செல்லமே செல்லமாய்..

ஹாய் செல்லம்
எப்படி இருக்கீங்க? உங்கள் நண்பர்கள் எல்லாம் பார்த்தீங்களா? புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு படிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இனி நீங்க ரொம்ப சுறுசுறுப்பா ஆயிடுவீங்க. வீட்டுப் பாடம்! மாலைநேரக்கல்வி, தேர்வு என சுமைகள் அதிகம் ஆன மாதிரி ஒரு நினைப்பு வருதுல. கல்வி ஒரு சுமையே இல்லை தங்கம்.

மகிழ்ச்சிஇப்ப நீங்க பீஸா சாப்பிடுவீங்க தானே.. அது வயிறுக்கு சுமைன்னு நினைப்பீங்களா? சுவையினு நினைப்பிங்களா? சுவைன்னு நினைச்சா சுமையா தெரியாது. அப்ப நாம ஏன் கல்வியை மட்டும் சுமையா நினைக்கனும்? எதையும் நாம தெரிஞ்சுக்கனும்னு ஆசைபடன்னு. புதுப் பாடம் படிக்க போறதுக்கு முன்னாடி இந்த பாடம் நமக்கு என்ன விசயம் சொல்லப்போகுது அப்படின்னு ஆசையோட கவனிச்சோம்னா அந்த விசயம் நமக்கு பிடிச்ச விசயமா படும்.

கதைன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே. ஒரு கதை சொல்றேன் கேளுங்க கிரேக்க நாட்டுல சாக்ரடீஸ் ஒரு தத்துவமேதை வாழ்ந்தாரு. அவருடைய புரட்சிகரமான கருத்துக்களை பிடிக்காம அவரை ஜெயில்ல போட்டுட்டாங்க. ஜெயில்ல இருக்கும் போதுகூட அவர் சிந்திக்கிறதை விடவே இல்லை. நிறைய எழுதிக்கிட்டே இருந்தாரு. தூக்கு தண்டனை மாதிரி அவருக்கு ஒரு கப் நிறைய விஷம் கொடுத்து மரணதண்டனை மறுநாள் கொடுக்கப் போறாங்க. ஆனா அவர் சாகப்போறோம்ங்கற பயம் துளி கூட இல்லாம தண்டனையை சந்தோசமா எதிர்பார்த்தார். அப்ப அடுத்த அறையில் ஒருவன் ஒரு இசைக்கருவி மூலமா பாட்டு வாசித்துக் கொண்டிருந்தாராம். அவர்கிட்ட போய் இந்த இசை என்ன இசை?ன்னு. அந்த இசை பற்றிய கருத்துக்களை கேட்டராம். அப்ப அந்த இசை வாசித்தவரு சொன்னாராம் எதுக்கு இதப்பத்தி கேக்குறீங்க நீங்க நாளைக்கு சாகப் போறீங்க. இதச் தெரிஞ்குட் உங்களுக்கு என்ன ஆகப்போகுதுன்னு கேட்டாராம் .அதுக்கு சாக்ரடீஸ் சொன்னாராம் இப்ப நான் உயிரோட தானே இருக்கேன் உயிர் இருக்கும் வரை நாம தெரியாததை தெரிஞ்சுக்குறதுல தவறொன்றும் இல்லையே என்று சொன்னாராம்.

பார்த்தீங்களா குட்டீஸ்! நமக்கு அம்மா அப்பா கொடுத்துள்ள வசதிவாய்ப்புக்களை பயன் படுத்தி நாம எவ்வளவு இந்த வயசுல கத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு நாம அறிவாளியா இருக்கலாம்.

அதனால ஒவ்வொரு நாளும் நாம காலையில எழும்பும் போதே இந்த புதிய நாள்ல நாம எத்தனை விசயம் புதுசா தெரிஞ்சுக்கப் போறோம்னு ஆர்வத்தோட எழும்பனும். இராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னால நீங்க புதுசா கத்துக்கிட்ட விசயத்தை ஒரு தடவை நிறைவு படுத்திக் கிட்டுங்கன்னா நீங்க தான் அன்றைய நாளின் அறிவாளி.

அய்யோ நேற்று வரை நிறைய விசயத்தை கத்துக்காம விட்டுட்டோமே அப்படினு வருத்தப்படாதீங்க. 'நேற்றைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று நீ அறிவாளி"

' அன்பு வாழ்த்துக்கள் குட்டிஸ்களா " --- என்றும் அன்புடன் ஆன்ட்டி அமலி


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது