வாழ்க்கைப் போராட்டம்
திருமதி.செலின் ஆரோக்கியராஜ்
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முடிந்தப் பின் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடினோம். நம் திருஅவை குடும்பங்களுக்கு எவ்வளவு முக்கித்துவம் கொடுக்கின்றதென்றால் அதற்கு ஒரு நாள் குறித்து விழா எடுக்கிறது. இப்படிபட்டநிலையில் இன்றைய குடும்பங்களில் உள்ள நிலவரங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை. திருக்குடும்பவிழா அர்த்தமற்றதாய் மாறி வருகிறது.
இன்று குடும்பங்களிடையே மணமுறிவுகள், பிளவுகள். ஊடகத் தாக்கத்தால், தொலைக்காட்சி தொடர்களால் ஏற்படும் தாக்கங்கள். குறிப்பாக ஒரு கணவனுக்கு இரு மனைவிகள், மனைவியோடு வாழும் கணவருக்கு அலுவலகத்தில் காதலி, முறையான திருமணப் பந்தமில்லாத சட்டபூர்வமற்ற திருமண வாழ்க்கை, கணவனை விலக்கிவிட்டு மறுதிருமணம் செய்தல் மற்றும் பல மக்களைத் திசைத் திருப்பிப் பாவ வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையில் மணமுறிவு 2-3 சதவிகிதமாக இருந்தது. இன்று அது இருமடங்காக வளர்ந்துள்ளது.
குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் நீதிமன்றம். பெங்களுரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒன்று மட்டுமே இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள் அதிக வழக்குகள் வருவதால் அவை மூன்றாக உயர்ந்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் உயர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. இதிலும் வருத்தமான செய்தி என்னவென்றால் படிக்காதவர்களை விட அதிகம் படித்த உயர் கல்வி பெற்ற மக்கள் தான் அதிக மணமுறிவு செய்கிறார்கள். இது குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும், திருஅவைக்கும் நல்லதல்ல.
இன்னுமோர் விடயம் திருமணம் செய்யாமல் குடும்ப வாழ்விற்குள் நுழையாமல் விருப்பம் போல வாழலாம் என்னும் மனநிலை மெல்ல மெல்ல பரவி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் 20-22 வயதில் திருமணம் நடத்தப்படும். இன்று 28-30 வயதானாலும் பெண்கள் திருமணம் செய்யத் தயாராகவில்லை. திருமணவாழ்க்கையை ஓர் அடிமை வாழ்வாகப் பார்க்கின்றார்கள். ஆண்டவர் ஆதாம் ஏவாள் குடும்பத்தை உருவாக்கி ஆசீர்வதித்ததை மறந்து போனார்கள்.
மணமுறிவுக்குப் பல காரணிகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்கள் சிலவற்றை மட்டும் சிறிதுப் பார்ப்போம்.
1.குடும்பங்களில் தெய்வ பயம்
1. குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் ஒருவருக்கொருவர் பேசவே நேரமில்லை. வேலைப் பளுவு.
2. உட்கார்ந்து மனம் திறந்துப் பேசுவதில்லை. ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.
3. குடும்ப உறப்பினர்கள் இணைந்துச் செயல் படுவதில்லை. குடும்பச் செபம் செபித்தில்லை.
4. நான் தான் பெரியவன் எனக் கணவன் நினைக்கிறான்.
5. மனைவி அவருக்கு நிகராக உழைக்கிறேன். சம்பாதிக்கிறேன். நான் ஒன்றும் அடிமையில்லை என்ற நினைப்பு.
6. தம்பதிகள் விவிலியத்தின் வாசகங்களைப் படிப்பதில்லை. நம்புவதுமில்லை.
7. எபேசியர் 5:21-25 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவக்கொருவர் பணிந்திருங்கள் ….. கணவர்கள் மனைவியை அன்புச் செலுத்த வேண்டும். எப்படியெனில் கிறிஸ்து திருஅவையை நேசிப்பது போலக் கணவன் மனைவியை நேசிக்க வேண்டும். இதை அவர்கள் உணர்வதில்லை.
8.குடும்பங்களில் தெய்வ பயம் பக்தி இல்லை.
2.குடும்பத்தில் பிரமாணிக்கம்
எல்லாவற்றிக்கும் மேலாகத் திருமணநாளில் எடுத்த வாக்குபிரமானம் –இன்பத்திலும், துன்பத்திலும், நோயிலும், சுகத்திலும் …..எல்லா நிலையில் பிரமாணிக்கமாக வாழ்வேன் என்று ஆண்டவரை முன் சாட்சியாக வைத்து எடுத்த திருமண ஒப்பந்ததையே தூக்கி எரிந்து விடுகின்றனர். தாங்கள் அளித்த வாக்கை மீறுகிறார்கள்.
1.கடவுளையும் புறக்கணித்து வாழ்கின்றனர். குடும்பங்களில் தெய்வபயம் ஆன்மீகபற்றுப் போயிற்று.
2..குடும்பங்களில் நேர்மை, உண்மைக் குறைந்துபோய், வீண்பேச்சு, செருக்கு போன்ற அசயல்கள் தலைவிரித்து ஆடுகிறது.
3.விட்டுக் கொடுக்கும் மாண்பு
குடும்பங்களில் பிரச்சனைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறவேண்டும்.
1.மத்தேயு 11:28-29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்.
2.நாம் இன்று அதைக் கற்று நடந்தால் குடும்பச் சமாதனம் நிலைத்திருக்கும்.
4.கடவுளிடம் அன்பு
தூய ஆவியின் வழியாக நம் உள்ளங்களின் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. அது கோபம்படாது. அது எல்லாவற்றையும் தாங்கும். 1.உரோமர் 5:5
1. ”நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” என யோசுவா கூறுகிறார். யோசுவா 24:16
2.நாம் உண்மையாக யோசுவாவைப்போலக் குடும்பத்தோடு ஆண்டவரிடம் செபித்து அவரி் நம்பிக்கை வைத்து அவருக்குப் பணி புரிந்தால் …….
3.நம் குடும்பங்களில் பிளவு, முறிவு இருக்காது. அவர் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.யோசுவா சென்ற இடமெல்லாம் ஆண்டவர் வெற்றியை தந்தார். அதே போல நம் குடும்பங்கள் வெந்நி வாழ்வு அடைவோம். யோசுவா 1:8
4.அவருடைய கட்டளைப்படி வாழ்ந்தால் அவருடைய பிள்ளைகளாய் இருப்போம். நாம் நலம் பெறுவோம். நம் சந்ததிகளும் வெற்றி வாழ்வு வாழ்வார்கள்.