவிடம் வேண்டுவோம்.

புனித  இஞ்ஞாசியார் செபம்

அன்பான ஆண்டவரே! தாராள உள்ளதோடு வாழ எனக்குக் கற்றுத்தாரும். காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் வாழ்நாளில் பணிப் புரிவேனாக! ஊதியத்தை எதிர் நோக்காமல் நான் உழைப்பேனாக! ஒன்று மட்டும் போதும் ஓ இறைவா! உமது திருவுளத்தை நிறைவேற்றுவதால் வரும் இன்பமொன்றையே நான் ஆசிக்கிறேன். ஆமென்

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது