AJS ராஜன் திருச்சி.

அஃது ஒரு சிற்றூர். பேருந்து நிற்கும் இடத்தில் ஒருவர் காத்துக்கொண்டு நின்றார். வயது 70க்கு மேல் இருக்கலாம். கையில் பிளாஸ்டிக் உறையில்சுற்றப்பட்ட மஞ்சள் ரோஜாக்கள் அடங்கிய பூச்செண்டு. அவை அவரது தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்டவை. பேருந்துக்காகக் காத்துக்கொண்டு அரைமணி நேரம் நின்றிப்பார். மாலை நான்கு மணி கதிரவன் தாக்குதல் குறைந்து கொண்டிருந்தது. எதிரே பேருந்து வருவதைக் கண்டு தன்னைத் தயாரித்துக்கொண்டு கையை நீட்டினார். பேருந்து நின்றது. அதில் ஏறிக் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்தார்..

' லூர்து நகர் கல்லறைத் தோட்டத்திற்கு ஒரு டிக்கெட்" என நடத்துனரிடம் பணத்தைக் கொடுத்தார். அவர் தந்தப் பயணச்சீட்டைப் பையில் வைத்து விட்டு அக்கம்பக்கம் பார்த்தார். பேருந்தில் கூட்டம் இல்லை. தனது வலதுபக்கத்தில் நடுத்தரவயதுடைய ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் உடகார்ந்து இருந்தார்கள். தனது கையிலிருந்த பூச்செண்டை அருகில் வைத்துவிட்டு அக்குழந்தையைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார். மெதுவாக அந்தச் சிறுமி அவர் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டு பூச்செண்டைத் தொட்டுப் பார்த்தாள்.

'பூ அழகாக இருக்க. யாருக்குக் கொண்டு போறீங்க?" என வினவப் புன்முறுலுடன் ' இதைப் பாட்டியின் கல்லறையில் வைக்கக் கொண்டுபோகிறேன். அவள் இறந்து இன்றுடன் 29 ஆண்டுகளாகின்றன." என்றார்.

'எனக்குத் தரமாட்டாயா?" எனக்கேட்டதைக் கவனித்த தாய் ' தெரசு! இங்கே வா" என அதட்டலுடன் கூப்பிட்டாள்.

' பரவாயில்லை. சின்னப்பிள்ளைத் தானே கேட்டால் என்ன?" எனச் சொல்லியபடியே 'இதோ நீ வைத்துக் கொள்" பூவை அவளிடம் கொடுத்தார்.

"பெரியவரே! லூர்து நகர் கல்லறைத்தோட்டம் வந்து விட்டது". என அவரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே விசில் அடித்தார். பேருந்து நின்றது. சிறுமியைப் பார்த்துக் கை அசைத்துக் கொண்டே கீழே இறங்கி அவர் கல்லறைத் தோட்டத்தை நோக்கினார். வெறிச்சோடிக் கிடந்தது.
' ஆரோக்கியமேரி !என்னை மன்னித்துவிடுடா! நான் உனக்குப் பிரியமான மஞ்சள்ரோஜாக் கொத்தை உனது கல்லறையில் வைக்க எண்ணி நமது தோட்டத்திலிருந்து பறித்து வந்தேன். பாவம் சின்னக்குழந்தை ஆசையுடன் கேட்டது. என்னால் மறுக்க முடியவில்லை. நான் உன் நினைவாக அவளிடம் கொடுத்தவிட்டேன்..
என்னை மன்னித்துவிடு" என மனதுக்குள் பேசிக்கொண்டு கண்ணீர் மல்க கல்லறைத் தோட்டத்தின் வாசலை அடைந்தார். காவலாளி கதவை திறந்துவிட்டார். தனது மனைவியின் கல்லறை முன் தனது செபத்தைத் தொடங்கினார்.

என்னை மன்னித்துவிடு" என மனதுக்குள் பேசிக்கொண்டு கண்ணீர் மல்கக் கல்லறைத் தோட்டத்தின் வாசலை அடைந்தார். காவலாளி கதவைத் திறந்துவிட்டார். தனது மனைவியின் கல்லறை முன் தனது செபத்தைத் தொடங்கினார்.

'ஐயா! நான் பக்கத்து ஊரிலிருந்தவன். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 15 வயதாக இருக்கும் பொழுது 10-ம் வகுப்பில் பெயிலாய் விட்டேன். அதனால் என்னைத் திட்டிய தாய், தந்தையருக்குத் தெரியாமல் ஒடிவிட்டேன். மும்பையில் கொஞ்சகாலம் கட்டிடவேலைச் சிற்றாளாக வேலைச் செய்தேன். பின்னர் அப்படியே வடக்கே சென்று ஒரு தமிழர் உதவியால் ஒரு பட்டறையில் சேர்ந்து ' லேத்" வேலைப் படித்து நல்ல முன்னேறி விட்டேன். இப்பொழுது கல்யாணமாகிக் குழந்தைகள் இருக்கிறார்கள். எனது மனைவி கட்டாயப் படுத்தி ஊருக்கு வந்து பெற்றோரைப் பார்க்க நினைத்தேன். என் அம்மா இறந்து 14-15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், என் அப்பா என் தங்கையுடன் சென்னை சென்றுவிட்டதாகவும் சொன்னார்கள். நான் என் அம்மாவின் கல்லறையைத் தேடிமன்னிப்புக் கேட்க விரும்பினேன். ஆனால் அவளது கல்லறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவலாளிக்கும் தெரியவில்லை. அவர் புதிதாக வந்தவராம். என்ன செய்வது என்ற எனக்குப் புரியவில்லை."

' அதனால் என்ன? இங்கு நின்று எல்லா ஆன்மாக்களுக்கவும் செபி. உனது தாயும் அதைக்கேட்டு உன்னை மன்னிப்பாள்." என ஆறுதல் கூறினார்.

'இது யார் கல்லறை? உங்கள் அம்மாவின் கல்லறையா?"

"இல்ல தம்பி. இது என் மனைவி ஆரோக்கியமேரியின் கல்லறை. இன்றுடன் அவள் இறந்து 29 ஆண்டுகள் ஆகிவிட்டன."

'அப்படியா! சரி. நான் கொண்டு வந்துள்ள மலர்ச் செண்டை எனது அம்மா என எண்ணிவைக்கிறேன்."

அவர் தனது பையிலிருந்து ஒரு பூங்கொத்தை எடுத்தார். அதில் நிறைய மஞ்சள் ரோஜாக்கள் அழகாகச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

அதை அவர் கல்லறையில் வைக்க அந்த பெரியவர் அதிர்ச்சியானார்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது