இயேசுவின் திரு இருதயம் பேசுகின்றது

திருமதி அருள்சீலி அந்தோணி

கபிரியேல் வானதூதர் இயேசுவிடம் விண்ணேற்பு விழாவிற்கு அடுத்துக் கேட்கின்றார்... உரையாடல் தொடர்கின்றது.

உலக மக்களுக்காகச் சிலுவைச் சுமந்தீர். உயிரைக் கொடுத்தீர். காயங்களை ஏற்றீர். உயிர்த்தீர்... ஆனால், மக்கள் உங்களைப் புரிந்து கொண்டு நன்றியுணர்வோடு இருக்கின்றார்களா?

இயேசுவின் உள்ளத்தில்...
என் இறுதி சொட்டுக் குருதிவரை என் இதயத்தைப் பிளந்து, இன்னல்களைக் களைந்து, இருப்பதைப் பகிர்ந்து வாழ்ந்தேன். இறுதி மூச்சிலும் இவர்களை மன்னியும் என்றேன். உயிர்த்தப் பின்னும் என் அமைதியை ஈந்தேன். விண்ணகம் சென்றதும் துணையாளரையும் அனுப்பினேன். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் என்னை வஞ்சிக்கின்றார்கள். இவர்கள் வாழ்வை வளப்படுத்தவே வந்த என்னை மறந்தது ஏன்? அடுத்திருப்பவர்களின் துயர்த் துடைக்க இன்னும் அவர்கள் மறந்தது ஏனோ? வீதியில் வாழும் ஏழையின் முகத்தில் என்னைக் காண வேண்டும் என்றேன். ஆனால், அவர்கள் மாட மாளிகையில் அமர்ந்து வீதியிலிருப்போரை வஞ்சிப்பதேன்? என்னை மறந்ததேனோ? இன்னும் உம்மீது நம்பிக்கைத் தான். என்றாவது கண்டிப்பாக என் மக்கள் என் கனவை நனைவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனது மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தவே இருப்பினும் இறுதிவரை இன்று வாழ்கின்றேன். இவர்களை மன்னியும்.


ஆம் அன்பர்களே, அன்பினால் உருவாக்கப்படுவது மலர், பல மலர்களினால் தொடுக்கப்படுவது மனிதன். நல்ல மனிதர்களை உருவாக்க இறுதிவரை நான் இதயத்தைத் திறந்து உற்றத் துணையாளரின் இதயத்தில் ஒன்றினைந்து வாழ்வோம். இதுவே திரு இருதய ஆண்டவரின் உள்ளத்தில்...
அடிச்சுவடு!
முந்தையரின் அடிச்சுவட்டிலே ஏற்றங்கள்
பிந்தையரின் அடிச்சுவட்டிலே தாழ்வுகள்
விந்தையரின் அடிச்சுவட்டிலே விந்தைகள்
தந்தையரின் அடிச்சுவட்டிலே சந்ததிகள்
அகிலத்திற்கு ஞானமே அடிச்சுவடு
அகிலனுக்கு மீட்பே அடிச்சுவடு
தாய்க்கு அன்பே அடிச்சுவடு
சேய்க்குத் துடிப்பே அடிச்சுவடு!
ஆன்றேரின் வாக்கிலே நல்வாக்கு
சான்றோரின் வாக்கிலே சொல்வாக்கு
இறைவனின் நாமத்திலே இறைவாக்கு
மறைவனின் போதனையிலே மறைவாக்கு!
கானகமே மாரிக்கு ஆதாரம்.
நிதானமே வாழ்வுக்கு ஆதாரம்.
தானமே தருமத்தின் பேச்சு
மானமே மனிதரின் மூச்சு!

இமைகள் இமைக்கக் கண்களே தடையாகுமா?
இசைகள் இசைக்கக் காற்றே முடையாகுமா?
விண்மீன்கள் ஒளிரும் வானகமே தடையாகுமோ?
மீன்கள் நீந்த நீரே தடையாகுமா?
இறைவா... உம் அடிச்சுவடே என் வாழ்வு!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது