கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்தப் பெருவிழா

பெஞ்சமின்

இத்திருவிழாவும், சேசுவின் திரு இருதய பெருவிழாவும் அன்பையும், தியானத்தையும் எடுத்துக் காட்டும் பெருவிழாக்கள்.

பெரிய வியாழன் அன்று திருவுடல் திருஇரத்தத்திற்கு இயேசு நம்மை ஈர்க்கச் செய்தார் எனக் கூறலாம். அன்றி லிருந்து இன்றுவரை நற்கருணை என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடுகிறோம். பெரிய வியாழக்கிழமையே இதற்கான பெருவிழா நாள் என்றாலும் கிறிஸ்துவின் பாடுகளுக்கே அன்று அதிக கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே, திருஉடல் குறித்த எண்ணம் பெரு மைப் படுத்தப்படவில்லை. bநாள் டைவில் ஒரு வாடிக்கை நிகழ்ச்சியாக வும் மாறியது.

1208 இல் லீச் (LIEGE) நகர்க்கரு கில் உள்ள கொர்னிலன் குன்றைச் சார்ந்த ஜூலியானா என்னும் முக்திப் பேறு பெற்ற ஒரு பெண் ஒரு கனவு கண்டார். கனவில் கண்ட ஒரு காட்சி திருச்சபை திருநாட்களின் வரிசை யில் திருஉடல் திரு இரத்தப் பெரு விழா இல்லாதது ஒரு வெற்றிடமாக இருப்பதாகக் கண்டார். எனவே, பெரிய வியாழன் அன்றி இதற்கென ஒரு திருநாள் வேண்டும் கருதப்பட்டது. லீக்சா ஆயர் 1246இல் இத்திருநாளை வியாழக்கிழமைகளில் கொண்டாடினார். 1254இல் அப்போதைய போப் பாண்டவர் இதை உலகமெங்கும் சிறப்பிக்க ஆணை பிறப்பித்தார்.

திருப்பலி நேரத்தில் எழுந்தேற்றத்தின் போது நாம் உற்றுநோக்கி செபிக்கும்போது ஏற்படும் அனுபவமே 2022 ஆண்டுகளாக இன்றுவரை கத்தோலிக்க திருச்சபை நிலைத்து நிற்பதற்குக் காரணம். திவ்ய நற்கருணை பவனியின்போது பலருடைய உள்ளங்களும், உடல்களும் தொடப்பட்டு இருக்கின்றன. அடிப்படையாக எல்லாவற் றிற்கும் தாழ்ச்சியான மனநிலை வேண்டும். அதன் படியே அருளும், வரங்களும் கிடைக்கும். திவ்ய நற் கருணை ஆசீருக்குமுன் பாடப்படும் 'மாண்புயர்.... பாடலில் புலன் களினாலே மனிதன் இதனை அறிய இயலாக் -குறையை நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக' என்றும், அதன்பின் (மூவருக்கும்) 'அளவில்லாத சமபுகழ்ச்சி என்றுமே உண் டாகுக' என்றும் நாமே பாடலாக புகழ்கின்றோம். தொடர்ந்து குருவானவர்.... இதனால் மீட்பின் பலனை பெறு வோமாக என்று செபிக்கின்றார். உணர்ந்து பாடினால் திரு உடல் திருஇரத்தத்ய்களஎன் க“காக அளிக்கப்படும் உன் மாட்சிமை புரியும்.

எனவே, இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றும் உங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தம் என்றும்குருவானவர் கூறும்போது இயேசுவே கூறுகிறார் என்ற உணர்வு நமக்குத் தேவை. இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று கூறியது ஓர் உடன்படிக்கையும் கூட. நம்முடன் எந்தவித பேரமும் செய்யாமல் நமக்காக நம் பாவங்கள் மன்னிக்கப்பட முழுமனதுடன் தம்முடலை கையளித்தார் இயேசு என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முற்காலத்தில் (பழைய ஏற்பாடு காலத்தில் மிருகங்களின் இரத்தம் பலியாக தெளிக்கப்பட்டது. ஆனால் இயேசு பலருடைய மீட்புக்கு விலையாக தன் உயிரை அளித்தார் (மாற் 10:45). பிறருக்காக தம் இரத்தத்தையே சிந்தினார்.

இயேசுவின் திரு உடல் பற்றியும், திரு இரத்தம் பற்றியும் பல வகைகளில் நாம் சிந்திக்கலாம். அவர் இரத்தம் சிந்திய ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாம் சிந்திக்கலாம். எல்லாவற்றிற்கும் நமக்கு தாழ்ச்சியான மனநிலை வேண்டும் (மத் 11:29, யோவா 13:4-17, பிலிப் 2:5-8). நாம் நமது உடலை வளர்க்கவே உணவு உட்கொள்கின் றோம். ஆனால் இயேசுவின் திருஉடலை உட்கொள்ளும் நாம் ஆன்ம, உடல் நலனைப் பெறுகிறோம். மேலும் இது அன்பின் உணவு. திருப்பலி பீடம் கல்வாரி என்ற சிந்த னையுடன் இயேசுவின் உடல் அங்கு நொறுக்கப்படு வதை உணர்கிறோமா? நமக்காக என்ற எண்ணம் ஏற்படுகின்றதா? நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற மனநிறைவு ஏற்படுகிறதா? இயேசுவை நாம் உண வாக உட்கொள்ளும்போது இது அன்பு உணவு என்று எனக் கருதுகிறோமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது