சாந்த குணமுள்ளோர் பேறுபெற்றோர்‌!

அருட்பணி எம்.எஸ். மணி

எல்லா மனிதருக்கும்‌ இருக்கின்ற குணங்கள்‌ எட்டு. ஆனால்‌ ஒரு சிலருக்கு மட்டும்‌ ஒன்பது குணங்கள்‌ உள்ளன. அந்த ஒன்பதாவது குணம்தான்‌ சாந்தம்‌. இவ்வாறு கூறுகின்றனர்‌ பல அறிஞர்கள்‌. சாந்தம்‌ என்பது சக்தி, ஆம்‌! தன்னையே அடக்கியாளும்‌ ஒரு ஒப்பற்ற சக்தியே சாந்தமாகும்‌. இன்பத்தில்‌ துள்ளிக்‌ குதிக்காமல்‌, துன்பத்தில்‌ சோர்ந்து போகாமல்‌, இன்பத்திலும்‌, துன்பத்திலும்‌ ஒரே நிலையில்‌ இருக்கும்‌ இயல்பும்‌ சார்ந்த குணத்தையே சாரும்‌. தசரத சக்ரவர்த்தி இராமனிடம்‌ “அரசுடைமையை அடைந்துகொள்‌ என்றபோதும்,‌ அனைத்தையும்‌ துறந்து கானகம்‌ செல்‌' என்று சொன்னபோதும்‌ இராமனின்‌ முகம்‌, சித்திரத்தில்‌ எழுதப்பட்ட செந்தாமரை போன்று, ஒரே மாதிரி மலர்ச்சியுடன்‌ இருந்தது என்று கம்பர்‌ தம்‌ இராமாயணத்தில்‌ இராமனின்‌ சாந்த குணத்தைப்‌ பற்றி வருணிக்கின்றார்‌. ஆம்‌, சாந்தகுணம்‌ உள்ளவர்களை புறத்தேயிருந்து வருகின்ற எந்த நிகழ்ச்சியும்‌, சக்தியும்‌, சூழ்நிலையும்‌ பாதிக்கவே முடியாது. அவர்கள்‌ புரிகின்ற ஒவ்வொரு செயலும்‌, அவர்கள்‌ ஆழ்ந்து சிந்தித்து சுயமாக எடுத்த முடிவாகவே இருக்கும்‌. எதிர்‌ நீகழ்ச்சி ஒன்றால்‌ இதனை விளக்கலாம்‌ என்று எண்ணுகின்றேன்.

இருதய நோய்‌ உள்ள ஒரு நபருக்கு பரிசு குலுக்கல்‌ சீட்டில்‌ லட்சம்‌ ரூபாய்‌ பரிசு விழுந்தது. இந்தச்‌ செய்தியை அவருக்கு மிகவும்‌ பக்குவமாய்‌ எடுத்துச்சொல்ல வேண்டும்‌. இல்லாவிட்டால்‌ அவர்‌ உயிருக்கு ஆபத்து ஏற்படும்‌ என்று அவருடைய நண்பர்கள்‌ பயந்தனர்‌. எனவே நன்கு யோசித்து ஒரு மனோதத்துவ நீபுணரிடம்‌ இந்தப்‌ பொறுப்பை ஒப்படைத்தனர்‌. நிபுணர்‌ பரிசு விழுந்த நபரிடம்‌ சென்று, “நண்பரே உமக்கு பரிசு சீட்டில்‌ ரூ.10,000 விழுந்தால்‌ நீர்‌ என்ன செய்வீர்‌?" என்று கேட்டார்‌. “என்‌ கடன்களை அடைப்பேன்‌ என்றார்‌” நோயாளி. திரும்பவும்‌ நிபுணர்‌, ரூ.20,000 விழுந்தால்‌ என்ன செய்வீர்‌?” என்று கேட்டார்‌. “பயணம்‌ செல்ல ஒரு வாகனம்‌ வாங்குவேன்‌” என்று பதில்‌ சொன்னார்‌ நோயாளி. நல்லது, ரூ.50,000 . விழுந்தால்‌ என்ன செய்வதாக உத்தேசம்‌?” என்று நிபுணர்‌ தொடர்ந்தார்‌. வீடு கட்ட ஒரு நிலம்‌ வாங்குவேன்‌” என்று நோயாளி பதில்‌ சொன்னார்‌. “சபாஷ்‌! நல்லது தான்‌ “ஒருவேளை ஒரு இலட்சம்‌ பரிசு கிடைத்தால்‌ !” நிபுணர்‌ இறுதியாகக்‌ கேட்டார்‌. “உங்களுக்கு ரூ.50,000 உடனே கொடுப்பேன்‌” என்று நோயாளி சொல்லி வாய்மூடுமுன்‌ “ஆ! ஐம்பதாயிரம்‌! எனக்கா!!” என்று அலறிய வண்ணம்‌ தரையில்‌ சாய்ந்தார்‌ நிபுணர்‌. இன்ப அதிர்ச்சியில்‌ இருதயம்‌ வெடித்து அந்த இடத்திலேயே இறந்தார்‌. சாந்த குணத்தோர்‌ ஒத்தகைய ஒன்ப உணர்ச்சியாலோ அல்லது துன்ப உணர்ச்சியாலோ அல்லது வேறு எந்தவிதமான உணார்ச்சியாலோ பாதிக்கபடவே மாட்டார்கள்‌.

பாரவோன்‌ அடிமைத்தனத்தீலிருந்து இஸ்ராயேல்‌ மக்களை விடுவித்து பாலும்‌ தேனும்‌ பொழியும்‌ கானான்‌ தேசத்துக்கு வழி நடத்திச்‌ சென்ற ஒப்பற்ற தலைவர்‌ மோயிசன்‌. இவரைப்பற்றி திருநூல்‌ புத்தகத்தில்‌ ஒன்றான எண்ணாகமம்‌ இப்படி குறிப்பிடுகின்றது. “மோயிசனோ பூமியிலுள்ள எல்லா மனிதர்களைக்‌ காட்டிலும்‌ மிக்க சாந்தமுள்ளவராய்‌ இருந்தார்‌. (எண்‌. 12:13.) சாந்தம்‌ என்றால்‌ என்ன? என்று சற்று ஆழமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால்‌ இந்த மோயிசனுடைய வாழ்க்கையில்‌ நடந்த சில நிகழ்ச்சிகளைச்‌ சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும்‌.

எரியும்‌ முட்செடியில்‌ தோன்றிய இறைவனிடமிருந்து, இஸ்ராயேல்‌ மக்களை பாரவோன்‌ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்‌ பணியை, ஆணையாக ஏற்றுக்‌ கொள்கின்றார்‌ மோயிசன்‌, விரைந்து செல்கின்றார்‌ அரசன்‌ பாரவோனிடம்‌, தன்‌ கையிலிருந்த கம்பை தரையில்‌ போட்டு அதனை பாம்பாக்கி, பின்‌ அதே பாம்பை கோலாக்கி தன்‌ கையில்‌ பிடித்துக்‌ கொண்டு, இந்த அற்புதத்தையே ஆண்டவன்‌ ஆணையின்‌ சான்றுமாக்கி, இஸ்ராயேல்‌ மக்களுக்கு விடுதலை கேட்கின்றார்‌. அரசனோ, விடுதலை வழங்க மறுக்கின்றான்‌. இதனால்‌ மோயிசன்‌ கோபங்கொள்ளவோ அல்லது சோர்ந்து போகவோ இல்லை. இறைவனின்‌ ஆணைப்படி இரண்டாம்‌ முறை சென்று இஸ்ராயேல்‌ மக்களுக்கு விடுதலை கேட்கின்றார்‌. இந்த முறையும்‌ பாரவோனிடருந்து மறுப்புதான்‌ வருகின்றது. மோயிசனோ முறைப்பாடின்றி திரும்புகின்றார்‌.

இப்படியாக ஏழுமுறைகள்‌ இறைவனின்‌ ஆணைப்படி அரசனிடம்‌ சென்று இஸ்ராயேல்‌ மக்களுக்கு விடுதலை கேட்டும்‌ வெற்றிபெறவில்லை. என்றாலும்‌, இதற்காக வருத்தப்பட்டு மோயிசன்‌ இறைவனிடம்‌ முறையிட்டாரா? அல்லது கோபமுற்று பாரவோனை சபித்தாரா? இல்லை! சோர்ந்து போய்‌ இந்த வேலையே இனி எனக்கு வேண்டாம்‌ என்று எங்கேயாவது ஒடிச்சென்று ஒளிந்துகொண்டாரா? இல்லையே இல்லை. இறைவனின்‌ ஆணைப்படியே ஒவ்வொருமுறையும்‌ செய்து திருப்தி அடைந்தார்‌. இங்கே தான் சாந்த குணத்தின்‌ அதிமுக்கிய இயல்பைக்‌ காண்கின்றோம்‌. அதாவது சாந்தமுடையோன்‌ எப்போதும்‌ இறைவனால்‌ ஆளக்கப்படுவான்‌. சாந்த குணத்தின்‌ இத்தன்மையில்தான்‌ உண்மையான பேறு அடங்கியுள்ளது. தன்னை அடக்கி ஆள்பவன்‌ எப்போதும்‌ இறைவனால்‌ ஆளப்படுகின்றான்‌. “கடவுளின்‌ ஆவியில் ‌யார்‌ இயக்கப்‌ படுகின்றார்களோ, அவர்களே கடவுளின்‌ மக்கள்‌” (உரோ. 8:14) இவர்களே சாந்தகுணமுள்ள பேறுபெற்றோர்‌!

ஒருவருடைய செயல்கள்ண்டவருக்கு உகந்தவையாய் இருக்குமானால், அவர்‌ அவருடைய எதிரிகளையும்‌ அவருக்கு நண்பராக்குவார்‌. (நி.மொ.16:17)

நன்றி:- இறைஅன்னை

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது