யோனத்தான்

வாழ்விலும் சாவிலும் இணைபிரியா அன்பு! நடபின் உச்சக்கட்ட நிலைக்கு இலக்கணமாக அமைவது யோனத்தான் தாவீது அன்பு. இரண்டு நண்பர்களுக்கிடையே இருந்துள்ள இந்த நட்பைப்போல் மனித வரலாற்றிலே நாம் காண்பது மிக அரிது என்று நாம் கூற முடியும்.

யோனத்தானும், தாவீது உடலளவில் அழகானவர்கள், ஆற்றலுள்ளவர்கள், பெரிய தளபதிகள்.யோனத்தன் வீரத்தளபதி அரச குமாரன். அரசனாகிய சவுலுக்குப் பட்டத்து இளவரசன். ஆயினும் தாவீதுதான் அடுத்து அரசனாக வருவான் என்று தெரிந்தும், யோனத்தன் காய்மகாரப்படவில்லை. நட்பில் கண்ணியமுள்ளவன். வாக்கு மாறாதவன். பிரமாணிக்கம் தவறாதவன்.
யோனத்தன் தனது தந்தையாகிய அரசனுக்கும்ää தாவீதுக்கும் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டிய இக்கட்டான நிலை. தனது தந்தையை விட்டுக் கொடுக்க முடியாது. தனது ஆப்த நண்பனாகிய தாவீதையும் விட்டுக் கொடுக்க முடியாது.

சவுல் காழ்ப்புணர்ச்சியால் தாவீதைக் கொல்ல முயற்சி செய்கினறான். தனது தந்தையைக் காட்டிக் கொடுக்காமல் தாவீதைப் பாதுகாக்கின்றான் யோனத்தன் . தனது தந்தையின் தீயதிட்டங்களை அறிந்து தாவீதுக்கு எச்சரிக்கை கொடுத்து அவனைக் காப்பாற்றுகின்றான்.

இதை அவன் எப்படிச் செய்ய முடிந்தது? என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழும்புவது இயற்கையே. கடவுளுடைய வார்த்தைக்கு அடிபணிந்ததனால்ää அவருடைய சித்தத்தை அறிந்து அதன்படி நடந்ததனால் தான் இருவரையும் அவனால் சமாளிக்க முடிந்தது.

போட்டி மனப்பான்மையில்லாமல் தனது நண்பன் தாவீது, தனது தந்தை சவுலுக்குப் பிற்பாடு அரசனாவன் என்பதை யோனத்தன் ஏற்றுக்கொண்டு தாவீதுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு அவனுக்கு  மனப்பக்குவம் இருந்தது. நட்பு தான் அவனுக்கு முதன்மையான காரியமாகத் தோன்றியது. அந்த நட்பைப் காப்பாற்ற எந்த வித தியாகத்தையும் ஏற்றுச் செய்ய அவன் தயாராய் இருந்தான்.

இளைஞர்கள் தங்களுடைய நட்பில் முதிர்ச்சி அடைந்து செயல்பட யோனத்தன் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றான்.

இளைஞனாய் இருந்தும் ஏது நல்லது? எது மேலானது? எது கடவுளுக்கும் - நண்பனுக்கும் உகந்தது என்பதை தேர்ந்து தெளியக்கூடிய அறிவு அவனுக்கு இருந்தது.  இந்த அறிவை இளைஞர்கள் பெற தினமும் இறைவார்த்தையைப் படித்து அதில் நிலைத்திருக்கக் கற்று கொள்ள வெண்டும். அதேசமயத்தில் பெற்றோர்களுக்குத் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களை எந்த நிலையிலும் காட்டிக் கொடுக்கமால் பொறுமையோடு அவர்களது பலவீனங்களையும் ஏற்றுப் புரிந்து கொண்டு, அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களைப் பாதுகாத்து அன்பு செய்ய வேண்டும்.நல்வழியிலே நடக்கும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தேடுத்து அவர்களுக்கு இளைஞர்கள் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டும்.

சவுல் இறந்த பொழுது தாவீது தனக்கு சவுல் செய்த சதித்தட்டங்களை மன்னித்து மறந்து அவனுக்கு இரங்கற் பா பாடுகின்றார். பிறர் நமக்கு இழைத்த துன்பங்களை மனத்தில் வைத்து நொந்து கொள்ளாமல் அவர்களை மன்னிக்க வேண்டும். சவுலும், யோனத்தனனும் இறந்த செய்தியைக் கேட்டு மனம் வெதும்பி அழ தாவீது வெட்கப்படவில்லை. இந்த இருவருடைய பிரிவால் வருந்திய தாவீது ஒரு மிக அழபான இரங்கற் பாவைப் பாடுகின்றார். இதுபோல ஓர் இரங்கற்பாவை இலக்கியங்களில் நாம் காண்பது அரிது. இப்பாடலை நாம் வாசித்து தியானித்து பயன் பெறுவோம். நமது வாழ்க்கையை மாற்றியமைத்து நமது நெருங்கிய நண்பர்களின் நட்பை மதித்து உறுதிப்படுத்துவோம். இப்பாடலுக்கு 'வில்லின் பாட்டு' என்பது பெயர்.

இதோ அந்தப் பாடல்

  • இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறதா! மாவீரர் எவ்வாறு மடிந்தார்!
  • காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்: அஸ்கலோன் பகுதிகளில் இதை அறிவிக்கப்பட வேண்டாம்: ஏனெனில், பெலிஸ்தியரின் மனைவிகள் அகமகிழக்கூடாது: விருத்தசேதன மற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது.
  • கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளை தராதிருப்பனவாக! ஏனெனில் வீரர்கள் கேடயங்கள் தீட்டப்பட்டனவே! சவுலின் கேடயங்கள் எண்ணெயால் மெருகு பெறாதே!
  • வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின் வாங்கியதும் இல்லை!
  • சவுல்! யோனத்தான்! அன்புடையார்ää அருள்வுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வார்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
  • இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!
  • போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்த்தபட்டனர்!உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
  • சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ!
  • மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது